Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்து : கட்டார், குவைத், ஈரான், சவுதி கடும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்து : கட்டார், குவைத், ஈரான், சவுதி கடும் கண்டனம்

முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகளான பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரபு நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இதனை தொடர்ந்து, குவைத், கட்டார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டன. 

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. 

இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜக நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பில் இருந்து நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை ஆசியாவிற்கான குவைத்தின் துணை வெளியுறவு அமைச்சர் வரவேற்றுள்ளார். 

முன்னதாக, கட்டாரின் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, 'முகமது நபிக்கு எதிரான பாஜக தலைவரின் கருத்துக்களை முற்றிலும் நிராகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து' அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது.

பின்னர், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஈரான் அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு, ஈரானுக்கான இந்திய தூதர் நேற்று மாலை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு ஈரானுக்கான இந்திய தூதர் வருத்தம் தெரிவித்ததோடு, இஸ்லாத்தின் நபிகள் மீதான எந்த விதமான அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். 

மேலும், இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் பார்வையே ஆகும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/128939

 

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபி பற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கு அரபு ஊடகங்களின் எதிர்வினை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நூபுர் ஷர்மா

பட மூலாதாரம்,NUPURSHARMABJP

 

படக்குறிப்பு,

நூபுர் ஷர்மா

முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்ட விவகாரத்தில், தங்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை பாஜக இடைநீக்கம் செய்துள்ளது, டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலின் கட்சி உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க நிர்வாகிகள் முகமது நபியைப் பற்றி இப்படிப் பேசியது வளைகுடா நாடுகளில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது முதல் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் வரை பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கான எதிர்வினைகளே நிரம்பி வழிகின்றன.

செய்தித் தாள்கள் கூறுவது என்ன?

துபாயில் இருந்து வெளியாகும் கல்ஃப் நியூஸ் செய்தித்தாள், "முகமது நபி குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மறுநாள், அக்கட்சி அந்த பேச்சைக் கண்டித்து, அதன் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்தது, டெல்லி பாஜக தலைவர் நவீன் குமார் ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியது."

நூபுர் ஷர்மா பேச்சு தொடர்பாக மும்பையில் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் எழுதுகின்றன. ஜூன் 3ஆம் தேதி நூபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிறகுதான் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறை வெடித்தது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து வெளிவரும் அல் ஜசீரா ஊடகம், இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபிக்கு எதிராக ராஜதந்திர புயல் தாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

 

நூபுர் ஷர்மா

பட மூலாதாரம்,ANI

இந்த சர்ச்சைக்கு நடுவே முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த தலைவர்களை கட்சியை விட்டு வெளியேற்றியது பிரதமர் நரேந்திர மோதியின் கட்சி" என அல்ஜசீரா எழுதுகிறது.

இந்தக் கருத்துக்களால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறை வெடித்ததாகவும், இந்தியாவில் நூபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அந்தச் செய்தியில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

ஆளும்கட்சி செய்தித் தொடர்பாளரை 'ஃப்ரிஞ்ச்' என குறிப்பிட்ட இந்தியா

குவைத்தில் இருந்து வெளிவரும் 'அராப் டைம்ஸ்' நாளிதழ் இந்தச் செய்தியை முக்கியமாக வெளியிட்டுள்ளது.

குவைத் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தூதரை வரவழைத்து பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு எழுத்துப்பூர்வமாக கடும் ஆட்சேபனை தெரிவித்ததாக இந்த இதழ் எழுதியுள்ளது.

"இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா இடைநீக்கம், டெல்லி பாஜக ஊடகப் பொறுப்பாளர் ஜின்டால் கட்சியை விட்டு நீக்கம் போன்ற நடவடிக்கைகளைக் குவைத் வரவேற்றுள்ளது. இருப்பினும், குவைத் அமைச்சகம் இதுபோன்ற கண்டிக்கத்தக்க பேச்சுகளுக்காக தலைவர்களை விமர்சித்துள்ளது. அவர் சார்பாக பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது." என்பது அதில் வெளியாகியுள்ள செய்தி.

"இந்தியா உள்ளிட்ட நாகரிகங்கள் மற்றும் தேசங்களைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாமின் பங்கையும் இஸ்லாமின் அமைதியான தன்மையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை இத்தகைய பேச்சுகள் தெளிவாகக் காட்டுகின்றன," என்று அமைச்சகம் கூறுகிறது.

