Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
(16.6/20 ov) 140/4
SL FlagSL

Sri Lanka chose to field.

  • Replies 65
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 ov) 173/8
SL FlagSL

Sri Lanka chose to field.

  • கருத்துக்கள உறவுகள்
EVENTS
RESULT
9th Match, Super Four (N), Men's T20 Asia Cup at Dubai, Sep 6 2022

கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றது சந்தோசமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:
EVENTS
RESULT
9th Match, Super Four (N), Men's T20 Asia Cup at Dubai, Sep 6 2022

கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றது சந்தோசமாக உள்ளது.

அணியில் 6 வதாக விளையாடும் தினேஸ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பதற்கு அடிக்கடி முட்டுக்கட்டைபோடும் கெளதம் கம்பீர் போன்றவர்களால்தான் இந்தியாவிற்கு இந்த தோல்விகள் ஏற்படுகின்றன, அத்துடன் பும்ரா ஏன் விளையாடவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vasee said:

அணியில் 6 வதாக விளையாடும் தினேஸ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பதற்கு அடிக்கடி முட்டுக்கட்டைபோடும் கெளதம் கம்பீர் போன்றவர்களால்தான் இந்தியாவிற்கு இந்த தோல்விகள் ஏற்படுகின்றன, அத்துடன் பும்ரா ஏன் விளையாடவில்லை?

இந்தியா தோற்பது சந்தோசமே.

அப்புறம் அவர் இவர் விளையாடவில்லை என்று ஏன் கவலைப்படுவான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா தோற்பது சந்தோசமே.

அப்புறம் அவர் இவர் விளையாடவில்லை என்று ஏன் கவலைப்படுவான்.

உங்கள் சந்தோசத்திற்காக

மொழி புரியத்தேவையில்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வும் ரோசமும் அற்ற இந்திய வீரர்கள்...மற்ற அணி வீரர்களின் ஓர்மம் இவர்களிடம் இல்லை...ஏனெனில் இவைக்கு ஐ பி எல்...விளம்பரம் போன்றவைகளால்  கொட்டும் வருமானம் ...இந்திய அணியில் இருந்தால் போதும்..காசு பணம் கொட்டும்....அதைவிட தகுதியான வீரருக்கு இடம் கொடுப்பதில்லை...இந்திய ரசிகர்களுக்கு உள்ள கவலை ..அவர்களுக்கு இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா go home.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை: இந்தியாவின் கனவுக்கு கட்டையை போட்ட இலங்கை!

christopherSep 07, 2022 08:55AM
srilanka1.jpg

நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இலங்கையுடன் சந்தித்த தோல்வியை தொடர்ந்து இந்தியாவின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து அடுத்து வரும் 2 போட்டிகளிலும் மிகபெரிய அளவில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டி என்பதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டத்தில் இலங்கையை நேற்று எதிர்கொண்டது இந்திய அணி.

மேலும் ஆசிய கோப்பை தொடரில் இதுவரை இலங்கை அணியுடன் மோதிய 7 முறையும் இந்திய அணி தோற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பமே அதிர்ச்சி!

போட்டி நடந்த துபாய் சர்வதேச மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக இந்திய அணி டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

கோலி டக் அவுட்!

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் 2-வது ஓவரில் ராகுல் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். நல்ல பார்மில் இருக்கும் கோலி இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்-அவுட் ஆகி ஏமாற்றினார்.

srilanka3.jpg

ரோகித் – சூர்ய குமார் யாதவ் ஜோடி அபாரம்!

இதையடுத்து ரோகித்துடன் சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் சிறப்பாக ஆடியதால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

அபாரமாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ரோகித் – சூர்ய குமார் யாதவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சொதப்பிய மிடில் ஆர்டர்!

ஆனால் சீரான இடைவெளியில் இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டுகளை இழந்ததால் ரன்வேகம் வெகுவாக சரிந்தது. சூர்ய குமார் யாதவ் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா மற்றும் பண்ட் ஆகியோர் 17 ரன்கள், தீபக் ஹூடா 3 ரன்கள் என புவனேஷ்வர் டக் அவுட் என ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. 190 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே எதிரணிக்கு சவால் அளிக்க கூடிய ஆடுகளத்தில் வீரர்கள் சொதப்பியதால் சுமார் 20 ரன்கள் குறைவாக எடுத்தது இந்திய அணி.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் அளித்து அதிரடி காட்டிய இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர்.

நிசங்கா 52 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த அசலங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய குனதிலகா 1 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய மெண்டிஸ் 57 ரன்கள் குவித்தார்.

srilanka stopped indias asia cup

பரபரப்பில் பன்னீர் ஊற்றிய புவனேஷ்வர்!

ஆட்டம் முழுவதும் இலங்கை பக்கம் மட்டுமே வெற்றி காற்று வீசியது. எனினும் கடைசி இரு ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் போட்டியில் பரபரப்பு தொற்றியது.

ஆனால் 19 வது ஓவரை வீசிய அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் 14 ரன்கள் கொடுத்து இலங்கையின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கினார்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசியும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓவர் த்ரோ இலங்கையின் வெற்றியை உறுதி செய்தது.

இதனால் 1 பந்தை மீதம் வைத்து இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜபக்சா 25 ரன்களும், கேப்டன் சனகா 33 ரன்களும் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

வரலாற்றை தக்கவைத்த இலங்கை!

இலங்கையின் வெற்றியை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் ஆசியக்கோப்பையில் இலங்கை அணியிடம் தொடர்ந்து 8 வது முறையாக இந்தியா தோற்றுள்ளது.

அதேவேளையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ள இலங்கை அணி இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது.

