Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். களத்தின் செல்வங்களுக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது தனித்துவம் பிரபல்யம் அடையனுமன்னா.. மக்கள் ரசனையை இழுக்க வேணும்

எங்கள் தனித்துவம் பிரபலம் அடைய மக்கள் ரசனையை வளர்க்க வேண்டும். ரசனைத்தரத்தை சொன்னேன்.

:mellow:

பொன்னி இந்த இடத்தில் தான் நாங்க இருவரும் முரண்படுறம்...

எமது மக்களின் ரசனையை எப்படி வளர்க்கப் போறீங்க...?! மக்களின் ரசனை மட்டத்துக்கு வெளில நின்றா இல்ல உள்ள நின்றா.. என்பதுதான் பிரச்சனையே. வெளில நின்று என்றால்.. தொடர்ந்து எம்மவர் படைப்புக்கள்.. புறக்கணிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகலாம்.

மக்களின் ரசனையில் மாற்றம் வரணும் என்றால் முதலில் தற்போதுள்ள ரசனை மட்டத்துள் நின்று.. சிறுகச் சிறுக மாற்றங்களை உண்டு பண்ண முயல வேண்டுமே தவிர.. ஒரேயடியா.. தனித்துவம் என்று எமது படைப்புக்களை படைப்பாளியின் ரசனைக்கு வழங்க.. மக்கள் பிற தேர்வுகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை நோக்கி ஓட அதிகம்..பிரயத்தனம் செய்யத் தேவையில்லை.

எமது படைப்பாளிகள் அன்றும் சரி இன்றும் சரி போட்டிக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.. என்பதை உணர முடிகிறது. அந்த விரக்திதான் மக்கள் மீது வெறுப்பாகி உமிழப்படுகிறது. அது மக்களை படைப்புக்களில் இருந்து விலக்கி வைக்குமே தவிர நெருங்க வைக்காது.

நேசறியில.. பிள்ளையின் ரசனைக்குத்தான் கல்வி.. பிள்ளையின் விரும்பம் அதிகம் ஆதிக்கம் செய்யும். ஏலெவலில.. கல்வி மாணவனைத் தெரிவு செய்யும். இப்படித்தான் அணுகனும் மக்களின் ரசனையை..! அதைவிட்டிட்டு... மக்களுக்கு ஒரேயடியா நேசறிலேயே ஏலெவலை திணிக்க முற்பட்டால் படைப்பு..ரசிக்கப்படாது.. ஒதுக்கத்தான் செய்யப்படும். மக்களும் வேறு நேசறிதான் தேடிப்போவினம்...! :P

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பொன்னி இந்த இடத்தில் தான் நாங்க இருவரும் முரண்படுறம்...

மக்களின் ரசனையில் மாற்றம் வரணும் என்றால் முதலில் தற்போதுள்ள ரசனை மட்டத்துள் நின்று.. சிறுகச் சிறுக மாற்றங்களை உண்டு பண்ண முயல வேண்டுமே தவிர.. ஒரேயடியா.. தனித்துவம் என்று எமது படைப்புக்களை படைப்பாளியின் ரசனைக்கு வழங்க.. மக்கள் பிற தேர்வுகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை நோக்கி ஓட அதிகம்..பிரயத்தனம் செய்யத் தேவையில்லை.

ஆமாம்.. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரசனையை வளர்க்க முயலவேண்டும். அதற்கு உங்களைப்போன்ற சிந்திக்கத்தலைப்படும் மக்களின் ஆதரவுதான் தேவை. பெருத்த வருமானத்தை தேடுவது இப்போது எங்கள் நோக்கமல்ல. சிறுக சிறுகச் செய்வோம். எங்கள் படைப்புகள் எங்கள் கலை என்று ஒரு அபிமானத்தை வளர்ப்போம். நன்றி

:mellow:

பொன்னியின் செல்வன், நெடுக்காலபோவான்... உங்கள் இரண்டு பேரின் வாதமும் ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. முக்கியமாக, நெடுக்காலபோவானின் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல, எமது தமிழ்மக்களின் ரசனை மிகவும் வறண்டு போயிருக்கிறது. இதில் வேதனையான விடயம் என்னவெனில், திறமையுள்ள கலைஞர்களின் ரசனையே வறண்டதாகத்தான் காணப்படுகிறது. எமது இளைய சமுதாயத்திடம் திறமைகள் பல உள்ளன. ஆனால் அவர்களை வழிநடத்திச் செல்ல திறமையான வழிகாட்டிகள் இல்லை. காரணம் பலர் தங்கள் சுயலாபத்திற்காக எம் இளைய சமுதாயத்தையும் தங்கள் வழியிலேயே நடக்க வைப்பதுதான்.

எமது கலைஞர்களை பாராட்டுவதற்கு நான் தயங்குவதில்லை. ஆனால் அவர்களின் படைப்புத்தரம் ஒரு தரத்திற்கு மேல் செல்வதில்லை. பொன்னியின் செல்வன் குறிப்பிட்ட படலைக்குப் படலை, மற்றும் வை ரி லிங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நானும் பார்த்திருக்கிறேன். வை ரி லிங்கம் நிகழ்ச்சியை ஓரிரு தடவைகள் தான் பார்த்திருக்கிறேன். அவரின் நிகழ்ச்சி, நகைச்சுவை என்ற பெயரில் மக்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அதுமட்டுமின்றி, அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது போல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார். அதேபோல், படலைக்குப் படலையும் தொடங்கிய இடத்திலேயே இன்னும் நிற்கிறார்கள். அவர்களின் படைப்புத்தரம் முன்னேறவில்லை. அவர்களின் கதை, வசனங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கும். மூன்று வருடங்களுக்கும் மேலாக (எனக்குத் தெரிந்து) அவர்கள் இந்நிகழ்ச்சியைச் செய்கிறார்கள். ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. எம்மவர்களின் படைப்புத்திறன் இந்தளவில்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, படைப்புகளைப் படைப்பவர்கள், அவ்வவ் துறைகளில் தங்களது கல்வியை, ஆய்வை மேற்கொள்வதன் மூலம் சிறந்த படைப்புகளைத் தரமுடியும். புலம்பெயர் நாடுகளில் படிப்பதற்கும் ஆய்வுகள் செய்வதற்கும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை எத்தனைபேர் பயன்படுத்துகிறார்கள்? அதுமட்டுமின்றி எம்மில் பலர், படைப்புகள் தரமற்றவையாக இருந்தாலும், பலர் முகஸ்துதிக்காக அவர்களைப் பாராட்டுவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். முகஸ்துதிக்காக மட்டுமின்றி, போட்டிக்காகவும் பலர் இதனைச் செய்கிறார்கள். அவர்களின் ஒரு படைப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றவுடன் அவர்களுடைய தலைக்கனம் எங்கோ போய்விடுகிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலரிடம் இல்லை. பாராட்டை மட்டுமேஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள். படைப்பாளிகளுக்கு எப்போது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வருகிறதோ அப்போதுதான் அவன் சமூகத்தில் உண்மையான படைப்பாளியாகிறன். அதுவரை, அவனால் தரமான படைப்புகளைப் படைக்கமுடியாது. ரசனையுள்ள மக்களாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

வணக்கம் பொன்னியின்செல்வன்,

நீங்கள் தொடங்கியிருக்கும் இந்தத் தலைப்பு ஆரோக்கியமான தலைப்பாக அமைந்திருப்பது மகிழ்ச்சி. அதன் கீழ் தொடரும் கருத்தாடலும் ஆக்கபூர்வமானதாக தொடர்வது நல்ல விடயம். உங்களின் ஆர்வத்துக்கும் கருத்தாடலுக்கும் முதலில் பாராட்டுக்கள்.

தொடர்ந்து யாழ் கருத்துக்களத்தில் நம்மவர் படைப்புக்களை அறிமுகப்படுத்துங்கள். நமது கலைஞர்களை அறிமுகப்படுத்துங்கள். ஒருத்தரும் கருத்தெழுதவில்லை என்று கவலையோ, சலிப்படைதலோ வேண்டாம். நிச்சயமாக பலர் பார்ப்பார்கள் - வாசிப்பார்கள் - அறிந்துகொள்வார்கள். எனவே சோர்வடையாது தொடருங்கள்.