வெளியுறவு அமைச்சகத்துக்குப் பதிலளித்த இந்தியத் தூதர், "இந்த பேச்சுகள் அரசாங்கம், ஆளும் கட்சி ஆகியவற்றின் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக வேறுபட்ட கருத்துள்ள உதிரிக் குழுக்களின் கருத்தையே பிரதிபலிக்கின்றன. எங்கள் வலுவான கலாச்சார மரபுகளான நாகரிகம், பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை, ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய அரசு அனைத்து மதங்களையும் மிக உயர்ந்த மரியாதையுடன் அங்கீகரிக்கிறது," என்று விளக்கமளித்தார்.

இந்தியப் பொருட்கள், கடைகளிலிருந்து அகற்றம்

 

சௌதி பட்டத்து இளவரசர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரியாத்தில் வெளியாகும் அராப் நியூஸ் நாளிதழில் வெளியான செய்தியில், வளைகுடா நாடுகளில் உள்ள கடைகளில் இருந்து இந்தியப் பொருட்கள் அகற்றப்படுவதாக எழுதப்பட்டுள்ளது.

கான்பூரில் வன்முறை நடந்ததாகவும், இந்தப் பேச்சுக்கு முஸ்லிம் நாடுகளில் கடும் கோபம் இருப்பதாகவும் எழுதப்பட்டுள்ளன.

பாஜக தலைவர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகத்தைப் பற்றி ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தெரிவித்தார், அதன் பிறகு முஸ்லிம் நாடுகளில் இதற்கெதிரான எதிர்வினை தொடங்கியது.

சௌதி அரேபிய அரசாங்கம் இந்த அறிக்கையை "அட்டூழியமானது" என்று குறிப்பிட்டதோடு "அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்" என்றும் கூறியதாக இந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.

மற்றொரு டிஜிட்டல் செய்தி நிறுவனமான மிடில் ஈஸ்ட் ஐ, இந்தியாவின் ஆளும் கட்சி, முகமது நபி, இஸ்லாம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அதன் தலைவர்களை இடைநீக்கம் செய்து வெளியேற்றியுள்ளது என்று எழுதியுள்ளது.

அந்த இதழ், "பாஜக அதன் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது." என்று குறிப்பிட்டுள்ளது.

 

பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூபுர் ஷர்மாவின் அறிக்கைக்குப் பிறகு பல முஸ்லீம் நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக இந்த இதழ் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் இந்தியத் தூதர்களை வரவழைத்தன. பல வளைகுடா நாடுகளில் இந்த அறிக்கையின் சீற்றம் காரணமாக, இந்தியப் பொருட்கள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து அகற்றப்பட்டன.

ஜெத்தாவிலிருந்து வெளிவரும் சவுதி கெஜட் என்ற செய்தித்தாள் இந்த சர்ச்சை தொடர்பான செய்தியை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஆளும் கட்சித் தலைவர்களின் அவதூறான பேச்சுக்கு சௌதி அரேபியா அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் இது கூறுகிறது.

இஸ்லாமின் சின்னங்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் எதிர்க்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இடைநீக்கம் செய்த பாஜகவின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-61706881

  • கருத்துக்கள உறவுகள்

நூபுர் ஷர்மா விவகாரம்: கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியா; இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் பாதிப்பா?

  • விகாஸ் பாண்டே
  • பிபிசி செய்திகள், டெல்லி
44 நிமிடங்களுக்கு முன்னர்
 

இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்தியாவுக்கு எதிரான குரலில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகள் காரணமாக இந்தியாவுக்கு ராஜரீதியாக ஏற்பட்டிருக்கும் விரும்பத்தகாத விளைவுகள் முடிவுக்கு வருவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.

முகமது நபிகள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தோனீசியா, இராக், மாலத்தீவுகள், ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. முன்னதாக, குவைத், இரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. சௌதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக, கடும் வார்த்தைகளை பிரயோகித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

இவற்றில் பெரும்பாலான நாடுகளுடன் நட்புறவை பேணிவரும் இந்தியாவுடைய தூதரக அதிகாரிகள், அந்நாடுகளை சமாதானப்படுத்த முயற்சித்துவருகின்றனர். ஆனால், புயல் இன்னும் ஓய்வதாக இல்லை.

