Jump to content

ஜேம்ஸ் வெப்: பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப்: பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்

  • ஜோனாதன் அமோஸ்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
53 நிமிடங்களுக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப்

பட மூலாதாரம்,ESA/M.PEDOUSSAUT

படக்குறிப்பு,

பிரெஞ்ச் கயானாவில் ஏவுவதற்கு தயாராகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனப்படும் அந்தத் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட்டின் முனையில் பொருத்தி மூடுவதற்கு முன்பு விஞ்ஞானிகள் இறுதிச் சோதனைகளை முடித்தனர்.

பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து வரும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 09:20 மணிக்கு (12:20 GMT) ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

ஜேம்ஸ் வெப்பை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசு என்று கூறுலாம். இதைக் கட்டமைப்பதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்தப் புதிய தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தை அதன் முன்னோடிகளை விட இன்னும் ஆழ்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பீடு

விஞ்ஞானிகள் அதன் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள். அங்கு உயிர்கள் வாழ்ந்த, வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்படலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

ஜேம்ஸ் வெப் திட்டத்தை முன்னின்று நடத்துவது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா. அதனுடன் இணைந்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பான ஈ.எஸ்.ஏ செயல்படுகிறது. ராக்கெட்டில் தொலைநோக்கி பொருத்தப்பட்டதைக் காட்டும் புகைப்படங்களை இந்த நிறுவனங்கள் சனிக்கிழமையன்று வெளியிட்டன.

வளிமண்டலத்துக்குள் நுழைந்து செல்லும்போது தொலைநோக்கியை எரிந்துவிடாமல் பாதுகாக்கும் ராட்சத அமைப்பு லேசர்களின் உதவியுடன் பொருத்தப்பட்டது.

வெப் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் தங்கக் கண்ணாடிகளை பூமியில் நாம் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு இதுவே. 30 வருடங்களாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இந்த விண்வெளித் தொலைநோக்கியை இனி விண்ணில்தான் பார்க்க முடியும்.

ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு, தொலைநோக்கியை விடுவிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகும். இதன் பிறகான சாகசப் பயணத்தைக் காட்டுவதற்காக ராக்கெட்டில் வீடியோ கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது.

வரைகலை

பட மூலாதாரம்,DAVID DUCROS

படக்குறிப்பு,

வரைகலை: ராக்கெட்டின் முனையில் இருக்கும் தொலைநோக்கியை பாதுகாக்கும் அமைப்பு

தொலைநோக்கியில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் உபகரணங்களுக்கு தரவுகளைக் கடத்தும் தகவல்தொடர்பு கேபிளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஏவுதலை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். இது சரி செய்யப்பட்ட பிறகு, தொலைநோக்கியின் இயங்கு தன்மை சோதிக்கப்பட்டது.

"தொலைநோக்கியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக் குழு கடைசித் தருணம் வரை தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்" என்று கூறினார் நாசாவின் அறிவியல் இயக்குநர் தாமஸ் ஸுர்புக்கென்.

"நாங்கள் இந்தத் தொலைநோக்கியில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஏற்கனவே இது அபாயங்களைக் கொண்டது. அதனால் எல்லாம் முறையாகச் செயல்படுவதை நாங்கள் முழுமையாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம்."

பிரெஞ்ச் கயானாவில் பணிகளை நிர்வகிக்கும் பிரெஞ்சு நிறுவனமான Arianespace, வரும் செவ்வாயன்று ஒரு ஏவுதல் தொடர்பான தயார்நிலை மதிப்பாய்வை நடத்தும். எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவுக்கு வந்தால், முனையில் தொலைநோக்கி பொருத்தப்பட்ட ஏரியன் ராக்கெட், ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்படும்.

ராக்கெட் வெள்ளிக்கிழமை தரையிலிருந்து புறப்பட அரை மணி நேர கால சாளர வரம்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

மோசமான வானிலை அல்லது சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் ஏதேனும் தெரியவந்தால், நிர்ணயிக்கப்பட்ட நாளில் ராக்கெட்டை செலுத்த முடியாது. அதன் பிறகு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உந்து எரிபொருள்களை தயாரிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படும். அதனால் டிசம்பர் 25 அல்லது 26 ஆம் தேதிகளில் ஏவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வரைகலை

பட மூலாதாரம்,IAU/L.CALÇADA

படக்குறிப்பு,

வரைகலை: சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்யும்

"ராக்கெட் இருக்கும் இடத்திலேயே ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை நாங்கள் தயாரிக்கிறோம். இது ஏரியன் ராக்கெட்டுக்கு மூன்றுமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும் அளவுக்கு உற்பத்தித்திறன் கொண்டது" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி போக்குவரத்து இயக்குநர் டேனியல் நியூயன்ஷ்வாண்டர் கூறினார்.

ஏரியன் ராக்கெட்டில் இந்தப் பயணத்துக்காக பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, புவி வட்டப் பாதைக்கு முன்னேறும்போது அழுத்தம் குறைவதை உறுதி செய்வதற்காக, ராக்கெட்டின் கூம்பு முனையின் பக்கங்களில் சிறப்புத் துளைகள் போடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு அடுக்கு அகற்றப்படும்போது, தொலைநோக்கியை சேதப்படுத்தக்கூடிய அளவு புறச்சூழலில் மாற்றம் இல்லை என்பதை இது உறுதி செய்யும்.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கண்காணிப்புப் புள்ளிக்கு செல்லும் பாதையில் வெப் விண்வெளித் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட் வீசியெறியும்.

அதன் பிறகான பயணம் ஒரு மாதம் நீடிக்கும். அந்த நேரத்தில் வெப் தொலைநோக்கி அதன் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட முதன்மை கண்ணாடி மற்றும் சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் டென்னிஸ் ஆடுகளம் அளவிலான கேடயத்தை விரித்துக் கொள்ளும்.

பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் பிக் பேங் என அழைக்கப்படும் பெருவெடிப்புக்கு பிறகு உருவான தொடக்க காலப் பொருட்களைப் படம்பிடிப்பதே வெப் தொலைநோக்கியின் குறிக்கோள்.

வெப்

கருதுகோள்களின்படி, இவை முதல் விண்மீன் திரள்களில் இடம்பெற்ற நட்சத்திரங்களாகும்.

எக்ஸோப்ளானெட்ஸ் என்று அழைக்கப்படும் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்ய இருக்கிறது. உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான வாயுக்கள் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

"பொதுமக்களும், வானியல் ஆய்வாளர்கள் தங்களுக்குள்ளேயும் கேட்டுக் கொண்டிருக்கும் மிக அடிப்படையான, 'நாம் தனியாகத்தான் இருக்கிறோமா? பூமி தனித்தன்மை கொண்டதா?, உயிர்கள் வாழத்தக்க பிற கோள்கள் உள்ளனவா?' என்பன போன்ற ஒரே மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு வாய்ப்பைப் பெறும்" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வெப் தொலைநோக்கித் திட்ட விஞ்ஞானி அன்டோனெல்லா நோட்டா கூறினார்.

https://www.bbc.com/tamil/science-59715920

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது

  • ஜோனாதன் அமோஸ்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
19 டிசம்பர் 2021
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப்

இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது.

ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து 'அரியேன்' செயற்கைக்கோள் ஏவல் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்றின் மூலம் ஜேம்ஸ் வெப் ஏவப்பட்டது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் காட்சியை வெளியிட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இந்தத் தொலைநோக்கி விண்ணில் இப்போது பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனப்படும் அந்தத் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட்டின் முனையில் பொருத்தி மூடுவதற்கு முன்பு விஞ்ஞானிகள் இறுதிச் சோதனைகளை முடித்தனர்.

ஜேம்ஸ் வெப்பை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசு என்று கூறுலாம். இதைக் கட்டமைப்பதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்தப் புதிய தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தை அதன் முன்னோடிகளை விட இன்னும் ஆழ்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பீடு

விஞ்ஞானிகள் அதன் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள். அங்கு உயிர்கள் வாழ்ந்த, வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்படலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

ஜேம்ஸ் வெப் திட்டத்தை முன்னின்று நடத்துவது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா. அதனுடன் இணைந்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பான ஈ.எஸ்.ஏ செயல்படுகிறது. ராக்கெட்டில் தொலைநோக்கி பொருத்தப்பட்டதைக் காட்டும் புகைப்படங்களை இந்த நிறுவனங்கள் சனிக்கிழமையன்று வெளியிட்டன.

ஜேம்ஸ் வெப்

பட மூலாதாரம்,ESA/M.PEDOUSSAUT

படக்குறிப்பு,

பிரெஞ்ச் கயானாவில் ஏவுவதற்கு தயாராகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

வளிமண்டலத்துக்குள் நுழைந்து செல்லும்போது தொலைநோக்கியை எரிந்துவிடாமல் பாதுகாக்கும் ராட்சத அமைப்பு லேசர்களின் உதவியுடன் பொருத்தப்பட்டது.

வெப் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் தங்கக் கண்ணாடிகளை பூமியில் நாம் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு இதுவே. 30 வருடங்களாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இந்த விண்வெளித் தொலைநோக்கியை இனி விண்ணில்தான் பார்க்க முடியும்.

ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு, தொலைநோக்கியை விடுவிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகும். இதன் பிறகான சாகசப் பயணத்தைக் காட்டுவதற்காக ராக்கெட்டில் வீடியோ கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது.

வரைகலை

பட மூலாதாரம்,DAVID DUCROS

படக்குறிப்பு,

வரைகலை: ராக்கெட்டின் முனையில் இருக்கும் தொலைநோக்கியை பாதுகாக்கும் அமைப்பு

தொலைநோக்கியில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் உபகரணங்களுக்கு தரவுகளைக் கடத்தும் தகவல்தொடர்பு கேபிளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஏவுதலை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். இது சரி செய்யப்பட்ட பிறகு, தொலைநோக்கியின் இயங்கு தன்மை சோதிக்கப்பட்டது.

"தொலைநோக்கியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக் குழு கடைசித் தருணம் வரை தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்" என்று கூறினார் நாசாவின் அறிவியல் இயக்குநர் தாமஸ் ஸுர்புக்கென்.

"நாங்கள் இந்தத் தொலைநோக்கியில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஏற்கனவே இது அபாயங்களைக் கொண்டது. அதனால் எல்லாம் முறையாகச் செயல்படுவதை நாங்கள் முழுமையாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம்."

பிரெஞ்ச் கயானாவில் பணிகளை நிர்வகிக்கும் பிரெஞ்சு நிறுவனமான Arianespace, வரும் செவ்வாயன்று ஒரு ஏவுதல் தொடர்பான தயார்நிலை மதிப்பாய்வை நடத்தும். எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவுக்கு வந்தால், முனையில் தொலைநோக்கி பொருத்தப்பட்ட ஏரியன் ராக்கெட், ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்படும்.

ராக்கெட் வெள்ளிக்கிழமை தரையிலிருந்து புறப்பட அரை மணி நேர கால சாளர வரம்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

மோசமான வானிலை அல்லது சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் ஏதேனும் தெரியவந்தால், நிர்ணயிக்கப்பட்ட நாளில் ராக்கெட்டை செலுத்த முடியாது. அதன் பிறகு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உந்து எரிபொருள்களை தயாரிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படும். அதனால் டிசம்பர் 25 அல்லது 26 ஆம் தேதிகளில் ஏவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வரைகலை

பட மூலாதாரம்,IAU/L.CALÇADA

படக்குறிப்பு,

வரைகலை: சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்யும்

"ராக்கெட் இருக்கும் இடத்திலேயே ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை நாங்கள் தயாரிக்கிறோம். இது ஏரியன் ராக்கெட்டுக்கு மூன்றுமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும் அளவுக்கு உற்பத்தித்திறன் கொண்டது" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி போக்குவரத்து இயக்குநர் டேனியல் நியூயன்ஷ்வாண்டர் கூறினார்.

ஏரியன் ராக்கெட்டில் இந்தப் பயணத்துக்காக பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, புவி வட்டப் பாதைக்கு முன்னேறும்போது அழுத்தம் குறைவதை உறுதி செய்வதற்காக, ராக்கெட்டின் கூம்பு முனையின் பக்கங்களில் சிறப்புத் துளைகள் போடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு அடுக்கு அகற்றப்படும்போது, தொலைநோக்கியை சேதப்படுத்தக்கூடிய அளவு புறச்சூழலில் மாற்றம் இல்லை என்பதை இது உறுதி செய்யும்.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கண்காணிப்புப் புள்ளிக்கு செல்லும் பாதையில் வெப் விண்வெளித் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட் வீசியெறியும்.

