Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் தொடர்வதற்கு நன்றி @ரஞ்சித். இந்தத் தொடரை ஆங்கிலத்தில் சங்கம் இணையத்தில் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருந்தேன். தமிழில் கட்டாயம் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.

  • Thanks 1
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரனின் வரலாறு.....
 

Remembering 1956 – Sri Lanka's first Anti-Tamil pogrom | Tamil Guardian

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்களை அவமானப்படுத்தவும் சிங்களக் காடையர்களை அரசு இறக்கியிருந்தது குறித்து பிரபாகரன் மிகுந்த விசனம் கொண்டிருந்தார். அதேவேளை இந்த திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது, வெறுமனே அகிம்சை ரீதியில் போராடலாம் என்று சொல்லிவந்த தமிழ்த் தலைமைகள் மீதும் அவருக்கு பாரிய அதிருப்தி ஏற்பட்டு வந்தது. ஆனால், அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வழி அவருக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அவர் அப்போது சிறுவனாக இருந்தது மட்டுமல்லாமல் அவரது தந்தையார் மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்தார். 

தனது சிறுவர்பராய வாழ்வு குறித்து இந்து ராமிடம் பிரபாகரன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்,

 

"சிறுபராயம் முதலே மிகவும் கண்டிப்பான முறையிலேயே நான் வளர்க்கப்பட்டேன். வெளியாருடன் அதிகம் நான் பழகுவதற்கு வீட்டில் அனுமதி இருக்கவில்லை. பெண்பிள்ளைகளைக் கண்டால் இயல்பாகவே நான் கூச்சப்படுவேன். நேர்மையினையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதென்பது வீட்டில் கட்டாயமாக இருந்தது. எனது தந்தையார் எமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தனது பிள்ளைகள் ஒழுக்கத்தில் சிறந்து வளரவேண்டும் என்பதற்காக வெற்றிலை போடுவது கூடத் தவறென்று அவர் கருதிவந்தார். அவரிடமிருந்தே நான் பல நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன். அவர் அரச உத்தியோகத்தில் இருந்தார். மாவட்ட காணி அதிகாரியாக பணிபுரிந்த அவர் நேர்மையாகத் தனது கடமையைச் செய்துவந்தார். அவர் வீதியால் நடந்துசெல்லும்போது வீதியில் முளைத்திருக்கும் சிறு புற்கூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார் என்று அயலவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவரது மகனான நான் இப்படி இருக்கிறேன்......எனது செயல்களை விமர்சிக்கும்போது கூட, இப்படியொரு தகப்பனுக்கு இப்படியொரு மகனா என்று வியந்து அவர் பேசியதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர் கண்டிப்பானவர்தான், இருந்தாலும் மிகவும் மென்மையான உள்ளத்தையும், மற்றையவர்களின் கருத்துக்களை செவிமடுத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருந்தார். என்னை ஒழுக்கத்தில் கண்டிப்புடன் வளர்த்தபோதும்கூட, ஒருகட்டத்தில் என்னைத் தனது நண்பனாகவே நடத்திவந்தார். எனக்கு அவ்வப்போது அறிவுரைகளைக் கூறிவந்தாலும், என்னுடன் பல விடயங்கள் குறித்து அலசுவது அவருக்குப் பிடித்திருந்தது" என்று கூறினார்.

 அவரது தாயாரும், மூத்த சகோதரிகளும் அவரைச் செல்லமாக "தம்பி" என்றே அழைத்து வந்தனர். 1994 இல் வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தனது சிறுபராய வாழ்வு குறித்து பசுமையான நினைவுகளை மீட்டிருந்தார் பிரபாகரன்.

 "வீட்டில் நான் அனைவரினதும் செல்லப்பிள்ளையாக, விரும்பப்பட்டவனாக இருந்தேன். எனக்காக பல கட்டுப்பாடுகள் வீட்டில் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. அயலில் உள்ளவர்களே எனக்கு விளையாட்டுத் துணையாகிப் போனார்கள். எனது வீட்டிற்குள்ளும், எனது அயலவர்களின் வீட்டிற்குள்ளும் எனது உலகம் சுருங்கிப் போனது. தனிமையான அந்தச் சிறிய வீட்டிற்குள்ளேயே எனது சிறுபராயம் கழிந்தது" என்று அவர் கூறினார்.

 

பிரபாகரனின் வீட்டு அயலவர்கள் அவரது சிறுபராயம் தொடர்பாக மிகவும் பாசத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அவர்களுக்காக அவர் ஓடியோடி வேலைகள் செய்து கொடுத்திருக்கிறார். தனது பேரனாரின் நினைவுதின அன்னதானச் சடங்குகளின்பொழுது பிரபாகரன் தானே முன்னின்று பல வேலைகளைச் செய்வது வழமை. அன்னதானத்திற்குச் சமூகமளிக்கமுடியாமற்போன அயலவர்களுக்கு பிரபாகரனே உணவுப் பொட்டலங்களிக் கொண்டுபோய் விநியோகித்துவருவார். அதேபோல வீட்டில் நடக்கும் விசேட நிகழ்வுகளின்போது தாயார் பார்வதியம்மாள் சமைக்கும் சுவையான தின்பண்டங்களை மகிழ்வுடன் அயலவர்களுக்குக் பகிர்ந்துகொடுப்பது பிரபாகரனுக்கு அலாதி பிரியம். கோயிலில் நடக்கும் பூஜைகளின்பின்னர் தனது உறவுகளுக்கும், அயலவர்களுக்கும் பிரசாதத்தினைக் கொண்டுவந்துகொடுப்பதும் அவருக்குப் பிடித்தமான இன்னொரு விடயம்.

பிரபாகரனின் வரலாறு.....

Nasteňka 🍃 no Twitter: "சிறுத்தையும் பம்மியதாம்... தமிழினத்தின் விடுதலை  புலியைக் கண்டு...!!!! பிரபாகரன்!! கரிகாலன் 💚 #Prabhakaran  #HBDPrabhakaran64 https://t.co/Sq1WwH9f7D" / Twitter

 

பிரபாகரனின் விருந்தோம்பல் வன்னிக் காட்டில் அவர் தனது தோழர்களுடன் ஒளிந்திருந்தபோதும் அவரை விட்டு விலகவில்லை. வன்னியில் அவரது வீட்டில் சமைக்கப்படும் விசேட உணவுவகைகள் அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். விடுதலை வேட்கை எனும் தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீட்டிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட விசேட உணவுவைகைகள் குறித்து அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் அதுகுறித்து எழுதும்போது, பிரபாகரனுக்குக் கோழிக்கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். தான் மரக்கறி வகைகளை மட்டுமே உண்டுவந்தபோதும், தனது கணவரான அன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் வீட்டுக் கோழிக்கறியை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார் என்று மேலும் அடேல் குறிப்பிட்டிருக்கிறார். மிகச்சிறந்த கெரில்லா ராணுவத்தின் தலைவராக பிரபாகரன் இருந்தபோதும், தனக்குப் பிடித்தமான மரக்கறி உணவுகளை அவர் விதம் விதமாக தயாரித்து அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்று அடேல் தொடர்ந்து எழுதுகிறார்.

 

tamil eelam « Velupillai Prabhakaran

 

பிரபாகரனின் உறவினர்களும், அயலவர்களும் அவரது தாயார் மிகச் சிறந்த ஒரு சமையல்க் காரர் என்று கூறுகின்றனர். அவரிடமிருந்தே விதம் விதமாகச் சமைக்கும் கலையினை பிரபாகரன் கற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பார்வதியம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003 இல் தமிழ்நாட்டில் தாம் தங்கியிருந்த திருச்சி வீட்டிலிருந்து சுமார் 19 வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பியிருந்தனர். 2002 இல் வேலுப்பிள்ளை மாரடைப்பால் அவஸ்த்தைப்பட்டிருந்தார். ஆகவே அவரைப் பராமரித்துக்கொள்வதற்கு கனடாவிலிருந்து பிரபாகரனின் சகோதரி வினோதினியும் கணவர் ராஜேந்திரனும் வந்து அவர்களுடன் தங்கியிருந்தனர். சமைப்பதில் பிரபாகரனுக்கும் அவரது சகோதரி வினோதினிக்கும் இடையில் எப்போதுமே ஒரு போட்டியிருக்கும். ஆனால் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியோ இப்போட்டியில் கலந்துகொள்வதில்லை. தனது தம்பி சமையலில் சிறந்தவன் என்று விட்டுக் கொடுத்து ஒதுங்குவதில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வார். என்னால் தம்பியுடன் ஒருபோதுமே போட்டி போட முடியாது, அவன் எப்போதுமே எனக்குச் செல்லத் தம்பிதான் என்று அவரது சகோதரன் மனோகரன் கூறுவார்.  

பிரபாகரன் ஒரு உணவுப் பிரியர். அசைவ உணவுகளென்றால் அவருக்குப் பிடித்துப் போகும். அதிலும் கோழிக்கறி அவருக்கு மிகவும் பிடித்தது. ஆனால், தற்போது அவருக்கு சீன உணவுவகைகளும் பிடிக்கிறதாம் என்று அடேல் கூறுகிறார். 

தனது போராளிகளுக்கு உணவைச் சிறந்த முறையில் தயாரிப்பதிலும், அதனை சுவைத்து உண்பதிலும் உள்ள நுணுக்கங்களை அவர் கற்றுத்தந்திருக்கிறார். அவரது போராளிகளில் ஒருவர் பிரபாகரனுடனான உணவுதொடர்பான சம்பாஷணை குறித்து விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.

 

"முல்லைத்தீவுக் காட்டிற்குள் நாம் முகாமிட்டிருந்த பகுதியை நெருங்கி இந்திய ராணுவம் முற்றுகை ஒன்றினைப் போட்டிருந்தது. உண்பதற்கு கெளப்பியைத் தவிர வேறு எதுவும் எம்மிடம் இருக்கவில்லை. நாம் கெளப்பியைத் திறந்த பானையில் வைத்து அவித்துக்கொண்டிருந்தோம். அடுப்பிலிருந்து பானையினை இறக்கும்போது, கை தவறி பானை சறுக்கிவிட,  சிறிது கெளப்பி நிலத்தில் சிந்திவிட்டது".

 "நான் பயந்துவிட்டேன். யாராவது கண்டால், தண்டனையாக ஒருவாரம் முழுதும்  சமைக்கும்படி ஆகிவிடும்.  ஆகவே நான் அவசர அவசரமாக மண்ணினால் சிந்தப்பட்ட கெளப்பியை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், தலைவர் அதனைப் பார்த்துவிட்டார். பிள்ளை என்று என்னை அழைத்த தலைவர், ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டார். அது எனது மதிய உணவுக்குப் போதுமானதே என்று கேட்டுக்கொண்டே நிலத்தில் சிந்தியதைப் பொறுக்கிக் கழுவத் தொடங்கினார். தனது கைகளிலிருந்த கெளப்பிய உண்டுகொண்டே, ஆறினாப் பிறகு மற்றவங்களுக்கும் கொடு என்று கூறிச் சென்றுவிட்டார். தலைவரைப் பொறுத்தவரை உணவு எப்போதுமே சுத்தமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும், அத்துடன் எதுவுமே வீணாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்" என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரனின் வரலாறு.....

Watch Kappallotiya Tamizhan | Prime Video

 

பிரபாகரன் சிறுபராயத்தில் மிகவும் விளையாட்டுத்தனமானவராக இருந்தார். தனது மூத்த சகோதரிகளுடன் விளையாட்டாகச் சீண்டுவது அவருக்குப் பிடித்திருந்தது. தான் பார்த்த நகைச்சுவையான படங்களிலிருந்து சில காட்சிகளை நடித்துக் காட்டி தாயாரையும் சகோதரிகளையும் மகிழ்விப்பது அவருக்குப் பிடிக்கும். தான் பார்த்த சிவாஜி கணேசனின் பராசக்தி படத்திலிருந்து சில வசனங்களை பேசிக் காட்டி அவர் ஒருமுறை வீட்டில் நடித்தார். அதேபோல வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜிக்கும் வெள்ளைக்காரத் துரைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையினையும் அவர் தனக்கே உரித்தான் பாணியில் பேசிக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இந்திய சுதந்திரப் போராட்டத்தினைத் தழுவி வெளிவந்த பல திரைப்படங்களும், தமிழரின் பாரம்பரியத்தை எடுத்தியம்பிய படங்களையும் அவர் விரும்பிப் பார்த்தார். இவற்றின்மூலமே தமிழர்களும் சுதந்திரம் அடையவேண்டும் என்கிற அவாவும், தமிழ்மீதான பற்றும் தனக்குக் கிடைத்தன என்று அவர் கூறியிருக்கிறார். கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய இருபடங்களும் அவரை வெகுவாகப் பாதித்திருந்தன. இவ்விரு படங்களும் அந்நியரின் அடக்குமுறைக்கெதிரான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினைக் கதையாகக் காண்பித்திருந்தன. இரண்டாவதாக, சிதம்பரனார் நடத்திய கப்பல் நிறுவனம் தொடர்பானது. இதில், அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிரான கருவியாக தமிழரின் கப்பலோட்டும் திறன் காட்டப்பட்டிருந்தது, இதுவே பிற்காலத்தில் பிரபாகரனும் கடல்ப்பலத்தில் அதிக ஈடுபாடு செலுத்தக் காரணமாகியிருக்கலாம். 

இன்று புலிகளுக்கு பல கப்பல்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன் படத்தின்மூலம் தமிழரின் கடற்பலம் குறித்த சரித்திரத்தை பிரபாகரன் அறிந்துகொண்டதனாலேயே தனது விடுதலை அமைப்பில் கடற்பிரிவு பலமானதாக இருக்கவேண்டும் என்று செயற்பட்டுவந்தார். தமிழரின் சரித்திரகாலப் பலம் மட்டுமல்லாமல், ஒளவையார் போன்ற படங்கள் மூலம் தமிழரின் இலக்கியத் தொன்மை பற்றியும் பிரபாகரன் அறிந்துவைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படங்களில் அவருக்கு கிளின்ட் ஈஸ்ட்வூட் நடித்து வெளியான கெளபாய் திரைப்படங்கள் பிடித்திருந்தன. 

The Battle Of Algiers, Cinematic Portrait Of The Algerian Revolution

அவர் போர் தொடர்பான திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்ப்பார். குறிப்பாக விடுதலைப் போராட்டம் ஒன்றுடன் தொடர்புடைய திரைப்படங்கள அவரை மிகவும் கவர்ந்திருந்தன. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் அலி எனும் பெண்போராளி உடலில் கட்டிய குண்டுடன் பிரஞ்சு ராணுவ முகாம் ஒன்றிற்குள் பாய்ந்து அதனை அழிப்பதுபோன்று படமாக்கப்பட்டிருந்தது. இக்காட்சி அவரை உற்சாகப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான பல திரைப்படத் தொகுப்புகள் அவரிடம் இருந்தன.

தமிழ் நாவல்களின் பொற்காலம் என்று கருதப்படும் 60 களிலும் 70 களிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய தமிழ்நாட்டின் வார சஞ்சிகைகள் தமிழ் சரித்திர நாவல்களைத் தொடராக பிரசுரித்து வந்திருந்தன. சிறுவயதிலிருந்தே நாவல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன் இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட தொடர்களை விரும்பிப் படித்து வந்தார். கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அகிலனின் கடல்ப்புறா, கெளசல்யனின் பாமினி பாவைகள், கலியப் பெருமாளின் கல்லுக்குள் ஈரம், ராஜாஜியின் மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நாவல்களை அவர் விரும்பிப் படித்தார்.

When Chola ships of war anchored on the east coast | Chennai News - Times  of India

சோழர்களின் கடல்ப் பலத்தையும், அதனைப் பாவித்து அவர்கள் கம்போடியா தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கைப்பற்றி அரசாண்டதையும் கடல்ப்புறா காவியமாகக் கூறுகிறது. தமிழர்களின் கடற்பலம் சோழர் காலத்திலேயே உச்சத்தினைத் தொட்டிருந்தது. சோழர்கள் தமது பிரதான கட்டளைக் கப்பலுக்கு கடல்ப்புறா என்றே பெயரிட்டிருந்தனர்.  கல்லுக்குள் ஈரம் எனும் நாவல், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் அகிம்சை வழிமுறையிலிருந்து விலகி ஆயுத முறையில் செயற்பட்ட ஒரு குழுவினர் சென்னை ஜோர்ஜ் கோட்டையினைத் தாக்கியதை நாவலாக வரைந்திருந்தது. இவையிரண்டுமே பிரபாகரனின் சிந்தனையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன.

வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழரின் சரித்திரகால பேரரசுகளையும் அவர்களது பெருமையினையும் இந்த நாவல்களூடாகவே தான் அறிந்துகொண்டதாகக் கூறியிருந்தார்.

"எனது மக்கள் இன்று தாம் அகப்பட்டிருக்கும் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலையாகி , தன்மானத்துடனும், கெளரவத்துடனும், விடுவிக்கப்பட்ட தமது பூர்வீகத் தாயகத்தில் வாழவேண்டும் என்கிற அடங்காத ஆசை இந்த நாவல்களைப் படித்த போதே ஏற்பட்டது. மேலும், எம்மை அடிமைப்படுத்தியவர்களுக்கு எதிராக நாம் ஏன் ஆயுதம் தூக்கக் கூடாது எனும் கேள்வியினையும் இந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தன" என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, மகாபாரதம் , இராமாயணம் போன்ற நாவல்கள் வாழ்வில் தான் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைக் கற்றுத்தந்ததாகக் கூறியிருந்தார்.

"பலனை எதிர்பாராது உனது கடமையினைச் செய் என்று பகவத் கீதை சொல்கிறது. இதனை மகாபாரதம் எனும் நாவலைப் படிக்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். இவ்வாறான மேன்மையான நாவல்களைப் படிக்கும்போது ஒரு மக்கள் கூட்டத்திற்காகத் தனது வாழ்வினை அர்ப்பணிக்கும் எவரும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தினை நான் உணர்ந்துகொண்டேன்" என்றும் அவர் கூறினார்.

மகாபாரத்தத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பலரும் பல கோணங்களின் தமது கருத்தினைக் கொண்டிருப்பார்கள். ஆனால், பிரபாகரனைப் பொறுத்தவரை கர்ணனின் பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. தியாகத்தின் வரைவிலக்கணமாகத் திகழ்ந்த கர்ண்னனின் பாத்திரம் அவருக்குப் பிடித்திருந்தது போலவே, பீமனின் அடக்கமும், சுயநலமற்ற குணமும் வருக்குப் பிடித்திருந்தன.

"தனது உயிரையே கொடுக்க முன்வந்த கர்ணனின் தியாகம் எனக்குப் பிடித்திருந்தது" என்று  அவர் கூறினார்.

ஒழுக்க சீலம் என்பது பிரபாகரனது தனிப்பட்ட வாழ்விலும், அவரால் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலும் மிக முக்கியமானதாக இருந்தது. தன்னை ஒரு ஒழுக்கமான பாடசாலையின் அதிபராகப் பார்ப்பதாக அவர் ராமிடம் கூறியிருந்தார்.

"ஒரு பாடசாலையின் அதிபர் கட்டுக்கோப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவாராக இருந்தால், அவரிடம் கல்விகற்கும் பிள்ளைகளும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதோடு, வாழ்விலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதை நீங்கள் எங்கும் காணலாம். பல பாடசாலைகளின் மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அப்பாடசாலையின் ஆசிரியர்களும், அதிபரும் சிறந்த ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பதால் தான். அவ்வாறான அதிபர் ஒருவரிடம் கல்விகற்ற பல தலைமுறை மாணவர்கள் வாழ்வில் சிறந்துவிளங்குவதை நீங்கள் பார்க்கலாம். அதே கொள்கையினைத்தான் நாம் எமது இயக்கத்திற்குள்ளும் வளர்த்து வருகிறோம். அதனாலேயே ஒழுக்கம் தொடர்பாக மிகுந்த சிரத்தையெடுத்து வருகிறோம்" என்று அவர் ராமிடம் கூறினார்.

அதே செவ்வியில் பேசிய பிரபாகரன், தாம் ஒழுக்கத்தினைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கு இரு பிரதான காரணங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். "முதலாவதாக, புலிகளின் உறுப்பினர் ஒருவர் மக்களுக்காகவே போராட வந்தவர். அவ்வாறான ஒருவர் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவாராக இருந்தால், அவர் மக்களின் எதிரியாக மாறிவிடுவார். இதனால் நமது போராட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு நாளடைவில் இல்லாமப் போய்விடும்இரண்டாவதாக, சமூகத்தில் ஆயுதங்களுடன் உலாவருபவர்களுக்கு அதீதமான பலமும் அதிகாரமும் கைகளுக்கு வந்துவிடுகிறது. ஆகவே, இவ்வாறான அதிகாரமும் பலமும் போராளிகளை தவிர்க்கமுடியாமல் சர்வாதிகாரிகளாக மாற்றிவிடக்கூடியன"  என்று அவர் கூறினார்

அவரது குடும்பம் ஆனந்த விகடன் , கல்கி ஆகிய சஞ்சிகைகளை வாங்கியபோது, அயலவர்கள் கலைமகள், குமுதம், கல்க்கண்டு ஆகியவற்றினை வாங்கியிருந்தனர். வீட்டில் செய்யும் வேலைகளுக்காக, சிறு உதவிகளுக்காக கைப்பணமாகத் தனக்குக் கிடைக்கும் சிறியதொகைப் பணத்தினைக் கொண்டு பிரபாகரன் காலைக்கதிர் எனும் மாதாந்த விஞ்ஞான வெளியீட்டையும், மஞ்சரி எனும் மாதாந்த செய்தித் தொகுப்பையும் வாங்கிப் படித்தார். ஊரின் ஓரத்தில் இருந்த சிறிய புத்தகசாலையில் இவற்றை அவர் வாங்கிவந்தார். இயல்பாக சிறுபராயத்திலிருந்து புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன், குறிப்பாக சரித்திர நாவல்களையும், சரித்திர நிகழ்வுகளையும், சரித்திர நாயகர்களின் சரிதைகளையும் பெரிதும் விரும்பிப் படித்தார்.

