Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"குடும்பிமலை"யை மகிந்த குடும்பம் கையிலெடுத்த அரசியல் பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது சண்டே லீடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"குடும்பிமலை"யை மகிந்த குடும்பம் கையிலெடுத்த அரசியல் பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது சண்டே லீடர்

[ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:27 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் சேர்ந்து எவ்வாறு தமது அரசியல் பலவீனங்களை மறைப்பதற்கு குடும்பிமலை மீதான இராணுவ நடைவடிக்கையை முதன்மைப்படுத்தியிருந்தனர் என்பதை கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

அச்செய்தி விவரம்:

தற்போதைய நாட்களில் குடும்பிமலை தான் ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் குடும்பிமலையின் மீது தனது அரசாங்கம் கவனத்தை குவித்திருந்தது.

அரச தலைவருக்கும், அரசுக்கும் எதிராக முன்னாள் அமைச்சர்களான மங்களா சமரவீரா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஏனைய அரசியல் முன்னனிகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் பெருமெடுப்பிலான எதிர்ப்பு போராட்டத்தின் கவனத்தை திசை திருப்புவதில் அரசின் மத்திய புள்ளியாக விளங்குவது குடும்பிமலையே.

நாட்டின் பொருளாதாரச் சீரழிவை வெளிக்கொண்டுவருவதே அவர்களின் போராட்டத்தின் முக்கியமானதாகும்.

மக்களுக்கு அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முற்படின் அதன் ஊழல்களை அது அம்பலப்படுத்தலாம். எனவே விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற அரசின் அறிக்கை அவற்றில் இருந்து அரசை காப்பாற்றும் உத்தியாகும்.

பல வாரங்களுக்கு முன்னர் பல அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் ஆகியோரை அரச தலைவர் செயலகத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு அழைத்த அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்சா, இராணுவத்தினர் குடும்பிமலையை கைப்பற்றிய செய்திகளை தாங்கிய சுவரெட்டி பிரச்சாரங்களை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளும்படி கேட்டிருந்தார்.

குடும்பிமலை மீதான தாக்குதல் முடிவடைந்த பின்னரும் ஒரு மாதம் வரையிலும் அதன் வெற்றிச் செய்திகளை முக்கியத்துவப்படுத்துமாறு அரச ஊடகங்களும் அறிவுறுத்தப்பட்டன. அரசு எப்படி குடும்பிமலையை தனது அரசியல் நலன்களுக்காக விற்பனை செய்யப்போகின்றது என்பது இதன் மூலம் புலனாகின்றது.

எனினும் ஆலோசகர்களின் திட்டங்கள் ஒரு சமயத்தில் தவறாகிவிட்டன.

ஏனெனில் குடும்பிமலையை 25 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்திருந்தார். அந்தப் பகுதியை படையினர் தமது கட்டுப்பாடடில் கொண்டு வந்தது இதுவே முதற்தடவை என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்த பசில் முயன்றிருந்தார்.

வடக்கு கிழக்கில் போர் தொடங்கியதில் இருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வராத ஒரு பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனது சகோதரர்கள் முயற்சி செய்வதாக மகிந்தவும் நம்பினார்.

முழு நடைவடிக்கைகளையும் பசில் ராஜபக்சா அரச செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த போது ஐ.தே.க அதன் உண்மையை வெளிப்படுத்த தொடங்கியது.

ஊடகவியலாளர்களின் மாநாட்டை நடாத்திய ஐ.தே.க 1992 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் குடும்பிமலை இரு முறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவித்தது. படையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.

இது தொடர்பில் 1992 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 27 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையையும் ஐ.தே.க வெளியிட்டது. 7 ஆவது சிங்க றெஜிமென்ட் குடும்பிமலையை சிறீலங்காவின் சுதந்திர இலகு காலாட்படை றெஜிமென்டிடம் கையளித்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கையளிப்பு விவகாரம் லெப். கேணல் கே.எம்.டி.யூ.எம். கென்டரகமாவினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தத

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இவங்க என்ன இந்த குடும்பிமலையை இப்டி பெரிசு படுத்தி புலம்புகிறாங்க...

அப்படியென்றால் இன்றோ நாளையோ கிடைக்கவிருக்கும் மருந்து எப்படியெல்லாம் வேலை செய்யப் போகிறதோ?