அதன் பிறகான பயணம் ஒரு மாதம் நீடிக்கும். அந்த நேரத்தில் வெப் தொலைநோக்கி அதன் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட முதன்மை கண்ணாடி மற்றும் சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் டென்னிஸ் ஆடுகளம் அளவிலான கேடயத்தை விரித்துக் கொள்ளும்.

பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் பிக் பேங் என அழைக்கப்படும் பெருவெடிப்புக்கு பிறகு உருவான தொடக்க காலப் பொருட்களைப் படம்பிடிப்பதே வெப் தொலைநோக்கியின் குறிக்கோள்.

வெப்

கருதுகோள்களின்படி, இவை முதல் விண்மீன் திரள்களில் இடம்பெற்ற நட்சத்திரங்களாகும்.

எக்ஸோப்ளானெட்ஸ் என்று அழைக்கப்படும் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்ய இருக்கிறது. உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான வாயுக்கள் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

"பொதுமக்களும், வானியல் ஆய்வாளர்கள் தங்களுக்குள்ளேயும் கேட்டுக் கொண்டிருக்கும் மிக அடிப்படையான, 'நாம் தனியாகத்தான் இருக்கிறோமா? பூமி தனித்தன்மை கொண்டதா?, உயிர்கள் வாழத்தக்க பிற கோள்கள் உள்ளனவா?' என்பன போன்ற ஒரே மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு வாய்ப்பைப் பெறும்" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வெப் தொலைநோக்கித் திட்ட விஞ்ஞானி அன்டோனெல்லா நோட்டா கூறினார்.

https://www.bbc.com/tamil/science-59715920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Why NASA launched James Webb Space Telescope ? | Tamil | LMES

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?

  • ஜோனதன் அமோஸ்
  • அறிவியல் செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த கணம்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, தன் ராக்கெட்டிலிருந்து வெளி வந்து, பிரபஞ்சத்தில் முதலில் மின்னத் தொடங்கிய நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும் தன் பயணத்தைத் தொடங்கிய தருணம்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தக் காணொளி டிசம்பர் 25 அன்று, சில மணித்துளி தாமத்ததோடு பூமிக்கு பகிரப்பட்டது. ஆனால் காணொளியின் சமிக்ஞை சரிவர கிடைக்கவில்லை.

ஐரோப்பிய விண்வெளி முகமை அக்காணொளியை சரி செய்து, அதனோடு பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் ஹதெர்லேவின் இசையைச் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

இதுதான் நாம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைக் காணும் கடைசி காட்சி. இத்தொலைநோக்கி பிரபஞ்சத்தைக் குறித்தும், அங்கு தொலை தூரத்தில் இருக்கு நட்சத்திரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களைக் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் செல்கிறது. அது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் அந்த இடத்தில் தொலைநோக்கி நிலை பெற வேண்டும். ஏற்கனவே இது நிலவின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 25 அன்று ஏரியன் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து மிக துல்லியமாக ஏவப்பட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

ஏரியன் 5 ராக்கெட்

பட மூலாதாரம்,STEPHANE CORVAJA

படக்குறிப்பு,

ஏரியன் 5 ராக்கெட்

இந்த ஐரோப்பிய ராக்கெட் சரியாக இயங்கியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை சரியான உயரத்திலும், பூமத்திய ரேகையை ஒட்டிய கச்சிதமான சாய்விலும், சரியான வேகத்திலும் பயணிக்க உதவியது.

தொலைநோக்கியை விண்ணுக்கு கொண்டு செல்லும் ராக்கெட்டின் பயணம் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பயணப் பாதையை சரி செய்து கொள்ளும் போது தொலைநோக்கியின் எரிபொருள் அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை எழாததால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வாழ்நாள் கணிசமாக நீட்டிக்கப்படலாம் என திட்ட கட்டுப்பாட்டுக் குழுவினர் நம்புகின்றனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சோலார் அடுக்குகள் விரிந்த வேகத்தை காணொளியில் பார்க்க முடிந்தது. ராக்கெட்டின் மேலடுக்கில் இருந்து தொலைநோக்கி வெளியேற்றப்பட்ட பிறகு வெறும் 70 நொடிகளுக்குள் சோலார் அடுக்குகள் வெளி வந்தன.

சோலார் அடுக்குகள் வெளி வரும் நிகழ்வு பல நிமிடங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பாதுகாப்பாக களமிறக்கப்படத் தேவையான சூழல் இருப்பதை உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கணினிகள், சோலார் அடுக்கு உடனடியாக விரிய கட்டளையிட்டது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மடித்து வைக்கப்பட்ட நிலையில், மிக நெருக்கமாக 10.7 மீட்டர் நீளத்துக்கு 4.5 மீட்டர் அகலம் மற்றும் 4.5 மீட்டர் உயர பெட்டியில் பத்திரமாக அடைக்கப்பட்டது. தற்போது தன்னைத் தானே முழுமையாக விரித்துக் கொள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு வழிகாட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மிகுந்த சிக்கலான மிகப்பெரிய சூரிய கேடயம் முழுமையாக விரிய அடுத்த சில நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

ராக்கெட்டில் இருந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனியாக பிரிந்து செல்லும் காணொளியைப் படம் பிடித்த கேமரா அமைப்பை, அயர்லாந்தைச் சேர்ந்த ரியால்ட்ரா ஸ்பேஸ் சிஸ்டம் என்ஜினியரிங் என்கிற நிறுவனமே வடிவமைத்தது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவுதலை நிர்வகிக்கும் ஏரியன்ஸ்பேஸ், ரியால்ட்ரா தொழில்நுட்பத்தை ஐரோப்பாவின் அடுத்த தலைமுறை ஏரியன் வாகனமான ஏரியன் 6-ல் பயன்படுத்த உள்ளது.

சார்லொட் ஹதெர்லே முன்பு ஐரோப்பிய விண்வெளி மையத்தில் பணியாற்றினார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடலின் பெயர் லோன்லி வால்ட்ஸ். இப்பாடல் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'டுரூ லவ்' என்கிற ஆல்பத்தில் இடம் பெற்றிருந்தது.

https://www.bbc.com/tamil/science-59853390

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது மோதிய விண்கல் - என்ன பாதிப்பு?

  • ஜோனாத்தன் அமோஸ்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - வரைகலை

விண்வெளியில் மிதக்கும் அதிநவீன தொலைநோக்கியான ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் முக்கிய கண்ணாடி மீது ஒரு சின்னஞ்சிறு விண்கல் மோதியது.

தூசி அளவுக்கான நுண் விண்கல் ஏற்படுத்திய சேதம், தொலைநோக்கி திரட்டும் தரவுகளில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தொலைநோக்கி திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டை இது மட்டுப்படுத்தாது என்று கருதப்படுகிறது.

விண்வெளியை நோக்கும் விஷயத்தில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டுவந்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் குறைவாகவே உள்ள நிலையில் அதனை பதிலீடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

பேரண்டத்தை இந்த தொலைநோக்கி எப்படி நோக்கியது என்பது பற்றிய படங்களை வானியலாளர்கள் ஜூலை 12ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

தற்போது நடந்த விண்கல் மோதிய நிகழ்வினால், இந்தப் படங்கள் வியப்பூட்டப் போவது எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.

ஜேம்ஸ் வெப் - ஹபிள் ஒப்பீடு

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் - ஹபிள் ஒப்பீடு

இந்த விண்கல் மோதிய சம்பவம் மே 23-க்கும் 25க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது.

தொலைநோக்கியின் 6.5 மீட்டர் அகல முதன்மை பிரதிபலிப்பானில் உள்ள 18 பெரிலியம் - தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

விண்வெளியில் சிறிய பொருளாக இருந்தால்கூட அதிவேகமாக செல்லும்போது வேறொன்றோடு மோதினால், கடும் தாக்கத்தை அது ஏற்படுத்தும். இப்போது இந்த விண் கல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் 5 முறை மோதியுள்ளது. அதில் கடைசி மோதல் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி திறந்தவெளி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஹப்பிள் போன்ற பிற தொலைநோக்கிகளில் காணப்படுவதைப் போன்ற டியூபுலார் பாதுகாப்பு அமைப்புகள் இதில் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு பெரிய சூரிய ஒளி பாதுகாப்புத் தகட்டுக்குப் பின்னால் இந்த அமைப்பு உள்ளது. இதனால், நிலையாகவும், அகச்சிவப்பு கதிர்களைக் கண்டுபிடிக்கத் தேவையான குளிர்ச்சியோடும் இருக்க இந்த தகடுகளுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

நுண் விண்கற்கள் மோதும் ஆபத்து எதிர்பார்க்கப்பட்டதே. இதையெல்லாம் கருத்தில்கொண்டே இதைச் செய்வதற்கான உலோகங்கள், பாகங்கள் கட்டமைப்பு, இயக்க முறைகள் தேர்வு செய்யப்பட்டன.

"கடும் புற ஊதாக் கதிர்கள், சூரியனில் இருந்து வரும் ஊட்டம் பெற்ற துகள்கள், பால்வெளி மண்டலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் காஸ்மிக் அலைக்கற்றைகள், , எப்போதாவது சூரியக் குடும்பத்துக்குள் இருந்தே வந்து மோதும் நுண் விண்கல்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகளுக்கு இத்தொலைநோக்கி தன்னைப் பொருத்திக்கொள்ள நேரிடும் என்பதை அறிந்தே இருக்கிறோம்," என்கிறார் பால் கெய்த்னர். இவர் மேரிலாந்தில் உள்ள நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரின் துணை தொழில்நுட்ப திட்ட மேலாளராக இருக்கிறார்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதன்மை பிரதிபலிப்பான்.

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதன்மை பிரதிபலிப்பான்.

பிரதிபலிப்பானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள தகட்டின் நிலையை பொறியாளர்கள் மாற்றியமைப்பார்கள். அந்த தகட்டினால் ஏற்பட்டுள்ள காட்சி சிதைவினை இது அகற்றும். ஆனால், அந்த தகட்டினை அவர்கள் நீக்க முடியாது.

https://www.bbc.com/tamil/science-61743053

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

James Webb Space Telescope-ன் மீது நுண் விண்கல் மோதியது | Latest Update

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம் - அறிவியல் அதிசயம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப்

பட மூலாதாரம்,NASA

பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த தொலை நோக்கியை கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவியது.

'விண்வெளியில் உள்ள புவியின் கண்' என்று வருணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் அதன் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்) செலவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்வெளியில் ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் முழு வண்ணப் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

ஒரு புகைப்படம்தானே. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தோன்றுகிறதா?

விண்வெளியில் தொலைதூர உடுத் திரள்களை (நட்சத்திரக் கூட்டங்களை) படம் எடுப்பது என்பது கேமிராவை ஆன் செய்து, கிளிக் செய்வது போல சில விநாடி வேலை அல்ல. பேரண்டத்தின் தொலைதூரத்தைப் பார்ப்பதில் சிக்கல் என்னவென்றால், பேரண்டத்தின் தூசிப்படலம் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பார்க்க முடியாதபடி காட்சியை மறைத்துவிடும். எனவே எக்ஸ்ரே, அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிநவீன கருவிகளின் உதவியோடு தரவுகளைத் திரட்டி அவற்றைப் படமாக தொகுத்தே வழங்குவார்கள்.

இப்படி பேரண்டத்தை காட்சிப் படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என்கிறது நாசா.

பேரண்டத்துக்கு 600 மில்லியன் வயது ஆனபோது...

ஜேம்ஸ் வெப் - ஹபிள் ஒப்பீடு

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் - ஹபிள் தொலைநோக்கிகள் எடுத்த ஆழ்புலப் புகைப்படங்களின் ஒப்பீடு.

பெரு வெடிப்பின் மூலமாக 13.8 பில்லியன் (1380 கோடி) ஆண்டுகள் முன்பு இந்தப் பேரண்டம் உருவானது என்று கணிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பிறந்து 600 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆனபோது பேரண்டத்தின் குறிப்பிட்ட பகுதி எப்படி இருந்தது என்பதைத்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படம் காட்டுகிறது.

இதைவிட சுவாரசியம், இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற விவரம்தான்.