 "புத்தகங்கள் மூலமே நெப்போலியன், அலெக்ஸாண்டர் ஆகியோரின் மகத்தான திறமைகளையும், வெற்றிகளையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. புத்தகங்கள் வாயிலாகவே இந்தியச் சுதந்திர போராட்ட வீரர்களான சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங், பாலகெங்காதரா திலக் ஆகியோர் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறான புத்தகங்கள் ஊடாகவே ஒரு புரட்சியாளானாக எனது வாழ்வினை அமைத்துக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது மனதினுள் உழன்றுகொண்டிருந்த அந்நியருக்கெதிரான விடுதலைப் போராட்டத்தினை வெளியே கொண்டுவந்து அதனை நனவாக்குவதில் இந்தியச் சுதந்திர போராட்ட வரலாறும், நாயகர்களும் பாரிய தாக்கத்தினைச் செய்திருக்கின்றனர்" என்றும் அவர் கூறினார்.

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

On Subash Chandra Bose's 121st birth anniversary; check out 10 patriotic  quotes by him

 

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பிரபாகரன் அதிக மதிப்பு வைத்திருந்தார். இவர்களுள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர் சுபாஸ் சந்திரபோஸ்தான் என்றால் அது மிகையில்லை. ஆயுத ரீதியிலான எதிர்ப்பு, ஜேர்மனுக்கு தப்பியோடியது, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பானை சென்றடைந்தது, அங்கிருந்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஜப்பானியர்களின் உதவியுடன் இந்தியா நோக்கி படை நகர்த்தியது என்று சுபாஸ் சந்திரபோசின் அனைத்து நடவடிக்கைகளும் பிரபாகரனுக்கு ஊக்கம் கொடுத்திருந்தன. தனது போராட்டத்திற்கு அவரையே பிரபாகரன் நாயகனாகவும் வரிந்துகொண்டார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுபாஸ் சந்திரபோஸின் கூற்று அவரைக் கட்டிப்போட்டிருந்தது, "எனது உடலின் இறுதிச் சொட்டு இரத்தம் இந்த மண்ணில் சிந்தும்வரை இந்த மண்ணின் விடுதலைக்காக நான் போராடிக்கொண்டிருப்பேன்" என்பதுதான் அது.

வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறும்போது,

"எல்லாவற்றிற்கும் மேலாக சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது, நான் செல்லவேண்டிய பாதையினை அது எனக்கு வகுத்துக் கொடுத்தது. அவரது ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையும், இலட்சியத்தை அடைவதில் அவருக்கிருந்த அசைக்கமுடியாத உறுதியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்ததுடன் எனக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும் மாறிவிட்டன" என்று கூறுகிறார்.

பிரபாகரன் மேலெழுந்தவாரியாக ஒரு புத்தகத்தைப் படிப்பவர் அல்லர். முன்னட்டையிலிருந்து பின்னட்டைவரை ஒரு புத்தகத்தை முழுவதுமாகப் படித்து அதனுள் தன்னை முற்றிலுமாக தொலைத்துவிடுவதில் அவர் வல்லவர். ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் ஏன், எதற்காக, இது எப்படி நடந்தது எனும் கேள்விகள் அவருக்கு எப்போதுமே எழுந்துகொண்டிருக்கும். 

ShankarRajee - Twitter Search / Twitter

புலிகளுடன் முரண்பட்டிருந்த இன்னொரு தமிழ் போராளிக்குழுவான ஈழப் புரட்சிகர் மாணவர் அமைப்பு (ஈரோஸ்) எனும் இயக்கத்தின் தலைவரான சங்கர் ராஜி பிரபாகரன் குறித்துப் பேசும்போது, பிரபாகரனை தனக்கு 70 களின் ஆரம்பத்திலிருந்தே நன்றாகத் தெரிந்திருந்தது என்றும், தான் படிக்கும் புத்தகத்தினுள் முற்றாக தன்னை அமிழ்த்தி எடுப்பதென்பது என்பது பிரபாகரனின் இயல்பு என்றும் கூறுகிறார். பிரபாகரனின் அறையில் தான் கண்ணுற்ற புத்தகங்களை அவர் நினைவுகூரும்போது சேகுவேரா, பிடெல் காஸ்ட்ரோ, ஹோ சி மின், மாவோ சேதுங் ஆகியோர் பற்றிய புத்தகங்களைத் தான் பார்த்ததாகக் கூறுகிறார். வியட்நாமிய, சீன விடுதலைப் போராட்டங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த அபிமானம் கொண்டிருந்ததாகக் கூறும் சங்கர் ராஜி பிரபாகரனின் அறையில், "நீயாகவே பழகிக்கொள்" எனும் தலைப்பில் சில புத்தகங்கள் இருந்ததையும் தான் கண்டதாகக் கூறினார். அவற்றில் குறிப்பிடத் தக்கது, "குறிபார்த்துச் சுடுவது எப்படி" எனும் புத்தகம் என்பதையும் அவர் கூறத் தவறவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அவரது கல்வி

Prabhakaran – Eelamaravar

தானாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை.

பாடசாலையில் மிகவும் கலகலப்பாக இருந்த பிரபாகரன் பாணந்துறையில் சைவப் பூசகர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக மிகுந்த வருத்தம் அடைந்திருந்ததாக அவரது பாடசாலை நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். தற்போது கொழும்பில் செல்வந்த வர்த்தகராக இருக்கும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், "அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறுகிறார். வீட்டில் தனது தகப்பனாரோடு தான் பேசும் அரசியல் சார்ந்த விடயங்களை தனது பள்ளி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பிரபாகரன் தவறுவதில்லை.

பாடசாலையிலிருந்து வீடு வரும்வழியில் அவருக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருந்தது. அதுதான் கவணில் கல்லுவைத்து இலக்கு நோக்கி எறிவது. மாம்பழங்களையும், விளாம்பழங்களையும் அவர் கவனால் சுட்டு வீழ்த்துவதில்  கைதேர்ந்தவராக இருந்தார். தனது நண்பர்களிடம் கல்லொன்றை மேலே எறியச் சொல்லிவிட்டு அதனை கவனால் இலக்குவைத்து எறிந்து பழகுவார். அவ்வப்போது சில அணில்களும் அவரது கவனுக்கு இரையாகியிருக்கின்றன.

வல்வை சிதம்பராக் கல்லூரியில் அவருக்குக் கல்விகற்பித்த பல ஆசிரியர்கள் அவர் பற்றிக் கூறும்போது அவர் வகுப்பில் சராசரி மாணவனாகவே கல்வியில் விளங்கியதாகக் கூறினார்கள். தான் கற்கும் புத்தகக் கல்வியினை விட அரசியலிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதை தாம் அவதானித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தனது மகனை கட்டிட பொறியியலாளனாக உருவாக்க நினைத்த வேலுப்பிள்ளைக்கு பிரபாகரனின் பாடசாலைக் கல்வியின் தரம் கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அதனால், அவரின் கல்வியறிவினை மேம்படுத்த  வல்வை கல்வியியல் நிறுவனம் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 8 ஆம் வகுப்பில் கல்விகற்ற வந்த அவருக்கு அப்போது 14 வயது. அங்கேதான் பிரபாகரனுக்கு வேணுகோபால் எனும் ஆசிரியரின் சிநேகம் கிடைத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவின் அங்கத்தவராக இருந்த வேணுகோபால், பிரபாகரனுக்குத் தமிழ் சொல்லித் தந்தார். அடிக்கடி அரசியல் பேசும் வேணுகோபாலுக்கு ஒரு கவலை இருந்தது. அதுதான் சமஷ்ட்டிக் கட்சியினரின் அரச எதிர்ப்பு என்பது உயிர்ப்புடன் இல்லையென்பது. அக்காலத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து வேணுகோபால் சுயாட்சிக் கழகம் எனும் தீவிர சுயாட்சிக் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார். இவர்களது தீவிர அரசியல் கண்ணோட்டத்தினால் சம்ஷ்ட்டிக் கட்சியிலிருந்து வேணுகோபாலும் அவரது நண்பரும் விலக்கப்பட்டிருந்தார்கள்.

தனது தமிழ் ஆசானான வேணுகோபால் தனது அரசியல் வாழ்வில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாக பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.

"ஆயுதப் போராட்டமே தமிழருக்கான ஒரே தீர்வு எனும் நம்பிக்கையினை என்னில் முதன்முதலில் ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் வேணுகோபால் தான். எனது கிராமம் ஒவ்வொருநாளும் ராணுவ அழுத்தத்தினைச் சந்தித்து வந்தது. உலகின் பல நாடுகளிலும் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் மக்கள் கூட்டங்கள் பற்றி என்னுடன் பேசும் அவர், பாராளுமன்ற அரசியலினால் எதனையும் சாதிக்க முடியாது எனும் கருத்தினை தீவிரமாக முன்வைத்து வந்தார். 14 வயது நிரம்பிய எனக்கும் நாமும் எம்மை தயார்ப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அத்துடன், தமிழர்களுக்கென்று தனியான நாடு நிச்சயம் எமக்கு வேண்டும் என்கிற உணர்வும் அப்போதிருந்து எனக்கு ஏற்பட்டிருந்தது".

 

தனது தீர்மானத்தில் உறுதியான பிரபாகரன்

தமிழர்கள் திருப்பித் தாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று பிரபாகரன் கொண்டிருந்த கருத்தினை வேணுகோபால் ஆசிரியரின் பாராளுமன்ற அரசியலால் தமிழருக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்கிற கருத்து மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. 14 வயதே நிரம்பியிருந்த பிரபாகரன் எனும் அந்தச் சிறுவன் ஆயுதப் போராட்டத்திலும், தனிநாட்டிற்கான தேவையிலும் மேலும் மேலும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்.

திரு வேணுகோபால் இருவகையான கருத்தாடல்களை முன்வைத்தார். முதலாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தனியான தேசம் ஒன்றிற்கு சொந்தக்காரர்கள். ஒரு தனியான தேசம் ஒன்றிற்கான சகல இலக்கணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான அடையாளம், தனித்துவமான மொழி, மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு, தனியான பூர்வீகத் தாயகம் மற்றும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தமது அடையாளத்தை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத அவா ஆகியன தமிழர்கள் தமக்கான தேசம் ஒன்றிற்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் வாதிட்டார். தமது அடையாளத்தை எவ்விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சரித்திர காலத்திலிருந்து அவர்களின் தாயகம் மீது நடத்தப்பட்ட பல சிங்களப் படையெடுப்புக்களை அவர்கள் தோற்கடித்து வந்ததுடன், அவற்றிற்கான முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்தும் வந்திருந்தனர். சில சமயங்களில் தெற்கிலிருந்து தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட பல சிங்கள படையெடுப்புக்களை தோற்கடித்து தெற்குநோக்கியும் தமது தாயகத்தை சற்றே விரிவுபடுத்தியும் இருந்தனர்.

வேணுகோபால் முன்வைத்த இரண்டாவது கருதுகோள், பாராளுமன்ற அரசியலினை நம்பி அன்றைய தமிழ்த் தலைமை முன்னெடுத்துவரும் எந்த நடவடிக்கையும் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனால், தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு ஆயுதப் போராட்டமே என்பதுதான்.

தனது மாணவர்களிடையே பேசும்போது வேணுகோபால் ஒரு விடயத்தினை அடிக்கடி முன்வைத்து வந்தார். அதாவது, பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைப் பாவிப்பதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மயான இனம் தனது நிலையினை ஸ்த்திரப்படுத்தி ஏனைய சிறுபான்மையினங்களை அடக்கியாண்டு அடிமைப்படுத்தி விடும் என்றும், இதற்கு இலங்கையே சிறந்த உதாரணம் என்றும் கூறிவந்தார்.

தமிழரின் நிலங்களை பலாத்காரமாக வல்வளைத்து அவற்றில் தனது இனமக்களை குடியேற்றிய சிங்கள அரசுகள், அப்பகுதியின் தேர்தல் வாக்கு பலத்தைத் தமக்குச் சார்பானதாகவும் மாற்றிக்கொண்டனர். பாராளுமன்றத்தில் உள்வாங்கப்படும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையினைத் திட்டமிட்டுக் குறைப்பதன்மூலம், அரசாட்சியில் தமிழரின் பங்களிப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. அத்துடன், சுமார் 10 லட்சம் மலையகத் தமிழரின் வாக்குரிமையினைப் பறித்ததன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியதோடு, அரசியல் அநாதைகளாகவும் மாற்றிவிட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக, சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று சட்டம் கொண்டுவந்ததோடு, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைச் சிதைத்து, அரச உத்தியோகஸ்த்தர்களாக வர விரும்பின் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்கவேண்டும் எனும் சட்டத்தையும் கொண்டுவந்தனர்.

எதிர்பார்த்ததைப்போலவே உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஆகிய இனவாத நடவடிக்கைகளை தமிழர்கள் முழுமூச்சாக எதிர்த்தனர். தமிழரின் அகிம்சை ரீதியிலான போராட்டங்களை அரசு ஒருங்கமைக்கப்பட்ட சிங்களக் காடையர் கூட்டங்களைக் கொண்டும், அரச ராணுவத்தினரைப் பாவித்தும் ஆயுதமுனையில் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வந்தது. தமிழர்களால் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட காலிமுகத்திடல் சத்தியாக் கிரக நடவடிக்கையினை அரச ஆதரவுபெற்ற சிங்களக் காடையர்களை அனுப்பி கலைத்தததுடன், தமிழர்கள் இனிமேல் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை, குறிப்பாக தலைநகர் கொழும்பில் செய்வதற்கான எண்ணங்களையும் முற்றாகவே அடித்து நொறுக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் எந்தவொரு பிற்கால ஜனநாயக ஆர்ப்பாட்டமும் மிகவும் மூர்க்கத்தனமாக சிங்கள அரசுகளால் அடக்கப்படும் எனும் எச்சரிக்கையினையும் இந்த அராஜகம் மூலம் சிங்கள அரசு விடுத்திருந்தது.

சமாதான முறையில் பொதுமக்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது எனும் பிரகடனத்தை 1961 ஆம் ஆண்டிலிருந்து மேலும் 5 வருடங்களுக்கு அப்போதைய அரசு நீடித்தது. இந்தச் சட்டம் தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் கொண்டுவரப்பட்டதுடன், இந்தச் சட்டத்தை நிலைநாட்டவென பெருமளவு சிங்கள ராணுவமும் தமிழரின் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படது. இதே வருடத்தில் சமஷ்ட்டிக் கட்சியின்  தலைவர் செல்வநாயகம் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக அமைதிவழிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தமிழர் தாயகத்தில் ஐந்து அரச கச்சேரிகளுக்கு தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியில் தமது அலுவல்களைச் செய்வதற்குச் செல்வதனைத் தடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களுக்கு முன்னால் தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திய சிங்கள அரசு, ஊரடங்கு உத்தரவினையும் பிரயோகித்தது. அவசர காலச் சட்டத்தின் அதிகாரங்களைப் பாவித்து இந்த அமைதிவழி ஆர்ப்பாட்டங்களை ராணுவத்தைக் கொண்டு மிகவும் கொடூரமாக அடக்கிய அரசு, பல தமிழ் அரசியல்த் தலைவர்களையும் சிறையில் அடைத்தது.

S.J.V.Chelvanayagam Q.C. – Thanthai Chelva | EelamView

1961 ஆம் ஆண்டு திருகோண்மலையில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா, தம்பையா ஏகாம்பரம், ராஜவரோதியம் ஆகியோர்.

 

பாராளுமன்றத்திற்கு வெளியேயான அமைதிவழி ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் உரிமை தமிழ் மக்களிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றம் ஊடாக தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கனவும் சிங்களவர்களால் மிகவும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்களால் இருவேறு சிங்கள அரச தலைவர்களின் சம்மதத்துடன்  செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. 1957 இல் செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்துகொண்ட ஒப்பந்தம், தனது வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெளத்த துறவிகளுக்குப் பயந்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதன் அடையாளமாக பெளத்த துறவிகளின் முன்னிலையில் தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலத்தை  பண்டா சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தெறிந்து, பெளத்த துறவிகளுக்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அவ்வாறே, 1965 இல் செல்வாவுடன் டட்லி சேனநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. 3 வருடங்கள் ஆகியும் ஏன் ஒப்பந்தத்தில் நீங்கள் ஒத்துக்கொண்ட விடயங்களை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தந்தை செல்வா டட்லியிடம் கேட்டபோது, "பெளத்த துறவிகளின் எதிர்ப்பினை மீறி இந்த ஒப்பந்தத்தினை என்னால் நடைமுறைப்படுத்த முடியாது" என்று மிகச் சாதாரணமாக டட்லி கூறினார்.

பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு சிங்கள அரசுகளை பதவியில் அமர்த்தியும், தேவைப்படின் பதவியிலிருந்து அகற்றியும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று தந்தை செல்வா முன்னெடுத்த எந்தச் சதுரங்க ஆட்டமும் வெற்றியளிக்கவில்லை. 1960 இல் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்ட செல்வா அவர்கள், டட்லியின் அரசை வீட்டிற்கு அனுப்புவதன் மூலம் சுதந்திரக் கட்சியின் தலைமையில் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம், அவர்களின் அவலங்களைத் தீர்த்துவிடலாம்  என்று நம்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியின் புதிய பிரதமர் சிறிமா, ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். அத்துடன் நின்றுவிடாமல், தனிச்சிங்களச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போவதாக சூளுரைத்தார். 1965 இல் கட்சி மாறிய தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க மீண்டும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், மீண்டுமொருமுறை அவர் சிங்களத் தலைவர்களால் எம்மாற்றப்ப்ட்டுப் போனார்.

 இந்த அரசியல் ரீதியான தமிழரின் நடவடிக்கைகளின் படு தோல்வியினை அடிக்கடி விமர்சித்து வந்த வேணுகோபால், பாராளுமன்ற அரசியலோ, அமைதிவழி ஆர்ப்பாட்டங்களோ தமிழரின் அவலங்களுக்கு ஒருபோதுமே தீர்வாக அமையப் போவதில்லை என்று தனது மாணவர்களிடம் கூறிவந்தார்.

 

"பாராளுமன்ற ஜனநாயகத்தின்மூலம் உலகின் எந்தவொரு இனச் சிக்கலும் இதுவரை கெளரவமாகத் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆயுதப் போராட்டங்களின் மூலமே இனப்பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, பாராளுமன்றம் மூலமான அரசியல்ச் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை" என்று கூறிவந்திருந்தார் வேணுகோபால்.

Edited by ரஞ்சித்
தானாகவே
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ரஞ்சித் said:

தனாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை.

ஏன் போராட்டம் தொடங்கியது? பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு வெட்டுப்புள்ளி முறையை அமுல்படுத்தியது தான் என்று பலர் சொல்வார்களாம்.

ஆனால் தலைவர் பலதடவை இந்த பல்கலைக்கழக பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிரித்து சிரித்துக் கொண்டே கூறுவாராம்.

இதை ஒருவரிடமல்ல பலதடவைகள் பலரிடமும் இப்படி கதைத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் போராட்டம் தொடங்கியது? பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு வெட்டுப்புள்ளி முறையை அமுல்படுத்தியது தான் என்று பலர் சொல்வார்களாம்.

ஆனால் தலைவர் பலதடவை இந்த பல்கலைக்கழக பிரச்சனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிரித்து சிரித்துக் கொண்டே கூறுவாராம்.

இதை ஒருவரிடமல்ல பலதடவைகள் பலரிடமும் இப்படி கதைத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்கு முன்னரே தமிழர் மீதான ஆக்கிரமிப்பை சிங்கள அரசுகள் ஆரம்பித்துவிட்டன அண்ணா. சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், தனிச்சிங்களச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் என்று பல முனைகளில் ஆக்கிரமிப்பை அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆகவே, வெறும் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி பிரச்சினைக்காகத்தான் தலைவர் போராடத் தொடங்கினார் என்று கருதுவது சரியான கருத்தாக இருக்க முடியாது.

Edited by ரஞ்சித்
ல்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேர வெடிகுண்டு

Bottle bomb hi-res stock photography and images - Alamy

 

தனது சிறுபராயத்திலிருந்தே ராணுவத்தினரின் பிரசன்னத்தையும், அத்துமீறலையும் பிரபாகரன நன்கு அனுபவித்து உணர்ந்திருக்கிறார். அவரது கிராமமான வல்வெட்டித்துறை ராணுவத்தின் அக்கிரமங்களைத் தொடர்ச்சியாக சந்தித்தே வந்திருந்தது. சுற்றிவளைப்புக்கள், தேடுதல் வேட்டைகள், பணப்பறிப்புகள், கைதுசெய்தல்கள், சித்திரவதைகள் என்று அக்கிராம மக்கள் ராணுவத்தினரின் கொடூரத்தை தினசரி சந்தித்தே வந்தனர். அதனால், அம்மக்களால் ராணுவம் வெறுக்கப்பட்டது. சிறுவர்கள் ராணுவத்தை அச்சத்துடனும், வெறுப்புடனும் பார்த்தனர். ராணுவம் மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு காலத்திலேயே தான் வளர்ந்ததாகக் கூறும் பிரபாகரன், தமிழ் மக்களை தொடர்ச்சியாக துன்புறுத்திவரும் ராணுவம் மீது தனக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டு இருந்தது என்று கூறுகிறார்.

பிரபாகரனுக்கு 6 வயது நிரம்பியிருந்த நிலையில் அவரது ஊரான வல்வெட்டித்துறையில் அப்பாவி இளைஞர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரைக் காயப்படுத்தியிருந்தது. அதே நாளான சித்திரை 14 இல் பருத்தித்துறைப் பகுதியில் ஒரு இளைஞரைக் கொன்றும் இன்னும் இருவரைக் காயப்படுத்தியும் இருந்தது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை ராணுவம் கைதுசெய்து இழுத்துச் சென்றதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமிழ் இளைஞர்கள் ராணுவ வண்டி ஒன்றின்மீது கல்லெறிந்ததே ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாகியதென்று கூறப்பட்டது. ராணுவத்தின் தாக்குதல்களில் காயப்பட்டுக் கிடந்த இளைஞர்களின் வீட்டிற்குப் பிரபாகரனும் சென்றிருந்தார்.

