Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி ஒரு பேப்பரில் எழுதியதை நான் விமர்சனமாகத்தான் பார்க்கின்றேன்.

ஒரு படைப்பாளி விமர்சனம், கண்டனம், வசைமாரி, நையாண்டி என்று அனைத்தையும் சந்திக்கின்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படியான பக்குவம் இல்லாதவர்கள் பொதுவில் வரக்கூடாது.

ஆனால் வந்ததும் இல்லாமல் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்கின்ற முறை மிகவும் மோசமானதாக இருக்கின்றது.

அண்ணா ஒரு படைப்பாளி தான் எழுதுறதுகளுக்கான எதிர்விளைவுகள ஏற்றுக்கொள்ளுற பக்குவத்த வளர்த்துக்கொள்ளோணும் எண்டுறது சரி. ஆனா அதுக்கா வசைமாரிகளயும் சீண்டிக் காயப்படுத்துற விதமான நையாண்டியளயும் சரியெண்டுறீங்களா அப்ப?

அதென்னெண்டு அப்பிடி பக்குவமில்லாதவை பொதுவில் வரக்கூடாதெண்டு நீங்க சட்டம் போடுவிங்க? வரக்கூடாது எண்டு சொல்லுறதுக்கான உரிமய யார் உங்களுக்கு தந்தது? இறைச்சிக்கடேல நிக்கிற ஒராளுக்கு அல்லாட்டி இறைச்சி வாங்க போய் வாற ஒராளுக்கு இரத்தமும் அந்த நாத்தமும் ஒத்துப்போகும்... அல்லாட்டி பழகிப்போயிடும். ஆனா மரக்கறி சாப்பிடுற ஒராளுக்கு அது ஒத்துப் போகாமல் இருக்கலாம். அதுக்காக இறச்சி சாப்பிடுற நீங்க மரக்கறி சாப்பிடுறவய சாப்பிடவே கூடாது எண்டு சொல்லிவிங்களோ? என்னங்கண்ணா உங்கட ஞாயம்?

ஒவ்வொரு ஆக்களும் ஒவ்வொரு சூழலில வளந்த ஆக்கள். அவையின்ர உள்ளம் எண்டுறது அந்தந்த சூழலுகளால கட்டமைக்கப்படுது. அப்பிடி மாறுபட்ட கட்டமைப்ப கொண்ட உள்ளத்துக்கு பலவிதமான பண்புகள் இருக்கு. எல்லாரலயும் வசைமாரிகளயும் தாக்குதல்களயும் தாங்கிக் கொள்ளமுடியாது. அவேன்ர reaction ம் அதின்ர அடிப்படையில தான் வரும். உங்கட நோக்கம் நல்ல நோக்கமா இருந்தா அவைய அணுக வேண்டிய விதங்களில அணுகி அத சாதிக்கலாம். ஆனா உங்கட நோக்கம் தனிய சீண்டிப் பாக்கிறதெண்டா அத பலவழில செய்யலாம்.

சாத்திரி அண்ணா டென்மார்க் அம்மன பற்றி எழுதின பாணில இந்த எழுத்தாளர் அமைப்ப பற்றியும் எழுதினது பிழையான முறை. மக்கள் நடைபாதையில அதுக்கான வேகத்தில தான் கார் ஓட்டணும். வேகமான வீதியில் வேகம் குறைச்சு ஓடக்கூடாது.

எத எத எங்க எப்பிடி எப்பிடி செய்யோணுமோ அத அத அங்க அப்பிடி அப்பிடி செய்தா தான் அதின் விளைவு நல்லதா இருக்கும். இல்லாட்டி நீங்க எதிர்பாக்கிற விளைவு ஒருநாளும் வராது. :)

Edited by poonai_kuddy

ஒரு படைப்பாளி விமர்சனம், கண்டனம், வசைமாரி, நையாண்டி என்று அனைத்தையும் சந்திக்கின்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படியான பக்குவம் இல்லாதவர்கள் பொதுவில் வரக்கூடாது.

படைப்பாளி விமர்சனம், கண்டனம், வசைமாரி, நையாண்டி போன்றவற்றை சந்திக்கும் பக்குவத்தை பெறவேண்டும். ஆனால் படைப்பாளி பக்குவப்பட்டால் அவனால் படைக்க முடியாது. ஏதோ ஒன்று அவனது உணர்வுகளைத் தட்டி எழுப்பும்போதுதான் அவனால் படைக்க முடியும்.

