Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஆளில்லா ட்ரோன் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஒரு காலத்தில் வல்லரசுகளின் கைகளில் இருந்தன. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிறிய நாடுகளில் அதன் பயன்பாடு ஏற்கெனவே போரின் தன்மையை மாற்றுகிறது என எழுதுகிறார், ஜொனாதன் மார்கஸ்.

பெரும்பாலும் ராணுவ வரலாற்றில் ஒரு ஆயுத அமைப்பு ஒரு முழு யுத்த யுகத்தின் அடையாளமாக மாறும்.

மத்திய காலத்தில் அஜின்கோர்ட்டில் ஆங்கிலேய வில்லாளர்கள் பயன்படுத்திய நீளமான வில் அல்லது இரண்டாம் உலகப் போரின் தரைப் போரில் பயன்படுத்தப்பட்ட திறன்மிக்க கவசப் படைக்கலன்களை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

MQ-1 பிரிடேட்டர் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற இடங்களில் அமெரிக்கா நடத்திய கிளர்ச்சி-எதிர்ப்புப் போர் காலகட்டத்தின் ஆயுதச் சின்னமாக மாறின.

இது சோவியத் - அமெரிக்கப் பனிப்போர் காலம் முடிவடைந்த பின்னர், அமெரிக்கா தனித்து நின்று ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய வல்லரசாக இருந்த போது, அது 'ஒற்றை வல்லரசு' என அழைக்கப்பட்டது போல இருந்தது.

பிரிடேட்டர் வாகனங்கள், முதலில் வான்வழி உளவு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஹெல்ஃபயர் ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்தியபோதுதான் ட்ரோன்கள் உயர்ந்த நிலையை அடைந்தன.

அதற்கு அடுத்து வந்த ரீப்பர் ட்ரோன்கள், குறிப்பாக வேட்டையாடும் கொலை ஆயுதமாக வடிவமைக்கப்பட்டன. இவை அதன் முன்னோடி ஆயுதங்களை விட அதிக வரம்பைக் கொண்டவை, அதிக எடையுள்ள வெடிமருந்துகளை அதில் எடுத்துச் செல்லக்கூடியவை. அதன் பெயரே அதன் நோக்கத்தை வெளிப்படையாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

வாஷிங்டனின் எதிரிகளை அவர்கள் எதிர்பார்க்கும் போதெல்லாம், எங்கு வேண்டுமானாலும் குறிவைக்கும் திறன் கொண்ட துல்லியமான கொலை ஆயுதங்களாக இவை இருக்க முடியும். ஜனவரி 2020 இல் பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொல்ல ரீப்பர் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

காசிம் சுலைமானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு குறுகிய காலத்திற்கு, பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் (அதன் சொந்த குறிப்பிடத்தக்க ட்ரோன் தொழில்துறையுடன்) இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. இதனை, ஆளில்லா ட்ரோன் விமானங்களின் ஆரம்ப காலகட்டம் எனலாம்.

ஆனால், நிலைமை இப்போது ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாறிவிட்டது.

ட்ரோன்களை அடிப்படையாக கொண்டுள்ள போர்முறையின் புதிய சகாப்தம் ஏற்கனவே இன்னும் பலரை உள்ளடக்கியதாக வந்துவிட்டது. யுஏவிக்களின் பயன்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு அல்லது கிளர்ச்சி-எதிர்ப்புப் போரில் இருந்து முழு அளவிலான வழக்கமான போராக மாறியுள்ளது. உண்மையில், ட்ரோன் அடிப்படையிலான போர்களின் புதிய மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் மிகவும் அதி நவீனமாகி, செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • முன் முனையில் கேமரா, கீழே ஒரு யூனிட்டில் கேமரா மற்றும் சென்சார்கள்
  • மேம்பட்ட நிலைப்புத்தன்மைக்கு V-வடிவ பின்பகுதி
  • ஆயுதங்கள், ஜிபிஎஸ் அல்லது லேசர் வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகள்
  • நீளம்: 10.97மீட்டர் (36 அடி)
  • உயரம்: 3.66 மீட்டர் (12 அடி)
  • இறக்கைகள்: 21.12 மீட்டர் (69 அடி 3½ இன்ச்)
  • அதிகபட்ச வேகம்: 463 கி.மீ/மணிநேரம் (287 மீ/மணிநேரம்)

டி.பி.எல்.எப். எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், எத்தியோப்பிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவும் சமீபத்திய மோதல்களில் ட்ரோன் தாக்குதல்கள் முக்கிய பங்கு வகித்தன.

