Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தொடர்பாக T ராஜேந்தரின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய தேவைக்காகஇ நலனுக்காக அல்லது ஏதாவது ஒரு எதிர்பார்ப்புக்காக பச்சோந்திகள் போல தங்களுடைய நிறத்தை மாற்றுவது ஒன்றும் தமிழ்நாட்டு அரசியலில் புதிய விடயம் அல்லஇ இது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாக்காரர்களையும்இ அரசியல்வாதிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவும்இ அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவைஇ எனவே ஒரு தரப்பினர் பற்றியும் சொல்ல படுக்கிற கருத்து அப்படியே மற்ற தரப்பினருக்கும் பொருந்தும்.

இதற்கு நல்ல உதாரணம் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அதோ இதோ என்று எமது போராட்டத்தை பெரிதாக புகழ்ந்து தள்ளினார். அப்போது நாம் எல்லோரும் (யாழ் களத்தில்) அவருக்கு ஒத்து ஊதினோம். பின்னர் சில காலம் கழித்து பேச்சு வேறு செயல் வேறு என்பதை நிருபித்தார். அப்பொழுது நாம் எல்லோரும் அப்படியே மாறி எதிராக கருத்துக்களை வெளியிட்டோம். அவர் ஒரு பச்சோந்தியென்று வாய் கிழிய கத்திதினோம்.

சரி விடயத்திற்கு வருவோம்..

ராஜேந்தர் ஊடகங்களின் பேட்டிகளில் தவிர வேறு எந்த வழியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஏதாவது செய்திருக்கிறார்?

உ.ம்:

வேகோஇ பழநெடுமாறன் ஐயா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நடாத்தி வருகின்ற ஏதாவது ஒரு அமைப்பில் ராஜேந்தர் அங்கத்தவராக இருக்கிறாரா?

அவர்கள் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக காலம் காலமாக நடாத்தி வந்த ஏதாவது ஒரு பேரணியில் கலந்து கொண்டிருக்கிறாரா?

எமது போராட்டத்தின் உண்மை பற்றி தன்னுடைய படங்களில் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

எமது மக்கள் கொன்றொழிக்கப்படுவதை எதிர்த்து என்றாவது ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரா? உதாரணத்திற்கு செஞ்சோலை சிறார்கள் கொன்றொழிக்கப்பட்டபோது ஏதாவது செய்திருக்கிறாரா?

தனது நிதியில் தமிழர் புனர்வாழ்வு அமைப்புகளில் ஏதாவது ஒன்றிற்கு பங்களிப்பு செய்திருக்கிறாரா? அப்படி செய்திருந்தால் எவ்வளவு நிதியை பங்களிப்பு செய்திருக்கிறார்?

ஒட்டுமொத்தமாக இவருடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னை ஈழத்தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்துஇ தனது திரைப்படங்களை ஓட்டுவித்து எமது பணங்களை சுரண்டுவதுதான் நோக்கம் இல்லை என்பதற்கு உருப்படியான உதாரணங்கள் ஏதாவது உங்களால் சொல்லமுடியுமா?

எனது இந்த கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வீர்களானால்இ எனது அறிவுப் பசியை தீர்த்த உங்களுக்கு புண்ணியமாக போகும்.

நாம் பொதுவாகவே எமது போராட்டத்திற்கு நல்லது செய்வார்கள் என்று நம்பிய அனைவரும் இறுதியில் எமது காலை வாரியதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் படிப்பினைதான் எமது ஆழ்மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் நாம் எவரையும்இ எந்த சந்தர்ப்பத்திலும் நம்பக்கூடாது என்ற நிலைக்கு எம்மை தள்ளிவிட்டிருக்கிறது.

அதன் ஆதங்கம்தான் ஜமுனாவையும் அவ்வாறான கருத்தை எழுதுவதற்கு துாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்- கிசான்

------------------------------------------------------------------------------------

கிசாண் அண்ணாவின் கருத்து தான் என்னுடைய கருத்தும்..............யாரும் இதற்கு வந்து பதில் அளிக்கலாமே................ - ஜமுனா

------------------------------------------------------------------------------------------

ராஜேந்தர் மட்டுமல்ல இன்னும் பலர் இப்படித்தான். எமது சாவிலும்இ எமது அவல வாழ்விலும்இ

எங்கள் சோகத்திலும் இஎங்கள் குருதியிலும் தங்கள் வாழ்வை மேம்படுத்தும் இவர்களைப் பற்றி

எப்படி சொல்வது? என்ன சொல்வது?

