Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு 

 — வேதநாயகம் தபேந்திரன் — 

சப்பாத்து அணிதல் கம்பீரத்தின் அடையாளமா? நாகரிகத்தின் ஒரு குறியீடா?  காலநிலையிலிருந்து பாதுகாப்பதற்கான அணிகலனா? அல்லது காலனித்துவத்தின் ஒரு நீட்சியா? 

எதுவென்று சொல்லத் தெரியாத ஒரு நிலையில் தான் இன்று இருக்கிறோம். 

வெள்ளைக்காரன் காலுக்குள்ளால் குளிர் உடம்புக்குப் போகக் கூடாது என்பதற்காகச் சப்பாத்தை அணிந்தான். கழுத்துக்குள்ளால் குளிர் போகக் கூடாது என்பதற்காக ரை கட்டினான். உடலைக் குளிர் அணுகக் கூடாது என்பதற்காகக் கோட் சூட் போட்டான். ஆனால் நாமோ என்ன ஏது எனத் தெரியாது அதனை நாகரிகமாக்கிக் கொண்டோம். 

பனிகொட்டும் தேசத்தில் வாழும் வெள்ளையர்கள் காலநிலைப் பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகச் சப்பாத்தை உருவாக்கினார்கள். குளிர்காலநிலைக்கு அணிவதை வின்ரர் சூ (Winter shoe) என்றார்கள். கோடைக் காலத்தில் அணிவதை சம்மர் சூ (Summer shoe) என்றார்கள்.   

தாம் உலகெங்கும் காலணிகள் வைத்திருந்த போது இந்தச் சப்பாத்தையும் கொண்டு சென்று பழக்கி விட்டார்கள். 

வெள்ளையின எசமானர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் உயர்வானவை. ஆகவே அவர்கள் போல நாமும் நடை உடை பாவனைகளை வைத்திருந்தால் எம்மையும் உயர்வானவர்களாக மதிப்பார்கள் என்ற எண்ணம் சுதேசிகளிடம் விதைக்கப்பட்டது. 

அந்த விதைகள் எம்மிலும் ஆழப் பதிந்து விட்டது. 

2004 டிசெம்பர் 26இல் சுனாமிப் பேரலைகள் எமது இலங்கை உட்படப் பல நாடுகளைத் தாக்கிப் பெரும் உயிர் உடமைச் சேதங்களை ஏற்படுத்தின. 

அதன் பின்பாகப் பங்குனி மாத நாளொன்றில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் வில்லியம் புஸ், பில் கிளிங்ரன் ஆகியோர் இலங்கையின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட வந்தனர். 

ஒரு ரீ சேட்டுடன் கோடைக்கால நிலைக்கேற்ற சப்பாத்தை அணிந்து வலு சிம்பிளாக  வந்தார்கள். 

ஆனால் அவர்களை வரவேற்று இங்குள்ள இடங்களைக் காண்பித்த எமது அரச அதிகாரிகளோ கோட் சூட்டுடன் கடமையாற்றினார்கள். 

அவர்கள் காலநிலையை உணர்ந்து ஆடைகள் அணிந்தார்கள். ஆனால் எம்மவரோ நாகரிகமென காலநிலைக்கு முரண்பாடாக உடை அணிந்தார்கள். 

எமது காலத்தில் பிரபலமான தனியார் கல்லூரிகள் தான் சப்பாத்து அணிவதைக் கட்டாயப்படுதினார்கள். ஏனைய பாடசாலைகள் மாணவர்களின் நிலைமைக்கேற்ப சப்பாத்து அணிவது தொடர்பில் ஒரு நெகிழ்ச்சித் தன்மையைக் கடைப்பிடித்தார்கள். 

