Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையான படைப்பாளிகள்..

Featured Replies

  • தொடங்கியவர்

சிலர் ஆங்கிலம் யாழில் வளர்க்கப்படுகின்றது என கவலைப்படுகின்றார்கள். அழுது ஒப்பாரி பண்ணுகின்றார்கள். ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. அதை நாம் வளர்க்கத் தேவையிலை. யாழிலும் ஒருவரும் அதை வளர்க்கவில்லை. ஆனால், ஆங்கிலம் கற்பதால் எம்மைத்தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோம்.

எமது பிரச்சனையை வெளிநாட்டவருக்கு சொல்வதற்கு, ஒரு வெளிநாட்டு தொலைக்காட்சி நேர்முகத்தை எதிர்கொள்வதற்கு, ஒரு மாநாட்டில் கதைப்பதற்கு ஆங்கிலம் தேவை. இல்லாவிட்டால் bae, bae என்று கொண்டிருக்க வேண்டியதுதான்!

இந்த துடிப்பான இளைஞர்கள் ஆங்கிலம் மூலம் எவ்வாறு தமிழை வளர்க்கின்றார்கள் என மேலுள்ள வீடியோக்கள் சான்று பகர்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே.. wanna.. galanna. sweetna.. என்பதன் மூலம்.. ஆங்கிலம் வளர்த்தவர்கள்.. யாழில் தான் இருக்க முடியும்.

ஆங்கிலம் மொழி. அதை வளர்க்கனும் என்றால் அதன் அடிப்படையை மக்கள் சரியாக விளக்கனும். அப்புறம்.. வன்ன கல்லன்னா.. என்று சிலாங் பேசி.. ஆங்கிலம் வளர்க்கலாம். தமிழ் சினிப் பாடல்களைக் கேட்டு தமிழ் வளர்க்க முடியும் என்று சாதிக்க முடியாது என்ற கருத்தை எழுதியது நாம். அதில் தொங்கி நின்று.. விசமத்தனமாக.. சில நடவடிக்கைகளைச் செய்வது உருப்படுறாப் போல இல்ல.

யாழ் களத்தின் உப களமாக ஆங்கிலக் களம் உண்டு. ஆங்கிலத்தில் பேசி.. ஆங்கிலத்தில் எழுதி.. ஆங்கிலத்தை வளர்க்கலாம். ஆங்கிலம் அவசியம் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்ல. ஆங்கிலப் பாடல்களைப் பொழுதுபோக்க கேட்கலாம். அதுவும் தப்பில்ல. அதை யாழிலும் கேட்கலாம். ஆனால் ஆங்கிலப் பாடல்கள் கேட்டு ஆங்கிலம் வளர்ப்பம் என்றால்.. அது யாழில உள்ளவங்கள மட்டமா கருதும் நிலை..!

ஆங்கிலமின்றி உலகில் செயற்பட முடியாது என்பது உண்மையல்ல. ஆங்கிலம் தெரிந்து கொள்வது தொடர்பாடலை இலகுவாக்கும் என்றால் அது நியாயம். ஆனால் ஆங்கிலம் தெரியாமல் உலகில் இயங்க முடியாது என்றில்ல. ஆங்கிலம் பேசாமல் தாய் மொழியில் ஐநாவில் பேசும் சீனர்களும்.. ஜப்பானியர்களும்.. ரஸ்சியர்களும்.. சர்வதேச பிரதிநிதிகளுடன் தமிழில் பேசும் எங்கள் தேசிய தலைவரும்.. உலகில் தொடர்பாடலை மேற்கொள்ளேல்லையா..!

ஆங்கிலம் தொடர்பாடலையும் அறிவூட்டலையும் பெற மேலதிக வசதியை அளிக்கிறது என்பது உண்மையே தவிர.. ஆங்கிலம் தெரியாட்டி உலகில் இயங்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதுவும் அரைகுறை உச்சரிப்புக்களோடு.. ஆங்கில மொழி இலக்கணத்தை வழுவி வரும் சிலாங் ஆங்கிலப்பாடல்களை கேட்டு ஆங்கிலம் பேசி.. அதில.. அறிவு வளர்க்க முடியும் தொடர்பாடலை மேற்கொள்ள முடியும் என்றால்.. அது மட்டமான தொடர்பாடலாகத்தான் இருக்கும். Street guys கூட பேச.. வேணும் என்றால் இது உதவலாம். அவங்க தான்.. பாடசாலையை அரைகுறையில விட்டிட்டு சிலாங் பேசிட்டு.. அலையுறாங்க. எம்மவர்களையும் அந்த லெவலுக்கு கொண்டு வந்திட்டா.. நல்லாவே இருக்கும். இருக்கிற கேடு காணாது என்று.