நாளை கொழும்புக்கு வரவழைத்து இவர்களுக்கு மாலை போட்டால் அப்படியே

தலைகீழாக மாறக்கூடியவர்கள்.- மருமகன்

----------------------------------------------------------------------------------------------

உங்கள் கருத்துப்படி ராஜேந்தர் கதைத்ததை எதிர்கின்றீர்கள். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.அதற்கு நீங்கள்பல காரணங்களை அடுக்குகின்றீர்கள்.

--------------------------------------------------------------

; ராஜேந்தர் ஊடகங்களின் பேட்டிகளில் தவிர வேறு எந்த வழியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஏதாவது செய்திருக்கிறார்?

உ.ம்:

வேகோஇ பழநெடுமாறன் ஐயா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நடாத்தி வருகின்ற ஏதாவது ஒரு அமைப்பில் ராஜேந்தர் அங்கத்தவராக இருக்கிறாரா?

அவர்கள் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக காலம் காலமாக நடாத்தி வந்த ஏதாவது ஒரு பேரணியில் கலந்து கொண்டிருக்கிறாரா?

எமது போராட்டத்தின் உண்மை பற்றி தன்னுடைய படங்களில் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

எமது மக்கள் கொன்றொழிக்கப்படுவதை எதிர்த்து என்றாவது ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரா? உதாரணத்திற்கு செஞ்சோலை சிறார்கள் கொன்றொழிக்கப்பட்டபோது ஏதாவது செய்திருக்கிறாரா?

தனது நிதியில் தமிழர் புனர்வாழ்வு அமைப்புகளில் ஏதாவது ஒன்றிற்கு பங்களிப்பு செய்திருக்கிறாரா? அப்படி செய்திருந்தால் எவ்வளவு நிதியை பங்களிப்பு செய்திருக்கிறார்?

ஒட்டுமொத்தமாக இவருடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னை ஈழத்தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்துஇ தனது திரைப்படங்களை ஓட்டுவித்து எமது பணங்களை சுரண்டுவதுதான் நோக்கம் இல்லை என்பதற்கு உருப்படியான உதாரணங்கள் ஏதாவது உங்களால் சொல்லமுடியுமா?

எனது இந்த கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வீர்களானால்இ எனது அறிவுப் பசியை தீர்த்த உங்களுக்கு புண்ணியமாக போகும்.

நாம் பொதுவாகவே எமது போராட்டத்திற்கு நல்லது செய்வார்கள் என்று நம்பிய அனைவரும் இறுதியில் எமது காலை வாரியதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் படிப்பினைதான் எமது ஆழ்மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் நாம் எவரையும்இ எந்த சந்தர்ப்பத்திலும் நம்பக்கூடாது என்ற நிலைக்கு எம்மை தள்ளிவிட்டிருக்கிறது.

அதன் ஆதங்கம்தான் ஜமுனாவையும் அவ்வாறான கருத்தை எழுதுவதற்கு துாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்- கிசான்

--------------------------------------------------------------------------

மேற்கண்ட கிசானின் கருத்தை ஜமுன அது வே தன்னுடைய கருத்தும் என்றும் கூறுகின்றார்.

தாங்கள்ராஜேந்தர் ஈழத்தமிழர்கள் பற்றி கூறிய கருத்து தலைப்புக்கு கீழாக அவரின்தனிப்பட்ட குணாதிசயங்கள் நடவடிக்கைகள் பற்றி கதைத்தது தற்செயலான ஒன்றல்ல அதற்கு வலுவான காரணங்கள் உண்டு என்று நிறுவி கீழ்கண்ட தங்கள் கருத்தை நியாயப்படுத்துகின்றனர்.

------------------------------------

கிஷாண் அண்ணா கிஷாண் அண்ணா.......நன்றியுங்கோ இணைப்புக்கு..............ஆமாம நல்லா தான் கதைகிறார்.............தாடி தான் நல்லா இருக்குது அவருக்கு..- ஜமுனா

------------------------------------------------------

அட பாட்டி பிளேட் வாங்கி கொடுக்காத ஒரு காரணதிற்காக இன்னும் அவர் தாசி வைத்திருகிறாரோ.......அன்றைக்கே பாட்டி பிளேட் வாங்கி கொடுத்து இருந்தா இன்றைக்கு அவர் நம்மளை பிளேட் படுத்துற பாடு படுத்தாம இருந்திருப்பார்............- ஜமுனா

