Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கின்றது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

 

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் கரிசனைக்குரிய மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்திற்கு முரணானதாகவும் அமைந்துள்ளது. 

அதுமாத்திரமன்றி கடந்தகால மீறல்கள் குறித்து இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாத நிலையில், இன, மத சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடக்குமுறைகள், சிவில் சமூகப்பிரதிநிதிகளை இலக்குவைத்து பாதுகாப்புத்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் நீதியை நிலைநாட்டுதல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையர்களுக்குப் புகலிடம் வழங்கல் மற்றும் கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கல் உள்ளடங்கலாக உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். 

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையின் பாதுகாப்புப்படையினருடன் தொடர்புகளைப் பேணும்போதும் ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான இலங்கையின் பங்களிப்பு குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்ளும்போதும் மனித உரிமைகள் தொடர்பான அதன் (ஐ.நாவின்) தரநியமங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தவேண்டும்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு, அரசாங்கம் பொய்யானதும் தவறாக வழிநடத்தக்கூடியவாறானதுமான பொதுத்தொடர்புகளின் மூலம் பதிலளிக்கின்றது.

ஆகவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும்.

கடந்த 1983 - 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சிவில் யுத்தம் இருதரப்பிலும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்தது. 

இறுதிக்கட்டப்போரின் போது அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினாலும் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்தியிருந்தது. 

அந்த மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றது. 

கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான குற்றங்களையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்வதற்குத் தாம் தயாரில்லை என்பதைத் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிக்காட்டிவரும் அதேவேளை, போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பை வகித்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸட் மாதம் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டமை குறித்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் அவர் ஜனாதிபதியினால் வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் சிவில் செயற்பாடுகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பிலும் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டதும் தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதியுமான வடமாகாணத்தில் குறித்த எண்ணிக்கையிலான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அரச அதிகாரிகளுக்கும் சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த நபர்களுக்கும் இடையிலான 45 கருத்து முரண்பாட்டுச்சம்பவங்களையும் ஐக்கிய நாடுகள் சபை பதிவுசெய்துள்ளது.

பௌத்த அடையாங்களைக் கண்டறிவதற்கும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய, பூகோள அடையாளம் மாற்றியமைக்கப்படக்கூடும் என்ற அச்சம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படுவதாக மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுக்கு முன்னர் இராணுவப்புலனாய்வு அதிகாரிகள் குண்டுதாரிகளைப் பாதுகாப்பதற்கு முயன்றதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளிகள்மீதே தங்கியிருக்கின்றார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கின்றது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையை... பொய்களை கூறி ஏமாற்றுகின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக சர்வதேசத்திற்குக் காண்பிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, உண்மை நிலரவத்துடன் ஒப்பிடுகையில் சர்வதேச சமூகத்திற்குக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என்றும் அச்சபை குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளும் சரியான முறையில் இடம்பெறுகின்றன என்பதை மனித உரிமைகள் பேரவைக்கும் ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் காண்பிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது என்றும் அச்சபை சாடியுள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆவணப்படுத்தல் வடிவிலான அறிக்கையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது.

காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் முதலாம், இரண்டாம் கட்ட ஆய்வுகளின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு அடுத்ததாக உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடு இலங்கை என்றும் இதுவரை 6,259 வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும் இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் 60 ஆயிரம் அல்லது ஒரு இலட்சம் வரையிலான வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று தாம் மதிப்பிட்டுள்ளதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2022/1270462

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை !

பொறுப்புக் கூறலை... உறுதி செய்ய,  இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

தற்போதைய இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரிகளையும் அரச உயர் பதவிகளுக்கு நியமித்து தண்டனையில் இருந்து அவர்களை தப்பிக்கவைக்க முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வின் 11வது கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவது மற்றும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சில கைதிகளை விடுவிப்பது போன்ற செயல்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கை என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பொறுப்புக்கூறலுக்கு மேலும் தடைகளையும் பின்னடைவையும் கண்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தொடர்ந்து உண்மையும் நீதியும் மறுக்கப்படுகிறது என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு அவர்களின் பதில் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணான வகையில் இருப்பதாகவும், 2021 பெப்ரவரி அறிக்கை மனித உரிமைகளை அச்சுறுத்தும் பல அடிப்படை போக்குகளை அடையாளம் கண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1270444

மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சில இராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளமை குறித்தும் மிச்செல் பச்லெட் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறையை இலங்கை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என்றும் மிச்செல் பச்லெட் குற்றம் சாட்டியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, உண்மை நிலரவத்துடன் ஒப்பிடுகையில் சர்வதேச சமூகத்திற்குக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என்றும் அச்சபை குற்றம் சாட்டியுள்ளது.

