Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பிமலை பற்றி...

Featured Replies

தொப்பிகல கைப்பற்றப்பட்டது என்ற செய்தி சிறீலங்கா படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டடதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர் மத்தியில் சந்தர்ப்பத்தை ஒட்டிய வழமையான கருத்தாடல்கள் எழுந்துள்ளன. இக்கருத்தாடல்கள் பலநூற்றுக் கணக்கில் பல்வேறுதரப்பட்ட மொழியாளுகைகளோடு நடக்கின்றன எனினும், அனைத்தினதும் அடிப்படைக் கருத்து இரண்டு விடயங்களை மட்டுமே சுற்றிச் சுழல்கின்றன:

1) "தொப்பிக்கல ஒன்றும் அத்தனை முக்கியமான இடமில்லை. இதைப் பிடித்துவிட்டு மகிந்தர் கொக்கரிப்பது

வேடிக்கை."

2) "பிடிப்பது ஒன்றும் கடினமல்ல தக்கவைப்பதே கடினம். இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல தொப்பிக்கலையின்

வீழ்வு ஒரு விடயமே இல்லை."

மேல் கூறப்பட்ட இரு விடயங்களிலும் உண்மைகள் இல்லாது இல்லை. இருப்பினும், தொப்பிக்கல தொடர்பில் கருத்தெழுதும் அனைத்துத் தமிழரும் இவ்விரு கருத்துச் சுற்றாடல்களிற்குள் மட்டுமே தமது சிந்தனையை மட்டுப்படுத்திக் கொள்வதானது எம்மைப்பற்றி நாமே அறியவேண்டிய, காலத்தின் மிக முக்கிய தேவையான, சுயபரிசீலனைக்கான ஒரு முனையாகவே தென்படுகின்றது.

இலக்கம் ஒன்று

மேலே நிரலிடப்பட்டுள்ள விடயங்களில் முதலாவதானது, இரு காரணிகள் எமது உளவியல் மீது கொண்டிருக்கும், நாமே அறியாத, ஆதிக்கத்தின் வெளிப்பாடு. இவ்விரு காரணிகளும் முறையே:

முதலாவது காரணி, பூதாகரமாகத் தோன்றும் பிரச்சினை என்று ஒன்று வரும் போது அதை எதிர்கொண்டு அதற்கான பரிகாரம் தேடுவதற்குப் பதில் பிரச்சினையே இல்லை என்று கோழைத் தனமாகவும் சோம்பேறித்தனமாகவும் நம்மை நாமே நம்பவைக்க முயலும் "டினையல்" வழிமுறை.

இரண்டாவது காரணி, என்னதான் ஒட்டுமொத்த சிங்கள ஆளும் வர்க்கத்தையும் நாம் நமது எதிரிகளாக வரித்துக் கொண்டிருந்தாலும் இன்னமும் சிங்கள அரசியல் கருத்துக்கள் எமது சிந்தனையை வடிவமைக்க விட்டுவைத்திருக்கும் எமது பத்தாம்பசலித் தனம்.

அதாவது, தொப்பிக்கலவின் வீழ்வு போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், சிங்கள எதிhக்கட்சி ஒன்று அரசிற்கு எதிரான ஒரு கருத்தினை முன்வைக்கின்றது என்றால், அதற்கான உண்மையான காரணம் அரசு உண்மையிலேயே எதனையோ சாதித்து விட்டது என்று தான் எதிர்க்கட்சியும் உள்ளார நம்புகின்றது என்பதனைப் பகுத்தாரய நாம் தவறுவது. அரசிற்கு நலனான விடயமாக எதிர்க்கட்சி எதனை இரகசியமாக நம்புகின்றதோ அதே புரிதல் தான் எமக்கும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆழ்ந்த கவலை எழுவதற்கான உண்மையான காரணியாக இருக்கின்றது என்பது தான் உண்மை. அதனால் தான் அரசு அடைந்த நலன் உண்மையில் நலன் அல்ல என்று எதிர்க்கட்சி கருத்து வெளியிடும் போது நம்மவர் பலர் அச்செய்திகளிற்கு முன்னுரிமை கொடுப்பதோடு அச்செய்தி எமது "டினையலை" வலுப்பெறச் செய்வதற்கும் இடங் கொடுக்கின்றோம். போராடும் இனமான எமக்கு, இது மிக ஆபத்தானது. சிங்கள அரசியல் எமது சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துவதற்குச் சற்றும் இடம் கொடாது, எமது நலன்களின் அடிப்படையில் மட்டும் நேரம் தாழ்த்தாது துணிவோடு விடயங்களை நாம் முதலில் அணுகப் பழகிக் கொள்ளல் அவசியம். போராடும் இனமான எமக்கு இது இன்றியமையாதது.