-------------------------------------------------------------------

அவர் இன்னும் தாசி வைத்திருகிறாரோ.....என்ன கொடுமையடா இது ராஜேந்திரர் எப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தான் வாதிடுவார். அவரைப் பார்த்து இப்படி பேசலாமா -ரமில்லினுக்ஸ்

--------------------------------------------------

அண்ணோய் நான் டைப் பண்ணக்க மாறி அடித்து போட்டேன் அதை போய் பெரிசாகாதையுங்கோ ...........ஆமாம் வாயால ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வடிவா சொல்லலாம்................ -ஜமுனா

---------------------------------------------------------------------------------

ஆமாம் தெரியும். தமிழில் ஒரு சொல்லால் கருத்தே மாறிவிட்டது.

நான் என்றும் முருக கடவுளின் பக்தன் தான் -ரமில்லினுக்ஸ்

---------------------------------------------------------------

ஆமாம்மல எனி கவனாமா இருக்க வேண்டும் .................ஓ நீங்க முருகனின்ட பக்தரா அப்படியே கீபப் பண்ணுங்கோ................-ஜமுனா

------------------------------------------------------------------

உங்கள் கருத்துக்கள் மூலமும் நியாயப்படுத்தல்கள் மூலமும் பலதை செய்திருக்கின்றீர்கள். அதாவது நெடுமாறன் வைக்கோ போல் செயல்படாதவர்களை நாம் நம்பமாட்டோம். அவ்வாறு குரல் கொடுப்பவர்களை அவரவர்களின் தனிப்பட்ட விடயங்களை கேலிகிண்டல் பண்ணி அவர்கள் கருத்துக்களை உதாசீனம் செய்வோம். அகவே ராஜேந்தர் மாதிரி யாரும் இனிமேல் ஈழத்தமிழருக்காக கதைத்தால் அவர்களுக்கும் இதே கதிதான் காரணம் இவ்வளவு நாளா கதைக்கவில்லை. காசு கொடுக்கவில்லை. இவ்வாறு உங்களிடம் நிறைய காரணங்கள் அதுவும் உதாரணங்கள் அடுக்கப்பட்டு ஆதாரபூர்வமாக உள்ளது.

இவ்வளவு காலமும் காசு கொடுக்காமல் உதவி செய்யாமல் இனி ஈழத்தமிழர்கள் பற்றி கதைத்தால் அந்த பகுதியை மட்டும் வெட்டி இங்கே பிரசுரித்து ராஜேந்தரை உதைப்பது போல் அவர்களை உதைப்போம். இதன் பிறகு யாரும் இவ்வாறு கருத்து கூறினாலும் இவரின் கதிதான். அதை வலுப்படுத்த உதாரணங்களும் நியாயப்படுத்தல்களும்.

எமது தேசத்துக்காக எழும் குரல்களை நோக்கிய உங்கள் அவமதிப்புகளும் அதை நியாயப்படுத்துவதன் எதிர்மறை விழைவுகளையும் சற்று சிந்தியுங்கள். சங்கரி டக்ளஸ்போன்ற எத்தனையே எம்தேசத்தில் பிறந்தவர்கள் சிங்களத்துடன் சேர்ந்து எம்இனத்தையே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கையில் ராஜேந்தரின் உணர்ச்சிகரமான கருத்துக்கள் எவ்வளவோ மேலானது. அவரால் முடிந்ததை வெளிப்படுத்துகின்றார். அதுவரையில் ஈழத்தமிழனில் ஒருவனாக நான் அவரை நன்றியுணர்வுடன் பார்க்கின்றேன். அவர் மேலும் எம் சார்பாக கதைக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றேன். அவரின் பேச்சை கேட்கும் தமிழக உறவுகள் இனி வரும் காலங்களில் எம்சார்பான ஒரு பேரணியில் பங்கு கொள்ளும் மனப்பங்கை கொடுக்கும் என்று நம்புகின்றேன். சாதகமான ஒரு திசையில் பார்க பழக வேண்டும் தவிர எதிர்மறையான திசையில் கருத்துக்களை நகர்த்துவது எதிர்மறையான விழைவுகளையே தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசான் அண்ணாக்கு........... அவை எங்களுக்காக என்ன செய்தவை எண்டு கேக்குறீங்களே........... அவைக்கு நீங்க என்ன செய்தீங்க எண்டு முதல்ல சொல்லுங்கோ? அவையோட எப்:பிடியான அணுகுமுறைய கடைப்பிடிக்கிறீங்க எண்டு சொல்லுங்கோ? இந்தியால பூகம்பம் வந்தப்போ நீங்க என்ன செய்தீங்க? அப்பாவிக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில தீயில கருகி செத்தபோது நீங்க ஒரு அஞ்சலி செஞ்சீங்களா? சுனாமி ரைம்ல அவைக்கு ஏதாவது செஞ்சீங்களா? அய்யோ அவைக்கு அரசாங்கம் இருக்கு எங்களுக்கெண்டு ஒரு அரசாங்கம் இல்ல எண்டு வீண் வாதங்கள வைக்க வேணாம். தமிழன் என்ன உணர்வோட ஒரு வார்த்தை நீங்க ஆதரவா கதைச்சிருந்தீங்களா எண்டு சொல்லுங்கோ.

