Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Breaking News GIFs | Tenor

புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை

இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசேகரவிற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினரான நாசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  2. ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்
  3. நாசீர் அஹமட் – சுற்றாடல்
  4. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி
  5. கனக ஹேரத் – நெடுஞ்சாலை
  6. நாலக கொடஹேவா – ஊடகத்துறை
  7. காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி
  8. சன்ன ஜயசுமண – சுகாதாரம்
  9. பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா
  10. திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்
  11. விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை
  12. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
  13. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி
  14. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்
  15. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு
  16. தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்
  17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்

https://athavannews.com/2022/1277083

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை!

புதிய அமைச்சரவையில் சீனியர்கள் இல்லை… ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித அவுட் …!

சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முக்கிய நபர்கள் இல்லாத நிலையில், பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அறிமுகமில்லாத சில முகங்கள் அமைச்சர் பதவிகளை பெற உள்ளனர்.

நேற்றைய தினம் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேளை ஜீவன் தொண்டமான் எந்தவொரு அமைச்சரவை பதவிகளையும் பொறுப்பேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஏற்கனவே இராஜினாமா செய்துள்ள நிலையில், 15க்கும் குறையாத இளம், படித்த, திறமையான அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் குழுவும் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட அதேவேளை அரசாங்கத்தின் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1277052

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: ராஜபக்ஷ குடும்பம் இல்லாத புதிய அமைச்சரவை பிரச்னையை தீர்க்குமா?

14 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை - புதிய அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

ராஜபக்ஷ குடும்பத்தினர் இல்லாத புதிய அமைச்சரவை இன்று இலங்கையில் பதவியேற்றுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரண பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதற்கிடையே, இந்த புதிய அமைச்சரவை நாட்டின் பிரச்னையை தீர்க்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சராக திலும் அமுனுகமவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக கனக ஹேரத்தும் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

அத்துடன், தொழில் அமைச்சராக விதுர விக்ரமநாயக்க பதவி பிரமாணம் செய்துகொண்டதுடன், விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக ஜனக்க வக்கும்புர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சராக ஷெஹான் சேமசிங்கவும், நீர் வழங்கல் அமைச்சராக மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவும் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

 

இலங்கை - புதிய அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

விமலவீர திஸாநாயக்க வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அதேவேளை, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக தேனுக விதானகமனே பதவியேற்றதுடன், ஊடகத்துறை அமைச்சராக நாலக்க கொடஹேவா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சுகாதார அமைச்சராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன பதவியேற்றதுடன், சுற்றுச்சூழல் அமைச்சராக நஷிர் அஹமட் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

 

இலங்கை - புதிய அமைச்சரவை பதவியேற்பு

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

துறை சாராதவர்கள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கையில் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையானது, சர்வதேசத்தையும், கடன் வழங்கும் நிறுவனங்களையும் சமாளிக்கும் வகையிலேயே நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நிலையான அமைச்சரவை ஒன்று காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களில் ஒரு சிலரே துறைசார்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய பெரும்பாலானோர் துறை சாராதவர்கள் என கூறப்படுகிறது.

அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை.

 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA DIVISION

நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, ஷசிந்திர ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சரவையிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தில் தற்போது அமைச்சர்களாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே பதவி வகித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையானது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எந்தவகையிலும் தீர்வை பெற்றுக்கொடுக்காது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61139679

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) மாலை இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதுவரை எந்த அமைச்சு பதவியையும் வகிக்காத புதியவர்கள் இந்த பதவிகளை ஏற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1277153

  • கருத்துக்கள உறவுகள்

தெரிய வரும் விசயம் என்னவெண்டால், கோத்தா, ராஜினாமா செய்தால், பிரதமர் மகிந்தா ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதே சட்டம்.

ஆனால், அவர் மூன்றாவது முறையாக வர முடியாது என்பதும் சட்டம்.

ஆகவே, மகிந்தா இடத்துக்கு, பிரதமராக நாமல் வந்தபின்னர், கோத்தா ராஜினாமா செய்தால், நாமல் ஜனாதிபதி ஆகலாம் என்று, திருமதி மகிந்தா நோனா ஐடியா. அதாவது இளைஞர் கையில் நாடு போகவேண்டும் என்பதே போராட்ட காரர் கோரிக்கை. ஆகவே நாமல் ஜனாதிபதி ஆவதே சரியாக இருக்கும் என்பது, அம்மணி முடிவு.

இதுக்கு கோத்தா ஒத்துக்கொள்ளவில்லை. அதெல்லாம் பிறகு பார்க்கலாம். இப்போது செய்ய கூடாது என்று சொல்ல, மகிந்தவின், வீட்டுக்கார அம்மாவுக்கு பெரும் கொதி வந்துட்டுதாம்.  அதனால், மகிந்தா இன்று அமைச்சரவை நியமனத்துக்கு போகவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு : ஜி.எல்.பீரிஸ்க்கு பாதுகாப்பு அமைச்சு

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
  1. ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு
  2. ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
  3. அருந்திக பெர்னாண்டோ- பெருந்தோட்டம்
  4. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
  5. தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள்
  6. இந்திக்க அனுருத்த – வீடமைப்பு
  7. சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
  8. சிறிபால கம்லத் – மஹாவலி
  9. அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசனம்
  10. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
  11. பிரசன்ன ரணவீர – தொழில்துறை
  12. டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி
  13. டிபி ஹேரத் – கால்நடை
  14. அரவிந்த் குமார் – பொருந்தோட்டத்துறை
  15. கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள்
  16. குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு
  17. கபில நுவான் – சிறு பயிர்த் தோட்டம்
  18. கயாஷான் நவனந்த – சுகாதாரம்
  19. சுரேன் ராகவன் – கல்வி
  20. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி
  21. அசோக பிரியந்த – வர்த்தகம்

https://athavannews.com/2022/1277182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தெரிய வரும் விசயம் என்னவெண்டால், கோத்தா, ராஜினாமா செய்தால், பிரதமர் மகிந்தா ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதே சட்டம்.

ஆனால், அவர் மூன்றாவது முறையாக வர முடியாது என்பதும் சட்டம்.

ஆகவே, மகிந்தா இடத்துக்கு, பிரதமராக நாமல் வந்தபின்னர், கோத்தா ராஜினாமா செய்தால், நாமல் ஜனாதிபதி ஆகலாம் என்று, திருமதி மகிந்தா நோனா ஐடியா. அதாவது இளைஞர் கையில் நாடு போகவேண்டும் என்பதே போராட்ட காரர் கோரிக்கை. ஆகவே நாமல் ஜனாதிபதி ஆவதே சரியாக இருக்கும் என்பது, அம்மணி முடிவு.

இதுக்கு கோத்தா ஒத்துக்கொள்ளவில்லை. அதெல்லாம் பிறகு பார்க்கலாம். இப்போது செய்ய கூடாது என்று சொல்ல, மகிந்தவின், வீட்டுக்கார அம்மாவுக்கு பெரும் கொதி வந்துட்டுதாம்.  அதனால், மகிந்தா இன்று அமைச்சரவை நியமனத்துக்கு போகவில்லை. 

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால்...
உலகின்  முதலாவது... இளைய ஜனாதிபதி என்ற பெயரை 
ஸ்ரீலங்கா பெற்றுக்  கொள்ளும். 

ஏற்கெனவே... உலகின் முதலாவது பெண்  பிரதமர் 
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா  என்ற சாதனையுடன்... 
நாமல் ராஜபக்சவும்... ஜனாதிபதியாக  சேர்ந்து கொள்வார். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.