காலம் காலமாக சிறுவர்கள விளையாடிவரும் திருடன் - பொலீஸ் விளையாட்டிற்குப் பதிலாக வல்வெட்டித்துறையில் தமிழ்ச் சிறார்கள் புதிய விளையாட்டொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். விளையாட்டுக் கைத்துப்பாகிகளை தமது இடுப்பிற்குக் கீழ் மறைத்தபடி மறைந்திருந்து கெரில்லாக்கள் ராணுவத்தினரைத் தாக்குவது போன்று அவர்கள் விளையாடினார்கள். தனது நண்பர்களுடன் இவ்விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பிரபாகரன், கெரில்லா குழுவின் தலைவனாக தன்னை எப்போதுமே நினைத்துக்கொண்டு விளையாடுவார். தனது குழுவிற்கான மறவிடம், அவர்களுக்கான பயிற்சிகள், தாக்குதலுக்கு தயார்ப்படுத்தல் என்று தனது சிறுவயதிலேயே இந்தச் செயற்பாடுகளை விளையாட்டிலேனும் அவர் செய்துவந்தார்.

ராணுவத்தின் மீதான பிரபாகரனின் வெறுப்பென்பது ஆசிரியர் வேணுகோபாலின் அறிமுகத்தின் பின்னரே இரட்டிப்பாகியது. அரசியல் ரீதியில் மும்முரமாக பிரபாகரன் செயற்படத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களில் அவர் தவறாது கலந்துகொண்டதோடு, சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர்களையும் இடையிடையே சந்தித்து வந்தார். தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் ஒற்றைக்கேள்வியுடன் அவரது சம்பாஷணை முற்றுப்பெறும், "நாம் திருப்பியடிக்க முடியாதா?" என்பதுதான் பிரபாகரனுக்கிருந்த ஒரே கேள்வி.

சிங்களவர்கள் தமிழர்களை எவ்வாறெல்லாம் வதைத்தார்கள் என்று தான் கேள்விப்பட்ட விடயங்களை தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்ச்சியாக பிரபாகரன் பேசிவந்தார். மேலும், அமிர்தலிங்கத்தின் அரசியல்க் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்த பிரபாகரன், ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே தமிழருக்கு இருக்கும் ஒரே வழியென்று அமிர் பேசிவந்ததுகுறித்தும் பிரபாகரன் நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

"சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை பிரபாகரன் வாசித்து வந்தார். அப்புத்தகம் பற்றி எம்மிடம் பேசிய பிரபாகரன் சைவ இளைஞர்கள் மதத்தினைக் காக்க ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். நாம் அவரைப் பார்த்து நீ சுவாமி விவேகானந்தரைப் பிந்தொடரப்போகிறாயா என்று கிண்டலடித்தபோது, இல்லை,  தமிழ் மக்களின் அவலங்களை அகற்றுவதே எனது தலையாய கடமை. அதற்கு முன் இந்த ராணுவ அடக்குமுறையினை நாம் அழிக்கவேண்டும் " என்று தம்மிடம் கூறியதாக இன்று அவுஸ்த்திரேலியாவில் வசித்துவரும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் ராணுவ அட்டூழியங்கள் பற்றியும், அவற்றைத் தடுக்க தாம் போராட வேண்டிய தேவைபற்றியும் பேசினார்கள். "நீங்கள் சுலோகங்களை உச்சரித்துக்கொண்டு அவர்கள் முன்னால் சென்று நிற்கமுடியாது. அவர்கள உங்களை தாக்குவார்கள். ஆகவே நீங்களும் திருப்பித் தாக்க வேண்டும், அப்போதுதான் எம்மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் நிறுத்துவார்கள்" என்று பிரபாகரன் கூறவும், அவரைச் சுற்றியிருந்த நண்பர்களும் அதனை ஆமோதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவதற்கு தமக்கு ஆயுதங்கள் தேவையென்பதையும் அவர்கள் அப்போது உணரத் தொடங்கியிருந்தனர்.

வெடிகுண்டுகளை எப்படித் தயாரிக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் பிரபாகரனும் அவரது தோழர்களும் இறங்கினர். தமக்கு அதிக இழப்பின்றி தாக்குதலை நடத்துவதற்கு சரியான ஆயுதம் நேரம் குறித்து வெடிக்கும் குண்டுதான் என்று பிரபாகரன் கருதினார். பட்டாசுகளில் வேறு இரசாயணத் திரவியங்களைக் கலப்பதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரிக்கமுடியுமா என்று அவர்கள் முயன்றனர். பின்னர் பாடசாலை இரசாயண ஆய்வுகூடத்திலிருந்து தாம் எடுத்துவந்த இரசாயணங்களை வெற்றுப் போத்தல்களில் அடைத்து அவற்றை சக்கைகள் கொண்டு மூடினர். சக்கைகளினூடு திரியொன்றைச் செலுத்தி அப்போத்தல் வெடிப்பதற்கான வழியையும் அவர்கள் ஏற்படுத்தினர்.

இன்று அவுஸ்த்திரேலியாவில் வாழும் அவரது பள்ளி நண்பன் மேலும் கூறும்போது,

"எமது மதிய உணவு இடைவேளையின்போது நாம் தயாரித்த போத்தல் வெடிகுண்டை பரீட்சித்துப் பார்க்கத் தீர்மானித்தோம். மாணவர்கள் பாடசாலைக் கழிவறைகளைப் பாவித்து வகுப்பறைகளுக்கு மீளும்வரை காத்திருந்தோம். நாம் வெளியே காத்திருக்க, பிரபாகரனும் இன்னொரு தோழரும் வெடிகுண்டை கழிவறையினுள் கொண்டு சென்று திரியைப் பற்றவைத்தனர். நாம் மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளியே காத்திருந்தோம். சில நிமிடங்களாகியும் எதுவுமே நடக்கவில்லை. பொறுமையிழந்த பிரபாகரன் என்னதான் போத்தலுக்கு நடந்தது என்பதைக் கண்டறிய போத்தலின் அருகே சென்றார். கூடவிருந்தவர்கள் அவரைத் தடுத்தபோதும் அவர் கேட்கவில்லை, அவர் அருகில் செல்லவும் குண்டு வெடித்தது. நாம் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம். அந்த குண்டுவெடிப்பு முயற்சி எமக்கு வினோதமாக இருந்தது. எமது கூட்டத்தில் ஒருவர் அதிபர் வருகிறார் என்று கூவவும், அனைவரும் வகுப்பறைக்குச் சென்று பதுங்கிக்கொண்டோம்.  கழிவறைக்குச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்த அதிபர் நேராக பிரபாகரனின் வகுப்பிற்கே சென்றார். வல்வை கல்வியியல் கல்லூரிக்குச் சமூகமளிக்கும் மாணவர்களே இதனைச் செய்திருக்கவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார். ஏனென்றால், வல்வை கல்வியியல் கல்லூரியில் கற்பிக்கும் வேணுகோபால் மாஸ்ட்டரே மாணவர்களை ஆயுதப் போராட்டத்திற்கு ஊக்குவித்து வருகிறார் என்று வல்வையில் மக்கள் பொதுவாகப் பேசிவந்தனர்அதிபர் மிகக்கடுமையான தொனியில் இதை யார் செய்தது, சொல்லுங்கள், யார் செய்தது? என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்வகுப்பறை முழுதும் நிசப்த்தமாக இருந்தது. எவரும் வாய்திறக்கவில்லை. ஆனால் அதிபருக்கோ சமூகத்தில் நடந்துவரும் விடயங்கள் குறித்த சரியான புரிதல் இருந்தது. இளைஞர்கள் மனதில் தாங்கொணாச் சினம் உருவாகிவருவதை அவர் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவே, மாணவர்களை மேலும் வருத்தாமல், "சரி, பரவாயில்லை. உங்கள் முயற்சிகளைப் பாடசாலைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்".

 

ராணுவத்துடனான தனது மோதல்களுக்கான ஆயத்தப்படுத்தல்களை பிரபாகரன் அன்றிலிருந்து பாடசாலைக்கெ வெளியிலேயே வைத்துக்கொள்ள தீர்மானித்தார். அவரும் அவர்து தோழர்களும் கராத்தே மற்றும் ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளை ஓரளவிற்குத் தெரிந்துகொண்டனர். தமது உடல்களை தொடர்ச்சியான வலியினையும், பட்டினியையும் தாங்கக் கூடிய நிலைக்கு பயிற்றுவிக்கத் தொடங்கினர். தம்மை வெற்றுச் சாக்குகளின் கட்டிக்கொண்டு நாள்முழுதும் சூரிய வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள தம்மைத் தயார்ப்படுத்தினர். சிலவேளைகளில் மிளகாய்ச் சாக்குகளின்மேல் படுத்திருந்து உடல்வலியை சமாளிக்கும் மனோதிடத்தினை வளர்க்க முயன்றனர். தமது நகங்களை தாமே ஊசிகள் மூலம் துளைத்து பொலீஸ் சித்திரவதைகளை தாங்கும் பக்குவத்தை அடைய பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சித்திரவதைகளையே அந்த நேரம் ராணுவமும் பொலீஸாரும் கைக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

"நாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆகவே சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ள மனோரீதியில் நாம் எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பிரபாகரன் தன்னுடைய தோழர்களிடம் கூறிவந்தார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரபாகரனும் கைத்துப்பாக்கியும்

Shootout in Madras: When LTTE Prabhakaran's gunshots rang in Pondy Bazaar |  The News Minute

பிரபாகரனின் தோழர்களில் எழுவர் இராணுவத்தினரை எதிர்த்துப் போராடவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர். அதற்காக தம்மைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி வந்தனர். குண்டுகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தனர். தமது நடவடிக்கைகளை ஒருங்கமைப்பதற்காக ஒரு குழுவை அவர்கள் உருவாக்கினர். தமது குழுவுக்கான பெயரைத் தேடுவதில் அவர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. அவர்களுக்கிருந்த இலக்கு ஒன்றுதான், அதுதான் தம்மை ஆக்கிரமித்து நிற்கும் காவல்த்துறை, ராணுவம் உட்பட்ட சிங்கள அரசின் ஆயுதக் கருவிகளை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது.

ஆனால் இலட்சியத்தை மட்டுமே கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை என்று பிரபாகரன் தனது தோழர்களிடம் கூறினார். எதிர்த்துச் சண்டையிடுவதற்கு ஆயுதங்கள் வேண்டும், குறைந்தது ஒரு கைத்துப்பாக்கியாவது எமக்கு வேண்டும் என்று அவர் கூறினார். துப்பாக்கிகளை பொலீஸார் காவித்திரிவதையும், சில பெரியோர்கள் அவற்றை வைத்திருந்ததையும் அவர்கள் முன்னர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பிரபாகரனோ தோழர்களோ ஒருபோதுமே அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. ஆகவே, ஒரு துப்பாக்கியை வாங்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், துப்பாக்கி வேண்டுவதற்குப் பணம் தேவை. ஆகவே துப்பாகியொன்று தேவையான பணத்தினை தமக்கு வீட்டில் தரப்படும் வாராந்தப் பணமான 25 சதத்தினை சேமிப்பதன் மூலம் சேர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

பிரபாகரனே அந்தச் சிறிய குழுவின் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் இருந்தார். ஏனென்றால், தமக்குள் பிரபாகரனே மிகவும் நம்பிக்கையானவர் என்று அவரது தோழர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். ஆகவே, சேர்க்கப்படும் பணத்தை பிரபாகரனே பாதுகாத்து வந்தார். சுமார் 20 வாரங்களில் அவர்களிடம் 40 ரூபாய்கள் சேர்ந்துவிட்டன.

தாம் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு கைத்துப்பாக்கியொன்றை அவர்கள் வாங்கத் தீர்மானித்தனர் . பருத்தித்துறையில் பெருஞ்சண்டியர் என்று பேசப்பட்ட சம்பந்தன் என்பவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்க விரும்புவதாக அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது. அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழர்களும் முடிவெடுத்தனர். தாம் சேர்த்த பணமான 40 ரூபாய்களுக்கு மேலதிகமாக தனது சகோதரி ஜெகதீஸ்வரியின் திருமணத்தில் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை பிரபாகரன் விற்று மேலும் 70 ரூபாய்களைச் சேர்த்துக்கொண்டார். ஆனால் துப்பாக்கியை வாங்குவதற்கும் இன்னமும் 40 ரூபாய்கள் தேவையாக இருந்தது. ஆகவே, சண்டியரைச் சந்தித்து, தமது நோக்கத்தினையும், அதற்கான தேவையினையும் விளக்கி, மீதிப் பணத்தை ஆறுதலாகத் தரமுடியுமா என்று கேட்கலாம் என்று பிரபாகரன் முடிவெடுத்தார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரனும் ஊர்ச்சண்டியர் சம்பந்தனும்

ஒருநாள் காலை பிரபாகரனும் அவரது தோழர்களில் ஒருவரும் பஸ்ஸில் ஏறி பருத்தித்துறை நோக்கிப் பயணமானார்கள். பாடசாலைக் காற்சட்டை அணிந்த இரு சிறுவர்கள் தனது கைத்துப்பாக்கியை வாங்க வந்திருப்பதைக்கண்ட சண்டியர் சம்பந்தன் திகைத்துப்போனார். ஆகவே,  அவர்களை அங்கிருந்து சென்றுவிடும்படி அவர் மிரட்டினார். ஆனாலும், அந்தக் கைத்துப்பாக்கியை பார்த்துவிடவேண்டும் என்று பிரபாகரனும் தோழரும் விரும்பியதால், அதனை அவர்களிடம் காண்பித்தார் சண்டியன். காண்பித்ததோடு நின்றுவிட்ட சண்டியன், அவர்கள் அதனைத் தொட்டுப்பார்க்க அவர் இடம் கொடுக்கவில்லை.

"இதுவொன்றும் விளையாட்டுத் துவக்கல்ல. சிறுவர்களான நீங்கள் இதனைத் தொடக்கூடாது" என்று அவர்களிடம் கண்டிப்பாகக் கூறினார் சண்டியன் சம்பந்தன்.

கைத்துப்பாக்கியொன்றை முதன்முதலாகத் தனது கண்முண்னே கண்டபோதும்கூட  அதனைத் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்படாததால் அவரது கண்கள் கலங்கிவிட்டன. ஆகவே அந்தக் கைத்துப்பாக்கியை எப்படி இயக்குவதென்று தனக்குக் காண்பிக்குமாறு அந்தச் சண்டியரிடம் அவர் மன்றாடத் தொடங்கினார். ஆனால், சம்பந்தனோ, இது விளையாட்டுத் துப்பாக்கியல்ல, சிறுவர்கள் இதனைத் தொடக்கூடாது என்று கூறி, பிடிவாதமாக மறுத்துக்கொண்டே, "உங்களுக்கு எதற்குக் கைத்துப்பாக்கி?" என்று அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

இதைக் கேட்ட பிரபாகரன், "ராணுவத்தையும் பொலீஸாரையும் எதிர்த்துப் போராடப் போகிறோம்" என்று பெருமையாகக் கூறினார்.  "நாம் அவர்களை இங்கிருந்து துறத்தியடிக்க வேண்டும். அவர்களே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக இங்கே இருக்கிறார்கள்" என்று ஆத்திரத்துடன் முழங்கினார்.

"ஏன்?" என்று திருப்பிக் கேட்டார் சம்பந்தன்.

"சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர்களின் தேசத்தை விடுவிக்க வேண்டும்" என்று பிரபாகரன் மீண்டும் பெருமையாகக் கூறினார்.

பிரபாகரன் கூறியதை கேட்டு அதிர்ந்துபோன சம்பந்தன், "உங்களின் வயதிற்கு மீறிய கதைகளைப் பேசுவதை விட்டு விட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார்.

"இந்த விடயங்களைப் பார்ப்பதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் படிப்பதை மட்டுமே இப்போதைக்குச் செய்யுங்கள். என்னைப்போல வளர்ந்து பெரியவர்களாகிய பின்னர் வேறு விடயங்கள் பற்றிச் சிந்திக்கலாம், இப்போது போய்வாருங்கள்" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார் சம்பந்தன்.

பிரபாகரனுக்கோ கைத்துப்பாக்கியை விட்டுவிட்டுச் செல்ல மனம் இருக்கவில்லை. "மீதிப்பணத்தைக் கொண்டுவந்தால் துப்பாக்கியைத் தருவீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் அவர்.

ஆனால், துப்பாக்கியை அவர்களுக்கு விற்பதில்லை என்று சம்பந்தன் பிடிவாதமாக இருந்துவிடவே, பிரபாகரன் மனமுடைந்துபோனார்.

வெளிச்சம் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பின்வருமாறு இந்த நிகழ்வினைப் பகிர்ந்திருந்தார்.

"எனக்கு அப்போது 14 வயதுமட்டுமே ஆகியிருந்தது. எனது கருத்துக்களோடு ஒத்துப்போன இன்னும் ஏழு தோழர்களும் சேர்ந்து ஒரு பெயரில்லாத அமைப்பை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். எமது நோக்கம் விடுதலைக்காத் தொடர்ந்து போராடுவதும், ராணுவத்தினர் மீது தாக்குவதுமாகவே இருந்தது. நானே அந்தச் சிறிய அமைப்பின் தலைவராக இருந்தேன். அந்த நேரத்தில் எமது மனங்களில் இருந்த ஒரே எண்ணம் எப்படியாவது ஒரு துப்பாக்கியை வாங்கிவிட வேண்டும் என்பதும், சில குண்டுகளையாவது தயாரித்துவிடவேண்டும் என்பதும் தான். தாம் வாரம் வாரம் சேர்த்து வந்த 25 சதங்களை எனது தோழர்கள் என்னிடம் கொண்டுவந்து தருவார்கள்".

 

"சுமார் 40 ரூபாய்கள் சேரும்வரை அந்தப் பணத்தினை நானே பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நேரத்தில்தான் பக்கத்துக் கிராமத்தில் வாழ்ந்துவந்த சண்டியரான ஒருவர் தனது கைத்துப்பாக்கியை 150 ரூபாய்களுக்கு விற்கவிரும்புவதாக நாம் கேள்விப்பட்டோம். அதனை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எனது சகோதரியின் திருமணத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட மோதிரத்தை விற்றும் இன்னும் 70 ரூபாய்களை நாம் சேர்த்துக்கொண்டோம். மேலும் 40 ரூபாய்கள் போதாமையினால், அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கும் எமது எண்ணத்தை நாம் கைவிடவேண்டியதாயிற்று".

சண்டியன் சம்பந்தன் மட்டுமே அன்றைய காலத்தில் பிரபாகரனைப் புறக்கணித்திருக்கவில்லை. பிரபாகரன் கல்விபயின்ற சிதம்பராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "எமது பாடசாலையில் பிரபாகரன் இருந்த வகுப்பு பல ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும், பல ஆசிரியர்கள் அந்த வகுப்பு மாணவர்களை எச்சரித்து வந்ததாகவும் கூறிய அவர், பிரபாகரன் என்று ஒரு மாணவன் அவ்வகுப்பில் இருந்தார் என்று நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.

பிரபாகரனும் சமஷ்ட்டிக் கட்சியும்

Pirapaharan: Vol.1, Chap. 1, Why Did He Not Hit Back? – Ilankai Tamil Sangam

சாதாரணதர வகுப்பினை அடைந்தபோது பிரபாகரனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மும்முரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அரசியல் கூட்டங்களுக்கும், அரசியல் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் தொடர்ந்தும் போய்வந்தார்.

1969 ஆம் ஆண்டு, சித்திரை 7 முதல் 9 வரை உடுவில் பகுதியில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்திலேயே சிங்கள அரசுகளுடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று தான் முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன என்று வெளிப்படையாக மக்களிடம் கூறினார் தந்தை செல்வா. 

"1960 களிலிருந்து பிரதான சிங்கள அரசியல்க் கட்சிகளுடன் செயற்பட்டு வருகிறோம். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை பதவியிலிருந்து நீக்க 1960 பங்குனியில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை அவர்கள் உதாசீனம் செய்தார்கள். ஆகவே 1965 இல் சுதந்திரக் கட்சியை பதவியிலிருந்து அகற்றி, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் தமிழருக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு ஆதவளித்தோம். ஆனால், அவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையினை ஆட்சிக்கு வந்ததும் தூக்கியெறிந்துவிட்டார்கள். நாம் இன்று அனைவராலும் கைவிடப்பட்டு நிற்கிறோம்" என்று செல்வா மிகுந்த வருத்தத்துடன் மக்களுக்குக் கூறினார்.

தமிழருக்கான தனிநாடே எமது தீர்வு என்று பிரகடனம் செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் பிரபாகரனும் கட்டைக் காற்சட்டை அணிந்து நின்றிருந்தார். இரு பிரதான சிங்களக் கட்சிகளும் தமிழர்களை ஏமாற்றிவிட்டதால், தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்குவதைத்தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை என்று அங்கிருந்த இளைஞர்கள் வாதிட்டனர். ஆனால், இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானத்தை அந்த வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு விரும்பாத சமஷ்ட்டிக் கட்சி, அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டது.

ஆனால், கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கேட்ட தனிநாட்டுத் தீர்மானம் குறித்த சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிக்கையாளர்கள் செல்வாவிடம் கேட்டனர். சிங்களவர்கள் உங்களை சமஷ்ட்டிவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கேலிசெய்கிறார்கள். ஆனால், நீங்களோ தமிழ் இளைஞர்கள் கோரிய தனிநாட்டுப் பிரகடனத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டீர்கள். ஏன்  அவர்களது தனிநாட்டுக்கான தீர்மானத்தை நிராகரித்தீர்கள்" என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த தந்தை செல்வா,

" நாம் அதனை நிராகரிக்கவில்லை. எங்களுக்குச் சிறிது நேரம் தாருங்கள் என்று மட்டுமே அவர்களைக் கேட்டோம். எம்மை பிரிவினைவாதிகள் என்று கூறும் சிங்களவர்களே எம்மை சமஷ்ட்டிவாதிகள் என்று அழைக்கும் நிலையினை நாம் உருவாக்குவோம். சமஷ்ட்டி என்பது ஒருநாட்டில் ஒற்றுமையாக வாழும் ஒரு பொறிமுறையே அன்றி, தனியான நாட்டுக்கான கருவியல்ல என்பதனை அவர்கள் ஏற்கச் செய்வோம். நமது இளைஞர்கள் சமாதானமான முறையில் எமது பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

"நீங்கள் கூறுவதுபோல சிங்களத் தலைவர்களை உங்களின் கோரிக்கைக்கு உடன்படவைக்க முடியாமல்ப் போனால் என்ன செய்வீர்கள்?" என்று ஒரு பத்திரிக்கையாளர் செல்வாவிடம் வினவியபோது, "வயோதிபர்கள் தோல்வியடையும்போது இளைஞர்கள் வெற்றிபெறுவார்கள்" என்று அவர் அமைதியாகப் பதிலளித்தார்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற குட்டிமணியும் தங்கத்துரையும்

அன்று கல்வியமைச்சராக இருந்த . எம். ஆர். . ஈரியகொள்ள, ஹரிஜன்களாக இருந்த  தமிழ் மாணவர்கள் சிலர் பெளத்த மதத்தினைத் தழுவிக் கொண்டதால், ஹரிஜன்களால் உருவாக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை  சிங்களப் பாடசாலைகளாக அரசால் பொறுப்பெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிவித்தலை விடுத்துடன், இந்த பொறுப்பேற்றல் நிகழ்வில் தான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்து  தமிழ் மாணவர்களின் மனநிலையினை மேலும் கொதிநிலைக்குக் கொண்டு சென்றார்.

