Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லும் ‘ஆறாம் நிலம்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லும் ‘ஆறாம் நிலம்’

spacer.png

இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன. உண்மை நிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும் வகையில்" ஆறாம் நிலம்" எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக ஓடிடியில் செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது

தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் போது லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

அப்படிச் சரணடைந்தவர்களின் நிலை என்ன?. பனிரெண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்கள் நிலை என்ன? என்பதை இலங்கை அரசாங்கம் சொல்ல மறுக்கிறது.

சரணடைந்தவர்களைக் காணாமல் போனோர் என்றழைக்கின்றனர். அப்படிக் காணாமல் போனோரின் உறவுகள் ஆண்டுக்கணக்கில் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

சிங்கள அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. சர்வதேச சமூகமும் காண மறுக்கிறது. ஏனெனில், காணாமல் போனோரின் உறவுகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்கள் யாரும் அறியாததுதான்.

அவர்களின் துயரங்களைச் சிங்கள அரசுக்கும் சர்வதேசச் சமூகத்துக்கும் புரிய வைக்கும் முயற்சிதான் ஆறாம் நிலம் திரைப்படம் என்கிறார் இயக்குநர் ஆனந்த ரமணன்.

கணவன் இல்லாமல் மனைவியரும் அப்பா இல்லாமல், குழந்தைகளும் தவிக்கும் தவிப்புகள் உலகத்துக்குச் சின்ன விசயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உலகளவு கொடுமை என்பதை முகத்திலறைந்தாற் போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனந்தரமணன்.

போருக்குப் பின் அன்றாட வாழ்க்கைக்காக அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், அரசாங்க நிர்வாகிகள், உளவுத் துறையினர், ராணுவத்தினர் ஆகியோரால் பெண்கள் படும் அவஸ்தைகள் கண்களைக் கசியவைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நவயுகாவும் அவருடைய பெண் குழந்தையாக நடித்திருக்கும் தமிழரசியும் மிகமிகப் பொருத்தமாக நடித்து காண்போரைக் கலங்க வைத்துவிடுகிறார்கள்.

அதுவும் அந்தக் குழந்தை, அப்பாவோடு துள்ளுந்தில் பயணிக்கும் குழந்தையுடன் கூடிய விளம்பரப்பலகைகளைப் பார்த்து ஏங்குவதும், அவ்விளம்பரங்களில் காலத்துக்கேற்ப துள்ளுந்துகள் நவீனமாகிக் கொண்டே இருப்பதும் திரைமொழிக்கு அழகு.

படத்தில், கண்ணிவெடி அகற்றும் வேலைக்கு அவர்கள் போகிறார்கள். எப்போது அவை வெடிக்குமோ? என்ற பதற்றத்துடன் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

திரைப்பட ரசிகர்களுக்கு படம் மிக மெதுவாகப் போவது போல் தோன்றும். பார்த்துக் கொண்டிருப்பதையே தாங்க முடியவில்லை அடுத்து பெரிதாக ஏதாவது நடந்துவிடுமோ? என்கிற பயம்தான் அப்படி உணரவைக்கும்.

ஈழதமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் வலியின் சிறுதுளிதான் இந்தப்படம். சர்வதேசச் சமூகம் கண்கள் திறந்தாக வேண்டிய தருணம்.

பூ மீது யானை... பூ வலியைத் தாங்குமா? என்கிற பாடல்வரிக்கேற்ப அமைந்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கிய ஆனந்த ரமணனுக்கும் அதைப் பொதுவெளியில் வெளியிடும் ஐபிசி தமிழ் இணையதளமும் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்களே.
https://minnambalam.com/entertainment/2021/09/25/21/aram-nilam-movie-review