இந்து தேசியவாத கட்சியான பாஜகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளார். கடந்த மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். அதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. பாஜகவின் டெல்லி ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜின்டாலும் இதுதொடர்பாக சர்ச்சையை கிளப்பும் வகையிலான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் ஆழமான மதப்பிரிவினையை நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் கருத்துகள் பிரதிபலிப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் தாக்குதல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக நூபுர் ஷர்மாவின் கருத்து இந்தியாவின் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. நூபுர் ஷர்மாவின் கருத்துகள் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அதனை பிபிசி மீண்டும் இங்கே கூறவில்லை.

நவீன் ஜின்டால் மற்றும் நூபுர் ஷர்மா இருவரும் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் நூபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்துள்ள பாஜக, ஜின்டாலை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

"எந்தவொரு மதத்தையும் சேர்ந்த மத ஆளுமைகளை இழிவுபடுத்துவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் எந்தவொரு பிரிவையோ மதத்தையோ இழிவுபடுத்தும் அல்லது அவமதிக்கும் எவ்வித சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது. அத்தகைய நபர்களை அல்லது கொள்கைகளை பாஜக முன்னிறுத்தாது" என பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நூபுர் ஷர்மா

பட மூலாதாரம்,TWITTER/NUPUR SHARMA

 

படக்குறிப்பு,

கடந்த மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார் நூபுர் ஷர்மா

இஸ்லாமிய நாடுகளின் கோபம்

நாட்டின் உள்விவகாரம் சர்வதேச விவகாரமாக உருவெடுத்துள்ளதால் இவ்விவகாரத்தில் பாஜகவின் எதிர்வினை போதாது என, நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் வாயிலாக அந்நாடுகளின் கோபம் கண்கூடாக தெரிகிறது.

இந்தியாவிடமிருந்து பொது மன்னிப்பை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.

"இத்தகைய இஸ்லாமிற்கு எதிரான வெறுப்பு கருத்துகளுக்கு தண்டனையே வழங்காமல் அவற்றை தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பு மீதான கடும் ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும், முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்ராயங்கள் வளரவும் அவர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுவதற்கும் வழிவகுக்கும். இது, வன்முறை மற்றும் வெறுப்பு சுழற்சியை உருவாக்கும்", என கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவும் அதன் அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது. "பாஜகவின் செய்தித்தொடர்பாளரின் கருத்துக்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தைப் பதிவு செய்கிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில "உதிரி சக்திகள்" தெரிவித்த கருத்துகள், இந்திய அரசின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என, கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மற்ற தூதரக அதிகாரிகளும் இந்த சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருதரப்பையும் விமர்சித்த இந்தியா

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒஐசி) மற்றும் பாகிஸ்தானும் இதுதொடர்பாக இந்தியாவை விமர்சித்துள்ளது. ஆனால், இந்திய அரசு வழக்கம்போல இருதரப்பையும் விமர்சித்துள்ளது. ஓஐசியின் கருத்து, "தேவையற்ற மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவை" என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பாஜக தலைமை மற்றும் இந்திய அரசின் தலைமை இருவரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியிருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி செய்யவில்லையென்றால் அரபு நாடுகள் மற்றும் இரானுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உருவாகும் என அவர்கள் கூறுகின்றனர்.

குவைத், கத்தார், சௌதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்கம் வகிக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடனான (ஜிசிசி) இந்தியாவின் வர்த்தகம் 2020-21ஆம் ஆண்டில் 87 பில்லியன் டாலராக உள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கிலான பணத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிக்கான முக்கிய ஆதாரமாக இந்நாடுகள் உள்ளன.

இந்திய பிரதமராக 2014இல் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து நரேந்திர மோதி இந்நாடுகளுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்துவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், ஜிசிசியுடனான விரிவான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2018ஆம் ஆண்டில் அபுதாபியில் முதல் இந்து கோயிலின் பிரபலமான முன்மாதிரி நிகழ்ச்சியில் நரேந்திர மோதி கலந்துகோண்டார். இந்தியா மற்றும் அந்நாடுகளுக்கு இடையேயான வளர்ந்துவரும் உறவுக்கு உதாரணமாக இது கூறப்பட்டது.

இதன் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான குரலில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவை ஐக்கிய அரபு அமீரகம் ஆதரித்திருந்தது.

இந்த சர்ச்சை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மற்ற நாடுகளுடன் ராஜரீதியிலான இந்தியாவின் சமீபத்திய வெற்றிகளை பாதிக்கச் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இரானுடனான இந்தியாவின் உறவு மந்தமான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு எதிர்வரும் நாட்களில் வருகை தரவுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்டோல்லஹியனின் வருகையை இந்த சர்ச்சை பாதிக்கலாம்.