இலக்கம் இரண்டு

இனி, மேலே நிரலிடப்பட்டுள்ள இரண்டாவது விடயத்தை நோக்கின், இவ்விடயத்தில் வராலாற்று ரீதியான உண்மை இருப்பினும் கூட, எமது போராட்டத்தில் நாம் தற்போது நின்று கொண்டிருக்கும் காலகட்டத்தைப் பொறுத்தவரை இவ்வாறான சிந்தனை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எண்பதுகளில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்த மக்களின் மனநிலையோடு நாம் இப்போது இருக்கக் கூடாது இருக்கவும்முடியாது. கடந்த காலங்களில், ஒரு இழப்பை ஏற்று, பின் கால அவகாசம் எடுத்து அனைத்து வகை வழங்களையும் ஒருங்கிணைத்து இழப்பை நிரவியதாகவே எமது வரலாறு இருந்து வருகின்றது. அதுவும் போராளிகளை விடுத்து அப்பால் பொதுமக்களாகிய நாங்கள் வெற்றிகளின் போது தான் எமது பங்களிப்புக்களை உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக்கியதே சாட்சியமாகவுள்ளது. ஒரு இழப்பிற்கும் அதனைச் நிரவும் அடுத்த வெற்றிக்கும் இடையேயான காலத்தில் போராளிகளும் இயக்கமும் தனித்தே பாடுபட வேண்டியிருந்து வந்துள்ளது. இழப்புக்கள் நிரவப்படும் என்பதில் அடுத்த கருத்திற்கு இடமில்லை தான், ஆனால் ஒட்டுமொத்த தமிழினமே போராளிகளாக மாறவேண்டிய இத்தருணத்தில் "இழப்பு இழப்பே இல்லை. கொஞ்சநாளில் அதை புலிகள் நிரவுவர்கள்" என்ற அடிப்படையில் அமைந்த பார்வையாளர் மனநிலையை முதலில் நாம் உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்.

எமது மக்களின் பார்வையாளர் மனநிலையில் மாற்றத்தை துரிதமாய் எற்படுத்துவதில் ஊடகங்களிற்கு நிறையவே கடமையுள்ளது என்றபோதும், எமது ஊடகங்கள் தொப்பிக்கல போன்ற விடயங்களில் நடந்து கொள்ளும் விதமானது, எமது ஊடகங்களிற்கு இன்னமும் காலத்திற்குத் தேவையான வளர்ச்சி ஏற்படவில்லை என்றே எண்ணச் செய்கின்றது.

கருத்து

ஒரு போராடும் இனமாகிய எமக்கு, மேலே நிரலிடப்பட்டுள்ள இரண்டு சிந்தனை முனைகளுமே ஆபத்தானது. தேவை தான் எப்போதும் கண்டுபிடிப்புக்களிற்கான அடிப்படையாக மனித வரலாற்றில் இருந்து வருகின்றது. ஒரு இழப்பு வரும்போது முதலில் இழப்பை உடனடியாக இழப்பாக ஏற்றுக் கொண்டு எந்தெந்த வகைகளில் குறித்த இழப்பினை நிரவுதல் தொடர்பிலான எமது செயற்பாடு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கத் தொடங்குவது இன்றியமையாதது.

"சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்ற அடிப்படையில் தமிழர் ஆயத போராட்டம் தொடர்பில் எமது மக்கள் பலர் நம்பிக்கை அற்றோராய் இருந்த ஆரம்ப நாட்களில் வேண்டுமாயின் இழப்புக்கள் தொடர்பான காலத்தின் தேவையான வார்ததை யாலங்கள் எமக்குத் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தமிழினம் மட்டுமன்றி சர்வதேசமே தமிழர் போராட்டத்தின் ஆற்றலைப் புரிந்து கொண்டுள்ள இந்நிலையில், எமது ஊடகங்கள் இத்தனை காலமும் எதனையும் புதிதாக அறிந்து கொள்ளாதவர்களாகப், புராதன மனநிiலில் மக்களை மூன்றாந்தரப்புப் பார்வையாளராக இருக்கும் வகையில் தொழிற்படுவது வேதனை தருகின்றது.

புற்று நோய் அறியப்பட்ட ஆரம்ப நாட்களில் எவ்வாறு அந்நோயையே வாயால் உச்சரிக்கவே கூடாது என்று அன்று நம்மவர் சிந்தித்தாரோ அதனை ஒத்ததே போராட்டத்தில் இழப்பை இழப்பில்லை என்று அடம்பிடிக்கும் இன்றைய மனநிலையும். புற்று நோயிற்கான சிகிச்சைகள் அறவே அற்ற காலத்தில் ஒருவேளi இந்நோய் தொடர்பான சிந்தனை சரியாக அமைந்திருக்கலாம். ஆனால் சிகிக்சைகள் பல்கிக் பெருகி வளர்ந்துவரும் இந்நாளில் எத்தனை விரைவில் புற்றுநொய் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கின்றதோ அத்ததை தூரம் நோயின் பிடியில் இருந்து ஒருவர் மீள்வதற்கான நிலையே இன்று இருக்கின்றது. அது போன்று தான் தமிழரின் ஆயதப் போராட்டத்தின் பேரில் நம்மவவர்க்கே நம்பிக்கை இருந்திராத அன்றைய காலத்து ஊடக நடைமுறைகள் இன்றைய காலகட்டத்திற்கு அபத்தம். முதலில் ஊடகங்கள் இந்த புராத சிந்தனையைத் தூக்கித் தூர வீசி விட்டு மக்களைப் போராட்டத்தில் பங்காளர்களாக்கும் வகையில் செயற்படவேண்டும்.

இழப்பை கண்டு ஆதரவைத் துண்டிக்கும் கட்டத்தைத் தமிழினம் என்றோ கடந்து விட்டது. மேலும் பார்வையாளராகச் சிந்திக்கையில் மட்டும் தான் எவராலும் இழப்புத் தொடர்பில் விமர்சிக்க முடியும். பங்காளர் ஆகையில் இழப்பு தொடர்பில் பரிகாரத்தை மட்டும் நோக்கியே ஒருவரால் சிந்திக்க முடியும். இன்றைய தேவை ஒவ்வொரு தமிழனும் பார்வையளர் மனப்பாங்கை முற்றாகத் தூக்கியெறிந்து பங்காளராய் எப்போதும் எந்தக் கட்டத்திலும் பரிகாரம் நோக்கிச் சிந்திப்பதே என்ற எனது தாழ்மையான கருத்தோடு இப்பதிவு நிறைகிறது.

Edited by Innumoruvan

"இழப்பு இழப்பே இல்லை. கொஞ்சநாளில் அதை புலிகள் நிரவுவர்கள்" என்ற அடிப்படையில் அமைந்த பார்வையாளர் மனநிலையை முதலில் நாம் உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்.

தமிழர்கள் யாவரும் அவசியம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலகட்டம்.

ஆக்கத்திற்கு நன்றிகள், இன்னுமொருவன்.

நன்றி இன்னுமொருவன்,

சுதந்திரம் தேடுவோர்க்கும், அடுத்த தலைமுறை போரில்லாமல் வாழட்டும் என் நினைப்பவர்க்கும்.

சிரிலிங்கா அரசை தனிமை படுத்துவது மட்டுமல்ல உடனடி தேவை.

போராட்டத்திற்கான அங்கிகாரமும் நமக்கு தேவை,

அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் தங்கள் பங்கை வழங்குங்கள்.