நன்றி

  • தொடங்கியவர்

பொன்னியின் செல்வன், நெடுக்காலபோவான்... உங்கள் இரண்டு பேரின் வாதமும் ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. முக்கியமாக, நெடுக்காலபோவானின் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல, எமது தமிழ்மக்களின் ரசனை மிகவும் வறண்டு போயிருக்கிறது. இதில் வேதனையான விடயம் என்னவெனில், திறமையுள்ள கலைஞர்களின் ரசனையே வறண்டதாகத்தான் காணப்படுகிறது. எமது இளைய சமுதாயத்திடம் திறமைகள் பல உள்ளன. ஆனால் அவர்களை வழிநடத்திச் செல்ல திறமையான வழிகாட்டிகள் இல்லை. காரணம் பலர் தங்கள் சுயலாபத்திற்காக எம் இளைய சமுதாயத்தையும் தங்கள் வழியிலேயே நடக்க வைப்பதுதான்.

எமது கலைஞர்களை பாராட்டுவதற்கு நான் தயங்குவதில்லை. ஆனால் அவர்களின் படைப்புத்தரம் ஒரு தரத்திற்கு மேல் செல்வதில்லை. பொன்னியின் செல்வன் குறிப்பிட்ட படலைக்குப் படலை, மற்றும் வை ரி லிங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நானும் பார்த்திருக்கிறேன். வை ரி லிங்கம் நிகழ்ச்சியை ஓரிரு தடவைகள் தான் பார்த்திருக்கிறேன். அவரின் நிகழ்ச்சி, நகைச்சுவை என்ற பெயரில் மக்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அதுமட்டுமின்றி, அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது போல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார். அதேபோல், படலைக்குப் படலையும் தொடங்கிய இடத்திலேயே இன்னும் நிற்கிறார்கள். அவர்களின் படைப்புத்தரம் முன்னேறவில்லை. அவர்களின் கதை, வசனங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கும். மூன்று வருடங்களுக்கும் மேலாக (எனக்குத் தெரிந்து) அவர்கள் இந்நிகழ்ச்சியைச் செய்கிறார்கள். ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. எம்மவர்களின் படைப்புத்திறன் இந்தளவில்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, படைப்புகளைப் படைப்பவர்கள், அவ்வவ் துறைகளில் தங்களது கல்வியை, ஆய்வை மேற்கொள்வதன் மூலம் சிறந்த படைப்புகளைத் தரமுடியும். புலம்பெயர் நாடுகளில் படிப்பதற்கும் ஆய்வுகள் செய்வதற்கும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை எத்தனைபேர் பயன்படுத்துகிறார்கள்? அதுமட்டுமின்றி எம்மில் பலர், படைப்புகள் தரமற்றவையாக இருந்தாலும், பலர் முகஸ்துதிக்காக அவர்களைப் பாராட்டுவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். முகஸ்துதிக்காக மட்டுமின்றி, போட்டிக்காகவும் பலர் இதனைச் செய்கிறார்கள். அவர்களின் ஒரு படைப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றவுடன் அவர்களுடைய தலைக்கனம் எங்கோ போய்விடுகிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலரிடம் இல்லை. பாராட்டை மட்டுமேஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள். படைப்பாளிகளுக்கு எப்போது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வருகிறதோ அப்போதுதான் அவன் சமூகத்தில் உண்மையான படைப்பாளியாகிறன். அதுவரை, அவனால் தரமான படைப்புகளைப் படைக்கமுடியாது. ரசனையுள்ள மக்களாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கருத்துக் கூற முன்வந்தமைக்கு நன்றி.

முக்கியமாக, நெடுக்காலபோவானின் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமாக இருக்கிறது

நீங்கள் நெடுக்காலபோவானின் எந்த கருத்துக்கள் நடைமுறை சாத்தியமானவை என்று நினைக்கிறீர்கள். தென்னிந்திய சினிமா, தென்னிந்திய சீரியல்களின் சீரிய படைப்புக்களில் எம்மக்கள் மயங்கிப்போய் கிடக்கிறார்கள். அவர்களை எம் கலைஞர்கள் பக்கம் திருப்ப வேண்டுமென்றால் அதே வழியிலேயே சென்று திசை திருப்பவேண்டும் என்கிறார். இதையே தொழிலாகக் கொண்ட அவர்களின் அதே வகையில் செல்வதும், செய்வதும் சாத்தியமானதா ? இதையே தொழிலாகக்கொண்டவர்கள் நம்மிடையே அதிகம் இல்லை.

அது எங்களுக்கு அவசியம் இல்லை என்றால் - இல்லாவிட்டல் பேசாமல் இருங்கள். சனங்கள் உங்களை கருவேப்பிலையாகவும் பார்க்கமல் தூக்கி எறிந்து விடுவார்கள் என்கிறார்.

எங்கள் கலைஞர்களை பாராட்டினால் தலைக்கனம் வந்துவிடும் என்கிறீர்கள். இதுதான் நம்மிடையே ஊறிப்போன ஒரு கீழான குணம். தெரிந்ததாகக் காட்டிக் கொண்டாலே உவனுக்கு தலைக்கனம் வந்து விடும் என்று தெரியாதவர்கள் போலப் போகும் கூட்டமும் இருக்கிறது. தென்னிந்தியக் கலைஞர்கள் தங்கள் கட் அவுட் களுக்கு பாலபிசேகம், பியர் அபிசேகம் செய்வதை தடுத்து நிறுத்தி தங்கள் எளிமையை, சமூக நோக்கை காட்டியதில்லையே. இவர்களை ஒரு சொல்லு பாராட்டினால் தலை வீங்கி விடும். அப்படியா?

செய்த உதவிக்கு "நன்றி" என்று ஒரு வார்த்தை சொல்ல நேர்ந்தால் எங்கே தங்களுக்கு அது அவமானம் என்ற எண்ணத்தில் Thanks சொல்லி கழரும் கூட்டமும் இருக்கிறது.

பகிரங்கமாக பார்ப்பதற்கும் அனுபவிக்கவும் படைக்கப்பட்ட எந்த படைப்பும் விமர்சனத்தை எதிர்பார்க்கத்தான் வேண்டும். கோபப்படத் தேவையில்லை. ஆனால் படைப்பாளிக்கும் தன் நிலை விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் தரவேண்டும்.

விமர்சனங்களின் தீர்ப்பு என்றும் அறுதியானதல்ல.

படலைக்குப் படலையும் தொடங்கிய இடத்திலேயே இன்னும் நிற்கிறார்கள். அவர்களின் படைப்புத்தரம் முன்னேறவில்லை. அவர்களின் கதை, வசனங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கும். மூன்று வருடங்களுக்கும் மேலாக (எனக்குத் தெரிந்து) அவர்கள் இந்நிகழ்ச்சியைச் செய்கிறார்கள். ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை

கதை வசனங்களில் தொடர்பு என்பது தென்னிந்திய சீரியல்களைப்போல எதிர்பார்க்கிறிர்களா ? இது ஆங்கில sitcom வகையிலானது. ஒவ்வொருமுறையும் தனிக்கதைகள். பாத்திரங்கள் தான் ஒன்று. மற்றது எந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள். கதை? தொழில் நுட்பம்? நடிப்பு?

வை ரி லிங்கம் நிகழ்ச்சியை ஓரிரு தடவைகள் தான் பார்த்திருக்கிறேன். அவரின் நிகழ்ச்சி, நகைச்சுவை என்ற பெயரில் மக்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அதுமட்டுமின்றி, அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது போல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார்

வைரிலிங்கம் சோவில் ஓரிரண்டு நிகழ்ச்சிகளை பார்த்தே அரைத்த மாவல் அரைக்கிறார் என்று கண்டுபிடீத்து விட்டீர்கள். பிறர் மனதை புண்படுத்தியது என்று சொன்னால் அதுதான் அந்த தயாரிப்பாளரின் நோக்கமாக இருக்கவேண்டும். சமுகத்தின் மலினங்களை, கீழ்த்தரமானவையை, பிற்போக்குத்தனத்தை, நரிக்குணமுள்ளவர்களை நையாண்டியாகச் சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்படத்தான் செய்யும்.

பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். அதை தெய்வம் என்று கருதியவர்கள் மனம் புண்பட்டிருக்கும். ஆனால் அதுதான் அவரது நோக்கம். தெய்வம் என்றால் தன்னை தண்டிக்கவேண்டும் என்று சவால் விட்டார். அது சரியானது, பிழையானது என்று நான் வாதிட வரவில்லை. அது அவருடைய பார்வை. அவருடைய வழி.

எதையும் நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.

மற்றது விமர்சனம் தேவையானது . அங்கே கேள்வி எழுப்பப்படுகிறது. விடையும் சிலவேளை கிடைக்கலாம்.

தொழில்நுட்பத்தில் இங்கு பயிலலாம். (இயக்கம் உட்பட) இளஞர்கள் முதிய கலைஞர்களின் பிழையான வழி காட்டலில் நடக்கத் தேவையுமில்லை.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு .. நீங்கள் தந்த இளைஞர் அமைப்பின் இணைப்பில் தொடர்பு கொள்ள்முடியவில்லை. எமது படைப்புகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டுக்கு மிக்க நன்றி.

..

http://www.tyoaustralia.com/contactus.htm

  • தொடங்கியவர்

நன்றி கந்தப்பு.. இப்பொழுது அந்த இணையத்துடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

:)

ஒரு கோட்டைச் சிறியதாக்கவேண்டுமென்றால், அதனை விடப் பெரிய கோட்டைப் போடுவதால் மட்டும்தான் முடியும். தென்னிந்திய சினிமாவோடு எமது படைப்புக்களை ஒப்பிட முடியாது. காரணம் தென்னிந்திய சினிமா 70 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவர்களின் தரத்திற்கு வர எமக்கு நீண்ட காலங்கள் பிடிக்கும். அதற்காக எமக்கும் 70 வருடங்கள் பிடிக்கும் என நான் இங்கு கூறவில்லை. இன்னுமொரு 10-15 வருடங்களாவது பிடிக்கும் என நினைக்கிறேன். எமது கலைஞர்கள் அவர்களின் ஒருசில படைப்புகள் வெளிவந்தவுடனேயே, மக்கள் தென்னிந்தியத் தரத்திற்கு அதனை மதிக்கவேண்டுமென நினைக்கிறார்கள். தென்னிந்தியச் சினிமா உலகில் ஒரு படத்தை உருவாக்குபவர் பல வருடங்கள் அதற்குள் வாழ்ந்தபின்பே உருவாக்க முன்வருகிறார். உதவி இயக்குனராகவோ, நடிகராகவோ அல்லது வேறு ஒரு சினிமாக்காரராகவோ வாழ்ந்த பின்பே அவர்கள் வெளியில் வருகிறார்கள். ஆனால் எமது கலைஞர்களோ வெறும் பார்வையாளர்களாகவே இருந்து விட்டு சினிமா எடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் அந்தத்துறை பற்றிய போதிய அறிவின்றிகூட படைப்புகள் படைக்கிறார்கள்.படலைக்குப் படலையை மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்க்கத் தொடங்கிய போது, நான் மிகவும் ரசித்தேன். அவர்களின் திறமையை நினைத்துப் பெருமைப்பட்டேன். அவர்களைத் தொடர்பு கொண்டுப் பாராட்டக்கூட முயற்சித்தேன். ஆனால் தொடர்பு எடுக்க முடியவில்லை. அவர்கள் எங்கு தொடங்கினார்களோ அங்கேயே நிற்கிறார்கள் என்பதுதான் எனது ஆதங்கம். அவர்களின் நிகழ்ச்சி வகை எனக்குப் பிடித்திருக்கிறது. நாம் சாதாரணமாகக் கதைக்கும் பாணியிலேயே திரைக்கதை அமைப்பது பிடித்திருக்கிறது. ஆனால் அந்தத் திரைக்கதையில், நிகழ்ச்சி முழுவதும் ஒரு தொடர்பு இருப்பதில்லை. நான் சொல்வது அந்த அரை மணித்தியாலத்திற்குள் இருக்கும் திரைக்கதையைத்தான். தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களே இன்றும் திரைக்கதையில் முன்னேறவில்லை என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். அவர்கள் ரொறன்ரோ வந்திருந்தவேளையில், ரிவிஐயில் அவர்களின் பேட்டியின் போது, பார்வையாளர்கள் தொலைபேசி ஊடாகப் பேசும் சந்தர்ப்பம் மூலம் ஒரு பார்வையாளர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அவர்களுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையென்பதை. இத்தனை வருடங்களாக நிகழ்ச்சியைப் படைக்கிறார்கள். ஆனால் இன்றுவரை திரைக்கதையைச் சரிசெய்யவில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கும் விளங்கும்.எம்மவர்களின் படைப்புகளை நான் நிச்சயமாக வரவேற்கிறேன். ரசனையுள்ளவர்களுக்கு ஓரிரு படைப்புக்களைப் பார்த்தாலே தரத்தை ஓரளவு அறியமுடியும். நல்ல ரசிகள் யாரிடம் திறமை இருந்தாலும் பாராட்டுவான். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்பதை நம்புபவள் நான். அறிவு, பயிற்சி, அனுபவம், மற்றும் தேடல் மூலம் எதையும் சாதிக்க முடியும். எமது படைப்பாளிகளுக்கு நான் சொல்வதெல்லாம், படைப்புக்களைப் படையுங்கள். உங்கள் படைப்புகளை நீங்களே விமர்சனம் செய்யுங்கள். மற்றவர்களின் விமர்சனங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். வட்டத்திற்குள் இருந்து பார்க்கும்போது, எமக்கு அந்த வட்டம் பெரிதாகத்தான் தெரியும். ஆனால் வெளியில் நின்று பார்க்கும்போதுதான் அதன் உண்மையான அளவு தெரியும். அதுபோலத்தான் விமர்சனங்களும். அதற்காக ரசனை இல்லாதவர்களின் விமர்சனத்தை நீங்கள் கருத்தில் எடுக்கத்தேவையில்லை. அவர்களின் விமர்சனத்தைக் கேட்கும்போதே, அவர்களின் ரசனைத்தன்மை தெரியவரும். எழுத்துக்கள் ஒருவரின் உழைப்பால் மட்டும் முடியும். ஆனால், படைப்புக்கள் பலரின் உழைப்பில் வெளிவருவது. எல்லாவற்றிற்கும் அனுபவங்கள் அவசியம். முதல் ஓரிரண்டு படைப்புக்குள்ளேயே மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் எமது கலைஞர்களைத் தடுமாற வைக்கிறது. உலகத்திலுள்ள எல்லாச் சிறந்த படைப்பாளிகளையும் பாருங்கள். யாருமே குறுகிய காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ஒன்றில் அவர்கள் பலகாலங்கள் அந்தத் துறையில் படித்திருப்பார்கள், அல்லது வேலை செய்திருப்பார்கள். அவர்கள் படித்ததோ வேலை செய்ததோ, அனுபவித்ததோ எமக்குத் தெரிவதில்லை. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர்தான் நாம் அவற்றை அறிந்து கொள்கிறோம். அதுபோலத்தான் எமது படைப்பாளிகளும் பொறுமையாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. கடவுள் இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்குக் கடவுளைச் செருப்பால் அடிப்பது மிகவும் கீழ்த்தரமானது. ஒன்றைச் சுட்டிக்காட்டுவதற்காக நாம் எமது பண்பை இழக்கமுடியுமா? அப்படிச் செய்யும்போதே, அவர்களின் மதிப்பும் கீழிறங்கி விட்டது என்பது எனது கருத்து. வை ரி லிங்கம் நிகழ்ச்சி செய்வதற்கு முன் நான் அவர்மேல் வைத்திருந்த கருத்திற்கும் இந்நிகழ்ச்சியைப் பார்த்ததற்குப் பின்னர் அவரைப் பற்றிய கருத்திற்கும் நிறைய வித்தியாசம். அவருடைய வயதிற்கும் அனுபவத்திற்கும் இப்படி மற்றவர்களைக் கேலி செய்வது சரியென்று உங்களால் நியாயப்படுத்த முடியுமா? ஒரு கோட்டைச் சிறியதாக்கவேண்டுமென்றால், அதனை விடப் பெரிய கோட்டைப் போடுவதால் மட்டும்தான் முடியும். தென்னிந்திய சினிமாவோடு எமது படைப்புக்களை ஒப்பிட முடியாது. காரணம் தென்னிந்திய சினிமா 70 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவர்களின் தரத்திற்கு வர எமக்கு நீண்ட காலங்கள் பிடிக்கும். அதற்காக எமக்கும் 70 வருடங்கள் பிடிக்கும் என நான் இங்கு கூறவில்லை. இன்னுமொரு 10-15 வருடங்களாவது பிடிக்கும் என நினைக்கிறேன். எமது கலைஞர்கள் அவர்களின் ஒருசில படைப்புகள் வெளிவந்தவுடனேயே, மக்கள் தென்னிந்தியத் தரத்திற்கு அதனை மதிக்கவேண்டுமென நினைக்கிறார்கள். தென்னிந்தியச் சினிமா உலகில் ஒரு படத்தை உருவாக்குபவர் பல வருடங்கள் அதற்குள் வாழ்ந்தபின்பே உருவாக்க முன்வருகிறார். உதவி இயக்குனராகவோ, நடிகராகவோ அல்லது வேறு ஒரு சினிமாக்காரராகவோ வாழ்ந்த பின்பே அவர்கள் வெளியில் வருகிறார்கள். ஆனால் எமது கலைஞர்களோ வெறும் பார்வையாளர்களாகவே இருந்து விட்டு சினிமா எடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் அந்தத்துறை பற்றிய போதிய அறிவின்றிகூட படைப்புகள் படைக்கிறார்கள்.படலைக்குப் படலையை மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்க்கத் தொடங்கிய போது, நான் மிகவும் ரசித்தேன். அவர்களின் திறமையை நினைத்துப் பெருமைப்பட்டேன். அவர்களைத் தொடர்பு கொண்டுப் பாராட்டக்கூட முயற்சித்தேன். ஆனால் தொடர்பு எடுக்க முடியவில்லை. அவர்கள் எங்கு தொடங்கினார்களோ அங்கேயே நிற்கிறார்கள் என்பதுதான் எனது ஆதங்கம். அவர்களின் நிகழ்ச்சி வகை எனக்குப் பிடித்திருக்கிறது. நாம் சாதாரணமாகக் கதைக்கும் பாணியிலேயே திரைக்கதை அமைப்பது பிடித்திருக்கிறது. ஆனால் அந்தத் திரைக்கதையில், நிகழ்ச்சி முழுவதும் ஒரு தொடர்பு இருப்பதில்லை. நான் சொல்வது அந்த அரை மணித்தியாலத்திற்குள் இருக்கும் திரைக்கதையைத்தான். தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களே இன்றும் திரைக்கதையில் முன்னேறவில்லை என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். அவர்கள் ரொறன்ரோ வந்திருந்தவேளையில், ரிவிஐயில் அவர்களின் பேட்டியின் போது, பார்வையாளர்கள் தொலைபேசி ஊடாகப் பேசும் சந்தர்ப்பம் மூலம் ஒரு பார்வையாளர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அவர்களுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையென்பதை. இத்தனை வருடங்களாக நிகழ்ச்சியைப் படைக்கிறார்கள். ஆனால் இன்றுவரை திரைக்கதையைச் சரிசெய்யவில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கும் விளங்கும்.எம்மவர்களின் படைப்புகளை நான் நிச்சயமாக வரவேற்கிறேன். ரசனையுள்ளவர்களுக்கு ஓரிரு படைப்புக்களைப் பார்த்தாலே தரத்தை ஓரளவு அறியமுடியும். நல்ல ரசிகள் யாரிடம் திறமை இருந்தாலும் பாராட்டுவான். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்பதை நம்புபவள் நான். அறிவு, பயிற்சி, அனுபவம், மற்றும் தேடல் மூலம் எதையும் சாதிக்க முடியும். எமது படைப்பாளிகளுக்கு நான் சொல்வதெல்லாம், படைப்புக்களைப் படையுங்கள். உங்கள் படைப்புகளை நீங்களே விமர்சனம் செய்யுங்கள். மற்றவர்களின் விமர்சனங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். வட்டத்திற்குள் இருந்து பார்க்கும்போது, எமக்கு அந்த வட்டம் பெரி

