Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்மாரிசு - Dr.T. கோபிசங்கர்

Featured Replies

கம்மாரிசு 

எல்லாரும் ஒழுங்கையில நாலு மணீல இருந்து கிளிபூர் விளையாடாமல் wait பண்ணிக்கொண்டு இருந்தம். இப்ப வாற நேரம் சரி அண்டைக்கும் உதே நேரம் தான் வந்தவன் , எண்டு அன்பழகன் சொல்ல ஆதித்தன் மாமா வீட்டு மதிலில ஏறி எல்லாரும் இருந்தம். இவன் வாறதாலை இண்டைக்கு விளையாட்டும் இல்லாமல் போட்டு எண்டு செந்தில் புறுபறுக்க நாங்களும் பொறுமை இழந்து வெளிக்கிடுவம் எண்ட சத்தம் கேட்டிச்சு. 

உடனே Panasonic Radio வில FM ஐ மாத்தினம். அப்ப MW வில தான் எல்லாம் , BBC மட்டும் SW 2 இல கேக்கிறது. நாங்கள் தான் இலங்கையில FM ஐ முதல் கேட்டது, அதுகும் ஒட்டுக் கேட்டது. அவன் கதைக்கிற பாசையை translate பண்ணிறதுக்கும் கிருபான்டை அப்பா இருந்தவர். இந்தா கண்டிட்டானாம் , பதியிறானாம் , கோயில் தெரியுதாம் எண்டு சொல்லிக்கொண்டு இருக்க நீராவியடிப்பக்கம் பெரிய சத்தம் கேட்டிச்சு. இருவது தரம் சுத்தி ரெண்டைப் போட்டிட்டு , பத்தாதெண்டு “ ஹெற்ற பலமு” எண்டு , நாங்கள் கேக்காமல் இண்டைக்குப் போட்டு நாளைக்கு வாறன் எண்டான். 

கடைச்சாமி கோயிலடி காம்புக்குத்தான் அடி விழுந்திருக்கும் எண்ட ஊகங்களுக்கு அடுத்த நாள் பேப்பர் போட்ட தலைப்பு “ பொம்பர் குண்டு போட்டதில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி ”. நாளைக்கும் வருவான் எண்டதால பள்ளிக்கூடம் போகமல் வீட்டை எல்லாரும் நிண்டிடம் அடுத்த நாளும். அப்ப எங்களுக்கு நிறைய லீவு வாறது அரசாங்கம் தாறதைத் தவிர. இடைக்கிடை வாற குடாநாடு முழுவதும் ஹர்த்தால், பேரே கேள்விப்படாத குறூப்பின்டை சுவரொட்டிகளில வாற கண்ணீர் அஞ்சலியும் கடை அடைப்பும், செல்லடியும் இடம்பெயர்வும் எண்டு கனக்க வரும். 

முதல் நாள் கால நிலவரங்களுக்கு பிறகு சில நேரம் பள்ளிக்கூடம் இருக்கா இல்லையா எண்டு தெரியாமல் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போக , வாங்கோ எண்டு சொல்லாமல் பள்ளிக்கூடத்தில register மட்டும் mark பண்ண , போங்கோ எண்டு சொல்லாமல் நாங்களே வெளிக்கிட்டு வாறது. பள்ளிக்கூடம் போட்டு அதுகும் இல்லாமல் வீட்டையும் போகாமல் எங்கேயாவது set ஆனால் கிரிக்கட் இல்லாட்டி cards . 

ஒட்டுக்கேட்ட குழுவின் கருத்தால் இண்டைக்கு பள்ளிக்கூடம் அனுப்பிறேல்ல எண்ட ஏகமானதான அம்மாமாரின்டை முடிவை அறவிக்க நாங்கள் காலமையே பெரியண்ணா வீட்டை set ஆனம். ஒழுங்கையின் நடுவில இருக்கிறதாலேம் , பொம்பிளைப்பிள்ளைகளும் அக்கா மார் எண்டதால அது தான் எங்கடை base. 