நான் இங்கே குறிப்பிடுவது கவிதை, கதை எழுதுபவர்களைப்பற்றி. படைப்பாளி பொதுச் சேவையாளனல்ல. சமூகத் தொண்டனும் அல்ல. அவன் தான் காண்பவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் பாத்திரங்களாக முன்வைக்கிறான். சிலருக்கு அவை பொழுதுபோகக்குக்கான வாசிப்பாக அமையும். சிலருக்கு அவை கடந்த கால வாழ்வின் பதிவுகளாகத் தெரியும். சிலருக்கு அவை படிப்பினையாகவும் தோன்றும். அது வாசகர்களைப் பொறுத்தது.

எனவே, படைப்பபாளியில் கறைகள் இருக்கக் கூடாது என எதிர்பார்க்கவும் முடியாது. படைப்பாளி உத்தம சற்புத்திரராக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

அதனால்தான் சொன்னேன்.. படைப்புகளை விமர்சிக்கும்போது படைப்பாளிகளை விமர்சித்தால்.. அவை விமர்சனமல்ல, வசை.

திருவிளையாடல் என்ற படத்தில் ஒரு காட்சி:

சிவன்: நக்கீரா.. என் பாட்டிலா குற்றம் கண்டாய்? என்னை நன்றாக உற்றுப் பார்!

நக்கீரன்: ஐயனே.. நீரே முக்கண் முதல்வனும் ஆகுக.. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே..

(ஆள் முக்கியமில்லைப்பா.. பாட்டில குற்றம்.. அவளவுதான்.. :P )

இன்று.....

சிவன்: நக்கீரா.. என் பாட்டிலா குற்றம் கண்டாய்? என்னை நன்றாக உற்றுப் பார்!

நக்கீரன்: யோவ்.. நெற்றிக்கண்ணைக் காட்டினனால் பயந்துபோவன் எண்டு நினைச்சியோ... பாட்டில குற்றம் இருக்கோ இல்லையோ.. உன்னை கனகாலமா நோட் பண்ணீட்டுத்தான் குற்றம் எண்டு சொல்லுறன்.. கழுத்தில ஒரு பாம்பு... மேலிலை சாம்பல்.. பாக்க பஞ்ச பரதேசிமாதிரி இருக்குற உன்ரை பாட்டிலை பிழைதான்.. :P :)

Edited by sOliyAn

பூனைக்குட்டி!

நீங்கள் சொல்வது சரி! மரக்கறி சாப்பிட்டு மரக்கறி வாசம் மட்டும் அறிந்தவர்கள் இறைச்சிக் கடைக்குப் போகும் போது கஸ்ரமாகத்தான் இருக்கும். ஒத்துப் போகாதுதான்.

ஆனால் படைப்புலகம் என்பது இறைச்சிக்கடை, மரக்கறிக்கடை என்று அனைத்தும் இருக்கின்ற ஒரு உலகம். இரண்டையும் அங்கீகரிக்கத் தெரிந்தவன்தார்தான் அதற்குள் வர முடியும்.

மரக்கறி மட்டும் சாப்பிட்டு வளர்ந்தவர் இறைச்சிக்கடையும் இருக்கின்ற ஒரு உலகத்திற்குள் வந்து விட்டு "குய்யோ! முறையோ!" என்று கத்துவது சரியல்ல. அப்படியானவர்களைத்தான் வர வேண்டாம் என்று சொல்கின்றேன்.

சோழியன்!

நீங்கள் பாமரனுடைய எழுத்துக்களை படித்திருப்பீர்கள். அவருடைய எழுத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய நையாண்டியும், "வசைமாரிகளும்", கண்டனங்களும் கொண்ட எழுத்துக்களை நீங்கள் எவ்வகையில் சேர்ப்பீர்கள்?

ஒரு படைப்பாளிக்கு கோபம் என்பது நிச்சயமாக இருக்க வேண்டும். அது சமூகத்தை, அரசியலை நோக்கியதாக இருக்கலாம். ஆனால் விமர்சகனை நோக்கியதாக இருக்கக் கூடாது.