 

https://minnambalam.com/srilanka-stopped-indias-asia-cup-dream-in-super-4/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பந்தாடிய இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி

06 SEP, 2022 | 11:58 PM
image

 

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன்  இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற மிகவும் தீர்மானமிக்க ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

சுப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றுள்ள போதிலும் அதன் இறுதிப் போட்டி வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வெற்றிகொண்டால் இலங்கையும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் மற்றைய 2 போட்டிகளின் முடிவுகளை வைத்தே இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவாகும்.

Dasun-Shanaka-and-Bhanuka-Rajapaksha-put

இப் போட்டியில் கட்டாய வெற்றியை இலக்கு வைத்து இந்திய துடுப்பாட்ட வீரர்கள் செயற்பட்ட போதிலும் பந்துவீச்சாளர்கள் இறுதியில் கோட்டை விட்டனர்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

டில்ஷான் மதுஷன்க, சாமிக்க கருணாரட்ன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் சகலதுறை ஆட்டம், பெத்தும் நிஸ்ஸன்க, குசல மெண்டிஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், பானுக்க ராஜபக்ஷவின் சிறந்த துடுப்பாட்டம் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

Dasun-Shanaka-plays-the-ball-fine-on-the

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 97 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.

இந்த இணைப்பாட்டம் இவ்வருட ஆசிய கிண்ணத்தில் அதிசிறந்த ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக பதிவானது.

பெத்தும் நிஸ்ஸன்க 37 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டமிழந்தார்.

Rohit-Sharma-has-a-moment-of-mellow-frus

பெத்தும் உட்பட 4 விக்கெட்கள் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தமை இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது,

சரித் அசலன்க (0), தனுஷ்க குணதிலக்க (1) ஆகிய இருவரும் வந்த வேகத்திலேயே களம் விட்டகன்றனர். (110 - 3 விக்,)

இதே மொத்த எண்ணிக்கையில் குசல் மெண்டிஸும் ஆட்டமிழந்தார்.

அவர் 37 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 5 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த பானுக்க ராஜபக்ஷ, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Pathum-Nissanka-and-Kusal-Mendis-set-a-s

இந்திய பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

ரோஹித் ஷர்மா குவித்த அபார அரைச் சதமும் சூரியகுமார் யாதவ்வின் ஓரளவு திறமையான துடுப்பாட்டமும் இந்தியாவின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தன.

Dilshan-Madushanka-celebrates-after-gett

முதல் 3 ஓவர்களுக்குள் கே.எல். ராகுல் (6), விராத் கோஹ்லி (0) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 3ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். (110 - 3 விக்.)

ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 10 ஓட்டங்கள் சேர்ந்தபோது சூரியகுமார யாதவ் 34 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

Chamika-Karunaratne-is-congratulated-by-

ஹார்திக் பாண்டியா (17), ரிஷப் பன்ட் (17), ரவிச்சந்திரன் அஷ்வின் (15 ஆ.இ.) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

இலங்கை பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 4 ஒவர்களில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்து வீச்சுப் பெறுதியை சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் பதிவுசெய்தார்.

அவரைவிட சாமிக்க கருணாரட்னவும் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: தசுன் ஷானக்க.

https://www.virakesari.lk/article/135183

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல இனி என்ன வாய்ப்பு?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?

 

பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

தீபக் ஹூடா ஒரு ஃபினிசர் இல்லை. ஆனால் இந்தியா அவரை தாமதமாக களமிறக்கி அவருக்கு மேலும் நெருக்கடி அளிப்பதாக ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். அதேபோன்று டெத் ஓவர்களில் சிறப்பாக பேட் செய்ய இந்தியாவுக்கு சரியான வீரர் இல்லை எனவும் மிடில் ஓவர்களில் இந்தியா பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

 

Presentational grey line

 

Presentational grey line

இதனிடையே 174 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் ரிஷன்கா, குசல் மெண்டிஸ் இருவரும் அரைசதம் விளாசினர். 11 ஓவர்கள் வரை இலங்கையின் கை ஓங்கி இருந்தாலும், சஹலின் சுழற்பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்த விக்கெட்களை கைப்பற்றியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி கட்டம் வரை நகர்ந்தது.

டெத் ஓவர்களில் தடுமாறும் புவனேஸ்வர்

2 ஓவர்களில் இலங்கை வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் 19வது ஓவரை வீசினார்.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

முதல் 2 பந்துகளும் சிறப்பாக வீசப்பட்ட நிலையில் அடுத்த 2 பந்துகள் வைடாக மாறியதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடுத்தடுத்து 2 பவுன்டரிகளை விளாசி புனவேஸ்வரின் டெத் ஓவரில் 14 ரன்களை சேர்த்தது இலங்கை. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 பந்தை மீதம் வைத்து, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இலங்கை அணி.

புவனேஸ்வர் குமாரின் டெத் ஓவர்கள் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் வீசிய 19வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

புவனேஸ்வருக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை 19வது ஓவரை வீச ரோஹித் சர்மா முன் வந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்

எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் அவர்கள் சில நேரங்களில் ரன்களை அவர் விட்டுக்கொடுப்பார்கள். புவி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு பல சமயங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக ரோஹித் சர்மா குறிப்பிட்டார்.

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

'தவறுகளில் இருந்து பாடம் பெறுவோம்'

நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

 

Presentational grey line

 

Presentational grey line

இந்தியாவுக்கு முதலில் பேட் செய்வது தற்போது சவாலாக மாறியுள்ளது. தீபக் ஹூடாவுக்கு இந்த முறையும் பந்துவீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேசமயம், ஃபினிசர் ரோலில் அவரை களமிறக்கி சோதனை முயற்சியில் இறங்கியது இந்திய அணி. அதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியிருந்தாலும் டெத் ஓவர்களில் இந்தியாவுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?

சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால் இனி இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். அந்த வகையில் அடுத்த நடைபெறக் கூடிய மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அந்த சொற்பமான வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

புதன்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை பாகிஸ்தான் அணி தோற்றாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது.

கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால்தான் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஒருவேளை அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும்.

அதாவது அடுத்து வரக்கூடிய ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும். இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. https://www.bbc.com/tamil/sport-62816694

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானை வென்ற பாகிஸ்தான் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது !

08 SEP, 2022 | 05:40 AM
image

 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட்  இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தானும் இலங்கையும் தகுதி பெற்றன.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் 7 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. 

இந்தப் போட்டி முடிவை அடுத்து இலங்கையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மூவகை சர்வதேச கிரிக்கெட்டிலும்  பாகிஸ்தானை  முதல் தடவையாக   ஆப்கானிஸ்தான் வெற்றி கொள்ளக்கூடும் என்ற ஒரு நிலை போட்டியின் ஒரு கட்டத்தில் ஏற்பட்டபோதிலும் 19 வயதான நசீம் ஷா கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ஆப்கானிஸ்தானின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கினார்.

ஆப்கானிஸ்தானுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதை அடுத்து அவ்வணி வீரர்கள் சோகம் தாங்காதவர்களாக கண்ணீர் சிந்தியாவாறு அரங்கை விட்டு வெளியேறினர்.  

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அணித் தலைவர் பாபர் அஸாம் (0), பக்கார் ஸமான் (5) ஆகிய இருவரும் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்நோக்கியது. (18 -- 2 விக்.)

எவ்வாறாயினும் மொஹம்மத் ரிஸ்வான் 20 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் 30 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானுக்கு சற்று தெம்பூட்டினர். (87 - 4 விக்)

ஆனால், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானின் 5 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். (118 - 9 விக்.)

ஷதாப் கான் (36), மொஹமத் நவாஸ் (4), குஷ்தில் ஷா (1), ஹரிஸ் ரவூப் (0), அசிப் அலி (16) ஆகியோரே 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தவர்களாவர்.

எனினும் 10ஆம் இலக்க வீரர் நசீம் ஷா கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்சர்களை விளாசி பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். அவர் 4 பந்துகளில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பரீத் அஹ்மத் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில்  6 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தபோதிலும் பின்னர் ஓட்டங்கள் வேகமாக வரவில்லை.

பவர் ப்ளேயில் 2 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் எஞ்சிய 14 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் 23 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 17 ஓட்டங்களுடனும் ஹஸரத்துல்லா ஸஸாய் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மொத்த எண்ணிக்கை 78 ஓட்டங்களாக இருந்தபோது கரிம் ஜனத் (15) ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 13 ஓட்டங்கள் சேர்ந்தபோது நஜிபுல்லா ஸத்ரான் (10), அணித் தலைவர் மொஹமத் நபி (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்த   பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இப்ராஹிம் ஸத்ரான் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 10 ஓட்டங்களுடனும் ராஷித் கான் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/135264

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பையில் இந்திய அணி மோசமாக விளையாடியது ஏன்? ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் நடந்த தவறுகள் என்ன?

  • விதான்ஷு குமார்
  • விளையாட்டு செய்தியாளர்
8 செப்டெம்பர் 2022, 02:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியின்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முகபாவனைகள் பார்க்கத் தரமானவையாக இருந்தன.

சுமார் ஐந்து நிமிடங்கள் காட்சிகளை ஆய்வு செய்த பிறகு மூன்றாவது நடுவர் கேஎல் ராகுலுக்கு எல்பிடபிள்யூ கொடுத்தபோது, ரோஹித் ஷர்மாவின் முகம் இருண்டது.

அதேபோல், மறுமுனையில் விராட் கோலி பூஜ்ஜியத்தில் போல்ட் ஆனபோது, ரோஹித் ஷர்மா அணிக்காக எவ்வளவு கவலைப்பட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை அவருடைய முகம் காட்டிக் கொடுத்தது.

ஆனால் ரோஹித் ஷர்மாவின் இத்தகைய ஏமாற்றமான வெளிப்பாடுகள், கவலைகள் இந்த போட்டியில் மட்டுமல்ல, ஹாங்காங்கிற்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் காணப்பட்டன.

 

இலங்கையிடம் அடைந்த தோல்வி, ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் இருந்து இந்திய அணியை கிட்டத்தட்ட வெளியேற்றி விட்டது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டதால் இனி இந்திய அணிக்கு வாய்ப்பு இல்லை. அபாரமான நட்சத்திர வீரர்கள் நிறைந்த இந்திய அணி, ஆசிய கோப்பையில் சரியாக விளையாடாமல் போனதற்கு என்ன காரணம்?

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பலவீனமான பந்துவீச்சு

ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஹர்ஷல் படேல் காயம் காரணமாக அணியில் இல்லை. அப்படி இருந்தாலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசமாகவே இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, போட்டி முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய பந்து வீச்சாளர்களின் செயல்பாடு சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. அந்தப் போட்டியில், ஹாங்காங் அணியின் பேட்ஸ்மேன்கள், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் 8 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்தனர்.

ஆவேஷ் 4 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்த நிலையில், அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 44 ரன்கள் அளித்தார். அந்தப் போட்டியை இந்தியா வென்றது. இருப்பினும் கேப்டன் ரோஹித் எவ்வளவு கவலைப்பட்டார் என்பதை அவரது முகம் தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டிகளில், இந்திய பேட்ஸ்மேன்கள் சுமார் 180 ரன்கள் எடுத்தனர். ஆனால் இந்த ஸ்கோரை பந்து வீச்சாளர்களால் பாதுகாக்க முடியாமல் போனது. இந்திய அணி கடைசி ஓவரில் இரண்டு போட்டிகளையும் இழந்தது.

