Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

69 இலட்ச மக்கள் என் முகத்திற்காக வாக்களிக்கவில்லை : புரட்சிகர மாற்றம் கடினமானது -ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

69 இலட்ச மக்கள் என் முகத்திற்காக வாக்களிக்கவில்லை : புரட்சிகர மாற்றம் கடினமானது -ஜனாதிபதி

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்ச மக்கள் என் முகத்திற்காக வாக்களிக்கவில்லை. சுபீட்சமான கொள்கை திட்டத்தின் உள்ளடக்கத்தை கருத்திற் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

என்பதற்காக வாக்களித்தார்கள்.எதிர்பார்ப்பிற்கமைய புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.அது கடினமானதாக அமைந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்,ஏனெனில் அதுவே நிலையானது.என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

WhatsApp_Image_2021-11-06_at_21.10.08.jp

போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.மிலிட்டரி நிர்வாக கொள்கையுடைய கோத்தபயவை எதிர்பார்த்தோம். சிலபேர் குறிப்பிடுகிறார்கள்.விவசாயியின் கழுத்தை பிடித்து சேதன பசளையை பயன்படுத்து என்று குறிப்பிட என்னால் முடியும்.

ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை எனக்கு கிடையாது.அதனை எதிர்பார்க்கவுமில்லை.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்துகிறேன்.

விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை.மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் அரசாங்கத்துடன் ஒன்றினைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

WhatsApp_Image_2021-11-06_at_21.10.07.jp

வீரகெடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற '1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு' திறந்து வைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி  மேலும் குறிப்பிடுகையில

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு வருட காலத்தை சாதாரண வருடம்,எவ்விட பிரச்ச்சினைகளும் ஏற்படவில்லை.என்று கருதுபவர்கள்  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.என்னை விமர்சிக்கிறார்கள்.

WhatsApp_Image_2021-11-06_at_21.10.06.jp

2019ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்றதை தொடர்ந்து கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்,அபிவிருத்தி பணிகளையும் கட்டுப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்க வேண்டியது.கடந்த இரண்டு வருட காலத்தில் நாட்டை பல முறை முடக்க வேண்டிய தேவை காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் எவ்வாறு பொருளாதாரத்தை முன்னேற்றுவது.இதனை விமர்சிப்பவர்கள் அறிந்தும்,அறியாததை போல் கருத்துரைக்கிறார்கள்.

WhatsApp_Image_2021-11-06_at_21.10.05__1

கோவிட் தாக்கத்தின் காரணமாக பில்லியன் கணக்கான வருவாயை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்தது.

அதுமாத்திரமல்ல சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுடன் ஈடுப்பட்ட சுமார் 30 இலட்சம் மக்கள் பாதி;க்கப்பட்டார்கள்.நாட்டை முடக்கும் போது அனைத்து தரப்பினரது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

கொவிட் தாக்கத்தினால் முதற்கட்டமாக நாட்டை முடக்கும் போது தைத்த ஆடை ஏற்றுமதி துறை முழுமையாக பாதிக்கப்பட்டது.

WhatsApp_Image_2021-11-06_at_21.10.05.jp

அத்துடன் அந்நிய செலாவணியும் வீழ்ச்சியடைந்தது.பொருளாதாரம் பாதிக்கப்பட்டள்ள நிலையில்  செலுத்த வேண்டிய அரச முறை கடன்களை உரிய காலத்தில் செலுத்தியுள்ளோம்.

இவ்வாறான பின்னணியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் அரச சேவையாளர்கள் வீட்டில் இருந்தார்கள்.ஒரு பகுதியினர் நிகழ்நிலை முறைமை ஊடாக சேவையில் ஈடுப்பட்டார்கள்.

இருப்பினும் அரச சேவையாளர்கள் அனைவருக்கும் உரிய நேரத்தில் எவ்வித தடையுமில்லாமல் மத சம்பளத்தை வழங்கினோம்.ஆசிரியர்கள் 2 வருட காலம் வீட்டில் இருந்தார்கள் அவர்களுக்கும் சம்பளம் வழங்கினோம்.நாட்டை முடக்கும் ஒவ்வொரு வேளையிலும் கொவிட் நிவாரணம் வழங்கினோம்.கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலகவில்லை.

WhatsApp_Image_2021-11-06_at_21.10.04.jp

தற்போது விவசாயிகள் என குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு தரப்பினர்  போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.கடந்த காலங்களில் 25 ரூபாவாக காணப்பட்ட உத்தரவாத விலை தற்போது 50 ரூபாவிற்கும் அதிகமாக காணப்படுகிறது.2 வருட காலமாக இரசாயன உரத்தை இலவசமாக வழங்கினோம்.60 இலட்ச மக்கள் என் முகத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை.சுபீட்சமான கொள்கைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்காகவே வாக்களித்தார்கள்.

