-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
-
By தமிழ் சிறி · Posted
“தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது. இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃 -
By ஏராளன் · பதியப்பட்டது
தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது. இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார். இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 – நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார். இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/313627 -
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் தொம்மராஜா ஆடினார். இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பம் முதலே மிகவும் சவாலான போட்டியாக இருவருக்கும் இருந்து வந்துள்ளது. முதலில் சில சுற்றுகளில் குகேஷின் கை ஓங்கியிருந்தாலும், அதன் பின் சீனாவை சேர்ந்த 32 வயதான டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக ஆடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர். கபில்தேவ் 175: சாதனை ஆட்டம் ஆடியும் கவாஸ்கர் உள்பட யாரும் வரவேற்காதது ஏன்? வீரர்கள் அறையில் என்ன நடந்தது?18 செப்டெம்பர் 2023 நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது?20 செப்டெம்பர் 2023 பட மூலாதாரம்,FIDE அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளும் சமமான சறுக்கல்களும் இருந்தன. ஆனால ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். பத்தாவது சுற்றின் இறுதியிலும் இருவரும் சமநிலையில் இருந்தனர். பதினொன்றாவது சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி, ஆட்டத்தைத் தன்வசப்படுத்தி இருந்தார். அடுத்த சுற்றையும் அவர் கைப்பற்றியிருந்தால் உலக சாம்பியன் பட்டத்துக்கான கனவு கிட்டத்தட்ட அப்போதே நிறைவேறியிருக்கும். டிங் லிரேனை ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கும் போதுதான் அவர் ஆபத்தானவராகிறார் என்று இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல், 12வது சுற்றில் மீண்டும் சவாலான ஆட்டத்தைக் கொடுத்து, தனக்கான புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார் டிங் லிரேன். எனவே அடுத்த சுற்றான 13வது ஆட்டத்தை உலகின் செஸ் ரசிகர்கள் அனைவரும் உற்று நோக்கி வந்தனர். அதற்குள்ளாக இரு வீரர்களின் நகர்வுகளையும் நேரலையில் பார்த்துக் கொண்டு, யார் எந்த நகர்வை எப்படிச் செய்திருந்தால், யார் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற தீவிர அலசல்கள் ஒருபுறம் இருந்து வந்தன. ஆனால், அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த 13வது ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது. 14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார். குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி 18 வயதில் உலக சாம்பியன் ஆன இவர் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் என்ன கூறினார்? உலக செஸ் சாம்பியன் போட்டியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், "இரண்டு வருட தீவிர பயிற்சிக்குப் பின் கிடைத்த வெற்றி இது" என்றார். இந்தப் போட்டிக்கு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குகேஷ் 10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறியதோடு, இந்தியாவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டதாகவும் தெரிவித்தார். உலக சாம்பியன் ஆனது பெரு மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர் லிரேன் தோல்வி அடைந்ததற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இறுதியாக, இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்பணிப்பதாகக் கூறினார் குகேஷ். இந்திய தேசியக்கொடி முன் பாகிஸ்தான் வீரர் நின்றது ஏன்?2 செப்டெம்பர் 2023 பிரக்ஞானந்தா வெற்றியை நாடே கொண்டாடுவது ஏன்? செஸ் உலகில் இந்தியா கோலோச்சுமா?26 ஆகஸ்ட் 2023 11 வருடங்கள் கழித்து நனவான கனவு பட மூலாதாரம்,FIDE இதனால் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இருவருக்கும் வெற்றி பெறுவதற்கான சம வாய்ப்புகள் இருந்தன. ஒரே ஒரு தவறான நகர்வினால், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தைப் பெறும் குகேஷின், இந்தியாவின் கனவு நொறுங்கிவிடும். இந்த நிலையில் இரு வீரர்களுக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவியது. ஆரம்பத்தில் இந்தப் போட்டியும் ட்ராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குகேஷ் டிங் லிரேனை செக் மேட் செய்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி புதிய உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் குகன், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியர் ஆவார். பட மூலாதாரம்,FIDE மேக்னஸ் கார்ல்சனுடன் விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய போது, குகேஷ் பார்வையாளராக இருந்தார், மேலும் ஒருநாள் உலக சாம்பியன்ஷிப்பிற்காக விளையாட வேண்டும் என்று அன்றே முடிவு செய்தார். 11 வருடங்கள் கழித்து அந்த கனவு நனவாகி உள்ளது. போட்டியின் 13வது ஆட்டத்தின் முடிவில் குகேஷ் மற்றும் லிரன் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார். அவரது வெற்றியானது, ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் செஸ் உலகில் மீண்டும் ஒரு புதிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பு, இதில் பங்குபெற்ற இருவருமே ஆசியாவைச் சேர்ந்த வீரர்கள். இறுதி போட்டியில் ஆசிய வீரர்கள் மட்டுமே மோதிக் கொள்ளும் முதல் செஸ் சாம்பியன்ஷிப் இதுதான். Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்?4 டிசம்பர் 2024 ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்: ரூ.1.1 கோடிக்கு ஏலம் போன இந்த 13 வயது சிறுவன் சாதித்தது என்ன?27 நவம்பர் 2024 குகேஷுக்கு முதல்வர், பிரதமர் வாழ்த்து பட மூலாதாரம்,FIDE படக்குறிப்பு, சீன வீரர் டிங் லிரேனுடனான ஆட்டத்தின்போது குகேஷ் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோதி இதை வரலாற்றுச் சாதனை என்றும் குகேஷ் அனைவருக்கும் முன்மாதிரியான ஆளுமை என்றும் பாராட்டியுள்ளார். ``இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்த சாதனைக்கு குகேஷுக்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு. அவரது வெற்றி, இந்திய செஸ் வரலாற்றில் அவரது பெயரைப் பொறித்தது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "உங்களை பார்த்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று பாராட்டியுள்ளார். ``மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது இந்தப் பெரும் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தை நிலை நிறுத்துகிறது. மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலகின் செஸ் தலைநகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ``எங்கள் மண்ணின் மைந்தனான கிராண்ட்மாஸ்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ``தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இலைட் (ELITE) பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச செஸ் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது வெற்றி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமின்றி, தமிழகத்தின் மீதான கவனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமை கொண்டிருப்பது உத்வேகம் அளிக்கிறது" என்று பாராட்டியுள்ளார். தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை - தமிழகம் முழுக்க நிலவரம் என்ன? புகைப்பட தொகுப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 குகேஷ் சாதனை குறித்து விஸ்வநாதன் ஆனந்த் கூறியது என்ன? பட மூலாதாரம்,CHESS24INDIA விஸ்வநாதன் ஆனந்த் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ``இதுவொரு பெருமையான தருணம், இந்தியாவிற்கு பெருமையான தருணம், வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமிக்கு (WACA) ஒரு பெருமையான தருணம், தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பெருமையின் தருணம். டிங்கும் மிகவும் பரபரப்பான ஆட்டத்தைத் திறம்பட விளையாடினார். அவரும் ஒரு சாம்பியன்தான்" என்று விஸ்வநாதன் ஆனந்த் பதிவிட்டுள்ளார். மேலும், செஸ் தொடர்பான ஒரு யூட்யூப் சேனலில் குகேஷின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்வில் வீடியோ மூலமாகப் பங்கேற்ற ஆனந்த், குகேஷுக்கு நேரலையில் வாழ்த்து தெரிவித்தார். ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்ததாகக் கூறிய விஸ்வநாதன் ஆனந்த், 15 நிமிடத்திற்கு முன்பு வரை குகேஷ் வெல்வாரா என்று சந்தேகித்ததாகக் கூறினார். குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி வரை சென்ற இவர் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 குகேஷின் பின்னணி படக்குறிப்பு, வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ் சென்னையை சேர்ந்த குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார். குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக, தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார். பள்ளி மாணவராக இருந்த போதே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் குகேஷ். வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார். தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். குகேஷை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார் அந்த பயிற்சியாளர். அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர். வார இறுதி நாட்களில் நகரில் எங்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்று, பரிசுடன் பள்ளிக்கு திரும்புவது குகேஷின் பொழுதுபோக்காகவே ஆனது. பட மூலாதாரம்,FIDE குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை (இஎன்டி) அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஷை அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார் குகேஷின் தந்தை. இதற்காக தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார். குகேஷின் தாய் பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் வெற்றி மேல் வெற்றி கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார். கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது. FIDE தரவரிசையில் குகேஷ் தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். இலோ (ELO) தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷின் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cly25l0z231o -
By நன்னிச் சோழன் · Posted
குளிக்கும் போராளிகள்
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.