மேலே இருக்கும் ஜேம்ஸ் வெப் படத்தை பார்த்தீர்களா. அதில் உள்ள ஒவ்வொரு ஒளிப்புள்ளியும் ஒரு உடுத் திரள் ஆகும். நட்சத்திரங்களை தமிழில் உடு என்று அழைக்கிறோம். உடுக்கள் கூட்டமாக இருப்பதே உடுத்திரள். நமது சூரியன் இடம் பெற்றுள்ள உடுத்திரளின் பெயர்தான் பால்வெளி மண்டலம்.

இப்படி பல உடுத்திரள்கள் சேர்ந்த கூட்டத்தை ஆங்கிலத்தில் கிளஸ்டர் ஆஃப் கேலக்சிஸ் என்கிறார்கள். நாம் இதை உடுத்திரள் கூட்டம் என்று அழைக்கலாம்.

ஜேம்ஸ் வெப் வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படம் காட்டுவது SMACS 0723 என்று பெயரிடப்பட்ட ஒரு உடுத்திரள் கூட்டம்தான்.

உண்மையில் இந்த உடுத்திரள் கூட்டம் 4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள காட்சியைத்தான் இந்தப் படம் காட்டுகிறது.

ஆனால், இந்த உடுத்திரள் கூட்டம் பின்னணியில் அதைத்தாண்டி நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரள்களின் ஒளியை வளைத்தும் பெரிதுபடுத்தியும் காட்டுகிறது.

இதற்கு ஈர்ப்பு விளைவு என்று பெயர்.

நமது சாதாரண கேமிராவில் ஜும் லென்ஸ் எப்படி தொலைதூரக் காட்சியை இழுத்து பெரிது படுத்திக் காட்டுமோ அப்படி, நடுவழியில் உள்ள உடுக்களின், உடுத் திரள்களின் ஒளி விண்வெளி தொலைநோக்கிக்கு ஜும் லென்ஸ் போல செயல்பட்டு அதைவிட நெடுந்தொலைவில் உள்ள காட்சியை காண உதவி செய்வதே ஈர்ப்பு விளைவு எனப்படுகிறது.

James Webb

இப்படி இந்த ஈர்ப்பு விளைவின் உதவியோடு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள, மிக நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரளின் ஒளி, இந்தப் பேரண்டம் தோன்றி வெறும் 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தபோது பிறந்தது ஆகும்.

அதாவது பேரண்டம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது இந்த உடுத்திரள் எப்படி இருந்தது என்பதை இது காட்டுகிறது.

இந்த தொலைவு என்பது இதுவரை காட்சிப் படுத்தப்படாத தொலைவு என்பதுதான் இந்தப் படம் வரலாற்று முக்கியத்துவம் பெறக்காரணம். இதுவரை எடுக்கப்பட்ட பேரண்டத்தின் புகைப்படங்களிலேயே, மிகவும் ஆழமான, விரிவான விவரங்களுடன் கூடிய அகச்சிவப்பு கோணமாக இந்த படம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹபிளைவிட மிக விரைவாக..

இது போன்ற ஆழமான புலத்தை காட்சிப் படுத்துவதற்கு ஹபிள் தொலைநோக்கி பல வாரங்களுக்கு விண்வெளியை உற்றுநோக்க வேண்டியிருக்கும். ஆனால், ஜேம்ஸ் வெப் 12.5 மணி நேரம் மட்டுமே விண்வெளியை உற்றுநோக்கி இந்தப் புகைப்படத்தை உருவாக்கியுள்ளது.

ஜோ பைடன்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் ஆழ்புலப் புகைப்படம் வெளியிடப்படுவதை பார்வையிடும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இந்தப் படம் முதல் படம்தான். இன்னும் ஆழமாக, மேலும் தொலைவாகப் பயணித்து 13.5 பில்லியன் ஆண்டு தொலைவுக்கு சென்று பார்க்க முடியும் என்கிறார் நாசா நிர்வாகி பில் நெல்சன். பேரண்டம் பிறந்ததே 13.8 பில்லியன் ஆண்டுகள் முன்புதான் என்பதைக் கணக்கில் கொண்டால் இது பேரண்டத்தின் தொடக்க காலத்துக்கு அருகே செல்வதற்கு ஒப்பானது.

செவ்வாய்க்கிழமை மேலும் அதிகப் படங்கள்

வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இந்தப் படம் காண்பிக்கப்பட்டது.

ஜேம்ஸ் வெப் எடுத்த கூடுதல் படங்கள், இன்று ஜூலை 12 செவாய்க்கிழமையன்று நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சி ஒன்றில் நாசாவால் வெளியிடப்பட உள்ளன.

இதுகுறித்து பேசிய ஜோ பைடன், "அமெரிக்கா பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இந்த படங்கள் உலகுக்கு நினைவூட்டுகின்றன, மேலும் அமெரிக்க மக்களுக்கு - குறிப்பாக எங்கள் குழந்தைகளுக்கு - எங்கள் திறனைத் தாண்டி எதுவும் இல்லை என்பதை நினைவூட்டுகின்றன" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை யாரும் பார்த்திராத சாத்தியக்கூறுகளை நம்மால் பார்க்க முடிகிரது. இதுவரை யாரும் எட்டாத இடங்களையும் நம்மால் எட்ட முடியும்" என்றும் பேசினார்.

https://www.bbc.com/tamil/global-62131100

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் புதிய படங்கள்: நட்சத்திரங்களின் பிரசவ விடுதி, 5 உடுத்திரள்களின் அண்டவெளி நடனம்

  • ஜொனாதன் அமோஸ்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
35 நிமிடங்களுக்கு முன்னர்
 
Stephan's Quintet

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மிட் இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் படம் பிடித்த ஐந்து உடுத்திரள்களின் அண்டவெளி நடனம்.

இதுவரை இல்லாத தெளிவோடும், ஆழத்தோடும் கூடிய ஒரு விண்வெளிப் படம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திங்கள் கிழமை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த உடுத்திரள் கூட்டத்தைக் காட்டும் இந்தப் படம் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டியது.

இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில வியப்பூட்டும் படங்களை நாசா செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஐந்து உடுத்திரள்கள் (நட்சத்திரக் கூட்டங்கள்) நடனமாடும் பாவனையில் அருகருகே அமைந்திருப்பதைக் காட்டும் படம் ஒன்றும், உடுக்களை (நட்சத்திரங்களை) பிரசவிக்கும் ஒளிமயமான முகடுகளும் இந்தப் படங்களில் அடக்கம்.

அமெரிக்க, ஐரோப்பிய, கனடிய விண்வெளி முகமைகள் சேர்ந்து 1000 கோடி டாலர் செலவில் உருவாக்கிய இந்த விண்வெளி தொலைநோக்கி மாபெரும் சாதனைகளைப் படைத்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் வெளியிட்ட இந்த வியப்பூட்டும் படங்கள் அது அறிவியல் சார்ந்த பணிகளைத் தொடக்க ஆயத்தமாக இருப்பதைக் காட்டுகிறது. விண்ணில் கடந்த டிசம்பர் மாதம் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி, கடந்த 6 மாதமாக தனது அதிநவீன கருவிகளை பரிசோதித்து வந்தது. அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் இந்த தொலைநோக்கி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொலைநோக்கி பேரண்டத்தை அகச்சிவப்பு படங்களாக எடுப்பதால், முந்தைய விண்வெளி தொலைநோக்கிகளைவிட வெகு தூரத்தை, துல்லியமாக இதனால் படம் பிடிக்க முடிகிறது.

13.8 பில்லியன் ஆண்டுகள் (1380 கோடி ஆண்டுகள்) முன்பு பெருவெடிப்பு மூலம் பேரண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதில் 13.5 பில்லியன் ஆண்டு முன்பு வரை சென்று படம் எடுக்க முடியும் என்று நாசா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பல கோள்களை ஆராய்ந்து அதில் உயிர்கள் எதிலும் உள்ளதா என்று பார்க்க இந்த தொலைநோக்கியின் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை விண்வெளி ஆய்வாளர்கள் பயன்படுத்துவார்கள்.

இனி ஜேம்ஸ் வெப் வெளியிட்ட புதிய படங்களும் விளக்கமும்:

Presentational grey line

கரீனா நெபுலா - நட்சத்திரங்களின் பிரசவ விடுதி

Carina Nebula

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

பேரண்டத்தின் காட்சியை வியக்கவைக்கும் வகையில் படமெடுத்த முதல் தலைமுறை விண்வெளி தொலைநோக்கி ஹபிள். விண்வெளியில் புவியின் கண் என்று வருணிக்கப்பட்ட ஹபிள் எடுத்த படங்களில் முக்கியமானது கரீனா விண்முகிலின் படம். நெபுலா என்று அழைக்கப்படும் விண்முகில்கள் தூசியும், வாயுக்களும் அடங்கியவை மேகக்கூட்டம் போன்ற பகுதி ஆகும். இவற்றில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன.

புவியில் இருந்து சுமார் 7,600 ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த கரீனா வெண்முகில் மிக பிரும்மாண்டமான, மிகுந்த பிரகாசமான விண்முகில் கூட்டம். வெறும் கண்களோடு விண்ணில் பார்த்தால் இந்த விண்முகில் கூட்டத்தை பார்க்க முடியாது. காரணம், தூசியும், வாயுக்களும் இந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் மறைத்திருக்கும்.

முதலில் ஹபிள் தொலைநோக்கி இந்தப் பகுதியைப் படமெடுத்திருந்தாலும் ஜேம்ஸ் வெப் இதனை வித்தியாசமான முறையில் படமெடுத்துள்ளது.

இந்தப் படத்தில் மேல் பாதி வாயுக்கள் அடங்கிய பகுதி. கீழ்ப் பாதி தூசி அடங்கிய பகுதி. இந்த தூசி அடங்கிய பகுதி பார்ப்பதற்கு மலை முகடுகள் போல அமைந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் அளவுக்கு இந்தப் படம் துல்லியமாக அமைந்துள்ளது.

Presentational grey line

SMACS 0723

SMACS0723

படக்குறிப்பு,

SMACS0723 என்று பெயரிடப்பட்ட உடுத்திரள் கூட்டம்.

Presentational grey line

தெற்கத்திய வளைம்

The Southern Ring

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

படக்குறிப்பு,

கண்ணைக் கவரும் வளையம்.

புவியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ள தெற்கத்திய வளையம். எய்ட் பர்ஸ்ட் நெபுலா என்று அழைக்கப்படும் இந்த விரிவடையும் பிரும்மாண்ட விண்முகிலின் நடுவில் இறந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் ஒன்று ஒளியூட்டிக்கொண்டிருக்கிறது. நியர் இன்ஃப்ராரெட் மற்றும் மிட் இன்ஃப்ராரெட் முறையில் ஜேம்ஸ் வெப் எடுத்த படங்கள் இவை.

Presentational grey line

ஸ்டெஃபான்ஸ் குவின்டெட்: 5 உடுத் திரள்களின் அண்டவெளி நடனம்

Stephan's Quintet

படக்குறிப்பு,

5 உடுத்திரள்களின் அண்டவெளி நடனம்.

290 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள காட்சி இது. ஜேம்ஸ் வெப் எடுத்த வியப்பூட்டும் துல்லியத்துடன் அமைந்த இந்தப் படத்தில் ஐந்து உடுத்திரள்கள் வெவ்வேறு கோணத்தில் நடனமாடுவது போன்ற பாவனையில் இணைந்துள்ளன. பெகாசஸ் ராசியில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குப் பெயர் ஸ்டெஃபான்ஸ் குவின்டெட். மிக நெருக்கமாக உடுத்திரள்கள் சேர்ந்துள்ள கூட்டம் இது. அடிக்கடி இந்த உடுத்திரள்கள் நெருங்கியும், விலகியும் சென்று நடனமாடுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

https://www.bbc.com/tamil/science-62146345

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

James Webb Telescope பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தை படம் பிடித்தது எப்படி?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி?

ஜூலை 18, 2022

spacer.png

“எங்கோ, நம்பமுடியாத ஒன்று நாம் அறியக் காத்திருக்கிறது” – இது பிரபல வானியல் அறிஞரான கார்ல் சாகனின் வார்த்தைகள். இதனை குறிப்பிட்டுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த அரிய புகைப்படங்களை நாசா உலகுக்குப் பகிர்ந்தது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பரந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் நாம் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

SMACS 0723: விண்வெளியில் ஒரு சிறு விண்மீன் திரள்களை (galaxies) இப்படம் குறிக்கிறது. அதாவது, உங்கள் கை நிறைய மணல்துகள்களை வைத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துகள் அளவுதான் இந்த விண்மீன் திரள்களின் கூட்டம். இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய துகளைத்தான் இப்படம் குறிக்கிறது. இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியதென்று.. 