நிலையான  விவசாயத்தை நோக்கி செல்வோம்,சேதன பசளையை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்வோம்,விசமற்ற உணவை உற்பத்தி செய்வோம்.என்ற வாக்குறுதிகளை தேர்தல் காலத்தில் முன்வைத்தோம்.விச உணவை வழங்குவது உணவு பாதுகாப்பு அல்ல என்பதை பேராசிரியரகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.மாற்றத்தை கோரினார்கள்.தற்போது மாற்றமடையும் போது அது கடினமாக உள்ளது.

விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.பலவந்தமான முறையில் சேதன பசளையை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எனக்கு கிடையாது. நான் சரியானதை செய் இருப்பினும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன். மிலிட்டரி நிர்வாக கொள்கையுடைய கோத்தபயவை எதிர்பார்த்தோம். சிலபேர் குறிப்பிடுகிறார்கள். என்னால் முடியும். விவசாயியின் கழுத்தை பிடித்து சேதன பசளையை பயன்படுத்து என்று குறிப்பிட முடியும்.இருப்பினும் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை எனக்கு கிடையாது.அதனை எதிர்பார்க்கவில்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும். என்று குறிப்பிட்டவர்கள் தற்போது ஆனால் தற்போது அவர்கள் நாங்கள் மிலிட்டரி தலைமைத்தவத்தை எதிர்பார்த்தோம்.என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.அவ்வாறும் செல்ல முடியும்.இருப்பினும் இது ஜனநாயகமிக்க நாடு.பொய்யான குற்றச்சாட்டுக்களின் காரணமாக இன்றும் ஜெனிவா செல்ல வேண்டியுள்ளது.சுபீட்சமான கொள்கை திட்டத்தை செயற்படுத்தும் போது பெரும் எதிர்ப்பு.

ஆட்சிக்கு வந்த பிறகு தேவையற்ற செலவுகளை நானே குறைத்துக் கொண்டேன். அரச முறைக்கான வெளிநாடுகளுக்கு செல்லும் போது எனது பாரியார் என்னுடன் வந்தார்.அவரது செலவுகளை எனது தனிப்பட்ட பணத்தில் செலவழித்தேன். பாரம்பரிய கலாச்சாரத்தை முழுமையாக மாற்றியமைத்தேன்.

அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்தேன்.நாங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்டார்.அது உண்மை.இருப்பினும் அவர் கடந்த காலங்களில் எமக்கு எதிராக கருத்துரைத்தார்.ஆனால் சிறந்த ஆலோசனைகளை அவரிடமே பெற்றோம்.

ஒரே நாடு –ஒரே நாடு சட்டம் எண்ணக்கரு தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது.செயலணியின் தலைமை பதவி ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.இருப்பினும் அவர் தான்  5வருட காலத்திற்கு முன்னிருந்து ஒரே நாடு –ஒரே சட்டம் என்ற எண்ணக்கரு தொடர்பில் கருத்துரைத்தார்.ஆகவே அதற்கான பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன்.அதுவே எனக்கு தேவையாக காணப்பட்டது.அதற்கும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர்  இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள் இடை நிறுத்தப்பட்டது.அதன் பயனை இன்று விவசாயிகள் பெறுகிறார்கள்.எதிர்க்கட்சியினர் விவசாயிகள் பெறும் நலன் தொடர்பில் கருத்துரைப்பதில்லை.சந்தை விலை பற்றி மாத்திரம் கருத்துரைக்கிறார்கள்.இதுவே இன்றைய நிலை

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் பெரும் மாற்றத்தை நிச்சயம் செயற்படுத்துவேன்.கொள்கை திட்டத்தை ஏற்று முன்வந்த இளைஞர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.மாற்றத்தை ஏற்படுத்த.ஆகவே விவசாயிகளிடம் வலியுறுத்துகிறேன். என்றார்.

 

https://www.virakesari.lk/article/116730

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் மரவள்ளிக்கிழங்கும் பாசிப்பயிறும் பரிசளிக்கப்பட்டிருக்கே.. அவைக்கு. மிக விரைவில் தெரியும்.. எதுக்கு வாக்குப் போட்டமென்று அவைக்கே. அப்ப இவருக்கு புரியும்.. எதுக்கென்னு. அதுவரை ஒரு குழப்பமாத்தான் இருக்கும் மிஸ்டர் நந்தசேன.,. வீரசீன.. ஆனந்தசார...கோத்தபாய அவர்களே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.