இதை வைச்சு யாழில் ஆங்கிலப்பாடல் கேட்பது கூடாது என்று சிலர் சொல்லினம் என்று தங்களின் செயற்பாட்டை நியாயப்படுத்த கருத்தை திசை மாற்றக் கூடாது. ஆங்கிலப் பாட்டை தமிழ் பாட்டுப் போல.. பொழுதுபோக்கக் கேட்கலாம். நல்ல விசயங்கள் வந்தால் எடுத்துக்கலாம். ஆனால் ஆங்கிலப் பாட்டுத்தான் ஆங்கிலம் கற்றுத் தரும் என்று.. சொல்வது தவறானது.. என்பதை உணரனும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஆங்கிலப் பாட்டுத்தான் ஆங்கிலம் கற்றுத் தரும் என்று.. சொல்வது தவறானது.. என்பதை உணரனும்..! :lol:

ஆங்கிலப்பாடல் கேட்பதுதான் ஆங்கிலம் கற்க இருக்கும் ஒரே வழி என்று கலைஞன் சொல்லவில்லையே. பாடல் கேட்பதும் இருக்கும் பல வழிகளில் ஒன்றுதான் சொல்லியிருக்கிறார். அவரின் சொந்த அனுபவத்தில் அறிந்த உண்மையை இங்கு பகிர்ந்துள்ளார். இதனால் சிலர் பயனடையக்கூடும் அல்லவா..

தமிழர்கள் elite ஆனவர்களுடன் polite ஆகப் பழகவேண்டும் என்ற மாதிரி உங்கள் கருத்து உள்ளது. Street guys உடன் கதைக்காமல் நாங்கள் அவர்களைவிட உசத்தி என்று போவது நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப்பாடல் கேட்பதுதான் ஆங்கிலம் கற்க இருக்கும் ஒரே வழி என்று கலைஞன் சொல்லவில்லையே. பாடல் கேட்பதும் இருக்கும் பல வழிகளில் ஒன்றுதான் சொல்லியிருக்கிறார். அவரின் சொந்த அனுபவத்தில் அறிந்த உண்மையை இங்கு பகிர்ந்துள்ளார். இதனால் சிலர் பயனடையக்கூடும் அல்லவா..

தமிழர்கள் elite ஆனவர்களுடன் polite ஆகப் பழகவேண்டும் என்ற மாதிரி உங்கள் கருத்து உள்ளது. Street guys உடன் கதைக்காமல் நாங்கள் அவர்களைவிட உசத்தி என்று போவது நல்லதல்ல.

ஆங்கிலம் கற்க ஆல்பங்களில் வெளிவரும் ஆங்கிலப்பாடல்களை கேட்பது ஒரு வழிமுறை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாம் கேட்கிறம்.. சிலாங் சொற்களைப் புகுத்தி பாடப்படும் தமிழ் சினிமாப்பாடல்களை வைத்து தமிழ் கற்க முடியும் என்று பிரேரிப்பீர்களா..??!

ஆங்கிலப்பாடல்களைக் கேட்பதன் மூலம் சொற்களை அறிஞ்சு கொள்ளலாம். ஆனால் ஆங்கிலம் பேச எழுத கற்க முடியாது. பேச எழுத கற்றிருந்தால் ஆங்கிலப்பாடல்கள் (எல்லாமல்ல சில) கேட்பதால்.. சொற்களை அவற்றின் பாவனையை அறிஞ்சுக்கலாம். அதுவும் குறிப்பாக ஆங்கில மொழிப்பாவனைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு உதவலாம்..!

ஆங்கிலப்பாடல்கள் ஆங்கிலம் கற்றுத்தரும் என்பது தவறானது. ஆங்கிலம் கற்றிருந்தால் அதை பாவிப்பது பற்றி அறிஞ்சுக்கலாம். குறிப்பாக சிலாங்..!