இந்தப் படத்தை நீங்கள் கவனமாக பார்த்தால், விண்மீன் திரள்களை தெளிவாகக் காணலாம். சில விண்மீன் திரள்களின் ஈர்ப்பு விசையால் சிதைக்கப்பட்டிருப்பதால் அவை நீண்டு காணப்படுகின்றன. சில வட்டவடிவில் காணப்படுகின்றன. இதில் ஆங்காங்கே நட்சத்திரங்களும் மின்னுகின்றன.

spacer.png

The Southern Ring Nebula – தெற்கு வளைய நெபுலா: இது விண்வெளியில் தெற்குப் பகுதியில் வளைய வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இது தெற்கு வளைய நெபுலா (The Southern Ring Nebula ) என்று அழைக்கப்படுகிறது. நெபுலா என்பதற்கு புகை அல்லது பனிமூட்டம் என்று பொருள்.

ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த நெபுலாவை பார்க்கும்போது, அவை ஒளிரும் மேகங்கள் போன்று தெரியும். ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ள தெற்கு வளைய நெபுலா ஜெல்லி மீன் போன்று காணப்படுகின்றது. ஹைட்ரஜன் நிறைந்துள்ள நெபுலாக்கள்தான் விண்வெளியில் நட்சத்திரங்கள் தோன்றும் இடங்களாக உள்ளன. நெபுலாக்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் மிகுந்த வெப்பத்தை கொண்டவை. இது பூமியிலிருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன (1 ஒளி ஆண்டு = 9.5 டிரில்லியன் கிமீ).

ஸ்டிபன்ஸ் குவின்டெட் – Stephan’s quintet: இப்படத்தில் ஐந்து விண்மீன் திரள்கள் (5 galaxies) உள்ளன. அதாவது நமது சூரியக் குடும்பத்தை போன்று ஐந்து விண்மீன் திரள்கள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த விண்மீன் திரள்களை எட்வர்ட் ஸ்டீபன் என்பவர் 1877-ஆம் ஆண்டு கண்டறிந்தார். அதனால் இந்த விண்மீன் திரள்கள் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இதில் ’quintet’ என்பது 5 என்ற எண்ணிக்கையை குறிக்கும். நிறைய விண்மீன் திரள்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருந்ததை அப்போதுதான் விஞ்ஞானிகள் கண்டனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி Stephan’s quintet -ஐ தெளிவாக படப்பிடித்து அனுப்பியுள்ளது. இதில் ரெண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் விண்மீன்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறியலாம். மேலும் அப்பகுதியில் உள்ள கருத்துளைகளை அறிந்து கொள்ளவும் இந்தப் படம் உதவுகிறது. ஸ்டிபன்ஸ் குவின்டெட் பூமியிலிருந்து 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.
 
spacer.png

கரினா நெபுலா – Carina Nebula: கரினா நெபுலா பொதுவாக மலை பள்ளத்தாக்குகள் போன்று காணப்படும். இதன் பின்பகுதியில் நீல நிற வானம் தெளிவாக தெரியும்.

இவை பூமியிலிருந்து 7,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இவை வாயுகளாலும், தூசுகளாலும் ஆனது. நமது சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வளி மணடத்தில்தான் இவையும் அமைந்துள்ளன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கரினா நெபுலாவை துல்லியமாக படம்பிடித்துள்ளது. அதில் அமைந்துள்ள நட்சத்திரங்களும் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றன. கரினா நெபுலாவின் முனைகளில் அமைந்துள்ள ’NGC 3324’ என்ற விண்மீன் கூட்டமும் இப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.

வெளிகோள் – WASP-96 b: இந்த வெளிகோள். 2014-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விண்வெளியில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.இது பூமியிலிருந்து சுமார் 1,150 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த வெளிகோள் வியாழன் கோளின் நிறையில் பாதி நிறையைக் கொண்டது. இது, அதன் நட்சத்திரத்தை முழுமையாக சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 3.4 நாட்கள். இந்த கோளின் வெப்பநிலை 1000 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். மேலும் இந்த கோளில் வாயுக்கள் நிரம்பியுள்ளன.

இந்த வெளிக்கோளின் வளிமண்டத்தில் உள்ள நீராவி அளவு, கர்பன் அளவையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கணக்கிட்டு அனுப்பியுள்ளது.

நமது சூரிய குடும்பம் இருக்கும் பால் வளிமண்டலத்தில் மட்டும் சுமார் 5,000 புறக்கோள்கள் வரை உள்ளன.

spacer.png

விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றி விமர்சனங்களுக்கு மத்தியில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படங்கள் பெரும் வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளன. ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல.. அவை கடந்த காலத்தை சேர்ந்தவை. உங்களுக்கு குழப்பாக இருக்கலாம் விண்வெளியில் தொலைவை, ஒளி ஆண்டுகளில்தான் கணக்கிடுறோம். எப்போதோ பயணம் செய்த ஒளி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் காண நேர்ந்த கணத்தில்தான் இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும்போது அவை கடந்த காலத்தை சேர்ந்தவைத்தான்.

பிரபஞ்சம் இந்த நொடியில்கூட, தனது எல்லையை அதிகரித்துக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் லட்சக்கணக்கான கிரகங்கள், விண்மீன்கள் இருக்கலாம்.. இன்னமும் பல அதிசயங்களை காண இருக்கிறோம்.. ஏன் பிரபஞ்சம் எப்போது, எப்படி உருவானது என்ற புதிருக்கும் கூட விடை கிடைக்கலாம்.. காத்திருப்போம்..! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அடுத்த புகைப்படங்களுக்காக..!

தொகுப்பு: இந்து குணசேகர்
 
https://chakkaram.com/2022/07/18/ஜேம்ஸ்-வெப்-தொலைநோக்கி-எ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் இன்றுதான் நான் உங்கள் பதிவுகளைப பார்த்தேன். நான் எப்போதுமே சிந்திக்கிறனான் வாண்வெளிபற்றிய பதிவுகள் யாழில் ஏன் வருவதில்லையேன்று. உங்கள் பதிவுகளைப்பார்த்ததுமே அந்தகவலை போய்விட்டது. 

JWSTஐப்பற்றி 10 வருடங்களுக்கு முன் கேள்விப்படும் பொழுது கெப்ளர் தொலைநோக்கி தனது ஆய்வறிக்கைகளை ( explanatory discoveries) அனுப்பிக்கொன்றிருந்தது.  ஆனால் அதனால் exoplanets இன் வளிமண்டல compositions ஐ கண்டறியமுடியாது. அதற்கு JWST தான் சரியென்றபடியால் அதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து அதனை எப்பொழுது ஏவுவார்கள் என்று காத்திருந்தேன். ஒவ்வொன்றாக பிரபஞ்ச முடிச்சக்களை அவிழ்க்க தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் ROMAN , LUVOIR வானியல் தொலைநோக்கிகள் பிரபஞ்ச மர்மங்களை உடைத்து are we alone என்ற கேள்விக்கு பதில் தரும் என்று எதிர்பார்க்கலாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் கார்பன் டை ஆக்சைடு கண்டுபிடித்ததால் என்ன பயன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
கார்பன் டை ஆக்சைடு கண்டறியப்பட்டது

பட மூலாதாரம்,NASA.GOV

படக்குறிப்பு,

கண்டறியப்பட்ட கார்பன் டை ஆக்சைடு - வரைபட வடிவில்

சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள கோளில் கார்பன்-டை-ஆக்சைடுக்கான முதல் தெளிவான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி. 700 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும், வாயுக்களால் நிறைந்த ராட்சத கிரகத்தின் மூலம் கவனிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இந்த கிரகத்தின் உருவாக்கம் பற்றிய முக்கியமான நுணுக்கங்களை அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு முன், 4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த உடுத்திரள் கூட்டத்தையும், அதன் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்தமுறை கார்பன் டை ஆக்சைடுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவிக்கிறது.

'நேச்சர்' ஆய்விதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, இனிவரும் காலங்களில், சிறிய பாறைக் கோள்களின் மெல்லிய வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடைக் கண்டறிந்து அளவிட முடியும் என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.வாஸ்ப் 39 பி (WASP-39 b) என்று பெயரிடப்பட்டுள்ளது அந்த வெளிக்கோள் (சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்). இது வியாழனின் நிறையில் ஒரு கால்பகுதியும் (சுமார் சனியைப் போன்றது) வியாழனை விட 1.3 மடங்கு பெரிய விட்டமும் கொண்ட ஒரு சூடான ராட்சத வாயுக்கோளாகும். அதன் மிருதுவான பெரிய வடிவம் (உப்பலான) அதன் உயர் வெப்பநிலையுடன் (சுமார் 1,600 டிகிரி பாரன்ஹீட் அல்லது 900 டிகிரி செல்சியஸ்) தொடர்புடையது . நமது சூரியக் குடும்பத்தில் உள்ள குளிர்ச்சியான, மிகவும் கச்சிதமான வாயுக்கோள்களைப் போலல்லாமல், WASP-39 b அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றுகிறது. அதாவது சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான தூரத்தில் இது எட்டில் ஒரு பங்கு மட்டுமே.

சிவப்புக் கோடு

சிவப்புக் கோடு

பூமியின் நாட்கணக்குப்படி, இந்தக்கோளின் ஒரு சுற்று 4 நாட்களில் முடிவடைகிறது. இந்த கோள், பயணிக்கும் போது அல்லது நட்சத்திரங்களின் முன் கடந்து செல்லும் போது அதன் முதன்மை நட்சத்திரம் தவிர மற்றவற்றின் ஒளி, அவ்வப்போது மங்குவதன் அடிப்படையில், 2011 ஆம் ஆண்டு இல் முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.நாசாவின் ஹப்பிள் மற்றும் ஸ்பிட்சர் ஆகிய விண்வெளி தொலைநோக்கிகள் உட்பட பிற தொலைநோக்கிகளின் முந்தைய அவதானிப்புகள், இந்தக் கோளின் வளிமண்டலத்தில் நீராவி, சோடியம், பொட்டாசியம் ஆகியவை இருப்பதை வெளிப்படுத்தின. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு உணர்திறன் மூலமாக இப்போது இந்த கோளில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது நாசா.

முன்பு ஜேம்ஸ் வெப் வெளியிட்ட, SMACS0723 என்று பெயரிடப்பட்ட உடுத்திரள் கூட்டம்.

படக்குறிப்பு,

முன்பு ஜேம்ஸ் வெப் வெளியிட்ட, SMACS0723 என்று பெயரிடப்பட்ட உடுத்திரள் கூட்டம்.

இதுதான் முதல்முறை

ஆராய்ச்சி குழு அதன் WASP-39b இன் அவதானிப்புகளுக்கு ஜேம்ஸ்வெப்பின் NIRSpec ஐப் (Webb's Near-Infrared Spectrograph) பயன்படுத்தியது. அப்போது, இந்தக்கோளின் வளிமண்டலத்தை அலை வரைபடமாக வரைந்தபோது, அதில் 4.1 முதல் 4.6 மைக்ரான்களுக்கு இடையில் (மலை இருக்கும் பகுதி) கார்பன் டை ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தது. சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான, விரிவான ஆதாரம் கிடைப்பது இதுதான் முதல்முறை.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மாணவரும், இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவான, "பயணிக்கும் வெளிக்கோள்களின் முதிர்ச்சியடையாத வெளிப்பாட்டு அறிவியல்" (JWST Transiting Exoplanet Community Early Release Science) குழுவின் உறுப்பினருமான ஜாபர் ருஸ்தம்குலோவ், "என் திரையில் அந்த தரவைப் பார்த்தவுடன், அந்த மிகப்பெரிய, கார்பன் டை ஆக்சைடு அம்சம் என்னை இழுத்தது. இது ஒரு சிறப்பு தருணம். அதாவது வெளிக்கோள் அறிவியலில் ஒரு முக்கியமானநிலை அது" என்கிறார். இவ்வளவு நுட்பமான வேறுபாடுகளை இதற்கு முன் எந்த ஆய்வகமும் அளவிடவில்லை.