குறைந்தது ஆறு மாதத்திற்கு எழும்பவே முடியாத மருந்தாகத் தான் அது இருக்கும்..

அப்போ தெரியும் இந்த புலிப்படை மன்னிக்கவும் தமிழ்ப்படையின் யுக்த்தி.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருப்பினும் தினக்குரல் சொன்னது போல கிழக்கின் தோல்வி பாரிய பின்னடைவே தோல்விகளை ஏற்றுகொள்கின்ற மனப்பக்குவத்தை நாங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் ஆனாலும் இந்த தோல்விக்கு பின்னால் பாரிய ஒரு வெற்றி காத்திறுக்கு என்டத நம்புவம் உதாரணமாக யாழ் இழப்பின் பின்னான வெற்றி

இழப்புக்களை எண்ணுவதை விட அதிலிருந்து மீண்டுவிடுதலே சரியானது. இலங்கை அரசின் தம்பட்டங்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகளுக்குமிடையில் இருக்கும் முரண்பாடுகளைக் கவனித்தால் அனைவருக்கும் விபரம் புரியும். புலிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தாமல் விட்டதுதான் தற்போதைய நிலைக்குக் காரணமென்பது எனது கருத்து.

மாவிலாறு,வாகரை வரை நம்பிக்கையுடன் இருந்தோம்.....ஆனால் குடும்பிமலையும் போய்விட்டது.....

ஆனால் இன்னும் நம்பிக்கை முற்றாக போகவில்லை, ஒரு நப்பாசை இருக்கிறது.......

திடீர் மாற்றங்கள் நிகழலாம்.....

ஆனால் எதிரி பல நாடுகளின் ஆயுத உதவி, ஆலோசனைகள் அதிகபடைகளை உபயோகித்தல்,ஒட்டுக்குழுக்கள

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பதில் தாக்குதல்கள் தாக்குதல்களால் சதிக்க முடியாததை

மௌனத்தால் சாதித்திருக்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஏனெனில் எல்லா தரப்பையும் மிகவும் குழப்பத்தில் வைத்திருப்பது அது ஒன்றுதான்.

அரசு பெற்றது வெற்றியா?? என்பதை பல பேரினவாத சிங்கள சார்பு பத்திரிகைகளே

கேள்வியாக கேட்க தொடங்கிவிட்டனர். அதைவிடவும் இந்த வெற்றியால் தமது பொருளாதார வீழ்சியை நாட்டு மக்களுக்கு மறைக்கவே அரசு பெரும்பாடு படுகின்றது

ஆனால்............... பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டுதான் போகின்றது. இப்போதைக்கு இராணுவ இலக்குகளை விட இலங்கையின் பொருளாதார இலக்குகளே அத்திய அவசியமானதாகும் காரணம் அதுதான் சர்வதேசத்திடம் சிங்கள பேரினவாதிகளை அழைத்து செல்லும்.

புலிகளின் பின்னநகர்வால் இந்த விடுதலை போராட்டத்தை தொன்று தொட்டு பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்த படி வளர்த்து வந்த கிழக்கு மக்கள் சொல்லொண்ணா துயரங்களை சுமப்பதை யாராலும் மறுக்க முடியாதுதான்.....