காலுக்குப் போடச் செருப்பு இல்லாமலேயே பாடசாலை சென்ற மாணவர்கள் அதிகம். உயர்தர வகுப்பில் சோசல் எனப்படும் ஒன்றுகூடல் வைக்கும் போது போடச் சப்பாத்து இல்லாமல் இரவல் சப்பாத்து வாங்கிப் போட்டவர்களும் உண்டு. 

கிராமத்துப் பாடசாலைகளில் இருந்து நகரப்புறப் பாடசாலைகளுக்குப் போட்டிகளுக்குப் போகும் போது கடன உடனப்பட்டு சப்பாத்தைப் புதிதாக வாங்கிய பெற்றோரும் உண்டு. இரவல் வாங்கிச் சப்பாத்துப் போட்டுப் பங்குபற்றியோரும் உண்டு. 

சப்பாத்துப் போட்டு ஒரு மாணவன் அல்லது மாணவி பாடசாலை சென்றால் அதை வியப்பாகப் பார்த்தார்கள். அதிலும் சப்பாத்துப் போட்டு உத்தியோகம் பார்த்தவர்களை வியப்பாகவே பார்த்தார்கள். 

பாடசாலைகளில் ஆண், பெண் மாணவர்கள் சப்பாத்து அணிந்து செல்வார்கள். சப்பாத்துகளில் பிரதானமாக இருவகை உண்டு. 

நூல் கட்டுவதைச் சூ என்பார்கள். நூல் கட்டாமல் போடுவதைப் பம்ஸ் என்பார்கள். 

அது போலத் தடித்த துணியினால் செய்த சப்பாத்துகளும் உண்டு. செயற்கைத் தோலால் செய்த சப்பாத்துகளும் உண்டு. எமது காலத்தில் பெண் மாணவிகள் தடித்த துணியிலான சப்பாத்துகளையே பெரிதும் அணிந்தார்கள். ஆண் மாணவர்கள் தடித்த துணி, தோலினாலான சப்பாத்துகளை அணிந்தார்கள். 

ஆண்கள் பெரியவர்களாகி அரச தனியார் துறைகளுக்கு உத்தியோகம் பார்க்கப் போகும் போது சப்பாத்து அணிந்தார்கள். 

ஆனால் பெண்கள் சப்பாத்து அணிவதைக் கைவிட்டு விடுவார்கள். 

சப்பாத்து வழக்கமாக அணிவோர் கம்பீரமாக நடந்து கொள்வார்கள். புதிதாக அணிவோர் சாதாரண நடை தளர்ந்து வளைந்து நெளிந்து ஒரு கூச்சநடை நடப்பார்கள். 

பளிச்சென்று இருக்கும் சப்பாத்து மாணவர் ஒருவரது துப்பரவைக் காட்டும். தை தையென்று தைத்து நிறைய நூல்கள் தெரியக் கிழிந்த சப்பாத்து ஒருவரது வறுமையைக் காட்டும். 

சப்பாத்து, செருப்பு விற்பதில் எமது நாட்டில் பாட்டா எனும் சர்வதேசக் கம்பனி பிரபலமானது. அவர்கள் சப்பாத்து செருப்பு மீது விலையை அச்சிடும் போது ரூபா 29.90 சதமென விலையைக் குறித்தார்கள்.  

இதில் இரண்டு யுக்தி உள்ளது. ஒன்று விலை முப்பது ரூபா அல்ல. அதை விடக் குறைவானது எனக் குறைத்துக் காட்டுவது. ஆனால் வெறும் பத்துச் சதமே குறைவு என்ற உணர்வு இல்லாமல் வாடிக்கையாளன் ஒருவன் முப்பது ரூபாவைக் கொடுப்பான். 

அடுத்தது அந்த நாளில் பத்துச் சதம் கொடுத்து பஸ் பயணம் செய்து வீட்டிற்குப் போகும் நிலை இருந்தது. 