இங்கே பிரச்சனை என்னவென்றால்

ஒன்றியத்தின் பெயரில்தான் சர்வதேசம் என்று இருக்கின்றதே தவிர உண்மையில் இவர்கள் ஒரு மிகக் குறுகிய வட்டத்திற்குள் இருக்கின்றார்கள். எழுத்துலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், விமர்சனங்களை செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று எதுவுமே இவர்களின் கவனத்திற்கு வரவில்லை.

இவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். அப்பொழுதுதான் சாத்திரி போன்றவர்களின் விமர்சனம் மிக மிக சாதாரணமான ஒன்று என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

சாத்திரி செய்த மிக மிக சாதரணமான விமர்சனத்தையே இவர்களால் தாங்க முடியவில்லையே! ஆனால் சாத்திரியை விட கடுமையாக விமர்சனம் செய்வர்கள் இருக்கின்றார்களே! அவர்கள் விமர்சனம் செய்து இவர்களுக்கு மாராடைப்பு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது?

அதனால்தான் விமர்சனத்தை தாங்குகின்ற பக்குவம் இல்லாதவர்கள் பொதுவில் வரவேண்டாம் என்று அறிவுரை சொன்னேன்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன் அண்ணாக்கும் சபேசன் அண்ணாக்கும் பிறகு நேரங் கிடைச்சா எழுதுறன். சாத்திரி அண்ணாக்கு சிநேகிதி அக்கா எழுதின கட்டுரையைத் தாறனெண்டு சொன்னான். அதில நானும் கொஞ்சம் எழுதியிருக்கிறன். முழுத் தலைப்பையும் வாசிக்கிறதுக்கு இங்க போங்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=10708

சிநேகிதி அக்கா சொன்னதில முக்கியமான பந்தி இதான்.......

மற்ற காரணம் நாங்கள் நேசிக்கிற நபர் எங்களை நேசிக்கிறாரா இல்லையா என்றது.சில பேரை முதற்சந்திப்பிலயே பிடிக்கும்.சில பேரை வாழ்நாள் முழக்கப் பிடிக்காது.சில பேரை ஆரம்பத்தில பிடிக்காட்டிலும் பழகப் பழக பிடிக்கும்.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றி இன்னொராள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள வச்சார்களாம்.உதாரணமா என்னப் பற்றி நீங்கள் ஒராளுக்கு சொல்றதை நான் உங்களுக்குத் தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறன் என்று வைப்பமே.

1.நீங்கள் என்னப் பற்றி நல்லதா எதுவுமே சொல்லேல்ல.

2.என்னப் பற்றி எல்லாமே நல்லதாத்தான் சொன்னீங்கள்.

3.நல்லதாச் சொல்லத் தொடங்கி கடைசியா பிளேற்ற மாத்தீட்டிங்கள்.

4.கெட்ட குணங்களைச் சொல்லி ஆனால் சினேகிதி நல்லவா அவாட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு என்று என்ர நல்ல குணங்களைச் சொல்லி முடிக்கிறீங்கள்.

என்னப்பற்றி நல்லதா சொல்லி கடைசில கவுத்த ஆளைத்தான் நான் அதிகமா வெறுப்பன்.அதே நேரம் குறையைச் சொல்லத் தொடங்கி நிறைகளைச் சொல்லி முடிச்ச ஆளைத்தான் அதிகமாக நேசிப்பேன்.மற்ற இரண்டு ஆக்களும் இந்த இரண்டு பேருக்கும் இடையில வருவினம்.