கார்பன் டை ஆக்சைடு கண்டறியப்பட்டது

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,

வெளிக்கோள் ஒன்றில், கார்பன் டை ஆக்சைடு கண்டறியப்பட்டது

இப்படி, கார்பன் டை ஆக்சைடின் தெளிவான சமிக்ஞையைக் கண்டறிவது சிறிய மற்றும் நிலப்பரப்பு-அளவிலான கிரகங்களின் வளிமண்டலங்களைக் கண்டறிவதற்கு உதவும் என்று குழுவை வழிநடத்தும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நடாலி படால்ஹா கூறினார்.

ஒரு கோளின் வளிமண்டலத்தில் உள்ள கலவையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் அது கிரகத்தின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகள் அந்தக் கோள் உருவாக்கத்தின் கதையின் உணர்திறன் ட்ரேசர்கள்" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் மற்றொரு உறுப்பினரான அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் மைக் லைன் கூறினார்.

"இந்த கார்பன் டை ஆக்சைடு அம்சத்தை அளவிடுவதன் மூலம், எவ்வளவு திடமான மற்றும் எவ்வளவு வாயு பொருட்கள் இந்தக் கோள் உருவாக பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் தீர்மானிக்க முடியும். இனி வரவிருக்கும் தசாப்தத்தில், JWST பல்வேறு கோள்களுக்கு இந்த அளவீட்டைச் செய்யும், அத்துடன், இது கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதுடன் நமது சொந்த சூரிய குடும்பத்தின் தனித்தன்மை பற்றிய நுண்ணறிவையும் வழங்கும்" என்கிறார் மைக்.

https://www.bbc.com/tamil/global-62705054

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: பூமியை விட இளமையான புறக்கோள் படத்தை வெளியிட்ட நாசா

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
35 நிமிடங்களுக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - புறக்கோள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வானியலாளர்கள், நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் ஒரு புறக்கோளுடைய நேரடி ஒளிப்படத்தை எடுத்துள்ளனர்.

"இந்த புறக்கோள் ஒரு ராட்சத வாயு கிரகமாக உள்ளது. இதில் பாறைகளைக் கொண்ட மேற்பரப்பே இல்லை. ஆகையால் இதில் உயிர்கள் வாழ முடியாது," என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப்பின் சக்தி வாய்ந்த அகச்சிவப்பு கதிர் பயன்பாடு மூலமாக நான்கு வெவ்வேறு ஒளி ஃபில்டர்களில் எடுக்கப்பட்ட படங்கள், நம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள உலகங்களை அதனால் எப்படி எளிதாகப் படமெடுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இது புறக்கோளைப் பற்றி முன்பு கிடைத்ததை விட அதிகமான தகவல்களை வெளிக்கொண்டு வரக்கூடிய வாய்ப்புகளுக்கு வழி காட்டுகிறது.

சிவப்புக் கோடு

சிவப்புக் கோடு

புறக்கோள்

நம் சூரியன் ஒரு விண்மீன், அதைச் சுற்றித்தான் பூமி உட்பட 8 கோள்களும் சுற்றுகின்றன. நம்முடைய பால்வெளி மண்டலத்தில் மட்டும் இதுபோல் சுமார் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம்முடைய உடுத்திரள் (Galaxy) போலவே 20,000 கோடி உடுத்திரள்கள் நம் பார்வைக்கு உட்பட்ட பேரண்டத்தில் உள்ளதாக மதிப்பிட்டுள்ளார்கள்.

அவை அனைத்திலுமே நம் சூரியனை போன்ற விண்மீன்கள் உள்ளன. அவற்றையும் கோள்கள் சுற்றுகின்றன. சூரியனைத் தவிர மற்ற விண்மீன்களைச் சுற்றும் கோள்கள், அதாவது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்கள், புறக்கோள்கள்(Exoplanets) என்று அழைக்கப்படுகின்றன. நாசா இதுவரை 5,084 புறக்கோள்களை இனம் கண்டு உறுதி செய்துள்ளது.

சிவப்புக் கோடு

"இது ஜேம்ஸ் வெப் திட்டத்திற்கு மட்டுமல்ல, பொதுவாக வானியலுக்கே ஒரு மாற்றத்தைத் தரக்கூடிய தருணம்" என்று பிரிட்டனிலுள்ள எக்ஸெடெர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் இணை பேராசிரியரான சாஷா ஹிங்க்லி கூறியுள்ளதாக நாசா தெரிவிக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், கனடிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நாசா வழிநடத்திவரும் ஒரு சர்வதேச திட்டம் தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

ஜேம்ஸ் வெப்பின் ஒளிப்படத்திலுள்ள எச்ஐபி 65426 பி (HIP 65426 b) எனப்படும் புறக்கோள், வியாழன் கோளை விட ஆறு முதல் 12 மடங்கு அதிக நிறையைக் கொண்டது. இந்த அவதானிப்புகள் அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். நம்முடைய பூமி 4.5 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது. பூமியைப் போன்ற கோள்களோடு ஒப்பிடும்போது, இப்போது கண்டறியப்பட்டுள்ள புறக்கோள் 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளே பழையமையாது. ஆம், அது பூமியை விட இளமையானது.

சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கியில் ஸ்பியர் (SPHERE) கருவியைப் பயன்படுத்தி வானியலாளர்கள் 2017-இல் இந்த புறக்கோளைக் கண்டுபிடித்தனர். ஒளியின் குறுகிய அகச்சிவப்பு அலைநீளத்தைப் பயன்படுத்தி அதன் படங்களை எடுத்தார்கள். ஆனால் இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, அதன் நீண்ட அகச்சிவப்பு அலைநீளத்தைப் பயன்படுத்தி எடுத்த ஒளிப்படங்கள் புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது. வளிமண்டலத்தில் உள்ள அகச்சிவப்பு ஒளி காரணமாக, பூமியில் அமைந்திருக்கும் தொலைநோக்கிகளால் ஜேம்ஸ் வெப், ஹப்பிள் ஸ்பேஸ் போன்ற விண்வெளி தொலைநோக்கிகள் அளவுக்குத் தெளிவாக விவரங்களைக் காட்டும் ஒளிப்படங்களை எடுக்க முடியாது.

சிவப்புக் கோடு

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - புறக்கோள்

பட மூலாதாரம்,NASA

  • இந்த ஒளிப்படம் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் எடுக்கப்பட்டது. அதன் அகச்சிவப்பு ஒளியின் வெவ்வேறு ஒளிப்பட்டைகளில் எச்ஐபி 65426 பி புறக்கோளை காட்டுகிறது.
  • ஊதா நிற படம், அண்மை அகச்சிவப்பு கேமராவில் 3.00 மைக்ரோமீட்டர் அலைநீளத்தில் எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது. நீல நிற படம், அண்மை அகச்சிவப்பு கேமராவில் 4.44 மைக்ரோமீட்டரில் எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
  • மஞ்சள் நிற படம் இடைதூர அகச்சிவப்புக் கருவியில் 11.4 மைக்ரோமீட்டரில் எடுக்கப்பட்டதையும் சிவப்பு நிற படம், இடைதூர அகச்சிவப்பு கருவியில் 15.5 மைக்ரோமீட்டரில் எடுக்கப்பட்டதையும் காட்டுகின்றன.
  • வெப் தொலைநோக்கியின் வெவ்வேறு கருவிகளுடைய, ஒளியைப் பதிவு செய்யும் வெவ்வேறு வழிகள் காரணமாக, இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத் தெரிகின்றன. அதன் ஒவ்வொரு கருவியிலும் உள்ள கரோனாகிராஃப் (coronagraph) எனப்படும் ஒளியைத் தடுக்கும் மூடிகளின் தொகுப்பு, புறக்கோளை பார்க்க ஏதுவாக விண்மீனின் ஒளியைத் தடுக்கிறது. ஒவ்வோர் ஒளிப்படத்திலும் இருக்கின்ற சிறு வெள்ளை நட்சத்திரம், புறக்கோள் சுற்றும் விண்மீன் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது.
 
சிவப்புக் கோடு

இந்த தரவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. வானியல் ஆய்வாளர்கள், இந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து ஆய்வுக் கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு, அதை ஆய்விதழுக்கு மதிப்பாய்வுக்காக அனுப்புவார்கள். ஆனால், வெப் தொலைநோக்கி முதன்முதலாக ஒரு தொலைதூர புறக்கோளைப் படம் எடுத்திருப்பது, அத்தகைய இன்னும் பல தொலைதூர புறக்கோள்களை ஆய்வு செய்வதற்கான எதிர்கால சாத்தியக்கூறுகள் உள்ளதைக் காட்டுகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவைவிட 100 மடங்கு அதிக தொலைவு எச்ஐபி 65426 பி (HIP 65426 b) என்ற புறக்கோளுக்கும் அது சுற்றி வரும் விண்மீனுக்கும் இடையே இருக்கிறது. ஆகையால், ஜேம்ஸ் வெப் ஒளிப்படத்தில் விண்மீனையும் அதைச் சுற்றிவரும் இந்தப் புறக்கோளையும் எளிதாகப் பிரித்து அடையாளப்படுத்த வானியலாளர்களால் முடிந்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியிலுள்ள அண்மை அகச்சிவப்பு கேமரா (NIRCam) மற்றும் இடைதூர அகச்சிவப்பு கருவி (MIRI) ஆகிய இரண்டுமே நம்முடைய விண்மீனான சூரியனின் ஒளியைத் தடுக்கும் சிறிய மூடிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளன. எச்ஐபி 65426 பி போன்ற சில புறக்கோள்களின் நேரடி ஒளிப்படங்களை வெப் தொலைநோக்கி பதிவு செய்ய இது உதவுகிறது. நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை, 2027ஆம் ஆண்டு விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இன்னும் மேம்பட்ட கரோனாகிராஃப் விண்மீன் ஒளிதடுப்பு மூடிகளைக் கொண்டிருக்கும்.

சிவப்புக் கோடு

அண்மை அகச்சிவப்பு கேமரா (Near Infrared Camera, NIRCam)

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதன்மையான படமெடுக்கும் கருவி. இதன் அகச்சிவப்பு அலைநீள வரம்பு, 0.6 முதல் 5 மைக்ரான். இதில், அண்மை அகச்சிவப்பு கேமராவில், ஒளி தடுப்பு மூடிகளான கரோனா கிராஃப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி, சூரிய மண்டலத்தைப் போன்ற பிற விண்மீன் மண்டலங்களின் மையத்திலுள்ள பிரகாசமான விண்மீனின் ஒளியை படர்ந்திருக்கும் பகுதியில் சுற்றி அமைந்துள்ள மங்கலான பொருட்களின் படங்களை அண்மை அகச்சிவப்பு கேமரா தெளிவாகப் பதிவு செய்ய உதவுகிறது.

இடைதூர அகச்சிவப்புக் கருவி (Mid-Infrared Instrument, MIRI)

இது கேமரா மற்றும் ஸ்பெக்ட்ரோகிராஃப் எனப்படும் ஒளிப்படப் பொறி (ஒளியின் அலைநீளம் அல்லது அதிர்வெண்ணைப் பொருத்து பிரிக்கும் கருவி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மின்காந்த நிறமாலையின், அகச்சிவப்புப் பகுதியின் மையத்திலுள்ள மனித கண்கள் பார்ப்பதைவிட அதிக அலைநீளம் கொண்ட ஒளியைப் பதிவு செய்கிறது.

இடைதூர அகச்சிவப்புக் கருவி, 5 முதல் 28 மைக்ரான் வரையிலான அலைநீளம் கொண்ட ஒளியைப் பதிவு செய்கிறது. இதன் உணர்திறன் கண்டறியும் கருவிகள், தொலைதூர உடுத்திரள்கள், புதிதாக உருவாகும் விண்மீன்கள், மங்கலாகத் தெரியும் வால்விண்மீன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய உதவுகிறது.

சிவப்புக் கோடு

"எச்ஐபி 65426 பி புறக்கோள் சுற்றி வரும் விண்மீனின் ஒளியைக் கட்டுப்படுத்த வெப் தொலைநோக்கியின் விண்மீன் ஒளிதடுப்பு மூடிகள் செயல்பட்ட விதம் வியக்க வைக்கும் வகையில் இருந்தது," என்று ஹின்க்லி கூறினார்.

