Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

 

 

தமிழ் மீது உள்ள அதீத பற்றால் விவசாயி இளங்கோவன்,  சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்திலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். இதை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவரின் உருவமைப்பு தெரிவது சிறப்பம்சமாகும்.

இது பற்றி தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் மற்றும் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவசாயி இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் விவசாயி இளங்கோவன் கூறியதாவது, "நான் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த இயற்கை விவசாயத்தை செய்து வருகிறேன்.‌ திருவள்ளுவர் எழுதிய மொத்த குறளில் 11 குறள்களில் இயற்கை விவசாயத்தைப் பற்றி கூறியுள்ளார். அந்த குறள்களின் தாக்கத்தால் தான் நான் திருவள்ளுவர் உருவத்தில் விவசாயம் செய்தேன்" என மகிழ்ச்சியாக கூறினார்.

மேலும் "இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு தனி ஆளாக நான் மட்டும் ஐந்து நாட்களாக இந்த நடவு முறையினை செய்தேன். இயற்கை விவசாயத்தை அனைவரும் செய்ய வேண்டும். இயற்கை உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்பதே எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது. மேலும் பிற்காலத்தில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை நட உள்ளேன்.." என கூறினார்.

தமிழ் நியூஸ்18

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

Picture1.png

தனி ஒருவராக.. இவ்வளவு பெரிய திருவள்ளுவர் உருவத்தை,
உயிரோட்டம்  உள்ள நெற் பயிரில் கொண்டு வந்தது சாதனை தான்.
கழுகுப்  பார்வையில்... எவ்வித பிசிறும் இல்லாமல், அழகாக வள்ளுவர்  தெரிகிறார்.

விவசாயி இளங்கோவனுக்கு... தமிழக அரசின் சார்பில்,
சிறப்பு ஊக்குவிப்பு பரிசு கொடுப்பதன் மூலம் 
அவரின் முயற்சியை... கௌரவப் படுத்த வேண்டும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் உணர்வு நாடி நரம்பு இரத்தத்தில் ஊறிய உறவுக்கு ஒரு கும்பிடு 🙏🏾

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் செய்தியையும், காணொளியையும் பார்த்தவுடன் மிக ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் அவரின் தமிழ் உணர்வும், அதற்கான முனைப்பும் போற்றத்தக்கது..!

இம்மாதிரி சாதாரண மக்களில் தமிழ் உணர்வாளர்கள் இன்னமும் பெருக வேண்டும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.