வயது கருதி என்னைக் cards விளையாட சேக்காமல் விட்டு வெளியில இருத்த, நானும் பாண்டி விளையாடிற குறூப்பில சேந்தன். பாண்டீல ரெண்டு பசுவும் தடவித்தடவி கும்பலும் எடுத்து வச்சிட்டு அடுத்த கும்பலுக்கு ready ஆனேன். Monopoly க்கும், cards க்கும் முன்னோடி பாண்டி தான். பாண்டிப்பலகை சாமத்தியப்பட்ட பிள்ளைகளுக்கு செய்து குடுக்கிறதாம். அதை அவை சீதனமாக் கொண்டு போய் வயித்திலை பிள்ளை இருக்கேக்கம் விளையாடிறதாம் எண்டு சொல்லிறவை. எந்தக்கும்பலைக் கலைச்சுத் தொடங்கோணும் , குலைக்கிற கும்பலில எத்தினை புளியங்கொட்டை இருக்கு , இந்த முறை விட்டு அடுத்த முறை எப்படி கும்பல் எடுக்கிறது எண்டது , bank இல எப்ப FD போடிறது , எப்ப எடுக்கிறது எண்ட கணக்குத் தான். 

கை பாண்டீலேம் கண் cards இலேம் இருக்க cards விளையாடின பாலகுமார் எழும்பிச்சது , பாத்துக்கொண்டிருந்த நான் ஓடிப்போய் அதில இருந்தன் . நாலு பேரா ஆறு பேரா எண்டு கேட்டிட்டு cards ஐப் பிரிக்கத் தொடங்கினார் கிருபான்டை அப்பா. பக்கத்தில இருந்து பாத்துத் தான் 304 பழகிறது ஒருத்தரும் கோச்சிங் போறேல்லை . நாட்டு நிலைமையால வெளிக்கிடாமல் இருக்கேக்க வீட்டை பொழுது போக்கு இது தான் . 

மத்தியானம் சாப்பிட்டாப் பிறகு பின்னேரம் தேத்தண்ணி வரை cards தான். யாழ்ப்பணத்தின்டை தேசிய விளையாட்ட வரவேண்டிய 304 சில பல அரசியல் காரணங்களால் ஒலிம்பிக்கில் இல்லாமல் போனது கவலையான விசயம். பழைய பேப்பரை விரிச்சு வைச்சிட்டு card பக்கற்றோட வந்து ராசியான பக்கம் பாத்து தான் விளயாட இருக்கிறது. கேள்வி( ஐம்பது) உதவி (அறுவது) எண்டு கேட்டிட்டு துரும்பு வைக்கேக்க ஒருத்தரும் பாக்காம கவிக்கிறது , அதையும் சப்பாணி கட்டின காலுக்க கீழ வைக்கிறது, கவலைப்பட்டு துரும்பைக் காட்டிறது மனமில்லாமல் jack ஐ இறக்கிறது எண்டு தான் தொடங்கும் . 

கொஞ்சம் கொஞ்சமாத்தான் பிழைவிட்டு பழகிறது . அம்மம்மா எப்பவும் serious ஆத்தான் விளையாடுவா , கள்ளத்துரும்பு , கம்மாரிசில பிளை பிடிக்கிறது, மடக்கையில cards சரியா எண்ணிப் பிடிக்கிறது எண்டு பயங்கர sharp. 

ஆச்சி் அதுக்கும் மேல கேள்வி கேக்கேக்க மணலை (9) கவிள், வீறு ( Jack) வைச்சுக் கொண்டு விளையாடத எண்டு பல tricks சொல்லித்தருவா. 