ஒரு காலத்தில் ஆட்டுத் தோல்களை வாங்குவதற்கென வியாபாரிகள் ஊர் ஊராக வந்தார்கள். ஆட்டுத் தோலை வாங்கிச் சப்பாத்து செய்யும் கம்பனிகளிடம் விற்றார்கள். இது போன்ற இயற்கைத் தோலினால் ஆகிய சப்பாத்துகள் எமது காலுக்கு இதமானது. 

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வதிரிக் கிராமத்தவர்கள் சப்பாத்துச் செருப்புத் தயாரிப்பதில் பரம்பரைத் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

இவர்களது தொழிற்சாலைகளும் கடைகளும் ஒரு காலத்தில் நாடெங்கும் இருந்தன. 

சிறுவயது முதலே சப்பாத்து அணிபவர்களது காலின் முன்பாதம் ஒடுங்கி இருக்கும். சப்பாத்து அணியாமல் இருப்போரது முன்பாதம் அகன்று இருக்கும். 

எமது பிரதேசத்தில் 1980களின் முற்பகுதியில் போராட்ட இயக்கங்கள் உருவாகிய காலத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் சப்பாத்து அணிந்து சென்ற போது அவர்களை வியப்பாகப் பார்த்தார்கள். 

இங்கு சப்பாத்தை ஒரு காலமும் அணியாமல் புலம்பெயர் தேசங்களுக்குச் சென்று சப்பாத்து அணிதலை வாழ்வின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளவர்கள் ஏராளம். 

விமானப் பயணம் செய்பவர்கள் சப்பாத்துப் போட்டுக் கோட் சூட் அணிதல் கட்டாயமென்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அதாவது பிரமுகர்கள் மட்டுமே விமானப் பயணம் செய்யலாம். சாமானியர்களுக்கு விமானப் பயணம் மறுக்கப்பட்டிருந்தது. 

எங்கட வடக்கில் சப்பாத்து அணிந்து அரச அலுவலகங்களுக்குப் பணியாற்றச் செல்பவர்களது எண்ணிக்கை குறைவானது. அப்படிச் செல்வதற்கு வெட்கப்படுபவர்கள் அதிகம். 

ஆனால் தென் பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சிற்றூழியர் முதல் பெரிய அதிகாரிகள் வரையில் சப்பாத்து அணிந்து ரிப்ரொப்பாகத் தான் போவார்கள். அலுவலக உத்தியோகத்தர் குழாமைப் பார்க்கும் போது பளிச்சென்று இருக்கும். 

சப்பாத்து அணிந்து கடமைக்குச் செல்லும் போது ஒரு கம்பீரம் இருப்பதைப் போன்ற உணர்வு வருவதையும், சப்பாத்து அணியாமல் செல்லும் நாள்களில் கம்பீரம் குறைந்தது போன்ற உணர்வும் வருவதாகச் சொல்லும் உத்தியோகக்காரரைக் கண்டுள்ளேன். 

சப்பாத்துத் தொடர்பான நினைவுகள் இன்னுமின்னும் நீளமானவை. வாசகர்கர்களே உங்களுக்குத் தெரிந்தவை இருந்தால் கூறுங்களேன். 

(ஆசிரியர் குறிப்பு: சப்பாத்து குறித்து எனக்கும், எமது அரங்கத்துக்கும் ஒரு நினைவு உண்டு. சூறாவளி மட்டக்களப்பை தாக்கி சிறிதுகாலத்தில் எமது மட்/புனித மிக்கேல் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி அகில இலங்கை ரீதியில் பல வெற்றிகளை பெற்று இறுதி ஆட்டத்துக்கும்  தெரிவானது. நானும் அதில் விளையாடினேன். ஆனால், அப்போது கால்பந்து சப்பாத்து அணிந்த கொழும்பு மற்றும் ஏனைய மாவட்ட பள்ளிக்கூட அணிகளுடன் எதிர்த்து விளையாடிய எங்களில் எவரிடமும் கால்பந்து சப்பாத்து கிடையாது. ஆனாலும், நாம் வெற்றிகளை அப்போதும் குவித்தோம். இதன் நினைவாகத்தான் ‘அரங்கத்தின்’ பெண்கள் பள்ளிக்கூட கால்பந்து அணிகளுக்கான அனுசரணையின் போது முதல் விடயமாக அவர்கள் அனைவருக்கும் கால்பந்து சப்பாத்துக்களை வாங்கிக்கொடுத்து பயிற்றுவித்தோம்.  