 

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் முதல் ஸ்பெல்லை சரியாக வீசினார். ஆயினும் கடைசி ஓவர்களில் வேகம் குறைந்ததால் அடி வாங்கினார். மறுபுறம், அர்ஷ்தீப் சிங் சில ஓவர்கள் நன்றாக வீசினார். ஆனால் அவரது பந்துவீச்சும் அனுபவமின்மையைக் காட்டியது. பேட்ஸ்மேன்கள் அர்ஷ்தீப்பின் பந்துகளில் விலாச முயன்ற போதெல்லாம், அவர்கள் வெற்றி அடைந்தனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் அவ்வப்போது மட்டுமே நன்றாக பந்து வீசினர். குல்தீப் யாதவை இந்தியா மறந்துவிடக் கூடாது என்றும் அவருக்கும் மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் போட்டியின் போது வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு குறித்த கேள்விகள்

ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சு குறித்து பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அணியில் பாண்டியா மூன்றாவது சீமரா அல்லது நான்காவது சீமரா என்று பல முன்னாள் வீரர்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆசிய கோப்பையில், நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பாண்டியா விளையாடிய பந்தயத்தில் (பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி போல) சிறப்பாகச் செயல்பட்டார்.

அதே நேரத்தில் மீதமுள்ள போட்டிகளில் அவர் மூன்றாவது சீமராக எடுக்கப்பட்டார். மேலும் அவருடைய பந்துவீச்சில் வேகமாக ரன் அடிக்க எதிரணி முடிவு செய்ததால் அவருக்கு அழுத்தம் இருந்ததைப் போல் காணப்பட்டார்.

முகமது ஷமி போன்ற அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லாததை தன்னால் நம்ப முடியவில்லை என்று வர்ணனையின் போது வாசிம் அக்ரம் கூறினார்.

மூன்று சீமர்களுடன் விளையாடிய இந்திய அணி, நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை உணர்ந்தது. அணியின் பந்து வீச்சாளர்களால் நல்ல ஸ்கோரை கூட காப்பாற்ற முடியவில்லை.

 

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கும் முதல் மூன்று பேரை சார்ந்துள்ளது

டி20யில் நல்ல துவக்கம் கிடைத்தால், பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் கேமியோ ஆட்டம் ஆடினால்கூட அணியால் வெல்ல முடியும் என்று கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கேமியோ என்பது குறைவான பந்துகளில் அதிக ஸ்கோர் எடுப்பது. எடுத்துக்காட்டாக 10-12 பந்துகளில் 20-22 ரன்கள் எடுப்பது.

அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக ராகுலும் ரோஹித்தும் 50 ரன்கள் எடுத்ததைப் போல் ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்தால், ஓரிரு கேமியோ இன்னிங்ஸ்கள் மூலம் அணியின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும்.

அதே நேரத்தில், இலங்கைக்கு எதிராக ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மூன்றாவது விக்கெட்டுக்கு 97 ரன் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டனர். ஆனால் அடுத்து வந்த வீரர்களால் மிக வேகமாக விளையாடவோ அல்லது ரன்களை எடுக்கவோ முடியவில்லை.

இந்தப் போட்டியின் ஆடுகளத்தைப் பார்க்கும்போது, முதலில் பேட் செய்யும் அணி கண்டிப்பாக 200 ரன்களை எடுக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது.

இந்திய பேட்டிங்கிலும் மேல் பகுதியே கனமாகத் தெரிகிறது. பெரிய ஸ்கோரை பெறுவதற்கு ரோஹித், ராகுல் மற்றும் விராட் ஆகிய முதல் 3 பேரை இந்தியா சார்ந்துள்ளது.

 

பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல். ராகுல் ஒரு இன்னிங்ஸில் கூட 50 ரன்கள் எடுக்கவில்லை. மேலும் அவரது ரன் விகிதமும் மிகக் குறைவாக இருந்தது.

ரோஹித் ஷர்மாவும் சமீப நாட்களில் 30 ரன்களில் அவுட் ஆகிவிடுகிறார். அவர் இலங்கைக்கு எதிராக 72 ரன்கள் எடுத்தார். ஆனால் வேறுவிதமான ஷாட் ஆடி களத்தில் தொடர்ந்து இருந்திருக்க வேண்டிய ஒரு பந்தில் அவர் அவுட் ஆனார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

அதே நேரத்தில் விராட் கோலியும் இரண்டு அரை சதங்களை அடித்தார். ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து அணியை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.

மிடில் ஆர்டரில், சூர்யகுமார் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினர். ஆனால் மற்ற போட்டிகளில் அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேப்டன்சியில் தவறுகள்

ரோஹித் ஷர்மா ஐபிஎல்லின் சிறந்த கேப்டனாக கருதப்பட்டாலும், ஆசிய கோப்பையில் அவரது கேப்டன்சியில் பல தவறுகளைக் காணமுடிந்தது.

 

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவால் சமச்சீரான பதினொரு வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்ய முடியவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டிகளில் தீபக் ஹூடாவை பந்துவீசச் செய்யாததும் ஒரு தவறு.

ஒரு பந்து வீச்சாளரின் பந்துகளில் பேட்ஸ்மென் அதிகமாக ரன் அடிக்கும்போது, ஆறாவது பந்து வீச்சாளரை பந்துவீசச் செய்வதன் மூலம் இழப்பைக் குறைக்க முயற்சி செய்யப்படுகிறது.

சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் விளையாடுவதற்கு இலங்கை மிகவும் சிரமப்பட்டபோதும் கூட ரோஹித் இதைச் செய்யவில்லை.

ஆசிய கோப்பையில் இந்தியா தொடர்வது மற்ற அணிகளைச் சார்ந்தே உள்ளது. இலங்கையை தோற்கடித்த ஆப்கானிஸ்தான், தன்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அணியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் தவறை இந்தியா செய்யக்கூடாது. https://www.bbc.com/tamil/sport-62825922

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி சாதனைச் சதம் ! ஆசிக் கிண்ண தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறின இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் !