  • தொடங்கியவர்

ஒரு கோட்டைச் சிறியதாக்கவேண்டுமென்றால், அதனை விடப் பெரிய கோட்டைப் போடுவதால் மட்டும்தான் முடியும். தென்னிந்திய சினிமாவோடு எமது படைப்புக்களை ஒப்பிட முடியாது. காரணம் தென்னிந்திய சினிமா 70 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவர்களின் தரத்திற்கு வர எமக்கு நீண்ட காலங்கள் பிடிக்கும். அதற்காக எமக்கும் 70 வருடங்கள் பிடிக்கும் என நான் இங்கு கூறவில்லை. இன்னுமொரு 10-15 வருடங்களாவது பிடிக்கும் என நினைக்கிறேன். எமது கலைஞர்கள் அவர்களின் ஒருசில படைப்புகள் வெளிவந்தவுடனேயே, மக்கள் தென்னிந்தியத் தரத்திற்கு அதனை மதிக்கவேண்டுமென நினைக்கிறார்கள். தென்னிந்தியச் சினிமா உலகில் ஒரு படத்தை உருவாக்குபவர் பல வருடங்கள் அதற்குள் வாழ்ந்தபின்பே உருவாக்க முன்வருகிறார். உதவி இயக்குனராகவோ, நடிகராகவோ அல்லது வேறு ஒரு சினிமாக்காரராகவோ வாழ்ந்த பின்பே அவர்கள் வெளியில் வருகிறார்கள். ஆனால் எமது கலைஞர்களோ வெறும் பார்வையாளர்களாகவே இருந்து விட்டு சினிமா எடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் அந்தத்துறை பற்றிய போதிய அறிவின்றிகூட படைப்புகள் படைக்கிறார்கள்.படலைக்குப் படலையை மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்க்கத் தொடங்கிய போது, நான் மிகவும் ரசித்தேன். அவர்களின் திறமையை நினைத்துப் பெருமைப்பட்டேன். அவர்களைத் தொடர்பு கொண்டுப் பாராட்டக்கூட முயற்சித்தேன். ஆனால் தொடர்பு எடுக்க முடியவில்லை. அவர்கள் எங்கு தொடங்கினார்களோ அங்கேயே நிற்கிறார்கள் என்பதுதான் எனது ஆதங்கம். அவர்களின் நிகழ்ச்சி வகை எனக்குப் பிடித்திருக்கிறது. நாம் சாதாரணமாகக் கதைக்கும் பாணியிலேயே திரைக்கதை அமைப்பது பிடித்திருக்கிறது. ஆனால் அந்தத் திரைக்கதையில், நிகழ்ச்சி முழுவதும் ஒரு தொடர்பு இருப்பதில்லை. நான் சொல்வது அந்த அரை மணித்தியாலத்திற்குள் இருக்கும் திரைக்கதையைத்தான். தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களே இன்றும் திரைக்கதையில் முன்னேறவில்லை என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். அவர்கள் ரொறன்ரோ வந்திருந்தவேளையில், ரிவிஐயில் அவர்களின் பேட்டியின் போது, பார்வையாளர்கள் தொலைபேசி ஊடாகப் பேசும் சந்தர்ப்பம் மூலம் ஒரு பார்வையாளர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அவர்களுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையென்பதை. இத்தனை வருடங்களாக நிகழ்ச்சியைப் படைக்கிறார்கள். ஆனால் இன்றுவரை திரைக்கதையைச் சரிசெய்யவில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கும் விளங்கும்.எம்மவர்களின் படைப்புகளை நான் நிச்சயமாக வரவேற்கிறேன். ரசனையுள்ளவர்களுக்கு ஓரிரு படைப்புக்களைப் பார்த்தாலே தரத்தை ஓரளவு அறியமுடியும். நல்ல ரசிகள் யாரிடம் திறமை இருந்தாலும் பாராட்டுவான். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்பதை நம்புபவள் நான். அறிவு, பயிற்சி, அனுபவம், மற்றும் தேடல் மூலம் எதையும் சாதிக்க முடியும். எமது படைப்பாளிகளுக்கு நான் சொல்வதெல்லாம், படைப்புக்களைப் படையுங்கள். உங்கள் படைப்புகளை நீங்களே விமர்சனம் செய்யுங்கள். மற்றவர்களின் விமர்சனங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். வட்டத்திற்குள் இருந்து பார்க்கும்போது, எமக்கு அந்த வட்டம் பெரிதாகத்தான் தெரியும். ஆனால் வெளியில் நின்று பார்க்கும்போதுதான் அதன் உண்மையான அளவு தெரியும். அதுபோலத்தான் விமர்சனங்களும். அதற்காக ரசனை இல்லாதவர்களின் விமர்சனத்தை நீங்கள் கருத்தில் எடுக்கத்தேவையில்லை. அவர்களின் விமர்சனத்தைக் கேட்கும்போதே, அவர்களின் ரசனைத்தன்மை தெரியவரும். எழுத்துக்கள் ஒருவரின் உழைப்பால் மட்டும் முடியும். ஆனால், படைப்புக்கள் பலரின் உழைப்பில் வெளிவருவது. எல்லாவற்றிற்கும் அனுபவங்கள் அவசியம். முதல் ஓரிரண்டு படைப்புக்குள்ளேயே மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் எமது கலைஞர்களைத் தடுமாற வைக்கிறது. உலகத்திலுள்ள எல்லாச் சிறந்த படைப்பாளிகளையும் பாருங்கள். யாருமே குறுகிய காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ஒன்றில் அவர்கள் பலகாலங்கள் அந்தத் துறையில் படித்திருப்பார்கள், அல்லது வேலை செய்திருப்பார்கள். அவர்கள் படித்ததோ வேலை செய்ததோ, அனுபவித்ததோ எமக்குத் தெரிவதில்லை. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர்தான் நாம் அவற்றை அறிந்து கொள்கிறோம். அதுபோலத்தான் எமது படைப்பாளிகளும் பொறுமையாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. கடவுள் இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்குக் கடவுளைச் செருப்பால் அடிப்பது மிகவும் கீழ்த்தரமானது. ஒன்றைச் சுட்டிக்காட்டுவதற்காக நாம் எமது பண்பை இழக்கமுடியுமா? அப்படிச் செய்யும்போதே, அவர்களின் மதிப்பும் கீழிறங்கி விட்டது என்பது எனது கருத்து. வை ரி லிங்கம் நிகழ்ச்சி செய்வதற்கு முன் நான் அவர்மேல் வைத்திருந்த கருத்திற்கும் இந்நிகழ்ச்சியைப் பார்த்ததற்குப் பின்னர் அவரைப் பற்றிய கருத்திற்கும் நிறைய வித்தியாசம். அவருடைய வயதிற்கும் அனுபவத்திற்கும் இப்படி மற்றவர்களைக் கேலி செய்வது சரியென்று உங்களால் நியாயப்படுத்த முடியுமா?