  — அன்புடன் சீவகன்) 

https://arangamnews.com/?p=7165

  • 3 weeks later...

சோசல் டின்னர் என்பார்கள் 70 பதுகளில் போனவர்களுக்கு தெரியும் அப்போ மட்டும் பக்கத்து வீட்டில் சப்பாத்து வாங்கி போட்டுக் கொண்டுபோனது. விரல்கள் வலியெடுக்க நடக்கவேண்டும் .அப்புறம் வெளிநாட்டிற்கு 78ல் புறப்பட்டபோது .அன்று தொட்டு இன்று வரை சப்பாத்துதான்.போட்டால் கம்பீரம்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

வந்த வெள்ளைக்காரன் சேட்  மட்டும் எங்கடை அரசியல் கோமாளியை பாருங்கள் அந்த வெய்யிலும் பிறந்ததில் இருந்து கோட்டு டுடன் பிறந்தவர் போல் நிக்கிறார் .

May be an image of 5 people, people standing and outdoors

On 7/2/2022 at 20:40, கிருபன் said:

ஒரு ரீ சேட்டுடன் கோடைக்கால நிலைக்கேற்ற சப்பாத்தை அணிந்து வலு சிம்பிளாக  வந்தார்கள். 

ஆனால் அவர்களை வரவேற்று இங்குள்ள இடங்களைக் காண்பித்த எமது அரச அதிகாரிகளோ கோட் சூட்டுடன் கடமையாற்றினார்கள். 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

வந்த வெள்ளைக்காரன் சேட்  மட்டும் எங்கடை அரசியல் கோமாளியை பாருங்கள் அந்த வெய்யிலும் பிறந்ததில் இருந்து கோட்டு டுடன் பிறந்தவர் போல் நிக்கிறார் .

May be an image of 5 people, people standing and outdoors

அந்தக் கோமாளி,
கழுத்தில் ரையும் கட்டி…. கையை, பின்னுக்கு கட்டிக் கொண்டு நிற்கிறார்.
பார்க்க… கத்தரி தோட்டத்து, வெருளி மாதிரி இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2022 at 20:40, கிருபன் said:

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு

நன்றி இணைப்புக்கு கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2022 at 21:40, கிருபன் said:

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு

சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு 

 — வேதநாயகம் தபேந்திரன் — 

சப்பாத்து அணிதல் கம்பீரத்தின் அடையாளமா? நாகரிகத்தின் ஒரு குறியீடா?  காலநிலையிலிருந்து பாதுகாப்பதற்கான அணிகலனா? அல்லது காலனித்துவத்தின் ஒரு நீட்சியா? 

எதுவென்று சொல்லத் தெரியாத ஒரு நிலையில் தான் இன்று இருக்கிறோம். 

வெள்ளைக்காரன் காலுக்குள்ளால் குளிர் உடம்புக்குப் போகக் கூடாது என்பதற்காகச் சப்பாத்தை அணிந்தான். கழுத்துக்குள்ளால் குளிர் போகக் கூடாது என்பதற்காக ரை கட்டினான். உடலைக் குளிர் அணுகக் கூடாது என்பதற்காகக் கோட் சூட் போட்டான். ஆனால் நாமோ என்ன ஏது எனத் தெரியாது அதனை நாகரிகமாக்கிக் கொண்டோம். 