வாழ்க தமிழ்.

நன்றி இன்னுமொருவன்,

சுதந்திரம் தேடுவோர்க்கும், அடுத்த தலைமுறை போரில்லாமல் வாழட்டும் என் நினைப்பவர்க்கும்.

சிரிலிங்கா அரசை தனிமை படுத்துவது மட்டுமல்ல உடனடி தேவை.

போராட்டத்திற்கான அங்கிகாரமும் நமக்கு தேவை,

அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் தங்கள் பங்கை வழங்குங்கள்.

வாழ்க தமிழ்.

நீங்கள் சொல்வது அடிபிழை இல்லாது அப்படியே உண்மை...!

ஆனால் இப்படியான உங்களின் கூற்றை எங்களவர் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பதுதான் பிரச்சினையே.... பங்கை வழங்குங்கள் எண்றால் பணம் கொடுப்பது என்பதாயும்...! அந்த பனத்தில் ஆயுதம் வாங்கிறது என்பதையும் முன்னாலை கொண்டு வந்து விடுவார்கள்...

தாய்நாட்டுக்கு உங்களின் கடமை என்பது போராட ஆயுதம் வாங்குவது அறவே இல்லை என்பதுதான் எனது கருத்து.... எமது தாயகத்தை வழப்படுத்துவது என்பது மட்டுமே குறிக்கோள்...! அங்குள்ள மக்களை காப்பதை மட்டும் சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்கள்...

ஆயுதம் வாங்குவதோ இல்லையோ , இடங்களை பிடிப்பதோ இல்லை விட்டு விலகுவதோ எதுவெண்றாலும் புலிகள் சரியான முடிவை எடுப்பார்கள் என்பதை காலங்காலமாக செய்து காட்டியும் எங்களவர் மண்டையில் உறைப்பதாக இல்லை...!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசும் அதன் படைகளும் "ஒன்றுமேயில்லாத" மனிதர்களே வாழாத குடும்பிமலையை பாரிய செலவீனங்கள் செய்து பிடித்துள்ளது என்றும், அவர்கள் வைத்த அகலக்கால் அவர்களுக்கே ஆப்பாய் முடியும் என்று நம்மில் பலர் நம்புகிறார்கள். எனினும் கிழக்கில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்யச் சிங்கள அரசும் அதன் படைகளும் முயலும் காரணத்தினை அறிந்தும், அதை வெளிப்படையாகச் சொல்லுவது எமது பலவீனத்தை நாமே ஒப்புக்கொள்ளுவதாய் விடும் என்றெண்ணி தவிர்க்கவே முற்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வதன்மூலம், தமிழீழம் என்ற நாடு அமைவதற்கு அடிப்படையாக உள்ள கொள்கைகளாகிய தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர்களுக்கென்று ஒரு தொடரான நிலப்பரப்பு உள்ளமை என்பனவற்றை இல்லாமல் செய்வதே சிங்கள அரசின் நோக்கம். இதனை விரைவுபடுத்தவே மூதூர் கிழக்கு, சம்பூர் பகுதிகளில் இருந்து தமிழர்களை வெளியேற்றி அப் பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயம் ஆக்கியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களையும், பிரதேசவாதத்தை ஊக்குவிப்பவர்களையும் அரசியல் தலைவர்களாகவும், மக்களின் பிரதிநிதிகளாகவும் ஆக்க முனைகின்றது.. இவற்றுக்கெல்லாம் ஆபத்து விளைவிக்க காட்டுப் பகுதிகளை பின்புலமாகக் கொண்டு கொரில்லாப் போர் நடாத்தப் புலிகள் முனைவார்கள் என்பதையுணர்ந்தே தொப்பிக்கல் போன்ற பிரதேசங்களயும் என்ன விலை கொடுத்தாவது சிங்களைப் படைகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிங்கள அரசு முனைந்துள்ளது.

இத்தகைய சவால்களையும் மீறி தமிழர் தேசியத்தை வடக்கே பருத்தித்துறையில் இருந்து தெற்கே பொத்துவில் வரை நிலைநாட்டுவதே தமிழர் முன்னால் உள்ள பெரும் பொறுப்பாகும்.

