Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு

வீரகேசரி இணையத்தளம்

வெள்ளவத்தை சவோய் தியட்டரிற்கு அமைந்த பகுதியில் விடிதியயான ஜடில் இன் பொலிஸார் தீடீர் தேடுதல் இரு கிளேமோர்கள் 3 குண்டுகள் மற்றும் ஒரு டெட்டனேட்டன மீட்டுள்ளதாக வெள்ள்வதை பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகத்திடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகவல்லையடுத்து

இன்று முற்பகல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலேயே இவ் வெடிபொருட்கள் கண்டுபீடிகக்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட கிளேமோர் குண்டு முறையே 9 கிலோ கிராம் 5 கிலோகிராம் நிறையுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு

நாடகம் நல்லாயிருக்கு நாட்டடியம் தான் கொஞ்சம் சறுக்குது

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்பு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று இரண்டு கிளைமோர் குண்டுகளை மீட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழர்கள் அதிகமாக வந்து தங்கும் சின்சபா வீதியில் உள்ள "ஐடியல்" விடுதியில் இருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு சக்தி வாய்ந்த இந்த கிளைமோர் குண்டுகளை தாம் மீட்டதாக தெரிவித்த சிறிலங்கா காவல்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி சந்தேக நபரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

விடுதிக்குள் திடீரென புகுந்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு எடுத்ததாகக் கூறி இரண்டு கிளைமோர்களையும் 3 கைக்குண்டுகளையும் காட்டினர் என்று விடுதியில் இருந்த பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.

கிளைமோர் மீட்கப்பட்டதாகக்கூறும் சம்பவத்தை அடுத்து அங்கு நீண்ட நேரமாக சல்லடை போட்டு தேடுதல் நடத்திய காவல்துறையினர் அங்கிருந்தவர்களை துருவித்துருவி விசாரணை செய்ததாகவும் கூறப்படுகீறது.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் "ஐடியல்" விடுதியில் இருந்த 84 தமிழர்களும் கைதிகள் போன்று நடத்தப்பட்டு பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 16-08-2007 11:32 மணி தமிழீழம் [மயூரன்]

வெள்ளைவத்தை கிளைமோர் மீட்பு தொடர்பில் 4 பேர் கைது

கொழும்பு வெள்ளைவத்தை சின்சபா வீதியி்ல் அமைந்துள்ள ''ஜடியல்'' விடுதியில் சிறிலங்காப் படையினரால் இரண்டு கிளைமோர் குண்டுகள் நேற்று மீட்கப்பட்டிருந்தன.

இது தொடர்ப்பில் சந்தேகத்தின் பெயரில் 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரித்துள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறீங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளன.

நன்றி - பதிவு

பிற்குறிப்பு:

சம்பவத்திற்கு முதல்நாள் இந்த விடுதியின் முகாமையாளர், என்ன என்ன காரணத்திற்காக வடகிழக்கு தமிழர்கள் பலர் அங்கே தங்கியுள்ளனர், எவ்வளவு அறவிடப்படுகின்றது, உணவு சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், குடியிருப்பாளர் ஒருவரும் தான் ஏன் தங்கியுள்ளேன், தமது கஷ்டங்கள் பற்றியும் அளித்த பேட்டி வெளியானது.

புலனாய்வுத்துறை மிகவும் வேகமாக இருக்கிறது! கவனம், போகிற போக்கில் குண்டு வைக்க முன்னரே கண்டுபிடித்ததாக சொல்லிவிடப் போகின்றார் ரம்-புக்-வெல்ல!

வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் கிளேமோர் குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கிளைமோறை கோட்டலுக்கையா வெடிக்க வைக்க தயாராக வைத்து இருந்தார்கள்...??? சும்மா கிடந்த கிழைமோறை செயலிளக்க வைக்க விசேட அதிரடிப்படை.. ஏதாவது காமடி கீமடி பண்ணுற்றாங்களோ..??

சந்தேகம் கிளப்புகிறார் மனோ கணேசன்.

