Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில்... உடன்பாடு கைச்சாத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில்... உடன்பாடு கைச்சாத்து!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1296993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு கடன் வழங்க IMFஇன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஒப்பந்தம் குறித்து தூதுக்குழுவின் தலைவர் விளக்கம்!

இலங்கைக்கு... கடன் வழங்க, IMFஇன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஒப்பந்தம் குறித்து... தூதுக்குழுவின் தலைவர் விளக்கம்!

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் விசேட செய்தியாளர் மாநாடு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர், “இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் 2.9 பில்லியன் விரிவான நிதி வசதிக்காக உடன்பாடு எட்டப்பட்டது. இது 48 மாத திட்டமாகும். இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஏற்கனவே பொருளாதார சீர்திருத்தங்களை தொடங்கியுள்ளனர். இது தொடர்ந்து நடக்க வேண்டும். இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலையானது அல்ல. அதை மறுசீரமைக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1297023

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணம் எப்போது வரும்?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கொழும்பு நெருக்கடி

பட மூலாதாரம்,IMF

இலங்கையுடன் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (செப்டம்பர் 1) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, 48 மாத காலத்திற்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மற்றும் பொருளாதார திருத்தம் தொடர்பிலான வேலை திட்டத்திற்கான கலந்துரையாடல்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி இலங்கைக்கு வருகைத் தந்தது.

இந்த குழுவின் விஜயத்தில், இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகளுடன் பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

 

இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளான மெசர்ஸ் ப்ரூயர் மற்றும் நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

பொருளாதாரத்தை சீர் செய்தல் மற்றும் கொள்கைகளை திருத்துவதற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுக்காக இலங்கை அதிகாரிகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை கடன் வசதியாக பெற்றுக்கொடுக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டாலும், இலங்கைக்கு நிதி உதவி தற்போதைக்கு கிடைக்காது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

Presentational grey line

 

Presentational grey line

"இது ஒரு ஆரம்பம்தான்" - பொருளியல் பேராசிரியர்

 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி

 

படக்குறிப்பு,

எம்.கணேஷமூர்த்தி, சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

இது ஆரம்பகட்ட நடவடிக்கை என்ற போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவி கிடைப்பதற்கு இன்னும் 3 முதல் 6 மாத காலம் எடுக்கும் என அவர் கூறுகின்றார்.

''அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு என்பது, ஆரம்ப கட்டம் தான். அடுத்த கட்டத்திற்கு போகும் போது தான், அடுத்த பிரச்னைகள் தொடர்பில் பேச வேண்டிவரும். அதிகாரிகள் மட்டத்தில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்றது. இதில் கடன் மறுசீரமைப்பு தான் மிக முக்கிய பிரச்னையாக இருந்தது. இலங்கையை பொருத்த வரை, சீனாவை தவிர, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது," என்று அவர் கூறினார்.

"சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவுக்கு வந்தால், அது சரி வரும் என நினைக்கின்றேன். சர்வதேச நாடுகளிடமிருந்து ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களை நாம் எவ்வாறு மீள செலுத்த போகின்றோம் என்பது குறித்து அந்தந்த நாடுகளுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதே, கடன் மறுசீரமைப்பு என கூறப்படுகின்றது. அந்தந்த நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டால் மாத்திரமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அதுவொரு கடன் நிபந்தனையாக பார்க்கப்படுகின்றது," என்கிறார் அவர்.

"வழமையாக அப்படி வருவது குறைவு. கடனை மீள செலுத்த முடியாது என இலங்கை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அவ்வாறு அறிவித்தபடியால், இது முக்கியமாக காணப்படுகின்றது. கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்த பிறகு, அரசாங்கம் நிதி ஆலோசகரையும், சட்ட ஆலோசகரையும் நியமிக்க வேண்டும். இந்த இரண்டும் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் ஆலோசனைக்கு அமையவே இலங்கை நடக்கும். இலங்கைக்காக அவர்கள் தான் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவார்கள்," என பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

நிதி ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்கள் மிக முக்கியமான மூன்று விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தும் என அவர் கூறுகின்றார்.

மூன்று முக்கிய கேள்விகள்

 

இலங்கை கடன்

01. இலங்கை ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையை நீடிக்க முடியுமா?

02. இலங்கை ஏற்கனவே பெற்றுக்கொணட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்க முடியுமா?