 

MQ-9 ரீப்பர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

MQ-9 ரீப்பர்

துருக்கி மற்றும் ஈரானிடம் இருந்து எத்தியோப்பிய அரசு ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சீன விங் லூங் II யுஏவிக்களுக்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் ஆவேசமான உள்நாட்டுப் போரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது கூட்டாளியான ஜெனரல் கலீஃபா ஹப்தாருக்கு சீனாவால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களை வழங்கியது.

பல சந்தர்ப்பங்களில் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட லிபியாவின் திரிபோலி அரசாங்கத்தின் உயிர்பிழைத்தலுக்கு பங்களித்தது மற்றும் கடந்த ஆண்டு நாகோர்னோ-கராபாக் மோதலில், துருக்கி சப்ளை செய்த ட்ரோன்கள் அஜர்பைஜானின் படைகள் ஆர்மீனியாவில் இருந்து சர்ச்சைக்குரிய அந்நிய எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு ஒரு சக்திவாய்ந்த காரணியாக இருந்தது.

ட்ரோன் தாக்குதல்கள் பெரும்பாலும் சிக்கலான சட்ட மற்றும் தார்மீக சங்கடங்களை எழுப்புகின்றன. ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவற்றின் பயன்பாடு ஏதேனும் ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கை மாயை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது முன்னணி தொழில்நுட்பத்தை அதன் நெருங்கிய நட்பு நாடுகளைத் தவிர வேறு எவருக்கும் ஏற்றுமதி செய்ய தயக்கம் காட்டினாலும், மற்றவர்கள் அத்தகைய வேறுபாட்டைக் காட்டவில்லை.

உண்மையில் யுஏவிக்களின் பரவல் இடைவிடாமல் தெரிகிறது.

100-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அரசு சாரா குழுக்களிடம் ட்ரோன்கள் உள்ளன. நியூ அமெரிக்கன் செக்யூரிட்டிக்கான மையத்தின் ஆய்வு இயக்குனர் பால் ஷார்ரே கூறுவது போல், இதன் பெருக்கம் தொடரும் என்று தெரிகிறது.

"சீனா, உலகளவில் ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களின் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. ஆனால் ட்ரோன்கள் முன்னணி ராணுவ சக்திகளால் மட்டுமே பயன்படுத்தத்தக்கவை அல்ல.

ஈரான் மற்றும் துருக்கி போன்ற இடைநிலை சக்திகள் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன மற்றும் வெளிநாடுகளில் அவற்றை விற்பனை செய்கின்றன."

"வணிக ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பரவலாகக் கிடைக்கிறது, சில நூறு டாலர்களுக்கு தாக்கவல்ல ட்ரோனை எவரும் உருவாக்க முடியும், மேலும் சில பயங்கரவாத குழுக்களிடமும் அவை உள்ளன" என அவர் வாதிடுகிறார்.

யுஏவியின் தீர்க்கமான தாக்கம் ஆச்சரியமல்ல என, அவர் மேலும் கூறுகிறார். ஒரு நாட்டுக்கு அவை மலிவான விலையில் கிடைக்கின்றன.

"போர் விமானங்களை வாங்க முடியாத அரசுகள் மற்றும் அரசு சாரா குழுக்கள் ட்ரோன்களை வாங்கலாம், மேலும் ட்ரோன்கள் போர் விமானங்களைப் போல திறன் கொண்டவை அல்ல என்றாலும், அவை அரசு சாரா குழுக்களுக்கு கொஞ்சம் விமான சக்தியை வழங்குகின்றன. உயர்-வரையறை கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதலை செயல்படுத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இணைந்து, ட்ரோன்கள் தரைப்படைகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உள்ளன." என்றார்.

