Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்கலைக்கழக மாணவவர்களின்,  போராட்டத்தினை கலைப்பதற்காக... பொலிஸார், கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE: போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவவர்களின்,  போராட்டத்தினை கலைப்பதற்காக... பொலிஸார், கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்.

அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உரிமைக்காக கொழும்புற்கு செல்வோம் எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறையை நிறுத்துவதுடன், கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்,

இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது,

3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திற, என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

299947014_475311244091171_71036336404578272_n-300x225-2.jpg

299424187_593114612286233_7087914796216746852_n-300x225-2.jpg

299406118_1073926309897042_9029235122976041784_n-300x225-2.jpg

299297927_1120930438504369_9175394752631797229_n-300x138-2.jpg

299449438_459223532744817_5750757944073697013_n-300x225-3.jpg

https://athavannews.com/2022/1295260

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பல்கலைக்கழக மாணவவர்களின்,  போராட்டத்தினை கலைப்பதற்காக... பொலிஸார், கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்.

என்னப்பா இன்றைய போராட்டமும் தோல்வியா?

திகதி சரியில்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

பல்கலைக்கழக மாணவவர்களின்,  போராட்டத்தினை கலைப்பதற்காக... பொலிஸார், கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம்.

கண்ணீர்புகை,நீர்தரை பிரயோகத்தை ஏன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் போது பிரயோகிக்கவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா இன்றைய போராட்டமும் தோல்வியா?

திகதி சரியில்லையோ?

 

53 minutes ago, குமாரசாமி said:

கண்ணீர்புகை,நீர்தரை பிரயோகத்தை ஏன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் போது பிரயோகிக்கவில்லை?

கோத்தாவை அகற்றும்… போராட்டத்திற்காக,
அமெரிக்கா இளைஞர் பக்கம் நின்று காய் நகர்த்தியது.
இப்போ… அது நிறைவேறி விட்ட படியால்,
ரணிலுக்கும், இராணுவத்துக்கும்… துணை நின்று, போராட்டங்களை நசுக்குகிறார்கள்.
கெட்ட உலகம் இது. தங்களது தேவை முடிந்தவுடன்… கை விட்டு விடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின், ஏற்பாட்டாளர்... வசந்த முதலிகே கைது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது, கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரிமைக்காக கொழும்புற்கு செல்வோம் எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அடக்குமுறையை நிறுத்துவதுடன், கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்,

இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது,

3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திற, என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் யூனியன் பிளேஸ் ஊடாக போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை பகுதிக்குள் நுழைய முயற்சித்தனர்.

இதன்போது போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1295298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.