I. M. R. A. Iriyagolle - Wikipedia

. எம். ஆர். . ஈரியகொள்ள

இவ்வறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்ட சவால் என்றுணர்ந்த  தமிழ் மாணவர்கள்  இந்த நிகழ்வுக்கெதிரான பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் அறைகூவல் விடுத்தனர்.  ஆனால், பிரதமர் டட்லியுடன் இதுகுறித்து பேசிய சமஷ்ட்டிக் கட்சியினர், பாடசாலைகளை சிங்கள மயமாக்கும் அரசின் முடிவினை மீளப்பெறுவதில் வெற்றிகண்டனர்.

ஆனாலும், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவு அரசின் எகத்தாளமான முயற்சிக்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சத்தியாக்கிரக நிகழ்வினை நடத்த முயன்றபோது, அரசு பொலீஸாரைப் பாவித்து அதனைத் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால், பொலீஸாரின் தடையினை தான் உதாசீனம் செய்யப்போவதாக சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணி அறிவிக்கவே, அரசு சம்பந்தப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கும் கடற்படையின் பாதுகாப்பைப் போட்டது. ஆனால், தமது இளைஞர் அணியுடன் பேசிய சமஷ்ட்டிக் கட்சியின் தலைமை, போராட்டத்தைக் கவிடும்படி வேண்டிக்கொண்டதுடன், இளைஞர்கள் கடற்படையுடன் மோதும் சந்தர்ப்பத்தினையும் தவிர்த்துக்கொண்டது.

எந்த முடிவையோ அல்லது நடவடிக்கையையோ காலம் தாழ்த்தி, தாமதமாகவே எடுக்க நினைக்கும் சமஷ்ட்டிக் கட்சியின் நிலைப்பாடு தமிழ் இளைஞர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதனால் இளைஞர் அணியிலிருந்து பல உறுப்பினர்கள் வெளியேறிச் சென்று தமக்கான அமைப்புக்களை உருவாக்கினார்கள். அவர்களுள் ஒன்று குட்டிமணி - தங்கத்துரை அமைப்பு. குட்டிமணியும், தங்கத்துரையும் பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். குட்டிமணியின் இயற்பெயர் செல்வராஜா யோகச்சந்திரன் என்பதுடன் தங்கத்துரையின் இயற்பெயர் நடராஜா தங்கவேலு ஆகும். 1969 இல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தினை கடுமையாக விமர்சித்த அவர்கள், தமிழ் மக்களின் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். பாலஸ்த்தீனத்து மக்களின் விடுதலைக்காகப் போரிட்டுக் கொண்டிருந்த யாசீர் அரபாத்தை முன்னுதாரணமாகக் கொண்டிருந்த தங்கத்துரை தமது குழுவிற்கு தமிழ் விடுதலை இயக்கம் என்று பெயரிட விரும்பினார். ஆனால், அக்கூட்டத்தில் பெயர் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படமலேயே முற்றுப்பெற்றது. ஆனாலும், ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதென்று அங்கிருந்த அனைவருமே ஒருமித்து முடிவெடுத்திருந்தனர்.

தொண்டைமனாறு குண்டுவெடிப்பில் காலில் காயம்பட்ட பிரபாகரன்

பருத்தித்துறையில் இருந்த விசாலமான வீடொன்றில் குட்டிமணி - தங்கத்துரை ஆகியோர் தலைமையிலான அமைப்பு தமது கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தது. பிரபாகரனும் இந்த கூட்டங்களில் தவறாது பங்கெடுத்து வந்தார். அந்தக் குழுவில் இருந்தவர்களில் பிரபாகரனே வயதில் இளையவராக இருந்தார். அவருக்கு அப்போது 14 வயது. குட்டிமணி, தங்கத்துரைக்கு மேலதிகமாக இக்கூட்டங்களில் பெரிய சோதி, சின்னச் சோதி, செல்லையா தனபாலசிங்கம் (செட்டி), செல்லையா பத்மனாதன் (கண்ணாடி), சிறீ சபாரட்னம், பொன்னுத்துரை சிவகுமாரன் மற்றும் வைத்திலிங்கம் நடேசுதாசன் ஆகியோரும் கலந்துகொண்டுவந்தனர்.

"நாங்கள் புரட்சி பற்றிப் பேசினோம். புரட்சியாளர்கள் பற்றிப் பேசினோம். ஆனாலும், இவையெல்லாவற்றையும் விட குண்டுகளைத் தயாரிப்பது பற்றியும், ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைப் பற்றியுமே அதிகமாகப் பேசினோம். நாங்கள் வெறும் 15 பேர் மட்டுமே கொண்ட சிறிய அமைப்புத்தான்" என்று நடேசுதாசன் தமிழ் இதழொன்றிற்குப் பேட்டியளிக்கும்போது தமது ஆரம்பகால அமைப்புப்ப்பற்றிக் கூறியிருந்தார்.

1971 முதல் 1972 வரையான காலப்பகுதியில் இந்த அமைப்பினர் குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தொண்டைமனாறு பனத்தோப்பு ஒன்றினுள் இடம்பெற்ற தற்செயலான குண்டுவெடிப்பில் இவ்வமைப்பின் பல உறுப்பினர்கள் காயப்பட நேர்ந்தது. அவர்களில் ஒருவர் பிரபாகரன். அவரது காலில் கடுமையான தீக்காயம் ஒன்று ஏற்பட்டதுடன், அது கருமையான அடையாளம் ஒன்றினை நிரந்தரமாகவே ஏற்படுத்தியிருந்தது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரிகாலன்

Thangadurai.jpg

தங்கத்துரை எனப்படும் ந. தங்கவேலு

அவர்களின் ரகசியக் குழுவிற்கு தங்கத்துரையே தலைவராக இருந்தார். அவரை அவர்கள் மாமா என்று பாசத்துடன் அழைத்து வந்தார்கள். அந்த அமைப்பில் சுமார் 25 இளைஞர்கள் இருந்தார்கள். அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் உறவினர்கள். 1970 இல் தங்கத்துரை இரு சுழல்த் துப்பாக்கிகளை வாங்கியிருந்தார். ஒன்று 0.22 எம்.எம் வகையும் மற்றையது 0.38 எம்.எம் வகையையும் சேர்ந்தது. இவை உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், இவற்றினை பயிற்சிக்காக அவர்கள் பாவித்து வந்தார்கள்.அமைப்பிலிருந்தவர்களை இவ்வகையான சுழல்த் துப்பாக்கிகளைத் தயாரிக்குமாறு தங்கத்துரை கேட்டிருந்தார். வானொலி திருத்துனரான கண்ணாடி என்று அழைக்கப்பட்டவர் இந்த தயாரிப்பு முயற்சிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவரது உதவியாளராக "தம்பி" பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர்கள் அவ்விரு துப்பாக்கிகளையும் பாகம் பாகமாய்ப் பிரித்தெடுத்து மீண்டும் அவற்றைச் சேர்த்து துப்பாக்கிகளாக பொருத்தினார்கள். சில நாட்களிலேயே துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

 

1982 ஆம் ஆண்டு கொழும்பு குயீன்ஸ் கிளப்பில் தங்கத்துரை மற்றும் குட்டிமணிக்கெதிராக நடத்தப்பட்ட வழக்கின்போது நான் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அவர்களின் துப்பாக்கித் தயாரிப்பு முயற்சி பற்றி நான் வினவியபோது தங்கத்துரை பின்வருமாறு கூறினார்,

"துப்பாக்கிகளைத் தயாரிப்பதுபற்றிய அறிவு எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், எமது தோழர்களில் பலர் இப்போதுதான் துப்பாக்கியை முதல்முறையாகக் கண்டிருக்கிறார்கள். நான் கண்ணாடியிடமும் பிரபாகரனிடமும் அவற்றை கழற்றிப் பார்க்குமாறு கூறியிருந்தேன். ஒரு வீட்டின் விறாந்தையில் அமர்ந்தபடி சுத்தியலினாலும் திருகாணிக் கழற்றியினாலும் அவற்றைக் கழற்ற முயன்றார்கள். மிகச் சிறிய நேரத்திலேயே அவர்களால் அவற்றினை முற்றாகக் கழற்றியெடுக்க முடிந்தது. தம்மால் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களைக் கவனமாக ஒரு பத்திரிகைத் தாள் மீது பரவிவிட்டு பின்னர் அப்படியே துப்பாக்கியாகப் பொருத்தினார்கள். அவர்கள் இருவருக்கும் மிகவும் சிறப்பான அவதானிப்பும், ஞாபகசக்தியும் இருந்ததை நான் கவனித்தேன்".

 

சிறிது காலத்திலேயே கைத்துப்பாக்கிகளைத் தாமாகவே தயாரிக்கும் நிலையினை அவர்கள் அடைந்தார்கள். சிலவற்றை அவர்களே தயாரித்தார்கள். அதேபோல ரவைகளைத் தயாரிக்கும் புதிய முறைகளையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். முதலில் தீப்பெட்டிகளில் இருக்கும் இரசாயணத்தைக் கொண்டு ரவைகளை அவர்கள் செய்துபார்த்தார்கள். பின்னர் சரவெடிகளில் இருக்கும் இரசாயணத்தை ரவைகளில் நிரப்பி முயன்று பார்த்தார்கள். அவற்றுள் மூலை வெடி என்றழைக்கப்பட்ட முக்கோண வடிவ வெடிகளை அதன் வெடிச் சக்திக்காக ரவைகளில் பாவிக்க விரும்பினார்கள்.

AThiyagarajah-MPforVaddukkodaiKilledon25May1981.jpg

வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ தியாகராஜா

அக்காலத்தில் சிவகுமாரன் பயன்படுத்திய துப்பாக்கி, உலகநாதனைக் கொல்ல குட்டிமணி பயன்படுத்திய துப்பாக்கி, வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜாவைக் கொல்ல திஸ்ஸவீரசிங்கம் பாவித்த துப்பாக்கி மற்றும் அல்பிரட் துரையப்பாவைக் கொல்ல பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி ஆகிய எல்லாமே அவர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்.

அதேபோல குண்டுகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குண்டுகளைத் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். துப்பாக்கிகளைத் தயாரிப்பதைக் காட்டிலும் குண்டுகளைத் தயாரிப்பது ஆபத்தானது. இவ்வாறான குண்டுத் தயாரிப்புக்களில் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது 1970 ஆம் ஆண்டு தொண்டைமானாறு பனங்காட்டில் இரசாயணங்களை அவர்கள் கையாளும்போது ஏற்பட்டிருந்தது. குண்டுக்கான வெடிபொருட்களை அவர்கள் இணைத்துக்கொண்டிருக்கும்போது வெடிப்பு ஏற்பட்டது. அதில் சின்னச் சோதி காயப்பட்டிருந்தார். இரண்டாவது வெடிப்பு சற்றுத் தீவிரமானது. தங்கத்துரை, சின்னச் சோதி, பிரபாகரன் மற்றும் நடேசுதாசன் ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். பிரபாகரனுக்கு வலதுகாலில் எரிகாயம் ஏற்பட்டிருந்தது. அக்காயம் ஆறுவதற்கு சிலகாலம் சென்றதுடன், அது நிரந்தரமான கருத்த வடுவையும் அவரது காலில் ஏற்படுத்திவிட்டிருந்தது.

பிரபாகரனுக்கு தனது காலில் ஏற்பட்ட காயம் பெருமையாக இருந்தது. தனது நண்பர்களுக்கு அக்காயத்தைக் காட்டி அவர் மகிழ்ந்தார். காலில் கருமையான காயம் ஏற்பட்டுள்ளதால் தான் இனிமேல் கரிகாலன் என்று அழைக்கப்படலாம் என்று நகைச்சுவையாக அவர் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. சோழர்களின் புகழ்மிக்க இளவரசனான கரிகாலச் சோழன் மீது பிரபாகரன் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார். கரிகாலச் சோழன் கூட தனது காலில் ஏற்பட்ட கருமை நிறத் தழும்பிற்காகவே "கரிகாலச் சோழன்" என்று அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கரிகாலச் சோழன் தனது போர்த்திறமை மூலம் சோழ நாட்டினை விஸ்த்தரித்து சோழப் பேரரசாக மாற்றியிருந்தார். பிரபாகரனும் தனது பெயரை கரிகாலன் என்று வரிந்துகொண்டார். 1982 இல் தமிழ்நாட்டின் பாண்டி பஸார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதிவுசெய்யப்பட்ட பொலீஸ் அறிக்கையில் பிரபாகரனின் பெயர் "கரிகாலன்" என்றே பதியப்பட்டிருந்தது. பிரபாகரனின் வலது காலில் இருக்கும் எரிகாயத் தழும்பை முன்வைத்தே பொலீஸார் தமது தேடுதல்களை நடத்தியிருந்தார்கள்.

ஆயுதங்களையும் குண்டுகளையும் தயாரிக்கும் பிரபாகரனின் அவா இன்றுவரை தொடர்கிறது. இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பிரபாகரன் அவற்றை மெருகூட்டுவதன் மூலம் எவ்வாறு தாக்குதல்களில் அவற்றை திறமையாகவும், குறைந்த ரவைகளுடன் பயன்படுத்தலாம் என்று எப்போதுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கனரக மோட்டார்கள், நீண்ட தூர ஆட்டிலெறிகளைக் கூட உருமாற்றி, இலங்கையரசு பாவித்த மேற்கு நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட எறிகணைச் செலுத்திகளின் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பாதுகாப்பாக உபயோகிக்கும் வழிமுறைகளைப் பிரபாகரன் கையாண்டு வந்தார்.

பிரபாகரன் 14 வயது நிரம்பியிருந்த வேளையிலேயே அவரது மைத்துனரான சாதாரண தரத்தில் கல்விபயின்று வந்த பெரிய சோதி என்பவரால் அமைப்பினுள் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து பாடசாலைக்குச் சமூகமளிப்பதைத் தவிர்த்து வந்த பிரபாகரன் அரசியல் கூட்டங்களிலும் ஆலோசனைகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். 1968 இல் டட்லியின் அரசிலிருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்ததன் பிற்பாடு, யாழ்க்குடாநாட்டில் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களும், விவாதங்களும் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வந்தன. சமஷ்ட்டிக் கட்சியின் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவினை இளைஞர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் போராடி பெறுவதை விடுத்து, மீண்டும் இன்னொரு சிங்களக் கட்சிக்கே ஆதரவளிப்பதென்பது கட்சியின் நோக்கத்திற்கு முரணானது என்று வாதிட்டனர். சமஷ்ட்டிக் கட்சியின் முடிவு பற்றி தந்தை செல்வா என்னதான் சமாதான சொல்ல முனைந்தாலும், இளைஞர்கள் அதனைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. குறிப்பாக வி நவரட்ணத்தின் சுயாட்சிக் கழக உறுப்பினர்கள் இதனால் பெரிதும் அதிருப்தியடைந்து காணப்பட்டார்கள். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிநாடு 

தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனிநாடே என்று உறுதியாகத் தீர்மானித்த பிரபாகரன் இளைஞர்களை தனிநாட்டுக்கான போராட்டம் நோக்கி உந்திவந்த அரசியல்ச் செயற்ப்பாட்டாளர்களான ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். அவர்களுடனான ஆலோசனைகளின்போது சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தையும், சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொள்கையினையும் கடுமையாக விமர்சித்த பிரபாகரன், சுந்தரலிங்கம் மற்றும் நவரட்ணம் போன்றோரின் நிலைப்பாடான தனிநாடு நோக்கி சமஷ்ட்டிக் கட்சி போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவந்தார். 

C. Suntharalingam - Wikipedia

சுந்தரலிங்கம்

தனியான நாடு எனும் கொள்கையினை முதன்முதலில் எதிர்த்தவர் சுந்தரலிங்கம்தான். ஆனால், 1958 இல் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதலின் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனியான நாடுதான் என்று கூறியதோடு, அதனை தாம் ஈழம் என்று அழைப்பதாகவும் கூறினார். மேலும், தனிநாட்டிற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். சிங்கள அரசியல்வாதிகளுடனும், புத்திஜீவிகளுடனும் தனக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கையினை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்றவே முயன்று வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவந்தார். சிங்களவர்கள் அரசியல் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளும் எந்த முடிவினையும் அவர்கள் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென்றும் வாதிட்ட அவர் தமிழர்களுக்கான உரிமைகளையோ மொழிக்கான அந்தஸ்த்தையோ சிங்களவர்கள் ஒருபோதுமே தரப்போவதில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவந்தார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்த நிலையான வடக்குக் கிழக்கின் பூர்வீக இனமக்கள் தமிழர்களே எனும் நிலையினை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும் அத்தாயகம் ஈழம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் சுந்தரலிங்கம் வாதாடிவந்தார்.

ஆனால், அவரது கோரிக்கையான தனிநாடு தமிழரிடையே முக்கியத்துவத்தினைப் பெறத் தவறிவிட்டது. 1960 இலும் 1965 இலும் பாராளுமன்றத் தேர்தல்களில் வவுனியாவில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி எனும் பெயரில்  போட்டியிட்ட அவரது கட்சியைத் தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள். 1960 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய சிவசிதம்பரத்தின் 5370 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 4231 வாக்குகளே கிடைத்தன. மேலும் 1965 தேர்தலில் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்ட சிவசிதம்பரத்தின் 7265 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 3952 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் பிற்பாடு காங்கேசந்துறையில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சுந்தரலிங்கம் 5788 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள செல்வாவோ 13,520 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.

 

 V. Navaratnam - Wikipedia

நவரட்ணம்

1970 தேர்தல்களில் போட்டியிட்ட நவரட்ணத்தின் சுயாற்சிக் கழகமும் தேர்தலில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. அதுவும் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டது. 1963 இல் இருந்து ஊர்காவற்துறை தொகுதியில் வெற்றிபெற்ற வந்த நவரட்ணம், புதிய கட்சிக்கு மாறியதன் பின்னர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளை இழந்தார். 1963 இல் 14,963 வாக்குகளையும் 1965 இல் 13,558 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டிய நவரட்ணம், 1970 தேர்தலில் வெறும் 4758 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். பெரும்பாலான வாக்காளர்கள் நவரட்ணத்தின் முன்னைய கட்சியான சமஷ்ட்டிக் கட்சிக்கே வாக்களித்ததுடன் புதிதாக போட்டியிட்ட ரட்ணம் என்பவரைத் தெரிவுசெய்தார்கள். முழு யாழ்ப்பாணக் குடாநாடுமே நவரட்ணத்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையினை அன்று நிராகரித்திருந்தது.  

1956 ஆம் ஆண்டிலிருந்து தனிநாட்டுக் கொள்கையினை முற்றாக நிராகரித்திருந்த சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழருக்கான தீர்வாக சமஷ்ட்டி முறையிலான அரசியல் தீர்வையே தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறுகிறது, 

"...இந்த நாட்டினை கூறுபோடும் எந்த நடவடிக்கையும் இந்த நாட்டிற்குப் பாதகமாக அமையும் என்பதையும் , தமிழ் மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனையும் நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்க் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்க வேண்டாம் என்று நாம் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்"

 தனது தேர்தல் தோல்வி குறித்து டெயிலி நியூஸிற்கு செவ்வி கொடுத்த நவரட்ணம், தனிநாட்டிற்கான தனது கோரிக்கைக்குக் கிடைத்த  இத்தோல்வி தற்காலிகமானதுதான் என்று கூறியதுடன், தான் மாவட்ட சபைத் தேர்தல்களில் கூறிய நிலைப்பாடு மாறாது என்றும் கூறினார். 

"இந்தத் தேர்தலினை நான் அரசுக்கும், பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பும் நடவடிக்கையாகப் பாவித்தேன். அதாவது, சிங்கள அரசுகளும், தலைவர்களும் தமிழர்களின் அவலங்களைத் தீர்த்துவைத்து கெளரவமான தீர்வொன்றைத் தருவார்கள் என்கிற நம்பிக்கையினைத் தமிழர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இவர்களின் செயற்பாடுகளினால் தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனங்களும் இனிமேல் ஒன்றாக வாழமுடியாது என்கிற நிலையினை அடைந்துவிட்டோம். இனிமேல் தமிழர்கள் பிரிந்துசென்று தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார்.

 

தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து சுந்தரலிங்கமும், நவரட்ணமும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும்கூட, இளைஞர்களின் மனதில்  தனிநாட்டிற்கான தேவையினை உணரவைப்பதில் பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தார்கள். பல இளைஞர்கள் தனிநாட்டை அடைவதற்கான வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆராய முற்பட்டிருந்தார்கள். வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் போராடுவது பலத்த தோல்வியினையே சந்தித்திருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். ஆயுதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும், அதன்மூலமே தமிழர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதனை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எமது பதிலடி கடுமையாக இருக்கும்போதுதான் திருப்பி எம்மீது தாக்குதல் நடத்து முன் அவர்கள் சிந்திப்பார்கள் என்று இளைஞர்கள் நியாயப்படுத்தத் தொடங்கினர். 

 

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தரப்படுத்தல்

 1970 ஆம் ஆண்டு, வைகாசி 27 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சமஷ்ட்டிக் கட்சி 13 ஆசனங்களையும், காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதே தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி, சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து 106 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவான மேலும் 6 ஆசனங்களையும் சேர்த்து இந்த முன்னணி 112 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தது. இது வெறும் 151 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் காட்டிலும் அதிகமானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களை மட்டுமே இத்தேர்தலில் பெற்றிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மந்திரிசபையினை அமைத்திருந்தார். தனது கல்வியமைச்சராக கம்பொல சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பாடி உட் டின் மகமூட்டீனை நியமித்தார்.