  • தொடங்கியவர்

லிசான், கர்ணன் உங்கள் கருத்துக்கு நன்றி.

தாய்நாட்டுக்கு உங்களின் கடமை என்பது போராட ஆயுதம் வாங்குவது அறவே இல்லை என்பதுதான் எனது கருத்து....

எமது தாயகத்தை வழப்படுத்துவது என்பது மட்டுமே குறிக்கோள்...!

தயாவின் ஆதங்கம் நியாமானது என்றாலும் இருப்பை உறுதிசெய்யாது அபிவிருத்தி மட்டும்

சிந்திப்பது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழவே செய்கின்றது.

கிருபன் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. உங்கள் கருத்தோடு எனது பதிவு உடன்படுவதாயே நான்

கருதுகின்றேன்.

தயாவின் ஆதங்கம் நியாமானது என்றாலும் இருப்பை உறுதிசெய்யாது அபிவிருத்தி மட்டும்

சிந்திப்பது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழவே செய்கின்றது.

அதைத்தான் முன்னமே சொன்னேன்....! போராடுபவர்கள் புலிகள்... ஆயுதம் வேண்டுமா வேண்டாமா எண்று தீர்மானிப்பது போராடுபவர்களின் வேலை.. அதில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை.... தமிழ் மக்கள் ஆயுதம் வாங்க தேவையே இல்லை, அதை மட்டுமே சிந்தியுங்கள்....

( அதுக்காக தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு எண்று நான் சொன்னதாக அர்த்தப்படுத்தி கொள்ள வெண்டாம்.... நீங்கள் அரசியல் போராளிகள்....) பணம் கொடுப்பதாக இருந்தால் "தமிழ் தேசிய" தொண்டு நிறுவனங்களுக்கு கொடுங்கள்... அது போக வேண்டிய மக்களுக்கு உரிய முறையில் போய்ச்சேரும்...!

பலதரப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் பணம் வழங்குகிறீர்கள்... அது புலிகளுக்கு ஆயுதம் வாங்கத்தான் போகிறது எண்று அந்த நாட்டு அரசாங்கம் சொல்கிறது... அதை நீங்கள் வளிமொழிகிறீர்களா...??? இண்று தமிழ் மக்கள் அபிவிருத்தி என்பதுக்கு கூட நீங்கள் பணம் அனுப்ப முடியாது எனும் நிலையை எது தோற்று வித்தது என்கிறீர்கள்...??

இது எனது ஆதங்கம் மட்டுமே....!

புலிகள் வெல்வார்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது... அதுக்கு காரணங்கள் பல இருக்கு.. மட்டக்களப்பு விடு பட்டதின் முக்கிய கரணமான மட்டு மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் மிலேச்ச தனமான எறிகணை வீச்சுக்கள் குறைந்து விட்டன...! பெரிய படையணிகளை கிழக்கில் இருந்து குறைப்பது எண்றும் இளப்புக்கள் இல்லாது செய்யவும் முடிவெடுத்த பிறகு.... புலிகள் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றுவது பெரிய விடயமாக பட வில்லை.. முன்னர் இதே பிரதேசங்கள் யாழ்ப்பாணம் கைப்பற்ற படுவதற்காய் விடுவிக்க பட்ட பிரதேசம்.... இங்கு திரும்ப வருவதுக்காய் தென்மராட்ச்சி , வடமராட்ச்சி பகுதிகளில் ஆள் குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது...!

  • தொடங்கியவர்

அதுக்காக தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு எண்று நான் சொன்னதாக அர்த்தப்படுத்தி கொள்ள வெண்டாம்....

நீங்கள் கதைக்கும் கோணத்தில் எனக்கு எந்த முரண்பாடும் இருப்பதாக நானுணரவில்லை.

கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசும் அதன் படைகளும் "ஒன்றுமேயில்லாத" மனிதர்களே வாழாத குடும்பிமலையை பாரிய செலவீனங்கள் செய்து பிடித்துள்ளது என்றும், அவர்கள் வைத்த அகலக்கால் அவர்களுக்கே ஆப்பாய் முடியும் என்று நம்மில் பலர் நம்புகிறார்கள். எனினும் கிழக்கில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்யச் சிங்கள அரசும் அதன் படைகளும் முயலும் காரணத்தினை அறிந்தும், அதை வெளிப்படையாகச் சொல்லுவது எமது பலவீனத்தை நாமே ஒப்புக்கொள்ளுவதாய் விடும் என்றெண்ணி தவிர்க்கவே முற்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வதன்மூலம், தமிழீழம் என்ற நாடு அமைவதற்கு அடிப்படையாக உள்ள கொள்கைகளாகிய தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர்களுக்கென்று ஒரு தொடரான நிலப்பரப்பு உள்ளமை என்பனவற்றை இல்லாமல் செய்வதே சிங்கள அரசின் நோக்கம். இதனை விரைவுபடுத்தவே மூதூர் கிழக்கு, சம்பூர் பகுதிகளில் இருந்து தமிழர்களை வெளியேற்றி அப் பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயம் ஆக்கியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களையும், பிரதேசவாதத்தை ஊக்குவிப்பவர்களையும் அரசியல் தலைவர்களாகவும், மக்களின் பிரதிநிதிகளாகவும் ஆக்க முனைகின்றது.. இவற்றுக்கெல்லாம் ஆபத்து விளைவிக்க காட்டுப் பகுதிகளை பின்புலமாகக் கொண்டு கொரில்லாப் போர் நடாத்தப் புலிகள் முனைவார்கள் என்பதையுணர்ந்தே தொப்பிக்கல் போன்ற பிரதேசங்களயும் என்ன விலை கொடுத்தாவது சிங்களைப் படைகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிங்கள அரசு முனைந்துள்ளது.

இத்தகைய சவால்களையும் மீறி தமிழர் தேசியத்தை வடக்கே பருத்தித்துறையில் இருந்து தெற்கே பொத்துவில் வரை நிலைநாட்டுவதே தமிழர் முன்னால் உள்ள பெரும் பொறுப்பாகும்.

கிருபன் நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான் இந்த கணம் வரை.இதனை புலிகள் உணராமல் இல்லை.இதற்கான பதிலை வி.புலிகள் விரைவில் வழங்குவார்கள் என்பது எனது நம்பிக்கை.

  • தொடங்கியவர்

சிங்களவன் வைத்த தொப்பிக்கல என்ற பெயரைத் தான் நாங்களும் சொல்ல வேண்டுமா?இன்னுமொருவன் தலைப்பை குடும்பிமலை என்று மாற்றினால் என்ன

ஈழப்பிரியன் நீங்கள் சொல்வது சரிதான். தலைப்பை மாற்றிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இழப்பிற்கும் அதனைச் நிரவும் அடுத்த வெற்றிக்கும் இடையேயான காலத்தில் போராளிகளும் இயக்கமும் தனித்தே பாடுபட வேண்டியிருந்து வந்துள்ளது. இழப்புக்கள் நிரவப்படும் என்பதில் அடுத்த கருத்திற்கு இடமில்லை தான், ஆனால் ஒட்டுமொத்த தமிழினமே போராளிகளாக மாறவேண்டிய இத்தருணத்தில் "இழப்பு இழப்பே இல்லை. கொஞ்சநாளில் அதை புலிகள் நிரவுவர்கள்" என்ற அடிப்படையில் அமைந்த பார்வையாளர் மனநிலையை முதலில் நாம் உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்.

புலம் பெயர் மண்ணில் நாமும் எமது போராட்ட முன்னகர்வுகளுக்கான பங்களிப்பை வழங்கி முன்னகர்வோம்.

இன்னுமொருவன், உங்கள் ஆய்வு பரந்து விரிந்து, மேலும் பல ஆக்கங்கள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான் இந்த கணம் வரை.இதனை புலிகள் உணராமல் இல்லை.இதற்கான பதிலை வி.புலிகள் விரைவில் வழங்குவார்கள் என்பது எனது நம்பிக்கை.