கோள்களை விட அவை சுற்றி வரும் விண்மீன்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதால், புறக்கோள்களின் நேரடி ஒளிப்படங்களை எடுப்பது மிகவும் சவாலானது. எச்ஐபி 65426 பி புறக்கோள், அண்மை அகச்சிவப்பில், அதன் விண்மீனைவிட 10,000 மடங்கு மங்கலாக உள்ளது. மேலும், இடைதூர அகச்சிவப்புக் கதிர்களில் அதைவிடச் சற்று குறைவாக சில ஆயிரம் மடங்கு மங்கலாக உள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - புறக்கோள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபில்டர் செய்யப்பட்ட ஒவ்வொரு படத்திலும், புறக்கோள் சற்று வித்தியாசமான வடிவைக் கொண்ட ஒளிக்குமிழியாகத் தோன்றுகிறது.

"இந்த புறக்கோளின் ஒளிப்படங்களைப் பெறுவதை ஒரு விண்வெளிப் புதையலைத் தோண்டுவதைப் போல் உணர்ந்தேன். முதலில் நான் பார்த்ததெல்லாம் விண்மீனில் இருந்து வெளிப்பட்ட ஒளியை மட்டும் தான். ஆனால், கவனமாக ஒளிப்படத்தைப் பகுப்பாய்ந்ததன் மூலம், அந்த விண்மீன் ஒளியை நீக்கி புறக்கோளை வெளிப்படுத்த முடிந்தது," என்று ஒளிப்படங்களின் பகுப்பாய்வுக்கு தலைமை தாங்கிய சான்டா குரூஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆய்வாளர் ஆரின் கார்ட்டர் கூறியதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கியும் முன்பு புறக்கோள்களின் இத்தகைய தெளிவான படங்களை எடுத்துள்ளது. ஆகவே, விண்வெளியில் எடுக்கப்பட்ட புறக்கோளின் முதல் தெளிவான படம் என்று இதைக் குறிப்பிட முடியாது. இருப்பினும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, புறக்கோள் ஆய்வுகளில் முன்னோக்கிச் செல்வதற்கான வழியை எச்ஐபி 65426 பி காட்டுகிறது.

இதில் நாம் கவனிக்கத்தக்க ஓர் அம்சம் உண்டு. ஜேம்ஸ் வெப் அதன் தேடுதலை இப்போது தான் தொடங்கியது. ஆகவே, புறக்கோள்களின் பல படங்கள் இன்னும் வரவுள்ளன. அத்தகைய ஒளிப்படங்கள் புறக்கோள்களின் இயற்பியல், வேதியியல் கட்டமைப்பு, அவற்றின் உருவாக்கம் பற்றிய புரிதலை நாம் வடிவமைக்க உதவும். இன்னமும் அறியப்படாமல் உள்ள புறக்கோள்களை கண்டுபிடிக்கவும் கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு உதவலாம்.

சமீபத்தில் கூட, வாஸ்ப்-39பி என்ற புறக்கோள் ஒன்றில் கரிம வாயு(CO2) இருப்பதற்கான தடத்தை ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்தது. சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கோளில் கரிம வாயு இருப்பதற்கான முதல் தெளிவான ஆதாரம் ஜேம்ஸ் வெப் மூலம் கிடைத்தது. ஒருவேளை இந்தப் பேரண்டத்தில் உயிர்கள் வாழக்கூடிய மற்ற கோள்களுக்கான தேடலிலும்கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு உதவலாம். https://www.bbc.com/tamil/science-62763046

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2022 at 21:05, ஏராளன் said:

ஏராளன் உங்களுக்கு வானிலை ஆராய்சியில் ஆர்வம் உள்ளது போல தெரிகிறது, 90 களில் ஒரு வால்நட்சத்திரம் (தியா குடா என நினைக்கிறேன்) ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டது, போர் மேகம் சூழ்ந்த யாழ்குடாவில் பின்னிரவு நேரங்களில் இருண்ட வானில் அந்த வால்நட்சத்திரங்களை பார்ப்பது வழமை, வடக்கில் தொடங்கி தெற்கு  நோக்கி நீண்ட பெரிய வாலைக்கொண்ட வால்நட்சத்திரம்.

அது யாழ்குடாவின் உண்மை வடக்கில் பயணித்துக்கொண்டிருந்தது ( காந்த வடக்கல்ல). 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இன்னொரு துல்லிய புகைப்படம் - வியப்பூட்டும் தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்த 'பில்லர்ஸ் ஆஃப் கிரியேஷனின்' படம்

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

ஜேம்ஸ் வெப் எனப்படும் புதிய அதிநவீன தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற 'பில்லர்ஸ் ஆஃப் கிரியேஷனின்' இரண்டாவது படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் MIRI(Webb's Mid-Infrared Instrument) கருவி மூலமாக செயல்பாட்டில் உள்ள நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் காட்சி நமக்கு கிடைத்தது.

பூமியில் இருந்து சுமார் 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இடத்தை கண்காணிப்பகத்தின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா கடந்த வாரம் படம்பிடித்தது.

மெஸ்ஸியர் 16 அல்லது ஈகிள் நெபுலா என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் மையத்தில் இந்தத் தூண்கள் அமைந்துள்ளன.

இவை நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் வாயு மற்றும் தூசுக்களாலான நெபுலாவில் புதிய நட்சத்திரங்கள் பிறப்பதால் அதன் இயற்பியல் மற்றும் வேதியியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் வகையில் ஒவ்வொரு நவீன தொலைநோக்கியும் அவற்றின் திசையை நோக்கி உள்ளன.

6.5மீட்டர் அகலமான கண்ணாடி மற்றும் உயர்தர சென்சார் கொண்ட வெப் தொலைநோக்கி, காட்சிகளைப் பதிவு செய்வதற்கான சிறந்த மற்றும் பெரிய விண்வெளி கண்காணிப்பு கருவியாகும்.

தூண்களைக் காட்ட பயன்படுத்தப்படும் அலைநீளங்களைத் தேர்வு செய்வதற்கான வசதி, புதிய MIRI படத்தில் உள்ள சிறப்பம்சமாகும்.

வழக்கமாக, வானியல் ஆராய்ச்சியாளர்கள் தூசி படித்த நெடுவரிசையை மிகவும் ஒளி ஊடுருவக் கூடியதாக மாற்ற ஒளிகளை வடிகட்டி அனுப்புவார்கள். அதன் மூலம், அதனுடைய உட்புறம் மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண முடியும். அதைத்தான் Near Infrared Camera எனப்படும் NIRCam செய்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளம் நீல நட்சத்திரங்களை காண முடியும்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

MIRI படம் அதிலிருந்து ஒருபடி உயர்ந்தது. எந்த அலைநீளத்தில் தூசுக்கள் நன்கு ஒளிருமோ அந்த அலைநீளத்தை இந்தக் கருவியின் ஒளி வடிகட்டும் பகுதி தேர்வு செய்யும்.

நடு அகச்சிவப்பு நிலையில் தூசுக்கள் வாயிலாக இவற்றைக் காண முடியும் என்ற எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் இருக்கும் அண்மைய படம், அருகாமையிலுள்ள வெப்ப நட்சத்திரங்களின் ஒளியினால் ஒளிரும் தூசி மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைப் படிக்க இந்த முறையும் சிறந்தது எனக் காட்டும் வகையில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூத்த அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் மார்க் மெக்காக்ரியன் கூறுகிறார்.

பிரிட்டன் தலைமையிலான 10 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூட்டு முயற்சியில் MIRI கருவியானது உருவாக்கப்பட்டது.

பேராசிரியர் கில்லியன் ரைட் இணை முதன்மை ஆய்வாளராகச் செயல்பட்டார்.

"MIRI எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று பார்க்கும்போது சிலிர்ப்பாக உள்ளது. இதுவரை நம்மிடம் இல்லாத புதிய அறிவியல் தகவல்களை இது வழங்குகிறது" என பிரிட்டனின் வானியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்தப் புதிய படத்தில் நாம் பார்ப்பது தூண்களின் தோல் போன்றது. நட்சத்திரங்கள் தூசியால் எரியத் தொடங்கும் இழை அமைப்புகளை நீங்கள் காணலாம். மேலும், அதில் இருக்கும் இருண்ட பகுதிகளையும் நீங்கள் காணலாம். மிகவும் அடர்த்தியாகவும் குளிராகவும் இருக்கும் அந்தப் பகுதிகள் MIRI கருவியினால் கூட ஒளிரவில்லை" என அவர் கூறினார்.

ஜேம்ஸ் வெப் என்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி முகமைகளின் கூட்டுத் திட்டமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/science-63449468

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பேரண்டத்தின் படங்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம்

55 நிமிடங்களுக்கு முன்னர்
Tarantula Nebula

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/WEBB ERO PRODUCTION TEAM

படக்குறிப்பு,

தி டரன்டுலா நெபுலா: பூமியில் இருந்து 1,61,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இடத்திதான் ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள் பிறந்தன.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. உலகிற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலரில் அளிக்கப்பட்ட கொடை இது. இந்திய மதிப்பில் சுமார் 80,000 கோடி ரூபாய்.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் நாளில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. திட்டம், வடிவமைப்பு, கட்டுமானம் என இதற்காக 30 ஆண்டுகளாயின.

புகழ் பெற்ற ஹபிள் தொலைநோக்கிக்கு அடுத்தபடியாக தயாரிக்கப்பட்ட இந்த தொலைநோக்கி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்று பலரும் எண்ணினர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பிரதானமான, முதன்மை கண்ணாடியை நிலைநிறுத்தி பிரபஞ்சத்தை நோக்கவும், பிற பாகங்களை பரிசோதித்து, மதிப்பிடவும் நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஆனால், அவர்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாடு எவ்வாறெல்லாம் இருக்கும் என்று கூறினார்களோ அப்படியே கச்சிதமாக அமைந்தது.

கடந்த ஜூலை மாதம், இந்தத் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப் படத்தை வெளியிட்டு, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கனடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் கொண்டாடினர். அதன் பின்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பார்க்கலாம்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி காட்டும் அகச்சிவப்பு பிரபஞ்சம்

பூமியில் இருந்து 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஈகிள் நெபுலா. பெருந்திரளாக தூசு, வாயுக்கள் அல்லது நட்சத்திரக் கூட்டம் ஆகியவை விண்வெளியில் இருப்பது ஆங்கிலத்தில் 'நெபுலா' (nebula) எனப்படும்.

ஜேம்ஸ் வெப் பற்றி நீங்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டியது இது ஓர் அகச்சிவப்பு தொலைநோக்கி. அது நம் கண்களால் அறிய முடியாத, ஒளியின் அலைநீளத்தில் விண்வெளியைப் பார்க்கிறது.

வாயு மற்றும் தூசுகளாலான மிகப்பெரிய கோபுரங்கள் போன்ற பிரபஞ்சத்தின் பகுதிகளை ஆராய வானியலாளர்கள் இதன் வெவ்வேறு கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். தூண்கள் போன்ற அமைப்புடைய 'தி பில்லர்ஸ்' எனும் ஈகிள் நெபுலாவின் ஒரு பகுதி ஹபிளின் பிரதான இலக்காக இருந்தது. ஒளியின் வேகத்தில் பயணித்தால் கூட, இந்தப் படத்தில் தெரியும் முழு பரப்பையும் கடக்க உங்களுக்குப் பல ஆண்டுகள் ஆகும்.

Presentational grey line

கரினா நெபுலா

Carina Nebula

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

இந்த காட்சியை காஸ்மிக் கிளிஃப்ஸ் (Cosmic Cliffs) என்று அழைக்கிறார்கள். இது கரினா எனப்படும் மற்றொரு தூசி நிறைந்த, நட்சத்திரத்தை உருவாக்கும் நெபுலாவிற்குள் ஒரு பிரம்மாண்டமான, வாயு குழியின் விளிம்பில் உள்ளது.

இந்த குழியானது தீவிரமான புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெப்பமான இளம் நட்சத்திரங்களின் காற்றினால் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் தோராயமாக 15 ஒளி ஆண்டுகள் தொலைவு உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 9.46 டிரில்லியன் கி.மீ (5.88 டிரில்லியன் மைல்கள்) ஆகும். ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. அப்படியானால் இந்தத் தொலைவு 9.46 லட்சம் கோடி கிலோ மீட்டர் அளவுள்ளது.

Presentational grey line

கார்ட் வீல் நட்சத்திரக் கூட்டம்

Cartwheel Galaxy

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/WEBB ERO PRODUCTION TEAM

வலதுபுறம் உள்ள இந்த பெரிய நட்சத்திரக் கூட்டம் 1940களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வானியலாளர் ஃபிரிட்ஸ் ஸ்விக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சிக்கலான 'கார்ட் வீல்' (வண்டிச் சக்கரம்) அமைப்பு, இந்த நட்சத்திரக் கூட்டம் மற்றொரு நட்சத்திரக் கூட்டத்தின் மீது நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விளைவாகும். இதன் விட்டம் சுமார் 1,45,000 ஒளி ஆண்டுகள்.