தென்னிந்திய சினிமாவைப்போல அவர்கள் வழியில் சென்று போட்டிபோடமுடியாது என்பதுதான் எனது வாதமும். பிரம்மாண்டமான தொழிலாக வளர்ந்துவிட்ட சினிமாத்துறை அது. காலையில் விழித்ததில் இருந்து மாலையில் நித்திரைக்கு போகும் வரைக்கும் அவர்கள் சிந்தனை, செயற்பாடு எல்லாமே அதைச் சுற்றியதாகவே இருக்கும். அதுதான் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஆதாரம்.

நீங்கள் சொன்ன 70ஓ 80ஓ வருடப்பின்னணியும் இருக்கிறது. அவர்களோடு ஒப்பிடுவதும் என் நோக்கமுமல்ல. இருகோடுகள் பாணியில் ஒரு கோட்டின் அருகில் பெரிய கோடு போட்டு அதை சிறிய கோடு ஆக்குவதும் என் நோக்கமல்ல. என் பழைய குறிப்புகளை ஒருமுறை பார்த்தால் புரியும்.

நான் சொல்வதெல்லாம் எங்கள் கலைஞர்களையும் குறைந்தது கடைக்கண்ணால் ஆவது பாருங்கள் என்பதுதான். நீங்கள் பார்த்தமாதிரியாவது.

எங்கள் கலைஞர்கள் தலைக்கனமுள்ளவர்கள் என்ற வாதத்திலிருந்து நீங்கள் விடுபடுவதாயில்லை. உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஏதாவது காரணமாயிருக்கலாம். ஒன்றை தனியாகப்பாருங்கள்.. பொதுமைப்படுத்தாதீர்கள்.

வைரிலிங்கம் ஷோவில் நீங்கள் பார்த்த ஓரிரண்டு நிகழ்ச்சிகளில் என்ன உங்களை புண்படுத்தியது என்று குறிப்பிடுங்கள்

பெரியாரின் செயலை உதாரணத்திற்காகவே குறிப்பிட்டேன். அதைச் சரியென்றோ பிழையென்றோ சொல்லமாட்டேன் என்றுதான் குறிப்பிட்டேன். அது மற்றவர்களை புண்படுத்தியதுபோல உங்களையும் புண்படுத்தியிருக்கிறது. அல்லது குறைந்தது ஆத்திரமடைய வைத்திருக்கிறது. ஆனால் பெரியாரின் ஆதரவாளர்களை கேட்டுப்பாருங்கள். அவர்கள் சரியென்றே சொல்வார்கள். எனது முடிவும் வேறாக இருக்கலாம். அது எனது சுதந்திரம்.

:lol:

Edited by Ponniyinselvan

பொன்னியின் செல்வன், உங்கள் கருத்துக்கு நன்றி. வை ரி லிங்கம் அவர்களின் எந்தவொரு விடயமும் என்னைப் புண்படுத்தவில்லை. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரின் நாடகத்திறமையை நான் பாராட்டுகிறேன். அவரின் நிகழ்ச்சியை நான் பார்க்க நேர்ந்தபோது இவ்வளவு வயதும் அனுபவமும் நிறைந்த இவருக்கு தனது கருத்துக்களைப் பண்போடு சொல்ல ஏன் முடியவில்லை என்றுதான் யோசித்தேன். லியோனியையும் இவரையும் ஒன்றாகப் பார்க்கவே தோன்றியது. எல்லாத்துறைகளிலும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அதனைப் பண்போடு சொல்லத் தெரிந்திருக்கவேண்டும். இவர் மட்டும் என்றில்லை பல படைப்பாளிகள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஓரிரு நிகழ்ச்சிகள் செய்தவுடனேயே தங்களுக்கென ஒரு நிகழ்வை உருவாக்கி படம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அதனைத்தான் வேண்டாமெனச் சொல்கிறேன். எனது கருத்தை வாசித்தபின்னர், இந்தக் கிழமை அவரின் நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கே விளங்கும். நானும் தொடர்ந்து அவரின் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுக் கருத்தெழுதுகிறேன்.

இப்போதிருக்கும் இளைஞர்கள் பலர் தமது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். மிகவும் திறமையுள்ளவர்கள் இப்படிப் படம் போட்டுக் காட்டுவதில்லை. ஆனால் இப்படிப் படம் போடுகிறவர்களால், அத்திறமைசாலிகளின் திறமைகள் வெளியில் தெரிவதில்லை என்ற ஆதங்கமே. உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அவற்றில் பங்குபற்றுபவர்கள், மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று பாருங்கள். தாங்கள் ஏறிவந்த ஏணியையே எட்டி உதைத்தவர்கள்தான் பலர்.

நான் ஒரு ரசிகை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பேன். என்னால் சரியாகக் குறையைக் கூறமுடியாவிட்டாலும், ஏதோவொரு குறை இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். நடனம், நாடகம், பாட்டு என அனைத்தையும் என்னால் விமர்சிக்க முடியும். ஆனால் எதையும் படித்தது இல்லை. அவற்றில் ஆர்வம் இருந்ததால் அவற்றை ரசிக்கத் தொடங்கினேன். அந்த ரசிப்பின் பலனாக அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். உதாரணமாக, நடனத்தைப் பார்க்கும்போது, நடனமாடுபவரின், அபிநயங்கள், முத்திரைகள், பாவங்கள் போன்றவை பிழையாக இருப்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியும். அதுபோலத்தான் நாடகங்களும்.