ஆனால், பிராந்திய மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களில் யுஏவிக்களின் பயன்பாடு எதிர்காலப் போரில் ட்ரோனின் மதிப்பிற்கு ஒரு சுட்டியை மட்டுமே வழங்குகிறது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய நிலையில், ரஷ்யா தனது பரந்த போரில் ட்ரோன்களை இணைப்பதற்கான சோதனைக் களமாக சிரியாவில் அதன் ஈடுபாட்டைப் பயன்படுத்தியது.

"சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ட்ரோன் கப்பற்படை முக்கிய உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) பணிகளை நடத்தியது, அடையாளம் காணப்பட்ட இலக்குகளை ரஷ்ய பீரங்கிகள், பல-ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் விமானங்களுடன் நிகழ்நேரத்தில் தொடர்ந்து ட்ரோன் கண்காணிப்பு மூலம் இணைக்கிறது," என்கிறார், கடற்படை பகுப்பாய்வு மையத்தில் ரஷ்யா ஆய்வுகள் திட்டத்தின் உறுப்பினர் சாமுவேல் பெண்டெட்.

 

ட்ரோன் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"படைத்தளபதிகளிடம் முன்பு இல்லாத வகையில், படைகளுக்கு யுஏவி செயல்படுத்தப்பட்ட போர்க்களத்தின் 24 மணிநேர சூழலை வழங்குவதன் மூலம், இந்த கருத்து இப்போது ரஷ்ய ராணுவம் இன்றும் எதிர்காலத்திலும் எவ்வாறு சண்டையிடுகிறது என்பதை மறுவரையறை செய்கிறது" என்றார்.

ரஷ்ய மறுப்புகளுக்கு மத்தியிலும், யுக்ரேனில் நடைபெறும் சண்டை, வழக்கமான ரஷ்ய பணியாளர்களை ஈடுபடுத்தியது, யுஏவிக்களை அதன் திட்டமிட்ட பயன்பாடு பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்கியுள்ளது.

கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பல வகையான ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

பெண்டெட் கூறுகையில், உளவு தகவல்கள் சேகரிப்பு மற்றும் உளவு பார்ப்பது அவற்றின் முக்கிய பணியாக உள்ளது, "ஆனால் மின்னணு போரில் அவற்றுக்கு மற்றொரு முக்கிய பங்கு உள்ளது, அந்த நோக்கத்திற்காக சிறப்பு வகை ரஷ்ய ட்ரோன்கள் பொருத்தப்பட்டுள்ளன" என்றார்.

மின்னணு போர்முறை என்பது எதிரிப் படைகளை அவர்கள் அனுப்பும் சிக்னல்கள் மூலம் கண்டுபிடித்து, பின்னர் அவர்களின் தகவல்தொடர்புகளை தடுப்பதன் மூலம் தனிமைப்படுத்தும் கலை.

ரஷ்யா அதன் அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமெரிக்காவை விட ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக பின்தங்கியிருக்கலாம், ஆனால், ரஷ்ய ஆயுதப்படைகள் தங்கள் படைப்பிரிவுகளில் ட்ரோன்களை ஒருங்கிணைக்கும் வகையில் முன்னோக்கி இருக்கலாம்.

ஆளில்லா ராணுவ விமானங்கள் முழு ரஷ்ய ராணுவப் படை கட்டமைப்பிலும் உள்ளன என, பெண்டெட் கூறுகிறார்.

"யுக்ரேனிய கவசப் பிரிவுகள் விரைவாக அடையாளம் காணப்பட்ட நிகழ்வுகளுடன் இந்த அமைப்பின் பயன்பாடு போரில் நிரூபிக்கப்பட்டுள்ளது; இதனால், அவர்களின் தகவல்தொடர்புகள் தடைபட்டன மற்றும் அவர்களுக்கு எதிராக பேரழிவுகரமான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன." என்றார்.