பனிகொட்டும் தேசத்தில் வாழும் வெள்ளையர்கள் காலநிலைப் பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகச் சப்பாத்தை உருவாக்கினார்கள். குளிர்காலநிலைக்கு அணிவதை வின்ரர் சூ (Winter shoe) என்றார்கள். கோடைக் காலத்தில் அணிவதை சம்மர் சூ (Summer shoe) என்றார்கள்.   

தாம் உலகெங்கும் காலணிகள் வைத்திருந்த போது இந்தச் சப்பாத்தையும் கொண்டு சென்று பழக்கி விட்டார்கள். 

வெள்ளையின எசமானர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் உயர்வானவை. ஆகவே அவர்கள் போல நாமும் நடை உடை பாவனைகளை வைத்திருந்தால் எம்மையும் உயர்வானவர்களாக மதிப்பார்கள் என்ற எண்ணம் சுதேசிகளிடம் விதைக்கப்பட்டது. 

அந்த விதைகள் எம்மிலும் ஆழப் பதிந்து விட்டது. 

2004 டிசெம்பர் 26இல் சுனாமிப் பேரலைகள் எமது இலங்கை உட்படப் பல நாடுகளைத் தாக்கிப் பெரும் உயிர் உடமைச் சேதங்களை ஏற்படுத்தின. 

அதன் பின்பாகப் பங்குனி மாத நாளொன்றில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் வில்லியம் புஸ், பில் கிளிங்ரன் ஆகியோர் இலங்கையின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட வந்தனர். 

ஒரு ரீ சேட்டுடன் கோடைக்கால நிலைக்கேற்ற சப்பாத்தை அணிந்து வலு சிம்பிளாக  வந்தார்கள். 

ஆனால் அவர்களை வரவேற்று இங்குள்ள இடங்களைக் காண்பித்த எமது அரச அதிகாரிகளோ கோட் சூட்டுடன் கடமையாற்றினார்கள். 

அவர்கள் காலநிலையை உணர்ந்து ஆடைகள் அணிந்தார்கள். ஆனால் எம்மவரோ நாகரிகமென காலநிலைக்கு முரண்பாடாக உடை அணிந்தார்கள். 

எமது காலத்தில் பிரபலமான தனியார் கல்லூரிகள் தான் சப்பாத்து அணிவதைக் கட்டாயப்படுதினார்கள். ஏனைய பாடசாலைகள் மாணவர்களின் நிலைமைக்கேற்ப சப்பாத்து அணிவது தொடர்பில் ஒரு நெகிழ்ச்சித் தன்மையைக் கடைப்பிடித்தார்கள். 

காலுக்குப் போடச் செருப்பு இல்லாமலேயே பாடசாலை சென்ற மாணவர்கள் அதிகம். உயர்தர வகுப்பில் சோசல் எனப்படும் ஒன்றுகூடல் வைக்கும் போது போடச் சப்பாத்து இல்லாமல் இரவல் சப்பாத்து வாங்கிப் போட்டவர்களும் உண்டு. 

கிராமத்துப் பாடசாலைகளில் இருந்து நகரப்புறப் பாடசாலைகளுக்குப் போட்டிகளுக்குப் போகும் போது கடன உடனப்பட்டு சப்பாத்தைப் புதிதாக வாங்கிய பெற்றோரும் உண்டு. இரவல் வாங்கிச் சப்பாத்துப் போட்டுப் பங்குபற்றியோரும் உண்டு. 

சப்பாத்துப் போட்டு ஒரு மாணவன் அல்லது மாணவி பாடசாலை சென்றால் அதை வியப்பாகப் பார்த்தார்கள். அதிலும் சப்பாத்துப் போட்டு உத்தியோகம் பார்த்தவர்களை வியப்பாகவே பார்த்தார்கள். 

பாடசாலைகளில் ஆண், பெண் மாணவர்கள் சப்பாத்து அணிந்து செல்வார்கள். சப்பாத்துகளில் பிரதானமாக இருவகை உண்டு. 