 Badi-ud-din Mahmud - Wikipedia

பாடி உட் டின் மகமூட்

கல்வியமைச்சராக வந்தவுடன் அவர் செய்த முதலாவது வேலை ஊடகங்கள் மூலமாக மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்ட தரப்படுத்தலினை அறிவித்ததுதான். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் மனதில் முளைத்திருந்த பிரிந்துபோதல் எனும் எண்ணக்கருவிற்கு இந்த அறிவிப்பு மேலும் உரம் ஊட்டியது. பாராளுமன்றத்தில் பேசிய கல்வியமைச்சர் பாடி உட் டின், சிங்களவர்கள் பல்கலைக்கழகமூடான கல்வியினை நிராகரித்து வருகிறார்கள் என்றும், அதன்மீதான நம்பிக்கையினை இழந்துவருகிறார்கள் என்றும் கூறியதோடு, இதற்கெல்லாம் காரணம் பெரும்பாலான தமிழர்கள் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதும், பல தமிழர்கள் பொறியியலாளர் மற்றும் மருத்துவர்களாக உருவாக்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறினார். 

தற்போதிருக்கும் பல்கலைக் கழக அனுமதி மூன்று வழிகளில் தமிழ் மாணவர்களுக்கு அனூகூலமாக இருக்கின்றது என்று வாதிட்ட அவர், அவற்றைனைப் பின்வருமாறு விளக்கினார். 

முதலாவதக வரலாற்று ரீதியான காரணங்கள். அதாவது வடபகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான, தரமான பாடசாலைகள்.  இரண்டாவது தமிழ் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருகிறார்கள் என்பது. மூன்றாவதாக, பல்கலைக்கழகங்களில் செய்முறைத் தேர்வுகளின்பொழுது, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு உதவிவருகிறார்கள் என்பது. ஆகவேதான், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியினைத் தடுப்பதற்கு மந்திரிசபை கடுமையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கே விபரித்தார். ஆகவேதான், விஞ்ஞானப் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தான் இரத்துச் செய்வதாகவும், தரப்படுத்தலினை அமுல்ப்படுத்தப்போவதாகவும் கூறினார்.

 

தமிழ் மாணவர்கள் பெருவாரியாக தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாவதாகவும், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான செய்முறைத் தேர்வுகளில் உதவிவருவதால் சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சிங்கள பெளத்த அமைப்புக்களும் மாணவர் சங்கங்களும் முறையிட்டு, இந்தத்ப் பல்கலைக் கழக தேர்வுமுறை முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் சிறிமாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இந்தக் கோரிக்கைகளை தான் நடைமுறைப்படுத்துவேன் என்று தான் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக தான் ஆட்சியில் ஏறியதும் அதனைச் செய்யத் தலைப்பட்டார் சிறிமா. ஆனால், வடமாகாணப் பாடசாலைகள் பலவற்றில் செய்முறை விஞ்ஞான பாடங்களுக்கான திறமையான உபகரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனாலேயே பல்கலைக்கழக விஞ்ஞான பாடங்களுக்கு பெருமளவில் வடபகுதித் தமிழ் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞான மற்றும் பொறியியல் பாடநெறிக்கு தேர்வானவர்களில் 37.2 வீதமானவர்களும், வைத்தியத்துறை மற்றும் பல்வைத்திய பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 40.5 வீதமானவர்களும், விவசாயம் மற்றும் கால்நடை வைத்தியத்துறைக்குத் தெரிவானவர்களில் 41.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணிசமான இடங்களைத் தக்கவைத்துவந்த இந்த நிலை 1971 வரையில் தொடர்ந்து வந்தது. இவ்வருடத்தில் விஞ்ஞான பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில்  35.2 வீதமான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களா இருந்ததுடன், பொறியியல்ப் பீடங்களுக்குத் தெரிவானவர்களில் 40.8 வீதமானவர்களும் மருத்துவத்துறைக்குத் தெரிவானவர்களில் 40.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள்.

பாடி உட் டின் மகமூட்டீன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களின் மீதான கடுமையான விமர்சனம் தமிழ் மாணவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. கல்வித்திட்டத்தை ஏமாற்றியும், தமிழ் ஆசிரியர்களின் உதவியினையும் கொண்டே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினைக் கடுமையாக மறுத்த தமிழ் மாணவர்கள், தமது அயராத உழைப்பினாலும் கடுமையான பயிற்சியினாலுமே தாம் பலகலைக் கழகங்களுக்குத் தெரிவாகி வருவதாக  வாதிட்டார்கள்.

http://www.cmb.ac.lk/wp-content/uploads/science-old.jpg 

இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1957 வரையான காலப்பகுதிவரை பாடநெறிகள் ஆங்கிலமொழியிலேயே நடைபெற்றுவந்தன சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே பரீட்சையினை ஆங்கில மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், 1957 முதல் பரீட்சைகளுக்கான விளக்கப்படுத்தல்கள் சிங்களத்திலோ தமிழிலோ வழங்கப்பட முடியும் என்கிற முறை கொண்டுவரப்பட்டதோடு, அதுவரை இருந்த செயன்முறைகளும் மாற்றம் பெறத் தொடங்கின. இரு மொழிகளைப் பேசும் மாணவர்கள் ஒரே பரீட்சைத் தாளினை எழுதினாலும் கூட, அவற்றை தமது தாய் மொழிகளில் பதிலளிக்கும் வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பரீட்சைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பதிலளிக்கப்பட்ட பரீட்சைத் தாள்கள் திருத்தப்பட்டு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒரே பட்டியலில் அதிகூடிய புள்ளிகள் முதல் அதி குறைந்த புள்ளிகள் வரை தரப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை, தகுதி அடிப்படியில் தரப்படுத்தும் முறை என்று அறியப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு அமைவாக இந்தப் பட்டியலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், சிறிமாவின் அரசாங்கம் கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்தின்படி, சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் தாம் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, ஒரே மொழியில் பரீட்சை எழுதியவர்களின் புள்ளிகள், ஒருவரின் புள்ளிகளுக்கெதிராக இன்னொருவரின் புள்ளிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டார்கள்.

இந்தப் புதிய தரப்படுத்தல் முறை சிங்கள மாணவர்களுக்கு மிகவும் அனூகூலமாகவும், தமிழ் மாணவர்களில் பல்கலைக் கழக அனுமதியில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதை தமிழ் மாணவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே இந்தப் புதிய தரப்படுத்தல்த் திட்டத்திற்கெதிராக பாரிய மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மாணவர்களான பொன்னுத்துரை சத்தியசீலனும் சபாலிங்கமும் ஏற்பாடு செய்தார்கள். இந்த மாணவர் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கனகரட்ணம் மகா வித்தியாலயம் (பின்னாளில் ஸ்டான்லிக் கல்லூரி என்று அறியப்பட்டது), பரி யோவான் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் ஊடாகப் பயணித்து இறுதியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற பாரிய பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. கூட்டத்தின் இறுதியில் சிறிமாவின் நோக்கத்தின் கருவியாகச் செயற்பட்ட பாடி உட் டின் மகமூட்டீன் உருவப்பொம்மை தீக்கிரையாக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாணவன் சத்தியசீலன் பின்வருமாறு கூறினார்,

 "மொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பையும் பாதிக்கும் வகையிலேயே இந்த புதிய தரப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பல தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வி கடுமையான வீழ்ச்சியினை அடையப்போவதுடன் பல தமிழ் மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகளின் தகமையும் குறைவடையப் போகிறது. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும் அதனூடான வேலைவாய்ப்பும் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. தமது கல்வியின் மூலம் தரமான தகுதியினையும், வேலைவாய்ப்புக்களையும் அடையமுடியும் என்று இருந்த தமிழ் மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் இதன்மூலம் அழிக்கப்பட்டிருக்கிறது".

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கம்

ஜயாவின் பதிவுகளும்,எனது பின்னூட்ட முரண்களும்…02 | மறுஆய்வு

 

சமஷ்ட்டிக் கட்சியினரின் உதவியினை இதுதொடர்பாக நாடிய மாணவர்கள், புதிய தரப்படுத்தல் திட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரியிருந்தனர். ஆனால், சமஷ்ட்டிக் கட்சி இதற்கு உடனடியான பதில் எதனையும் வழங்க விரும்பவில்லை. சமஷ்ட்டிக் கட்சியின் மெளனத்தினால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், இத்தரப்படுத்தலுக்கெதிரான நடவடிக்கைகளை தமது கைகளில் எடுப்பதற்காக யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடினார்கள். அவர்களிடம் சத்தியசீலன் பேசும்போது, 

"நாம் தமிழ்க் காங்கிரஸ் மீது ஒருநாளுமே நம்பிக்கை வைத்தவர்கள் இல்லை. அது மிகவும் பழமையானதும், புதிய சிந்தனைகளை அறவே ஒதுக்குவதுமான ஒரு கட்சி. அதேபோல சமஷ்ட்டிக் கட்சியும் பழமைநோக்கிச் செல்வதுடன், இளைஞர்களின் உணர்வுகளுக்கு, குறிப்பாக மாணவர்களின் பிரச்சினைக்கு ஒருபோதுமே செவிசாய்த்ததில்லை. ஆகவே, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எமக்கு புதிய அமைப்பொன்று தேவை".

 ஆகவே அந்த மாணவர் குழு தமக்கான புதிய அமைப்பொன்றை உருவாக்கியது. அதற்கு "தமிழ் மாணவர் பேரவை" என்று அவர்கள் பெயரிட்டனர். அவ்வமைப்பின் தலைவராக சத்தியசீலன் பொறுப்பெடுத்ததோடு, செயலாளராக திஸ்ஸவீரசிங்கம் செயற்பட்டார். இந்த அமைப்பில் சிவகுமாரன், அரியரத்திணம் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஆரம்பத்தில் உயர்தரம் வரை கல்விகற்ற மாணவர்கள் மாத்திரமே அமைப்பினுள் சேர்க்கப்பட்டபோதும்கூட பின்னர் அது சாதாரண தரம் வரை கற்ற மாணவர்களையும், அண்மையில் பாடசாலையினை விட்டு நீங்கிய மாணவர்களையும் சேர்த்துக்கொண்டது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் சிவகுமாரன் அமைப்பை விட்டு வெளியேற பிரபாகரன் சேர்ந்துகொண்டார்.

 

1971 ஆம் ஆண்டு தை 12 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்தத் தரப்படுத்தல் திட்டம் தொடர்பாக பேசவேண்டும் என்று கேட்பதற்காக மாணவர் பேரவையினர் அமிர்தலிங்கத்தை அணுகியிருந்தனர். ஆகவே சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த அமிர்தலிங்கம் மாணவர்களின் கோரிக்கை பற்றி பொதுச்சபையில் பேசியதோடு பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசுமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளினையும் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால், 1970 தேர்தல்களில் காரைநகர் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் தியாகராஜாவிடம் தோற்றிருந்த அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்லத் தவறியதோடு, சமஷ்ட்டிக் கட்சியும் மாணவர்களின் ஆதங்கத்தின் ஆழத்தினைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்ததுடன், இன்னும் ஐந்து பிரச்சினகளுடன் இன்னொன்றாக இத்தரப்படுத்தல்பற்றிப் பேசலாம் என்று வாளாவிருந்துவிட்டது.

Feb 20th 1961 Launch of Tamil 'Satyagraha' Encounters Baptism of fire on  First Day – dbsjeyaraj.com

தந்தை செல்வாவுடன் அமிர்தலிங்கம்

சமஷ்ட்டிக் கட்சியின் பொதுச்சபையில் விவாதிக்கப்பட்ட சில விடயங்களை பிரத மந்திரியுடன் பேசுவதற்கென்று சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து தந்தை செல்வா தலைமையில் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். தன்னை சந்திக்க விரும்பிய சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களை கல்வியமைச்சர் பாடி உட் டின் மகமூட்டுட்டன் பேசுமாறு அனுப்பிய சிறிமாவோ, கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் சிலவற்றைச் செய்ய ஒத்துக்கொண்டாலும்கூட தரப்படுத்தல் திட்டம் அப்படியே தொடரும் என்பதனை சமஷ்ட்டிக் கட்சியின் உறுப்பினர்களிடம் கண்டிப்பாகக் கூறினார்.  அவ்வாறே அக்குழுவினருடன் பேசிய கல்வியமைச்சரும், தரப்படுத்தல் முடிவு மந்திரி சபையினால் எடுக்கப்பட்டதேயன்றி, தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் கூறியதோடு, தான் அங்கு எடுக்கப்பட்ட முடிவினை செயற்படுத்தும் அமைச்சர் மட்டுமே என்றும் கூறினார். மேலும், இந்த முடிவினை மாற்றவோ, அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ தனக்கு அதிகாரம் இல்லையென்றும் கையை விரித்துவிட்டார்.

 1972 இல் புதிய தரப்படுத்தல் திட்டம் அமுலாக்கப்பட்டு அதன் தீவிரத் தன்மை தமிழ் மாணவர்களால் உணரப்பட்டபோது, தமிழ் மாணவர் பேரவை தனது எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடத் தொடங்கியது. சிங்கள வராலாற்று ஆசிரியரான கெ. எம். டி சில்வா இத்தரப்படுத்தல் முறை பற்றி பதிவிடும்போது, 1972 இல் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்கள் 400 புள்ளிகளுக்கு வெறும் 229 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்த நிலை போதுமானதாக இருக்க தமிழ் மாணவர்களோ 250 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறே பல்வைத்தியத் துறைக்கு சிங்கள மாணவர்கள் 215 புள்ளிகள் மட்டுமே பெற்றுத் தெரிவாகும்போது, தமிழ் மாணவர்கள் குறைந்தது 245 புள்ளிகளாவது பெறவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கால்நடை வைத்தியத்துறைக்கு சிங்கள மாணவர்கள் 200 புள்ளிகளுடன் தெரிவாகியபோது தமிழ் மாணவர்கள் 230 புள்ளிகளுக்கு அதிகமாக எடுத்தால் ஒழிய தேர்வுசெய்யப்படும் நிலையினை இழந்திருந்தார்கள். இது பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி 1972 இல் பல்கலைக்கழகங்களுக்கு விஞ்ஞான பாடங்களுக்குத் தெரிவான மாணவர்களில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 33.6 வீதமாக வீழ்ச்சியடைய சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 63 வீதமாக அதிகரித்திருந்தது. இந்தச் சரிவு பின்வரும் வருடங்களில் மேலும் அதிகரித்ததுடன் 1973 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 29.3 வீதமாக வீழ்ச்சிகாண சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 67.4 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.

 தாம் இனரீதியில் பாகுபாடு செய்யப்பட்டதை உணர்ந்த தமிழ் மாணவர்கள், சிங்கள அரசியல்த் தலிமைகளிடமிருந்து தமிழ் மாணவர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லையென்பதையும் உணரத் தலைப்பட்டார்கள். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர இருக்கும் ஒரே மார்க்கம் தனிநாடுதான் என்றும் அதனை அடைவதற்கான ஒரே வழி ஆயுத ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமே என்று திடமாக நம்பத் தொடங்கினார்கள். பிரபாகரனும், சிவகுமாரனும் இந்த எண்ணக்கருவை மிகவும் ஆணித்தரமாகவும், உணர்வுபூர்வமாகவும் தமது தோழர்களிடையே பரப்பத் தொடங்கியிருந்தனர்.

தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! - Global Tamil News

பொன் சிவகுமாரன் 

ஆனால் இவர்கள் இருவரும் பெரிதாகச் சந்தித்துக்கொண்டதில்லை. தமக்கே உரிய அமைப்புக்களில் இதனை அவர்கள் செய்துவந்தார்கள். இவர்கள் இவ்வாறு தனித்தனியாகச் செயற்பட்டு வந்தாலும், இவர்கள் இருவருக்குமே பல பொதுவான பண்புகள் இருந்ததாக அவர்களின் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்கவில்லை, தமது நோக்கங்கள் நிறைவேற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு அவர்களிடம் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் இருவருமே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோசை தமது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசவும், ஆலோசிக்கவும், வாதிடவும் அவர்களால் முடிந்தது. சிவகுமாரன் பற்றிப் ருத்திரமூர்த்தி சேரன் பின்வருமாறு கூறுகிறார், 

"சிவகுமாரன் ஆயுதப் போராட்டம் பற்றி இரவிரவாகப் பேசுவார். ஆயுதப்போராட்டமே தமிழர்களின் ஒரே தீர்வு என்பதை அவர் எமக்குக் கூறிக்கொண்டே இருப்பார்".

 பிரபாகரனின் முன்னைய தோழர்களில் ஒருவர் பேசும்போது, 

"அவர் பேசத் தொடங்கினால், அவரை நிறுத்துவது கடிணமானது. தமிழர்களின் பாரம்பரிய புகழ்பற்றித் தொடர்ச்சியாகப் பேசும் பிரபாகரன், அப்புகழினை மீண்டும் தமிழினம் அடையவேண்டும் என்றால் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினூடாக தனிநாட்டினை உருவாக்குவதன் மூலமே அதனைச் செய்யமுடியும் என்று அவர் கூறுவார்" என்று பகிர்ந்தார்.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எரிக்கப்பட்ட பேரூந்து

Valvettithurai.org :: Weekly Photos of Valvai. (Valvettiturai, Valvai, VVT,  வல்வெட்டித்துறை, வல்வை)

 பிரபாகரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்றது. அவரும் அவரது மூன்று தோழர்களும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தொன்றிற்குத் தீமூட்டியிருந்தனர். அரசாங்கத்தின் தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நோக்கில் அரசுடைமைகளை எரியூட்டுவது சரியானதாக அவர்களுக்குப் பட்டது. ஆனால், அவ்வாறு அரசுடைமைகளைச் சேதப்படுத்தும்போது பொதுமக்கள்ளுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் அவர்கள் மிகக் கவனமாக செயற்பட்டுவந்தனர். வல்வெட்டித்துறைக்கான தனது அன்றைய சேவையினை முடித்துக்கொண்டு பருத்தித்துறையில் அமைந்திருக்கும் பேரூந்து டிப்போவுக்கு வரும்வழியில் அதனை எரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. 

வல்வெட்டித்துறைக் கிராமத்தின் மூலையிலிருந்த ஒதுக்குப்புறமான வீதியின் அருகில் பிரபாகரனும் அவரது தோழர்கள் மூவரும் கைகளில் பெற்றோல் கொள்கலன் ஒன்றையும், தீப்பெட்டிகளையும் ஏந்திக்கொண்டு காத்திருந்தனர். தூரத்தில் பேரூந்தின் விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்ட தோழர்கள் இருட்டினுள் நழுவிவிட, பிரபாகரன் நிதானமாக தாம் கொண்டுவந்திருந்த தென்னை மரக் குற்றியினை வீதிக்குக் குறுக்காக இழுத்துப் போட்டார். தமக்கு முன்னால் விதிக்குக் குறுக்கே கிடந்த தென்னங்குற்றியை அகற்றிவிட பேரூந்தின் சாரதியும் நடத்துனரும் கீழே இறங்கிவர, அவர்களை பேரூந்தைவிட்டு விலகிச் செல்லுமாறு விரட்டினார் பிரபாகரன். மக்கள் எவருமற்றை வெற்றுப் பேரூந்தின் மீது தான் கொண்டுவந்த பெற்றோலினைத் தெளித்துவிட்டு, பேரூந்திற்குத் தீமூட்டினார். இந்தச் சம்பவத்தின் பின்னர் தோழர்களிடையே பிரபாகரனுக்கான மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

Somaweera Chandrasiri - Wikipedia

 சோமவீர சந்திரசிறி

சிவகுமாரனின் முதலாவது வன்முறைச் செயற்பாடு 1970 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இடம்பெற்றது. சிங்களப் பெளத்த இனவாதி என்று தமிழரால் பரவலாக அறியப்பட்ட உதவிக் கலாசார அமைச்சர் சோமவீர சந்திரசிறி உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவர்மேல் தக்குதல் நடத்தத் திட்டமிட்ட சிவகுமாரன் காரின் அடிப்பகுதியில் தான் கொண்டுவந்த குண்டினைப் பொறுத்திவிட்டு கூட்டத்திற்குள் மறைந்துபோனார். சிறிது நேரத்தில் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதற உதவியமைச்சரின் காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், இத்தாக்குதலில் அமைச்சருக்கோ அல்லது வெறு எவருக்குமோ எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து இன்னொரு தாக்குதல் முயற்சியையும் சிவகுமாரன் மேற்கொண்டார். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவை இலக்குவைத்து 1971 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒரு குண்டுத்தாக்குதலை அவர் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த துரையப்பாவின் கார்மீது தான் கொண்டுவந்த கையெறிகுண்டை அவர் வீசியெறிய காரும் பலத்த சேதமடைந்தது. ஆனால், துரையப்பா அப்போது அங்கிருக்காததினால் தப்பித்துக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மேயராக இருந்த 1971 முதல் 1975 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக அல்பிரெட் துரையப்பாவே செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைக் குடியரசு யாப்பு

Forgotten Republic Day is our true independence day - PressReader

 தமிழ் மாணவர் பேரவை வீதிப் போராட்டங்களையும், சுவரொட்டிப் போராட்டத்தினையும் முடுக்கிவிட்டிருந்த அதே காலப்பகுதியில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசியலமைப்புச் சபையொன்றினை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பின்படி இலங்கை நாடானது சுதந்திரமான, இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு உழைப்பதாகக் கூறிச் செயற்பட்டு வந்த சமஷ்ட்டிக் கட்சியும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசுக்கு உதவ முன்வந்திருந்தது.

