Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

திரெளபதி முர்மூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.

திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.

முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன.

வெற்றிப் பெற்ற திரெளபதி முர்மூவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"திரெளபதி முர்மூவிற்கு ஆதரவளித்த எம்எல்ஏ மற்றும் எம்.பிகளுக்கு நன்றி. திரெளபதி முர்மூவின் மகத்தான் வெற்றி நமது ஜனநாயகத்தின் நல்ல வெளிப்பாடு" என மோதி தெரிவித்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் திரெளபதி முர்மூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக , எந்தவித அச்சமும் பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராக முர்மூ செயல்படுவார் என தான் நம்புவதாக யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரெளபதி முர்மூவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வரும் முர்மூ, அரசியலைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஒடுக்கப்பட்ட குரல்களின் பக்கம் நிற்பார் என தான் நம்புவதாக ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

மூன்றாம் சுற்று

மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரெளபதி முர்மூ 812 வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 521 வாக்குகளை பெற்றுள்ளார்.

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்றில் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டன (எழுத்து வரிசையில்). அதில் 1138 வாக்குகள் செல்லும் வாக்குகளாக இருந்தன. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 575 ஆகும். இதில் திரெளபதி முர்மூ 809 வாக்குகளை பெற்றிருந்தார். எனவே அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 299 ஆகும்.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா 329 வாக்குகளை பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 44 ஆயிரத்து 276 ஆகும்.

முதல் சுற்று

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திரெளபதி முர்மூ 540 எம் பிக்களின் வாக்குகளை பெற்றிருந்தார். அதன் மதிப்பு 3 லட்சத்து 78 ஆயிரம். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிக்களின் வாக்குகளை பெற்றிருந்தார் அதன் மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 600.

யார் இந்த திரெளபதி முர்மூ?

 

திரெளபதி முர்மூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

திரௌபதி முர்மூ, புவனேஷ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் 1979 இல் பி.ஏ. தேர்ச்சி பெற்றார். ஒடிஷா அரசில் எழுத்தராக (clerk) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது நீர்ப்பாசனம் மற்றும் எரிசக்தி துறையின் இளநிலை உதவியாளராக இருந்தார். பிற்காலத்தில் அவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கௌரவ ஆசிரியராக அவர் இருந்தார். அவர் பணிபுரிந்த நாட்களில், ஒரு கடின உழைப்பாளியாக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு 1997ஆம் ஆண்டு ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து தேர்தலில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நகர பஞ்சாயத்தின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் அரசியலில் தொடர்ந்து முன்னேறினார். மேலும் இரண்டு முறை (2000 மற்றும் 2009 ஆண்டுகள்) ராய்ரங்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக டிக்கெட்டில் எம்எல்ஏ ஆனார். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன பிறகு, 2000 முதல் 2004 வரை நவீன் பட்நாயக் அமைச்சரவையில், சுயேச்சைப் பொறுப்புடன் மாநில அமைச்சராக இருந்தார்.

அவர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக சுமார் இரண்டாண்டுகளும், மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளத் துறை அமைச்சராக சுமார் இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தார். அப்போது ஒடிஷாவில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இருந்தவர்

2015 மே 18 ஆம் தேதி அவர் ஜார்கண்டின் முதல் பெண் மற்றும் பழங்குடி ஆளுநராக பதவியேற்றார். அவர் ஆறு ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் இந்த பதவியை வகித்தார். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் பதவியில் இருந்து நீக்கப்படாத ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநர் இவர்.

அவர் இங்கு பிரபலமான ஆளுநராக இருந்தார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் ஆகிய இரு தரப்பிலுமே அவருக்கு நற்பெயர் இருந்தது.

அவர் தனது பதவிக்காலத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். சமீப ஆண்டுகளில், சில ஆளுநர்கள் அரசியல் ஏஜெண்டுகள் போல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் விலகியிருந்தார்.

காணொளிக் குறிப்பு,

திரெளபதி முர்மூ: பாஜக கூட்டணி அறிவித்துள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் - யார் இவர்?

அவரது பதவிக்காலத்தின்போது, பாஜக கூட்டணியின் முந்தைய ரகுபர் தாஸ் அரசிடமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் தற்போதைய ஹேமந்த் சோரேன் அரசிடமும், தங்கள் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். அத்தகைய சில மசோதாக்களை அவர் தாமதமின்றி திருப்பி அனுப்பினார்.

இதுவரை குடியரசு தலைவராக இருந்தவர்கள் யார், அவர்களின் பதவிக்காலம் என்ன?