பிடி அடுக்கி , போன முறை cards போன ஒழுங்கு ஞாபகப்படுத்தி, துரும்பு மட்டும் இல்லாமல் எல்லாக் cards ஐயும் எண்ணி , மற்றவன் எடுத்த points ஐ மனதில வைச்சு விளையாடி கடைசிப் பந்தில six அடிக்கிற தோனி மாதிரி எழும்பி கம்மாரிசு அடிக்க , victory declare பண்ண முதல் மூன்றாவது நடுவர் மாதிரி எல்லாக்கையையும் விரிச்சு பாத்துத்தான் வெற்றிக்காட்ஸ் குடுப்பினம்.

சங்கேத பரிபாசை காதலிலும் பாக்க cards இல அதிகம். காதைச் சொரிஞ்சா கலாவரை( clubs ), கழுத்தை திருப்பினா ஸ்கோப்பன்( spades). இருமினா இறக்கினது துரும்பு , தும்மினா வெட்டில்லை எண்டு பல விசயங்கள் இருந்தது ஆனால் partner மாறி இருந்தா எல்லாம் out. 

Cards அடிக்கிறதும் ஒரு காம்ப் அடிக்கிற மாதிரித்தான். ரெக்கி எடுத்து , எதிரீன்டை எத்தனை துரும்பு இருக்கு, எத்தினை jack இருக்கு அவரின்டை cards strength என்ன எண்டு பாத்து , அவரின்டை கையாலயே இறக்கப் பண்ண எப்பிடி மேவிறது , அவரின்டை எந்தக் cards ஐ வெட்டிறது எதை விடிறது , எதைக் கழிக்கிறது எண்டு கனக்க விசயம் இருக்கு. காம்ப் அடிக்கிறதோ cards அடிக்கிறதோ அடிச்சா கம்மாரிசு அடிக்கோணும்.

ஆனாலும் கம்மாரிசு அடிக்கிற நேரத்தில மேலேம் சத்தம் கேட்க FM radio வும் கரகரக்க கம்மாரிசும் அடிக்கேலாமப் போனது சில நேரத்தில்.

Dr.T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா மாமி அனுப்பின பனசோனிக் ரேடியோவில என்னத்துக்கு எண்டு தெரியாமல் கிடந்த FM band ஐ பயன்படுத்தி விமானிகளின் உரையாடலை கேட்டது நினைவுக்கு வருகுது.

அப்போ எல்லாம் சியாமா செட்டி அல்லது அவ்ரோதான் வாறது. உந்த விமானிகளில் ஒரு கொழும்பு செட்டி (ராஜன்?) உம் இருந்தவர்.

அவர் வந்தால் அவர்தான் லீட் பண்ணுவார். ஓடர் எல்லாம் ஆங்கிலத்தில்தான். 

மற்ற விமானிகள் “யெஸ் சேர், ஐ கான் சீ த டார்கெட் சேர், டிரொப்பிங் சேர்” எண்டு போட்டு குத்தி எழும்புவினம் ( சியாமா செட்டி).

அவ்ரோ எண்டால் உரு உலோக பீப்பாயை உருட்டி விடுவினம் அது ஆடி அசைந்து வரும்.

முடிஞ்சு போய் பார்த்தால் டார்கெட் அன்னம்மா கிழவியின்ற ஆட்டு கொட்டிலாய்தான் இருக்கும் 🤣.

ஆடு ஆகாயதாக்குதலால் நிலை குலைந்து “நே” என்டு முழுசி கொண்டு நிக்கும்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியவர்களே இணைப்புக்கு நன்றி.

பெரும்பாலான யுத்தகாலத்தில் இந்தக்காட்ஸ் விளையாட்டோடுதான்கழியும். எனது நண்பரொருவர் படு கட்டுபாடாத்தான் விளையாடுவர். பிழைவிட்டா எட்டித் தொடையிலை நுள்ளுத்தான். மச்சான் சகலெண்டு நேமிருந்தா நேரம்போவதே தெரியாது. ஆனால் அந்தக்காலங்கள் வருமா? கதையைப்படித்தபோது மனதினில் பலமுகங்கள் வந்துபோகின்றன. நினைவுகள் மட்டுமே மிகுதியாகப் பயணிக்கிறது.   
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

304  எண்டு சொல்லுவினம்,

கல்யாணவீடு, இழவுவீடு,ஊரடங்கு வேளைகளில் பல இடங்களில் , நாலுபேர் அல்லது எட்டுபேர் சேர்ந்து விளையாடுவார்கள், பொழுது போவதே தெரியாது.

