Jump to content

இங்கும் குண்டு சத்தம் கேட்கும்


Recommended Posts

பதியப்பட்டது

பங்குனி வெய்யில் அக்கினி தாண்டவத்தை ஆடி கொண்டிருந்தது. ஊரே ஊரடங்கு போட்டமாதிரி இருந்தது. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத படி வெப்பம் கண்ணை பஞ்சடைத்த மாதிரி ஆக்கி விட்டிருக்கு .

இந்த கொதிக்கும் வெய்யிலின் அகோரத்தையும் பொருட்படுத்தமால் நீண்ட பரந்த பரப்புடைய அந்த தோட்டத்து ஊடாக நடந்து கொண்டிருந்தார் சண்முகம் வாத்தியார். அந்த தோட்டம் அநத ஊரிலிருந்து அடுத்த ஊரையும் ஊடறத்து விரிந்து இருந்தது. வாத்தியார் நடக்கின்றாரோ நாட்டிய மாடி வாறரோ என்ற மாதிரி இருக்குது.கொதிக்கும் நிலத்தில் முழும் பாதம் வைத்து அழுத்த முடியாமால் கெந்தி கெந்தி நடந்து வருவதால்.. முன் கால்விரலுக்குளை கொழுவிற இடத்தில் அவருடைய பாட்டா செருப்பு அறுந்திருந்தது. அதை. சட்டை ஊசியால் செருகி இவ்வளவு காலம் பாவித்து வந்தவர். அது நடக்க கஸ்டத்தை கொடுத்தமையால்

http://sinnakuddy.blogspot.com/2007/08/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் கதை அழகு சின்னக்குட்டி.

கொதிக்கும் நிலத்தில் முழும் பாதம் வைத்து அழுத்த முடியாமால் கெந்தி கெந்தி நடந்து வருவதால்.. முன் கால்விரலுக்குளை கொழுவிற இடத்தில் அவருடைய பாட்டா செருப்பு அறுந்திருந்தது.

வெய்யிலின் கொடுமை தெரிகிறது. அதை அதை அழகாய் சொல்லியிருக்கிறீங்க.

தோட்டத்தின் வரப்பு பாதை முடிவில் உள்ள ஊரி போட்டு பரந்திருக்கும் சிறு ஒழுங்கை றோட்டிலை ஏறினார்.

சின்னக்குட்டி அது என்ன ஊரி .

எனக்கு தெரியலயே.

Posted

உங்கள் கதை அழகு சின்னக்குட்டி.

வெய்யிலின் கொடுமை தெரிகிறது. அதை அதை அழகாய் சொல்லியிருக்கிறீங்க.

சின்னக்குட்டி அது என்ன ஊரி .

எனக்கு தெரியலயே.

வணக்கம் கறுப்பி ..கதையை வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

ஊரி என்பது தார் றோட்டல்லாத சிறிய பதிவான றோட்டில் பரவி விடுவார்கள் அது பார்க்கிறதுக்கு சிறிய ஜஸ்கீறீம் கோன்கள் போல உள்ள கற்களின் சேர்வை மாதிரி இருக்கும்

இப்படி நீங்கள் கேட்கிறதை பார்க்கிறபோது சரியான பதத்தை தான் நான் பாவித்திருக்கிறனோ என்று எனக்கே சந்தேகம் வந்திட்டுது.

Posted

ஓரு பெரிய மூச்சை விட்டார்.

அது தான் அவரது கடைசி மூச்சென அவருக்கே தெரியாது.

கதையை கொண்டு சென்றவிதமும் கதையும் அருமையாக இருகிறது சின்னகுட்டி...............அத்துடன் மேலே சொன்ன மாதிரி நீங்கள் கதையை முடித்த விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது................ :lol:

Posted

கதையை கொண்டு சென்றவிதமும் கதையும் அருமையாக இருகிறது சின்னகுட்டி...............அத்துடன் மேலே சொன்ன மாதிரி நீங்கள் கதையை முடித்த விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது................ :rolleyes:

வணக்கம் ஜமுனா...பதிவை பார்த்து கருத்து கூறி உற்சாகமூட்டியதுக்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் கறுப்பி ..கதையை வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

ஊரி என்பது தார் றோட்டல்லாத சிறிய பதிவான றோட்டில் பரவி விடுவார்கள் அது பார்க்கிறதுக்கு சிறிய ஜஸ்கீறீம் கோன்கள் போல உள்ள கற்களின் சேர்வை மாதிரி இருக்கும்

இப்படி நீங்கள் கேட்கிறதை பார்க்கிறபோது சரியான பதத்தை தான் நான் பாவித்திருக்கிறனோ என்று எனக்கே சந்தேகம் வந்திட்டுது.

