Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மிகச் சிறந்த அறிவுரைகளில் ஒன்று பகவத் கீதை கற்பிக்கும் பாடங்கள்

Featured Replies

நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். ஒருவர் எதிர்கொள்ளும் சவாலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல், அந்த நேரத்தில் அவரைச் சமாளிப்பதற்காகவே மேம்போக்காக அவருக்கு வழங்கப்படும் வெறும் 'வெத்து வேட்டாட்டான' அறிவுரைகள் பயனற்றவை மட்டுமல்ல பல சமயங்களில் ஆபத்தானவையும் கூட. 

அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலனின் தன்மையானது பல்வேறு புறக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுடன், அதற்கான பலன் உரிய நேரத்தில் கிடைத்தே தீரும்!' என்பதே மிகத் திருத்தமான உட்பொருளாகும். 

கீதை இதனை மட்டுமா வலியுறுத்துகிறது? மேற்கூறிய வாசகத்தை மட்டுமா நம்மில் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்? நிச்சயமாக இல்லை! பகவத் கீதை எனும் முழுமையான சுவைமிக்க, சத்தான மாம்பழத்தின் ஒரு சிறு துண்டின் சாற்றின் துளிகள் தான் மேற்கூறிய ஒரு வாசகம்! முழுமையான மாம்பழத்தின் சுவையும், சத்தும் அதைப் பிழிந்து சாறாக நாம் அருந்தும்போது நமக்குக் கிடைப்பதில்லை. 

அது யாரால், எவ்வளவு நேர்த்தியான செயன்முறை மூலம் பிழியப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது என்பது ஒரு விடயம்; கழிவான சக்கையை நீக்குவதால் இழக்கப்படும் சத்து, சுவை போன்றவை மறு விடயம்; மாம்பழத்தின் தோலை ஆர்வத்துடன் உரிப்பது முதல், அதை ஆசையாகக் கடித்து ருசித்து உண்டு, மீதமுள்ள அதன் விதையையும் ருசித்துவிட்டு அதனை மண்ணில் விதைப்பது வரை நாம் பெறும் திருப்தியான அனுபவத்தைத் தவறவிடுவது இன்னுமோர் முக்கியமான விடயம். 

அந்த வகையில், கீதை எனும் முழுமையான மாம்பழத்தை அதன் சுவையும், சத்தும் குன்றாமல் எவ்வாறு ரசித்து, ருசித்து இன்புற்றுப் பயனடைவது என்பதை இந்த YouTube தொடர் மூலம் நமக்குக் கற்பிக்கிறார் இந்த நல்லாசான். கீதையின் சமஸ்கிருத மூல சுலோகங்கள், அதன் பதங்கள் மற்றும் தமிழில் விரிவான விளக்கம் மட்டுமன்றி தற்காலத்தில் - நடைமுறையில் எவ்வாறு இந்த அறிவுரைகளை நாம் கைக்கொள்ளலாம் என்பது போன்ற விடயங்களையும் உள்ளடக்கியது சிறப்பு. சுவாமி சின்மயானந்தா அவர்களின் உரையை அடிப்படையாக வைத்தே இந்த ஆசான் நமக்கு இந்தப் பாடங்களைக் கற்பிக்கிறார். 

இத்தொடர் இன்னும் முடிவடையவில்லை; இன்னும் ஏராளமான சுலோகங்கள் வர இருக்கின்றன. எனினும் மாம்பழத்தின் சிறு பகுதியைச் சுவைத்து இன்புற்ற மகிழ்ச்சியில் இம்மாங்கனி பற்றி உங்களுக்கும் சொல்வதில் நான் ஆனந்தமடைகிறேன்! சுவைத்தலிலும், பகிர்தலே பேரின்பம் அல்லவா! 

***இன்னோர் விடயம்; 'கீதை உண்மையில் கிருஷ்ணரால் தான் உபதேசிக்கப்பட்டதா?', 'அவர் பரமாத்மாவா?', 'உண்மையில் இது நிகழ்ந்ததா?', 'போர் செய்து உயிர்களைக் கொல்வதை ஏன் கீதை நியாயப்படுத்துகிறது?' எனும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். ஆனால் நம்மை அர்ஜுனனாகவும், நம் வாழ்வைப் போர்க்களமாகவும் உருவகம் செய்த மனநிலையில் இதில் கூறப்படும் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்டுப் பின்பற்றினால் மேலுள்ள கேள்விகள் நமக்கு அவசியமில்லை. 

கீதையிலோ, அதற்கான விளக்கம் தரும் இந்த ஆசான் கூறும் கருத்துக்களிலோ ஆங்காங்கே மிகச்சில ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்கள் ஏதும் இருப்பின் மாம்பழத்தின் அழுகிய மிகச்சிறு பகுதியை நீக்கிவிட்டு உண்பது போல இதனையும் ருசித்துப் பயனடைவோம்! 

