Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவுக்கு மேலதிக ராடார்களை அனுப்பியது இந்தியா: "இந்து"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு மேலதிக ராடார்களை அனுப்பியது இந்தியா: "இந்து" சிறிலங்காவுக்கு ஓராண்டுக்குப் பின்ன்ர் மேஎலதிகமாக ராடார்களை இந்தியா அனுப்பியுள்ளதாக சென்னையிலிருந்து வெளிவரும் "இந்து" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பின்னர் மேலதிகமான ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளதாக புதுடில்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு ராடார்களை இந்தியா சிறிலங்காவுக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு இரணுவ ராடாரை சிறிலங்காவுக்கு அனுப்பியது. அதே வகையான ராடார் கடந்த ஜுன் மாதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் சார்பாக இந்த ராடார்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடில்லி பிரதேசத்தில் உள்ள ஹிண்டோன் இராணுவ தளத்திலிருந்து இந்த இரண்டு ராடார்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 1980களில் சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வடரமாட்சியில் முற்றுகையிடப்பட்டபோது அவரை மீட்க இந்த தளத்திலிருந்து உலங்குவானூர்திகள் புறப்பட்டு தஞ்சாவூர் வழியாக இலங்கை சென்றது.

2005ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது இந்திய வருகையையொட்டி 5 ஆண்டுகளாக இந்தியா தனக்குத் தானே விதித்திருந்த தடையை உடைத்து இந்திரா-2 ராடர்களை வழங்கியது. தாழப் பறக்கும் விமானங்களை அவதானிக்கக் கூடிய ராடார்களான அவற்றை "பெல்" நிறுவனம் தயாரித்தது.

முன்னதாக இந்தியாவால் வழங்கப்பட்ட அதிவேக தாக்குதல் கடற்கலத்தை சிறிலங்கா பயன்படுத்திவந்தது. ஆனால் விடுதலைப் புலிகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் கடற்கடலங்களை அதுவேட்டையாடியது தொடர்பில் இந்திய கடற்படைக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு அத்தகைய கடற்கலங்கள் பற்றாக்குறை இருந்தமையால் அது தொடர்பிலான ஒப்பந்தம் விரும்பத்தக்கதாக இல்லாமல் இருந்தது.

ராடார்கள் என்பவரை மரணத்தை ஏற்படுத்தாத வகை இராணுவ தளபாடங்கள் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் தேவையை பாகிஸ்தானும் சீனாவும் நிறைவு செய்வதைத் தடுக்கும் வகையில் இத்தகைய ராடார்கள் வழங்கப்பட்டதாக இந்தியாஅறிவித்துள்ளது. இந்திய கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் பாகிஸ்தானும் சீனாவும் கண்காணிப்பு சாதனங்களை பொருத்துவதை இந்தியா ஏற்கவில்லை.

பிற நாடுகள் ராடார்கள் வழங்க முன்வந்திருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து ராடார்களை அப்போதைய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங், சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த மார்ச் மாதம் கொழும்புக்கு அருகாமையில் உள்ள சிறிலங்காவின் வான்படைத் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இலக்கு வைத்த போது இந்தியாவால் வழங்கப்பட்ட ராடார் இயங்கவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் அத்தகைய செய்தி தவறானது என்று சிறிலங்கா பின்னர் கூறியது என்று "இந்து" நாளேட்டின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்

இந்த ராடராவது ஒழுங்கா வேலை செய்யுமோ..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்வெட்டி செய்து முடிந்துதாம் இனி கோடரிக்கு தேவைப்படுகிறதாம் அதுதான் அனுப்புகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலைப் படுகொலைக்கான இந்திய அரசின் வெகுமதிதான் ரேடார்களா? : இந்திய பிரதமருக்கு வைகோ கடிதம்

செஞ்சோலைப் படுகொலை நடத்திய சிங்கள அரசுக்கு வெகுமதி அளிக்கவா இந்திய அரசு ரேடார்கள் வழங்கியுள்ளது? என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்மோகன்சிங்குக்கு வைகோ எழுதியுள்ள கடித விவரம்:

கடந்த 2007 ஜுலை 16-ம் நாள் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலங்கை தீவில் தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க தொடர்ந்து கொடூரமான ராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராணுவ ஆயுதங்களையும், உதவியையும் வழங்கி வருவது குறித்து, என்னுடைய வேதனையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.