ராம்நாத் கோவிந்த் - (பிறந்த தினம்: 1945 அக்டோபர் 1)பதவிக்காலம்: 2017 ஜூலை 25 முதல் தற்போதுவரை

பிரணாப் முகர்ஜி (1935-2020)பதவிக்காலம்: 25 ஜூலை, 2012 முதல் 25 ஜூலை, 2017 வரை

பிரதிபா தேவிசிங் பாட்டீல் (பிறப்பு - 1934)பதவிக்காலம்: 25 ஜூலை, 2007 முதல் 25 ஜூலை, 2012 வரை

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931-2015)பதவிக்காலம்: 25 ஜூலை, 2002 முதல் 25 ஜூலை, 2007 வரை

கே. ஆர். நாராயணன் (1920 - 2005)பதவிக்காலம்: 25 ஜூலை, 1997 முதல் 25 ஜூலை, 2002 வரை

ஷங்கர் தயாள் சர்மா (1918-1999)பதவிக்காலம்: 25 ஜூலை, 1992 முதல் 25 ஜூலை, 1997 வரை

ஆர் வெங்கட்ராமன் (1910-2009)பதவிக்காலம்: 25 ஜூலை, 1987 முதல் 25 ஜூலை, 1992 வரை

கியானி ஜைல் சிங் (1916-1994)பதவிக்காலம்: 25 ஜூலை, 1982 முதல் 25 ஜூலை, 1987 வரை

நீலம் சஞ்சீவ ரெட்டி (1913-1996)பதவிக்காலம்: 25 ஜூலை, 1977 முதல் 25 ஜூலை, 1982 வரை

ஃபக்ருதீன் அலி அகமது (1905-1977)பதவிக்காலம்: ஆகஸ்ட் 24, 1974 முதல் பிப்ரவரி 11, 1977 வரை

வராஹகிரி வெங்கட கிரி (1894-1980)பதவிக்காலம்: 3 மே, 1969 முதல் 20 ஜூலை, 1969 மற்றும் 24 ஆகஸ்ட், 1969 முதல் 24 ஆகஸ்ட், 1974 வரை

ஜாகிர் உசேன் (1897-1969)பதவிக் காலம்: 13 மே, 1967 முதல் மே 3, 1969 வரை

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)பதவிக்காலம்: 13 மே, 1962 முதல் 13 மே, 1967 வரை

டாக்டர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) இரண்டு முறை பதவி வகித்தார்பதவிக்காலம்: 26 ஜனவரி, 1950 முதல் 13 மே, 1962 வரை

https://www.bbc.com/tamil/india-62256021

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.... நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை, இந்திய இன்றைய ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

ஆக.... நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை, இந்திய இன்றைய ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. 😁

நாதம் இந்தியாவிலை எப்பவும் சனாதிபதியை மக்கள் தெரிவதில்லை தானே

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

நாதம் இந்தியாவிலை எப்பவும் சனாதிபதியை மக்கள் தெரிவதில்லை தானே

ஓமோம்... அதோடை சேர்த்து, நம்மூரிலும், மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படவில்லை என்று சொல்ல வந்தேன்.... 😜

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு

இலங்கையின் ஜனாதிபதி பதவி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்  விமா்சனங்களையும், அதிருப்திகளையும், சா்ச்சைகளையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கின்ற நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில்,  ஜனாதிபதி பதவி ஒரு பேசு பொருளாகியுள்ளது. 

ஜனாதிபதியாக தொிவு செய்யப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு பற்றி உலகமெல்லாம் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் தோ்ந்தெடுக்கப்பட்டதே இதற்குறிய காரணமாகும். இடம்பெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் 3219 வாக்குகளில் 2161 வாக்குகள் இவருக்கு கிடைத்துள்ளன. எதிர்க் கட்சினரும் இவருக்கு தமது வாக்குகளை அளித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜுலை மாதம்  24-ம் திகதியுடன் முடிவடையும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. சாா்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சாா்பாக  யஷ்வந்த் சின்காவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். 

திரௌபதி முர்மு இந்தியாவின்  பழங்குடி இனமான சந்தல் என்ற இனத்தைச் சோ்ந்தவா். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற பெருமையும், இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையும்  திரௌபதி முர்முவுக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமை பிரதீபா பட்டேலுக்கு கிடைத்தது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட பல இனங்கள் வாழுகின்ற, பல மொழிகள் பேசப்படுகின்ற மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வா்ணிக்கப்படுகின்ற  இந்தியாவின் வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தை, சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த பலருக்கு இத்தகைய உயா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால், இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு, ஒரு சிறுபான்மை இனத்திற்கு அரச அதிகாரத்தில் இப்படி ஒரு பதவி கிடைப்பதை நினைத்துக் கூட பாா்க்க முடியாத நிலை இருக்கிறது. இலங்கை அரசியலில் இனவாதத்தின் பிடி மிகவும் கடுமையானதாகவும், கூா்மையானதாகவும் இருக்கிறது.

