Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை

Written by Pandaravanniyan - Jul 31, 2007 at 02:07 PM

யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் 11.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நாவலர் வீதியில் உள்ள அன்னசத்திர ஒழுங்கையில் வைத்து இவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற வேளையில் நாவலர் வீதி உதயன் பணிமனை சந்தியிலும் மற்றும் இலுப்பையடிச் சந்தியிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்தாகும்.

மரணம் அடைந்தவர் அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடம் என்னும் முகவாரியைச் சேர்ந்த வடிவேலு சந்திரப் பிரபு வயது 32 என்பவராகும். குறிப்பி;ட்ட இடத்திற்குச் சென்ற யாழ் மாவட்ட நீதிபதி சடலத்தைப் பார்வையிட்டதைத் தொடாந்து; யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் முச்சக்கர வாகன ஓட்டுநர் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 14:54 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நாவலர் வீதியில் உள்ள அன்ன சத்திர ஒழுங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் இடம்பெற்ற போது நாவலர் வீதி "உதயன்" பணிமனைச் சந்தியிலும் இலுப்பையடிச் சந்தியிலும் சிறிலங்கா இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுட்டுக்கொல்லப்பட்டவர், அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடத்தைச் வடிவேலு சந்திரப்பிரபு (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ். மாவட்ட நீதிபதி சடலத்தைப் பார்வையிட்டார். அதன் பின்னர் சந்திரப்பிரபுவின் சடலம் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

மேலும் யாழ். நகரப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் "உதயன்" பணிமனைச்சந்தி, முட்டாஸ் கடைச் சந்தி மற்றும் மின்சார நிலைய வீதிச்சந்தியில் இன்று காலை 9.30 மணியளவில் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வீதிகள் வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இதனால் அந்த வீதிகளில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. பிற்பகல் 1 மணிவரை இச்சோதனை நடவடிக்கை நீடித்தது

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மேலும் ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கோணமலைத் தோட்டம் கொட்டடியில் மானிப்பாய் வீதியில் தனது வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து அற்புதராஜ் என்ற கோபுவை (வயது 42) இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தம்பிமுத்துவின் உடல் யாழ். போதனா மருத்துவமனையில் சிறிலங்கா காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வாகன ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு குழந்தையின் தந்தையான நல்லதுரை சௌந்திரராசா (வயது 38) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என்று யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மராட்சி சாவகச்சேரி தெற்கு சரசாலையைச் சேர்ந்தவர் நல்லதுரை.

யாழ். நகரில் வர்த்தக பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நல்லதுரையை கடைசியாக பார்த்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர் என்றும் நல்லதுரையின் மனைவி அளித்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 34 வயது குடும்பஸ்தர் ஒருவரை மட்டுவில் இராணுவ முகாமுக்கு வர வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 23 ஆம் நாள் யாழ். மனித உரிமைகள் ஆணையத்திடம் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மூன்றாவது சூட்டு சம்பவம்

உந்துருளியில் சென்ற இரு இனம் தெரியாத ஆயுததாரிகளால் முடிவாவடி பகுதியில் கள்வியங்காட்டிற்கும் ஆடியபாதம் வீதிக்கும் இடையே செவ்வாய் கிழமை மாலை சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது காயமடைந்தவர் திருநெல்வேலி சிவன்கோவிலடியை சேர்ந்த 21 அகவையுடைய பாலசிங்கம் சுரேஸ் எனத்தெரியவருகிறது. இதேவேளை இருவேறு சூட்டு சம்பவங்களில் இருபொதுமக்கள் கொல்லப்பட்டமை தெரிந்ததே.

-பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இன்றும் ஒரு மாணவர் சுட்டுப் படுகொலை

[வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 11:40 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ்ப்பாணத்தில் இன்றும் ஒரு மாணவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் முடமாவடிச் சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் இப்படுகொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர் தணிகாசலம் சசிகரன் (வயது 25) என்றும் அவர் திருநெல்வேலி உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் என்றும் தெரியவந்துள்ளது.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(3 ஆம் இணைப்பு) யாழில் இன்றும் ஒரு மாணவர் சுட்டுப் படுகொலை

[வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 11:40 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் தணிகாசலம் சசிரூபன் (வயது 25) என்ற மாணவர் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி தரங்காவில் பிள்ளையார் கோவிலுக்கும் முடமாவடிச் சந்திக்கும் இடையில் உள்ள வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் ஈருருளியில் சசிரூபன் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த துணை இராணுவக் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

பலாலி வீதியை அண்மித்ததாக இருக்கும் இந்த பகுதி சிறிலங்கா இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதுடன் அடிக்கடி அப்பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட சசிரூபன், திருநெல்வேலி தொழிநுட்பக் கல்லுரியின் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று வந்தார்.