அரபு நாடுகளில் பணியாற்றிய முன்னாள் வெளியுறவு அதிகாரியான அனில் ட்ரிகுனாயத் கூறுகையில், இந்தியா தற்போது கடினமான சூழலில் உள்ளதாகவும் தலைமை மட்டத்திலான தீவிரமான முயற்சிகள் மட்டுமே எதிர்மறையான வீழ்ச்சியை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

லட்சக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீழ்ச்சியால் ராஜரீதியாக ஏற்படும் இழப்புகள், அந்த பிராந்தியத்துடனான இந்தியாவின் உறவை கடுமையாக பாதிக்கச் செய்யும் என, மற்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்தியாவுடன் நட்பை பேணும் நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களை விமர்சிக்கும்போது இந்திய அதிகாரிகள் தற்காப்புடனேயே எதிர்வினையாற்றுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக மன்னிப்பு கோருகின்றனர், பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்" என, வில்சன் சென்டர் ஆய்வுக் கழகத்தின் ஆசிய திட்டத்தின் துணை இயக்குனர் மைக்கேல் குகேல்மான் தெரிவித்தார்.

தங்கள் நாடுகளில் உள்ள மக்களின் கோபத்தைத் தணிக்கவும் அரபு நாடுகள் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருகிறது. இந்தியாவை விமர்சிக்கும் ஹேஷ்டேக்குகள் அந்த நாடுகளின் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்நாடுகளின் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இவ்விவகாரம் இடம்பிடித்துள்ளது.

இந்திய பொருட்களை புறக்கணிக்க கோரும் ஹேஷ்டேகுகளும் டிரெண்டாகிவருகின்றன. கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அங்காடிகளில் இந்திய பொருட்களை நீக்கும் செய்திகளும் வருகின்றன. குவைத்தில் உள்ள அல்-அர்தியா கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் அரபி மொழியில், "இந்திய பொருட்களை நாங்கள் எடுத்துவிட்டோம்" என எழுதப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

ஆனால், இத்தகைய கோபத்தின் வெளிப்பாடுகள் உள்ள போதிலும், ஜிசிசி மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவு முக்கியமானது எனவும், ஆபத்துகளை தணிக்கும் வழிகளை இருதரப்பும் ஆராய வேண்டும் எனவும், குகேல்மான் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இந்த விவகாரத்தில் இந்தியா அதன் சொந்த செல்வாக்கால் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில், தங்களின் பொருளாதார நலன்களுக்காகவும் தொடர்ந்து எரிசக்தியை இறக்குமதி செய்வதற்காகவும் வளைகுடா நாடுகளுக்கு இந்தியா தேவை. மேலும், அந்நாடுகளுக்கு இந்தியர்கள் வந்து வாழ்வதும் பணிபுரிவதும் தொடர வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவுடன் தொழில் புரிவது தொடர்வது அவர்களின் தேவையாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளுக்கு இந்நாடுகள் எதிர்வினையாற்றுவதற்கு எல்லைகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

வளர்ந்துவரும் பிரிவினை

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மத பிரிவினை அதிகரித்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக சில இந்து அமைப்புகள் வாரணாசியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு சென்று, நூற்றாண்டு பழமையான மசூதியில் வழிபடுவதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மசூதி கோயில் இடிபாடுகளில் கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

தூண்டும் வகையிலான விவாதங்களை தொலைக்காட்சி சேனல்கள் நடத்திவருகின்றன. சமூக ஊடகங்களில் பரவலான வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், நூபுர் ஷர்மா பாஜக கூறுவதுபோன்று "உதிரி நபர்" அல்ல என, விமர்சகர்கள் கூறுகின்றனர். அக்கட்சியின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளராக அவர் இருந்தார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்தியாவுக்கான அழைப்பு மணியாக உள்ளது எனவும் பிரித்தாளும் அரசியல் சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும் என இந்தியா கற்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்தியாவில் வளர்ந்துவரும் நச்சு அரசியல் இந்தியாவுக்குள்ளேயே எப்போதும் தங்கியிருக்காது என்பதை இந்தியா கற்றுவருகிறது. இந்தியாவின் செல்வாக்கு உலகளவில் வளரும் நிலையில், மற்ற நாடுகளுடனான அதன் ராஜரீதியிலான மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள், வலுப்படும்போது, உள்நாட்டு அரசியல் வெளிநாடுகளில் விரும்பத்தகாத விளைவுகளை எற்படுத்துவதில் பங்கு வகிக்கும்" என, குகேல்மான் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-61715447

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்து : கட்டார், குவைத், ஈரான், சவுதி கடும் கண்டனம்

 

 

18 hours ago, ஏராளன் said:

முகமது நபி பற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கு அரபு ஊடகங்களின் எதிர்வினை

 

கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்'... கேப்டன் டிவியில் 'வடிவேலு'! | Captain TV's  'Kadupethuranga your honour' | 'கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்'... கேப்டன்  டிவியில் ...

