Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக இன்று "கறுப்பு ஜூலை" கவன ஈர்ப்பு நிகழ்வு

Featured Replies

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் இன்று புதன்கிழமை மெல்பேர்ண் நகர சதுக்கத்தில் கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் இந்த கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை தமிழின அழிப்புக் கொடூரங்களை நினைவு கூர்ந்தும், ஈழத்தமிழர் மீது தொடரும் தமிழினப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்தும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு அகவணக்க நிகழ்வில் பல நூற்றுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழீழ உறவுகள் உணர்வுபூர்வமாக அணிதிரண்டிருந்தனர்.

20070725001.jpg

20070725002.jpg

20070725003.jpg

20070725004.jpg

இந்த நிகழ்வுக்கு விக்டோரிய மாநிலத்தின் அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்ட புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பெருந்தொகையான 2 ஆம் தலைமுறைத் தமிழர்களும் ஒருங்கிணைந்து கறுப்புப் பட்டியணிந்து பங்கேற்றனர்.

இன்றைய கவன ஈர்ப்பு நிகழ்வில் சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழின அழிப்பையும் அரச பயங்கரவாத செயல்களையும் விளக்குகின்ற வகையில் பதாதைகள் தாங்கிப் பிடிக்கப்பட்டிருந்தன.

அவுஸ்திரேலிய நேரம் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு நிகழ்வை பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியப் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

20070725005.jpg

20070725007.jpg

20070725008.jpg

20070725011.jpg

சிறிலங்கா அரசின் 83 கறுப்பு ஜூலை, இன்றும் நடைபெறுகின்ற பயங்கரவாத செயல்களை விளக்குகின்ற துண்டுப்பிரசுரங்கள், 83 கறுப்பு ஜூலை நினைவு சுமந்த அடையாளச் சின்ன அட்டைகள், கறுப்புப்பட்டிகள் போன்றவற்றை அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் விநியோகித்தனர்.

83 ஜூலையிலிருந்து இன்று வரையில் 24 ஆண்டுகாலப் பகுதிக்குள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் பலியாகிய அப்பாவித் தமிழ் மக்களை நினைவு கூர்ந்து மாலை 4.30 மணியளவில் 24 சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில பாராளுமன்ற உறுப்பினர் லூக் டொனலன் (Luke Donnellan, Parlimentary Member for Narre Warren North), ஜோர்ஜ் சீட்ஸ் (George Seitz, Member for Keilor) மற்றும் Greens அரசியல் கட்சிப் பிரமுகர், மனித உரிமை ஆர்வலர்கள், பிரபல சட்டத்தரணிகள், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.

இந்த சிறப்புரைகளின் நடுவே எமது தாயக மக்களின் இன்னல்களை எடுத்துக்கூறும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

நிகழ்வின் தகவல்களை சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் நிருபர்களும் வந்திருந்தனர்

http://www.eelampage.com/?cn=32748

நானும் இந்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன் இந்த செய்தியில் 5 வது படத்தில் உரையாற்றும் பெண்மணி சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இலங்கையுடனான ராஜதந்திர உறவுகளை முறிக்க கோரியும் உணர்சிவசப்பட்டு உரை யாற்றினார்

அத்துடன் இந்த நிகழ்வில் தேவாரம் திருவாசகம் பாடப்பட்ட செயல் கண்டிக்கதக்கது இவ் செயல் முழுக்க முழுக்க இந்து சமய விழாவாக உருப்பெருவதாக காட்டி விடுகின்றது அத்துடன் அண்மைகாலமாக முஸாரப் மற்றும் சில முஸ்லீம் தலைவர்கள் சொல்லிவரும் இந்து இயக்கம் தமிழீழ விடுதலை புலிகள் என்னும் வாதத்தை உண்மையாக்குவது போன்று உள்ளது இதே சம்பவம் போன வருடமும் நிகழ்ந்தது தயவு செய்து இனி வரும் காலங்களில் இப்படியான செயல்களை தவிருங்கள் வெளியாரின் விமர்சனங்களுக்கு நாமே வழி சமைத்து விடகூடாது

Edited by ஈழவன்85

அந்தப் பெண்மணிதான் எம்மவர்களைவிடவும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு பேசினார். அவர் தெருவில் இறங்கி துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தார்.

இந்த நினைவு கூட்டத்திற்கு பலர் வரவில்லை. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வந்திருந்தாலே கூட்டம் மேலும்களைகட்டியிருக்கும்.

  • தொடங்கியவர்

20070725010.jpg

ஏன் மக்கள் அதிக அளவில் கூடுவதில்லை???