தமிழ் இனத்தை ராணுவ ரீதியாக தாக்கி அழிக்கும் இனப்படுகொலையைச் செய்யும் குற்றவாளிதான் சிங்களஅரசு என்பது, மறுக்க முடியாத நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும். ஈழத்தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ள அரசியல் கட்சிகளும், ம.தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, இந்தியா-இலங்கை ராணுவக்கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை என்றாலும் திரைமறைவில் அத்தகைய ராணுவ ஒப்பந்தத்தின் கூட்டாளியாகவே இந்தியா செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டுகிறேன்.

என் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, இலங்கைக் கடலிலும், பன்னாட்டுக் கடல் பகுதியிலும், கடல் புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் நடக்கும் சண்டையில், இந்தியக் கடற்படை சிங்கள கடற்படைக்கு தகவல் பரிமாற்றங்கள் முதல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயுத உதவியோ, விற்பனையோ செய்வது இல்லை என்று 1998-ல் அனைத்துகட்சி கூட்டத்தில் இந்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு முற்றிலும் எதிராக, உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. தமிழர்களின் பிரதிநிதிகளாகப் போராடும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது.

மேலும், இலங்கை விமானப்படைக்கு உதவுவதற்காக இந்தியா தொடர்ந்து ரேடார்களை வழங்கி வருகிறது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எந்த விமானப்படைக்கு இந்த உதவி? இத்தனை ஆண்டுகளாகப் பெண்களை, குழந்தைகளை அப்பாவித்தமிழர்களை ஆயிரக்கணக்கில் குண்டு வீசிப் படுகொலை செய்த இலங்கை விமானப்படைக்குத்தான் இந்த உதவி.

பலதாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற இலங்கை விமானப்படைக்கு இந்த ஆண்டு ஜனவரியிலும், ஜுன் மாதத்திலும் இந்திய அரசு மீண்டும் ரேடார்களை வழங்கி உள்ளது. இலங்கை விமானப்படை செஞ்சோலைப்படுகொலை நடத்தியதற்காக இந்திய அரசு அளித்த வெகுமதிதான் இந்த ரேடார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இத்தகைய அக்கிரமமான நடவடிக்கைகளால், செயல்பாட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நேரு, இந்திராகாந்தி ஆகியோர் தொலைநோக்கோடு உருவாக்கிப் பின்பற்றிய அயல் உறவுக்கொள்கையை ஆயிரம் அடிக்கு கீழே குழிதோண்டி புதைத்துவிட்டது. இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கொடிய துரோகம் இழைத்துவிட்டது.

இலங்கைக்கு இனி எந்தவிதமான ஆயுதங்களும் விற்பதையோ, வாங்குவதையோ உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும், ஏற்கனவே கொடுத்த ரேடார்களை திரும்பப் பெறுமாறும் தங்களை நான் வலியுறுத்திக் வேண்டுகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவின் துரோகம்

பிரதமருக்கு வைகோ கடிதம்

மாண்புமிகு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர் களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தரும் முக்கியமான பிரச்சினையை உங்கள் மேலான கவனத்திற்கு இந்தக் கடிதத்தின் மூலம் கொண்டு வருகிறேன்.

இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத் தொலை தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 2007 ஜூலை 13ஆம் தேதி அன்று இலங்கை கடற்படைக் கப்பலில் நடைபெற்ற இந்திய இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாகவும் வந்து உள்ள செய்தி பயங்கரமான அதிர்ச்சி அளிக்கிறது. சிங்கள இனவாத அரசு விரித்த சதிகார வலையில் இந்திய அரசு தெரிந்து கொண்டே சிக்கி உள்ளது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன். இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க, சிங்கள இனவாத அரசு கடந்த பல ஆண்டுகளாக ஏவிவிட்ட கொடூரமான இனப்படு கொலைக்கு, தமிழ் மக்கள் ஆளாக்கப் பட்டு உள்ளனர் என்பது மறுக்க முடியாத நிரூபண உண்மையாகும்.

கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டதால், அவர்கள் ஜனநாயக அறவழியில் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் காவல்துறையாலும், இராணுவத்தாலும் நடத்தப்பட்ட மிருகத்தனமான அடக்குமுறையையே சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக, உலகின் பல நாடுகளில் வரலாற்றில் எழுதப்பட்டு உள்ள நிலைமையைப் போலவே, ஈழத் தமிழ் இனத்தின் இளைய தலைமுறை ஆயுதப் போராட்டத்தை கையில் ஏந்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அந்தத் தீவில் வடக்கு, கிழக்கில் வாழும் பூர்வீகத் தமிழர்களும், மற்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களும் தமிழ்நாட்டின் தமிழர்களோடு இரத்த பந்தமான தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் ஆவர்.

1987ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் சிங்கள அரசின் ஏவுதல் படையாக நடத்திய வன்முறைத் தாக்குதலில் ஏதுமறியாத அப்பாவித் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதும், ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு இழைத்த நியாயப்படுத்த முடியாத தவறான நடவடிக்கைகள் ஆகும்.

2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் அமைந்த உடன், சிங்கள அரசு இந்தியாவோடு இராணுவ ஒப்பந்தம் செய்து, அதன்மூலம் சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா உதவும் நிலையை உருவாக்க சிங்கள அரசு வஞ்சகமாக அனைத்து முயற்சிகளையும் செய்தது. அத்தகைய இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா செய்யக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் அதிர்ச்சித் தரத்தக்க விளைவுளைச் சுட்டிக்காட்டி உங்களை நேரில் சந்தித்து, அப்படி போடப்படும் ஒப்பந்தம் தமிழர்களுக்கு விரோதமான, விபரீதமான, மன்னிக்க முடியாத பெருந்தவறாக முடியும் என்று நான் கூறியபோது, பிரச்சினையின் கடுமையை கவனத்தோடு புரிந்துகொண்டு, இந்தியா இலங்கையோடு அத்தகைய இரணுவ ஒப்பந்தத்தை செய்யாது என்று நீங்கள் வாக்குறுதி தந்தீர்கள். இருநாடுகளுக்கு இடையிலே போடப்பட இருந்த இந்திய-இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் திட்டமிட்டபடி கையெழுத்தாகவில்லை.

ஆனால், பிரச்சினை அதோடு நிற்கவில்லை. இலங்கை அரசு தனது தந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்திய அரசை சரிக்கட்டி திரைமறைவில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாகப் போராடும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பலவகையிலும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. தமிழர் பகுதிகளில் விமானக் குண்டு வீச்சின் மூலம் அழிவு செய்யும் இலங்கை விமானப் படைக்கு உதவும் வகையில் இந்தியா ராடார் சாதனங்களைத் தந்தது. நான் இதை உங்களிடம் சுட்டிக்காட்டியபோது, தமிழர் களுக்கு விரோதமாகப் பயன்படுத்தப்படு மானால் ராடார் சாதனங்களை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்தீர்கள். ஆனால், நடந்தது என்ன? ராடார்களைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக நடைபெறும் போரில் மேலும் ராடார் சாதனங்களை இந்தியா இலங்கைக்குத் தந்து உள்ளது.

1998ஆம் ஆண்டில், அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்த நிலையிலும் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ ரீதியாக எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், இராணுவத் தளவாடங்களை விற்பனைகூட செய்வதில்லை என்றும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவை காற்றில் பறக்கவிட்டு தற்போது இந்திய அரசு இலங்கையில் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடக்கும் யுத்தத்தில் சிங்கள அரசு பயன்படுத்திக் ாெள்ள ஆயுதங் களைத் தந்துகொண்டு இருக்கிறது என்று வேதனையுடன் குற்றம் சாட்டுகிறேன்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14இல் இலங்கைத் தீவில் செஞ்சோலை அநாதை இல்லத்தின் மீது சிங்கள விமானங்கள் குண்டு வீசியதில் 61 தமிழ்ப் பெண் குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கோரமாகக் கொல்ப்பட்டதும், 170 சிறுமிகள் மரணகாயமுற்றதும் சர்வதேசச் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கியது. இந்தக் கொடூரமான கொலையை ஐ.நா. மன்ற அமைப்பும், ஐரோப்பிய நாடுகளின் கண்காணிப்புக் குழுவும் உலகத்துக்குச் சொல்லி, சிங்கள அரசின் முகத்திரையைக் கிழித்தன. ஆனால், இந்தக் கோரக் கொலைக் குற்றத்தை இந்திய அரசு கண்டிக்கும் கடமையில் தவறியது. அதைப் போலவே 2006 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று சுனாமி நிவாரண முகாமில் ஊழியம் செய்த 17 தமிழ் இளைஞர்களைச் சிங்கள இராணுவம் கொடூரமாகச் சுட்டுக்கொன்ற அக்கிரமத்தையும் இந்திய அரசு கண்டிக்கத் தவறியது.

