Jump to content

மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீர்த்தாங்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீர்த்தாங்கி

By VISHNU

20 SEP, 2022 | 09:44 PM
image

பாறுக் ஷிஹான்

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் அப்பகுதி  பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Farook_sihan10.JPG

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை  ஐஸ் வாடி கடற்கரை பகுதியில்  உள்ள நீர்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள்  இவ்வாறு இடிந்து விழும் நிலையில்  உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Farook_sihan07.JPG

கடந்த காலங்களில் மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனை சாய்ந்தமருது பகுதி மீனவர்களுக்கு தேவையான ஐஸ்கட்டி தேவைகள் இவ்வாடி ஊடாகவே பூர்த்தி செய்யப்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

F_SIHAN_116.jpg

இருந்த போதிலும்   குறித்த   பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள  நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளதுடன் ஐஸ் உற்பத்தி நிலையமும் செயலிழந்து காணப்படுகின்றது.

F_SIHAN_112.jpg

இந்நிலையில் குறித்த நீர்த்தாங்கியில் காணப்பட்ட பாரிய வெடிப்புகள் அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்ததுடன் அவை உடைந்து விழுந்துகொண்டுமிருந்தன. எனவே   நீர்த்தாங்கியை அகற்ற உரிய  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

F_SIHAN_115.jpg

மேலும் குறித்த நீர்த் தாங்கியில்  சந்தேகத்திற்கிடமாக பல பொருட்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.இதேநேரம் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மக்கள் குடியிருப்புக்கள் அதிகரித்து காணப்படுவதுடன் பள்ளிவாசல் மற்றும் கோயில்களுக்கு செல்பவர்களும் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

F_SIHAN_113.jpg

இது தவிர  பழுதடைந்த நீர்த்தாங்கி மற்றும் கட்டட இடிபாடுகள் சிதைவுகள்  இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அருகில் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களும் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

dgh__1_.jpg

இதே போன்று மன்னார் கொந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு  கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்த்தாங்கி ஒன்று  கடந்த 2021 ஆண்டு  நவம்பர் மாதம் 15 ஆந் திகதி  தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்தன.

F_SIHAN_111.jpg

பயன்படுத்தப்படாத நிலையில் வெடிப்பு ஏற்பட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக இந்த நீர்த்தாங்கி காணப்பட்டது.மக்கள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டு குறித்த நீர்த்தாங்கி தகர்க்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

https://www.virakesari.lk/article/136040

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை முசுலிம் பகுதி நரக சபைதானே...அதைப்போய் ...கரீனிடம் சொல்லி விழுத்தவும்..அவரு இப்ப அமைச்சரா..சம்பளமும் வேலையுமில்லாமல் இருக்கிறார்..

Edited by alvayan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

😀

ஆமா..

34 minutes ago, பெருமாள் said:

😀

ஆமா...தப்பில்லை..அனுபவித்த இடம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மனைவி தனது கைகளையும் கால்களையும்  கட்டிப்போட்டு  சிகரெட்டினால் தனது உடலை எரித்ததாகவும் கத்தியால் தனது  உறுப்புகளை வெட்ட முயன்றதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.கணவரின் புகாரின் பேரில்   பொலிசார் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.கடந்தவருடம் நவம்பர்  திருமணம் நடந்ததாகவும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது மனைவி மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் கண்டுபிடித்தார். மனைவி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதாக மனைவி மிரட்டியதாக கணவர் சொல்லியுள்ளார். https://www.freepressjournal.in/india/up-shocker-bijnor-woman-tortures-husband-with-cigarette-burns-on-private-parts-tries-to-chop-off-his-genitals-arrested  
    • "தளிராடும் தூறலில்"   "தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில்  துளிர்விடும் இன்பக் காதல் நினைவில்  ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில்  எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்!    குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!"   "எண்ண முடியா உடல் கவர்ச்சியும்  எண்ணம் புரியா மௌனத்தின் அழகும் வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும்  மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே!  விண்ணில் உன் முகம் தெரிகிறதே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 08     நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாக கூறுவர். உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில்: "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று பாடுகிறார், அதாவது கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியது என்கிறார்.   ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக் கொண்டாள் என பரிபாடல் 11 வரி 99 ,100 இல், "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, கொற் றவை கோலம் கொண்டு, ஓர் பெண்." என்று கூறுகி றது. முதல் பாடலில் அழகையும் இரண்டாவது பாடலில் அதற்கு ஒரு புராணத்தையும் காண்கி றோம்.   ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மை யடைந்த பெண் அரவணைத்து வழி நடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான், அப்பொழுது அவள் கொற்றவையாக ஒரு சுயாதீனமான தெய்வமாக இருந்தாள். ஆனால் அவள் பின்னர் சிவாவுடன் இணைந்தார் / விவாகம் செய்யப்பட்டார் அதற்கு ஒரு புராணமும் கற்பித்தார்கள் என்பதே உண்மை யாகும்.   பத்து பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையும் சூரர மகளிரின் (தெய்வ மகளிரின்) மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் தலை மாலை இருக்கும்படிக் கூந்தலின் மேல் அணிவித்திருந்தனர் என்பதை "பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் "என்று பாடுகிறது.   இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் [Ajna Chakra or third-eye chakra] என்கிறது யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் [seat of memory and thinking] உரிய இடம் இது வாகும். அதனால் தான், எம் மனம் துக்கம் அடையும் போது, தலைவலியும் அதிகரிக்கிறது எனலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது, இதனால் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது [prevent the loss of "energy"] என்கிறார்கள்.   அத்துடன் நாம் பொட்டு வைக்கும் பொழுது, அந்த இடம் அழுத்தப் படுகிறது. இது முகம் தசைகளுக்கு [face muscles] இரத்தம் வழங்க உதவுகிறது. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுவைப் [sticker Pottu/bindi] பயன் படுத்துதல், அழகு படுத்துவதை தவிர வேறு ஒரு பெரும் பயனையும் அளிக்காது. பொட்டு வைக்கும் அந்த இடத்தின் சிறப்பை திருமூலர் அருளிய திருமந்திரம், தனது பாடல் 666 இல்: "ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்",என்று அழகாக கூறுகிறார், அதாவது, உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும் என்கிறார். அதையே தமிழ் ஆய்வாளர், மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற 1922 ஆண்டு நூலில் :" புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடை வெளியில் உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது” என்கிறார்.   சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களும் பெண்களும் அன்று இடுப்பிற்கு மேல் ஆடை ஒன்றும் அணிவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக பல்வேறு வண்ணங்களில் நறுமணச் சாந்துகள் கொண்டு பொதுவாக மகளீர் தமது நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து கொண் டார்கள். அதை தொய்யில் எனவும் அழைப்பர்.   