கடைசிக் காரணி என்னென்றால் ஒராளைப் பற்றி எங்களுக்கு முதல்ல என்ன தெரிய வருதோ அதை வச்சுத்தான் எங்களுக்கு அந்த நபரை எவ்வளவு பிடிக்கும் பிடிக்காது என்று தீர்மானிக்கிறமாம்.அதான் நேர்முகத் தேர்வுப் போகும்போதெல்லாம் அறிவுரை சொல்வார்களே.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றிய விபரம் இரண்டு பந்தியில எழுதி கொஞ்ச ஆக்களிட்ட குடுத்தினமாம்.அரைவாசிப் பேரிட்ட குடுத்த விபரத்தில் முதலாவது பந்தியில் ஒருவரின் நல்லியல்புகளிருந்தன.மற்றாக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது இதைப் பதிவதற்கு எதுவும் பெரிய காரணங்களில்லை. கிழக்குப்பதிப்பகத்தின் அறிவுத்திருடல்கள் வலைப்பதிவுலகத்தோடு பரீட்சயமானவர்களுக்கு புதிய விடயமுமல்ல. ஆனால் எனக்கு வரும் ஆச்சரியம் என்னவென்றால், தொடர்ந்து திருடல்களும் பிறகு அம்பலப்படுத்தல்களும் நடந்துகொண்டிருந்தும் இப்படியே திருட்டுக்கள் செய்ய என்னவொரு நெஞ்சுரம் வேண்டும் என்பதுதான். அண்மையில் சிங்கப்பூரில் வசிக்கும் எம்.கே.குமாரின் சிங்கப்பூர் பற்றிய தொடர் அபபடியே வேறொருவரின் பெயரில் புத்தகமாய் வந்து விவாதிக்கப்பட்டதை வலைப்பதிவில் அறிந்திருப்பீர்கள். அதேபோன்று திருட்டுக்களைச் செய்துவிட்டு அத்னோடு சம்பந்தப்பட்டவர்களின் குரல்களை சமரசத்தின் மூலம் அமுக்குவதிலும் கிழக்குப்பதிப்பகத்தார் கெட்டிக்காரர்கள். இவர்களிடம் இருக்கும் இந்த வகையான ethicsஜ மேற்குலத்தவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் காவ்யா விஸ்வநாதன் போன்றவர்களின் பிரதிகள் எல்லாம் இங்கே முடக்கப்படவேண்டிய தேவையிருந்திருக்காது. இவ்வாறான விவாதங்கள் வரும்போது அய்யோ பதிப்பகத்தில் இருக்கும் அவர் நல்லவர் இவர்தான் அப்படிப்பட்டவர் என்று வரும் குரல்கள் இன்னமும் விசனமளிப்பவை.

திருந்தவே மாட்டீங்களா சாமிகளா?

(~டிசே)

இந்தக் கட்டுரையிலயும் திருட்டு தொடர்பாத்தான் எழுதியிருக்கு... நான் மேல மொத்தமாக்கி காட்டின வசனங்கள் ஒருபேப்பருக்கும் பொருந்தும். முழுக் கட்டுரையும் படிக்கொணுமெண்டா இங்க போய் பாருங்கோ http://padamkadal.blogspot.com/2007/07/blog-post_17.html