Street guys.. பேசிறதைப் பொறுக்கி எடுத்து பேசிறவர்களின் நிலையைப் பாருங்க.. அண்மையில் ஒருவர் வைத்தியரைச் சந்திக்க வந்தார். அவருக்கு ஆங்கிலம் பேச வருகுது.. ஆனால்.. டாக்டரிடம் ஒரு விடயத்தைச் சொல்ல முதல் அவர் இடையில் பாவித்த சிலாங் டாக்டருக்கு.. சொல்லும் விடயத்தை புரிஞ்சுக்க சிரமமாப் போச்சுது..!

ஐ கேம் யா...என்ன வன்னா சே யா... இப்படி.. கதைச்சு.. ஆங்கிலம் கற்கலாம் என்று யாழ் களம் நிறுவ நிற்பது.. தமிழர்களிடம் ஆங்கில அறிவு வளர்ச்சியிலும் புதிய பரினாம வளர்ச்சி என்று சொன்னாலும் ஆச்சரியமில்ல.

பிரித்தானியாவில் இலங்கையர்களின் ஆங்கில உச்சரிப்புக்கு ஒரு மரியாதை உண்டு. றோயல் குடும்பம் கூட இதை வெளிப்படையாச் சொல்லி இருக்குது. இந்த நிலைல நாங்க..????! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இலங்கையர்களின் ஆங்கில உச்சரிப்புக்கு ஒரு மரியாதை உண்டு. றோயல் குடும்பம் கூட இதை வெளிப்படையாச் சொல்லி இருக்குது. இந்த நிலைல நாங்க..????! :lol:

பெஞ்சனியர் இங்கிலிஷ் (Pensioner English) என்று சொல்வார்களே அதுவா? வயது போனவர்களுக்குத்தான் அதுசரிப்பட்டு வரும். இளைஞர்களுக்கு அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

பெஞ்சனியர் இங்கிலிஷ் (Pensioner English) என்று சொல்வார்களே அதுவா? வயது போனவர்களுக்குத்தான் அதுசரிப்பட்டு வரும். இளைஞர்களுக்கு அல்ல!

professional... level...! இந்த லெவலில இளசிலிருந்து பென்சன் வரை ஒரே வகைல தான் பேசும். வன்னா.. யன்னா.. யா... இதெல்லாம் றிவ்லெக்ற் ஆகாது..! :lol:

ஊரில இருந்து வாற பிள்ளைகள் ஆங்கிலத்தில உயர் புள்ளிகள் எடுக்க உள்ளூரில பிறந்தவர்கள்.. ஆங்கிலத்தில் தடுமாடுறதற்கு காரணமும் இதுதான். :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஊரில இருந்து வாற பிள்ளைகள் ஆங்கிலத்தில உயர் புள்ளிகள் எடுக்க உள்ளூரில பிறந்தவர்கள் ஆங்கிலத்தில் தடுமாறுகின்றார்களா? உது எந்த நாட்டில் நடைபெறுகின்றது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? சோமாலியாவிலா அல்லது செக்கஸ்லோவாக்கியாவிலா இப்படி நடைபெறுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருந்து வாற பிள்ளைகள் ஆங்கிலத்தில உயர் புள்ளிகள் எடுக்க உள்ளூரில பிறந்தவர்கள் ஆங்கிலத்தில் தடுமாறுகின்றார்களா? உது எந்த நாட்டில் நடைபெறுகின்றது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? சோமாலியாவிலா அல்லது செக்கஸ்லோவாக்கியாவிலா இப்படி நடைபெறுகின்றது?

லண்டனில் உள்ள பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேற்றுப் பட்டியலை நோக்கிய.. கோடன் பிறவுன் தனது கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் அதிக அக்கறை செலுத்தப் போவதாகக் கூறியதை இங்கு சுட்டிக் காட்டலாம்.

அதுமட்டுமன்றி எம்மவர்களின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் குறைந்த தரச் சித்திகளைப் பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க சமூகத்து அடுத்து ஆசிய சமூகமே இந்தப் பின்னடைவைக் கண்டுள்ளன.

The only evidence that the Bangladeshi population is adversely affected

by English proficiency levels relates to passing the core subjects of English and

mathematics. National data indicates that within the group of students who

achieve 5+ passing GCSE scores, only 65.5% of Bangladeshi pupils and 67.1% of

Pakistani pupils pass these core subjects, compared to a 77.4% national average

(DfES Ethnicity and Education 2006).

ஆதாரம்

metro london

http://repositories.cdlib.org/cgi/viewcont...is/interactions

http://www.dfes.gov.uk/research/data/uploa...-2006DOM-EN.pdf

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.