ஆனால் புலிகளின் முர்க்கதனமான தாக்குதல் நடந்திருப்பின்......... பயங்கரவாதிகள் எனும் பெயரின் கீழ் அவர்கள் நாளந்தம் விமான தாக்குதல்களுக்கும் செல்வீச்சுக்களுக்கும் இலக்காகியிருப்பார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்த செய்திகளே ஆதாரம். அது தவிர இன்னமும் கண்காணிப்பு குழு இலங்கையில் இருப்பது மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று காரணம் பல சர்வேதேச நாடுகள் உண்மைதன்மைகளை அறிந்து கொள்ள அவர்களைத்தர் நாடுகின்றார்கள். ஆதலால் அவர்கள் அரசின் இன அழிப்பையும் பொறுப்பற்ற நிலையையும் ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்ல நேரிட்டிருக்கின்றது. இது புலிகளை பயங்கரவாதிகள் என்று பட்டியலிடுபவர்களின் முகங்களளில் கரிபூசுவதற்கு சமமானது. அது தவிர சிங்கள காடையரசிற்கு உதவிகளை வளங்குவோருக்கு எந்த நியாயமும் அங்கில்லை என்பதை தெளிவோடு சொல்லும் விடயம். எமக்கு இப்போது நிலப்பரப்பை கைப்பற்றுவது பாரிய வெற்றிகளை தாராது இப்போதைக்கு அது தகுந்த யுத்தியும் கிடையாது................ ஆனாலும் இன்னிலை தொடரும் போது புலிகள் பற்றிய எதிரியின் கணக்கீடு தவறானதாகி புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்று அசட்டையாக துங்குவார்கள்.............. அப்போது பாய புலிகளுக்கு யாராவது சொல்லியா கொடுக்க வேண்டும்??? தமது படையணிகளை இழப்பின்றி பின்னநகர்தியது எல்லா வெற்றிகளையும் விட மிக முக்கியமானது. கிழக்கு மாகாணம் சற்று குழப்ப நிலையிலிருப்பது யாவருக்கும் தெரிந்ததே அந்த நிலைமை தெளிவதற்கு கால அவகாசமென்பதை தவிர வேறொன்றாலும் முடியாது. இப்படியான மந்த நிலைமை ஒன்று 1986-1987ல் வடக்கு மகாணத்தில் தோன்றியிருந்தது பின்னர் சிங்கள இராணுவத்தின் லிபரேசன் ஓப்பரேசன் தாக்குதல் முற்றுகைக்கு எதிராக சண்டை நடத்தி வந்த புலிகளுடன் யாவரும் ஒன்றிணைந்து உழைத்தது ஞபகத்தில் வருகின்றது.

கிழக்கை கைப்பற்றியது முற்று முழுதாகவே அரசியல் காரணங்களுக்காக. தற்காலிகமாக கிடைக்கும் மிகச் சிறு வெற்றி என்றாலும் அதை மகிந்தா அரசு "தேசிய விழா"வாக கொண்டாடுகிறது. இதிலிருந்து அதன் அரசியல் வங்குரோத்து நிலமை வெட்ட வெளிச்சம் ஆகிறது. எத்தனை தேசிய விழாக்களை கொண்டாட போகிறது என்பது அந்த அரசுக்க்கே இன்னும் தெரியாது. சிங்கள பாமர ஜனங்களை எப்படி யுத்த மாயைக்குள் வைத்திருந்து "தன் அரசியல் அரைவேக்காட்டு தனங்களை" மறைப்பதென்பதே மகிந்தாவின் தற்போதைய ப்ரஜெக்ட்.

நான் அறிந்தவரையில் மகிந்தாவின் கோமாளிப் படைகள் கிழக்கின் பிடித்த சில இடங்களில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி இருக்கின்றன. அதனால் தற்போது "கிழக்கின் தேர்தல்" என மகிந்த சன்னதம் ஆட வெளிக்கிடும் போது படைகளுக்கு வயித்தை கலக்குகின்றது. தேர்தல் என்று வரும்போது கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டி வரும். பாதுகாப்பு கொடுப்பதென்பது இயலாத காரியம். புலிகள் சுடும் ஒவ்வொரு தோட்டாவும் மகிந்தவுக்காக அவரின் படைகள் கட்டிய கற்பனைக் கோட்டைகளை தரைமட்டமாக்கி விடும்.

புலிகள் கரந்தடி படையாக வரும்போது இராணுவம் எதிர்நோக்கும் சிக்கல்கள் அளப்பரியன. இதை போகப் போக அவதானிக்கலாம்.

இலங்கையின் படைகள் எந்தக் காலத்திலுமே ஒரு "இராணுவமாக" இருந்ததில்லை. அரசியல்வாதிகளின் இலாபங்களுக்காக அடிபடும் நவீன ஆயுதங்களுடன் கூடிய ஒரு "குண்டர் படை". சுருங்கச் சொல்லப் போனால் நான் அவதானித்தது இவ்வளவும் தான்

1. இலங்கை அரசியல் வாதிகளுக்கு "vision"னும் இல்லை

2. இலங்கை இராணுவத்திற்கு "mission"னும் இல்லை. <_<<_<

குடும்பிமலை வெற்றியைப் பெரிதாக்கி தனது அரசியல் வறுமையை அதற்குள் போட்டு மறைக்கப்பார்க்கிறார் மகிந்த: மங்கள.

குடும்பிமலை (தொப்பிக்கலை) மீதான இராணுவ நடவடிக்கையை பெரிதான வெற்றியாக்கி தனது அரசியல் வறுமையை அதற்குள் போட்டு மறைக்கப்பார்க்கிறார் மகிந்த ராஜபக்கச என சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் ம ங்களசமரவீர கூறியுள்ளார்.