ஒரு பேப்பர் காரர் மட்டுமில்ல அவை இப்ப தொடங்கியின ஒரு ரேடியோ காரரும் இதே வேலையத்தான் செய்யினம். இந்தத் தலைப்பில இது தேவைல்ல தான். ஆனா ஒரு அமைப்ப விமர்சிக்கிறதெண்டு எழுதுற ஒரு பேப்பர்காரரின்ர திறத்தயும் சொல்லத்தானே வேணும். இல்லாட்டி இந்தத் தலைப்பில ஒரு சார்பா மட்டுந்தானே கதைப்பினம். அதான்...... நேரங் கிடைச்சா மக்கள அவமதிக்கிற ஒருபேப்பர் ஒரு ரேடியோவ பற்றி தனிய எழுதுறன்..... :rolleyes: அவையோட எனக்கெந்த தனிப்பட்ட கோவமும் இல்ல.... ஒரு மூண்டு மாதத்துக்கு முதல் தான் இப்பிடிய ஒரு பேப்பர் இருக்கெண்டு கேள்வி பட்டனான்.... அவை நல்லா எங்கட சமுகத்துக்காண்டி நல்லத செய்யணும் பயனுள்ளத செய்யணும் எண்டுற ஒரு அக்கறையில தான் எழுதலாம் எண்டு நினைக்கிறன்.... பிறகு நீங்க யாரும் யோசிக்க கூடாது எனக்கும் கோபி அண்ணாக்கும் முற்பிறவில நடந்த பிரச்சனையால இப்ப பழி வாங்குறன் எண்டு... அதான்... B)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி நான் அந்த நபர்களைத்தான் பல காலமாக தெரியும் என்று எழுதியிருந்தேன் ஒன்றியத்தை தெரியும் என்று எழுதவில்லை மற்றது இறைச்சி கடையை போல மனித மனங்களை மோசமாக வெட்டுறன் என்று எழுதியிருந்தீங்கள் அப்படி மனங்கள் வெட்டப் பட கூடிய அளவிற்கு மோசமான வசனங்கள் எவை என்பதை தயவு செய்து சுட்டி காட்டினால் உதவியாக இருக்கும் ஏனென்றால் நான் தமிழை அதிகம் படித்தவனில்லை உங்களைப்போல இலக்கணம் இலக்கியம் தெரியாது.என்னுடைய எழுத்துகளிலேயே அது தெரியும் பேச்சு தமிழில் தான் அதிகமாய் எழுதுவேன் அதுக்காக இலக்கிய வாதிகளை பற்றி எப்பிடி எழுதலாம் என்று கே;காதேங்கோ நான் அவையளின்ரை படைப்பை பற்றி விமர்சிக்கேல்லை. மற்றது இங்கு பிரச்சனை ஒரு பேப்பரை பற்றியது அல்ல அதில் வந்நத எனது கட்டுரையை பற்றியது தான் ஆனாலும் எனக்கும் ஒரு பேப்பரிற்கு என்ன தொடர்பு எண்டியள் அதில் நானும் பிரான்சிற்கான ஆசிரியர் என்கிற உரிமை இருப்பதால் சில விழக்கங்களை தந்தேன் இனிமேல் ஒரு பேப்பரை பற்றி இங்கு இழக்காமல் சம்பந்த பட்ட கட்டுரையை பற்றி மட்டும் விவாதித்தால் நல்லது நீங்கள் பண்பான மனிதர் விழங்கி கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். உங்களிற்கும் ஒரு தனி மடல் போட்டு இருக்கிறேன் பாருங்கள் முடிந்தால் நேரே கதைக்கலாம் இதுக்குள்ளை வந்து எழுதிதள்ள எனக்கு நெரம் போதாது என்பதனை மீண்டும் மீண்டும் தெரியபடுத்துவதோடு ஆனால் முடிந்தளவு தேவை படும்போது கட்டாயம் வந்து எழுதுவேன் மற்றது ஒரு பேபரிலை எழுதிறதாலை தொல்லைதான் நீங்கள் வழக்கு போட போடுற ஆக்களிற்கு ஆலோசனை தரலாமெண்டியள் அதுதான் அப்பிடி ஏதும் நடந்து இழுத்து பூட்டினால் வேறை எதையாவது செய்யலாமெண்டன் மற்றது ஒரு பேபரின் நோக்கம் என்னவெண்டு திரும்ப திரும்ப கே;காதேங்கோ அப்பிடி ஒண்டும் இல்லை அதுதான் முதலே சொல்லிட்டன் என்னையும் சேத்துதான் ************* ஆக்கள் செய்யிறம் எங்களாலை புத்திசாலிதனமா எழுத ஏலாது எண்டுறதாலைதான் புத்திசலியள் இணையங்களிலை எழுதிறதை வெட்டி போடுறம் அடுத்ததா என்னை ஒரு நல்ல எழுத்தாளர் எண்டியள்ஏதோ யாழிலை என்னை பழக்கம் எண்டதுக்காக சும்மா பொய் எல்லாம் சொல்ல கூடாது அதுவும் தமிழ் தேசயிம் எண்டு என்னவோ எல்லாம் சொன்னியள் அதவும் எனக்கு தெரியாது ஒரு பேப்பர் என்கிற குப்பை கூடைக்குள்ளை முடிஞ்சளவு நானும் என்ரை எழுத்து என்கிற குப்பையை கொட்டுறன் அவ்வளவுதான் அதுக்குள்ளை யாரும் பிளாஸ்றிக்கை போட்டால் எரிக்கேக்கை சுற்று சூழலிற்கு கூடாது தான் ஆனாலும் அணு பரிசொதனை நடக்கமலா இருக்கு.மற்றது நீங்கள் தந்த சினேகிதியின் இணைப்பில் பல நல்ல விடயங்களை படித்தேன் ஆனாலும் இந்த மர மண்டையிலை ஏறுமா தெரியாது அந்த கட்டுரையை அந்த ஒன்றிய காரரும் படிச்சா நல்லா இருக்கும் ஏனென்னறால் அவை புத்தி சாலியள் புரிந்து கொள்ளுவினம் மற்றது தயவு செய்து எழுதிறதை தமிழிலை எல்லாத்தையும் எழுதினால் எனக்கு புரியும் நான் அகராதியை புரட்டாமல் படிக்க உதவும். நீங்கள் புத்தி சாலி புரிந்திருக்கும். இப்படிக்கு ஒழித்திருந்து எழுதும் சாத்திரி நன்றி