சுகன் அண்ணாட கருத்தத்தான் நானுஞ் சொல்லுறன். ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் எப்படியும் இருக்கட்டும். அவர்கள் பச்சோந்திகளாக கூட இருக்கட்டும். எங்கட போராட்டத்துக்கு எதிரா செயற்படாதவரையில சந்தோசபடுங்க. ஆதரவா ஒரு வார்த்தை சொல்லேக்க அத வரவேற்க பழகுங்க. கைதட்டல்கள் தான் நிறையபேரின்ர உற்சாக மருந்து எண்டுறத மறக்காதைங்கோ. அவையள நீங்க நம்போணும் எண்டில்ல. ஓரளவாவது விளைவுகள் எதிர்விளைவுகள் பற்றி அறிஞ்சு நாம நடக்கணும். சும்மா எடுத்தம் கவுட்டம் எண்டு போற போக்கில எதையும் செஞ்சிட்டு போகேலாது...... இது எங்கட இருப்பு சம்மந்தப்பட்ட விசயம். எங்கட வாழ்வு சம்மந்தப்பட்ட விசயம். நாங்கள் தான் அவதானமாவும் தூரநோக்கோடயும் நடக்கணும். நாடு சம்மந்தப்பட்ட விசயத்தில புலம்பெயர்ந்து வாழுற எங்கள மாதிரி தமிழற்ற கடமை இங்க தான் இருக்கு. குறிப்பா எங்கள மாதிரி இளைஞர்களின்ர கையில நிறைய இருக்கு.

ஆதரவா வார்த்தை சொல்லுறவையா வரவேற்காட்டியும் - அதை கொச்சைபடுத்தாமல் தவிர்க்கிறது நல்லது. எதிரா ஒரு வார்த்தை வந்தா அப்ப நீங்க கொந்தளியுங்கோ. அப்ப நீங்க எதிரா அறிக்கை விடுங்கோ. அப்ப செய்யிறதுக்கு உங்களுக்கு நிறைய கடமை இருக்கு...............

எனக்கென்ன சிரிப்பா இருக்கெண்டா.......... தமிழீழம் எண்டது என்ர உங்கட நாடு. ராஜேந்தர் தன்ர தாயகத்தில தமிழகத்தில இருக்கிறார். ஆனா நாங்க வெளிநாட்டுக்கு ஓடிவந்து இருந்துகொண்டு சொந்த நாட்டில இருந்த எங்கட நாட்டுக்கு ஆதரவா கதைக்கிறவன கோமாளியெண்டு விமர்சிக்கிறம். உண்மைல கோமாளியள் நாங்க தான் எண்டுறது வசதியா மறந்திடுறம். :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துப்படி ராஜேந்தர் கதைத்ததை எதிர்கின்றீர்கள். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.அதற்கு நீங்கள்பல காரணங்களை அடுக்குகின்றீர்கள்.

நான் எனது கருத்திலும் எந்தவொரு இடத்திலும் ராஜேந்தர் கதைத்ததை எதிர்ப்பதாக சொல்லவில்லை. பதிலாக பல கேள்விகளை அடுக்கி கடந்தகால அனுபவங்களை அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும் என்பதையே ஞாபக படுத்தினேன். நோக்கம் என்னுடைய கருத்தை யார் மீதும் திணிப்பது அல்ல. அவ்வளவுதான்.

மேற்கண்ட கிசானின் கருத்தை ஜமுன அது வே தன்னுடைய கருத்தும் என்றும் கூறுகின்றார்.

தாங்கள்ராஜேந்தர் ஈழத்தமிழர்கள் பற்றி கூறிய கருத்து தலைப்புக்கு கீழாக அவரின்தனிப்பட்ட குணாதிசயங்கள் நடவடிக்கைகள் பற்றி கதைத்தது தற்செயலான ஒன்றல்ல அதற்கு வலுவான காரணங்கள் உண்டு என்று நிறுவி கீழ்கண்ட தங்கள் கருத்தை நியாயப்படுத்துகின்றனர்.

