Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ் சி சந்திரஹாசன்

As of now, let me walk Along and Support the Political Process from  Outside' – S.C. Chandrahasan – dbsjeyaraj.com

2012 இல் நாமினி விஜேடாச எனும் சிங்களப் பத்திரிக்கையாளருக்கு இவன் வழங்கிய செவ்வியில் இப்படிக் கூறுகிறான், "புலிப்பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களாலேயே எமக்குப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. புலிகளின் காலத்தை மக்கள் முற்றாக மறந்து கைகழுவிவிடவேண்டும். இந்தப் புலி யுகத்தினை நினைவுகூர்வதை நாம் முற்றாக அழித்து விடவேண்டும்" என்று அவன் கூறுகிறான்.

சந்திரஹாசன் மகிந்தவை ஒரு நிகழ்வில் சந்தித்தான், "நீங்கள் மிகவும் ஒரு நல்ல விடயத்தைச் செய்திருக்கிறீர்கள். புலிகளை அழித்ததற்காக நீங்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். சரித்திரத்தில் இடம்பெற்ற இந்த முக்கிய நிகழ்வில் உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று அவன் மகிந்தவிடம் கூறினான். அவனது புகழ் மழையில் இருந்து வெளியே வர மகிந்தவுக்கு சில நிமிடங்களாவது எடுத்திருக்கும் என்பது திண்ணம். 

தமிழர் சரித்திரத்தில் ஒப்பற்ற ஜனநாயக அரசியல்வாதியாகத் திகழ்ந்த தந்தை செல்வாவுக்கு மகனாகப் பிறந்த இவன், எவ்வளவு தூரத்திற்கு தமிழரின் எதிரிகளோடு சேர்ந்து துரோகமிழைத்தான் என்பதற்கு இது சாட்சி.

https://www.colombotelegraph.com/index.php/the-ltte-era-must-be-forgotten-chandrahasan-sjv-chelvanayakams-son/

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பேராசிரியன் ரட்ணஜீவன் ஹூல்

World Vision sends letter of demand to Ratnajeevan Hoole - News Features |  Daily Mirror

கல்வித்துறையில் இவனது பங்களிப்பு மற்றும் அனுபவத்தினை நான் மெச்சினாலும், இவனது மத வெறிக்காகவும், ராஜபக்ஷேக்கள் மீது இவன் வைத்திருக்கும் பாசத்திற்காகவும் இவனை வெறுக்கிறேன்.

இவன் பற்றிய எனது இரு பதிவுகளை உங்களுக்காக முன்வைக்கிறேன்.

https://sangam.org/2011/08/Vice_Chancellor.php?uid=4433

https://sangam.org/2010/12/Hoole_Kipling.php?uid=4173

 

Prof. Hoole 2006 interview to Uthayan p.1

  • கருத்துக்கள உறவுகள்+

 

நல்ல திரி... தொடர்ந்து எழுதுங்கள்.

  

On 19/8/2022 at 07:38, ரஞ்சித் said:

இனக்கொலையாளி மகிந்தவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தினை வெளிப்படையாக கூறுவதற்கு ராம் போன்றவர்கள் எபோதுமே பின்னின்றதில்லை. ராமுக்கும் மகிந்தவுக்கும் இடையிலான நெருக்கம், ராம் வருடம் தோறும் இலங்கைக்கு வருவதிலிருந்து மகிந்தவை இந்து பத்திரிகைக் குழுமம் சார்பாக இந்தியாவுக்கு அழைப்பித்து சிறப்பிப்பதுவரை வளர்ந்திருக்கிறது.

அந்தவகையில் 2006 இல் கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த ராம், மகிந்தவின் இனக்கொலையினை வெள்ளையடிக்க முயன்ற சந்தர்ப்பம் ஒன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.

 

இது 2009 என்று நினைக்கிறேன்.

 

 

11 minutes ago, ரஞ்சித் said:

 

பேராசிரியன் ரட்ணஜீவன் ஹூல்

World Vision sends letter of demand to Ratnajeevan Hoole - News Features |  Daily Mirror

கல்வித்துறையில் இவனது பங்களிப்பு மற்றும் அனுபவத்தினை நான் மெச்சினாலும், இவனது மத வெறிக்காகவும், ராஜபக்ஷேக்கள் மீது இவன் வைத்திருக்கும் பாசத்திற்காகவும் இவனை வெறுக்கிறேன்.

இவன் பற்றிய எனது இரு பதிவுகளை உங்களுக்காக முன்வைக்கிறேன்.

https://sangam.org/2011/08/Vice_Chancellor.php?uid=4433

https://sangam.org/2010/12/Hoole_Kipling.php?uid=4173

 

அவை சச்சி சிறி காந்தா எழுதியவை. அப்ப நீங்கள்தான் சச்சி சிறி காந்தாவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோயல் நடேசன்

Let My People Go In Peace – Noelnadesan's Blog

மிருக வைத்தியனாக அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவரும் இவன் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவும், சிங்கள இனவாதிகளான ராஜபக்ஷேக்களுக்கு ஆதரவாகவும் எழுதி வருகிறான். அவனது எழுத்துக்களில் ஒரு சில கீழே,

