Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த... மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
284452496_445613207564563_5151253976809930440_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=C4-TilBMwisAX_kNosF&_nc_oc=AQlFpZP6rVKvU8_4AJtQESp4JhIgZN_WxRUnk4e7IrkJ6Ce2fKAgZla_cDjFEWj_tR8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=00_AT81rUIDZwrcrWUNy6LAfh2__ufI-jIL4uPwS2bSxuZLog&oe=6297580B
 
No photo description available.
 
  May be an image of outdoors  May be an image of tree and outdoors
 
பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு!
பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத் தின் சுவடுகளைத் தேடிச் சென்றேன்.
2300 வருடங்களுக்கு முன்பு மகாநாகன் எனும் நாகமன்னன் அமைத்த
இரு இராச்சியங்களில் ஒன்றே மகாநாககுல எனும் இராச்சியமாகும்.
 
பராக்கிரமபாகுவின், தமிழ்த் தளபதியான... ரக்கா கங்குகநாதன் என்பவன்
1000 ஆண்டுகளுக்கு முன்பு சுகலா எனும் அரசியிடம் இருந்து இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி
சிலகாலம் ஆட்சி செய்து வந்தான் எனும் குறிப்பும் உள்ளது.
எனவே பிற்காலத்தில் இது ரக்கா நுவர (ரக்கா நகரம் ) எனப் பெயர் பெற்றது.
அதுவே பின்பு ரம்பா நுவர எனத் திரிபடைந்தது.
 
அம்பாந்தோட்டை நகரின் வடக்கில்... 12 கி.மீ தூரத்தில்
இந்த இராச்சியத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன.
வன நதி எனும் வளவ கங்கை. கொஸ்வத்து ஆறு ஆகியவற்றால் சூழப்பட்ட
ஓர் தீவின் நடுவில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்டைய நகரம் அமைந்து ள்ளது.
 
இங்குள்ள பௌத்த விகாரையின் பின்பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில்
இதன் இடிபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
 
நாகவழிபாட்டில் ஈடுபாடு கொண்ட மகாநாக மன்னனின் நகரில்
நாக வழிபாட்டின் சுவடுகளைத் தேடிச் சென்றேன்.
அப்படிப்பட்ட சுவடுகள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை.
ஆனால் அது சிவபூமி யாக இருந்தது.
 
இங்கிருந்த காட்டுப்பகுதியில் இருந்த இடிபாடுகளின் மத்தியில்..
மொத்தமாக 7 சிவலிங்கங்களைக் கண்டேன்.
மிகப்பழமையான சிதைந்த லிங்கங்கள் மூன்று.
பழமை வாய்ந்த தாரா லிங்கங்கள் மூன்று.
பழமையான நாகலிங்கம் ஒன்று.
பழமையான ஆவுடையார் ஒன்று.
இவை எல்லாமே 1500 வருடங்களுக்கு முற்பட்டவை.
 
3000 ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் குறிப்பிட்ட
சிவபூமியின் பண்டைய சுவடுகள்... தென்னிலங்கையில் தான் உள்ளன.
ஆம். இதுதான் சிவபூமி.
 
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
ஈழம்(இலங்கை)
 
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின்... அம்பாந்தோட்டை மாவட்டத்தில்
இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள... நகரசபை ஆகும்.
இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
 
புவியியலும் காலநிலையும்
அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும்.
இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் 
பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 
1950 மி.மீ.   வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
 
மக்கள்
இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும்.
இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர்.
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின்
மக்களின அடிப்படையிலான மொத்த மக்கள் தொகையில்,
மொத்தம்-46777
இதில்,
சிங்களவர்-37839
தமிழர்-805
இந்திய வம்சாவழி-54
இஸ்லாமியர்-2830
பரங்கியர்-52
 
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
மொத்தம்-46777
இதில்,
பௌத்தர் -37769
சைவம்-590
இஸ்லாம்-8092
கத்தோலிக்கம்-169
ஏனைய கிறிஸாதவம்-141
ஏனையவர்-16
 
இதிலிருந்து இந்த அம்பாந்தோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்...
தமிழர்கள், காலம் காலமாக சைவ சமயத்தோடு பாரம்பரியமாக வாழ்ந்த பகுதிகள்,
இன்று கை நழுவி... சிங்கள பௌத்த குடியேற்றங்கள் மூலம், சிங்களவர் தேசமாக போன பரிதாபம்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு!

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியரின் ஆரிய வெறியும், சிங்களதின் பிரித்தானியனியருக்கு பொழிந்த  ஆன், பெண், சிற்றார், மற்றும்  பொருள், பண்டம் வற்றாத விருந்தும், இந்த தொல்பொருள் தடங்களை புறக்கணித்து விட்டு, royal asiatic  society யிலேயே மகாவம்சம்த்தின் உளறலான சிங்கம் மனிதப் பெண்ணின் புணர்ச்சியில் இருந்து வந்ததே சிங்கள இனம் என்பதை முட்டாள்களாக ஏற்று இலங்கைத் தீவின் வரலாற்றை எழுதி உள்ளனர்.  

கிந்தியாவின் வரலாறும், கிந்தியாவும் பொய்களினதும் , புரட்டுக்குகளினதும் மேலே இப்படி கட்டப்பட்டு உள்ளது. 

இதுவே குருந்தூரிலும்  யிலும், சிவ வழிபாடு இடம், ஆங்கிலேயரால் புத்த தொல்லியல் எச்சம் என்று பிரித்தானியரால்  விபரிக்கப்பட்டு உள்ளது. அதனால் தான், சிங்களம் தேடி வந்தது 

இதனால் தான், உண்மை வரலாற்றின், தொல்பொருள் ஆராய்ச்சி  அடிப்படையில் ஒழுங்குமுறை தமிழீழ அரசு  வருமாயின், கிந்தியவை குலைப்பசத்தில் முடியும் என்று சொல்கிறது  ஹிந்தியை, மலையாளி, ந்மம்பூதிரி  மற்றும் தெலுங்கு பிராமண அடியான ராம் போன்றவர்கள் சொல்லுவது.  

இது வரலாற்று, தொழில் துறை  திறமை சார் அடிப்படையில் சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அனால், இதற்கு முதல், ஆக குறைந்தது கடைச்ச சங்க காலத்தில் இருந்து  கதிர்காமத்தில் முருக வழிபாடு இருந்தது, இருந்து இருக்க வேண்டும் என்பதை என் என்று நல்லூர் திரியில் சொல்கிறேன். அனால், அது புராண  அடிப்படையில்.   

ஏனெனில், கதிர்காமத்துக்கு யாத்திரை எடுப்பது நல்லூருக்கு  கொடி கொடுப்பவர்களுக்கு ஓர் இறை கட்டளையும், கடமையும் என்று புராணம் சொல்கிறது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.