03. இலங்கை ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களில் மீள செலுத்திய தொகைக்கு அப்பால் காணப்படுகின்ற எஞ்சிய தொகையில் குறைப்புக்களை மேற்கொள்ள முடியுமா?

என்ற மூன்று விடயங்கள் குறித்து, இந்த நிறுவனங்கள் கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சிக்கும் என அவர் கூறுகின்றார்.

அதிகாரிகள் மட்டம் என்றால், சர்வதேச நாணய நிதியம் இலங்கை சார்பில் யாருடன் கலந்துரையாடல்களை நடத்தும் என பிபிசி தமிழ், பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியது.

இனி என்ன நடக்கும்?

 

இலங்கை ரூபாய் மதிப்பு கடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இலங்கையில் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். நிதி அமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள். அதுவே தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல். அதன் பின்னரே, நாட்டினுடைய தீர்மானங்களை எட்டக்கூடிய ஜனாதிபதி, நிதி அமைச்சர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முக்கியமாக இலங்கை அதிகாரிகளுடனேயே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அரசியல்வாதிகளுடன் பெரியளவிலான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது." என அவர் கூறினார்.

அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, எத்தனை மாதங்களில் இலங்கைக்கு நிதி உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும்?

''சுமார் 6 மாதம் எடுக்கும். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக ஒத்துக் கொண்டால் கூட, அதை பகுதி பகுதியாக பிரித்தே தருவார்கள். உண்மையை சொன்னால், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படுகின்ற கடன் தொகையானது, இலங்கைக்கு எந்த வகையிலும் போதாது.

கிட்டதட்ட 60 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உள்ள ஒரு நாட்டிற்கு, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் எப்படி போதும்;?. அப்படி என்றால், ஏன் சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் செல்ல வேண்டும். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், ஆரம்பகட்ட நடவடிக்கைகளை செய்துக்கொள்வதற்காக சிறியளவிலான ஒரு தொகையை கொடுக்கும். கட்டமைப்பை மாற்றுவதற்காக சிறிய தொகையை கொடுக்கும்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது, ஒப்பந்தம் வெற்றிகரமாக கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது என்று சொன்னால், அது கடன் வழங்குபவர்களுக்கு அல்லது கடன் தரமிடும் நிறுவனங்களுக்கு ஆகியோருக்கு நல்ல சமிக்ஞையை கொடுக்கும். கடன் மீள செலுத்த முடியாது என்ற விடயத்தை அந்த நிறுவனங்கள் திருத்தி அமைக்கும். கடனை மீள செலுத்த முடியாது என்ற பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படும்.

அதன் பின்னர் மூலதன சந்தையில் இலங்கைக்கு கடன்களை வாங்கக்கூடிய நிலைமை ஏற்படும். இது தான் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய மிக முக்கியமான நன்மையே தவிர, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் எப்படியும் போதாது. இந்தியா அதைவிட பெரியளவு தொகையை கடனாக இலங்கைக்கு கொடுத்திருக்கின்றது" என பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

 

Presentational grey line

 

Presentational grey line

"யானை பசிக்கு சோளப்பொறி"

 

இலங்கை பணவீக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரானது, யானை பசிக்கு சோள பொறி போன்றது என பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

எனினும், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி உதவியை வழங்கும் பட்சத்தில், அது இலங்கைக்கு வேறு வழிகளில் உதவிகளை ஏற்படுத்தும் என அவர் கூறுகின்றார்.

 

Presentational grey line

கடந்த காலங்களில் வாங்கிய கடனை செலுத்தும் இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடந்த காலங்களில் இலங்கை வாங்கிய கடனை, இன்றும் செலுத்தி வருவதாக பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

கடனை திருப்பி செலுத்தாத போதிலும், ஒரு நாடு கஷ்டத்தில் இருக்குமானால், சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முன்வரும் என அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு கடந்த காலங்களில் நெருக்கடிகள் வரும் சந்தர்ப்பங்களில், 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதாகவும், நெருக்கடியிலிருந்து சற்று மீள எழும் சந்தர்ப்பங்களில் அந்த நிகழ்த்தி திட்டத்தை இடைநடுவிலேயே இலங்கை நிறுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச நாணய நிதியம், இந்த 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை, மூன்று அல்லது நான்கு தவணைகளாகவே வழங்கும் என அவர் கூறுகின்றார்.