09 SEP, 2022 | 07:04 AM
image

(என்.வீ.ஏ.)

 

பாகிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை (07) நடைபெற்ற போட்டியில் கடும் சவாலாக திகழ்ந்து கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் வியாழக்கிழமை (8) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியில் படுதோல்வி அடைந்தது.

அப் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் விராத் கோஹ்லி குவித்த கன்னிச் சதம், புவ்ணேஷ்வர் குமார் பதிவு செய்த சாதனைமிகு 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின்  சுலபமான  வெற்றியில் முக்கிய பங்காற்றின.

ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது சதம் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லியும் முதலாவது 5 விக்கெட் குவியலை பதிவு செய்தவர் என்ற சாதனையை புவ்ணேஷ்வர் குமாரும் நிலைநாட்டினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 212 ஒட்டங்களைக் குவித்தது.

இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடததால் கே. எல். ராகுல் அணித் தலைவராக விளையாடியதுடன் அவருடன் விராத் கோஹ்லி ஆரம்ப ஜோடியாக களம் இறங்கினார்.

இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 12.4 ஓவர்களில் 119 ஓட்டங்களைக் குவித்து நடப்பு ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.

கே. எல். ராகுல் 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன 62 ஓட்ங்களைப் பெற்று ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 125 ஓட்டங்களாக இருந்தபோது சூரியகுமார் யாதவ் (6) களம் விட்டகன்றார்.

மறு பக்கத்தில் அற்புதமாக துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லியுடன் ரிஷாப் பன்ட் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

61 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்கள் அடங்கலாக 122 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

கடந்த 12 வருடங்களாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் விராத் கோஹ்லி தனது 103ஆவது போட்டியில் முதலாவது சதத்தை குவித்தார்.

ரிஷாப் பன்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்தியா இழந்த 2 விககெட்களையும் 57 ஒட்டங்களுக்கு பரீத் அஹ்மத் கைப்பற்றினார்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான சாதனைமிகு 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் தனது முதல் 5 விக்கெட்களை வெறும் 20 ஓட்டங்களுக்கு பவர் ப்ளேக்குள் இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஹஸ்ரத்துல்லா ஸஸாய் (0), ரஹ்மானுல்லா குர்பாஸ் (0), கரிம் ஜனத் (2), நஜிபுல்லா ஸத்ரான் (0), மொஹமத் நபி (7) ஆகியோரே பவர் ப்ளேக்குள் ஆட்டமிழந்தவர்களாவர்.

7ஆவது ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (7) 6ஆவதாக ஆட்டமிழந்தபோது ஆப்கானிஸ்தானுடைய மொத்த எண்ணிக்கை 21 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மறுபக்கத்தில் தனி ஒருவராக போராடிய இப்ராஹிம் ஸத்ரான் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி ஆப்கானிஸ்தானின் மோசமான தோல்வியைத் தவிர்த்தார்.

அவர் ராஷித் கானுடன் 7ஆவது விக்கெட்டிலும் முஜீப் உர் ரஹமானுடன் 8ஆவது விக்கெட்டிலும் தலா 33 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் நிநைவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

59 பந்துகளை  எதிர்கொண்ட இப்ராஹிம் ஸத்ரான் 4 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் அடித்தார். மறுமுனையில் பரீத் அஹ்மத் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 4 ஒவர்களில் 4 ஓட்டங்களுக்கு 5 விக்டெகளைக் கைப்பற்றினார். இது ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அதி சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.

இந்த போட்டியில் சாதனைகளுக்கு மத்தியில் இந்தியா வெற்றிபெற்றபோதிலும் ஆப்கானிஸ்தானுடன்  இந்தியாவும்  ஏமாற்றத்துடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறின. https://www.virakesari.lk/article/135331

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு சிறந்த அணி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது, இறுதிபோட்டிக்கு இந்தியா தெரிவாகியிருப்பின் இறுதிபோட்டி சுவாரசியமாக இருந்திருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி இதுவரை மிக சிறப்பாக விளையாடி வந்த அணி இந்திய அணியுடனான போட்டியில் மட்டும் ஏன் இவ்வாறு பொறுப்பற்றதனமாக ஆடியது என விளங்கவில்லை.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி நட்சத்திர ஆட்டக்காரர்கள் தமது பக்கம் விழுகின்ற புகார்களை மறைப்பதற்கு இந்த போட்டி அவர்களுக்கு உதவியுள்ளது, இதனால் உலககிண்ணப்போட்டி வரை இந்திய இரசிகர்களை தற்காலிக மறதிநிலையில் பேண இந்த போட்டி உதவியுள்ளது.

இந்த வெற்றி இந்தியாவிற்கு எந்த நன்மையினை செய்யபோவதில்லை மாறாக தீமையினைதான் செய்யும், மீண்டும் உலகக்கிண்ணத்தில் இந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் காலை வாருவார்கள், அந்த போட்டியிலும் எதிரணி தூக்கியெறிகின்ற ஒரு ஆறுதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்று இந்திய இரசிகர்களை சந்தோசப்படுத்திவிடுவார்கள்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு இறுதி  போட்டியில் பாகிஸ்தான் எதிர் சிறிலங்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை - பாகிஸ்தான்

By VISHNU

09 SEP, 2022 | 10:53 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் இலங்கையும் பாகிஸ்தானும் மீண்டும் சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும். 

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்ட போது 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை ஆசிய கிண்ணத்தை 5ஆவது தடவையாக சுவிகரித்திருந்தது.

50 ஓவர் கிரிக்கெட் வகையிலேயே இலங்கை 5 தடவைகளும் ஆசிய சம்பியனாகியிருந்தது.