தமிழ் மக்களின் உள்ளத்தில் இதனால் ஏற்பட்ட இரணத்திலும், காயத்திலும் மேலும் நெருப்பை அள்ளிப் போடுவதுபோல் இந்திய அரசு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் துயரத்தில் பரிதவிக்கும் தமிழ் மக்களுக்குக் கொடுப்பதற்காகத் தமிழ்நாட்டில் உலகத் தமிழர் கூட்டமைப்பினர் மக்களிடம் திரட்டிய உணவையும், மருந்துப் பொருட் களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக அனுப்பி வைப்பதற்கான அனுமதியையும் இந்திய அரசு வேண்டுமென்றே மறுத்துவிட்டது. இதற்காக, நான் நேரில் உங்களைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தும் பயனில்லாமல் போனது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் தாக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கான தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதும், அவர் களுடைய மீன்பிடி படகுகளும் வலைகளும் நாசமாக்கப்பட்டதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும். இப்படி எண்ணற்ற முறை நமது கடலிலேயே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியபோது, இந்தியக் கடற்படை அதைத் தடுப்பதற்கோ, தமிழக மீனவர்களைக் காப்பதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இலங்கைக் கடற் படைக்கும், கடற்புலிகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் தங்களுக்குச் சாதகமாக இந்தியக் கடற்படையை பயன்படுத்திக் கொள்ள, நயவஞ்சகமாகத் திட்டமிட்டு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய - இலங்கைக் கடற்படை கூட்டு ரோந்து வேண்டும் என்று சிங்கள அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. இந்தியக் கடற்படைத் தலைமைப் பொறுப்பை ஏற்ற தளபதிகள் கூட்டு ரோந்து யோசனையைச் செயல்படுத்த வேண்டும் என்றும் சொல்லி வந்தனர்.

கூட்டு ரோந்து என்பது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியக் கடற்படையை ஈடுபடுத்தும் சதித்திட்டம் என்பதைச் சுட்டிக்காட்டி எங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழர்களின் துயரத்தில் உண்மையாகக் கவலை கொண்ட தலைவர்களும் இந்தத் திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், கூட்டு ரோந்தை முதலில் வரவேற்ற தமிழக முதலமைச்சரும் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆனால், தமிழக மக்களையும் உலகத் தமிழர்ளையும் தந்திரமாக ஏமற்றும் விதத்தில் இந்திய அரசு இந்திய - இலங்கை கூட்டு ரோந்து என்ற திட்டத்தை மூடி மறைத்துவிட்டு இரு நாடுகளின் கடற்படைகளின் தொலைத் தொடர்பு சாதன ஒருங்கிணைப்புத் திட்டம் என்ற ஒரு நயவஞ்சகத் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுத்து இருக்கிறது. இலங்கை கடற் படையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதுதான் இதன் நோக்கமாகும். சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதஙகளை வாங்கிக் குவித்து வரும் சிங்கள அரசு தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க முற்பட்டு நாசம் செய்யவும், அந்த அழிவில் தப்பும் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்கவும், இனக்கொலையையும், இராணுவத் தாக்குதலையும் தீவிரப்படுத்தி வரும் இன்றையச் சூழ்நிலையில் தமிழர்களுககு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இராணுவ ரீதியான உதவிளைச் செய்து வருகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், கடைபிடிக்கும் போக்கு, அணுகுமுறை அனைத்தும் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச் சினையில் தமிழ் இன மக்களின் உணர்வு களை ஆழமாகக் காயப்படுத்துகின்றன. என்பதைத் தாங்கமுடியாத வேதனையுடன் சுட்டிக்காட்டுவதுடன் இது தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்யும் துரோகம் என்றும் குற்றம் சாட்டுகிறேன்.

எனவே, இரண்டு கடற்படை களுக்கும் இடையிலே செய்யப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை இந்திய அரசு இரத்து செய்யவேண்டும் என்றும், 1987 தவறுகளை இதன் மூலம் மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள

வைகோ

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.