உண்மையில் யுக்ரேனும் ஆயுதமேந்திய துருக்கிய ட்ரோன்களை பயன்படுத்தலாம். அந்நாடு, டான்பாஸ் சண்டையில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியது.

அதிக தீவிரம் கொண்ட போர்க்களங்களுக்கு வெளியே, கிளர்ச்சியாளர்கள் மற்றும் போராளிப் பிரிவுகளால் ட்ரோன்கள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் ட்ரோன் அச்சுறுத்தல் ஒப்பீட்டளவில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டால், அதை எதிர்கொள்வது ஏன் மிகவும் கடினம்?

"இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ட்ரோன்கள், பாரம்பரிய ராணுவ விமானங்களை விட சிறியவை மற்றும் பல்வேறு வகையான வான் பாதுகாப்புகள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன" என்று ஷார்ரே கூறுகிறார். "அவை மெதுவாக பறக்கின்றன மற்றும் தரையில் பறக்கின்றன, அதாவது, பல வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை சுடுவதற்கு உகந்ததாக இல்லை."

பல நாடுகள், ட்ரோன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உருவாக்க செயலாற்றி வருகின்றன, மேலும் காலப்போக்கில் போர்க்களங்களுக்கு மிகவும் பயனுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் பரவுவதைக் காண்போம் என்று அவர் கூறுகிறார். குறைந்த விலை ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க முடியும் என்பதால், அதிகளவிலான ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வது ஒரு சவால்.

"ட்ரோன் திரள்கள்" என்று அழைக்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி நிறைய பேசப்படுகிறது.

13 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய விமான தளத்திற்கு எதிராக 2018 இல் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் நடத்தியது போன்ற பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இருப்பினும், ட்ரோன்களின் பிரளயம் உண்மையான திரள் அல்ல என்று பால் ஷார்ரே வலியுறுத்துகிறார்.

"திரள் என்பது ஒரு தாக்குதலில் ட்ரோன்களின் எண்ணிக்கையால் வரையறுக்கப்படவில்லை, ஆனால் எந்த மனித ஈடுபாடும் இல்லாமல் ஒன்றாக இணைந்து செயல்படும் திறனால் வரையறுக்கப்படுகிறது" என அவர் வாதிடுகிறார்.

மனித பாதுகாவலர்களை திணற அடிக்கும் அளவுக்கு ஒரே நேரத்தில், பல திசை தாக்குதல்களுக்கு ட்ரோன் திரள்கள் பயன்படுத்தப்படலாம்.

காலப்போக்கில், இது போரை மாற்றுவதில் வியத்தகு விளைவை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கிறார்.

ஜொனாதன் மார்கஸ், பிபிசி முன்னாள் பாதுகாப்பு செய்தியாளர். இவர் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தில் கெளரவப் பேராசிரியராக உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-60274847

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

மனித பாதுகாவலர்களை திணற அடிக்கும் அளவுக்கு ஒரே நேரத்தில், பல திசை தாக்குதல்களுக்கு ட்ரோன் திரள்கள் பயன்படுத்தப்படலாம்.

இதை எழுதியவர் angels fallen திரைப்படத்தை பார்த்து தொலைத்து விட்டார் .

 

4 hours ago, ஏராளன் said:

இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ட்ரோன்கள், பாரம்பரிய ராணுவ விமானங்களை விட சிறியவை மற்றும் பல்வேறு வகையான வான் பாதுகாப்புகள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன" என்று ஷார்ரே கூறுகிறார். "அவை மெதுவாக பறக்கின்றன மற்றும் தரையில் பறக்கின்றன, அதாவது, பல வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை சுடுவதற்கு உகந்ததாக இல்லை."

கட்டுரையாளருக்கு ஜாமர் என்ற வஸ்து இருப்பதை கேள்விப்பட இல்லை  போல் உள்ளது .

வர வர தமிழ் பிபிசி கற்பனையில் மிதக்குது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.