நூல் கட்டுவதைச் சூ என்பார்கள். நூல் கட்டாமல் போடுவதைப் பம்ஸ் என்பார்கள். 

அது போலத் தடித்த துணியினால் செய்த சப்பாத்துகளும் உண்டு. செயற்கைத் தோலால் செய்த சப்பாத்துகளும் உண்டு. எமது காலத்தில் பெண் மாணவிகள் தடித்த துணியிலான சப்பாத்துகளையே பெரிதும் அணிந்தார்கள். ஆண் மாணவர்கள் தடித்த துணி, தோலினாலான சப்பாத்துகளை அணிந்தார்கள். 

ஆண்கள் பெரியவர்களாகி அரச தனியார் துறைகளுக்கு உத்தியோகம் பார்க்கப் போகும் போது சப்பாத்து அணிந்தார்கள். 

ஆனால் பெண்கள் சப்பாத்து அணிவதைக் கைவிட்டு விடுவார்கள். 

சப்பாத்து வழக்கமாக அணிவோர் கம்பீரமாக நடந்து கொள்வார்கள். புதிதாக அணிவோர் சாதாரண நடை தளர்ந்து வளைந்து நெளிந்து ஒரு கூச்சநடை நடப்பார்கள். 

பளிச்சென்று இருக்கும் சப்பாத்து மாணவர் ஒருவரது துப்பரவைக் காட்டும். தை தையென்று தைத்து நிறைய நூல்கள் தெரியக் கிழிந்த சப்பாத்து ஒருவரது வறுமையைக் காட்டும். 

சப்பாத்து, செருப்பு விற்பதில் எமது நாட்டில் பாட்டா எனும் சர்வதேசக் கம்பனி பிரபலமானது. அவர்கள் சப்பாத்து செருப்பு மீது விலையை அச்சிடும் போது ரூபா 29.90 சதமென விலையைக் குறித்தார்கள்.  

இதில் இரண்டு யுக்தி உள்ளது. ஒன்று விலை முப்பது ரூபா அல்ல. அதை விடக் குறைவானது எனக் குறைத்துக் காட்டுவது. ஆனால் வெறும் பத்துச் சதமே குறைவு என்ற உணர்வு இல்லாமல் வாடிக்கையாளன் ஒருவன் முப்பது ரூபாவைக் கொடுப்பான். 

அடுத்தது அந்த நாளில் பத்துச் சதம் கொடுத்து பஸ் பயணம் செய்து வீட்டிற்குப் போகும் நிலை இருந்தது. 

ஒரு காலத்தில் ஆட்டுத் தோல்களை வாங்குவதற்கென வியாபாரிகள் ஊர் ஊராக வந்தார்கள். ஆட்டுத் தோலை வாங்கிச் சப்பாத்து செய்யும் கம்பனிகளிடம் விற்றார்கள். இது போன்ற இயற்கைத் தோலினால் ஆகிய சப்பாத்துகள் எமது காலுக்கு இதமானது. 

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வதிரிக் கிராமத்தவர்கள் சப்பாத்துச் செருப்புத் தயாரிப்பதில் பரம்பரைத் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

இவர்களது தொழிற்சாலைகளும் கடைகளும் ஒரு காலத்தில் நாடெங்கும் இருந்தன. 

சிறுவயது முதலே சப்பாத்து அணிபவர்களது காலின் முன்பாதம் ஒடுங்கி இருக்கும். சப்பாத்து அணியாமல் இருப்போரது முன்பாதம் அகன்று இருக்கும். 

எமது பிரதேசத்தில் 1980களின் முற்பகுதியில் போராட்ட இயக்கங்கள் உருவாகிய காலத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் சப்பாத்து அணிந்து சென்ற போது அவர்களை வியப்பாகப் பார்த்தார்கள். 

