Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாணய வர்த்தகத்திற்கு தற்போதுள்ள மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை ஏதுவாக இருக்கின்றது, பொதுவாக மிதக்க விடப்பட்ட நாணயம் ஒரு தன்னிச்சையான உறுதித்தன்மை கொண்டது (Automatic stabilizer).

Balance of Payment எனப்படும் நாடுகளுக்கிடையேயான வர்த்தக பெறுபேறுகள் நாணயத்தின் பெறுமதிகளில் தன்னிச்சையாக இடம் பெறுகிறது (வேறு பல காரணிகளும் காணப்படுகிறது பின்னர் விரிவாக பார்க்கலாம்).

நாணய வர்த்தகத்திற்கு ஏதுவாக இருப்பதற்கு நாணயங்களுக்கிடையேயான மாற்றங்கள் உதவுகின்றன (Volatility).

Commodity நாணயங்கள் அதிகளவான தளம்பல்கள் காணப்படும் (Volatility).

  • Replies 679
  • Views 61.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

  • சாமானியன்
    சாமானியன்

    வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

  • விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

G 10 நாணயங்கள்

USD 89.2%

EUR 28.9%

YPY 16.8%

GBP 10.2%

CHF 6.4%

AUD 6.1%

CAD 5.8%

SEK 1.6%

NZD 1.5%

NOK 1.3%

200% அடிப்படையில் 2025 ஆண்டிற்குரிய வர்த்தக அடிப்படையிலான கணிப்பு (இரண்டு நாணயங்களாக இருப்பதானால் 200%)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடிப்படை ஆய்வு முறையிலான வர்த்தகத்தினை பெருநிறுவனங்கள் பயன்படுத்தும் வர்த்தக முறைமையினை பயன்படுத்த உள்ளேன் (எந்த வித காப்புரிமைகளையும் மீறாத வகையில், அவ்வாறு காப்ப்புரிமை மீறல்கள் காணப்படும் பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டுமாறு கள உறவுகளிடம் கேட்டுக்கொள்கிறேன், அதனை உடனடியாக நீக்க).

உங்கள் ஆக்கபூர்வ பங்களிப்பினை வழங்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை இரண்டு வகையானவை.

  1. Free float

  2. . Managed float

இலங்கை மற்றும் பல மேற்கு நாடுகள் முதலாவது மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கையினையும், இந்தியா போன்ற சில ஆசிய நாடுகள் இரண்டாவது மிதக்கவிடப்பட்ட கொள்கையினை பின்பற்றுகின்றன.

Managed float இனை Dirty float என ஏன் அழைக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலுள்ள உறவுகள் அவுஸ்ரேலியா எவ்வளவு போகுது என கேட்டால் வங்கியில் 204 என்பார்கள், அதாவது ஒரு அவுஸ்ரேலிய நாணயம் 204 இலங்கை நாணய பெறுமதி கொண்டது.

எந்த ஒரு நாணயத்தின் மதிப்பும் தனிய கணிக்கப்படுவதில்லை அதனுடன் இன்னொரு நாணயத்தின் பெறுமதியுடன் இணைத்து கணிக்கப்படுகிறது.

குறித்த இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் இடம்பெறும் போது அந்த வர்த்தகங்களின் பெறு பேறாக வர்த்தக நிரம்பல் அல்லது வர்த்தக நிலுவை ஏற்படும், வர்த்தக நிலுவை ஏற்பட்டால் குறித்த நாடு தனது நாணயத்தினை விற்று நிலுவையினை செலுத்த வேண்டும் அதனால் குறித்த நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும், அதனால் குறித்த நாணய வீழ்ச்சி அடைந்த நாட்டின் ஒரு பொருள் அதிக நாணய பெறுமதி கொண்ட வர்த்தக பங்காளி நாட்டின் குறித்த ஒரு பொருளின் விலையுடன் ஒப்பிடும் போது விலை மலிவாக காணப்பட விலை குறைவானமையால் நாணய பெறுமதி அதிகம் கொண்ட்ட நாட்டினர் அவர்களின் பொருளை வாங்குவார்கள், அப்படி வாங்கும் போது தற்போது வர்த்தக நிலுவையிலிருந்து வர்த்தக நிரம்பல் ஏற்படும், இப்படி குறித்த நாடுகளுக்கிடையே இயல்பாக சமநிலையாகும் (automatic stabilizer) தன்மை கொண்டது Free float.

ஆனால் இந்தியா போன்ற முகாமைத்துவ மிதக்கவிடப்பட்ட (Managed float) நாணயக்கொள்கையினை கடைப்பிடிக்கும் நாடுகள் தமது உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காகவும் வேறு பிற காரணங்களுக்காவும் வலிந்து நாணய பெறுமதியினை கட்டுப்படுத்துவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.