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் நிங்கள் என்ன சொல்ல வாறீங்கள் படைப்பாளி என்பவன் விமர்சனங்களை தாங்காமல் ஏற்று கொள்ளாமல் விமர்சனம் வைப்பவர்களை எப்படி நீ விமர்சிக்கலாம் என்று கோப பட வேண்டுமா?? அப்படியானால் எதுக்கு ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய படைப்பிற்கு விமர்சனத்தை வையுங்கள் என்று கேட்கிறான்அதாவது பாராட்டுவது மட்டும் தான் உங்கள் பார்வையில் விமர்சனமா??நீங்கள் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திரக்கலாமெண்டு சொல்லவே கூடாதா?? படைப்பாளிக்கு ஒரு தாக்கம் தான் படைப்பாகின்றது நீங்கள் சொன்னது போல உணர்வுகளை தட்டி எழுப்பினால் தான் படைக்க முடியும் இது எல்லாத்துக்கும் பொருந்தும் அதற்கான வயாகரா தான் என்னுடைய கட்டுரை என்று நான் நினைத்தேன் அனால் அது நஞ்சு என்று சம்பந்த பட்டவர்கள் பயப் பிடினம் நான் என்ன செய்ய

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா.... யாழில பக்கம் பக்கமா எழுத சொல்லலயே. அந்த பிரச்சனைய அல்லாட்டி தலப்ப யாழில தொடங்கினது நீங்க. அது நீங்க ஒருபேப்பர் எழுத்தாளர் அமைப்பு என்ற மூன்று பேர் சம்மந்தபட்டது. அப்பிடி பாக்கேக்க அந்த பிரச்சனைய நீங்க யாழுக்கு கொண்டு வந்தா அது தொடர்பா கேள்வியள் சந்தேகம் எல்லாம். அதுக்கு விளக்கம் தரவேண்டியது உங்கட பொறுப்பு. நேரமில்லாட்டி நீங்க அத யாழில இணைச்சிருக்கவே தேவையில்லயே? விளக்கம் கேட்டதுக்கு நீங்க அதில பதில் தராட்டி உங்கட பக்கத்தில நீங்க சரியா செயற்படல எண்டு தான் நினைக்கணும்...

நான் முதல்லயே சொன்ன மாதிரி உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு தேவைல்ல. நீங்க யாழில போட்ட உங்கட கட்டுரை பற்றினதா தான் என்ர சந்தேகங்கள். அத நான் களத்திலயே கேக்கிறன். எழுத்தாளர் அமைப்ப பற்றி விளக்கம் தேவையெண்டா அந்த அமைப்பொட நேரடி தொடர்பில்லாத உங்களிட்ட கேக்கிறதவிட அந்த அமைப்போடயே நேர போன் பண்ணியோ மெயிலிலயோ கேக்கிறன்.

எனக்கு யாரிலயும் தனிப்பட்ட கோவமில்ல. அதுக்கான தேவையும் எனக்கில்ல. எல்லாரும் நல்லத பயனுள்ளத எங்கட தமிழுக்கு செய்யணும் எண்டிற அக்கறைல தான் எழுதுறன்.

நான் அவசரப்பட்டு எழுதுறதால எனக்கென்ன ஆகப்போது. உங்கட வசனத்தயே திரும்ப தாறன். வாசிச்சு பாருங்கோவன்:

நீங்க சொன்னது: மேலே நான் குறிப்பிட்ட நபர்களையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் எனக்கு இப்பொழுதல்ல பல காலங்களாகவே தெரியும்.

இதுவும் நீங்க சொன்னது: இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

இப்ப எழுதினது: பூனைக்குட்டி நான் அந்த நபர்களைத்தான் பல காலமாக தெரியும் என்று எழுதியிருந்தேன் ஒன்றியத்தை தெரியும் என்று எழுதவில்லை

முதல் வசனத்தில அந்த நபர்களயும் அவையின்ர செயற்பாடுகளையும் தெரியுமெண்டுறீங்க. கடைசியா எழுதேக்க அந்த நபர்களத் தெரியுமெண்டு சொல்லுற நீங்க அவையின்ர செயற்பாடுகள குறிப்பிடாம விட்டிட்டீங்க. சரி மறந்து போனிங்களோ தெரியல. ஆனா ஒரு நபர பற்றி தெரியும் அவரின்ர செயற்பாடுகள பற்றி தெரியுமெண்டா.... அவர் ஒரு அமைப்பில இருக்கிறார் எண்டும் அது எழுத்தாளர் அமைப்பெண்டும் உங்களுக்கு தெரியாம போக வாய்ப்பிருக்காதே? ஏனென்டா அவரின்ர செயற்பாடுகளில ஒண்டாத்தான் அமைப்பும் இருக்கும். இப்ப நீங்க சொன்ன இந்த மூண்டு வசனங்களிலயும் எது உண்மை எது பொய் அல்லாட்டி எது மறதி எண்டத சொல்லுவிங்களா?