அதோடு, படைப்பாளிகள் மக்களையும் கருத்தில் எடுக்கவேண்டும். அவர்களின் படைப்பு இறுதியில் மக்களிடம்தான் போய்ச்சேருகிறது. அப்படைப்பில் ஏதோவொரு செய்தி மக்களைச் சென்றடைகிறது. அப்படிச் சென்றடையும்போது, அது ஒரு நல்ல செய்தியாக இருக்கவேண்டும். படைப்பாளிகள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டுமேயொழிய சமூகத்தை தவறான இட்டுச் செல்பவர்களாக இருக்கக்கூடாது. ஒரு மேடை நடிகன்கூட தனது ஆடைகள் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் (கவர்ச்சியான ஆடைகள் போடுதல்).

நான் இங்கு கருத்து எழுதுவதற்குக் காரணம் இனிவரும் படைப்பாளிகளாவது இந்தக் குறைகளைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவும், ரசிகர்களும் விமர்சனங்களை வெளிப்படையாக வைக்கவேண்டுமென்பதே.

பெரியாரின் ஆதரவாளர்கள் எல்லோரும் சிந்தனைவாதிகள் என நான் நினைக்கவில்லை. சிந்தனைவாதிகளால் அவரின் செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒருவரின் ஆதரவாளர் என்பதற்காக அவர் சொல்வது, செய்வது எல்லாம் சரி என்று தலையாட்டவேண்டுமென்பதல்ல. பெரியார் அக்கணத்தில் அப்படிச் செய்திருந்தாலும், பின்னர் அது தவறு என உணர்ந்திருப்பார் என நினைக்கிறார். அப்படி நினைத்திராவிட்டால் அவரை சிந்தனைவாதி என நான் கருதவில்லை.

  • தொடங்கியவர்

வசீகரன்/யாழ்வானம் யாழ் களத்தில் ஒரு அன்பருக்கு அளித்த பேட்டியில் - நான் ஜூலை 31ந் திகதி "யாழ் களத்தின் செல்வங்களுக்கு " என்ற கருத்தில் குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு கேள்வி எழுப்பப்பட்டதினால் அதை இங்கு இணைப்பதோடு இது சம்பந்தமான வேறு சில இணைப்புகளையும் தந்து விடை தரவேண்டியது என் கடமையாகிறது.

கேள்வி -

கடந்த கிழமை யாழ் இணையதளத்தில் ஒருவர் ஈழத்துபடைப்பாளிகளிற்கு இங்குள்ள கள உறவுகள் உற்சாகம் அளிபதில்லை என்று குறிபிட்டு இருந்தார் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் இங்கு அதாவது யாழ் இணையத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு அல்லது படைபாளிகளிற்கு இவர்கள் உற்சாகம் வழங்குவதில்லை என்பது மனவருத்தமான விடயம் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் -

அவருடைய கருத்து அவருடைய அனுபவத்தில் மலர்ந்ததாக இருக்கலாம். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏன் ஆரம்பத்தில் எனது படைப்புகள் கூட கவனிக்கப்படாமல் தான் இருந்தது. சரி இவங்கள் கவனிக்கிறாங்க்ள் இல்லை எண்டு போட்டுத்தான் நான் பாடல்களை இணைத்தேன். பாடல்களைக் கேட்டாவது நம் உறவுகள் கருத்துச் சொல்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அது மிகவும் நன்றாகப் வேலைசெய்துவிட்டது.

உங்களுக்கு உண்மையைச் சொன்னால் என்ன... எங்கடை ஆட்கள சிலவேளை உசுப்பி விடவேணும் பாருங்கோ. இல்லையெண்டால் சரியான கஸ்டம் பாருங்கோ என்றுதான் சொல்வேன். நான் இங்கு கவனிக்கப் பட்டு உங்களுக்கு இந்த செவ்வியை வழங்குவதற்கு என் பாடல்கள் தான் காரணம்.

அந்த ரீதியில் அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அதுதான் சரியென்று என்னால் சொல்லமுடியாது. யாழ்இணைய நிர்வாகிகளுக்குத்தான் இதன் உண்மை தெரியும். ஆனால் பொதுவாக நான் இங்குள் படைப்புகளை உற்று நோக்கும் போது அப்படி அவருடைய கருத்துப பிழையாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. என்ன குழப்புகிறேனா..குழப்பத்தில் தானே நல்ல தெளிவு வரும். மனது இலகுவாகும்.

ஆனால் என்னைப் போன்ற எத்தனை கலைஞர்கள் உற்சாகப்படுத்தப் படுவதற்கு என்னுடைய இந்தச் செவ்வியையும் உதாரணமாகக் கூறாலாம். யாழ் இணையத்திற்கு நன்றிகள்.

அடுத்த கேள்வி -

ஈழத்து படைபாளி என்று கருதும் இடத்தில் இரு தரபட்ட படைபாளிகள் அதாவது ஒரு பிரிவினர் மறைந்த படைபாளிகள் மற்றவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் படைபாளிகள் மறைந்த படைபாளிகளிகளை கெளரவிக்க வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் தொடர்ந்து அவர்களை பற்றி எழுதியும் அவர்களை பற்றி செய்திருந்தால் நல்லது அவர்களை பற்றி புகழ்பாடுவது அதிகம் தவிர தற்போது இருக்கும் கலைஞர்களை பேசுவது குறைவு யாழ் இணையதளத்திலும் இந்த குறை காணபடுகிறது இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் மறைந்த கலைஞர்களை இளையசமூகத்தில் இருப்பவர்களிடம் திணிப்பதால் எதுவித பயனுமில்லை என்பது என் பார்வை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் -

ஈழத்துப் படைப்பாளிகளை, அல்லது கலைஞர்களைக் கௌரவிப்பதில் என்றைக்குமே நான் பின்நிற்பவன் அல்ல. அந்த வகையில் மறைந்த எங்கள் கலைஞர்களை அவர்கள் பிறந்த தினத்தில் அல்லது அவர்களுடைய மறைந்த நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களை பற்றிப் பேசுவதும், வாழ்த்துவதும், பாரட்டுவதும் மனித பண்புள்ள நல்ல மக்களுக்கு என்றுமே அழகு. ஆனால் நெடுக அவர்களைப் பற்றியே புகழ்பாட வேண்டிய தேவையில்லை, அவசியமும் இல்லை. கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும், வாழ்த்தவேண்டும் அவர்களை என்றுமே மனம் சலிக்காது உற்சாகப் படுத்த வேண்டும்.

எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால் கலைஞனுடைய படைப்புகளைப் பற்றிப் பேசாது. அவர் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், அவருடைய தவறான அனுகுமுறைகள் பற்றியே வசைபாடுவது. இதற்காகவே அவர்களை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கித்தள்ளுவது. இதனால் எத்தனை திறமையுள்ள பல முதிய கலைஞர்களும், புதிய கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வராமல் தத்தளிக்கிறார்கள்.

இந்த வசைபாடுதல், குறைகூறுதல் போன்ற கிழ்த்தனமான பழக்கத்தில் இருந்து எங்கள் புதிய சமுதாயம் விடுபட்டு, அனைத்துக் கலைஞர்களையும ஊக்குவித்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்லவேண்டும்.

Edited by Ponniyinselvan

அருமையான தலைப்பு.....

ஆனால் நான் இப்ப கருத்து எழுததுவங்கேக்க 36 கருத்துக்கு 783 பார்ததுள்ளோம்... (அதுவும்... பார்தவர்களே... எழுதினவர்களே பார்ததால் எழுதினதால் கூடுதலா இருக்கலாம்...)