இதற்கு பல உதாரணங்களை முன் வைக்கலாம்,

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீா்வாக அதிகாரப் பகிா்வை அடிப்படையாக வைத்து முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்த இனவாத சக்திகள் இன்று வரை மறுத்து வருகின்றன. 

சிறுபான்மை சமூகங்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் செல்லக் கூடாது என்பதில் சிங்கள பெரும்பான்மை சமூகம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.

அண்மையில் எமது நாட்டில்  ஜனாதிபதியை தொிவு செய்யும் வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.  

இந்த வாக்கெடுப்பின் பின்னா் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜேவிபியின் தலைவா் அனுரகுமார திசாநாயக்க, இலங்கையின் பிரதமராக தமிழ் இனத்தைச் சோ்ந்த எம். ஏ. சுமந்திரன் அவா்களை தொிவு செய்திருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தாா். 

அனுரகுமாரவின் இந்த கருத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாத பல இனவாதிகள் சமூக ஊடகங்களில் மிகவும் மோசமான முறையில் அனுரகுமாரவுக்கும், ஜேவிபி கட்சிக்கும்  எதிராக தமது வன்மத்தை வாாி இறைத்திருந்தனா். 

அனுரவுக்கும் அவரது கட்சிக்கும் எதிராக மிகவும் மோசமாக எதிா்வினையாற்றியிருந்தனா்.  சமகால இலங்கை அரசியல் தீவிர இனவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

இதுவரை இந்திய ஜனாதிபதிகளாக பதவி வகித்த பதினைந்து போ் கொண்ட வரிசையில் பலா் சிறுபான்மை சமூகத்தை சோ்ந்தவா்களாக இருப்பதை அவதானிக்க முடியும்.. 

இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியாக டொக்டா் ராஜேந்திரப் பிரசாத் கடமையாற்றினாா். இந்தியாவில் ஜனாதிபதியாக கடமையாற்றியோரின் பட்டியல் இது.

1. டொக்டா் ராஜேந்திரப் பிரசாத்

2. சா்வபள்ளி ராதாகிருஷ்ணன்

3.      சாகிா் ஹுஸைன்

4.      வி.வி. கிரி 

5.       பக்ருதீன் அலி அஹமத்

6.     நீலம் சஞ்சீவி ரெட்டி

7.     ஜெயில் சிங்  

8.     ரா. வெங்கட் ராமன்

9.     சங்கா் தயாள் சா்மா

10.   கே.ஆா். நாராயணன்

11.    ஏ.பி. ஜே. அப்துல் கலாம்

12.   பிரதீபா பட்டேல்

13.   பிரணப் முகா்ஜி

14.   ராம் நாத் கோவிந்த்

அவா்களைத் தொடர்ந்து 15வது ஜனாதிபதியாக   திரௌபதி முா்மு தற்போது பதவியேற்றுள்ளாா்.

   இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள  திரௌபதி    முா்மு பற்றி கொஞ்சம் பாா்ப்போம்!

திரௌபதி முா்மு ஒரு பழங்குடியினத்தில் பிறந்து ஒரு நாட்டின் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இன்று உலகெங்கும் பேசப்படுகின்ற ஒருவராக மாறியிருக்கிறாா்.

திரெளபதி முர்மு 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் திகதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் திகதி பிறந்தார்.

முா்முவின் தந்தை பிரஞ்சி நாராயண் டூடு கல்வியின் மீதான ஆா்வத்தில் தனது மகளுக்கு பாடசாலை முதல் பட்டப்படிப்பு வரை வழி காட்டினாா்.  நீண்டகாலம் ஆசிரியையாக பணியாற்றிய  முா்மு பின்பு அரசியலில் ஈடுபட்டாா்.

திரௌபதி முர்மு திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார். அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தாா்.

தொன்னூறுகளில் தனது ஆசிரிய பணிக்கு  விடை கொடுத்த  முர்மு, பாரதீய .ஜனதா கட்சியில் இணைந்து செயற்பட்டார். 1997-ம் ஆண்டு இடம் பெற்ற  ராய்ரங்பூர் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2000-ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், ராய்ரங்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று சட்ட மன்ற உறுப்பினரானாா்.

பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் 2000 முதல் 2002 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றிய முா்மு,. 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.  

2015ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும்  கடமையாற்றினாா். 

திரௌபதி முா்மு ஜுலை 25ம் திகதி இந்திய உயா்  நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளாா்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதியான-பழங்குடியின-பெண்-திரௌபதி-முர்மு/91-301084

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/7/2022 at 18:50, Nathamuni said:

ஆக.... நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை, இந்திய இன்றைய ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. 😁

இவரும் ஒரு வகையில் தன்னினத்தை அழிக்க துணை போனவர் என்று  பேசிக்கொள்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் சுழற்சி முறையில் ஜனாதிபதியாக நியமித்தால் இன்னும் சிறப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.