இந்த விடயம் யாருக்கு எழுதினீர்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. எனினும் இறுதியில் "நியாயப்படுத்துகின்றனர்" என்று பன்மையில் எழுதியிருக்கிறீர்கள். எனவே இவ்விடயத்தை எனக்கும் சேர்த்துதான் சொல்வதாக எடுத்துகொள்கிறேன். ராஜேந்தரின் தாடி பற்றி கதைத்தது என்பது ஒன்றும் ஆபாசமோ அல்லது அது போன்ற சாயலான விடயமோ அல்ல. அது வெறும் நகைச்சுவைக்காக தான். இதில் துாக்கிப்பிடிப்பதற்கு பெரிதாக ஒரு விடயமும் இல்லையென்றுதான் எனக்கு படுகிறது. உலகம் முழுக்க பார்க்கிற சன்டிவியில் "ராஜேந்தருடன் ஒரு சந்திப்பு" என்ற நிகழ்ச்சியில்கூட தாடியை பற்றி நகைச்சுவையாக கேள்விகேட்டனர். அவ்விடயத்தில் ராஜேந்தர்கூட கோபித்துக்கொள்ளவில்லை. அவரும் நகைச்சுவையாகவே பதில் கூறினார். எனவே தவறு செய்யாத ஒரு விடயத்தில் நியாயப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்கள் கருத்துக்கள் மூலமும் நியாயப்படுத்தல்கள் மூலமும் பலதை செய்திருக்கின்றீர்கள். அதாவது நெடுமாறன் வைக்கோ போல் செயல்படாதவர்களை நாம் நம்பமாட்டோம். அவ்வாறு குரல் கொடுப்பவர்களை அவரவர்களின் தனிப்பட்ட விடயங்களை கேலிகிண்டல் பண்ணி அவர்கள் கருத்துக்களை உதாசீனம் செய்வோம்.

நீங்கள் மீண்டும் மீண்டும் "நியாயப்படுத்தல்" என்ன சொல்லை பாவிக்கிறீர்கள். அதற்கான பதில் ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன்.

தாடியை பற்றி கதைப்பது என்பது எந்த வகையில் கருத்தை உதாசீனப்படுத்தல் என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்குகிறது என்று சற்றி விளக்குவீர்களா? நன்றி!

தளபதி கிட்டு அவர்களளை இந்திய சதி செய்து கொன்ற சமயம் தலைவர் கிட்டண்ணாவின் தாயை அணைத்து ஆறுதல் படுத்தும் உருக்கமான புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அந்த நேரம் ரி ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலாம். ஒரு இதழை ஆரம்பித்த காலத்திலே அந்த புகைப்படத்தை பிரசுரித்த அதற்கு ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதை கண்ணீரை வரவழைக்கும் ஒரு கவிதையாக கனத்திருந்தது.

அகவே ராஜேந்தர் மாதிரி யாரும் இனிமேல் ஈழத்தமிழருக்காக கதைத்தால் அவர்களுக்கும் இதே கதிதான் காரணம் இவ்வளவு நாளா கதைக்கவில்லை. காசு கொடுக்கவில்லை. இவ்வாறு உங்களிடம் நிறைய காரணங்கள் அதுவும் உதாரணங்கள் அடுக்கப்பட்டு ஆதாரபூர்வமாக உள்ளது.

நீங்கள்தான் ஏற்கனவே கிட்டண்ணா வீரச்சாவெய்திய காலத்தில் இருந்தே ராஜேந்தர் எமது போராட்டத்தை ஆதரித்து வருகிறார்போன்ற ஒரு சாயலில் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். அதாவது அவருடைய போராட்டம் மீதான பற்று சுமார் 15 வருடங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்று சொல்ல வருகிறீர்கள்.

15 வருடங்கள் என்று சொன்னபடியால்தான், இவ்வளவு காலம் கடந்து விட்டதே இவருடைய பங்களிப்பு இவ்வளவுதானா என்ற கேள்வியை நான் கேட்கவேண்டியதாக போய்விட்டது. அதற்காகதான் நானும் பல கேள்விகளை அடுக்க வேண்டியதாயிற்று.