மங்களவின் கருத்துப் போலவே பல அரசியல் ஆய்வாளர்கள் தங்கள் அவதானிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அவரது அரசியல் வறுமையைப் போக்க சில வேளை அந்த வெற்றிகள் உதவலாம் ஆனால் அது நீடிக்க முடியாது என்பதே பலரது கணிப்பு

கிழக்கு மாகாணத்தை தமது முழுமையான கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பது படையினரால் முடியாத காரியமாகும். அதனது பௌதீகச் சூழல் அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.கெரில்லாப் போர் முறைக்கு சாதகமான இடம் கிழக்கு பகுதிகளாகும் எனவே அதனைத் தக்கவைப்பது என்பது படையினருக்கு முடியாதாகும். ஆதனைத் தக்கவைக்க பெருமளவு படைத்தொகுதி தேவை அவ்வளவு ஆள் திரட்டுவது என்பதும் இயலாத காரியமாகவே இருக்குமென நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்;;.

அண்மையில் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பிற்கு அறிவித்தல் விளம்பரம் செய்தபோது எதிர்பார்த்த விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை. அரசாங்க பதவிகள் வெற்றிடங்களுக்கு புதிதாக ஆள்சேர்க்கக்கூடாது என ஒவ்வொரு அமைச்சருக்கும் கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டு மகிந்த படைக்கு ஆட்சேர்க்க முற்பட்டார்.50,000 ஆட்சேர்ப்பிற்கு மிகக்குறைந்தளவிளானோரே விண்ணப்பித்திருந்தனர்.இந்த நிலையில் கிழக்கு நிலைகளை தக்க வைக்க மேலதிக படைக்கு மகிந்த எங்கே போவார் என கேள்வி எழுப்பப் படுகிறது.

50,000 படையினரைத்திரட்டும் முயற்சி தோல்வியடைந்ததால் இப்போது 20,000படையைத்திரட்ட பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் குடும்பிமலை எனும் அந்தக் காட்டுப்பகுதியை தக்கவைக்க ஒரு 20,000படையாவது தேவை இதற்கு என்ன யாழ்ப்பாணத்தில் இருந்தா அல்லது கொழும்பிலிருந்தா படையை எடுக்கப் போகிறார்.? அப்படியானால் யாழ்,கொழும்பின் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் என மங்கள கேள்வியெழுப்பியுள்ளார்.

இது கிழக்கில் இராணுவம் தனது நிலையை விஸ்தரித்துள்ளதால் அந்தப் படைநிலைகளைப் பாதுகாக்க வேறு இடங்களில் இருந்தே படைகளை நகர்த்த வேண்டியிருக்கும். அப்படியானால் வேறு இடங்களின் பாதுகாப்பு அச்சுறுத்லுக்கு உள்ளாகும். எந்தவொரு திட்டமிடலும் இன்றி மகிந்த போரைத் தொடங்கியுள்ளார்.இதனால் வரும் அழிவுகளை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மங்கள மேலும் தெரிவித்தது கணிப்பிற்குறியது.

கிழக்கில் புலிகள் போர் உத்தியாக படை நிலைகளை குடும்பி மலையில் இருந்து விலக்கிக் கொண்ட நிலையில் தாங்கள் போரை நடாத்தி புலிகளை விரட்டித்தோல்வியடையச் செய்தது போல கோத்தபாஜராஜபக்ச பிரச்சாரம் செயவது கேலித்தனமானது. கிழக்கில் புலிகள் நிலைகொண்டுள்ளமை விரைவில் தெரியவரும் என அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் நிலைமைகளை உடனடியாக கணிப்பீடு செய்வது கடினம்.புலிகளின் நகர்வுகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இராணுவத்தின் வெற்றி அவ்வளவு பெரிதாகத்; தோன்றாது. புலிகள் வைத்த பொறிக்குள் அகப்பட்டுப் போனதை விரைவில் புரிந்து கொள்வார்கள். எனவும் கிழக்கின் வெற்றி குறித்து மமதையில் பேசும் மகிந்தவின் போக்கு விரைவில் தோல் உரிக்கப்படும் போது தென்னிலங்கை உணர்ந்து கொள்ளும் எனவும் பல அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.