  • தொடங்கியவர்

ஏன் மக்கள் அதிக அளவில் கூடுவதில்லை???

எல்லாம் சுய நலம் ஜேசுதாஸ் வந்தாலும் ரகுமான் வந்தாலும் வேலைக்கு லீவெடுத்து மினுக்க தெரியும் ஆனால் இப்படியான நிகழ்வுக்கு வரமாட்டீனம் காரணம் வேலை என சொல்லி போடுவீனம்.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில் மக்கள் ஈடுபாடு குறைவு அதுமடுமல்ல இந்த நிகழ்வின் ஒழுங்கமைக்கபட்டது பலருக்கு தெரிந்திருக்கவில்லை பழைய வலையமைப்புகள் சிதைந்து விட்டனவோ தெரியவில்லை எனக்கு கூட முதல் நாள் இரவு TYO இன் மின்னஞ்சல் மூலமே அறிந்து கொண்டேன்.வழமையாக பங்கு கொள்ளும் மக்கள் வராததுக்கு இது கூட காரணமாக இருகலாம்

அத்துடன் இந்த நிகழ்வில் தேவாரம் திருவாசகம் பாடப்பட்ட செயல் கண்டிக்கதக்கது இவ் செயல் முழுக்க முழுக்க இந்து சமய விழாவாக உருப்பெருவதாக காட்டி விடுகின்றது அத்துடன் அண்மைகாலமாக முஸாரப் மற்றும் சில முஸ்லீம் தலைவர்கள் சொல்லிவரும் இந்து இயக்கம் தமிழீழ விடுதலை புலிகள் என்னும் வாதத்தை உண்மையாக்குவது போன்று உள்ளது இதே சம்பவம் போன வருடமும் நிகழ்ந்தது தயவு செய்து இனி வரும் காலங்களில் இப்படியான செயல்களை தவிருங்கள் வெளியாரின் விமர்சனங்களுக்கு நாமே வழி சமைத்து விடகூடாது

உங்கள் கருத்தே எனது கருத்தும். அரசியல் நிகழ்வுகளில் எதற்கு தேவாரமும் திருவாசகமும்?

83 ல் சிங்களவர்கள் இந்துக்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் பார்த்து கொல்லவில்லை. கண்ணில் பட்ட எல்லா தமிழர்களையும் தான் கொன்றார்கள். அரசியல், மனிதவுரிமை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு மத சாயம் பூசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழர்கள் என்ற அடிப்படையில் எல்லா தமிழர்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில், இது போன்ற தவறுகளை விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் தவிர்த்து கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சுய நலம் ஜேசுதாஸ் வந்தாலும் ரகுமான் வந்தாலும் வேலைக்கு லீவெடுத்து மினுக்க தெரியும் ஆனால் இப்படியான நிகழ்வுக்கு வரமாட்டீனம் காரணம் வேலை என சொல்லி போடுவீனம்.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில் மக்கள் ஈடுபாடு குறைவு அதுமடுமல்ல இந்த நிகழ்வின் ஒழுங்கமைக்கபட்டது பலருக்கு தெரிந்திருக்கவில்லை பழைய வலையமைப்புகள் சிதைந்து விட்டனவோ தெரியவில்லை எனக்கு கூட முதல் நாள் இரவு TYO இன் மின்னஞ்சல் மூலமே அறிந்து கொண்டேன்.வழமையாக பங்கு கொள்ளும் மக்கள் வராததுக்கு இது கூட காரணமாக இருகலாம்

தரிசனம் தொலைக்காட்சி, தமிழ் நாதம் இணையத்தளம் போன்றவற்றில் ஒரு கிழமைக்கு முன்பே இன்னிகழ்வு பற்றி அறிவிப்புச் செய்திருந்தார்கள். வானொலிகளிலும் அறிவுப்புக்கள் வந்தன. சிட்னியில் வசிக்கும் எங்களுக்கே இன்னிகழ்வு பற்றி ஒரு கிழமைக்கு முன்பு தெரிந்திருந்தது.

எங்களது ஊடகங்களைப் பார்க்காமல் எங்களைப்பற்றி சொல்லாத தமிழைக் கொலை செய்யும் சன் தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களே - எங்களது ஊடகங்களுக்கு ஆதரவு குடுங்கள். உங்களுக்கு ஈழத்தில் நடப்பதும் தெரியாது. அவுஸ்திரெலியாவில் நடப்பதும் தெரியாது. ஆனால் தமிழக நடிகர், நடிகைகள் அடுத்தாதாக என்ன படத்தில் நடிப்பது என்பது உங்களுக்கு தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.