பச்சை குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற உடலோவியம் அதுவாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை - 276 இல், நான் இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப் பவர்கள் முற்றிலும் அறியார் என்ற "உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்" வரியும், அகநானூறு 239 இல், மகளிர் மார்பகத்தில் புள்ளியுடன் கூடிய தொய்யில் எழுதிக் கொண்டிருப்பர். அது அவர்கள் மேனியில் பொறிக்கப்பட்டிருக்கும் சுணங்கு [மகளிர் மேனி யில் தோன்றும் நிறப்பொலிவு அல்லது மேனிநிற மாற்றம்]. அணிகலன்களுடன் திகழ்வர். அவர்கள் வளரும் பிறை நிலாவைத் தொழும் மாலை நேரம். நான் இங்கே இருக்கிறேன் என்ற "புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம், புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய" வரியும் இதை உறுதி படுத்துகிறது.   அதே போல அழகுறப் பூங்கொடி வடிவில் எழுதியதை சோழர் காலத்தைச் சேர்ந்த பெருங்கதை யில்: “பழுதற அழகொடு புனைநலம் புனையாக் குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“ என்ற வரி மூலம் காண்கிறோம். எனவே இன்று மக்கள் தங்கள் உடலில் தற்காலிக அல்லது நிரந்தர பச்சை குத்திக் கொள்வதும் மருதாணி [Henna] இட்டுக் கொள்வதும், உடலில் தொய்யில் இடும் அல்லது ஓவியம் வரையும் பண்டைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும்.   இன்று கைவிரல்களிலும், கால்களிலும் மருதாணி பூசுவது ஒரு சிறப்பான பழக்கமாக திகழ்கிறது. இலையின் சாறினால் சிவந்த மரு [மச்சம் மாதிரி யான சிறு புள்ளி / Skin Tag] தோன்றுவதால் மருதாணிக்கு பழைய பெயர் மருதோன்றி ஆகும். என்றாலும் இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்தார்கள். எனவே, இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.   மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன் படுத்தினார்கள். இது எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டதும் ஆகும். சங்க காலத்தில் மருதாணியைப் பற்றிய குறிப்பு ஒன்றை பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் காண்கிறோம். அதில் "றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை, முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து" என்ற வரிகளில் எறிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள் என்கிறது. ஆனால் இதற்கு இன்னும் ஒரு பொருளாக, எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன எனவும் சிலர் கூறுவார். எனவே மெஹந்தி [mehandi] என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது என்பதே சரியாகும்.   மேலும் தமிழர்களுக்கு இடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெரும் வழக்கம் பாரம்பரியமாக இன்னும் தொடர்கிறது. ஒரு உதாரணமாக பெண்கள் கூந்தலில் மலர் சூட்டும் பழம் பழக்கத்தை பார்ப்போம்.   ஐங்குறுநூறு 93, பல மலர்கள் சூடிய ஒரு பெண் ணின் கூந்தலை சூழ்ந்து கொண்டு வண்டு மொய்ப் பதை, "பல் பொழில் தாது உண் வெறுக் கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே" என்று கூறுகிறது. அதே போல புறநானுறு 61, "கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்" என்ற வரிகளால் கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழை போடு கூடிய பூவைச்செருகியிருக்கும் உழத்தியர் என்கிறார்.   ஆனால் கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள். அந்த மரபு இன்னும் கிராமப்புறங்களில் அப்படியே காணப்படுகிறது. கைம்பெண் மட்டும் அல்ல அன்று கணவன் விலகி இருந்தாலும் மனைவி புது மலர் சூடாமல் இருப்பதை புறநானூறு 147 , உன் மனைவி தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வது தான் என பொருள்பட " அம் மா அரிவை, நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல், மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப், புது மலர் கஞல இன்று பெயரின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே" என்கிறார் புலவர்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    பகுதி: 09 தொடரும்          
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 21       சிங்கள அறிஞர் முதலியார் குணவர்தன, ஆனந்தா பாடசாலையில், 28.09.1918 , சிங்களத்தின் இலக்கணம் திராவிடம் என்கிறார் [Sinhala scholar Mudliyar Gunawardena at a lecture delivered at Ananda College on 28.09.1918 had stated "....the science of exmination of the structure of a sentence is called its grammar. The grammar of the Sinhala language is Dravidian...] பேராசிரியர் J. B. திஸ்ஸநாயக்க, தனது "சிங்களத்தை புரிந்து கொள்ளுதல் " என்ற புத்தகத்தில், பக்கம் 118 இல், தெற்காசியாவின் மொழிகளில், சிங்களம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அதற்க்கு காரணம் அது இந்தோ ஆரியன் மற்றும் தமிழுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு என்கிறார் ["Prof. J. B. Dissanayake in his book "Understanding the Sinhalese" at page 118 states "....Sinhala occupies a unique position among the languages of South Asia because of its close affinity, with two of the major linguistic families of the Indian sub continent Indo-Aryan and Dravidian..."].   