Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கில நாடாக வேகமாக மாறிவரும் தமிழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில நாடாக வேகமாக மாறிவரும் தமிழகம்

[30 - July - 2007]

-எம்.ஏ.சேவியர்-

தமிழ்நாடு வேகமாக `ஆங்கில நாடாக' மாறி வருகிறது. அந்த அளவுக்கு கிராமம் முதல் நகரங்கள் வரை ஆங்கில மோகம் பரவி இருக்கிறது. ஆங்கிலமே அறிவு என்ற கருத்து வேரூன்றியுள்ளது.

தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று மேடைகளில் முழங்குகிற அரசியல் கட்சிகளிலிருந்து திரைப்படங்கள் வரை ஆங்கில ஆதிக்கமும் அதன் மோகமும் ஊடுருவியிருக்கிற அவல நிலை தமிழகத்தில்! ஆங்கிலத்தில் பேசினால்தான் நாகரிகம், கௌரவம், மதிப்பு, பெருமை என்ற மாயை பெரும்பாலானோர் மனங்களில் புகுத்தப்பட்டுள்ளது.

ஆங்கில மோகத்தின் விளைவுகளை சமூக, அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் வெளிப்படையாகவே காண முடிகிறது. குழந்தைகள் அம்மாவை `மம்மி' என்றும் அப்பாவை `டாடி' என்றும் அழைக்க வைப்பதில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் ஆனந்தம் அடைகின்றனர்.

தமிழகத்திற்குள்ளேயே அனுப்பப்படும் கடிதங்களின் முகவரிகளும் தங்கள் வீடுகளின் விலாசத்தைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகளும், சந்திப்பு முகவரி அட்டைகளும் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டுமென்று பெரும்பாலானோர் விரும்புகின்றனர். தமிழில் தங்கள் கையெழுத்தை இடுவதை பலர் கேவலமாகக் கருதும் அவலமான நிலையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களைக் கூட ஆங்கிலத்திலேயே அச்சடிப்பதை உயர்வாக நினைக்கின்றனர்.

இளைஞர்களின் சாதாரண உரையாடலில் கூட அதிகமாக ஆங்கிலக் கலப்பு உள்ளது. `வெயிட்' பண்ணி, `டிரை' பண்ணி, `ரிங்' பண்ணி, `இன்பார்ம்' பண்ணி, `மீட்' பண்ணி, `கன்சல்ட்' பண்ணி, `டிசைடு' பண்ணினேன் என்பன போன்ற சரளமான உரையாடல்கள், தமிழ் மொழியை ஒரு `வழிபண்ணி' விடுவார்களோ என்ற கவலையை தமிழ் ஆர்வலர்களின் மனதில் ஏற்படுத்துகின்றன. மேலும் இன்றைய இளைஞர்கள், இளம் பெண்களிடம் `டமில்' தெரியாது என்று சொல்வதையும் தமிழ் தெரியாதவர்போல் பேசுவதையும் சொற்களை அரைகுறையாக உச்சரிப்பதையும் பெருமையாகக் கருதுகின்றனர்.

தமிழகத்தில் விரிவாக்கப்பட்டிருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை. அதற்கு அடிப்படைத் தேவை ஆங்கில அறிவு என்ற எண்ணம் போன்றவை தமிழக இளைஞர்களிடம் தேவைக்கு அதிகமாக ஊட்டப்பட்டிருப்பதால், இம்மோகம் வலுவடைந்துள்ளது. வேலைவாய்ப்பு கிட்டுகிறது என்பது உண்மையாக இருப்பினும், இன்னொரு கேள்வி இயல்பாக எழுகிறது. அதாவது, ஆங்கிலம் தெரிந்த அனைவருக்கும் வேலை கிடைத்திருக்க வேண்டுமே! ஆகவே, இந்தத் தேவையில்லா மோகத்திற்கு அடிப்படைக் காரணம் - `அறிவென்றால் ஆங்கிலம்தான்' என்ற கருத்து புகுத்தப்பட்டிருப்பதே என்பது தெளிவாகிறது.