அப்படி, என்ன சொல்லிப்  போட்டான்... நம்ம கட்சிக்காரன் யூவார் ஆனர். 🤕

என்ன சொல்லி விட்டார்கள் என்று... அரபு நாடுகள் துள்ளிக் குதிக்குது. 
அதையும் சொன்னால்தானே... இந்தியாவில் தவறா என்று, ஒரு முடிவுக்கு வரலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Arab countries vs BJP explained | Nupur Sharma Incident | இந்தியர்களின் ஒற்றுமை | Prophet Muhammad

 

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் விற்கப்படும் இந்திய பொருட்களை... 
வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
அதனால்... கடைகளில் இருந்து இந்திய பொருட்களை அப்புறப் படுத்துகிறார்கள்,
அல்லது... திரைச் சீலையால்  மூடி வைக்கிறார்கள்.

இந்தியா... மன்னிப்பு கேட்க வேண்டுமாம். 
அதற்கு... இருவர் செய்த தவறுக்கு,
இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, 
ஒரு தரப்பு வாதாடுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

810804.jpg

'மதவெறியை ஊக்குவிக்காதீர்கள்' - இந்தியாவுக்கு, தலிபான் அரசு அறிவுரை.

"மதவெறியை ஊக்குவித்து முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்" என இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவுரை கூறியுள்ளது.

கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் நடந்த போராட்டம் வன்முறையானது. இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கான்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் நூபுர் சர்மாவின் பேச்சுக்கு ஜிசிசி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, யுஏஇ, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவுகள், ஜோர்டான், லிபியா என 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சர்ச்சையை ஒட்டி ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தனது ட்விட்டர் பக்கத்தில், "முகமது நபியை அவமதிக்குப்படி இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர் பேசியுள்ளதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற மத வெறியர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

https://www.hindutamil.in/news/world/810804-as-uproar-over-prophet-remark-spreads-to-more-countries-now-taliban-lectures-india-on-fanatics-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் வெறுப்புப் பேச்சும் இந்தியாவின் வெளியுறவுச் சங்கடங்களும்!

spacer.png

பாஜகவின் பல்வேறு பிரமுகர்கள் அவ்வப்போது தங்கள் பேச்சுகளாலும், கருத்துகளாலும் சர்ச்சைக்கு உள்ளாவது கடந்த சில ஆண்டுகளாகவே வாடிக்கை ஆகிவிட்டது. ஆனால், தற்போது இஸ்லாமிய மார்க்கத்தின் இறைத் தூதர் முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்துகள், பாஜக என்பதைத் தாண்டி இந்தியாவுக்கு எதிரான குரல்களை உலக அரங்கில் எழுப்பியுள்ளன.

கடந்த மே மாத இறுதியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அருவெறுக்கத் தக்க வகையில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதனை நியாயப்படுத்துவது போலவே டெல்லி மாநில பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். நுபுர் ஷர்மாவின் நபிகள் குறித்த சர்ச்சையான அந்த கருத்துகள் அடங்கிய வீடியோ சில நாட்களிலேயே சமூக தளங்களில் பரவியது. இது இந்தியாவைத் தாண்டி உலகம் முழுதும் இருக்கும் இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

சமூக தளங்களில் பாஜக பிரமுகர்களின் கருத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உலகத்தில் முக்கியமான இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி அதிகாரபூர்வமாக தனது கண்டனத்தை வெளியிட்டது. அதையடுத்து வரிசைகட்டி பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவில் இருந்து எழுந்துள்ள நபிகள் பற்றிய கருத்துக்கு தங்கள் கண்டனங்களை வெளியிட்டன.

வளைகுடான நாடான கத்தார் நாட்டில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த விவகாரத்துக்காக ஜூன் 5 ஆம் தேதி கத்தார் அரசின் வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டுக்கான இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தது.

கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல், "இந்தக் கருத்துக்கள் எந்த வகையிலும், இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. இவை சில சமூக விரோத சக்திகளின் கருத்துகள். அவை இந்தியாவின் கருத்துகள் அல்ல. இந்தியா எல்லா மதத்தையும் மதிக்கக் கூடியது. இந்திய அரசியலமைப்பு சாசனம் யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமையை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது” என்று கத்தார் அரசிடம் தெரிவித்தார்.ஆனால் கத்தார் அரசோ, "இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்த கருத்துகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்திருந்தது.

கத்தார் மட்டுமல்ல சவுதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் நபிகள் நாயகத்தை அவதூறு செய்யும் நடவடிக்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தன.

இதற்கிடையே செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, ஊடக பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. நுபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்த பாஜக தலைமை நவீன் ஜிண்டாலை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியது. ஜூன் 5 ஆம் தேதியே நுபுர் ஷர்மாவும் இதுகுறித்து விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவினர் தெரிவித்த கருத்துக்காக இந்தியாவுக்கு இதுவரை உலக அரங்கில் 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியா, ஈரான். ஈராக், குவைத், கத்தார்., ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஹ்ரைன், மாலத் தீவுகள், லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதிகார பூர்வமாக தங்களது எதிர்ப்பை இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளன.

மேலும் ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன் என்ற உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த விவகாரத்தை ஐ.நா. சபையை நோக்கி நகர்த்தியுள்ளது. “இந்தியாவில் நபிகள் நாயகம் பற்றிய அவதூறான கருத்துகளை பரப்புவதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஜூன் 6 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,

“இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இந்தியா பற்றிய குறுகிய பார்வைகொண்ட அனாவசியமான கருத்துகளை முற்று முழுதுமாக மறுக்கிறோம். இந்திய அரசாங்கம் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. மத ரீதியான சர்ச்சைகளை கிளப்பும் கருத்துகள் சிற்சில தனி மனிதர்களுடையவை. அவர்கள் எந்த வகையிலும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளையோ எண்ணங்களையோ பிரதிபலிக்கவில்லை. அப்படிப்பட்ட சில அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீது உரிய வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த விவகாரத்தை தவறான முறையில் வழிகாட்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவது வருந்தத்தக்கது. அந்த அமைப்பின் பிரிவினைவாத அஜெண்டாவையே இது வெளிப்படுத்துகிறது” என்றும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிண்டம் பச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாஜக அரசை கடுமையாக சாடியிருக்கிறது.,

“இந்தியாவின் 75 வருட சுதந்திர வரலாற்றில் முதன்முறையாக பாஜக தனது வெறுப்புப் பேச்சுகளின் விளைவாக இந்திய தூதரகங்கள் அன்னிய தேசங்களால் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தியாவுக்கு இதைவிட சங்கடமான நிலைமை வேறு எதுவும் இல்லை. பாஜக தனது வெறுப்பாளர்களின் பேச்சுக்காக இந்தியா உலக அரங்கில் தலைகுனிய வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தொடர்புடைய அந்த இருவரை கைது செய்யுமாறும் காங்கிரஸ் கட்சி கோரியிருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுகவின் சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் த.மஸ்தான், “அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும்.பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை! அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

பாஜகவினரின் தொடர் வெறுப்புப் பேச்சுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மீதே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுள்ளது.
 

 

https://minnambalam.com/politics/2022/06/07/18/bjp-hate-speech-on-prophet-countries-oppose-india

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே இந்தியாவிலும் சிறிலங்காவிலும் மட்டுமே இனவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து தேர்தல் பிரச்சாரமும் அரசாட்சியும் நடைபெறுகின்றது.

மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்க முடியாதவர்கள் தான் இனவாதத்தையும் மதவாதத்தையும் கையிலெடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

810099.jpg

முகமது நபி குறித்து, அவதூறான கருத்து | இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய ஈரான், கத்தார், குவைத்; முழு விவரம்

முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அவதூறாக பேசிய பிரதிநிதிகள் மீது பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அந்த கட்சி. மூன்று அரபு நாடுகளும் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் அதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்.

என்ன நடந்தது? கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா. தொடர்ந்து முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி இருந்தார் பாஜக-வின் நவீன் குமார். அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில கடைக்காரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அது தொடர்பாக கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அம்மாநில காவல்துறை. இந்த நிலையில் தான் மூன்று நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

'பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' - குவைத்: தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளதை ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளது குவைத். இந்தியாவை ஆட்சி செய்து வரும் கட்சியின் பிரதிநிதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை கண்டிப்பதாகவும், நிராகரிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குவைத்.