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

20 மணித்தியாலங்களுக்குள் 20, 000 பார்வை எண்ணிக்கையை நெருங்குகிறது...
"ஆறாம் நிலம்"
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு "இறப்புச் சான்றிதழ்" வழங்க இலங்கை அரசு உத்தேசித்துள்ள இவ் வேளையில்....
"ஆறாம் நிலம்" வெளி வந்திருப்பது சாலப் பொருத்தமானது.
இயக்குனர் Anantha Ramanan, படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்களின் சம்யோசித புத்திக்கு எனது வாழ்த்துகள்.
இதுவும் ஒரு போராட்ட உத்தியே!
ஒப்பீட்டளவில் பெரும் செல்வில் தயாரிக்கப்பட்ட இந்த "ஈழம் சினிமா" ஐ எவ்வித இலாப நோக்கும் அன்றி மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் YouTube சனலில் வெளியிட்டமைக்கு IBC தமிழுக்கு தலை வணங்குகிறேன் ❤
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழைப்பு - மின்னிதழ் வடிவம்.

மூலம்; Ahalnews.com

 


Dear All,

I apologise for not sending you this invitation individually. I have been quite busy the last few days.
Many thanks for taking part in the conference held last March 20 entitled “Loss of the Tamil Homeland: Identifying Issues and Creating Strategies to Preserve Tamil Land”.
I am very pleased to invite all of you to the virtual screening of the forthcoming documentary ThaaiNilam: Land Grabbing - The Real Pandemic for the Tamils in Sri Lanka.
ThaaiNilam contains new information, never-before-seen footage, and interviews; all recorded directly from Sri Lanka’s occupation of the Tamil homeland.  The screening will be followed by an online panel discussion entitled “Sri Lanka’s Ethnocratic Land Grabs: Methods, Consequences, and Tamil Land Defence.” 
The premiere of this important film will be held via Zoom and Youtube, on September 25, 2021, at 5:30 PM IST (Jaffna and Trincomalee) / 1:00 PM GMT (London) / 8:00 AM EST (Toronto and New Jersey), and will last for four hours. Details are as follows:

Zoom Link:
https://bit.ly/LandGrab2021
 Webinar ID: 841 5154 5684
Passcode: TH2021


Against this backdrop, we  have organised a screening of the documentary on land grabbing and a panel discussion with renowned international academics and human rights defenders—to create awareness among the Tamil people around the world and the international community about this heinous violation of our land rights by the Sri Lankan government against us. This event forms the launch of the Our Nilam campaign to preserve the Tamil homeland from Sri Lanka’s land grabs.
The documentary ThaaiNilam: Land Grabbing - The Real Pandemic for the Tamils in Sri Lanka speaks through various sources about the land grabbing that the Sri Lankan government has been carrying out for the past 70 years in the North-East, the native homeland of the Tamil-speaking people of Sri Lanka, and its methods, trends and consequences. 

I am pleased to announce that veteran politician Hon. R. Sampanthan, former Opposition Leader, Parliamentarian and Leader of the Tamil National Alliance (TNA), who is worthy of my respect and honour, will join me in launching this event.

THAAINILAM


THAAINILAM

The list of event participants includes the following.
·       Keynote address: Prof. Oren Yiftachel, Lynn and Lloyd Hurst Family Chair of Urban Studies, Geography Dept. Ben-Gurion University of the Negev, Be'er Sheva, Israel
·       Panelist: Dr. Medha Patkar, Indian social activist and founder of Narmada Bachao Andolan and the National Alliance of People’s Movements.
·       Panelist: Ms Anuradha Mittal, Executive Director,  The Oakland Institute, California, USA
·       Panelist: Professor Ramu Manivannan, Department of Politics & Public Administration School of Politics & International Studies, University of Madras, Chennai, India
·       The panel discussion will be followed by a musical performance by Canadian Tamil artist, Shan Vincent de Paul.
I thank you for your participation in this important film premiere and campaign launch.
Justice C.V.Wigneswaran
Member of Parliament, Jaffna District, Sri Lanka

Posted

இப்படத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் நடிகர்களுக்கும்  நன்றிகள். போருக்கு பின்னரான  ஈழத்தமிழ் மக்களின்  வலிகளை சொல்லும் சிறந்த திரைப்படம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நேற்று இந்த படத்தைப்பார்த்தேன்.. என்னைப்பொறுத்தவரையில் இந்த மாதிரியான படங்கள் அதிகம் வெளிவரவேண்டும்.. போருக்கு பின் எத்தனை வகையான துன்பங்களிற்குள்ளாக மக்கள் அதிலும் காணாமல் போனவர்களின் வலியை மட்டுமல்ல புனர்வாழ்வு(?) அளித்துவிடுவிக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் தொட்டு செல்கிறது.. 

அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக அதே நேரம் சொல்லவந்த விடயத்தை கூறிச்சொல்கிறது. கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவே வந்துபோகிறார்கள்..படப்பிடிப்பு இடம்பெற்ற இடங்களை பார்க்கும் பொழுதும், பிண்ணனி இசையும் எல்லாமே வேதனையை தந்தாலும் இவை போன்ற படங்கள் வரவேண்டும்.  

அதுமட்டுமல்ல எனக்கு கவிதா என்ற கதாபாத்திரம் மறைமுகமாக சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வையும் கூறுகிறது. இந்த வேலையில் இருப்பவர்கள் எத்தகைய பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது

(படத்தைப்பார்த்தால் இது விளங்கும்). 

இந்த படத்தை தயாரித்தவர்கள், நடிகர்கள் மற்றும் மற்றைய கலைஞர்களுக்கு நன்றிகள்.. 

 

Posted

இத்த ஆறாம் நிலம் திரைப்படம் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படல் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை கூறும் இந்த திரைப்படம் நம்மவர்களாலேயே கண்டு கொள்ளப்படாத நிலையே உள்ளது போல் தெரிகிறது. இங்கு யாழ் களத்தில் கூட இந்த படத்தை பார்தது அது தொடர்பான கருத்துக்கள் பெரியளவில் இல்லை. பிரபா, விசுகு ஆகிய இரு உறவுகள் மட்டுமே படத்தை பற்றிய தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, tulpen said:

இத்த ஆறாம் நிலம் திரைப்படம் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படல் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை கூறும் இந்த திரைப்படம் நம்மவர்களாலேயே கண்டு கொள்ளப்படாத நிலையே உள்ளது போல் தெரிகிறது. இங்கு யாழ் களத்தில் கூட இந்த படத்தை பார்தது அது தொடர்பான கருத்துக்கள் பெரியளவில் இல்லை. பிரபா, விசுகு ஆகிய இரு உறவுகள் மட்டுமே படத்தை பற்றிய தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

உண்மைதான் துல்பன் அண்ணா.. எனக்கும் அது கவலையாகவே உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/9/2021 at 20:28, கிருபன் said:

ஈழதமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் வலியின் சிறுதுளிதான் இந்தப்படம். சர்வதேசச் சமூகம் கண்கள் திறந்தாக வேண்டிய தருணம்

சர்வதேச சமூகம் கண்களை திறக்கவேண்டும் என்றால் இந்த மாதிரியான படங்கள் தனியே தமிழில் மட்டும் வந்தால் போதாது… 

ஆனால் இந்த மாதிரியான படங்களை எங்களது சமூகத்திடம் கொண்டு போய் சேர்ப்பதே கஷ்டமாக உள்ளது.. 

எனது தமிழ் பேசும் நட்பு வட்டத்தில், இரண்டுவிதமான போக்கு உள்ளது

1- ஈழத்தமிழர் சம்பந்தமான படங்களைப்பார்த்தால் வேதனை ஆகையால் பார்ப்பதில்லை

2- பார்த்து என்ன செய்வது?

 

Posted

“ஆறாம் நிலம்” திரைப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த ஈழத்து திரைப்பட நடிகை நவயுகாவுடனான நேர்காணல். பல்துறை ஆற்றலுள்ள நடிகையான நவயுகா  “பொட்டு” என்ற குறும்படத்தை இயக்கிய இயக்குனராவார். “பொட்டு” குறும்படம் எமது சமூகத்திற்கு மிக காத்திரமான  செய்தியை கூறிய குறும்படம்.  

மும்மொழியிலும் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் கொண்ட ஈழத்தின் சிறந்த கலைஞரான இவர்  சிங்கள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
    • தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
    • இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.