Jump to content

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்!

YPdJ7kU8aiWXn2VaA7n3gS-1200-80.jpg.webp

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்ச்சி இன்று ( செப்டம்பர் 7 ) நடைபெற உள்ளது.

இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் ஐபோன் 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஃபார் அவுட் 2022 ல் ஐபோன் 14 , ஐ போன் 14 மேக்ஸ் , ஐ போன் 14 ப்ரோ மற்றும் ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது.

Apple iPhone 14

ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய ஐ போன் 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் இருக்கும்.

மேலும் ஐபோன் 13 ன் f/2.2 அப்ரேச்சர் (aperture)யை ஓப்பிடும் போது, ஐ போன் 14 ன் முன்பக்க கேமரா மற்றும் செல்பி கேமரா ஆட்டோஃபோகஸ் திறன் f/1.9 அப்ரேச்சர் (aperture ) கொண்டதாக உள்ளது. 

Apple iPhone 14

இதோடு இந்த மாடல்கள் அனைத்தும் ஐஓஎஸ் 16, ஏ 16 பயோனிக் சிப் மற்றும் மற்ற ஐ போன் மாடல்களை ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பேட்டரி அம்சங்களுடன் வரவுள்ளது.

இன்று (செப்டம்பர் 7 ) நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது, ஆப்பிள் ஏர்போட்ஸ் 2 ப்ரோ என்ற புதிய ஏர்போட்ஸ்ளை (Airpods )ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்த மாடல், H1 ப்ராஷசர் (processor), லாஸ்லெஸ் ஆடியோ கோடெக் இன்- இயர் விங் டிப் டிசைன் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 14

இதே போன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் ப்ரோ, வாட்ச் எஸ்இ யும் இன்று (செப்டம்பர் 7 )அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மற்ற ஸ்மார்ட்வாட்சுகளை ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இது அறிமுகம் ஆகும் என்று கூறப்படுகிறது. 

Apple iPhone 14

இந்த ஆப்பிள் வாட்சுகளில் உடல் வெப்பநிலை சென்சார் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் S7 ப்ராசசரை விட சற்று அதிக சக்தி வாய்ந்ததாக S8 சிப் உள்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://minnambalam.com/apple-iphone-14-debuts-today/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 14: ஆப்பிளின் மாதவிடாய், கருத்தரிப்பை கண்காணிக்கும் வாட்ச்சால் என்ன பிரச்னை?

  • ஷியோனா மெக்கல்லம்
  • தொழில்நுட்ப செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஆப்பிள்

பட மூலாதாரம்,APPLE

அவசர கால செயற்கைக்கோள் இணைப்பு மற்றும் கார் விபத்தைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐபோன் 14 மொபைல் போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் நான்கு புதிய பதிப்புகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதன்முறையாக பார்வையாளர்கள் நேரடியாக கலந்துகொண்ட நிகழ்வாகும்.

அடுத்த தலைமுறை ஐபோன், வாட்ச், ஏர்பாட்ஸ்களில் கவனம் செலுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வில் வாட்ச் அல்ட்ரா என்ற ஸ்போட்ஸ் வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

நேற்று நடந்த நிகழ்வில் என்னென்ன அறிமுகம் செய்யப்பட்டன? அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்ன?

 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் கார் விபத்தைக் கண்டறியும் வசதி, மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதற்கான சென்சார், குறைந்த ஆற்றலில் இயங்கும் திறன் உட்பட பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அமெரிக்காவில் கருக்கலைப்பு குற்றமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதில் மக்கள் மிகவும் கவனமாக உள்ளனர். இந்த வாட்ச்சில் பதிவாகும் மாதவிடாய் சுழற்சி தொடர்பான தரவுகள் போலீஸாரால் பயன்படுத்தப்படலாம் என்ற கவலை எழுந்திருக்கும் நிலையில், பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அதைக் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக்ஸ் அடையாளங்கள் மூலமே அணுக முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் பொறுப்பை தாங்கள் எடுத்துக்கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ. ஜெஃப் வில்லியம் தெரிவித்தார்.

கருத்தரிப்புக்கு முந்தையை நிலை பற்றி அறிவிக்கும் நோட்டிஃபிகேசன் வசதி கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஐபோன்

பட மூலாதாரம்,APPLE

இந்த வசதி வாட்ச்சில் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டால், இரவு முழுவதும் ஒவ்வொரு 5 விநாடிக்கும் ஒரு முறை உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படும். கருத்தரிப்பு நிலையை வெளிப்படுத்தும் வகையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, அது நோட்டிஃபிகேசன் மூலம் பயனாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

கார் விபத்தைக் கண்டறியும் வசதியும் இந்த வாட்ச்சில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சை அணிந்திருப்பவர் பெரும் கார் விபத்தில் சிக்கினால் அதிலுள்ள சென்சார் உடனடியாக அவசர சேவை எண்ணை அழைத்து விபத்து நடந்த இடம் குறித்த விவரங்களை அளிக்கும்.