இங்கு சப்பாத்தை ஒரு காலமும் அணியாமல் புலம்பெயர் தேசங்களுக்குச் சென்று சப்பாத்து அணிதலை வாழ்வின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளவர்கள் ஏராளம். 

விமானப் பயணம் செய்பவர்கள் சப்பாத்துப் போட்டுக் கோட் சூட் அணிதல் கட்டாயமென்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அதாவது பிரமுகர்கள் மட்டுமே விமானப் பயணம் செய்யலாம். சாமானியர்களுக்கு விமானப் பயணம் மறுக்கப்பட்டிருந்தது. 

எங்கட வடக்கில் சப்பாத்து அணிந்து அரச அலுவலகங்களுக்குப் பணியாற்றச் செல்பவர்களது எண்ணிக்கை குறைவானது. அப்படிச் செல்வதற்கு வெட்கப்படுபவர்கள் அதிகம். 

ஆனால் தென் பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சிற்றூழியர் முதல் பெரிய அதிகாரிகள் வரையில் சப்பாத்து அணிந்து ரிப்ரொப்பாகத் தான் போவார்கள். அலுவலக உத்தியோகத்தர் குழாமைப் பார்க்கும் போது பளிச்சென்று இருக்கும். 

சப்பாத்து அணிந்து கடமைக்குச் செல்லும் போது ஒரு கம்பீரம் இருப்பதைப் போன்ற உணர்வு வருவதையும், சப்பாத்து அணியாமல் செல்லும் நாள்களில் கம்பீரம் குறைந்தது போன்ற உணர்வும் வருவதாகச் சொல்லும் உத்தியோகக்காரரைக் கண்டுள்ளேன். 

சப்பாத்துத் தொடர்பான நினைவுகள் இன்னுமின்னும் நீளமானவை. வாசகர்கர்களே உங்களுக்குத் தெரிந்தவை இருந்தால் கூறுங்களேன். 

(ஆசிரியர் குறிப்பு: சப்பாத்து குறித்து எனக்கும், எமது அரங்கத்துக்கும் ஒரு நினைவு உண்டு. சூறாவளி மட்டக்களப்பை தாக்கி சிறிதுகாலத்தில் எமது மட்/புனித மிக்கேல் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி அகில இலங்கை ரீதியில் பல வெற்றிகளை பெற்று இறுதி ஆட்டத்துக்கும்  தெரிவானது. நானும் அதில் விளையாடினேன். ஆனால், அப்போது கால்பந்து சப்பாத்து அணிந்த கொழும்பு மற்றும் ஏனைய மாவட்ட பள்ளிக்கூட அணிகளுடன் எதிர்த்து விளையாடிய எங்களில் எவரிடமும் கால்பந்து சப்பாத்து கிடையாது. ஆனாலும், நாம் வெற்றிகளை அப்போதும் குவித்தோம். இதன் நினைவாகத்தான் ‘அரங்கத்தின்’ பெண்கள் பள்ளிக்கூட கால்பந்து அணிகளுக்கான அனுசரணையின் போது முதல் விடயமாக அவர்கள் அனைவருக்கும் கால்பந்து சப்பாத்துக்களை வாங்கிக்கொடுத்து பயிற்றுவித்தோம்.  

  — அன்புடன் சீவகன்) 

https://arangamnews.com/?p=7165

Traveler Men's Shoe Heel Plates Taps with Nails Black Plastic Large 7 Pairs  : Amazon.ca: Health & Personal Care

How To Make Shoes Non Slip Without A Fuss

பழைய பல நினைவுகளையும், நகைச்சுவை சம்பவங்களையும் கோர்வையாக தந்தது....  சப்பாத்து  பதிவு. 

சப்பாத்தின்  வெளிப்புற  அடிப் பகுதி இருவகைப் படும்.
1) இறப்பர், பிளாஸ்ரிக் போன்றவற்றால் செய்யப் பட்டவை  ஒரு வகை.
2) மற்றது... தடித்த  தனித் தோலால், செய்யப் பட்டது மற்ற வகை.  