அண்மைக் காலத்தில் அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள அதிவேக நவீன வளர்ச்சி, குறிப்பாக கணினித் துறையின் வளர்ச்சி இந்த மோகத்தை வேகப்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கலைச்சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கில அறிவு அவசியம்தான். ஆனால் அதற்காக ஆங்கில மோகம் தேவையில்லையே!

ஆங்கிலத்தில் பேசினால்தான் நாகரிகம், கௌரவம், பண்பாடு என்ற நிலைக்கு இட்டுச் செல்வதோடு, தமிழில் பேசுபவர்கள் பண்பாடற்றவர்கள், அறிவாளிகள் அல்ல என்ற கருத்து வலுவாகப் பரப்பப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் பேசினால் மதிப்பு கிடைக்கிறது என்பது மட்டுமன்றி, நினைத்த வேலைகளையும் சில நேரங்களில் சாதிக்க முடிகிறது என்ற எண்ணமும் உருவாகிவிட்டது.

அறிவென்றால் ஆங்கிலம்தான் என்ற கருத்தைத் தமிழகத்தில் அதிகமாக்கியதில் பெரும்பங்கு வகிப்பவை, ஆங்கில வழிக் கல்வியைத் திணித்து வரும் கல்வி நிறுவனங்கள். பல்வேறு தளங்களிலிருந்து உருவாக்கப்படும் இந்த மாயையைப் பூதாகரமாக்கி தங்களுக்கே உரிய பாணியில் இத்தகைய மோகத்தைத் தொடர்புச் சாதனங்களும் புகுத்திக் கொண்டு இருக்கின்றன.

ஆங்கிலம் என்றால் அறிவு என்று கருதுவது தவறான சிந்தனை. அவ்வாறு குறிப்பிட்ட ஒரு மொழியில் பேசும்போது, எழுதும்போது அம்மொழியில் உள்ள புலமை வளரலாமே ஒழிய, அறிவு வளரும் என்பது எப்படிச் சரியாகும்? அவ்வாறெனில், ஆங்கிலம் பேசும் பல கோடி மக்களும் அறிவாளிகளாக மாறியிருக்க வேண்டுமே! அறிவு என்பது குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு இருக்கும் சிந்தனைத் தெளிவு, புத்திக்கூர்மை, படைப்பாற்றல் போன்றவற்றின் உள்ளடக்கமேயாகும். மொழியறிவு இதற்கு உதவியாக இருக்கலாமே ஒழிய, அதுவே அடிப்படை அறிவாகாது.

தாய்மொழியைத் தவிர, வேறு எந்த மொழியையும் கற்கக் கூடாது என்று யாரும் கூறமாட்டார்கள். நமக்குத் தேவைப்படும் எந்த மொழியையும் மொழியாகக் கற்பதில் தவறே இல்லை. எத்தனை மொழிகளைக் கற்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது. பல பெரிய அறிவாளிகள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தங்கள் தாய் மொழியிலேயே சிந்தனைகளை எழுதி வைத்துள்ளனர். அவ்வாறே ஆங்கிலத்தையும் ஒரு மொழியாக மட்டுமே கற்றால் அதன் மீது தேவையற்ற மோகம் இருக்காது. ஆங்கிலம் அறிந்தோர் - அறியாதோரை, தாழ்வாகவோ, இழிவாகவோ எண்ணும் நிலையும் ஏற்படாது.

சமூகத்தின் முக்கிய அடையாளமான தாய்மொழியை, தேவையற்ற ஆங்கில மோகத்தின் மூலம் இழந்து கொண்டிருக்கிறோம். தேவையற்ற இம்மோகத்திலிருந்து நாம் எப்போது மீண்டு, அறிவென்றால் ஆங்கிலம்தான் என்ற மாயையை கழற்றி எறியப் போகிறோம்.