வெள்ளவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து இரண்டு கிளைமோர்கள் உட்பட குண்டுகள் மீட்கப்பட்டன என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கினறன என மேலக மக்கள் முன்னனித் தலைவர் மனோ கணேசன் எம்.பி கூறியிருக்கிறார்

கொழும்பிலிருந்து படையினர் மற்றும பொலிஸாரிhல் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாகப் பாதுகாபப்புத் தரப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் அழுத்தமாக இது இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள அவர்,

அதற்காகச் சோடிக்கப்பட்ட விவகாரமாக இந்தக் குண்டு மீட்பு நடாகம் அரங்கேறியிருக்கலாம் என்றும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த மனுதாரர்கள் தங்கியிருக்கும் லொட்ஜ்ஜிலிருந்தே இந்தக்குண்டுகள் மீட்கப்பட்டன என்று கூறப்படுகின்றது.இவ்வாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள் தங்கியிருந்த மேற்படி விடுதிக்கு வந்தவர் எனக் கூறப்படும் ஒரு சந்தேக நபர் குறித்து விடுதி உரிமையாளரே பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றார். அந்தத் தகவலின் பேரிலேயே தாங்கள் குண்டுகளை மீட்டனர் எனப் பொலிஸார் கூறுகின்றனர்.குறிப்பிட்ட சந்தேக நபர் அங்கு விட்டுச் சென்ற பொதியிலேயே குண்டுகள் இருந்தனவாம். ஆனால், அநதச் சந்தேக நபர் கைது செய்யப்படவேயில்லை.எனினும், இதன் பின்னர் இந்த விவகாரங்களுடன் தொடர்பு இல்லாத சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு கைது செய்யபடப்பவர்களில் இருவர்

மேற்படி விடுதியில் தங்கியிருந்த சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல செய்த மனுதாரர்கள் ஆவர்.

இந்த இருவரிடமும் விசாரைணையின் போது மேற்படி அரசுக்கும் படைத்தரப்புக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெறும்படி அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரியவருகின்றது,மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவைத்த தாக்கல் செய்த ஏழு பேரும் தங்களின்

வதிவிட விலாசமாக இந்த விடுதியையே வழக்கின் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்தப் பின்னணிகளை உற்று நோக்கி அவதானிக்கும் பொது மேற்படி பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான அடிப்டை உரிமை மீறல் வழக்குகளை வாபஸ் பெறச் செய்யும் ஒரு தந்திரோபாயமாக - அழுத்தமாக - இந்தக் குண்டு மீட்பு நாடகம் அமைந்துன்ளதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. என்றார் மனோ கணேசன்.

நன்றி : சுடர் ஒளி

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட விடுதிகளில் அதுவும் ஒன்று. எனவே, அதை நியாயப்படுத்த இந்த நாடகத்தை மகிந்த செய்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை லொட்ஜில் கிளேமோர்குண்டுகள் மீட்கப்பட்டதன் பின்னணியில் சதி

வீரகேசரி நாளேடு

மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ எம்.பி. குற்றச்சாட்டு கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றில் நேற்று முன்தினம் கிளேமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இருப்பதாக நான் உணர்கின்றேன் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: கொழும்பு வெள்ளவத்தை சின்சபா வீதியில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றில் இருந்து நேற்று முன்தினம் பொலிஸார் கிளேமோர் குண்டுகள் உட்பட கைக்குண்டுகள் கைப்பற்றினர். அத்துடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்தின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருப்பதாக நான் சந்தேகப்படுகின்றேன்.

காரணம் அண்மையில் கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதனை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்த மனுதாரர்கள் ஏழு பேரும் குறிப்பிட்ட லொட்ஜிலேயே தங்கியுள்ளனர். இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த லொட்ஜில் குண்டுகள் கைப்பற்றப்பட்டமை வழக்கை வாபஸ் பெறக் கோரியதன் உச்சக் கட்ட நிர்ப்பந்தம் என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. நேற்று முன்தினம் காலை வவுனியாவிலிருந்து வந்த இளைஞர் ஒருவர் கொண்டுவந்த பையிலேயே இந்த குண்டுகள் இருந்துள்ளன. அத்துடன் வவுனியாவில் இருந்து வந்த மர்ம நபர் பிற்பகல் 2. மணியளவில் காணாமல்போயுள்ளார். இது குறித்து லொட்ஜ் உரிமையாளர் நாணயமான முறையில் பொலிஸில் தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையிலேயே குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாறாக பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதல் மூலம் குண்டுகள் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இருப்பதாக திடமாக சந்தேகிக்கின்றேன். எனவே இவ்விடயம் குறித்து நீதிமன்றத்துக்கு நான் தகவல் வழங்கவுள்ளேன். இது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள மாற்று கொள்கைகளுக்கான நிலையத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அறிவிப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Wellawatta claymore story under suspicion

(Lanka-e-News, 2007 August 16, 5.45 PM) The recovery of a travelling bag that contained two claymores, three hand grenades, two detonators, and a cyanide capsule from a car parked in the premises of a lodge in Wellawaththa is suspected to be an attempt to trouble the owner of the lodge.