ஆனால்... இப்பகுதியில்... லண்டன் பாபாவுக்கு... :( (தலைப்பில் உள்ள ரகசியமாக கூட இருக்கலாம்... நான் இந்ததலைப்புக்கு "லண்டன் பாபா "எதிரானவன் அல்ல... நான் அக்கருத்துக்கள் முளுக்க வாசிக்கவும் இல்லை... )

இத்தலைப்பபில் இங்கு எனது களநண்பர்கள் படும்பாடும் கருத்துக்களும்.... உங்கள்கருத்துக்களுடன் நானும் உடையவன்... ஆங்காங்கே எனது கருத்துக்களை உள்வாங்கி இருந்தால்... :( :( அது உங்களுக்கு விளங்கும்.... தொடருவோம்... :lol: நன்றி

  • தொடங்கியவர்

பெரியாரின் ஆதரவாளர்கள் எல்லோரும் சிந்தனைவாதிகள் என நான் நினைக்கவில்லை. சிந்தனைவாதிகளால் அவரின் செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒருவரின் ஆதரவாளர் என்பதற்காக அவர் சொல்வது, செய்வது எல்லாம் சரி என்று தலையாட்டவேண்டுமென்பதல்ல. பெரியார் அக்கணத்தில் அப்படிச் செய்திருந்தாலும், பின்னர் அது தவறு என உணர்ந்திருப்பார் என நினைக்கிறார். அப்படி நினைத்திராவிட்டால் அவரை சிந்தனைவாதி என நான் கருதவில்லை.

இந்த "தமிழச்சி" சொல்வதையும் கேளுங்கள். அது அவர் கருத்து. அவர் சுதந்திரம்.

http://thamilachi.blogspot.com/

:huh:

Edited by Ponniyinselvan

இணைப்புக்கு நன்றி. நிச்சயமாக எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. கடவுள் இல்லை என்ற பெரியாரின் வாதத்தை நான் குறைகூறவில்லை. அவர் செருப்பால் அடித்தது மிகவும் தவறான விடயம் என்பதே எனது கருத்து. எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால் அதற்காக நான் பெரியாரின் வழியில் வரவில்லை. பலரின் கருத்துகள்இ எனது சுயசிந்தனைஇ அனுபவங்களின் அடிப்படையிலேயே நான் அந்த முடிவிற்கு வந்தேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதபடியால் நான் பெரியாரின் அடிவருடி எனக் குறிப்பிட முடியாது. அதேபோல்தான்இ பெரியாரின் அடிவருடிகள் எனக் கூறப்படுவோர்கள் எல்லோரும் சிந்தனைவாதிகள் எனக் குறிப்பிடமுடியாது. பெரியாரின் அடிவருடிகள் எனக் கூறுபவர்களேஇ தங்கள் வெளியீடுகளில் சோதிடர்களின் விளம்பரங்கள்இ கோவில் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். பெரியாரின் சிந்தனைகள் சிலவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அவர் சொன்னதுஇ செய்தது எல்லாம் சரி எனக் கூறமாட்டேன். அவரும் ஒரு மனிதராகத்தான் வாழ்ந்தார். அவரும் பல தவறுகள் விட்டிருக்கிறார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் சிந்தனைவாதியாக இருந்ததால் அவரை நான் மதிக்கிறேன்.

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்

பொன்னியின் செல்வன், உங்கள் கருத்துக்கு நன்றி. வை ரி லிங்கம் அவர்களின் எந்தவொரு விடயமும் என்னைப் புண்படுத்தவில்லை. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரின் நாடகத்திறமையை நான் பாராட்டுகிறேன். அவரின் நிகழ்ச்சியை நான் பார்க்க நேர்ந்தபோது இவ்வளவு வயதும் அனுபவமும் நிறைந்த இவருக்கு தனது கருத்துக்களைப் பண்போடு சொல்ல ஏன் முடியவில்லை என்றுதான் யோசித்தேன். லியோனியையும் இவரையும் ஒன்றாகப் பார்க்கவே தோன்றியது. எல்லாத்துறைகளிலும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அதனைப் பண்போடு சொல்லத் தெரிந்திருக்கவேண்டும். இவர் மட்டும் என்றில்லை பல படைப்பாளிகள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஓரிரு நிகழ்ச்சிகள் செய்தவுடனேயே தங்களுக்கென ஒரு நிகழ்வை உருவாக்கி படம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அதனைத்தான் வேண்டாமெனச் சொல்கிறேன். எனது கருத்தை வாசித்தபின்னர், இந்தக் கிழமை அவரின் நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கே விளங்கும். நானும் தொடர்ந்து அவரின் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுக் கருத்தெழுதுகிறேன்.

இப்போதிருக்கும் இளைஞர்கள் பலர் தமது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். மிகவும் திறமையுள்ளவர்கள் இப்படிப் படம் போட்டுக் காட்டுவதில்லை. ஆனால் இப்படிப் படம் போடுகிறவர்களால், அத்திறமைசாலிகளின் திறமைகள் வெளியில் தெரிவதில்லை என்ற ஆதங்கமே. உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அவற்றில் பங்குபற்றுபவர்கள், மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று பாருங்கள். தாங்கள் ஏறிவந்த ஏணியையே எட்டி உதைத்தவர்கள்தான் பலர்.

நான் ஒரு ரசிகை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பேன். என்னால் சரியாகக் குறையைக் கூறமுடியாவிட்டாலும், ஏதோவொரு குறை இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். நடனம், நாடகம், பாட்டு என அனைத்தையும் என்னால் விமர்சிக்க முடியும். ஆனால் எதையும் படித்தது இல்லை. அவற்றில் ஆர்வம் இருந்ததால் அவற்றை ரசிக்கத் தொடங்கினேன். அந்த ரசிப்பின் பலனாக அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். உதாரணமாக, நடனத்தைப் பார்க்கும்போது, நடனமாடுபவரின், அபிநயங்கள், முத்திரைகள், பாவங்கள் போன்றவை பிழையாக இருப்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியும். அதுபோலத்தான் நாடகங்களும்.

அதோடு, படைப்பாளிகள் மக்களையும் கருத்தில் எடுக்கவேண்டும். அவர்களின் படைப்பு இறுதியில் மக்களிடம்தான் போய்ச்சேருகிறது. அப்படைப்பில் ஏதோவொரு செய்தி மக்களைச் சென்றடைகிறது. அப்படிச் சென்றடையும்போது, அது ஒரு நல்ல செய்தியாக இருக்கவேண்டும். படைப்பாளிகள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டுமேயொழிய சமூகத்தை தவறான இட்டுச் செல்பவர்களாக இருக்கக்கூடாது. ஒரு மேடை நடிகன்கூட தனது ஆடைகள் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் (கவர்ச்சியான ஆடைகள் போடுதல்).

நான் இங்கு கருத்து எழுதுவதற்குக் காரணம் இனிவரும் படைப்பாளிகளாவது இந்தக் குறைகளைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவும், ரசிகர்களும் விமர்சனங்களை வெளிப்படையாக வைக்கவேண்டுமென்பதே.

வை ரி லிங்கம் அவர்களின் எந்தவொரு விடயமும் என்னைப் புண்படுத்தவில்லை.

வைரிலிங்கம் உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் பிறர் மனதைப் புண்படுத்துகின்றது என்று முன்னர் பொதுமைப்படுத்தியதினால் யாரோ உங்களுக்கு தெரிந்தவரை புண்படுத்தி அவர்கள் உங்களுக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அப்படி நடந்திருக்கலாம் என்று நீங்கள் ஊகித்திருக்க வேண்டும். இதில் ஏதோ ஒன்று.

எம் மத்தியில் ஒரு பழக்கம் இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தை சொல்லும்போது "சனங்கள் கதைக்குது" என்று பொதுவாகச் சொல்வது. யார் அந்தச் சனம் என்றால் சொல்லத்தெரிவதில்லை. தங்கள் கருத்தை நேராக சரியான ஆதாரங்களோடு முன்வைக்கும் துணிவு இல்லாமல் போகிற போக்கில் யாரோ "முகம் தெரியாத சனங்கள்" மீது பழியைச் சுமத்திப் போவது சுலபமானது.

தனது கருத்துக்களைப் பண்போடு சொல்ல ஏன் முடியவில்லை என்றுதான் யோசித்தேன்.

ஒருமையில் (நீ. உன்னுடைய) என்று யாராவது அழைக்கப்பட்டார்களா அல்லது Letterman show, Leno show, Ferguson show போன்றவற்றில் சில சந்தர்ப்பங்களில் வருவது போல ஆபாசமாக, அசிங்கமாக ?

லியோனி என்ன செய்கிறார் ?