- தினமணி

நன்றி - தினக்குரல்

இந்த கூத்தை ஏன் கேக்கிறீங்கள்!!!

இன்று காலை TVயில் (sky 797 south4you) '''டொமாட்டோ எக் சூப்''' செய்வது எப்படி என்று ஒரு வெருளியை வைத்து காட்டினார்கள்..

அவர்கள் ஆங்கிலமும் அவர்கள் பாவனைகளும்..........

எனது ( ஆங்கில) நண்பியும் ஏதோ ''காம்டி''(கொமடி) நிகழ்ச்சி பார்ப்பது போல் பார்த்து ரசித்தாள்!

மிக அவமானமாக இருந்தது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் குடும்பத்தில் வந்த தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியும், ஜெயலலிதாவின் ஜெயா தொலைக்காட்சியும் வேணுமென்றே ஆங்கிலத்தை புகுத்துகிறார்கள். சூரியத் தொலைக்காட்சி என்று பெயரை வைத்திருக்கலாம் தானே. அத்தொலைக்காட்சியில் வரும் நாடகங்களில் அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும் தான் அழைக்கிறார்கள். போதாக்குறைக்கு பெஸ்டு கண்ணா பெஸ்டு என்று செய்திகளுக்கிடையில் விளம்பரம் வேறு. தமிழ் நாட்டுத்திரைப்படங்களில் தமிழர் அல்லாதவர்களின் பங்கு அதிகமாக இருப்பதினால் திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் அதிகளவு தமிழ்க் கொலை நடைபெறுகிறது. இப்படி பட்ட தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கியின் பாட்டாளி மக்கள் கழகத்தின் மக்கள் தொலைக்காட்சி தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் புலத்தில் சில தமிழர்களின் வீடுகளில் ஈழத்துச் செய்திகளைத் தரும் தொலைக்காட்சிகள், தமிழை வளர்க்கும் மக்கள் தொலைக்காட்சிக்கு பதிலாக, தமிழைக் கொலைசெய்யும் தொலைக்காட்சிகள் இருப்பது கவலை தரும் விடயமாக இருக்கிறது. மொழியை இழந்தால் அடையாளத்தை இழப்போம் என்பதை இவர்களுக்கு ஏன் தான் தெரியவில்லையோ?.

ஆங்கில மோகத்தின் விளைவுகளை சமூக, அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் வெளிப்படையாகவே காண முடிகிறது. குழந்தைகள் அம்மாவை `மம்மி' என்றும் அப்பாவை `டாடி' என்றும் அழைக்க வைப்பதில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் ஆனந்தம் அடைகின்றனர்

தமிழக கிராமிய பாடல் கலைஞர் குப்புசாமியின் பாடல் நினைவுக்கு வருகின்றது

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

தமிழன் நான் அழுகிறேன் விம்மி விம்மி

சீனாவில் பிறந்திருந்தால் சீன மொழி கேட்டிருப்பேன்

ஜேர்மனியில் பிறந்திருந்தால் ஜேர்மன் மொழி கேட்டிருப்பேன்

ஏனோ நான் தமிழ் நாட்டில் பிறந்துவிட்டேன்

இங்கிலாந்து மொழி கேட்டேன் கண்ணீர் விட்டேன்

அன்பு பொங்க பொங்கலிடும் தமிழ்நாடு தொலைந்ததையா

ஆங்கிலேயன் கேக்கு வெட்டும் பண்பாடு நுழைந்ததையா

புண்ணாகி தமிழ் நெஞ்சம் துடிக்குதையா

புயல் காற்று தமிழ் மண்ணில் அடிக்குதையா

இப்படி தொடர்கின்றது இப்பாடலை இங்கு தரவேற்றி கேட்டு மகிழுங்கள்

http://www.mediafire.com/?5ufjwbmdhsd

இந்த பாடலை கிட்டத்தட்ட 3 வருடத்துக்கு முன்னர் கேட்டேன் அதன் வரிகள் என்னை கவர்ந்தது அதனால் இணைகின்றேன் இதன் உண்மைத்தன்மையையோ அல்லது இந்த தலைப்பில் விவாதிக்கும் நோக்கத்திலும் நான் இதனை இடவில்லை ஏன் எனின் தமிழ் நாட்டு நடைமுறை எனக்கு தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