The lodge is the dwelling place of the seven petitioners who filed applications over fundamental rights violations in Supreme Court, against evacuating 376 ethnic Tamils from Colombo lodges after a discussion between the Secretary of the Defense Ministry and the senior police officials.

Lanka-e-News learns that the bag of bombs suddenly appeared from a room of the lodge following the lodge owner's non-response to threats to remove the seven petitioners from the lodge.

An individual who came to the lodge around 7.45 AM yesterday had left his travelling bag there, after the workers turned down a request from him for a room since they do not rent single rooms. The suspected man told that he came to obtain a passport.

As soon as the lodge workers lodged a complaint at the Wellawaththa police station, the officials rushed into the lodge and recovered the bombs. The lodge workers have divulged the physical characteristics of the suspect.

Police said that several occupants of the room which the suspect expected to stay were arrested for interrogating and still a clue to identify the person have not been revealed.

Lanka-e-News learns that the police rushed into the lodge as soon as the suspect kept the bag there and left.

கிளேமோர் சம்பவம் - மீண்டும் இலங்கையை தலைகுனிய வைக்கும் செயல் என்கிறார் கிரியெல்ல.

Aug 18, 2007 at 09:35 AM

வெள்ளவத்தை பகுதியில் கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் அரசாங்கம் நடந்துகொண்ட முறையானது சிறி லங்காவை மீண்டும் ஒருமுறை சர்வதேசம் முன்பாக தலைகுனிய வைத்துள்ளது.

சர்வதேசம் முன்பாக நாம் தொடர்ந்து அபகீர்த்திக்கு உள்ளாகி வருகின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நீதிமன்ற துறையில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால் நாட்டின் சட்ட அமுலாக்கல் விடயத்தில் நம்பிக்கை இல்லாமல் உள்ளது. மனித உரிமை மீறல் விடயங்களால் நாடு தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் தோல்வியடைந்த நாடாகவே இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு அவர் மேலும் கூறியதாவது :

கடந்த புதன்கிழமை வெள்ளவத்தையில் உள்ள ஒரு லொட்ஜில் பொலிஸார் கிளேமோர் குண்டுகளை கண்டுபிடித்தனர். அத்துடன் அங்கிருந்த இளைஞர்கள் சிலரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அண்மையில் கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமையும் பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் திரும்பிய ஏழுபேர் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கிளேமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட லொட்ஜில் மேற்படி வழக்கு தாக்கல் செய்த ஏழு பேரும் தங்கியிருக்கின்றனர். குண்டுகள் கைப்பற்றப்பட்ட விடயத்தில் இந்த ஏழு பேரில் நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

-நன்றி சங்கதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை லொட்ஜ்ஜில் பொலிஸாரே குண்டுகளைவைத்துவிட்டு மீட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை

வீரகேசரி நாளேடு

வெள்ளவத்தையில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான லொட்ஜ் ஒன்றில் பொலிஸாரே குண்டுகளை வைத்துவிட்டு, அவர்களே அதனை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்குடனேயே இவ்வாறு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகவல் உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார்.

கிளேமோர் மீட்கப்பட்ட லொட்ஜ் உரிமையாளருக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விடுதலைப்புலிகள், கிளேமோர் குண்டுகளை காட்டிக்கொடுத்ததனால், தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடுசெய்ய 10 இலட்சம் ரூபா வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். தவறும் பட்சத்தில் மேற்படி உரிமையாளரின் தந்தையை கடத்துவதாகவும் புலிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் லொட்ஜ் உரிமையாளர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார். கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகளவான இளைஞர்களும் யுவதிகளும் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள விண்ணப்பித்துள்ளனர். 320 விண்ணப்பங்கள் தற்போது கிடைத்துள்ளன. நான்கு சிங்களவர்களும் 223 தமிழர்களும் 93 முஸ்லிம்களும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தெரிவுசெய்யப்படுபவர்களுக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.