2014ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை, அதே பங்களாதேஷ் மண்ணில் ஒரு மாதம் கடந்து இந்தியாவை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் ஆசிய கிண்ணத்தையும் உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்து இலங்கை வரலாறு படைக்கும் என இலங்கை இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண (இ20) கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை, 2ஆவது போட்டியில் பங்களாதேஷை 2 விக்கெட்களால் வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

சுப்பர் 4 சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை, ஆப்கானிஸ்தானை 4 விக்கெட்களாலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான இந்தியாவை 6 விக்கெட்களாலும் வெற்றிகொண்டது.

பாகிஸ்தானை சுப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில்.இலங்கை இன்றைய தினம் (9) சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியின் முடிவு இரண்டு அணிகளுக்கும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது போதிலும் இரண்டு அணிகளுக்கும் ஒத்திகை இறுதி ஆட்டமாக இது அமையவுள்ளது.

எனவே இரண்டு அணிகளும் தத்தமது பலத்தையும் பலவினத்தையும் இன்றைய போட்டியில் பரீட்சிக்கவுள்ளன.

இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறுவதால் நாணய சுழற்சி முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் (155 ஓட்டங்கள் - 2 அரைச் சதங்கள்), பெத்தும் நிஸ்ஸன்க (110 ஓட்டங்கள் - ஒரு அரைச் சதம்), பானுக்க ராஜபக்ஷ (96 ஓட்டங்கள்), அணித் தலைவர் தசுன் ஷானக்க (88 ஓட்டங்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் இன்றைய போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் இலங்கை வெற்றிபெறுவதற்கு துடுப்பாட்டத்தில் பெரும் பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கிண்ணத்தின் மூலம் சர்வதேச இருபது 20இல் அறிமுகமான டில்ஷான் மதுஷன்க 6 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்த வீரர்களுடன் ஏனைய இலங்கை வீரர்களும் தங்களது அதிகப்பட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி கடைசி இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பார்கள் என இரசிகர்கள் பெரிதும் எதர்பார்க்கின்றனர்.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணியிலும் அதிசிறந்த வீரர்கள் இருக்கின்றனர்.

இந்த சுற்றுப் போட்டியில் அபாராமாகத் துடுப்பெடுத்தாடி வரும் மொஹமத் ரிஸ்வான் 2 அரைச் சதங்களுடன் 212 ஓட்டங்களை மொத்தமாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச இருபது 20 துடுப்பாட்ட வரிசையில் பாபர் அஸாமை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பக்கார் ஸமான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 83 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் பக்கார் ஸமான் (8 விக்கெட்கள்). ஷதாப் கான் (7 விக்கெட்கள்), நசீம் ஷா (6 விக்கெட்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/135338

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த வருடமும் ஆசிய கிண்ணத்தையும் உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்து இலங்கை வரலாறு படைக்கும் என இலங்கை இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தானிடம் இருந்து கைப்பற்றுவதே சந்தேகம். இதில் உலக கோப்பை??🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தானிடம் இருந்து கைப்பற்றுவதே சந்தேகம். இதில் உலக கோப்பை??🙂

ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் இருக்குது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
PAK
121
SL FlagSL
(13.6/20 ov, T:122) 91/4

Sri Lanka need 31 runs in 36 balls.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வெற்றி தொடர்கிறது ! ஆசியக் கிண்ண இறுதி சுப்பர் - 4 போட்டியிலும் பாகிஸ்தானை வெற்றிகொண்டது

10 SEP, 2022 | 06:26 AM
image

 

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மோதி ஆசிய கிண்ண இருபதுக்கு -20 சுப்பர் 4 கடைசிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஒத்திகையாக அமைந்தன

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

3 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ரன் அவுட்டிலும் பங்காற்றியிருந்தார். துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை   துடுப்பெடுத்தாடியபோது முதல் இரண்டு ஓவர்களில் குசல் மெண்டிஸ் (0), தனுஷ்க குணதிலக்க (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர்.   (2 - 2  விக்.)

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய சரித் அசலன்கவுக்கு பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் பானுக்க ராஜபக்ஷவும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நம்பிக்கை ஊட்டினர்.

பானுக்க ராஜபக்ஷ 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பெத்தும் நிஸ்ஸன்க 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தசுன் ஷானக்கவுடன் 33 ஓட்டங்களைப் பகர்ந்ததன் பலனாக இலங்கை வெற்றி இலக்கை அண்மித்தது.

தசுன் ஷானக்க 21 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டமிழந்த பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவும் வனிந்து ஹசரங்க டி சில்வாவும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.

பெத்தும் நிஸ்ஸன்க 55 ஓட்டங்களுடனும் வனிந்து ஹசரங்க டி சில்வா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஹஸ்நய்ன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

14ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அதன் பின்னர் கடைசி 7 விக்கெட்களை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிஸ்வானும் அணித் தலைவர் பாபர் அஸாமும் 3.3 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிவந்த ரிஸ்வான் இன்றைய போட்டியில் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து பாபர் அஸாமுடன் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்த பக்கார் ஸமான் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாபர் அஸாம் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார். (68 - 5 விக்.)  

மொத்த எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது குஷ்தில் ஷா 4 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

மததிய வரிசையில் இப்திகார் அஹ்மத் (13), மொஹமத் நவாஸ் (26) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் ப்ரமோத் மதுஷான் 2.1 ஓவர்களில் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். மூவரும் தலா 21 ஓட்ங்களைக் கொடுத்திருந்தனர்.

இலங்கையும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் ஆசிய சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதவுள்ளன. https://www.virakesari.lk/article/135408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல எதிர்பார்ப்புக்களுடன் இறுதிப் போட்டியில் இலங்கை அணி

11/09/2022
184
Sri Lanka vs Pakistan - Final Preview
sms-voting.gif
  

யாருமே எதிர்பாராத பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றன. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (11) துபாயில் நடைபெறவிருக்கின்றது.