அட உங்களையும் குழப்பிட்டேனா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஊரி என்பது சரியான பதம் தான். கடற்கரைகளில் கிடைக்கும். நாங்கள் முந்தி இதையும் சிப்பியையும் பாவித்து வண்ணாத்திபூச்சி போன்ற உருவங்கள் செய்யிறனாங்கள்.

சின்னகுட்டி கதை நல்லாயிருக்கு.

Posted

வணக்கம் இன்னிசை தகவலுக்கு நன்றிகள்

Posted

உங்களுக்கும் பாட்டா செருப்புக்கு ஊசியை குத்தி அணிந்த அனுபவம் இருக்கு போல.. அப்போது ஊரில் பாட்டா செருப்பு தேய்ந்து ரிசுத்தாள் அளவுக்கு மெல்லிதாக வரும்வரை போடுவார்கள்...

Posted

உங்களுக்கும் பாட்டா செருப்புக்கு ஊசியை குத்தி அணிந்த அனுபவம் இருக்கு போல.. அப்போது ஊரில் பாட்டா செருப்பு தேய்ந்து ரிசுத்தாள் அளவுக்கு மெல்லிதாக வரும்வரை போடுவார்கள்...

வணக்கம் கலைஞன்... கருத்து சொன்னதுக்கு நன்றி.

அநுபவம் இல்லாமல் இருக்குமா என்ன..

நம்ம காலத்திலே பாட்டா செருப்பு ரூபா 9.99 சதம்..

யாழ் நகரத்திலை மாதிரி எங்கட காலத்தில் வடமராட்சி பகுதிகளில் உந்த செருப்பு சப்பாத்து எல்லாத்துக்கும் போட்டு திரியிறயேலை

என்ன உந்த புட்டு குழல் மாட்டினால் மட்டும் கட்டாயம் போடுவினம்...

Posted

சின்னக்குட்டி உங்கள் கதைமூலம் எங்கள் தாத்தா காலத்திற்கு அழைத்து கொண்டு போய் அன்றை காலகட்ட அவர்களின் மன நிலைகளை பதிவாக்கிய விதம் நன்றாக இருக்கிறது. இங்கும் குண்டு சத்தம் கேட்கும் என்ற அவர்களின் எதிர்வுகள் பேய் அடுத்த தலைமுறை இங்கு குண்டு சத்தம் மட்டுமே கேட்கும் என்கிற காலத்தில் வாழ்ந்து முடிந்து விட்டனர். ஆனால் இனி இங்கு குண்டு சத்தமே கேட்காது என்கிற செய்தியாவது அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக.

Posted

வணக்கம் சாத்திரி... எனது கதையை விட உங்களின் கவித்துமாமன விமர்சனம் மிக நன்றாக இருக்கிறது.

இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த நன்றிகள்.

  • 3 weeks later...
Posted

நான் சிறுவனாக இருக்கும் போது எனது அம்மம்மா, 40 களில் யப்பான் காரன் குண்டு போடப் போகிறான் என்று பயந்து ஒடிய கதைகளைச் சொல்லுவார். அக்காலத்தில் பலாலி பக்கம் இருந்த பிரித்தானிய வெள்ளைக்காரர்களின் உடமைகளை யாரோ களவெடுத்ததாக ,வீடு வீடாக வந்து சோதனை செய்த வெள்ளைக்காரக் காவல்துறையைப் பற்றியும் சொல்லுவார்.

அன்று கேட்டதைவிட பிற்காலத்தில் பல மடங்கு மோசமான சம்பவங்கள் தாயகத்தில் நடைபெற்று வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய் மொழியைக் கற்பிக்கும் தமிழாசிரியரை மதிக்காமல் அன்னிய மொழியினைக் கற்பிக்கும் ஆசிரியர்களைத் தூக்கிப் பிடிக்கும் பழக்கம் எம்மவர்களில் பலருக்கு இருக்கிறது. வெள்ளைக்காரன் ஈழத்தை விட்டுப் போனாலும் எம்மவர்களுக்கு அடிமைப் புத்தி ஒரு நாளும் போகவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.