ஒரு பேபரின்ர நோக்கம் என்னவெண்டு திரும்ப திரும்ப கே;காதேங்கோ அப்பிடி ஒண்டும் இல்லை

அதென்னெண்டு நோக்கமே இல்லாமல் ஒரு செயல் நடக்கும்? காரணமில்லாம காரியமா? நோக்கமே இல்லாம செயற்பாடா? என்னண்ணா கதைக்கிறிங்க.....

இனிமேல் ஒரு பேப்பரை பற்றி இங்கு இழக்காமல் சம்பந்த பட்ட கட்டுரையை பற்றி மட்டும் விவாதித்தால் நல்லது

அதென்னெண்டு ஒரு பேப்பரில தானே இந்தக் கட்டுரை வந்தது. இப்ப நீங்க தொடங்கின தலப்பே ஒருபேப்பர் சாத்திரி கோபி எழுத்தாளர் அமைப்பெண்டு 4 பேர உள்ளுக்க கொண்டு வந்திருக்கெல்லோ. அப்பிடியிருக்கேக்க யார் சொல்லறது உண்மை யாரின்ர பக்கம் ஞாயம் எண்டத பாக்கத்தானே வேணும். நீங்க இதுக்குள்ள இழுத்து கொண்டு வந்தாக்கள அல்லாட்டி வந்ததுகள பற்றித்தானே கதைக்க முடியும். எண்டாலும் நான் முதலே சொல்லிட்டன்.... ஒரு பேப்பர பற்றி தனிய ஒரு தலைப்பில கதைப்பம் எண்டு. :P

Edited by poonai_kuddy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி அவர்களே நானும் என்னுடைய தனிபட்ட விபரங்களை தருவதற்காக உங்களை போன் அடிக்க சொல்லேல்லை அந்த கட்டுரை சம்பந்தமாகவோ அல்லது ஒரு பேப்பர் சம்பந்தமாகவோ நீங்கள் மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என்றுதான் சொன்னன் அதே போல யாழிலை தொடங்கினதும் நான் தான் அதுக்கு போனிலை விழக்கம் கொடுக்க கூடாது எண்டு ஏதும் வரையறை இருக்கிறதா இருந்தால் எனக்கு தெரியாது மன்னிக்கவும். நானும் முதல்லையெ சொல்லிட்டன் பயனுள்ளதா தமிழிற்கு தர என்னிடம் ஒண்டும் இல்லை ஏணெண்டால் தமிழை வளக்கிறம் எண்டு எப்பவும் சொல்லவில்லை அடுத்தா எந்த வித நோக்கமுமே இல்லாமல் நான் பாடசாலைக்கு போனது மாதிரி எந்த வித நோக்கமுமே இல்லாமல் நான் படிச்சது மாதிரி எந்த வித நோக்கமுமே இல்லாமல் நான் கலியாணம் கட்டினது மாதிரி மற்றது .....ம்... எந்த வித நோக்கமுமே இல்லாமல் நான் சாப்பிடற மாதிரித்தான் எந்த வித நோக்கமுமே இல்லாமல் பேப்பரும் அடிக்கிறம் என்ன மண்டை கழண்ட ஆக்கள் பேசிற மாதிரி இருக்கா அதுதான் முதலியெ சொல்லிட்டனே **********ஆக்கள் தான் பேப்பர் அடிக்கிறம் எண்டு. மற்றது தமிழிற்கு பயனா எங்களாலை ஏதும் செய்ய முடியும் எண்டு நீங்கள் நினைக்கிறதும் பிரயோசம் இல்லை பிறகு என்னிலை கோவிக்க கூடாது. சரி நிங்களெ சொல்லிட்டியள் யாழிலை கட்டாயம் எழுத தான் வேணுமெண்டு சரி எழுதிறன்

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.