1970 களில், தோலால் செய்யப் பட்ட  சப்பாத்தின் அடிப்பகுதியில்... 
"ரிப்ஸ்" என்று, 1 செ.மீ. நீளமான   சிறிய கடின இரும்பை 7,8 இடங்களில் அடித்து...
சீமெந்து  நடக்கும் போது.... "கிறீச், கிறீச்" என்று பெரிய ஒலி எழுப்ப நடப்பது,
மாணவர்கள் மத்தியில், பெரிய கெத்தாக கருதப் பட்டது.        

அந்த "ரிப்சை" ஒன்று 50 சதப்படி, விரும்பிய அளவில்...    
நாம் செருப்பு தைக்கும் கடையில் கொடுத்து, அடித்துக் கொள்ளலாம்.

சப்பாத்து... யாப்பாணத்து மண்ணுக்கு, அடிக்கடி தூசி பிடித்து...
அதன் மினுமினுப்பு குறைந்து விடும் என்பதற்காக, 
அடிக்கடி துடைக்க... ஒரு பக்க கால் சட்டைப்  பொக்கற்றில்,
"கை லேஞ்சி" வைத்திருந்து... மறைவான இடத்தில் நின்று துடைத்தவர்களும்... உண்டு. 😁

நல்லதொரு நினைவு மீட்டல் பகிர்விற்கு... நன்றி, கிருபன் ஜீ. 👍

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்துக்கள் எமது காலாச்சார காலணிகள் இல்லையென்றாலும் சப்பாத்துக்கள் மிகவும் பிரயோசனமான  பாதுகாப்பான ஒன்றுதான்.

சப்பாத்துக்கள் அணிந்தால் பாதங்கள் நேர்த்தியாகும், மென்மையாகும், ஊரில் பாதங்களில் பித்த வெடிப்பு, விரல்கள் அங்கும் இங்குமாய் விரிந்து செல்வது போன்ற பிரச்சனையெல்லாம் வெளிநாடு வந்து பாதணி அணிந்தவர்களுக்கு இல்லாமல் போயிருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

சப்பாத்து அணிவது மிகவும் பாதுகாப்பானது, செருப்புடன் செல்லும்போது, எம்மூரில் குண்டும் குழியுமாய் உள்ள தெருக்களில் சல்லி கற்களில் எம் விரல்கள் மோதினால் பெரு விரல் நகம் சிதறி பறந்து அதன் காயம் ஆறவே பல மாதங்கள் ஆகும், சப்பாத்து அணிந்தால் அந்த பிரச்சனையில்லை.

மேலே கிருபன் இணைப்பில் உள்ளபடிதேவரயாளி எனும் வடமராட்சி தோல் உற்பத்தி தொழிலாளர்கள் தயாரித்தது மென்மையான சப்பாத்துக்கள் அல்ல,

அவை பூட்ஸ் எனப்படும் ஆமி, மற்றும் சேவ்டி சூ எனப்படும் கடின சப்பாத்துக்கள், மற்றும் உதை பந்தாட்ட பந்துகள் என நினைக்கிறேன், அவை மென்மையான அனைவரும் பாவிக்கும் அன்றாட பாவனை சப்பாத்துகளில் அடங்காது என்று நினைக்கிறேன், இப்போ எப்படி அவர்கள் தயாரிப்போ தெரியவில்லை.

இலங்கையில் நம்மில்பலர் நினப்பதுபோல் சப்பாத்தை அறிமுகபடுத்தியது ஆங்கிலேயர்கள் அல்ல, இலங்கையில் அதனை அறிமுகபடுத்தியது போத்துக்கேயர் , அதனால்தான் இன்றுவரை காலணிகளை அவர்கள் மொழியிலேயே சப்பாத்து என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.