Presentational grey line
Presentational grey line

நெப்டியூன் கிரகம்

Neptune

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை மட்டும் உற்று நோக்கவில்லை. நமது சூரிய குடும்பத்தையும் ஆய்வு செய்கிறது. சூரியனிலிருந்து எட்டாவது கோளாக, வளையங்களுடன் காணப்படும் இது நெப்டியூன் கிரகமாகும். அதைச் சுற்றியுள்ள சிறிய வெள்ளைப் புள்ளிகள் அதன் துணைக்கோள்கள் ஆகும்.

மேலே பெரிய புள்ளி நட்சத்திரமாக தோன்றுவது நெப்டியூனின் மிகப்பெரிய துணைக் கோளான ட்ரைட்டன். (Triton) அதன் ஸ்பைக்குகள் போன்ற கூர்முனைகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்ணாடி அமைப்பு கட்டமைக்கப்பட்ட விதத்தின் சிறப்பம்சமாகும்.

Presentational grey line

ஓரையன் நெபுலா

Inner Orion Nebula

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI-PDRS4ALL ERS TEAM

வானத்தில் நமக்கு பரிச்சயமான பகுதிகளில் ஒன்று ஓரையன் நெபுலா. பூமியில் இருந்து சுமார் 1,350 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது ஒரு நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி அல்லது நெபுலா ஆகும். இங்கே, அடர்த்தியான வாயு மற்றும் தூசியின் சுவர் போன்ற அமைப்பான 'ஓரையன் பார்' என்று அழைக்கப்படும் வெப் புகைப்படங்கள் உள்ளன.

Presentational grey line

டிமார்ஃபோஸ்

Dimorphos

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/C.THOMAS/I.WONG

டிமார்ஃபோஸ் என்ற 160 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல்லின் பாதையை மாற்ற முடியுமா என்று விண்கலம் ஒன்றை அனுப்பி நாசா மேற்கொண்ட முயற்சி இந்த ஆண்டில் பெரிய அளவில் பேசப்பட்ட விண்வெளி முயற்சிகளில் ஒன்றாகும். பூமி மீது மோதும் வகையில் அச்சுறுத்தும் விண்கற்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் உத்தியின் பரிசோதனை இது. மழையாகப் பொழிந்த 1,000 டன் விண்கற்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

Presentational grey line

டபிள்யூ.ஆர். - 140

WR-140

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/JPL-CALTECH

இந்த ஆண்டின் மிகவும் சுவாரஸ்யமான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிப் படங்களில் இதுவும் ஒன்றாகும். "WR" என்பது Wolf-Rayet என்பதைக் குறிக்கிறது. இது ஆயுட்காலம் முடிவடையும் காலத்தில் உள்ள பெரிய நட்சத்திரத்தின் வகைப்பாடாகும்.

இவை பெரிய வாயுக் காற்றை விண்வெளிக்குள் செலுத்துகின்றனர். இந்த படத்தில் காணப்படாத இணை நட்சத்திரம் அந்த காற்றை அழுத்தித் தூசியை உருவாக்குகிறது. நீங்கள் பார்க்கும் தூசி நிறைந்த கோளங்கள் 10 டிரில்லியன் கிலோ மீட்டருக்கு மேல் வெளியே நீண்டுள்ளது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 70,000 மடங்கு அதிகம்.

Presentational grey line

ஃபேண்டம் நட்சத்திரக் கூட்டம்

Phantom Galaxy

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI

ஃபேண்டம் கேலக்ஸி என்று அழைக்கப்படும் M74, அதன் ஆடம்பரமான சுழல் கைகளுக்கு பெயர் பெற்றது. ஃபேண்டம் (phantom) எனும் ஆங்கிலச் சொல்லுக்கு 'பூதம்' என்று பொருள். இது பூமியிலிருந்து சுமார் 3.2 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மீனம் (Pisces) விண்மீன் மண்டலத்தில் உள்ளது.

M74 நட்சத்திரக் கூட்டம் கிட்டத்தட்ட பூமியை நோக்கி அமைந்துள்ளதால், அதன் உருவம் மற்றும் அமைப்பின் துல்லியமான தோற்றத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் படம் பிடிக்க முடிகிறது. வாயு மற்றும் தூசியின் அனைத்து நுண்ணிய இழைகளையும் துல்லியமாகப் படமாக்குவதில் தொலைநோக்கியின் டிடெக்டர்கள் சிறப்பாக உள்ளன.

https://www.bbc.com/tamil/science-64090222

  • Like 1
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

Untitled-2-4.jpg

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அந்தவகையில் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது.

விண்ணில் செலுத்தப்பட்ட இந்த தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த 4 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படங்களே பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சியாக உள்ளன.

அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நாசா தற்போது கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக மேலும் ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை காட்டுகிறது.

இதில் சுமார் 50 இளம் நட்சத்திரங்கள் உள்ளன. அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை உடையவை என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/263076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் பிறந்தநாள்: நாசா வெளியிட்ட பிரமிப்பூட்டும் புகைப்படம்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் பிறந்த நாள்

பட மூலாதாரம்,NASA, ESA, CSA, STSCI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
  • பதவி, பிபிசி சயின்ஸ் நியூஸ்
  • 37 நிமிடங்களுக்கு முன்னர்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்த சூப்பர் அப்சர்வேட்டரியை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது.

இதைக் கொண்டாடும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்தத் தொலைநோக்கி ஓராண்டில் படம்பிடித்த காட்சிகளில் மிகவும் பிரமிப்பூட்டும் ஓர் அற்புதமான படத்தை வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் தெரிவது ரோ ஓஃபியூகி (Rho Ophiuchi) கிளவுட் காம்ப்ளக்ஸ் என்ற நட்சத்திரத் தொகுதி ஆகும். இந்த நட்சத்திரத் தொகுதி 400 ஒளி ஆண்டுகள் தொலைவில், நமக்கு மிக அருகிலுள்ள, நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி.

தொழில்முறையாகவோ, ஆர்வத்தினாலோ அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களை உற்றுநோக்குபவர்கள் இந்த நட்சத்திரத் தொகுதியைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பால்வீதியின் ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.

தூசி நிறைந்த இந்த அடர்த்தியான பகுதியின் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்குக் காண்பித்துள்ளது. இந்த அற்புதமான படம், தொலைநோக்கியின் வியக்கத்தக்க தெளிவுத்திறனைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டதாகும்.

இந்த முழுப் படமும் சுமார் அரை ஒளியாண்டு அல்லது 4.7 ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காட்சியைக் காட்டுகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் பிறந்த நாள்

பட மூலாதாரம்,NASA, ESA, CSA, STSCI

படக்குறிப்பு,

விண்வெளியின் அற்புதங்களை தெளிவாகக் காட்சிப்படுத்தும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்த அற்புத காட்சியைப் படம்பிடித்துள்ளது

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, கண்கள் உடனடியாக மையப்பகுதியின் இடதுபுறத்தில் உள்ள வெள்ளை நெபுலாவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. அங்கு ஓர் இளம் (சில மில்லியன் ஆண்டுகள் பழைமையான) S1 எனப்படும் நட்சத்திரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒளிரச் செய்கிறது.

ஆனால் முழுப் படத்தையும் பார்த்தால், அந்த சிவப்பு நிறத்துக்குக் கீழே, பட்டை போன்ற அம்சம் இருப்பதைக் காணலாம். இது VLA1623 எனப்படும் புரோட்டோஸ்டாரில் இருந்து வெளியேறும் பொருள்.

மிக இளம் நட்சத்திரங்கள்(அவற்றின் வயது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கலாம்) அவை வளரும்போது ஹைட்ரஜன் வாயு மற்றும் தூசியைத் தங்களுக்குள் இழுத்துக்கொள்ளும். ஆனால் இந்த ஈர்க்கப்படும் வாயு மற்றும் தூசியின் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதால் அவை அங்கிருக்கும் ஒரு தூசுமண்டலத்தின் மீது மோதி ஒளிர்கின்றன.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் பிறந்த நாள்
 
படக்குறிப்பு,

விண்வெளி ஆராய்ச்சியில் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் செயல்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

VLA1623 என்பது அதுபோன்ற ஒரு புதிய நட்சத்திரமாகும். இது விண்வெளியின் வெகு ஆழத்தில் புதைக்கப்பட்டிருப்பதால் இந்த தொலைநோக்கியின் இன்ஃப்ராரெட் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் அதிலிருந்து வரும் வானொலி அலைகளை உணரக்கூடிய அளவில் தொலைநோக்கிகள் இருப்பதால் அது அங்கே இருக்கிறது என்பது நமக்கும் தெரியும்.

மேலும், இதே போன்ற இரண்டு அல்லது மூன்று நட்சத்திரங்கள் அதன் பார்வையில் இருக்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. VLA1623 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டால் அதே போன்ற காட்சிகள், படத்தின் மற்ற பகுதிகளில் இருப்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope -JWST) என்பது நாசா, ஐரோப்பாவின் எசா மற்றும் கனடாவின் சிஎஸ்ஏ ஆகிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு தொலைநோக்கியாகும்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம்,NASA, ESA, CSA, AND STSCI

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முன்பு எடுத்த கரினா நெபுலாவின் படம். இது வானத்தில் உள்ள மிகப் பெரிய, பிரகாசமான நெபுலாக்களில் ஒன்று.

இந்தத் தொலைநோக்கி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நிறுவப்பட்டது. ஆனால் இதைச் செயல்படுத்தும் உபகரணங்களைப் பொருத்துவதற்கு பொறியாளர்களுக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டது.

கடைசியில் அது 2022 ஜுலை 12ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. அன்று அது தனது முதல் காட்சிகளைப் பதிவு செய்தது.

சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் எந்த நட்சத்திரங்கள் ஜொலிக்கத் தொடங்கின என்பதைக் கண்டுபிடிப்பதே இந்தத் தொலைநோக்கியின் முக்கிய பணி. மேலும், வெகுகாலத்துக்கு முன்னர் பிறந்த நட்சத்திர மண்டலங்கள் உருவானது குறித்த விவரங்களை ஏற்கெனவே இத்தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

இதற்கு முன்பிருந்த அனைத்து தொலைநோக்கிகளை விடவும் அதிவேகமாக இந்தத் தொலைநோக்கி விண்வெளி பற்றிய போதுமான விவரங்களைப் பெற்றுவிட்டது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பட மூலாதாரம்,SPITZER SPACE TELESCOPE

படக்குறிப்பு,

ஸ்பிட்சர் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படம். இதைவிட பல மடங்கு தெளிவான படங்களை வெப் தொலைநோக்கி மூலம் பெற முடியும்

மேலும், நட்சத்திரங்கள் எப்படித் தோன்றின, அவற்றில் இருந்து கோள்கள் எப்படி உருவாகின என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிவதும் இந்தத் தொலைநோக்கியின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஒரே காரணத்திற்காகத் தான் ரோ ஓஃபியூகி இத்தொலைநோக்கியின் இவ்வளவு முக்கியமான இலக்காகக் கருதப்படுகிறது.

"இந்த பிரமிப்பூட்டும் படத்தில் மேலும் பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இளம் நட்சத்திரங்கள், தாங்கள் உருவான வாயுக்கள் மற்றும் தூசுப்படலங்களின் மீது துடிப்பான வண்ணங்களைத் தெளிப்பதால் இக்காட்சிகள் தெரிகின்றன," என நாசாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான மூத்த பேராசிரியர் மார்க் மெக்காப்ரியான் தெரிவித்துள்ளார் .

"பெரும்பாலான பிரகாசமான சிவப்பு உமிழ்வு, நமது கண்களுக்குத் தெரியாத நட்சத்திரமான VLA1623-இல் இருந்து அதிவேகமாகப் பாயும் மூலக்கூறு வாயுவிலிருந்து வருகிறது. இது மிகவும் இளம் நட்சத்திரமாக உள்ளது என கற்காலத்தில் வரையப்பட்ட குகை ஓவியங்களின் மூலம் தெரிய வருகிறது," என்றார் அவர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம்,NASA, ESA, CSA, STSCI

"ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆரம்பகால பிரபஞ்சத்தில் விண்மீன் கூட்டங்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றிய தகவல்களை மட்டும் நமக்கு அளிக்கும் என்பதைவிட நமது சொந்த பால்வீதியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவதிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

ஓர் அற்புதமான தொலைநோக்கி என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிய வைக்க, ரோ ஓஃபியூகி (Rho Ophiuchi) கிளவுட் காம்ப்ளக்ஸின் படம், நாசா முன்னர் பயன்படுத்திய ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்டது.