மற்றொன்று, மாம்பழத்தின் சுவையும், சத்தும் நமக்குக் கிடைப்பது மாம்பழத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை; நாம் எந்த மனநிலையில், எப்படி உண்கிறோம் என்பதிலும் பெருமளவு தங்கியுள்ளது. கீதை போன்ற மிகச் சிறந்த அறிவுரைகளைக் கேட்ட பயனும் அவ்வாறே! - நமது வாழ்க்கை அனுபவங்களால் நாம் பெற்ற பக்குவத்தின் அளவிலும் தங்கியுள்ளது. அத்துடன் மேலும் பக்குவமடைய நாம் காட்டும் முனைப்பிலும் தங்கியுள்ளது எனக் கூறி கீதை எனும் மாங்கனியின் விதையை என் பங்கிற்கு இங்கு விதைக்கிறேன்! 🙏 

நன்றி 🙏

👇YouTube இணைப்பு கீழே👇

https://youtu.be/VlvcYzm6mk0 

(இந்த இணைப்பு தொடரின் முதலாவது காணொளி மட்டுமே. அந்த YouTube channelஇல் playlist பகுதிக்குச் சென்று 'ஶ்ரீமத் பகவத் கீதை' எனும் தலைப்பில் இத்தொடரில் இதுவரை வெளியான 57 காணொளிகளையும் காணலாம்.)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், பொறுமையாக வாசிக்க வேண்டிய விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தியுடன் வந்திருக்கிறீர்கள் மல்லிகை  வாசம் எங்கும் பரவட்டும்.........!  👍

கண்டது சந்தோசம்......!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். -----

அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலனின் தன்மையானது பல்வேறு புறக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுடன், அதற்கான பலன் உரிய நேரத்தில் கிடைத்தே தீரும்!' என்பதே மிகத் திருத்தமான உட்பொருளாகும். 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. 
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

இந்த வரிகள்... சரியானதா? அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?

  • தொடங்கியவர்
1 hour ago, vasee said:

தொடர்ந்து எழுதுங்கள், பொறுமையாக வாசிக்க வேண்டிய விடயங்கள்.

பொறுமையாகக் கேட்டு, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை இக்காணொளிகளில் தந்துள்ளார் இந்த ஆசான். ஒவ்வொருவர் புரிதலும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை தானே. எனவே தான் இதனை இங்கு அறிமுகப்படுத்துவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்கிறேன். அவரவர் தேடலுக்கேற்பக் கேட்டுப் பயன் பெறலாம் என்பதே என் எண்ணம் அண்ணா.😊

கீதையை வெவ்வேறு ஆசான்களிடமிருந்து முழுமையாகக் கற்ற பின்னர் தான் எல்லோரும் இது பற்றிக் கலந்துரையாடுவதும் சிறந்தது என நினைக்கிறேன். அதுவும் இணையத்தில் எழுத்து மூலமான கருத்துப் பரிமாற்றங்களில் பல்வேறு புரிந்துணர்வுச் சிக்கல்கள், நேர விரயம் ஏற்படுவதால் வாய் மொழி மூல உரையாடல்களை நேருக்கு நேர் சந்தித்தோ அல்லது Zoom போன்றவற்றின் ஊடாகவோ செய்தலே ஆரோக்கியமானது என நினைக்கிறேன். அதற்கான காலம் கனியட்டும்! 😊

நன்றி அண்ணா. 😊

 

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

நல்ல செய்தியுடன் வந்திருக்கிறீர்கள் மல்லிகை  வாசம் எங்கும் பரவட்டும்.........!  👍

கண்டது சந்தோசம்......!

நீங்கள் அறிந்திராத விடயங்கள் அல்ல இவை சுவி அண்ணா!😊 எனினும் இது பற்றிய தேடலில் உள்ள எவரும் கேட்டுப் பயன் பெறட்டும் என்ற எண்ணத்தில் இங்கு பகிர்ந்தேன்.

எனக்கும் உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி சுவி அண்ணா. 😊🙏

  • தொடங்கியவர்
56 minutes ago, தமிழ் சிறி said:

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. 
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

இந்த வரிகள்... சரியானதா? அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?

தமிழ் சிறி அண்ணா,

நானும் கீதையைக் கற்கும் மாணவன் தான். கீதை பற்றி விரிவாகக் கற்பது இதுவே எனக்கு முதல் முறை. 

நீங்கள் குறிப்பிட்ட வாசகங்கள் தொடர்பான விளக்கங்களை இந்த ஆசிரியர் இனி வரும் காணெளிகளில் தான் தருவார். நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 😊

இவை கூட மேம்போக்கான வசனங்கள் தான். தவறு எனக் கூறுவதை விட ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டிய பல விடயங்கள் இது போன்ற வாக்கியங்களுக்குப் பின்னால் இருக்கின்றன என்பதே பொருத்தமானது. 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.