அறிமுகம்

2014ஆம் ஆண்டில் இலங்கை ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்ட போது மொத்தமாக 11 ஆசியக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டியில் ஆடியிருந்தது. 2014ஆம் ஆண்டில் கிண்ணம் வென்ற இலங்கை அதிக தடவைகள் (5) ஆசியக் கிண்ணத்தினை வென்ற அணி என்ற சாதனையை இந்தியாவுடன் சேர்த்து நிலை நாட்டியிருந்தது.

>> WATCH – வனிந்து ஹஸரங்கவின் மீது நம்பிக்கை வைக்கும் தசுன் ஷானக!

அதே ஆண்டில் T20 உலகக் கிண்ணத்தையும் வென்ற இலங்கை அணி, 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப் பெரும் சரிவினை சந்தித்தது. சிரேஷ்ட வீரர்களின் ஓய்வு, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகளுடனான தொடர் தோல்விகள், அணிக்குள் அடிக்கடி ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக அணித்தலைவர்களின் மாற்றங்கள், பயிற்சியாளர்கள் மாற்றங்கள், போதாக்குறைக்கு இங்கிலாந்தில் இலங்கை வீரர்களின் ஒழுங்கற்ற நடத்தை என அனைத்தும் இலங்கை கிரிக்கெட் அணியினை பாதாளத்திற்குக் கொண்டு சென்றிருந்தன.

ஆனால் ஒரு கிரிக்கெட் சுற்றுத்தொடர் இந்த சிக்கல்களுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் இடையில் சிறு நம்பிக்கை ஒன்று துளிர் விடுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. அது 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது. சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்ததனை அடுத்து இளம் வீரர்களுடன் தசுன் ஷானக்க இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைவர் பொறுப்பினை எடுத்து பாகிஸ்தான் சென்றதோடு, அங்கே அப்போது முதல் நிலை T20 அணியாக இருந்த பாகிஸ்தானையும் 3-0 என T20 தொடரில் வைட்வொஷ் செய்திருந்தார். காலப்போக்கில் இலங்கையின் ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக மாறிக் கொண்ட தசுன் ஷானக்க இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் நம்பிக்கையாக இருப்பதுடன், 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி ஆடும் முதலாவது பல் அணித்தொடர் (Multiple Team Tournament) ஒன்றின் தலைவராகவும் காணப்படுகின்றார். அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணி இரசிகர்களின் எட்டு வருட ஏக்கத்திற்கு ஒரு விடிவாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அமைந்திருக்கின்றது. அத்துடன் 12ஆவது முறையாக இலங்கை இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மறுமுனையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் பாகிஸ்தானுக்கும் அதனது சிரேஷ்ட வீரர்களின் ஓய்வின் பின்னரான நாட்கள் சிறப்பாக அமைந்திருக்கவில்லை. ஒப்பிட்டு அளவில் இலங்கையினை விட கடந்த காலங்களில் முன்னேற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை வெற்றி கொண்டதன் பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் மாற்றம், விமர்சனங்களுக்குள்ளான பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் இன் வருகை, தெரிவுக் குழுவின் பாரபட்சம் குறித்த விமர்சனங்கள், இரண்டாம் நிலை அணிகளுடன் தொடர் தோல்விகள் என பல விடயங்கள் அவ்வணியினையும் பலவீனப்படுத்தியிருந்தது.

எனினும் T20I போட்டிகளில் பாகிஸ்தான் கரம் ஓங்கிய அணியாகவே காணப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் எந்த போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக அரையிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் அதில் துரதிஷ்ட தோல்வியினைத் தழுவிய பின்னர் அடுத்ததாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுகின்றது.

எனவே இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கும் கௌரவத்திற்குரிய ஒரு மோதலாக 2022ஆம் ஆண்டின் ஆசியக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி மாறியிருக்கின்றது.

>> தனன்ஜய, பிரமோத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? கூறும் ஷானக!

ஆசியக் கிண்ணத்தில் இரு அணிகளதும் பயணம்

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தின் தாம் விளையாடிய முதல் போட்டிகளில் இரு அணிகளும் தோல்வியினைத் தழுவியிருந்தன. ஆப்கானிஸ்தானுடன் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி வாய்ப்பினை பெறும் என்று எவரும் நினைக்கவில்லை. பாகிஸ்தானும் அதே மாதிரியான எதிர்பார்ப்புக்களையே கொண்டிருந்தது.

ஆனால் தொடரின் எதிர்பார்ப்பு அணிகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்தே ஆசியக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றியதோடு தற்போது கீரிடத்திற்கான மோதலில் காணப்படுகின்றன. இதில் இலங்கை தொடரின் முதல் சுற்றில் ஒரு போட்டியில் தோல்வியினைத் தழுவி, சுபர் 4 சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற, முதல் சுற்றில் தோல்வியினைத் தழுவிய பாகிஸ்தான் சுபர் 4 சுற்றில் இலங்கையுடன் தோல்வியடைந்து இறுதிப் போட்டியில் களம் காணவிருக்கின்றது.

இலங்கை – பாகிஸ்தான் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் 1986, 2014 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டிகளில் மோதியிருப்பதோடு இதில் 1986 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் பெற 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இலங்கையினை தோற்கடித்திருந்தது.

புதிய தலைவர்கள்

இரண்டு அணிகளையும் இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்திருக்கும் தலைவர்களான தசுன் ஷானக்க மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சர்வதேச அரங்கில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் இறுதிப் போட்டியாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அமைகின்றது. இந்த வீரர்களில் தசுன் ஷானக்க சிறந்த தலைமைத்துவத்துடன் மட்டுமின்றி, ஒரு வீரராகவும் அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றார்.