ஸ்பிட்சர் தொலைநோக்கியும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் போலவே அகச்சிவப்பு ஒளியை உணரும் திறன்கொண்டது. ஆனால் வெறும் 85 செ.மீ விட்டம் கொண்ட முதன்மைக் கண்ணாடியை வைத்துக்கொண்டு காட்சிப்படுத்திய படம்.

வெப்பின் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட கண்ணாடி மூலம் நாம் இப்போது பார்க்கும் காட்சிகளை ஒருபோதும் அந்தத் தொலை நோக்கி மூலம் பார்த்திருக்க முடியாது.

https://www.bbc.com/tamil/articles/cjrlv4y4409o

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் வெப் படம் பிடித்த சூப்பர்நோவா - 'முத்துச்சரத்தின் உள்ளே பிறை' உணர்த்துவது என்ன?

ஜேம்ஸ் வெப்

பட மூலாதாரம்,NASA/ESA/CSA/M.MATSUURA ET AL

படக்குறிப்பு,

ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால், SN1987A நட்சத்திரத்தின் மைய வளையத்தைக் கடக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 செப்டெம்பர் 2023, 08:05 GMT
    புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

இது வானில் தெரியும் ஒரு முத்து நெக்லஸ் போல் காட்சியளிக்கும் படமாக உள்ளது.

இந்தப் படம் புதிய சூப்பர் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஆன ஜேம்ஸ் வெப் (JWST) மூலம் எடுக்கப்பட்ட சூப்பர்நோவா நிகழ்வின் படம்.

SN1987A, என அறியப்படும் இந்த நட்சத்திரம் பூமியின் தெற்கு அரைக்கோள விண்பகுதியில் காணப்படும் மிகவும் பிரபலமான, அதே நேரம் நன்கு ஆய்வு செய்யப்பட்ட நட்சத்தரங்களில் ஒன்றாகும்.

1987 இல் இந்த நட்சத்திரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசமாக வெடித்து ஒளியை உமிழத் தொடங்கிய போது, கிட்டத்தட்ட 400 ஆண்டுகளில் பூமியிலிருந்து மிக அருகில் பார்க்கக்கூடிய, பிரகாசமான நட்சத்திரமாக இருந்தது. இப்போது 10 பில்லியன் டாலர் செலவில் (£8 பில்லியன்) உருவாக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்த நட்சத்திரம் குறித்து இதுவரை மனிதகுலம் கண்டிராத காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

SN1987A என்ற நட்சத்திரம் நம்மிடமிருந்து சுமார் 1,70,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பெரிய மாகெல்லானிக் கிளவுட் பகுதியில் உள்ளது. இது நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலத்துக்கு மிக அருகில் உள்ள குள்ளமான விண்மீன் ஆகும்.

பெரிய நட்சத்திரங்கள் தங்கள் ஆயுள் முடியும் போது எப்படித் தோற்றமளிக்கும், அப்போது அவற்றில் என்ன நடக்கும் என்பது பற்றிய நுணுக்கமான பார்வையை இந்த விண்மீன் வழங்குவதால், வானியல் விஞ்ஞானிகள் இந்த நட்சத்திரம் குறித்து மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர்.

ஜேம்ஸ் வெப்
 
படக்குறிப்பு,

வெடிப்பின் மூலம் அதீத ஒளியை வெளிப்படுத்தும் ஒரு நட்சத்திரம் குறித்த நுண்ணிய காட்சிகளையும் படம்பிடிக்கும் வகையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் முடிவடையும் போது அது அதிவேக வீச்சுடன் வெளியேற்றும் வாயுக்கள் மற்றும் துகள்கள் கடைசி நேர சரிவு மற்றும் வெடிப்பின் காரணமாக அதிக ஒளியை வெளியேற்றும். அந்த நட்சத்திரத்திலிருந்து சிதறும் வாயு மற்றும் தூசி ஆகியவை பரவும் போது, இந்த ஒளி பிரகாசமான வளையங்களாகத் தோற்றமளிக்கும்.

இந்த வளையங்களில் ஒன்று, அந்த நட்சத்திரத்தின் ஆயுள் முழுமையாக முடிவடைவதற்கு சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்றும், அப்போது வெளியேற்றப்பட்ட பொருட்களை உள்ளடக்கிய இந்தக் காட்சி, முத்துகளால் உருவான சரம் போல் காட்சியளிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த முத்துச் சரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரவலான ஒளியை தெளிவாகப் படம்பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வழங்குகிறது. ஹப்பிள் ஸ்பேஸ் போன்ற தொலைநோக்கிகள் இதற்கு முன் அளித்த படங்களில் இல்லாத, முத்துகள் போன்ற சில காட்சிகளை இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி காட்சிப்படுத்தியுள்ளது. (கீழே உள்ள படத்தில் அந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது).

இது குறித்துப் பேசிய இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரோஜர் வெசன், "முன்பு ஒளியேற்றப்பட்ட வளையத்திற்கு வெளியே புதிய தோற்றங்கள் வெளிப்படுவதை எங்களால் பார்க்க முடிகிறது," என்று விளக்கினார்.

"கூடுதலாக, இந்த வளையத்தில் ஹைட்ரஜனில் மூலக்கூறிலிருந்து இருந்து ஒளி உமிழப்படுவதை நாங்கள் காண்கிறோம். ஆனால் அது கண்டிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி ( JWST) மட்டுமே அதன் உயர்ந்த உணர்திறன் காரணமாக இக்காட்சியை தீர்மானமாக வெளிப்படுத்தியிருக்கிறது," என்று அவர் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.

ஜேம்ஸ் வெப்
 
படக்குறிப்பு,

முத்துச்சரம் போன்ற தோற்றத்தின் மையப்பகுதியில் சாவி துவாரம் போன்ற ஏதோ ஒரு பகுதியை ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ளது.

மற்றொரு புதிய அம்சம் என்னவென்றால், இந்த முத்துச்சரத்தின் உள்ளே இருக்கும் பிறை போன்ற தோற்றம் அல்லது வளைவுகள் போல் உமிழப்பட்ட ஒளியின் அடர்த்தியான உள் பகுதிக்கு சற்று வெளியே சாவி போட்டுத் திறப்பதற்குப் பயன்படும் ஒரு துளை போல ஒன்று தென்படுகிறது.

"நாங்கள் இன்னும் அந்தப் பிறையைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை," என்று டாக்டர் மிகாகோ மட்சுரா அண்மையில் நடைபெற்ற ஒரு பகுப்பாய்வுக் கூட்டத்திற்கு தலைமையேற்றுப் பேசியபோது கூறினார்.

"இந்தப் பொருள், ஒருவித தலைகீழ் அதிர்ச்சியின் காரணமாக ஒளிரப்படலாம் - மற்றொரு அதிர்ச்சி மீண்டும் அந்த சாவி துவாரத்தை நோக்கி வருகிறது."

அந்த நட்சத்திரத்தின் எச்சம் மட்டும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் பார்வைக்குத் தப்பியுள்ளது. அது எங்கோ அடர்ந்த தூசிக்கூட்டத்தில் புதைந்து கிடக்கிறது. அதுதான் சாவித் துவாரம் போல் காட்சியளிக்கிறது.

மீதமிருப்பது முற்றிலும் நியூட்ரான் துகள்களால் ஆன பொருளாக இருக்கவேண்டும். அது சில பத்து கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட ஒரு பொருளாக இருக்க வேண்டும்.

கடந்த 36 ஆண்டுகளாக SN1987A நட்சத்திரத்தைக் காணக்கூடிய ஒவ்வொரு பெரிய தொலைநோக்கியும் அதன் பரிணாம வடிவம் மற்றும் அம்சங்களை ஆய்வு செய்துள்ளன.

இந்த ஆய்வுகளின் மையமாக எது இருக்கிறதென்றால், இது போல் வெடித்துச் சிதறும் நட்சத்திரங்கள் ஏன் முதலில் உருவாகின என்பதுதான்.

ஜேம்ஸ் வெப்

பட மூலாதாரம்,NASA/ESA/R.KIRSHNER ET AL

படக்குறிப்பு,

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முன்னோடியான ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, எரிந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் பரிணாமத்தை கண்காணித்து ஏராளமான காட்சிகளைப் பதிவு செய்தது.

வானியல் ஆராய்ச்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், எப்போதோ உருவான ஒரு இளம் நட்சத்திரம் தான் அதன் ஆயுட்காலம் முடிந்து இப்படி அதீத ஒளியை வெளிப்படுத்துவதாகக் கருதுகின்றனர். இந்த நட்சத்திரம் ஒருவேளை நமது சூரியனை விட 20 முதல் 30 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், அது நிச்சயமாக வெடிப்பை உருவாக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தாலும், அதற்கான காலகட்டம் அப்போது உருவாகவில்லை என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

"இந்த நட்சத்திரத்தின் மர்மங்களில் ஒன்று, அது ஒரு மிகப்பெரிய நீல நிற நட்சத்திரமாக இருந்தபோது வெடித்தது. ஆனால், அந்த நேரத்தில் சிவப்பு நிறத்தில் மிகப்பெரிய தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள் மட்டுமே வெடிக்கும் என்று அனைத்து அறிவியல் கோட்பாடுகளும் கூறின. எனவே இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் நீல நிறத்தில் இருந்த போதே வெடித்தது என்ற மர்மத்தைக் கண்டுபிடிப்பதும் மிகப்பெரிய தேடலில் ஒன்றாகும்," என்று டாக்டர் வெசன் கூறினார்.

"வெப் தொலைநோக்கி முதலில் எதிர்பார்த்ததை விட மிக நீண்ட காலம், அதாவது 20 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் SN1987A நட்சத்திரம் என்ன மாற்றங்களை அடையப் போகிறது என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சக்திவாய்ந்த உதவியாக இந்த வெப் தொலைநோக்கி இருக்கும்."

இந்தப் பக்கத்தின் மேலே உள்ள படம் ஜேம்ஸ் வெப்பின் பெரிய கேமரா, அதன் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா (அல்லது NIRCam) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட படமாகும். இந்தத் தொலைநோக்கியின் 6.5 மீ அகலமுள்ள முதன்மைக் கண்ணாடி மற்றும் அது தொடர்புடைய ஒளியியல் ஆகியவற்றுடன் இணைந்து வியக்க வைக்கும் படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ரகசிய ஆயுதம் அதன் ஸ்பெக்ட்ரோமீட்டர்களின் தொகுப்பாகும். இத்தொகுப்பு, வான்பொருட்களிலிருந்து வரும் ஒளியை அவற்றின் கூறுகளின் அடிப்படையில் பல்வேறு நிறங்களாகப் பிரிக்கும் கருவிகள் ஆகும். இது, நாம் ஆய்வு செய்துவரும் வான்பொருட்களின் வேதியியல், வெப்பநிலை, அடர்த்தி மற்றும் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

இதில் NIRSpec எனப்படும் ஒரு கருவியைப் பயன்படுத்தி SN1987A என்ற நட்சத்திரத்தின் தெளிவான மேலும் புதிய படங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது இந்த குறிப்பிடத்தக்க நட்சத்திரத்தைப் பற்றிய மேலும், அற்புதமான ஆச்சரியம் மிக்க தகவல்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவின் விண்வெளி நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டுத் திட்டமாகும். இது டிசம்பர் 2021 இல் நிறுவப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக இது கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c4n051zmrjko

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று நமது சூரியன் பிறந்தபோது அதைப் படம் எடுக்கலாம் என்று கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்?

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி (JWST) மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த அதிசயமான, புகழ்பெற்ற புதிய படத்திலிருந்து உங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைக்கும்.

இப்படத்தின் மையத்தில், 50,000 ஆண்டுகள் பழமையான HH212 என்று அழைக்கப்படும் இந்த தொடக்கநிலை குழந்தை நட்சத்திரம் உள்ளது.

நம்முடைய சூரியனும் இதே வயதாக இருந்தபோது இந்தக் காட்சியில் தோன்றுவதைப் போலவே இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.