அவ்வாறு இரண்டு அல்லது மூன்றாவது தவணைகளில் நாடு வழமைக்கு திரும்புமானால், அந்த நிகழ்த்தி திட்டம் அதோட நிறுத்தப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அனுமதி பெறப்பட்டு, நிதி வசதி இலங்கைக்கு கிடைப்பதற்கு சுமார் 3 முதல் 6 மாத காலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62753741

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தனது கடன்களை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான ஆரம்பம் - ஜனாதிபதி தெரிவிப்பு

By VISHNU

01 SEP, 2022 | 10:06 PM
image

(எம்.மனோசித்ரா)

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கை தனது கடன்களைக் குறைப்பதற்கும், இயலுமானால் கடன்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது.

இலங்கை வரலாற்றில் இது முக்கியமான படிக்கல்லாகும். வீழ்ச்சியில் இருந்து மீள்வது, கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் பெறுவது மட்டுமன்றி, சமூக துறைகளைப் பாதுகாப்பது, வாழ்க்கை முறையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது என்பன முக்கியமாகும். அதனைவிட தற்போதைய நிலைமையில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் முக்கியமானதாகும்.

சமூகக் கட்டமைப்பை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாத்தல் என்பவற்றை முன்னெடுக்கும் அதேநேரம் போட்டித் தன்மை மிகுந்த ஏற்றுமதியை அடிப்டையாகக்கொண்ட தொழில் துறையாக நாட்டை மேம்படுத்துவதை புதிய பொருளாதார யுகமாக கருதுகின்றோம்.

இதன் ஆரம்பம் கடிமானதாக இருக்கும். ஆனால் நாம் அதனையே பின்தொடர்ந்தால் எம்மால் இன்னும் முன்னேற முடியும். தற்போது எது தேவையோ அதுவே எமது அர்ப்பணிப்பாக இருத்தல் வேண்டும். எனினும் இங்கு நாம் எமது இலக்கை அடைவதை மட்டும்  குறிக்கோளாக கொண்டிராமல் அதற்கு அப்பால் செல்ல வேண்டும்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். இது நமது சமூக சேவைகளை நிலைநிறுத்துவதை எளிதாக்கும். இலங்கை தனது கடன்களைக் குறைப்பதற்கும், இயலுமானால் கடன்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/134854

  • கருத்துக்கள உறவுகள்

2.1 பில்லியன்...நாளைக்கு கோட்டா வாறார்...அவருடைய வீட்டுச் செலவு...பாதுகாப்புச் செலவு...போதாக்குறைக்கு முதலவளர்க்கிற செல்வு ..சட்டி பானை. கையும் கணக்கும் சரி...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இலங்கைக்கு கடந்த காலங்களில் நெருக்கடிகள் வரும் சந்தர்ப்பங்களில், 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதாகவும், நெருக்கடியிலிருந்து சற்று மீள எழும் சந்தர்ப்பங்களில் அந்த நிகழ்த்தி திட்டத்தை இடைநடுவிலேயே இலங்கை நிறுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சொறி சிங்களம் 16 தடவை imf ஏமாத்தி உள்ளது ...😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

சொறி சிங்களம் 16 தடவை imf ஏமாத்தி உள்ளது ...😄

16 தடவை… வெள்ளைக்கரனை ஏமாற்றுபவன்,
எவ்வளவு பெரிய…. கொள்ளைக்காரனாக இருப்பான். 😎 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா

By VISHNU

04 SEP, 2022 | 04:29 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச 2.9 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையினை மேற்கோற்காட்டி செய்துள்ள டுவிட்டர் பதிவிலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினால் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஊழியர்மட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, மேலதிக கலந்துரையாடல்களையும் தீர்மானங்களையும் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமாப்பிக்கப்படும்.

பொருளாதார உறுதிப்பாட்டினையும் கடன் நிலைபேற்று தன்மையை மீட்டெடுக்கும் வகையிலும் , நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல், ஊழலினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்திசெய்தல், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்வதற்குக் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல் என்பன ஊழியர் மட்ட இணக்கப்பாட்டின் குறிக்கோள்களாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவானது பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல், இலங்கை மக்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கான தளத்தினைத் தயார்படுத்தல் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்பவற்றினை நோக்காகக்கொண்டுள்ளது. இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்கும் முகமாக எமது ஈடுபாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க ஆவலுடன் இருக்கிறோம்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/135023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.