அப்பா! இதை கண்டுபிடிக்க பன்னிரண்டு ஆண்டுகள் எடுத்துள்ளன. இப்படியான பொய்களோடு மீண்டும் ஐ. நாவுக்கு வரவேண்டாம் என எச்சரித்து அனுப்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மனித உரிமைகள் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் முக்கியமான கரிசனைகளை எழுப்பியுள்ளது- இந்தியா

 

 

 
இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மனித உரிமைகள் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் முக்கிய கரிசனைகளை எழுப்பியுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழ் இந்தியாவின் அறிக்கை: மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வின் போது (28 பெப்ரவரி – 1 ஏப்ரல் 2022) இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான OHCHR இன் எழுத்துப்பூர்வ அறிக்கையின் கலந்துரையாடலில், தூதுவர் இந்திராமணி பாண்டேஇதனை தெரிவித்துள்ளார்.
Indra-Mani-Pandey-300x200.jpg
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளின் இலங்கை தொடர்பான அறிக்கை இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் தொடர்பில் முக்கியமான கரிசனைகளை எழுப்பியுள்ளது என இந்தியா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறி;க்கையையும் அவரது வாய்மூல அறிக்கையையும் நாங்கள் கருத்தில்கொண்டுள்ளோம் நண்பன் மற்றும் அயல்நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான அர்ப்பணிப்புகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளோம் என இந்;தியா தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளிற்கு தீர்வை காண்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இந்தியா தமிழ் மக்களின் நீதி சமத்துவம் கௌரவம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளிற்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை காண்பது இலங்கையின் சொந்த நலனுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் அரசமைப்பின் 13 வது திருத்தத்தின் ஊடாக உட்பட அர்த்தபுஸ்டிமிக்க அதிகாரபகிர்வினை முன்னெடுப்பதாக இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகளும் இந்த விடயத்திற்கு பொருந்தக்கூடியவை என இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் நல்லிணக்கப் பிரச்சினைகளின் பல்வேறு அம்சங்களில் சர்வதேச சமூகம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதை இந்திய தூதுக்குழு கவனத்தில் எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகளோடு இதுபோன்ற ஈடுபாட்டுடனான ஆக்கபூர்வமான மற்றும் பிரயோசனமளிக்கும் உரையாடல்கள் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.என இந்தியா தெரிவித்துள்ளது
இந்த அறிக்கை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் முன்னேற்றம் பற்றிய முக்கியமான கவலைகளை எழுப்புகிறது.
அனைத்து குடிமக்களின் உரிமைகளும் முழுமையாக பாதுகாப்பதற்கும்
அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவது உட்பட, தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என இந்தியா தெரிவித்துள்ளது
அதிகாரப் பகிர்வுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு அமைவாக மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.என இந்தியா தெரிவித்துள்ளது

https://thinakkural.lk/article/168475

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

பொறுப்புக் கூறலை... உறுதி செய்ய,  இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

12 ஆண்டுகளா இந்த அதிருப்தி புராஜெக்ட் .. 👍 உக்ரைன் vs ரஷ்யா போர் நின்றவுடன் அடுத்த புராஜெக்ட்  இனிதே ஆரம்பம் .👌

set-coffee-break-hotel-conference-meetin

மூலதனமே வாய்சவடால் ,கை நிறைய சம்பளம் ,  மேசை, சில பல கதிரைகள் , மினரல் தண்ணி , தேத்தண்ணீர் , விசுகொத்து , பண்டில் பேப்பர் , ஜெராக்ஸ் மிசின்..😢

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இலங்கையில் தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான அர்ப்பணிப்புகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளோம்

இதேன் இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போ இவ்வளவு அவசரம் இந்தியாவுக்கு வந்தது? இலங்கை இந்தியாவை மாட்டிவிட்டு, மனித உரிமையாளர் இந்தியாவை சாட முன் இவர் முந்திக்கொள்கிறாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.