சங்கரி டக்ளஸ்போன்ற எத்தனையோ எம்தேசத்தில் பிறந்தவர்கள் சிங்களத்துடன் சேர்ந்து எம்இனத்தையே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கையில் ராஜேந்தரின் உணர்ச்சிகரமான கருத்துக்கள் எவ்வளவோ மேலானது. அவரால் முடிந்ததை வெளிப்படுத்துகின்றார்.

ராஜேந்தரையும் தமிழ்த் தேசியத் துரோகிகளையும் ஒப்பிட்டு பார்க்கிற உங்களை என்னவென்று சொல்லுறது? உங்களுடைய ஒப்பீடல் இந்த விடயத்தைபொறுத்தவரைக்கும் சகிக்க முடியலை. மன்னிக்கவும்.

அதுவரையில் ஈழத்தமிழனில் ஒருவனாக நான் அவரை நன்றியுணர்வுடன் பார்க்கின்றேன். அவர் மேலும் எம் சார்பாக கதைக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றேன்.

இந்த விடயத்தில் என்னுடைய எதிர்பார்ப்பும் இதுதான். அதை நான் மறுக்கவி்ல்லை.

சாதகமான ஒரு திசையில் பார்க பழக வேண்டும் தவிர எதிர்மறையான திசையில் கருத்துக்களை நகர்த்துவது எதிர்மறையான விழைவுகளையே தரும்.

எல்லா விடயங்களையும் சார்பான திசையில் பார்த்தால் இறுதியில் எஞ்சுவது ஏமாற்றம் மட்டும்தான். எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவன்தான் வாழ்வை வெல்கிறான்.

ஒட்டுமொத்தமாக நான் சொல்லவந்த விடயம் ராஜேந்தரை நம்பாதீர்கள் என்றதல்ல. எல்லா பக்கங்களையும் சிந்தித்துப்பாருங்கள் என்றதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசான் அண்ணாக்கு........... அவை எங்களுக்காக என்ன செய்தவை எண்டு கேக்குறீங்களே........... அவைக்கு நீங்க என்ன செய்தீங்க எண்டு முதல்ல சொல்லுங்கோ? அவையோட எப்:பிடியான அணுகுமுறைய கடைப்பிடிக்கிறீங்க எண்டு சொல்லுங்கோ? இந்தியால பூகம்பம் வந்தப்போ நீங்க என்ன செய்தீங்க? அப்பாவிக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில தீயில கருகி செத்தபோது நீங்க ஒரு அஞ்சலி செஞ்சீங்களா? சுனாமி ரைம்ல அவைக்கு ஏதாவது செஞ்சீங்களா? அய்யோ அவைக்கு அரசாங்கம் இருக்கு எங்களுக்கெண்டு ஒரு அரசாங்கம் இல்ல எண்டு வீண் வாதங்கள வைக்க வேணாம். தமிழன் என்ன உணர்வோட ஒரு வார்த்தை நீங்க ஆதரவா கதைச்சிருந்தீங்களா எண்டு சொல்லுங்கோ.

முதலிலை என்னை அண்ணா என்று சொல்லி பெரிய மனுசன் ஆக்காதைங்கோ. எனக்கு 22 வயது மட்டும்தான். <_< :P

நீங்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இயற்கை அழிவால் ஏற்பட்டது. நான் சொன்ன உதாரணங்கள் அனைத்தும் சிங்களவனின் வெறித்தனத்தால் செயற்கையா ஏற்பட்டது. இயற்கையின் சீற்றத்தை யாரால் தடுக்க முடியும்?

பள்ளிக்கூடத்தில் அப்பாவி குழந்தைகள் இறந்தபொழுது இங்கு (யாழ் களத்தில்) அது தொடர்பான பதிவு ஒன்று பதியப்பட்டது அதில் நாம் அனைவரும் எமது கவலையை, அஞ்சலியை வெளிப்படுத்தியிருந்தோம். தொலைக்காட்சிகளில் அக்காட்சியை பார்த்து இரங்கியிருந்தோம்.

நானும் ராஜேந்தர் மாதிரி பிரபலமாக இருந்திருந்திருந்தால் நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம். எங்களால் இங்கிருந்து ஆதரவாக நான்கு வார்த்தை சொல்லலாமே தவிர வேறு எந்த வழியிலும் உதவ முடியாது.