ஆனால், சமஷ்ட்டிக் கட்சியின் அரசுடனான இந்த ஒத்துப்போதல் முடிவிற்கு தமிழ் இளைஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. உத்தேச அரசியலமிப்பிற்கும் தமிழ்ப் பராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பிருக்கக் கூடாது என்று வாதிட்ட இளைஞர்கள் இந்த அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்பொழுது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இச்சட்டம் அமுலாக்கப்படும் என்றும், ஏற்கனவே நலிந்துபோயுள்ள தமிழரின் இன்றைய நிலை உலகத்தின்முன்னால் மேலும் பலவீனமாக்கப்பட்டுவிடும் என்றும் அவர்கள் வாதாடினர். சுந்தரலிங்கமும் நவரட்ணமும் இந்த அரசியல் யாப்புருவாக்க முயற்சியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சியை விலகிநிற்குமாறு தம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்தனர். ஆனால், அரசியல் யாப்புருவாக்கத்தில் தனது பங்களிப்பினையும் நல்குவது எனும் முடிவில் சமஷ்ட்டிக் கட்சி மிகவும் உறுதியாக நின்றுவிட்டது. தமது இறுதி முயற்சியாக சுந்தரலிங்கமும் நவரட்ணமும் சமஷ்ட்டிக் கட்சியின் யாழ்ப்பாண நகர மேயர் நாகராஜாவின் வீட்டில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர்களை சந்தித்து அவர்களை அரசியலமைப்பு விவகாரத்திலிருந்து விலகும்படி கேட்கச் சென்றிருந்தனர். ஆனால், அங்கு பேசிய அமிர்தலிங்கம், "அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு சமஷ்ட்டிக் கட்சியினைப் போகக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை" என்று மிகவும் கண்டிப்பாகக் கூறினார்.

Reflecting on the PTA and Amirthalingam - Opinion | Daily Mirror

 பிரபல சிங்கள பெளத்த இனவாதிகளுடன் அமிர்தலிங்கம்

சுந்தரலிங்கத்திடமும், நவரட்ணத்திடமும் பேசிய அமிர்தலிங்கம், "இலங்கை சமசமாஜக் கட்சியின் உப  தலைவர் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவே அரசியலமைப்பு விவகார அமைச்சராகவும் மலையகத் தோட்டங்களின் அமைச்சராகவும் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் எமது பாராளுமன்ற உறுப்பினர் திருச்செல்வத்துடன் பேசும்போது புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கென்று பல சலுகைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினை தவறவிடக் கூடாதென்று கூறியிருக்கிறார்" என்றிருக்கிறார். 

Leslie Goonewardene - Wikiwand

சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்களை நம்பவைத்து ஏமாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா - சிறிமாவுக்கு இடதுபுறத்தில்.
 

1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்களில் கொல்வின் ஆர் டி சில்வாவும் ஒருவர் என்பதால் அமிர்தலிங்கம் உட்பட பல சமஷ்ட்டிக் கட்சி தலைவர்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். "ஒரு மொழியென்றால் இரு நாடு, இரு மொழியென்றால் ஒரு நாடு" என்ற கொல்வின் ஆர் டி சில்வாவின் மயக்க வார்த்தைகளில் மதிமயங்கிய சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அவரால் தாம் முழுமையாக ஏமாற்றப்படவிருக்கிறோம் என்பதனை அப்போது அறிந்திருக்கவில்லை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொறுமையிழந்த தமிழ் மக்கள்

S. J. V. Chelvanayakam - Wikipedia

1970 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் வவுனியாவில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு கொல்வின் ஆர் டி சில்வாவின் வேண்டுகோள் பற்றி ஆராய்ந்தது. கூட்டத்தில் பேசிய தந்தை செல்வா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்ல நல்ல விடயங்களை இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கியிருப்பதால் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தினைத் தவற விடக்கூடாது என்று கூறினார். சி ராஜதுரை, சி என் நவரட்ணம் ஆகியோர் இதனால் தமிழருக்கு ஏதாவது நலன்கள் கிடைக்கும் என்று நம்புகிரீர்களா என்று செல்வாவிடம் தமது சந்தேகத்தை எழுப்பினர். இறுதியில் இந்த அழைப்புப் பற்றி தமிழ்ச் சமூகத்திலுள்ள முக்கியமானவர்களுடன் கலந்துரையாடி அரசியலமைப்புச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பதனை முடிவெடுக்கலாம் என்றும், அவ்வாறு பங்கெடுக்கும் பட்சத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வுகளை எப்படி உறுதிசெய்துகொள்ளலாம் என்பதுபற்றியும் தீர்மானிக்கலாம் என்றும் முற்றாகியது.

 305033690_541323177792967_6621207517160082599_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=e3f864&_nc_ohc=pfdJ3kopCHUAX_xwxGy&_nc_ht=scontent.fsyd10-2.fna&oh=00_AfBrEwY_HGQpwgp2Yh4lw-qq1bnx4jh230vwJ1zu44P0xw&oe=63B5D5FD

சரியாக ஒரு வாரத்தின் பின்னர் கொழும்பு சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியினர், கொழும்பிலிருந்த பிரபலமான தமிழ் வழக்கறிஞர்கள், மூத்த தமிழர்கள் ஆகியோருடன் நீண்ட கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைகளின் முடிவில் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்வதென்று முடிவாகியது. அதேவேளை, யாப்பினை உருவாக்கும் பொழுது தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்படுவதை யாப்புருவாக்கத்தில் பங்குபற்றும் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் முடிவில் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், 

"இக்கூட்டம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. மேலும், இந்த யாப்பில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் சமஷ்ட்டி அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை இவர்கள் அரசிடம் முன்வைப்பார்கள். மத்திய அரசிடமிருந்து கணிசமான அதிகாரங்கள் பிராந்தியங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்யும் வழியில் யாப்பு அமைய இவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தும், தாய்மொழியில் கல்விகற்கும் நிலையும் ஏற்பட அழுத்தம் கொடுப்பதுடன் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், அவ்வாறு மீறப்படும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்வார்கள். மேலும் அதிகாரம் மிக்க அமைப்பொன்றினை நாம் உருவாக்கி, அதன்மூலம் எமது பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு அரசிடம் கையளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றும் கூறினார்.  

 பிரதமர் சிறிமாவின் அழைப்பினையேற்று 1970 ஆம் ஆண்டு, ஆடி 19 அன்று ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று நாள் கருத்தரங்கின் பின்னர் அரசியலமைப்பு உருவாக்கச் சபையினை சேர்ந்து உருவாக்கினார்கள். இச்சபை புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதனைச் சட்டமாக மாற்றவும், இறுதியில் அதனை அரசியலமைப்பாக நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்தார்கள். 

எதிர்க்கட்சித் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா, சமஷ்ட்டிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கதிரவேற்ப்பிள்ளை, தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி ஆனந்தசங்கரி ஆகியோர் தமது கட்சிகள் ஆதரவு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு இருக்கும் என்பதனை உறுதிப்படுத்தினர். அரசியலமைப்பை வரைவதற்காக அமைக்கப்பட்ட செயலணி அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருந்ததுடன் அரசியலமைப்பின் அடிப்படை நகலினை இனிவரும் கூட்டங்களில் வரையலாம் என்றும் முடிவெடுத்தது. 

சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு கமிட்டி தமது பரிந்துரைகளை ஒரு நகலாக வரைந்து புரட்டாதி மாதமளவில் பிரதான அரசியலமைப்பு குழுவின் முன்னால் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரை நகலில் 7 தலைப்புகளின் கீழ் 60 கட்டுரைகள் வரையப்பட்டிருந்தன. தமிழர்களின் பிரதான ஐந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய அடிப்படை தீர்வுகளை இந்த நகல் கொண்டிருந்தது.

சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த பரிந்துரைகளில் பகுதி 1 சமஷ்ட்டிக் கட்டமைப்புப் பற்றி விவரிக்கிறது. அதன்படி ஒரு மத்திய அரசாங்கமும் ஐந்து பிராந்திய அரசுகளும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து பிராந்தியங்களும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள்ஒரு பிராந்தியமாகவும், தென்னஞ்செய்கை அதிகமாகக் காணப்படும் வடமேற்கு மற்றும் வட மத்திய பகுதிகள் ஒரு பிராந்தியமாகவும், தேயிலை, இறப்பர் அதிகமாகப் பயிரிடப்படும் ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இணைந்து மூன்றாவது பிராந்தியமாகவும், வடமாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கிய கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் இணைந்து வட கிழக்குப் பிராந்தியமாகவும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அம்பாறை மாவட்டம் தென்கிழக்குப் பிராந்தியமாகவும் வகுக்கப்பட்டிருந்தன. 

பகுதி ஒன்றில் மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் அதிகாரத்தினை எவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கம் பாராளுமன்றம் மூலம் நடத்தப்படும் அதேவேளை பிராந்திய அரசுகள் அவற்றிற்கான பிராந்திய அதிகார சபைகளினால் நிர்வகிக்கப்படும். இந்த பிராந்திய அலகுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களை அப்பிராந்தியங்களின் மக்களே தெரிவுசெய்வார்கள். பிராந்திய அலகுகள் மேலும் பல நிர்வாகக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான தலைவர்கள் உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்படுவார். இந்தக் கமிட்டியின் தலைவர்கள் பிராந்திய சபைக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க, இவ்வாறு பரிதுரைக்கப்படும் உறுப்பினர்களால் அப்பிராந்தியத்துக்கான முதலமைச்சர் தீர்மானிக்கப்படுவார். 

இதன்படி மத்திய அரசாங்கம் பின்வரும் விடயங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும். சர்வதேச தொடர்பாடல்கள், பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கு, காவல்த்துறை, பிரஜாவுரிமை, குடிவரவு & குடியகல்வு, சுங்கத்துறை, தபால் & தொலைத்தொடர்புத்துறை, துறைமுகங்கள், கடல், வான் மற்றும் ரயில் போக்குவரத்து, பிராந்தியங்களுக்கிடையிலான வீதிப் பராமரிப்பு, மின்சாரத்துறை, நீர்ப்பாசனம், அளவைகள், சுகாதாரம் & கல்வி தொடர்பான கொள்கை வகுப்பு, மத்திய வங்கி & பணவியல் கொள்கை. 

இவை தவிர்ந்த ஏனைய துறைகளும் அதிகாரங்களும் பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பகுதி 4 தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்பாட்டில் இருக்கும் என்றும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற சேவைகள் தமிழ் மொழியிலேயே நடைபெறும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நீதிமன்ற சேவைகள் சிங்கள மொழியிலேயே நடைபெறும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் நாட்டில் எந்தவொரு தனிமனிதனும் தனது தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பாட முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

பகுதி 5 இன்படி, பிராந்தியங்களின் மக்களுக்கான அரச கட்டளைகள், அறிவுருத்தல்கள் அவர்களின் தாய்மொழியிலேயே அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.

பகுதி 3 ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதோடு தனிமனிதனுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக அம்மனிதன் நீதிச்சேவையினைப் பெற்றுக்கொள்வ்தற்கான அடிப்படை உரிமை என்பன பற்றிக் குறிப்பிடுகிறது.

 

உத்தேச அரசியலமைப்பினை வழிநடத்திச் செல்லும் குழுவும், பகுதிகளுக்குப் பொறுப்பான குழுக்களும் 1971 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூடி கலந்தாலோசித்து வந்தபோதும் கூட, சமஷ்ட்டிக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நகலினை ஏறெடுத்தும் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை தீர்மானங்களை அரசியல் யாப்பாக்குவதிலேயே குறியாக இருந்தனர்.

அதன்படி அரசு முன்வைத்த தீர்மானங்களில் முதலாவதாக இலங்கை நாடு சுதந்திரமான, இறமையுள்ள சோசலிசக் குடியரசு என்பது சேர்க்கப்பட்டு, முற்றான ஆதரவுடன், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இரண்டாவது அடிப்படைத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது,

"இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியினை மட்டுமே கொண்ட நாடாகும்". இது தொடர்பாக சமஷ்ட்டிக் கட்சி தனது கடுமையான ஆட்சேபணையினை அரசிடம் முன்வைத்தபோதும்கூட, அதனை அரசு கண்டுகொள்ளவில்லை.

V.-Dharmalingam.jpg 

எஸ் தர்மலிங்கம்

சமஷ்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தர்மலிங்கம் இந்த அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றினை பங்குனி 16 அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அவரின் மாற்றம் பின்வருமாறு கூறியது, "இலங்கைக் குடியரசு பிரிவினையற்ற சமஷ்ட்டிக் குடியரசாக இருக்கும்" என்பதாகும். பாராளுமறத்தில் சிங்களத் தலைவர்களிடம் மன்றாட்டமாகப் பேசிய தர்மலிங்கம், இனச்சமத்துவம் இல்லையேல் நாடு பாரிய இனச்சிக்கலுக்குள் அகப்படும் என்றும், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைக் காணும் என்றும் கூறினார். ஆகவே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக் கூடியது என்றும், இதனால் முழு நாடுமே நண்மைஅடையும் என்றும் கூறினார். ஆனால், அரச தரப்பிலிருந்த் அனைத்து உறுப்பினர்களும் தர்மலிங்கத்தின் வேண்டுகோளினை முழுமையாக எதிர்த்துப் பேசியதுடன் சமஷ்ட்டி தொடர்பில் தாம் ஒருபோது சிந்திக்கவோ செயற்படவோ போவதில்லையென்றும் கூறினர்.

தர்மலிங்கத்தின் பேச்சு கீழே,

"உங்களிடம் சமஷ்ட்டி அமைப்புப் பற்றிப் பேச ஆணையோ அதிகாரமோ இல்லையென்றால் குறைந்தபட்சம் மத்திய அரசிடம் குவிந்துகிடக்கும் நிர்வாக அதிகாரங்கச்ளையாவது மாநிலங்களுக்குப் பகிர்ந்துகொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்".

 "நான் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற அமர்விலேயே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் ஒற்றையாட்சி அமைப்பினை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதற்கு மேலதிகமாக 1965 இல் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விற்கே தமது ஆணையைத் தந்திருக்கிறார்கள்". என்று கூறினார்.

 ஆனால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த ஆட்சேபணைகளுக்கும் மத்தியிலும் ஒற்றையாட்சியை மையமாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பங்குனி 27 அன்று சட்டமாக்கப்பட்டது.

தர்மலிங்கம் ஒரு தீவிர சோஷலிச ஆதரவாளர். சிங்கள அரசுத் தலைவர்களின் இனவாதப் போக்குக் குறித்து மனமுடைந்த அவர் பின்வருமாறு தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார், 

" இன்றைய நாள் இலங்கையின் துரதிஷ்ட்டமான நாள். எனது சிங்கள நண்பர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிங்கள மக்கள் பற்றியும், அவர்களின் நலன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களை பார்க்க மறுக்கும் அவர்கள் , தமிழர் நலன்கள் பற்றி எதுவித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை". 

ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள்ளேயே இலங்கையினை வழிநடத்த ஆரம்பித்த சிங்களத் தலைவர்கள், சமஷ்ட்டி கட்சி பரிந்துரைத்த தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, உத்தியோக பூர்வ மொழிப் பயன்பாடு குறித்தும் கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்ததுடன், அதனையும் முற்றாக நிராகரித்தும் இருந்தனர். இதற்கு மாற்றீடாக அரசு முன்வைத்த அடிப்படை தீர்மானம் பின்வருமாறு கூறியது,

 "1965 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் யாப்பின் பகுதி 33 இன் படி இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக  சிங்களம் மட்டுமே இருக்கும்" என்று கூறியது. இதன்மூலம்  சிறிமாவின் அரசு முன்னைய பிரதமர் ண்டாரநாயக்காவின் 1965 ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியினை முடிந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் பயன்படுத்தும் சட்டத்தினை மீளவும் கொண்டுவருமாறு சமஷ்ட்டிக் கட்சியினர் முன்வைத்த கோரிக்கையினையும் அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. 

அத்துடன், சிங்கள மொழிக்கு விசேட அந்தஸ்த்தும், மொழிரீதியிலான வழக்குகள் பிற்காலத்தில் வருமிடத்து அதற்கெதிரானா காப்பும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும், அடிப்படை தீர்மானங்களின்படி மொழிதொடர்பான சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலேயே இருக்குமென்றும், தேவையேற்படின் அச்சட்டங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான அனைத்துச் சட்டங்களும் தமிழ் மொழியிலும் இருக்கும் எனும் கோரிக்கை இந்த அடிப்படைத் தீர்மானத்தின் மூலம் முற்றாக நிராகரிப்பட்டுப் போனது. அத்துடன், நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் சமஷ்ட்டிக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளில் தமிழ்மொழியே பயன்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் இச்சட்டத்தின்மூலம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. 

K-Jeyakody-213x300.jpg

கே ஜெயக்கொடி

தமிழ் மொழியும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கும், சிங்கள மொழிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வரையப்பட்டு சட்டமாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் குறித்து பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் சமஷ்ட்டிக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே ஜெயக்கொடி பாராளுமன்றத்தின் தனது ஆட்சேபணையினை பின்வருமாறு தெரிவித்தார், "நீங்கள் குறைந்தத பட்சம் வடக்குக் கிழக்கில் உள்ள நீதிமன்றங்களிலாவது தமிழ் மொழியில் நீதிமன்ற அமர்வுகளை நடத்த அனுமதியுங்கள்" என்று கோரியபோது, சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை எள்ளிநகையாடி, மறுதலித்துக்கொண்டிருந்தனர்.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் பெளத்த மதத்திற்கு அதிவிசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அடிப்படை தீர்மானத்தின்படி பெளத்த மதத்திற்கான முன்னுரிமை இவ்வாறு கூறப்பட்டது, " இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முக்கிய இடம் வழங்கப்படும். மேலும், பெளத்த மதத்தினை போற்றிப் பாதுகாத்து, அதனை மேலும் வளர்ப்பது அரசுகளின் தலையாய கடமையாகும். மற்றைய மதங்களுக்கான உரிமைகள் இச்சசனத்தின் 18 ஆம் பகுதி, பிரிவு 1 "டி" இல் குறிப்பிடப்பட்டதுபோல வழங்கப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது.

சிங்கள பெளத்த மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்த அரசியலமைப்பை வரைந்தவர்கள் இத்துடன் நிற்கவில்லை. சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் பகுதி 29 இல் குறிப்பிட்டிருந்த "சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளிலிருந்தான பாதுகாப்பு" எனும் சரத்து இப்புதிய அரசியலமைப்பில் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. சோல்பரி யாப்பு, பகுதி 29 , பிரிவு 2C இன் பிரகாரம் ஒரு மதமோ, இனமோ ஏனைய மதத்தினருக்கோ அல்லது இனமக்களுக்கோ பாதகம் விளைவிக்கும் வகையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமும் இந்தப் புதிய அரசியலமைப்பில் இருந்து முற்றாக அகற்றப்பட்டது.

 பல லட்சம் மலையகத் தமிழரின் வாக்குறிமைகளைப் பறித்தபோது நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பின் சட்டம் அம்மக்களைக் காக்க முடியாதபோதும், அச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்வரை எதிர்காலத்தில் சிங்கள மக்களின் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையினையும் இச்சோலப்ரி யாப்பின் சட்டம் தடுத்துவிடலாம் என்று அஞ்சிய சிறிமாவோ, இந்த சரத்து முற்றாக நீக்கப்படவேண்டும் என்று அரசியலமைப்பினை வரைந்தவரான கொல்வி ஆர் டி சில்வாவிடமும் ஏனைய சிங்களவர்களிடமும் கூறியிருந்தார். அத்துடன், பாராளுமன்றமே அதியுயர் அதிகாரம் மிக்க அமைப்பு என்று கூறியதுடன், பாராளுமன்றத்தில் அதிகப்படியான பெரும்பான்மையினைக் கொண்ட சிங்களவர்களின் பலம் மேலும் அதிகரிக்கப்படுவதோடு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையேலே நாடு இயங்கும் என்பதும் இதன்மூலம் உறுதியாகியது.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்பிக்கையிழந்த தமிழர்கள்

 சிறிமாவின் அதிதீவிர இனவாத நிலைப்பாடு தமிழரிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது, குறிப்பாக இளைஞர்களிடையே இது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் சிங்களவர்களை மேலும் நம்பத் தயாராக இருக்கவில்லை. தமிழர்களின் மனநிலை சிறிது சிறிதாக இறுக்கமடையத் தொடங்கியிருந்தது. அரசியல் யாப்புருவாக்கத்தில் அதுவரையில் பங்களிப்புச் செய்துவந்த சமஷ்ட்டிக் கட்சியை அதிலிருந்து உடனடியாக விலகுமாறு இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். "உங்களது கோரிக்கைகள் அனைத்தையுமே அவர்கள் நிராகரித்துவிட்ட பின்னரும் இன்னும் ஏன் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்து வருகிறீர்கள்?" என்று அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அடங்காத் தமிழன் என்று அறியப்பட்ட சுந்தரலிங்கம் இதுதொடர்பாக தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்,

 "உங்களை போகவேண்டாம் என்று சொன்னோம். உங்களை மீறி அவர்கள் தமக்கு விரும்பியதைச் செய்துவிடுவார்கள் என்று கூறினோம். இப்போது என்ன நடந்திருக்கிறதென்பதை பாருங்கள்? உங்களைத் தமது பலத்தின் மூலம் தோற்கடித்திருக்கிறார்கள். உங்கள் குரலினை அவர்கள் செவிசாய்க்கவில்லை.நாங்கள் உங்களை எச்சரித்தபடியே தமிழரின் இலட்சியத்தை பலவீனப்படுத்திவிட்டு வந்து நிற்கிறீர்கள்" என்று கடுமையாக சமஷ்ட்டிக் கட்சியினரைச் சாடியிருந்தார்.