பேச்சுவார்த்தை, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான தமிழர் புணர்வாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மிருகவைத்தியர் நடேசன் வழங்கிய அறிக்கையில் "அதி மதிப்பிற்குரிய மகிந்த ராஜபக்ஷவின் புலிகள் மீதான பெருவெற்றியைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே முன்னெடுத்துவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகத் தமிழ்மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துவருகின்றனர். ஆனால், அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ தமிழ் மக்களை ஏமாற்றி தமது போலித் தேசிய மாயைக்குள் கட்டிவைக்க எத்தனித்து வருகின்றனர்"

http://archives.sundayobserver.lk/2010/01/31/new20.asp

"பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த 5 வருடங்களில் மட்டும் நிலைநாட்டிய ஸ்த்திரத்தன்மையும், சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் சரித்திரத்தில் வேறெந்த ஜனாதிபதியும் அடைந்திராதது என்றால் மிகையில்ல. அதனாலேயே மகிந்த ராஜபக்ஷே அவர்களை மக்கள் 2006 இலிருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதியாக்கி கெளரவித்து வருகின்றனர். தற்போது, மூன்று சகாப்த்த காலத்திற்குப் பின்னர் முஸ்லீம்கள், தமிழர்கள் சிங்களவர்கள் என்று அனைத்து இலங்கையர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் தமது குடும்பங்களுடனும் பிள்ளைகளுடனும் தமது வீடுகளில் உறங்க முடிகிறது. தமது எதிர்காலம்குறித்து அவர்களால் இனிமையான கனவுகளைக் காண முடிகிறது. ஆனால் நாட்டிற்கு வெளியே உள்ள சிலரால் இதனைச் சகித்துக்கொள்ள முடியவில்லை" என்று எழுதுகிறான்.

https://www.colombotelegraph.com/index.php/let-them-dream-peacefully/

ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், அவனது கனவுகூட மகிந்தவின் குப்பை ஆட்சியுடன் இன்று கலைந்துபோனதுதான்.

7 minutes ago, நன்னிச் சோழன் said:

 

நல்ல திரி... தொடர்ந்து எழுதுங்கள்.

  

இது 2009 என்று நினைக்கிறேன்.

 

 

அவை சச்சி சிறி காந்தா எழுதியவை. அப்ப நீங்கள்தான் சச்சி சிறி காந்தாவா?

நான் சச்சி சிறிகாந்தா இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, ரஞ்சித் said:

நான் சச்சி சிறிகாந்தா இல்லை.

மேலை, "எனது இரு பதிவுகள்" என்று கூறி சச்சி சிறி காந்தா அவர்களின் பதிவுகளிற்கான இரு கொழுவிகளைக் கொடுத்திருந்தீர்கள். அதான் கேட்டனான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

மேலை, "எனது இரு பதிவுகள்" என்று கூறி சச்சி சிறி காந்தா அவர்களின் பதிவுகளிற்கான இரு கொழுவிகளைக் கொடுத்திருந்தீர்கள். அதான் கேட்டனான்.

அவர் எழுதியதை அப்படியே எழுதியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, ரஞ்சித் said:

அவர் எழுதியதை அப்படியே எழுதியிருக்கிறேன்.

ஓ, சரி சரி. 

தொடர்ந்து எழுதுங்கோ... 
 

(ஆண்டுகளை சரிபார்த்துக்கொள்ளவும். )

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தமிழர் சரித்திரத்தில் ஒப்பற்ற ஜனநாயக அரசியல்வாதியாகத் திகழ்ந்த தந்தை செல்வாவுக்கு மகனாகப் பிறந்த இவன், எவ்வளவு தூரத்திற்கு தமிழரின் எதிரிகளோடு சேர்ந்து துரோகமிழைத்தான் என்பதற்கு இது சாட்சி.

இவன் ஏன் இன்னமும் இந்தியாவில் இருக்கிறான்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இவன் ஏன் இன்னமும் இந்தியாவில் இருக்கிறான்?

இன்னொரு இந்தியக் கைக்கூலி என்று நினைக்கிறேன். பரந்தன் ராஜன் குழுவோடு தொடர்பிருந்ததாக எங்கோ படித்த ஞாபகம். 
 

6 minutes ago, ஈழப்பிரியன் said:

இவன் ஏன் இன்னமும் இந்தியாவில் இருக்கிறான்?

Satyendra and Chandrahasan of TELO were also deported.  Satyendra, who held a British passport, did not resist and was sent in a separate Air India flight to London.

See the source image

S.C. Chandrahasan 2012

Chandrahasan held a Sri Lankan passport, but had multi-entry visa to the United States.  He was forced onto an Air Indian Airlines flight to Bombay.  He performed a satyagraha during the flight, but was forcibly taken and put into an Air India flight bound for New York.  He refused to alight at Boston to where the plane carrying him was diverted because of bad weather at New York.  He demanded that he be taken back to Chennai.  “I have done no wrong to India,” he protested.  Indian High Commission officials who met him at Boston requested him to wait in the United States for two or three weeks with the promise to send him back.  He declined.  He was ultimately brought back to Bombay on 26 August.  He refused to leave the airport demanding that he be taken to Chennai.  He was allowed to return to Chennai after three days of high drama.

ஆரம்பத்தில் டெலோ உறுப்பினராக இருந்திருக்கிறான். ஆனால் தற்போது தமிழ்த்தேசிய விரோதியாக மாறியிருக்கிறான். இந்தியாவுடனான நெருக்கமும் துணை ராணுவக் குழுக்களின் சகவாசமும் இவனை இந்தியாவில் இன்னும் வைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.