Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் மூண்டது : உக்ரைன் மீது ரஷ்யா பலமுனை தாக்குதல் ! எவர் தலையிட்டாலும் பதிலடி என்கிறார் புடின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் மூண்டது : உக்ரைன் மீது ரஷ்யா பலமுனை தாக்குதல் ! எவர் தலையிட்டாலும் பதிலடி என்கிறார் புடின்

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

Russian-Ukraine war: Chilling map shows Putin's army surround border as  bloodshed looms - World News - Mirror Online

இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டன.

உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Ukraine news – live: Putin announces military operation in eastern Ukraine  as US warns of 'imminent' invasion | The Independent

ஒட்டேசா நகர் மீதும் குண்டு மழை பொழியும் சத்தம் கேட்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் எவர் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Ukraine - Russia crisis news summary: 18 February 2022 - AS.com

இதையடுத்து உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தாக்குதலால் ஏற்படும் அழிவுக்கும் உயிரிழப்புகளுக்கும் ரஷ்யாவே காரணம் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/122990

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ தளவாடங்கள்: ரஷ்யாவுக்கு பொருளாதார தடை!

உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ தளவாடங்கள்: ரஷ்யாவுக்கு பொருளாதார தடை!

உக்ரைன் மீதான அறிவிப்புக்கு எதிர்வினையாற்றும் வகையில், ரஷ்யா மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று ரஷ்ய பில்லியனர்களின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், உக்ரைனுக்கு இராணுவ ஆதரவின் கூடுதல் தொகுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார்.

தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், தன்னலக்குழுக்கள் பிரித்தானியா நிறுவனங்களையும் சொத்துக்களையும் வாங்குவதைத் தடுக்க சட்டங்களைக் கொண்டுவருமாறு பிரதமரை வலியுறுத்தினார்.

மாஸ்கோ- ஆதரவு பிரிவினைவாதிகளால் நடத்தப்படும், உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரித்த பின்னர், தற்போது இராணுவ நடவடிக்கையை தொடருவதாக அறிவித்தார்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ரஷ்யாவை இறையாண்மைக் கடனை உயர்த்துவதைத் தடுப்போம். நிறுவனங்களை நிதி திரட்டுவதை நிறுத்துவோம் மற்றும் ரஷ்ய நிறுவனங்களை நிறுத்துவோம். சர்வதேசச் சந்தைகளில் ஸ்டெர்லிங் மற்றும் டொலர்களைக் கூட அகற்றுவோம்’ என கூறினார்.

https://athavannews.com/2022/1268763

 

############   ############   ############

ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடை!

ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடை!

ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதற்கமைய ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ரஷ்ய வங்கிகளுடனான பரிவர்த்தனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரிவினை பகுதிகளை அங்கீகரித்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, ‘எந்த தவறும் செய்யாதீர்கள்.

இது ஒரு இறையாண்மை கொண்ட அரசின் மீது மேலும் ஆக்கிரமிப்பு செய்வது ஆகும். இதனை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேலும் நேட்டோ படைக்கு கனடா கூடுதலாக 400 வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1268626

 

################   ###############   ###########

ரஷ்யாவிற்கான எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜேர்மனி

ரஷ்யாவிற்கான எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜேர்மனி

உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க 27 ஐரோப்பிய நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கான எரிவாயு குழாய் திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜேர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்ட் ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை ஜேர்மனி இரத்து செய்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1268623

 

 

################   ##############   ###############

ரஷ்யாவின் தாக்குதலில் முதலில் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும்: அமெரிக்கா கணிப்பு!

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப் பேசியில் பேசி, அவருக்கு ஒற்றுமையை உறுதி செய்ததாக ஜேர்மனி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

‘ஐரோப்பாவில் ஒரு நிலப் போர் உள்ளது, அது வரலாற்று புத்தகங்களில் மட்டுமே உள்ளது என்று நாங்கள் நினைத்தோம். இது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்’ என்று பொருளாதார அமைச்சர் ரோபர்ட் ஹேபெக் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், இந்த தாக்குதலால் திகைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதற்கு பிரித்தானியா தீர்மானமாக பதிலளிக்கும் என கூறியுள்ளார்.

அத்துடன், பொரிஸ், அவசரகால அரசாங்க கோப்ரா கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக ;, டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று பின்னர் ஹவுஸ் ஒஃப் காமன்ஸில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது.

உக்ரைன் மீதான தனது தாக்குதலின் மூலம் விளாடிமிர் புடின் இரத்தம் சிந்தும் மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீர்மானமான பதிலடி கொடுக்கும் என்றும் ஜோன்சன் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி, இந்த நடவடிக்கை ‘நியாயமற்றது மற்றும் நியாயப்படுத்த முடியாதது’ என்று கூறினார்.

‘ஐரோப்பிய மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுடன் நாங்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் உடனடியாக பதிலடி கொடுக்கிறோம்.’ என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், போலந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பியோட்டர் முல்லர், நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்கான நேரம் இது என்று கூறினார். அத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் கூறினார்.

https://athavannews.com/2022/1268860

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும்......நடக்கட்டும்......உங்களிடம் இருக்கும் புதுப் புது ஆயுதங்களை பரீட்ச்சித்து முடிக்கும்வரை விடக்கூடாது.......மக்கள் எல்லாம் அழிஞ்சால் என்ன, பிறகு பெத்துப்போட்டு போகலாம்......!

எதையும் தடுக்க திராணியின்றி கண்டனம் விடுவதற்கென்றே காசு வாக்கிக் கொழுத்திருக்கும் அமைப்புகள் எல்லாம் எழுந்து வந்து ஒப்பாரி வைத்து கொண்டிருக்கட்டும்......சல்லிக்காசுக்கு பிரயோசனமற்றதுகள்......!

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனை சுற்றி பல இடங்களில் ரஷ்ய படை ஊடுருவல்: புடின் ஒரு நவீன கால ஹிட்லர்!

உக்ரைனை சுற்றி பல இடங்களில் ரஷ்ய படை ஊடுருவல்: புடின் ஒரு நவீன கால ஹிட்லர்!

வடக்கில் பெலாரஸ் மற்றும் தெற்கில் கிரிமியா உட்பட பல இடங்களில் ரஷ்ய இராணுவ வாகனங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக உக்ரைன் கூறுகிறது.

மற்ற குறுக்குவழிகள் கிழக்கில், கார்கிவ் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியில் நடந்துள்ளன.

உக்ரைனின் எல்லை சேவையின் படி, ரஷ்யா இராணுவ வாகனங்களை அனுப்புவதற்கு முன்பு பீரங்கிகளால் சுட்டது.

உக்ரைனின் கீவ் மற்றும் கார்கிவ் உட்பட பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பெட்ரோ போரோஷென்கோ, இன்று ஒரு சோகமான நாள் ஆனால் உக்ரைன் மேலோங்கும் என்று கூறியுள்ளார்.

கியேவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நெருக்கடியான பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசினார்.

2014-19இல் பதவியில் இருந்த போரோஷென்கோ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நவீன கால ஹிட்லருடன் ஒப்பிட்டார்.

உக்ரைன் நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ஆயுதம் ஏந்திய பலர் உள்ளே உள்ளனர்.

https://athavannews.com/2022/1268862

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா இங்க சண்டை பிடிச்சினமே.. அவுங்க போய்டாங்களா.?

IMG-20220225-003510.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.