 சுந்தரலிங்கத்தின் விமர்சனத்திற்குப் பதிலளிக்க சமஷ்ட்டிக் கட்சி அமிர்தலிங்கத்தை நியமித்திருந்தது. பத்திரிக்கையாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது, தாம் தோற்கடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். தனது கருத்தினை பத்திரிக்கையில் பிரசுரிக்க வேண்டாம் என்று கூறிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், 

"அவருக்கு என்ன பதிலினை நான் கொடுக்க முடியும்? அரசாங்கத்திலிருக்கும் இடதுசாரிகள் கூட எம்மை ஏமாற்றி விட்டார்கள். இளைஞர்களின் முன்னால் நாம் இப்போது முட்டாள்களைப்போல நிற்கிறோம்"

 இந்த அவமானகரமான தோல்வியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சிக்கு வெளியே வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனி 21 ஆம் திகதி அரசியலமைப்புக் குழுவிலிருந்து தமது கட்சி வெளியேறுவதாக தந்தை செல்வா அறிவித்தார். தாமது முடிவுபற்றி தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், 

"இந்த அரசியலமைப்பில் பிரஜாவுரிமை, அடிப்படை மனிதவுரிமைகள் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவர நாம் முயற்சித்தோம். ஆனால், அவை அனைத்தையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவது குறித்தும் பேசுவதற்கு பிரதமருடனும் அரசியல் யாப்பு அமைச்சருடனும் முயற்சித்தேன். பாராளுமன்ற வாக்குப் பலத்தினால் மட்டுமல்லாமல், பரஸ்பர விட்டுக்கொடுப்பினாலும் இணக்கப்பாட்டினை உருவாக்கமுடியும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால், இவை எதுவுமே அவர்களுடான பேச்சுக்களின்போது என்னால் செய்துகொள்ளமுடியாமற் போய்விட்டது. இனச்சிக்கல் குறித்து விட்டுக்கொடுப்புகளைச் செய்து இணக்கப்பட்டிற்கு வருவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அரசியல் யாப்பில் குறைந்தபட்சம் அடிப்படை உரிமைகளாவது உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரதமரையும், அரசியலமைப்பு அமைச்சரையும் நாம் வேண்டினோம், எமது கோரிக்கைகளை செவிமடுக்க அவர்கள் தயாராக இருந்தபோதும், அவற்றினை ஏற்றுக்கொண்டு யாப்பில் திருத்தங்களைச் செய்ய அவர்கள் விடாப்பிடியாக மறுத்து விட்டனர்" என்று கூறினார். 

அரசியல் யாப்புருவாக்க சபையில் இருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறுவதாக எடுத்த முடிவினை இளைஞர்கள் ஒரு வெற்றியாகவே பார்த்தனர். சிங்களவர்களுடனான இணக்கப்பாட்டு அரசியல் படுதோல்வியினைச் சந்தித்துவிட்டதனால், இனிமேல் வேறு போராட்ட மார்க்கங்களின் மூலமே எமது இலட்சியத்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களைத் தவிர பெரும்பாலான மக்கள் வன்முறையற்ற வழிமுறைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுப் பார்க்கலாம் எனும் எண்ணத்திலேயே இருந்தனர்.

 

புரட்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் 

JVP-11.jpg?ssl=1

1971 இல் அரசியலமைப்புச் சபை யாப்பினை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை , தமிழ் இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில்  தமது கவனத்தைச் செலுத்தியிருந்தனர். முதலாவது பங்குனி - சித்திரை மாதங்களில் தெற்கில் இடம்பெற்று வந்த மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகம். இரண்டாவது, மார்கழியில் இடம்பெற்ற வங்கதேசத்திற்கான சுதந்திரப் போர்.

சாதாரண தமிழர்களோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தெற்கில் இடம்பெற்றுவந்த தீவிர இடதுசாரிகளின் ஆயுத வன்முறை பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, அது ஒரு தனிச்சிங்களப் பிரச்சினை, இரு சிங்களப் பிரிவுகளுக்கிடையேயான பிணக்கு, அவ்வளவுதான். ஆட்சியிலிருக்கும் சிறிமாவின் அரசாங்கத்திற்கும், அவ்வாட்சியுடன் முரண்பட்ட சிங்கள இளைஞர்களுக்கும் இடையேயான பிரச்சினையாகவே அதனை அவர்கள் கருதியதால், தமிழர்களுக்கும் அப்பிரச்சினைக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 

ஆனால், வங்கதேச விடுதலைக்காக அங்கே நடந்துவந்த போர்பற்றி அதிக அக்கறை தமிழர்களால் காட்டப்பட்டது. பல தமிழர்கள் இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிய சமயத்திலிருந்தே அதனை மிக ஆளமாக உள்வாங்கி செய்திகளைப் பிந்தொடர்ந்து வந்தனர். தமிழர்கள் இந்தப் போரில் அதிக ஆர்வம் காட்டக் காரணமாக அமைந்தது இந்தியா, இன்னொரு நாட்டின் சுதந்திரத்திற்காக போரில் இறங்கியிருக்கிறது என்பதுதான். அதுமட்டுமல்லாமல், போரின் இறுதியில் வங்காளதேசம் எனும் புதிய சுதந்திர நாடு உருவாக்கப்பட்டதையும் அவர்கள் உன்னிப்பாக அவதானித்து வந்தார்கள்.

 தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைக் கலகமும், வங்கதேச சுதந்திரப் போராட்டமும் கிட்டத்தட்ட 1970 இன் ஆரம்பகாலத்திலேயே உருப்பெறத் தொடங்கியிருந்தன. இந்த இரு சம்பவங்களுக்குமான அடிப்படைக் காரணங்கள் ஏறத்தாள ஒரேமாதிரியானவை. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தெற்கின் சிங்கள இளைஞர்கள் அரசுக்கெதிரான சுலோகமாக "எங்களுக்கு தேங்காய்ப்பாலைத் தந்துவிட்டு, கொழும்பிலிருப்பவர்களுக்கு பசுப்பாலையா கொடுக்கிறீர்கள்?" என்பதை முன்னிறுத்தினார்கள். அதேவேளை வங்கதேச சுதந்திரப் போரில், "கிழக்குப் பாக்கிஸ்த்தானை மேற்குப் பாக்கிஸ்த்தான் சுரண்டுகிறது" என்பது கோஷமாக முன்வைக்கப்பட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் விடுதலை முன்னணியின் கலகம்

 JVP-1971.jpg?resize=899%2C661&ssl=1

சித்திரை ஐந்தாம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினர் தமது தாக்குதல்களை மொனராகலைப் பகுதியிலும், வெல்லவாயாப் பகுதியிலும் ஆரம்பித்தனர். மாலையே அரம்பிக்க திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், தவறான தொடர்பாடலினால் முன்னரேயே அரம்பித்து விட்டிருந்தது. சித்திரை 2 ஆம் திகதி வித்யோதய சங்கராமய எனும் பெளத்த விகாரையில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் நாடுதழுவிய ரீதியில் தமது தாக்குதல்களை சித்திரை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து ராணுவ மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதென்று முடிவெடுத்திருந்தார்கள். சங்கேத மொழியில் அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில் ".வி.மு அப்புஹாமி இறந்துவிட்டார், நல்லடக்கம் 5" என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சமிக்ஞையாக அரச வானொலியில் "நீல கொப்பேயா" எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொனராகலையிலும், வெல்லவாயாவிலும் ஆயத்தமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் காலையிலேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். சுதாரித்துக்கொண்ட சிறிமாவின் அரசு நாட்டின் ஏனைய பொலீஸ் ராணுவ முகாம்களை உஷார் நிலைக்குக் கொண்டுவந்தது. தாக்குதலை எதிர்பார்த்து பொலீஸாரும் ஆயத்தத்துடன் இருந்தனர். தாக்குதலை முறியடித்து, முன்னேறும் முயற்சிகளையும் பொலீஸார் மேற்கொண்டனர். தமது தவற்றினை உணர்ந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு, தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை. 

சுமார் 25 - 30 வரையான இளைஞர்கள், பொலீஸ் நிலையங்களைச் சுற்றிவளைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பெற்றொல்க் குண்டுகளையும், கையெறிகுண்டுகளையும் பாவித்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். நாடு முழுவதுமிருந்த 273 பொலீஸ் நிலையங்களில் 93 பொலீஸ் நிலையங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. பலவீனமான பகுதிகளில் அமைந்திருந்த காவல் நிலையங்களை அரசாங்கமே மீளப்பெற்றுக்கொண்டது.

Deniyau.png

 சிங்களக் கலகக்காரர்கள் மிகவும் பலவீனமான ஆயுதங்களை வைத்திருந்தனர், அவர்களில் எவருக்குமே தரமான போர்ப்பயிற்சிகள் கிடைத்திருக்கவில்லை, அவர்களைச் சரியான திட்டத்தில் வழிநடத்தத்தன்னும் தலைவர்கள் இருக்கவில்லை. அவர்களின் ஆரம்ப வெற்றிகளுக்கான ஒரே காரணம் பொலிஸார் இத்தாக்குதல் பற்றி அறிந்திருக்காமைதான். ஆனால், ஆரம்பகட்டத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டவுடன், தன்னை மீள ஒருங்கமைத்த அரசகாவல்த்துறை கடுமையான எதிர்த்தாக்குதலை முடுக்கிவிட்டது.  ராணுவமும் துணைக்கு அழைக்கப்பட்டதுடன், வெளிநாடுகளிலிருந்தும் உதவி கோரப்பட்டது. பல நாடுகள் உதவிசெய்ய, இந்தியாவும் தன்பங்கிற்கு உலங்கு வானூர்திகளையும், வானிலிருந்து குதிக்கும் தாக்குதல் ராணுவக் குழுக்களையும் உடனடியாக அனுப்பிவைத்தது.

http://telo.org/telooldnews/wp-content/uploads/2014/11/Premawathie-Manamperi.jpg

கடுமையான முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவம் சுமார் 3 வாரங்களில் கலகக்காரரின் முதுகெலும்பை முறித்துப் போட்டது. மேலும், ஆண்டின் இறுதியில் சுமார் 18,000 கலகக்காரரும், ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அரச தகவல்களின்படி சுமார் 5,000 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், குறைந்தது 25,000 சிங்கள இளைஞர்கள் இதன்போது பலியானதை அரசு உத்தியோகபூர்வமற்ற வகையில் ஒத்துக்கொண்டிருந்தது. கடுமையான சித்திரவதைகளும், கூட்டுப் படுகொலைகளும் இடம்பெற்றதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் அரசினால் நிராகரிக்கப்பட்டன.

 

ஹம்மெர்ஹெயில் கோட்டை

Fort-Hammenhiel-300x159.jpeg

 ஹம்மெர்ஹயில் கோட்டை

இத்தாக்குதல்களின்ப்பொது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவிடயம் கொழும்பில் தங்கியிருந்த சிறிமாவும், அவரது பிள்ளைகளும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றினுள் ஒளிந்துகொண்டதுதான். கொழும்பு நகர் பாதுகாப்பானதாக வரும்வரை அவர்கள் அக்கப்பலிலேயே தஞ்சமடைந்திருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், தமிழர்கள் ஆர்வம் காட்டிய இன்னொரு செய்தியிருக்கிறது. அதுதான் யாழ்ப்பாணம் காரைநகர் ஹம்மெர்ஹயில் கோட்டையில் அமைந்திருந்த கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவும் அவரது தோழர்கள் 12 பேரையும் மீட்க அக்குழு முயன்ற செய்தி. 

தமிழர்கள் வங்கதேச விடுதலையிலும் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். இந்தியத் துணைக்கண்ட சுதந்திரத்தின்போது இந்தியா பாக்கிஸ்த்தான் எனும் இரு நாடுகளாகப் அது பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த பகுதிகள் பாக்கிஸ்த்தானுக்குள் சேர்க்கப்பட்டன. இந்தப் பகுதிகள் மேற்குப் பாக்கிஸ்த்தான் என்றும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் என்று இரு பிரிவுகளாக இருந்தன. பாக்கிஸ்த்தானின் இவ்விரு மாநிலங்களுக்குமிடையே சுமார் 1600 கிலோமீட்டர்கள் அகலமான இந்தியப் பகுதி அமைந்திருந்தது. பாக்கிஸ்த்தானின் இரு பகுதிகளிலும் நிலப்பரப்பில் பெரிய பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தான் ஆகும். இதனுள் பஞ்சாப், சிந்த், பாலுச்சிஸ்த்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்பகுதி ஆகிய நான்கு மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கிழக்குப் பாக்கிஸ்த்தானில் கிழக்கு வங்காளம் எனப்படும் பகுதிமட்டுமே இருந்தது.

The Bangladesh Liberation War | Origins 

சனத்தொகையில் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மேற்குப் பாக்கிஸ்த்தானைக் காட்டிலும் அதிகமான மக்களைக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரத்தின்பின்னர் பாக்கிஸ்த்தானின் அரசியல்ப் பலம் மேற்குப் பாக்கிஸ்த்தானின் உயர்மட்ட வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து கிடந்தது. நாட்டின் மொத்த வருமானத்தின் பெரும்பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தானின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டதுடன், கிழக்குப் பாக்கிஸ்த்தான் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும், தம்மை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு மேற்குவாசிகள் நடத்துவதாகவும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் அதிருப்தியடையத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பிணக்கு மெதுமெதுவாக வெளிக்கிளம்பத் தொடங்கியது.

பாக்கிஸ்த்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியல் ஸ்த்திரத்தனமையினமையாலும், பாரிய பொருளாதார நெருக்கடிகளினாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்தது. மக்களாட்சி முறை தோற்கடிக்கப்பட்டு ராணுவ ஆட்சியே அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. மேற்கின் ராணுவ ஆட்சியினை வெறுத்த கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் தமது தலைவராக ஷேக் முஜிபுர் ரகுமானை தேர்வுசெய்து, மேற்கின் ராணுவ ஆட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் காட்டி வந்தனர். அவாமி லீக் எனப்படும் அரசியல்க் கட்சியை ஆரம்பித்த முஜிபுர் ரகுமான் பிரிக்கப்படாத பாக்கிஸ்த்தானில், சமஷ்ட்டி அடிப்படையில் கிழக்குப் பாக்கிஸ்த்தானுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கோரிவந்தார். 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் 313 ஆசனங்களில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி 170 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்கப் போதுமான பலத்தை முஜிபுர் ரகுமான் பெற்றுக்கொண்டபோதும், மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆளும்வர்க்கம் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்ததுடன், அவரது கட்சியான அவாமி லீக்கையும் தடைசெய்தது.

 

இதனையடுத்து பாக்கிஸ்த்தான் முழுவதும கடுமையான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. அன்றைய பாக்கிஸ்த்தான் ஜனாதிபதி யகயா கான் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தனது மகனான டிக்கா கானை அனுப்பிவைத்தார்.1971 ஆம் ஆண்டு பங்குனி 25 அன்று அவரது பணிப்பின்கீழ் செயற்பட்ட ராணுவம் கலகக்காரர்களுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ராணுவத்தைக் கலைத்து, நிராயுதபாணிகளாக்க மேற்கு பாக்கிஸ்த்தான் ராணுவம் முயன்றது. இந்த நடவடிக்கைக்காக மேற்கிலிருந்து விமானம் மூலம் ராணுவத்தினரைக் கொண்டுவரவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. பாக்கிஸ்த்தான் ராணுவத்தில் பணியாற்றிய வங்களி இன அதிகாரிகளும், சிப்பாய்களும் ராணுவத்திலிருந்து விலகி சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

முஜிபுர் ரகுமானின் நெருங்கிய ஆதரவாளர்களும் இன்னும் பத்து மில்லியன் வங்காளிகளும் இந்தியாவுக்குத் தப்பியோடினர். அங்கே தமக்கான தற்காலிக அரசாங்கம் ஒன்றையும் அவர்கள் அமைத்தனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானை விடுவிப்பதற்கான போரில் ஈடுபட்டுவரும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் சுதந்திர போராட்ட வீரர்களான முக்திபாகினி அமைப்பிற்கு ராணுவ ரீதியில் உதவும் முடிவினை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் எடுத்தார். முக்திபாகினி கெரில்லாக்கள் இந்திய எல்லைக்குள், கிழக்குப் பாக்கிஸ்த்தானின் எல்லையோரங்களில் தொடர்ச்சியான முகாம்களை அமைத்து வந்தார்கள். இந்த முகாம்கள் மீது மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் கடுமையான ஷெல்வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டபோது, இந்தியாவும் பதில்த்தாக்குதல் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து மேற்குப்பகுதியூடாக இந்தியாவினுள் நுழைந்து தாக்குதல் நடத்த பாக்கிஸ்த்தான் ராணுவம் திட்டமிட்டபோது, இந்தியா முழு அளவிலான போரை மார்கழி 3 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் மீது ஆரம்பித்தது. 

1971war-Collage.jpg

இந்திய ராணுவமும், வங்காளி கெரில்லாக்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் கிழக்குப் பாக்கிஸ்த்தனில் நிலைகொண்டிருந்த மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் நிலைகுலைந்துபோனது. மார்கழி 16 ஆம் திகதி கிழக்கிலிருந்து பாக்கிஸ்த்தான் ராணுவம் முற்றாகச் சரணடைய  சுதந்திர வங்காளதேசம் உருவானது. 

ஆயுதப் போராட்டம்பற்றிய எண்ணத்தை ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்கள் தெற்கின் தோல்வியடைந்த .வி.மு இன் போராட்டத்தையும், சுதந்திர வங்காளதேசத்தின் உருவாக்கத்தையும் உன்னிப்பாக அவதானித்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டனர். இன்று கனடாவில் வசித்துவரும் முன்னாள் போராளியொருவர் கூறுகையில், "நாம் இந்த இரு சம்பவங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்தோம். இவையிரண்டிலும் இருந்து ஏறாளமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம். இவ்விரு நடவடிக்கைகளும் எம்மை உற்சாகப்படுத்தியிருந்தன. எம்மை இந்த நிகழ்வுகள் வெகுவாக ஊக்கப்படுத்தியிருந்தன" என்று கூறினார்.

 
மக்கள் விடுதலை முன்னணியினரின் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரச படைகள் மேல் தாக்குதல் நடத்துவதென்பது சாத்தியமானதுதான் என்கிற நம்பிக்கையினை தமக்கு அது ஏற்படுத்திவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார். உத்வேகமும், இலட்சியம் மீதான உறுதியும், ஆயுதங்களும் சரியான தலைமையும் வாய்க்கப்பெறுமிடத்து அரச படைகள் மேல் தாக்குதல் நடத்தி வெற்றிபெறுவதென்பது சாத்தியமானதுதான் என்பதை .வி. மு இனரின் தாக்குதல் முயற்சி தமக்கு ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். 

"அவர்களின் தாக்குதல் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது, அவர்களிடம் சரியான ஆயுதங்கள் இருக்கவில்லை, பயிற்சிகள் ஏதுமின்றியே அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள், அவர்களின் தலைமை மிகவும் பலவீனமானதாக இருந்தது, அதனாலேயே அவர்களது திட்டம் பிழைத்துப்போனது" என்றும் அவர் கூறினார்.

"நாங்கள் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம், கைப்பற்றும் ஒரு பிரதேசத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால், அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது என்பதுதான். இதன்படி, .வி. மு செய்தது தற்கொலைக்குச் சமனானது. ஆரம்பத்தில் பாரிய நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டாலும், பின்னர் ராணுவமும் பொலீஸாரும் பதில்த்தாக்குதல்களை ஆரம்பித்தபோது, அவர்களை தாம் கைப்பற்றிய இடங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். அதனேலேயே நாம் மறைந்திருந்து தாக்கிவிட்டு, மறைந்துவிடும் நகர்ப்புற கெரில்லா பாணியைக் கையாண்டோம்". 

"அதேவேளை, வங்கதேச உருவாக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் சிக்கலானவை. சமஷ்ட்டிக் கட்சியின் பிரச்சாரகரான மாவை சேனாதிராஜாவோ அல்லது இளைஞர்களை உசுப்பேற்றும் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் கோவை மகேசன் ஆகியோர் போதிக்கும் பாடங்களைப்  போலல்லாமல் மிகவும் சிக்கலானவை" என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் இந்திரா காந்தியின் பாக்கிஸ்த்தானின் மீதான ராணுவ வெற்றியையும், வங்கதேச உருவாக்கத்தையும் பாராட்டி சமஷ்ட்டிக் கட்சியினர் 1972 ஆம் ஆண்டு தைமாதம் 12 ஆம் திகதி காங்கேசந்துறையில் 7 கட்சி பேரணியொன்றை நடத்தியிருந்தனர். அங்கே சமூகமளித்திருந்த இளைஞர்களின் தலைவர்கள், இலங்கையிலும் இந்தியா வங்கதேசத்தில் செய்ததுபோல தமிழர்களுக்கென்று தனிநாட்டை விடுவித்துதரும் என்று மக்களிடம் கூறத் தலைப்பட்டனர். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறிய ஒருவிடயம் தான் வங்கதேசத்தின் விடுதலையென்பது வெறுமனே இந்திய ராணுவத்தின் நடவடிக்கையினால் மட்டுமே உருவானதல்ல என்பது. நன்கு பயிற்றப்பட்டு, நன்றாக ஆயுதம் தரித்த, வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்ட முக்திபாகினி எனும் கிளர்ச்சிப்படையுடன் சேர்ந்தே இந்திய ராணுவம் மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவத்தைத் தோற்கடித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சி தனது வன்முறையற்ற அகிம்சா ரீதியிலான போராட்டப் பாதையினை மாற்ற ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை.

அமிர்தலிங்கம் மட்டுமே அயுதப் போராட்டம் தொடர்பான சாதகமான எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கூட மிகவும் அவதானமாக, மேலெழுந்தவாரியாக இதுகுறித்துப் பேசிவந்தார்.

 "தமிழர்கள் தீர்க்கமான விடுதலைப் போராட்டம் ஒன்றின் மூலம் தமக்கான தனியான நாட்டினை அடைவதற்கான நேரம் நெருங்கியிருக்கிறது. இதனை அடைவதில் வெளிநாட்டு உதவியினைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. சுதந்திரம் கடையில் வாங்கும் சரக்கல்ல. ஒரு கடுமையான போராட்டம் மூலமே அதனை நாம் பெற்றுக்கொள்ளமுடியும், தேவையேற்பட்டால் நாம் அதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வங்கதேசத்து மக்களை முன்னுதாரணமாகப் பாவித்துப் போராட வேண்டும்" என்று அவர் கூறினார்.

 ஆனால், போராளிகள் வங்கதேசப் போரை அரசியல்க் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் மிகவும் ஆளமாக ஆராய்ந்தனர். அதன்மூலம் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தனர்,

"தமிழர்கள் தமக்கான தனிநாட்டினை அடைவதற்கு இந்தியா ஒருபோதும் துணை நிற்காது".

 தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்தவே இந்தியா வங்கதேசப் போரில் இறங்கியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து பாக்கிஸ்த்தானின் அச்சுருத்தலை அது எதிர்கொண்டு வந்தது. சீனாவுடனான அதன் மோதலையடுத்து வடக்கிலிருந்தும் அது அச்சுருத்தலினை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவேதான், மேற்குப் பாக்கிஸ்த்தானிலிருந்து கிழக்குப் பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து, தனியான நாடாக அங்கீகரிப்பதன்மூலம், கிழக்கிலிருந்த எதிரியை அது இல்லமலாக்கியிருக்கிறது. 