இதில் இருந்த நாம் இலகுவாக ஊகிக்கலாம், சிங்கள எழுத்து கட்டாயம் ஆரிய மொழியும், திராவிட மொழியும் தெரிந்த ஒருவரோ அல்லது பலராலோ தான் உண்டாக்கப் பட்டு இருக்கும் என்பது. மேலும் அரபு நாட்டில் இருந்து இலங்கைக்கு ஏழாம் நூற்றாண்டில் குடியேறியவர்களின் சந்ததி, இன்று முஸ்லீம் என்றும் சோனகர் என்றும் அழைக்கப் படுபவர்கள், எல்லோரும் வீட்டில் தமிழ் பேசுபவர்களாகவே மாறினார்கள். காரணம் தமிழ் தான் அங்கு பாவனையில் இருந்துள்ளது. சிங்களம் அங்கு பாவனையில் இருந்து இருந்தால், கட்டாயம் சிங்களமே பேசி இருப்பார்கள் ?.   மற்றும் விஜயபாகுவின் அரச கட்டளைகள் (A.D. 1056-1111) சிங்களத்திலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத் தக்கது [Arab settlers came to Ceylon about 7th century A.D. Their descendants are now called Muslims and Moors. They learned Tamil because that would have been the language in use. Also Royal edicts of Vijayabahu (A.D. 1056-1111) were in Sinhala and Tamil]. இது விஜயபாகுவின் ஆட்சியில் பெரும் தொகையான குடிமக்களாக தமிழர்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.   தீபவம்சம், மகாவம்சம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், மகாவம்சம் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தமிழருக்கு எதிரான போக்கை கையாளுவதைக் காணலாம். உதாரணமாக, கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை ஆட்சி செய்த சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்களையும் தீபவம்சம் ராஜகுமாரர்கள் [princes] என கூறும் அதே வேளையில், அதற்குப் பிறகு எழுதப்பட்ட மகாவம்சம், அவர்கள் இருவரையும் குதிரை வியாபாரியின் மகன்மார்கள் [sons of a horse trader] என்றும், வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறது. இது, வரலாற்றில் எந்த பெரிய வேறுபாடு ? உங்களுக்கு தலை சுத்துகிறதா?   ஆனால் தீபவம்சம் அவர்கள் சோழநாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ வந்தவர்கள் என்று கூறவே இல்லை. அதே போல எல்லாளனை தமிழ் இளவரசன் என்றோ அல்லது சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றோ தீபவம்சம் கூறாத வேளையில், தீபவம்சத்தை 150 / 200 ஆண்டுகளின் பின் விரிவாக்கிய மகாவம்சம் முரண்பாடான கருத்தை அங்கு பதிவிடுகிறது. தீபவம்சம் தமிழர் விரோத வெறுப்பைக் பொதுவாக எங்கும் கக்கவில்லை. ஆனால் அது புத்த மாதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது.   அபய [Abhaya] அல்லது துட்டகைமுனுவின் தந்தையின் பெயர் காக்கவன்ன [Kakkavanna]. அதே போல வன்னியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் பெயர் பண்டாரவன்னியன், அவனை காட்டிக்கொடுத்தவனின் பெயர் காக்கவன்னியன். பெயர் காக்கவன்ன குரல் ஒலியில் காக்கவன்னியனுடன் ஒன்றாகிறது [phonetically similar]. அது மட்டும் அல்ல, தீபவம்சம் காக்கவன்னவுக்கும், மூத்தசிவ அல்லது தேவநம்பிய தீசனுக்கும் இடையில் என்ன உறவு என்று கூறவும் இல்லை.   மகாவம்சத்தில், சிங்கத்துடன் வங்க நாட்டு இளவரசி புணர்ந்து இரு மனித பிள்ளைகளை பெற்றார் என்றும், அந்த சகோதரங்கள் தங்களுக்குள் திருமணம் செய்து விஜயன் பிறந்தான் என்றும் கூறுகிறது. உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.   உதாரணமாக, சிங்கம் 36 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Lions have 36 chromosomes and humans have 46 chromosomes.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 38, 36 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும் , மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு பத்து ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது.   அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!   கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சாகசப் பெண்ணை [adventurous woman] சிங்கம் உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 22 தொடரும்          
    • மூன்று கிழமைக்கு மேல ஊர் போய் நின்று விட்டு, நேற்றுத் தான் திரும்பி வந்தேன். யாழில் சில இடங்களில் 300 ரூபா மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டும் இருக்கின்றேன். இது எந்தக் கடை என்று சொன்னீர்கள் என்றால், திருவிழா நாட்களில் மரக்கறி என்று நினைத்து மச்சம் சாப்பிட்டதற்கு மனதார மன்னிப்பு கேட்க வசதியாக இருக்கும். அங்கு கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலில், சாப்பாட்டில் புழு இருக்குதா, அசையுதா அல்லது சோற்றுப் பருக்கை அதுவா அசையுதா என்று பேதம் பிரித்து பார்க்கும் பொறுமையையும் இருக்கவில்லை........... என்ன வெயிலும், வெக்கையும்.......புழுக்கள் கூட அடுத்த கொஞ்ச நாட்களுக்கு பதுங்கி வாழ்வது தான் அவைக்கு பாதுகாப்பு.....      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.