சசிரூபனின் தந்தையாரும் இளைய சகோதரரும் சம்பவ இடத்தில் சடலத்தை அடையாளம் காட்டினர்.

தொழில்நுட்பக் கல்லுரி மாணவர்களும், விரிவுரையாளர்களும் அப்பகுதிக்கு விரைந்து சடலத்தை மீட்டு யாழ். மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.

ஆனால் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் சடலத்தை அப்புறப்படுத்த மறுத்து நீதிபதி வந்த பின்னரே சடலத்தை அப்புறப்படுத்த முடியும் என்று கூறினர்.

சம்பவ இடத்திற்கு இன்று முற்பகல் யாழ். மாவட்ட நீதிபதி விசாரணைக்காக சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஊடகவள மாணவருமான டிலக்சனை நேற்று துணை இராணுவக் குழுவினர் படுகொலை செய்த நிலையில் இன்றும் மற்றொரு மாணவர் படுகொலை செய்யப்பட்டமையானது யாழ். மாணவர் சமூகத்திடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

puthinam

மாணவர் சமூகத்திடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இன்னும் கொஞ்ச நாளிலை அடங்கிப் போயிடும். பிறகு அடுத்தவர் இரத்தம் சிந்தத்;தான் மீண்டும் கொதிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் தொடரும் படுகொலைகளிலிருந்து அப்பாவிகளை காப்பாற்றப் போவது யார்?

[02 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

* யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி

யாழ்.குடாநாட்டில் தினமும் தொடரும் படுகொலைகளிலிருந்து அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்கப் போவது யாரென, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.

கொக்குவில் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை யாழ்.பல்கலைக்கழக ஊடக பயிற்சிநெறி மாணவனான ச.நிலக்‌ஷனின் படுகொலை தொடர்பாக விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மாணவர் ஒன்றியம் தனது கடும் விசனத்தை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்;

சிறிது நாள்கள் ஓய்ந்திருந்த படுகொலைகள் தற்போது மீளவும் ஆரம்பமாகியுள்ள சூழல் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. கடந்த இரவு வேளை எமது பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நெறியை சேர்ந்த மாணவன் ச.நிலக்‌ஷன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வளமான, திறமைமிக்க ஊடக மாணவனை எமது சமூகம் இழந்துள்ளது. அவரது இழப்பின் வகை ஈடு செய்ய முடியாதது மட்டுமன்றி கண்டிக்கப்படவும் தக்கது.

வன்முறைப் பாணியில் நடைபெறும் இத் தொடர் கொலைகள் சர்வதேச தரப்புகளின் கவனத்தில் தணிந்திருந்த போதும் இப்போது மீளவும் ஆரம்பித்துள்ளது.

நிறுவன ரீதியான தொடர்புடையவர்களின் படுகொலைகள் மட்டுமே அவர் சார்ந்த நிறுவனங்களால் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் நாளாந்தம் பல அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணமேயுள்ளனர்.

இவ் அனைத்துக் கொலைகளையும் மனித நேயத்தோடு கண்டிப்பது மட்டுமன்றி சர்வதேச கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஆயுதப் போரின் அடிப்படையில் நடைபெறும் நிழல் யுத்தத்துக்கு பல இளைஞர்கள் அநியாயமாக பலியாவதை தொடர்ந்து பார்த்து நிற்பது வேதனையான விளைவுகளையே தரும். இவ்வாறான கொலைகளுக்கு காரணமானவர்கள் யார்? குடா நாட்டின் பாதுகாப்பற்ற இச் சூழ்நிலைக்கு காரணம் யாது? என, பொறுப்புக் கூற வேண்டிய பதவிகளில் உள்ளோரின் கவலையீனமே படுகொலைகள் தொடர வாய்ப்பாகவுள்ளது.

எமது சக மாணவனின் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரது இழப்புகளுக்கு அனுதாபத்தையும் தெரிவித்து அவரது இறுதிக் கிரியைகள் வரை எமது மாணவர்கள் துக்க நாளை கடைப்பிடிக்கவுள்ளனர்.

மேலும் இப் படுகொலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு துறையினர் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதோடு மக்கள் பிரதிநிதிகளும் தமது பங்களிப்பை ஆற்ற வேண்டுவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.thinakkural.com/news/2007/8/2/i...s_page32751.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில் இளம் பெண் சுட்டுக்கொலை

[வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 20:35 ஈழம்] [செ.விசுவநாதன்]

யாழ். தென்மராட்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேசம் சங்கத்தானை பெரிய அரசடி வீதியில் ஈருருளியில் சென்று கொண்டிருந்த மகேந்திரன் தரணி (வயது 31) என்ற பெண்ணை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அண்மையில் சாவகச்சேரி நூணாவில் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக யாழ். குடா நாட்டில் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.