சுகன் அண்ணாட கருத்தத்தான் நானுஞ் சொல்லுறன். ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் எப்படியும் இருக்கட்டும். அவர்கள் பச்சோந்திகளாக கூட இருக்கட்டும். எங்கட போராட்டத்துக்கு எதிரா செயற்படாதவரையில சந்தோசபடுங்க. ஆதரவா ஒரு வார்த்தை சொல்லேக்க அத வரவேற்க பழகுங்க. கைதட்டல்கள் தான் நிறையபேரின்ர உற்சாக மருந்து எண்டுறத மறக்காதைங்கோ. அவையள நீங்க நம்போணும் எண்டில்ல. ஓரளவாவது விளைவுகள் எதிர்விளைவுகள் பற்றி அறிஞ்சு நாம நடக்கணும். சும்மா எடுத்தம் கவுட்டம் எண்டு போற போக்கில எதையும் செஞ்சிட்டு போகேலாது...... இது எங்கட இருப்பு சம்மந்தப்பட்ட விசயம். எங்கட வாழ்வு சம்மந்தப்பட்ட விசயம். நாங்கள் தான் அவதானமாவும் தூரநோக்கோடயும் நடக்கணும். நாடு சம்மந்தப்பட்ட விசயத்தில புலம்பெயர்ந்து வாழுற எங்கள மாதிரி தமிழற்ற கடமை இங்க தான் இருக்கு. குறிப்பா எங்கள மாதிரி இளைஞர்களின்ர கையில நிறைய இருக்கு.

நீங்கள் சொல்லுகின்ற துாரநோக்கு என்கிற விடயத்திற்குள் வைத்து என்னுடைய கருத்தையும் பார்த்தீர்கள் என்றால் சரியாகதான் இருக்கும்.

ஆதரவா வார்த்தை சொல்லுறவையா வரவேற்காட்டியும் - அதை கொச்சைபடுத்தாமல் தவிர்க்கிறது நல்லது. எதிரா ஒரு வார்த்தை வந்தா அப்ப நீங்க கொந்தளியுங்கோ. அப்ப நீங்க எதிரா அறிக்கை விடுங்கோ. அப்ப செய்யிறதுக்கு உங்களுக்கு நிறைய கடமை இருக்கு...............

இதிலை எந்தவகையில் என்னுடைய கருத்து அவரை கொச்சைப்படுத்தியிருக்கு என்று சற்று விளக்குவீர்களா? நன்றி.

எனக்கென்ன சிரிப்பா இருக்கெண்டா.......... தமிழீழம் எண்டது என்ர உங்கட நாடு. ராஜேந்தர் தன்ர தாயகத்தில தமிழகத்தில இருக்கிறார். ஆனா நாங்க வெளிநாட்டுக்கு ஓடிவந்து இருந்துகொண்டு சொந்த நாட்டில இருந்த எங்கட நாட்டுக்கு ஆதரவா கதைக்கிறவன கோமாளியெண்டு விமர்சிக்கிறம். உண்மைல கோமாளியள் நாங்க தான் எண்டுறது வசதியா மறந்திடுறம். mad.gif

நீங்கள் குறிப்பிடுவதுபோன்று இதில் கோமாளித்தனம் என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லவருகிறீர்களா? நாட்டுக்கு நல்லது செய்யுறதற்கு எங்கு இருக்கிறோம் என்றது முக்கியம் இல்லை. ஒருவேளை நாட்டிலையே நான் இருந்திருந்தால் இங்கு செய்கிற என்னுடைய பங்களிப்பின் அளவுக்கு அங்கு இருந்து செய்திருப்பேனோ தெரியாது.

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேந்திரர் ஆகட்டும், பிறர் ஆகட்டும் தமிழீழத்துக்கோ, தமிழருக்கோ ஆதரவு தரவேண்டும் என்றில்லை. சோ, மாதிரியோ விசு மாதிரியோ எதிராக இருந்து விட்டும் போகலாம். அது பிரச்சனையான விடயமே இல்லை.

ஆனால் மனதாரத் தார்மீக ஆதரவு அளிக்கின்ற விடயத்தில் ஏதோ தங்களுக்குரிய ஆதரவைக் காட்டுகின்றார்கள். அதைப் பாராட்ட வேண்டுமே தவிர, அப்படிச் செய்தியா, இப்படிச் செய்தியா என்று கேட்பது எல்லாம் எம்மைப் பலவீனப்படுத்தி எமக்குள்ள ஆதரவையும் இழக்கச் செய்கின்ற ஒரு நிகழ்வாக மாறிவிடும்.