இந்த விவகாரம் தொடர்பாக 'பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது குவைத். இது தொடர்ந்தால் வெறுப்புணர்வை அதிகரிக்க செய்யும் எனவும் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் சம்மன்: இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனை அந்த நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

கத்தார் கண்டனம்: இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கத்தார் உட்பட அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கண்டனம் தெரிவித்துள்ளது அந்த நாட்டு அரசு. இத்தகைய இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை தொடர்ந்து அனுமதிப்பது வன்முறையை வெடிக்க செய்யும் என கண்டனம் தெரிவித்துள்ளது கத்தார்.

16544562823068.jpg

பாஜக-வின் நடவடிக்கை என்ன? இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மதங்கள் தோன்றி, செழிப்பாக வளர்ந்துள்ளன. பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது. எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது. அத்தகைய நோக்குடன் செயல்படும் நபர்களையும் ஊக்குவிக்காது. இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நாட்டை அனைவரும் சமமாக வாழும், அனைவரும் சமமான மாண்பைப் பெறும் வளமிக்க நாடாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம். அப்போது தான் அனைவருமே வளத்தின், வளர்ச்சியின் கனியை சுவைக்க முடியும்" என்று விளக்கியுள்ளது.

அரபு நாடுகளில் இந்திய பொருட்களை புறக்கணிப்பது, இந்திய திரைப்படங்களுக்கு தடை வேண்டும் என சமூக வலைத்தளங்களில் முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர் கொதிப்படைந்துள்ள அந்த நாடுகளின் நெட்டிசன்கள்.

https://www.hindutamil.in/news/world/810099-remarks-prophet-muhammad-iran-qatar-kuwait-send-summons-indian-embassy-bjp-3.html

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் பிற மத இறை அவதூறு: பாஜக இளைஞரணி பிரமுகர் கைது!

 

இஸ்லாமியர்கள் தங்கள் இறைத்தூதராக போற்றும் நபிகள் நாயகத்தை அவதூறு செய்ததாக பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா அக்கட்சித் தலைமையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் தங்கள் எதிர்ப்பை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தன.

இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக சொல்லி உத்தரப்பிரதேசம், கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியை நேற்று (ஜூன் 7) இரவு கைது செய்திருக்கிறது காவல்துறை. பாஜக இளைஞர் பிரிவு தலைவர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவாவை கான்பூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவருடைய சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ட்விட் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

“ஹர்ஷித் ஸ்ரீவத்சவா அவரது சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு காரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அமைதியைக் குலைப்பவர்கள் மத வேறுபாடின்றி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது” என கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே வன்முறை மோதல் வெடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பி, பின் தன் கட்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். நுபுர் சர்மாவை இடை நீக்கம் செய்யும்போது பாஜக, “நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது” என்றும் கூறியது. இந்த நிலையில்தான் இன்னொரு பாஜக நிர்வாகி, அதேபோல அவதூறு கருத்து வெளியிட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

https://minnambalam.com/politics/2022/06/08/14/bjp-youth-wing-harshith-srivathsava-arrest-contraversy-against-prophet

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2022 at 12:46, தமிழ் சிறி said:

கடைகளில் இருந்து இந்திய பொருட்களை அப்புறப் படுத்துகிறார்கள்,
அல்லது... திரைச் சீலையால்  மூடி வைக்கிறார்கள்.

பெண்களை கறுப்பு திரைச் சீலையால்  மூடி வைக்கிறவர்கள் தானே

 

On 7/6/2022 at 12:46, தமிழ் சிறி said:

இருவர் செய்த தவறுக்கு,
இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, 
ஒரு தரப்பு வாதாடுகின்றது.

தவறு ஒன்றும் இல்லை முகமது ஆயிஷா என்ற சிறுமியை திருமணம் செய்ததை சொன்னார்கள் முஸ்லிம்கள் அதை எல்லாம் மனதுக்குள் வைத்திருக்க வேண்டும் வெளியே கதைக்க கூடாது. இதை சொன்னவர்களை எரித்து கொல்ல வேண்டும் அல்லது அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதே முஸ்லிம் நாடுகளின் எதிர்பார்ப்பு அது தான் இவ்வளவு துள்ளல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.