தமிழீழம் என்ற இலட்சியத்தை அடைய தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடகிழக்குப் பகுதிகள் தமிழ்த்தேசிய சக்திகளிடம் இருக்கவேண்டும். இதைப் புலிகள் நன்குணர்ந்தேயுள்ளனர். தமிழர் தாயகம் தொடர்ந்தும் சிங்கள ஆதிக்க சக்திகளிடமும் அதன் அடிவருடிகளிடமும் பறிபோகாமல் இருக்க மாற்றுத் திட்டங்களைப் போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

இதைப் போலவே தமிழீழக் கோட்பாட்டை உடைக்க சிங்கள அரசும் இராணுவமும் கிழக்கை நிரந்தரமாக வட பகுதியில் இருந்து அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பிரிக்க முயல்கின்றனர்.

இந்நிலைமைகளை தாயகத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் நன்குணர்ந்து அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து பலமிக்க சக்தியாக உருவெடுத்தால்தான் தமிழீழம் என்பது தற்போதுள்ள சர்வதேச சூழலில் சாத்தியப்படும். புலிகளின் இராணுவப் பலம் மட்டும் போதாது என்பதையே கடந்த கால அனுபவங்கள் சொல்லி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போராடனும்.. நாங்க அசைலம் அடிக்கனும்.. கலியாணம் முடிச்சு செற்றிலாகனும்.. புலிகள் அடிபடனும்.. நாங்க போறத்தில நீட்டி நிமித்தி எழுதனும்... இப்படி தமிழர்கள் சிந்தனை அர்ப்பதனமா இருக்கும் என்றிருந்தால்.. போராடவே போயிருக்கத் தேவையில்ல..!

புலி.. போராடும்.. அதில மறு பேச்சுக்கு இடமில்ல.. இதில நீட்டி நிமித்திற நாங்க என்னத்தைப் புடுங்கி புலிக்கு உதவுறமென்று சொன்னா.. தமிழீழம் கிடைக்கேக்க... ஒரு நினைவுக்கல்லாவது நாட்டலாம்.. யாழ் களத்து வீரமறவர்களுக்காக...!

ராஜபக்ச தலைமல சிங்களப் பொடியள்.. கிழக்கைப் புடிக்கிறாங்க.. நாங்கள்.. அசைலம் அடிக்க ஸ்ரேட்மெண்ட் தேடிட்டு இருக்கிறம்.. இந்த நிலைல... புலிகள் போராடி.. கருணாவை.. விரட்டி.. இராணுவத்தை விரட்டி... ஈழம் எடுப்பினம் என்று பலமா நம்புறம்.. அதுவும் மேற்குலக ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்டுப் பிச்சை வாங்கி வாழ்க்கையை ஓட்டிக்க உசாராகிக் கொண்டு.. நாங்க...!

இந்தியப்படை வர முதல் குடாநாட்டு சனத்தொகை 8 இலட்சம்.. இந்தியப் படை போகும் போது.. அது 4 இலட்சம்... இந்தியப் படை வர முதல் கனடாவில் தமிழர்கல் 20 ஆயிரம்.. இந்தியப் படை வந்த பின்னர் 2 இலட்சம்...

இந்தியப் படையை எதிர்த்துப் போராடி வீரமரணமைடைந்த போராளிகள் 900.... இவர்களின் தியாகத்தால்.. கிடைத்த வெற்றியை.. கொண்டாட நாங்க கனடாவில.... கொடி ஏற்றிறம்.. தமிழீழம்.. ரொரொண்டோவில..

இன்று மேற்குலக சக்திகளின் தடைக்குள்... போராட்ட மூலம்.. பயங்கரவாதப் பட்டியலில்.. போராட்ட சக்தி.. நாங்கள்.. புலிகள் வெல்வார்கள்.. நாங்க போயிட்டு வாறம்... தமிழீழம் கிடைச்சா சமருக்கு வாறம்...! பாய்..! குடும்பிமலைல.. ராஜபக் சவின் பேக்கரிக்கு சோளம்.. விளைஞ்சால் என்ன... வன்னியில்.. கோதுமை விளைஞ்சால் என்ன..??! :angry: :)

:angry: :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.