ஆதரவு தருகின்றவர்களைக் கொச்சைப்படுத்தி, எனிமேல் ஆதரவாக வாயே திறக்காத மாதிரிச் செய்து விடாதீர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் எமக்குரியது. என்றைக்குமே நாங்கள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல. அப்படிப் பரிதாபத்துக்குரியவர்களாக இருந்தால் தான், அவன் ஆதரவு தரவில்லை, இவன் ஆதரவு தரவில்லை என்று அழவேண்டி வரும். இது பற்றிய தலைவரின் குறிப்பு ஒன்றைப் பார்த்தால் இந்த அங்கலாய்ப்புத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

ராஜேந்தரின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்த அவருடைய மனதில் இருந்த வருகின்ற கருத்தாகவே நான் பார்க்கின்றேன்.

ராஜேந்தர் இயல்பாகவே தமிழுணர்வு மிக்கவர். உணர்ச்சிகளின் அடிப்படையில் பேசுபவர். தந்திரங்கள் அறியாதவர்.

அவர் வியாபாரத்திற்காக தமிழின ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். அவருடைய தன்னம்பிக்கை அதற்கு இடமும் கொடுக்காது.

ராஜேந்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு பிராபகரன் பற்றி ஒரு படத்தை இயக்குவது தன்னுடைய இலட்சியம் என்று சொன்னதை படித்திருக்கிறேன்.

தமிழ் நாட்டில் வெளியில் தெரியாமல் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்கின்ற உதவிகள் வெளியில் தெரிய வருவதில்லை.

தெரிய வருவதில்லை என்பதற்காக அவர்கள் உதவி செய்வதில்லை என்று அர்த்தம் இல்லை.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிலை என்னை அண்ணா என்று சொல்லி பெரிய மனுசன் ஆக்காதைங்கோ. எனக்கு 22 வயது மட்டும்தான்

எனக்கும் 22 வயசு தானண்ணா..... வயசி சின்னனா இருந்தா என்ன நீங்க அறிவில அண்ணா தானே <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் 22 வயசு தானண்ணா..... வயசி சின்னனா இருந்தா என்ன நீங்க அறிவில அண்ணா தானே :D

இதைதான் நக்கல் எண்டுறது... :lol::D சரி அதை விடுவோம்..

பிறகென்ற நீங்களும் யாழ் இளைஞர் பட்டியில் இணைந்திருக்கறீர்கள்.. எங்களை போன்ற இளைஞர்களையும் ஒரு சுமாரான கருத்தாளிகளாக உருவாக்கிய யாழ் களத்திற்குதான் நன்றி சொல்லவேண்டும்..

நான் கூட இது வரை அய்யா நெடுமாறன் அவர்கள் நடத்திய எந்த கூட்டங்களிலும் பேரணியிலும் கலந்து கொண்டதில்லை ....... காரணம் நான் தமிழக அரசுப்பணியில் இருக்கிறேன் .... அரசுப்பணியாளர்கள் எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் பங்கெடுக்க க்கூடாது...... நானும் சுய நலவாதி தான்.....

ஆனாலும் ரகசியமாக பலர் ஈழத்தமிழர்க்கு உதவுவது உண்டு .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கூட இது வரை அய்யா நெடுமாறன் அவர்கள் நடத்திய எந்த கூட்டங்களிலும் பேரணியிலும் கலந்து கொண்டதில்லை ....... காரணம் நான் தமிழக அரசுப்பணியில் இருக்கிறேன் .... அரசுப்பணியாளர்கள் எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் பங்கெடுக்க க்கூடாது...... நானும் சுய நலவாதி தான்.....

ஆனாலும் ரகசியமாக பலர் ஈழத்தமிழர்க்கு உதவுவது உண்டு .......

உதவவேண்டும் என்ற உங்களது உண்மையான ஆர்வம் இருக்கிறதே.. அதற்கு முன்னால் எதுவும் நிகரற்றது.. அதுவே பெரிய விடயம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சியின் பிழம்பாய் விஜய டி ராஜேந்தர் பேசியது அருமை. இவர், பேராசிரியர் சுபவீ போன்றாவர்களுக்கு கலைனர் உடன் நல்ல உறவுண்டு.

அதை பயன் படுத்தி இவர்கள் இந்திய மத்திய அரசின் போக்கை மாற்ற முயல வேன்டும்.

இங்கு சிலர் ராஜேந்தரின் உணர்வுக்கு சேறு பூசி தமது மேதாவிலாசத்தை காட்ட முயல்கிறமை வெட்க்கத்துக்குரியது.

இவர்கள் போன்ற சிலரின் நடவடிக்கையால்தான் பல இன உணர்வாளர்கள் இன்னும் போராட்டத்தில் இருந்தும் விலகி நிற்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.