Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

குழியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையின் இதயம் நின்றுவிட, கூச்சலிட்டே அக்கம்பக்கத்தினரை அழைத்த குட்டி யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2304.jpg?width=620&quality=85&fit=max&s=99e80ac0443cb8ed750fd72fecb82042   2304.jpg?width=620&quality=85&fit=max&s=04edd6c4f53c44b8eae1870b59e3f939

குட்டி யானைகளின் விளையாட்டுகளையும், குறும்புகளையும் பார்ப்பதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் குறும்புத்தனத்தையும் தாண்டி குட்டி யானை ஒன்றின் செயல் நெகிழ்ச்சியில் தள்ளியுள்ளது.

தாய்லாந்தில் சில நாட்களாவே கனமழை பொழிந்து வரும் நிலையில், கனமழையில் வழிதவறிய குட்டியானை ஒன்று சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. அப்பொழுது குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானை பள்ளத்திற்குள் தலையை செலுத்தியது. அப்பொழுது தாய் யானையின் இதயம் நின்றுவிட்டது. பள்ளத்திற்குள் உடலை செலுத்தியவாறே தாய் யானை ஸ்தம்பித்து நின்றது. உடனே தாய்க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை உணர்ந்த குட்டி யானை ''எங்க அம்மாவை காப்பாத்துங்க..!'' என்ற உணர்வுடன் பீறிட்டு தனது குட்டி குரலில் பிளிறியது.

2304.jpg?width=620&quality=85&fit=max&s=1576538d6676f2ce90005a4ce9de38bf   1952.jpg?width=620&quality=85&fit=max&s=32a728a56b3ef15b3cbf86d368ebc96b  

சத்தம் கேட்டு உடனே சம்பவ இடத்திற்கு வந்த மக்கள், தாய் யானையை பள்ளத்தில் இருந்து கிரேன் உதவியுடன் வெளியே கொண்டுவந்தனர்.

'ஒருபுறம் குட்டி யானையின் கதறல், மறுபுறம் இதய துடிப்பில்லாமல் வீழ்த்துகிடக்கும் தாய் யானை' என சம்பவ இடமே பரபரப்பானது.

அங்கு வந்திருந்த பெண் ஒருவர் இந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டபடியே தாய் யானையின் இதயம் இருக்கும் பகுதியை ஓங்கி குத்தி, தாய் யானையின் இதயத்தை செயல்பட வைக்க முயற்சித்தார். தொடர் முயற்சியின் பலனாக தாய் யானை  எழுந்து நின்றது. மறுபுறம் மீட்கப்பட்ட குட்டி யானையும் தாய் யானையிடம் ஓடி ஒட்டிக்கொண்டது.

அங்கிருந்தோர்களின் கண்களில் இருந்த கண்ணீரும் ஏராளம். அந்த இளம்பெண் கண்ணீரை அடக்கமுடியாமல் அழுதார்.

தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் தமிழகத்தில் கூட குட்டி யானை ஒன்று கூட தாய் சேருவதற்காக வனத்துறையினருடன் குட்டி நடைபோட்டது வைரலானது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

 

 

தாய் யானையை காப்பாற்றிய... 
தாய்லாந்து மக்களின் செயல் உண்மையிலேயே நெகிழ வைத்தது. ☺️

அவசர கதியில் செயல் பட்டு, யானையின்  முக்கிய இடத்தை கண்டறிந்து..
தகுந்த முதலுதவி அழித்த மக்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள். 👍
குட்டி யானையும், தாய் யானையும்... நூறாண்டு சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள். 👏
நல்லதொரு காணொளியை இணைத்த... வன்னியருக்கு நன்றி. 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த யானையை மிருக காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். அந்த தாய் யானைக்கு இன்னுமொருதரம் இருதய தடங்கல் வாராது என்பதற்கு என்ன நிச்சயம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிக்கு ஏற்பட்ட விபத்தும், அதிலிருந்து தன்னல் இயன்றவரை மீட்க போராடியபோது ஏற்பட்ட தொய்வினால் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

காட்டு யானைகளை அங்கேயே சுதந்திரமாக விடுவதுதான் அவைகளுக்கு நல்லது. அதையே யானைகளும் விரும்பும்.

தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில், யானைகளை எப்படி காட்சிப்படுத்துகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்துள்ளேன்.

Edited by ராசவன்னியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.