இப்போதிருக்கும் இளைஞர்கள் பலர் தமது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். மிகவும் திறமையுள்ளவர்கள் இப்படிப் படம் போட்டுக் காட்டுவதில்லை.

தலைக்கனம் முடிந்து படம் காட்டுவதா? ...

திறமையுல்ளவர்களை இனங்கண்டு தட்டிக் ( மண்டையில் அடித்தல்ல) கொடுங்கள் என்பதுதான் என்கோரிக்கையும்.

ஆனால் எதையும் படித்தது இல்லை.

நானும் இப்படித்தான். ஞானசூன்யம். அறிந்தது இல்லை. அனுபவித்ததுதான்.

படைப்பாளிகள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டுமேயொழிய சமூகத்தை தவறான இட்டுச் செல்பவர்களாக இருக்கக்கூடாது

நிங்களும் வேறு சிலரும் எங்கள் கலைப்படைப்புகள் அதே வகையில் அமைய வேண்டுமென விரும்பும், பின்பற்ற வேண்டுமென விரும்பும், தென்னிந்திய சினிமாப்படைப்பாளிகள் எல்லோரும் மேலே நிங்கள் குறிப்பிட்ட நோக்குடையவர்களாக இருக்கிறார்களா என்று ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.

(கவர்ச்சியான ஆடைகள் போடுதல்).

மேடை நடிகர் கவர்ச்சியான ஆடைகள் போடுவதால் சமுதாய மாற்றமா? விளங்கவில்லை

:(

பொன்னியின் செல்வன், முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் சமூக அக்கறையின் சார்பிலேயே கதைக்கிறேன். எனக்குத் தெரிந்து யாரும் பாதிக்கப்படவில்லை. அவரின் நிகழ்ச்சியைப் பார்த்தபோது ஏற்பட்ட எண்ணத்தையே நான் குறிப்பிட்டேன். பாதிக்கப்பட்டால் மட்டும்தான் இப்படி எழுதவேண்டுமென்பதில்லையே. அவரின் நிகழ்ச்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதபட்சத்திலும் என்னுடைய கருத்தைக் கூறமுடியும்தானே? அவரின் நிகழ்ச்சியை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வதுபோல், திறமையுள்ளவர்களை தட்டிக்கொடுக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். ஆனால் அவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்களே? நாம் விமர்சித்தால் ஏற்க மறுக்கும் அவர்கள், குறைகள் இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாது பாராட்டுபவர்களையே நாடிச் செல்கிறார்கள். இதனால் அவர்களின் அடுத்த படைப்புகள் தரமற்றவையாக வெளிப்படுகிறது என்பதையே நான் இங்கு கூறவிரும்புகிறேன். அதற்காக எல்லோரும் அப்படி என்று நான் இங்கு கூறவரவில்லை. விமர்சனங்களைக் கூறும் அதேவேளை, பிழைகளையும் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள் என்று கூறுகிறேன். பிழைகளைச் சுட்டிக்காட்டும்போதுதான், அடுத்த படைப்பில் அதனைத் திருத்தி, தரமான படைப்புக்களைத் தரமுடியும்.

உங்களைச் சுற்றியுள்ள படைப்பாளிகளை யோசித்துப் பாருங்கள். அவர்கள் படைப்புத்துறைக்கு வருவதற்கு முன்னர் இருந்த அவர்களது பண்புகளையும், இப்போதிருக்கும் பண்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கும். அதுமட்டுமின்றி, எத்தனை படைப்பாளிகள் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அவர்களில் பலர் திறமை இல்லாமல் காணாமல் போகவில்லை. தவறான வழிநடத்தலாலேயே காணாமல் போயிருக்கிறார்கள்.

எல்லோருக்குள்ளும் திறமைகள் இருக்கிறது. ஆனால் எல்லோரும் எல்லாம் தெரிந்து வருவதில்லை. எதனைச் செய்யும்போதும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பது எனது கருத்து. அது மற்றவர்களைப் புண்படுத்தாதவகையில், மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டுமென்பது எனது கருத்து. ஏதோ செய்கிறோம் என்ற வகையில் இருக்கக்கூடாது. படைப்பாளிகளும் சமூக சிந்தனையோடு செயற்படும்போதுதான் அவர்களுக்கு சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்களின் பெயரும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார்கள். அவர்களின் திறமை, கடின உழைப்பு என்பன வீணாகிப் போய்விடுகிறது.

தொழில்நுட்ப வசதிகள் குறைந்த, தேடல்கள், கற்கும் வசதிகள் குறைந்த தாயகத்திலிருந்து தரமான படைப்புகள் வரும்போது, அனைத்து வசதிகளும் நிறைந்த புலம்பெயர் நாடுகளில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்? தாயகத்திலும் இதனை முழுமையான தொழிலாகக் கொண்டவர்கள் குறைவு. சிந்தனை வரட்சியும், விமர்சனமுமே இதற்கான காரணமாக நான் கருதுகிறேன். தாயகத்தில் படைப்புகள் வெளிவரும்போது, விமர்சனங்களை வழங்குவதற்கு பல மூத்த உறுப்பினர்கள் அங்கு இருக்கிறார்கள். விமர்சனத்தைத் தாண்டித்தான் அப்படைப்பு வெளியே வரும்.

நிங்களும் வேறு சிலரும் எங்கள் கலைப்படைப்புகள் அதே வகையில் அமைய வேண்டுமென விரும்பும்இ பின்பற்ற வேண்டுமென விரும்பும்இ தென்னிந்திய சினிமாப்படைப்பாளிகள் எல்லோரும் மேலே நிங்கள் குறிப்பிட்ட நோக்குடையவர்களாக இருக்கிறார்களா என்று ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.

எமது சமூகமும் அவர்களைப் போல் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே நான் இதனை வலியுறுத்துகிறேன். முளையிலேயே கிள்ளிவிட்டால் பிறகு நாம் வேதனைப்படவேண்டியதில்லையே? நான் சினிமாவைப் பார்க்கிறேன். ரசிக்கிறேன். அதற்காக நான் சினிமாவில் நடப்பவற்றைப் பின்பற்றுவதில்லை. அதேபோல்தான், எனது வீட்டிலிருக்கும் சிறுபிள்ளைகளையும் பின்பற்ற விடுவதில்லை. உதாரணமாக, எனது அக்காவின் மகளும் (12 வயது) நானும் சேர்ந்து நடிகைகளின் ஆடை, அணிகலன்களைப் பற்றிக் கதைப்போம். அப்படிக் கதைக்கும்போதே, அவர்களின் குறைகளைப் பற்றியும் கதைப்பதால், அவருக்கு சினிமா போலித்தனமானது என்பது விளங்கும். அதேபோல், தரமான படைப்புகளை கண்டறிவதற்கும் சொல்லிக்கொடுத்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு பொழுதுபோக்கு, அது பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே என்பது எனது கருத்து. தாயகத்திலும்கூட சினிமாக்கள் காண்பிக்கப்படுகிறது. ஆங்கிலப்படங்கள்கூட மொழியாக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது. ஆனால் தணிக்கை செய்யப்பட்டபின்னரே அங்கு சினிமாப் படங்கள் காண்பிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒரே கோட்டில் சுற்றி சுற்றி வருவதை விடுவோம். இதுவே உங்களுக்கான எனது கடைசி விளக்கமாக அமையட்டும்.

விமர்சனங்களைக் கூறும் அதேவேளை, பிழைகளையும் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள் என்று கூறுகிறேன்.

நான் வலியுறுத்துவதும் அதுதான். மேம்போக்கான விமர்சனங்கள் பயன் தராது.

அனைத்து வசதிகளும் நிறைந்த புலம்பெயர் நாடுகளில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்?

நடுக்கடலில் நின்றாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர் தான் என்பார்கள். எவ்வளவு வசதிகள் சூழ இருந்தாலும் அதை பெற்று பாவிக்கும் பணவசதி இல்லாவிட்டால் ..! அதுதான் உண்மை.

அதேபோல், தரமான படைப்புகளை கண்டறிவதற்கும் சொல்லிக்கொடுத்து வருகிறேன்.

மிக அருமையான வேலை. தொடருங்கள்.

:(

Edited by Ponniyinselvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.