குறைந்த ஆற்றலுடன் இயக்கக்கூடிய வகையிலும் இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் போன்களில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் பயன்படுத்த வழிவகை செய்யும் அதே தொழில்நுட்பம் இந்த வாட்ச்சிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாட்ச்சின் விலையானது அமெரிக்க மதிப்பில் 399 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 419 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

நீர், தூசு, விரிசல்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச், கடினத்தன்மை கொண்ட வாட்ச்களை வடிவமைத்துவரும் கார்மின், போலார் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

 

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

பட மூலாதாரம்,APPLE

 

படக்குறிப்பு,

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

முழுமையான ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் அறிமுகத்தில், அல்ட்ரா மாரத்தான் வீரர் ஸ்காட் ஜூரெக் கலந்துகொண்டார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணிநேரம் இந்த வாட்சை பயன்படுத்த முடியும். நீச்சல், சைக்கிளிங், ரன்னிங்கை உள்ளடக்கிய அல்ட்ரா டிரையத்லான் போட்டிகளை நிறைவுசெய்ய இந்த வாட்சை பயன்படுத்த முடியும் என உறுதியளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், 60 மணிநேரம் தாங்கக்கூடிய கூடுதல் பேட்டரி வசதியையும் அளித்துள்ளது.

இந்த வாட்ச்சின் விலையானது அமெரிக்க மதிப்பில் 799 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 849 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 14

ஐபோன் 14 மாடலானது ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் என இரு வடிவங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேட்டிலைட் மூலமாக அவசர அழைப்பை மேற்கொள்ளும் வசதி இந்த வகை மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வசதியைப் பயனபடுத்தி அவசர உதவிக்கான மெசேஜ் அனுப்ப 15 விநாடிகள் முதல் ஒரு நிமிடம்வரைதான் நேரம் எடுக்கும்.

இந்தக் கண்டுபிடிப்பானது அணுகுவதற்கு கடினமான இடங்களில் உள்ள பயனாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்குமென தொழில்நுட்ப ஆய்வாளர் பாலோ பெஸ்கடோர் தெரிவிக்கிறார்.

 

ஐபோன் 14

பட மூலாதாரம்,APPLE

வேகமாக நகரும் பொருட்களை படம்பிடித்தல் மற்றும் 49 சதவிகிதம் கூடுதல் சிறப்புடன் குறைந்த ஒளியில் படமெடுக்கும் திறன்களுடன் கூடிய 12 மெகாபிக்சல் கேமரா வசதி இந்த மாடலில் உள்ளது. தெளிவான செல்ஃபி எடுப்பதற்காக முதன்முறையாக ஆட்டோ-போகஸ் வசதி முன்புறமுள்ள கேமராவிலும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் மூன்று ட்ரில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் ஐபோனில் எடுக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஐபோன் 14 விலையானது அமெரிக்க மதிப்பில் 799 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 849 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 14 ப்ரோ

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் தொடுதிரையின் மேற்பகுதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ப்ளாக் நாட்ச் அம்சம் குறித்து ஐபோன் பயனாளர்கள் தொடர்ந்து குறைகூறி வந்த நிலையில், தற்போது டைனமிக் ஐலேண்ட் என்ற அம்சத்துடன் கூடிய தொடுதிரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்மைக்கு ஏற்ப நோட்டிஃபிகேசனின் வடிவங்கள் மாறிக்கொள்ளும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

 

டிம் குக்

பயன்பாட்டில் இல்லாதபோது மொபைல் திரையின் ஆற்றல் மற்றும் ரெஃப்பரஷ் ரேட் எனப்படும் புதுப்பிப்பு விகிதம் தானாக குறைவதும் இந்த மாடலில் உள்ள கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஊதா, கருப்பு, சில்வர், கோல்ட் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்ப்பட்டுள்ள இந்த மாடலின் விலை அமெரிக்க மதிப்பில் 999 டாலர்களாகவும், யூகே மதிப்பில்1099 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்பாட்ஸ்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஏர்பாட்ஸின் ஒரு பகுதி காணாமல் போனால் அதைக் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. உரையில் இருந்து ஏர்பாட்ஸ் தவறும்போது அது ஒலியெழுப்பும். கூடுதலாக ஏர்பாட்ஸ் உரையிலும் ஒரு ஸ்பீக்கர் இருக்கும். find my app மூலமாக காணாமல் போன ஏர்பாட்ஸை தேடும்போது அது ஒலியெழுப்பும்.

 

ஏர்பாட்ஸ்

பட மூலாதாரம்,APPLE

இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் மதிப்பானது அமெரிக்க மதிப்பில் 249 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 249யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62830537

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதால் அங்கும் கட்சிக்குள் குழப்பம் உண்டு.
    • இதைத் தான் நானும் யோசித்தேன். அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே. இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.
    • ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது…. ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣 ————————— கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்   2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்  5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்  6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை  7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்  8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை  9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை   11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை   14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்   16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை   18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை  19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம் 21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்   22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை   23. சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்   26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்.    வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)   27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1   29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2  30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1   31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3  32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3 33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5 34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12   35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2   36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0   37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன்   வினா 38 - 48 வரை  பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்).    38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி   40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி   41. கிளிநொச்சி தமிழரசு கட்சி 42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44. வவுனியா தமிழரசு கட்சி   45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46. பட்டிருப்பு தமிழரசு கட்சி 47. திருகோணமலை தமிழரசு கட்சி 48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி   51  - 52 வரை  வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை  பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்?    53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள்  1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும்.    53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54. தமிழரசு கட்சி 6 55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1   58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61   59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131   60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13    பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன். பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣. 
    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.