இறுவெட்டு - இருப்பாய் தமிழா நெருப்பாய்

இயற்றியவர் - காசி ஆனந்தன்

தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத்தமிழ் வாயால் 'மம்மி' என்றழைத்தாய்

அழகுக்குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்

என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்

இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை

'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன் போக்கை

இறவை 'னைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை

இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?'

வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?'

துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'

தொலையாதா நம் தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரெண்டு' என்பதா?

கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?

கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?

கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா?'

பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸிடிக்கா?'

வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாடலைக் கேட்க இங்கே செல்லவும்

http://www.eelasongs.com/content/view/33/12/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாள்க டமிழகம்வாள்க டமிழகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் தமிழை அழிப்பதில் ஏ.ஆர்.ரகுமானின் பங்கு

http://tamilvideo.info/view_video.php?view...c6be3a127a5aaca

மிகவும் உணர்ச்சிகரமான பாடல்.

தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள் என்பதே என் கொள்கை.

சின்ன வயதில் வீட்டில் தமிழில் பேசாவிடில் பதில் வராது என் வீட்டில்

:lol:

இப்போது தூயா?

இப்போதும் அதே நிலை உள்ளதா? எங்கள் வீட்டிலும் தமிழில்தான் கதைப்போம். ஆனால் பிள்ளைகள் வளர்ந்தபின்னர், அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள். பெற்றோருடன் கதைக்கும்போது மட்டும் தமிழில் பேசிக்கொள்வார்கள். அடுத்த சந்ததி தமிழை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் இங்கு பிறந்த பிள்ளைகள் பலர் தமிழைச் சரளமாகக் கற்றுத் தேர்ந்திருந்தாலும், அவர்களுடைய தமிழ் நண்பர்களோடுகூட ஆங்கிலத்தில் தான் கதைக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தூயா?

இப்போதும் அதே நிலை உள்ளதா? எங்கள் வீட்டிலும் தமிழில்தான் கதைப்போம். ஆனால் பிள்ளைகள் வளர்ந்தபின்னர், அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள். பெற்றோருடன் கதைக்கும்போது மட்டும் தமிழில் பேசிக்கொள்வார்கள். அடுத்த சந்ததி தமிழை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் இங்கு பிறந்த பிள்ளைகள் பலர் தமிழைச் சரளமாகக் கற்றுத் தேர்ந்திருந்தாலும், அவர்களுடைய தமிழ் நண்பர்களோடுகூட ஆங்கிலத்தில் தான் கதைக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

யக்கோ உங்கட ஆதங்கம் புரியுது ஆனா நாம இருக்கிற நாடு வேற பாச கதைக்குது யக்கோ......வேலைசெய்யிர இடத்தில நாம அவன்களோட நம்ம பாசயில கதைச்சா அடிக்க வாரமாதிரி பாக்கிரான் யக்கோ......கொம்னிகேசன் (communication) விளங்குர பாசயில இருக்கோனும் அதைவிட இயற்கையா இருக்கவேணும்......இங்க படிச்சவங்களுக்கு அவங்க பள்ளிக்கூடத்தில படிச்ச பாசைதான் இயற்கையா(natural) வருமக்கோ........

நாங்கள் நாடு பிரிக்க போராட்டம் தொடங்கினம் ஆனா புலன்பெயந்து நம்ம சந்ததிட்டயிருந்து தமிழை பிரிக்கிறம் எண்டு சொல்லுரியள்.....பயப்படாதேங்கோ தமிழ் ரிவி இருக்குது இன்னும் கொஞ்சகாலம் இளுபடுமக்கோ................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.