உண்மையில் மேசையில் தாள் அடுக்கி விளையாடுவதில் ஒரு திறமையே இல்லை, அடுக்கை கணிக்க தெரிந்தவர் ஒரேயொரு துரும்பை வைச்சு கம்மாரிசும் அடிப்பார், குலைச்சு போட்டு விளையாடுவதில்தான் விறுவிறுப்பே இருக்கு.

நிச்சயமாக மாணவர்கள் படித்துவிட்டு வேலை தேடுகிறவர்கள் இது விளையாடவே கூடாது, மனதை அதற்கு அடிமையாக்கிவிடும்.

காட்ஸ் விளையாட்டில் வெறிதனமாக உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடகூடாது,கம்மாரிஸ் பிழைச்ச்சாலும், வெட்டாமலும், காட்ஸ் போடாமலும் இருந்தால்  மரியாதை இல்லாமலும் கெட்ட கெட்ட வார்த்தையிலும் திட்டுவார்கள், அதை தாங்கி கொள்ளூம் சக்தி எல்லோரிடமும் இருக்காது ஜென்ம பகையாககூட மாறலாம்.

304 விளையாட்டு விளையாடுகிறவர்களை பொறுத்து கை கலப்பு,கத்தி குத்து கொலைவரைகூட போயிருக்கிறது. உறவுகள் பிரிந்து போவதற்கும் வழி வகுத்திருக்கிறது.

எனக்கு தெரிந்த உறவினர்கள் திருமணம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது, இருவரும் ஏறக்குறைய அயலவர்தான், பெண் தனது மச்சான் முறையானவரை ஒரு தலையாக காதலித்து வீட்டார்மூலம் கேட்டு அவரும் ஓகே சொல்லி திருமண ஏற்பாடு தடல் புடலாக இருந்தது.

முதல்நாள் இரவு மாப்பிளை வீட்டில் பெண்ணின் தம்பியும் மாப்பிளையும் சேர்ந்து காட்ஸ் விளையாடினார்கள், கம்மாரிஸ் அடிக்க லேட்டா போச்சு என்ற வாக்குவாததில்  மாப்பிளை மச்சான்காரன தூஷணத்தில் பேச, மச்சான்காரனுக்கு கோவம் வந்து மாப்பிளைக்கு கன்னத்தில பளார் எண்டு அறைவிட்டார்.

அவ்வளவுதான் உன்னட்ட அடிவாங்கிட்டு உன்ர அக்காவுக்கு நான் மாப்பிளையா இருக்கிறதா எண்டுகேட்டுவிட்டு கல்யாணம் குழம்பி போச்சு.

பலபேர் சமாதானபடுத்தலும் எடுபடாமல் மாப்பிள்ளை அடுத்த மாசமே வேறு கல்யாணம் கட்டிட்டார்,

பெண் அவரை தவிர மனசில் யாருக்கும் இடமில்லை என்று கோயில் குளம் தனிமை மட்டுமே என்று இன்றுவரை வாழ்வதாக அறிந்தேன், மாப்பிள்ளைக்கு அடிபோட்ட அவரோட தம்பியும் அக்காவின் வாழ்க்கை நாசமாக நான் காரணமாகிட்டேனே என்று இன்றுவரை அவரும் கல்யாணம் பண்ணவில்லை என்று அறிந்தேன்.  

காட்ஸ் விளையாட்டு சிலசமயம் பொழுது போகவும் வைக்கும், சில சமயம் அழுது வாழவும் வைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.