ஆனால் பாபர் அசாம் இந்த முறைக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் ஒரு வீரராக எதிர்பார்த்த ஆட்டத்தினை வழங்காத நிலையில் அவருக்கு தனது தாயக அணிக்கு மூன்றாவது ஆசியக் கிண்ணத்தினை வெற்றி கொள்ள இறுதிப் போட்டியில் ஒரு வீரராக பிரகாசிக்க வேண்டிய அழுத்தம் காணப்படுகின்றது.

கற்க வேண்டிய பாடங்கள்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை சுபர் 4 தொடரில் அவர்கள் விளையாடிய இறுதி இரண்டு போட்டிகளிலும் அவர்களுக்கு எதிர்பார்த்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக இலங்கைக்கு எதிரான மோதலில் அவர்களது துடுப்பாட்ட வரிசை இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்களிடம் பெரிதும் தடுமாறியது. எனவே பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சுக்கு திறமையாக துடுப்பாடும் உத்திகளை இலங்கையுடனான போட்டியில் உபயோகம் செய்ய வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணி தமது சுழல்பந்துவீச்சாளர்களின் உபயோகத்தினை கடைசியாக நடைபெற்ற போட்டியிலேயே முழுமையாகப் பெற்றுக்கொண்டது. எனவே சுழல்பந்துவீச்சாளர்கள் மூலம் அபாரம் காட்டிய இலங்கை அணி அதே ஆட்டத்தை தொடர்ச்சியாக (Consistency) வெளிப்படுத்தினால் அது பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆபத்தாக அமையும்.

>> “ஆசியக்கிண்ணத்தை வென்று புதிய பயணத்தை தொடருவோம்” – பியால் விஜேதுங்க

நாணய சுழற்சி அதிஷ்டம்

நாணய சுழற்சி அதிஷ்டம் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பல அணிகளுக்கு கைகொடுத்திருக்கின்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தமது கடந்த மூன்று போட்டிகளிலும் இரண்டாவது துடுப்பாட்டத்தை தெரிவு செய்து வெற்றி பெற்றிருக்கின்றது.

கடைசியாக துபாய் மைதானத்தில் நடைபெற்ற 30 T20I போட்டிகளில் 26 முறை இரண்டாவது துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அணிகள் வெற்றி பெற்றதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு நாணய சுழற்சி சாதகமாக அமையாது போனால் முதலில் துடுப்பாடும் அணி 190 ஓட்டங்களுக்கு மேல் பெற வேண்டும். ஏனெனில் இங்கே பதிவு செய்யப்பட்ட நான்கு வெற்றிகளில், மூன்று தடவைகள் 190 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன.

2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இரண்டு அணிகளும் T20I போட்டிகளில் இரண்டாவது துடுப்பாடிய தரவுகளை நோக்கும் போது பாகிஸ்தான் தாம் விளையாடிய 17 போட்டிகளில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதோடு, இலங்கை அணி 19 போட்டிகளில் 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றியீட்டியிருக்கின்றது. இது பாகிஸ்தான் அணி இரண்டாவது துடுப்பாடும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதனை காட்டுகின்றது.

இலங்கையின் பலம்

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையின் பலம் அதன் சுழல்பந்துவீச்சுத்துறையே. கடந்தகால தரவுகள் பாகிஸ்தான் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் 2021ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டளவில் குறைந்த (120) Strike Rate உடன் துடுப்பாடியதனை காட்டுகின்றது. அத்துடன் இலங்கைக்கு எதிரான மோதலிலும் அவர்கள் சுழல்பந்துவீச்சுக்கு எதிரான துடுப்பாட்டத்தில் தடுமாறியதனை பார்க்க முடியுமாக இருந்தது. வனிந்து ஹஸரங்க T20I போட்டிகளில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய 16 ஓவர்களில் 11 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்கின்றார். எனவே சுழல் கைகொடுக்கும் போது பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

பாகிஸ்தானின் பலம்

அணிக்குள் மீள இணைக்கப்படும் சதாப் கான் பாகிஸ்தானின் மத்திய வரிசைக்கு துடுப்பாட்ட வீரராக பலம் சேர்ப்பார் என நம்பப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மோதலில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட சதாப் கான் இலங்கையுடனான மோதலிலும் திறமை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் ஆசிப் அலி, மொஹமட் நவாஸ் ஆகிய வீரர்களும் விரைவான துடுப்பாட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு பலம் சேர்க்க கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

உபாதை பிரச்சினைகள் அணி மாற்றங்கள்

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இரு அணிகளிலும் எந்த உபாதைகளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியின் இறுதிப் பதினொருவர் அணி எவ்வாறு அமையும் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலையொன்று காணப்படுகின்றது.

>> CLIPS – சரித் அசலங்கவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது இலங்கை அணிக்கு பின்னடைவா? – Cricket Kalam

எதிர்பார்க்கை குழாம்கள்

இலங்கை XI – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க/தனன்ஞய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, ப்ரமோத் மதுஷான், டில்ஷான் மதுசங்க

பாகிஸ்தான் XI – மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), பகார் சமான், இப்திக்கார் அஹ்மட், சதாப் கான், மொஹமட் நவாஸ், ஆசிப் அலி, குஸ்தில் ஷாஹ், ஹரிஸ் ரவுப், நஸீம் ஷாஹ், மொஹமட் ஹஸ்னைன்

https://www.thepapare.com/asia-cup-2022-sri-lanka-vs-pakistan-final-preview-tamil/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
SL FlagSL
(14.6/20 ov) 117/6
PAK FlagPAK

Pakistan chose to field.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
SL FlagSL
(20 ov) 170/6
PAK FlagPAK

Pakistan chose to field.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா 23 ஓட்டங்களால் பாகிஸ்தானை வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.