ஆனால், இலங்கையிலோ நிலைமை வித்தியாசமானது. இலங்கையிலிருந்து ஈழத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தால், ஈழம் எனும் நட்பு அயல் நாட்டை அது கொண்டிருக்கும். ஆனால், அது இந்தியாவுக்கெதிரான இலங்கை எனும் நாட்டை உருவாக்கிவிடும். இந்த புதிய எதிரி நாடு இந்தியாவின் எதிரிகளுடன் சேர்ந்துவிடும். ஆகவேதான், இந்தியா ஒருபோதுமே ஈழம் எனும் தமிழருக்கான தனிநாடு உருவாவதற்கு எமக்கு உதவப்போவதில்லை. 

அவர்கள் கூறுவது சரிதான். இந்தியாவின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும் இதுதான் என்பதும் சந்தேகமில்லை.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமது முடிவில் உறுதியான இளைஞர்கள்

Appapillai-Amirthalingam-295x300.jpg

அமிர்தலிங்கம் காங்கேசன்துறையில் நிகழ்த்திய பேச்சு தமிழ் இளைஞர்களிடைய அன்றைய காலத்தில் சிங்கள அரசுமீது எழுந்துவந்த கடுமையான அதிருப்தியைப் பிரதிபலித்திருந்தது. தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் பாதையினையும், வங்கதேசத்து அவாமி லீக்கின் பாதையினையும் தமிழர்களும் பின்தொடரவேண்டும் என்று இளைஞர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர்.

 

மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகமும், வங்கதேச விடுதலையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் மீதான நம்பிக்கையினையும், அதனையே தாமும் செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தினையும் கொடுத்திருந்தது. அரசியலமைப்பினை வரைந்தவர்கள் சிங்களவர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி அதனை வரைந்ததையும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து செவிமடுக்கவே அவர்கள் விரும்பவில்லையென்பதனையும் தமிழ் இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு நகலானது இலங்கையின் ஒற்றையாட்சியை முன்னிறுத்தியதோடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் நாட்டின் ஏனைய மதங்கள் மொழிகளைக் காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தே வரையப்பட்டிருந்ததை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். இவை மூன்றும் சட்டமாக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படும்பொழுது தமிழர்கள் இலங்கையில் முக்கியத்துவமற்றை பத்தோடு பதின்றான இனமாக கணிக்கப்படுவார்கள் என்பதனையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

 

இது நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற உணர்வு இளைஞர்களிடையே உருவானது. வங்கதேசத்தில் அவாமி லீக் மக்களை ஒன்றுதிரட்டியதைப் போன்று தாமும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். தமது இலக்கு நோக்கி துரிதமாகவும், உறுதியாகவும் அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்றும், அரசியல்த் தலைமைகள் அவர்களுக்கான பாதையினை வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அமிர்தலிங்கம் காங்கேசந்துறையில் பேசியது அன்றைய இளைஞர்களின் மனநிலையைத்தான் : தீவிரமாகப் போராடுவோம், தேவையேற்படின் இரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அன்றைய இளைஞர்களின் சுலோகமாகிப் போனது.

இனவெறி ஊட்டப்பெற்று, தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருந்த சிங்கள ஊடகங்கள் இலங்கையின் நலன்களும், அரசியலும் எனப்படுவது சிங்களவரின் நலன்களும் அரசியலும்தான் என்று நிறுவுவதற்கு மும்முரமாக முயன்றுவந்த சூழ்நிலையிலேயே அமிரின் காங்கேசந்துறை பேச்சும் இடம்பெற்றிருந்தது. ஆகவே, அமிர்தலிங்கத்தை நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவை விழித்து எழுதிவந்தன. குறிப்பாக சண் எனும் பேர்போன இனவாதப் பத்திரிக்கை அமிரின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி சமஷ்ட்டிக் கட்சியில் அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எழுதியது. ஆனாலும், அமிரின் பேச்சினை இந்தியா வங்கதேசத்து விடுதலைப்போரில் வங்காளிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்னணியில் வைத்து அணுகப்பட வேண்டிய ஒரு விடயம் என்று ஆசிரியர்த் தலையங்கமும் தீட்டியது சண். ஆனால், இங்கே சண் உட்பட இனவாதப் பத்திரிக்கைகளோ அல்லது சிறிமாவின் அரசோ கவனிக்கத் தவறிய ஒருவிடயம் என்னவென்றால், அமிர் அன்று பேசியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் அபிலாஷையும், அன்று அந்த இனம் அடைந்திருந்த விரக்தியையும் தான் என்பது.

அமிரின் காங்கேசந்துறை பேசு நடந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சிறிமாவின் அரசு யாழ்ப்பாணாப் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரிடமிருந்து பொலீஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். மேலும், அமிருக்கெதிராக கடுமையான விமர்சனத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிறிமாவோ அரசு அவரை நாட்டுக்கு எதிரானவர் என்றும், இரட்டை நாக்குக் கொண்டவர் என்றும், தெற்கில் சிங்களவரிடம் ஒரு கருத்தையும், வடக்கில் தமிழரிடம் ஒரு கருத்தையும் முன்வைக்கும் பொய்யர் என்றும் வசைபாடியது. அதேவேளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் மேலோட்டமனாவை, தீவிரமற்றவை என்று இளைஞர்களும் தம் பங்கிற்கு அவருக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தனர்.

அரசியலமைப்பு உருவாக்கச் சபையினரால் வரையயப்பட்ட நகலினை ஆராய்வதற்கென்று சமஷ்ட்டிக் கட்சி 1972 ஆம் ஆண்டு தை 30 ஆம் திகதி ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டின் நோக்கத்திற்கெதிராக இளைஞர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே தரப்போவதில்லையென்பதனால், அவர்களின்பின்னால் பிச்சையெடுக்கப் போகாதீர்கள் என்று அவர்கள் சமஷ்ட்டிக் கட்சியினரைப் பார்த்துக் கூறினர். தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனமே இந்த புதிய அரசியலமைப்பு என்று விழித்த இளைஞர்கள் இந்த நகலை சமஷ்ட்டிக் கட்சியினரின் மாநாட்டில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரினர். இளைஞர்களின் அழுத்தத்திற்குச் செவிசாய்த்து சமஷ்ட்டிக் கட்சியும் அந்த நகலை தாம் நிராகரிப்பதாக அறிவித்தது. மேலும், அந்த புதிய அரசியலமைப்பு தமிழர் மீதான அடிமைச் சாசனம் என்பதனால் அதனை முற்றாக தாம் நிராகரிப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

உத்தேச அரசியல் யாப்பு நகலை நிராகரித்த அதேவேளை தனது மாநாட்டின் தீர்மானங்களாக  4 அம்சக் கோரிக்கையினையும் சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்தது,

 

1. சிங்கள மக்களுக்கான அதே அந்தஸ்த்து தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும்.

3. இலங்கையைத் தமது தாய்நாடாகக் கொண்ட அனைவருக்கும் இந்நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும்.

4. தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தில் தம்மைத்தானே ஆள்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

என்பவையே சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு அமசக் கோரிக்கைகள் ஆகும்.

சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த நான்கு அம்சக் கோரிக்கையினை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிங்கள யாப்புருவாக்கிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழரின் கோரிக்கைகளையே மீண்டும் சமஷ்ட்டிக் கட்சி தனது நான்கு அம்சக் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது என்று அவர்கள் எள்ளி நகையாடினர்.

" இந்த வயோதிப அப்புக்காத்துமாருக்கு தமது பழமைவாதப் பழக்கங்களை அவ்வளவு இலகுவில் விட்டுவிடமுடியாது போலிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். சமஷ்ட்டிக் கட்சியினரின் செயற்பாடுகள் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் தாமே நேரடியாக மக்களிடம் செல்வதென்று முடிவெடுத்தனர். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மக்கள் கூட்டங்களையும் பேரணிகளையும் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். தமது உணர்வுகளை கிராமம் கிராமமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வீதி நாடகங்களையும், பேரணிகளையும் நடத்திய இளைஞர்கள் சிங்களவர்கள் தமிழரை அடிமைகொள்ளப் போகிறார்கள், ஆகவே எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுமாறு மக்களை உணர்வேற்றினர்.

இளைஞர்களின் வழிக்கே வந்த தலைவர்கள்

இளைஞர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட உணர்வு அலையினால் தலைவர்களும் ஆட்கொள்ளப்பட்டுப் போயினர். தனியான நாட்டிற்கான போராட்டத்திற்கு இரு வழிகளை அவர்கள் பின்பற்றத் தீர்மானித்தனர்.

SJV-Chelvanayagam-Kovai-Mahesan-Amirthalingam-visit-Annadurais-home-1972-300x283.jpg

கோவை மகேசன் (படத்தின் வலதுபக்கத்தில்) , செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் அண்ணாத்துரையின் இல்லத்தில். மற்றையவர்கள் தி. மு. வின் மாணவர் தலைவர் ஜனார்த்தனம், மலையகத் தமிழ்த் தலைவர் மாவைத்தம்பி ஆகியோர்.

முதலாவதாக இந்த போராட்டத்திற்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக்கொள்வதென்பது. தமிழகத் தலைவர்களின் ஆதரவினை ஒருங்கிணைக்க தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் 1972 ஆம் ஆண்டு, மாசி மாதம் 20 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி, கல்வியமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் . வி. ராமசாமி நாயக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ், தமிழர் கழகம் தலைவர் எம். பி. சிவஞானம் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயித்தே மில்லத் ஆகியோரைச் சந்தித்தனர்.

தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தந்தை செல்வா, இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாக்க முயற்சிப்பதால், தமிழர்கள் தனிநாட்டினைக் கேட்பதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். தமிழரின் தனிநாட்டுப் போராட்டம் அகிம்சை முறையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் அங்கு கூறினார். செல்வாவும் காமராஜரும் 1961 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், தந்தை பெரியார் மட்டுமே தந்தை செல்வாவின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டம் குறித்து சந்தேகத்தினை எழுப்பினார். "தர்மத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு அதிகாரத்துடன் அகிம்சை வழியில் போராடி உங்களுக்கான நீதியினை வென்றுவிட உங்களால் முடியுமா?" என்று அவர் தந்தை செல்வாவைப் பார்த்துக் கேட்டார். பெரியாரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்த் தடுமாறிய செல்வா ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "ஈற்றில் தர்மமே வெல்லும்" என்று கூறி முடித்தார். 

செல்வா தலைமையிலான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழகத் தலைவர்கள் , தமிழரின் தனிநாட்டிற்கான அகிம்சை வழிப்போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை நல்குவதாக ஒப்புக்கொண்டதோடு, இதுகுறித்துப் பிரதமர் இந்திரா கந்தியுடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தனர்

 

img_1775.jpeg?resize=616%2C462&ssl=1

சென்னை மேயர் காமாட்சி ஜெயராமனினால் தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் வரவேற்பில் பேசிய அவர், தமிழக மக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தில் உற்றதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிய தந்தை செல்வா தமிழர்களின் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை ரீதியிலேயே நடைபெறும் என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தார்மீக ஆதரவே தாம் வேண்டி நிற்பதாகவும் அவர் மீண்டும் கூறினார்.

சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், வைகாசி 14 அன்று  தந்தை செல்வா மக்களை இன்னொரு போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார். தமிழ் அரசியல்த் தலைவர்களையும், முக்கிய தமிழ் தலைவர்களையும் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாடுக் கட்சியினர் மற்றும் தமிழ் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியட் கட்சி சாரா செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமான் பின்னர் பேசும்போது, இக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதன் நோக்கம் மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் ஒருமித்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒற்றை அரசியல் அமைப்பான தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்த்தாபிக்கவே என்று கூறினார். இலங்கைத் தமிழரின் போராட்டங்களிலிருந்து அதுவரைக்கும் தனது கட்சியான தொழிலாளர் காங்கிரஸை விலத்தியே வைத்திருந்த தொண்டைமான் புதிய அரசியலமைப்பினால், தமிழர்கள் தமது பேதமைகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்கும் தேவை ஏற்படுள்ளதாகக் கூறினார். தந்தை செல்வா பேசும் போது பக்கச் சார்பாக வரையப்பட்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தின் முடிவில் தமிழர் ஐக்கிய முன்னணி பின்வரும் முடிவுகளி எடுத்தது,

1. புதிய அரசியலமைப்பை முற்றாக நிராகரிப்பது.

2. பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ் அமர்வை புறக்கணிப்பது.

3. புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும் வைகாசி 22 ஆம் திகதியை துக்கதினமாக அனுஷ்ட்டிப்பது.

4. 1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தாம் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வது.

 

அந்த 6 அம்சக் கோரிக்கைகளாவன,

1. அரசியலமைப்பில் சிங்கள மொழிக்குக் கொடுக்கப்படும் அதே அந்தஸ்த்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்.

2. இந்த நாட்டினை தமது தாய்நாடாகக் கொண்ட அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் முழுமையான பிரஜாவுரிமை வழங்குவதாக இந்த அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனினதும் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படக் கூடாது.

3. மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருப்பதோடு, அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.

4. மத, இன, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும்.

5. சாதி வேறுபாட்டினையும், தீண்டாமையினையும் முற்றாக இல்லாதொழிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.

6. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே ஜனநாயக சோசலிச சமூகத்தில் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயகத்தின் பலத்தினை நிலைநாட்டவேண்டுமே அன்றி அரச பலத்தினால் அல்ல என்பது யாப்பில் கூறப்பட வேண்டும்.

இந்த ஆறு அம்சக் கோரிக்கையினை இணைத்து எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆறு கோரிக்கைகளும் அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவான 1972, புரட்டாதி 30 இற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

http://www.sundaytimes.lk/180520/uploads/Untitled-112.jpg

சிங்கள இனவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகத் உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டது. 20 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசியமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு,

1. சி. அருளம்பலம் - நல்லூர்

2. . தியாகராஜா - வட்டுக்கோட்டை (தமிழ்க் காங்கிரஸ்)

3.  சி. எக்ஸ். மார்ட்டின் - யாழ்ப்பாணம் (சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்)

4. எம். சி. சுப்ரமணியம் - நியமிக்கப்பட்டவர்

5. சி. குமாரசூரியர் - தபால் & தொலைத்தொடர்பு அமைச்சர் -  நியமிக்கப்பட்டவர்

 

புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்ட இந்த நாளினை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் துக்க நாளாக கடைப்பிடித்ததோடு, அதிகாலை முதல் மாலைவரையான பூரண ஹர்த்தாலாகவும் அனுட்டித்தனர். வீதிக்கு இறங்கிய இளைஞர்கள் தமது எதிர்ப்பினைக் கறுப்புக் கொடிகளை அசைத்தும், பறக்கவிட்டும் காட்டினர். அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், போக்குவரத்தும் பூரண ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல் நாளான 21 ஆம் திகதி பாடசாலைகளை மாணவர்கள் புறக்கணித்ததோடு, 22 ஆம் திகது பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஹர்த்தாலை பூரணமாகக் கடைப்பிடித்ததோடு, அரச கட்டளையான கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையினையும் மீறி வீதிகளிலும், சந்திகளிலும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கையின் தேசியக் கொடிகளும், புதிய அரசியலமைப்பின் நகல்களும் மக்களால் பரவலாக எரியூட்டப்பட்டன. மக்கள் முன் பேசிய இளைஞர்கள் தமிழர்களை சிங்கள அரசு ஒரு கற்சுவரை நோக்கி நெருக்கித் தள்ளியிருப்பதாகவும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் முற்றான முறிவு நிலையினை அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து தமிழர்கள் மீண்டுவருவதற்கான ஒரே வழி வங்கதேச சுதந்திரப் போராட்டத்தைப் பின்பற்றிப் போராடுவதுதான் என்றும் கூறினர்.

அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பேரணிகளையும், கூட்டங்களையும் அரசு தடைசெய்திருந்த நிலையில், அதனை மீற விரும்பாத தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தினுள் கூட்டமொன்றினை நடத்தினர். அங்கு பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார்,

"நாங்கள் ஒரு நாட்டினுள்ளேயே இருக்க விரும்பினோம். கண்ணியமும், மரியாதையும் கொண்ட பங்களிகளாக வாழ விரும்பினோம். ஆனால், இவை எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எம்மை தமது அடிமைகளாக வாழவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சுயகெளரவமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான். நாம் சுய கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம். அது தனியான நாட்டினூடாகவே சாத்தியமென்றால், நாம் அதை நோக்கிப் பயணிக்கத் தயங்கப்போவதில்லை. நான் எனது மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தனிநாட்டிற்கான பாதையினைத் தெரிவுசெய்யும்படி நாம் சிங்கள ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான்".

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்முறையின் விதைகள்

இலங்கையின் குடியரசு தினம் தமிழர்களைப் பொறுத்தவரை கரிநாளாகப் பார்க்கப்பட்டது. முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அறுத்தெறிந்த இளைஞர்கள் யாழ்க்குடாநாடு முழுவதும் மின்னிழப்பை உருவாக்கினார்கள். ஆகவே, சிங்கள அரசின் குடியரசு நிகழ்வுகள் யாழ்ப்பாணச் செயலகத்தினுள்ளும், பொலீஸ் மற்றும் இராணுவ, கடற்படை முகாம்களுக்குள்ளும் மட்டுமே நடைபெற்றன. குடியரசு தின நிகழ்வுகளிருந்து, சிங்கள அரசிடமிருந்து தமிழர்கள் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டிருந்தனர்.

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஆங்காங்கே வன்செயல்கள் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டதுடன், அரச கட்டிடங்கள் மீது கல்விச்சும் இடம்பெற்றது. கறுப்புக்கொடிகள் தமிழர் பிரதேசங்களில் வீடுகள், அரச கட்டிடங்கள் மற்றும் மரங்கள் என்று பரவலாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. காலைவேளையில் யாழ்நகரில் ரோந்துபுரிந்த காவல்த்துறை நகரில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளைக் கிழித்தெறிந்தது. 6 நாட்களுக்குப் பின், வைகாசி 28 ஆம் திகதி இலங்கை சம சமாஜக் கட்சியின் ஆதரவாளரான சிவசோதியின் வீட்டின்மேல் இளைஞர்கள் பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தாக்கினார்கள், ஆனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனி 1 ஆம் திகதி, சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் . விஸ்வநாதன் வீட்டின்மீது எரிகுண்டுகள் வீசப்பட்டன. சிங்களவர்களுக்குச் சார்பாகவும், தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தும் அரசியல் யாப்பினை உருவாக்கிய சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கொல்வி ஆர் டி சில்வாவிற்கு தமது எதிர்ப்பைக் காட்டவே அவரது கட்சி ஆதரவாளர்கள்மீது இத்தாக்குதல் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இதே கொல்வின் சில காலங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கான சம உரிமை கேட்டுப் வாதிட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அதன்பின்னர், இந்த இனவாத யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இளைஞர்களின் கவனம் திரும்பியது.  1972 இல் நான்கு சிறிய ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தன.

தங்கத்துரை - குட்டிமணி தலைமையிலான அமைப்பு தமது இலக்காக சி அருளம்பலத்தை தெரிவுசெய்தனர். அவரது குட்டையான உடல் அமைப்பிற்காக "சின்னன்" என்றழைக்கப்பட்ட அருளம்பலம் கொழும்பிலேயே வசித்து வந்ததால், குட்டிமணி - தங்கதுரை அமைப்பினரால் அவரை நெருங்க முடியவில்லை. ஆகவே, அருளம்பலத்தின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராம சபைத் தலைவரும், தீவிர சுதந்திரக் கட்சி ஆதரவாளருமான வி. குமாரகுலசிங்கத்தின் மீது தாக்குவதென்று முடிவெடுத்தார்கள். இவர் இன்னொரு அரச ஆதரவு அமைச்சர் குமாரசூரியருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. குமாரசூரியர், குமாரகுலசிங்கம் ஊடாகவே அருளம்பலத்தை தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகி அரசுடன் சேரும்படி ஊக்குவித்து வந்தார் என்று பரவலாக அறியப்பட்டிருந்தது. அரசுடன் அருளம்பலம் சேர்ந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல்த் தலைவர்களாலும், தமிழ் மக்களாலும் துரோகியென்று அழைக்கப்பட்டு வந்தார்.

அரசியலமைப்பு பிரகடணப்படுத்தப்பட்டு 13 ஆவது நாளான ஆனி 4 ஆம் திகதி கோப்பாய்ச் சந்திக்குச் சென்ற குட்டிமணி, செட்டி மற்றும் சிறி சபாரட்ணம் ஆகியோர் உலகநாதனிடம் சென்று தமக்குச் சவாரி ஒன்று தேவையாக இருப்பதாகக் கூறி, அவரை குமாரகுலசிங்கத்தின் வீட்டிற்குத் தம்மை அழைத்துச் செல்லுமாறு கோரினார்கள்.  கார் குமாரகுலசிங்கத்தின் வீட்டினை அடைந்ததும், தம்முடன் கொண்டுசென்ற கைத்துப்பாக்கியினால் குமாரகுலசிங்கத்தின்மீது சுட்டுவிட்டு மீண்டும் காரிற்குள் ஓடிவந்தனர். குமாரகுலசிங்கத்தின் காலில் குண்டடி பட்டிருந்தது, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. காரினை நீர்வேலி நோக்கி ஓட்டிச் சென்ற குட்டிமணி, ஆளரவம் இல்லாத பகுதியொன்றில் காரினை நிறுத்திவிட்டு உலகநாதனைச் சுட்டுக் கொன்றார்கள். அருகிலேயே உலகநாதனின் காரும் எரியூட்டப்பட்டது.

குட்டிமணி குமாரகுலசிங்கத்தையே கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது சாரதி உலகநாதனையே அவர்களால் கொல்ல முடிந்தது. அதே நாள் மாலை, சுதந்திரக் கட்சி ஆதரவாளரான சுந்தரதாஸின் வீட்டின்மீதும் குண்டெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சிவகுமாரனினால் 1970 இல் சோமவீர சந்திரசிறி மீதும், 1971 இல் அல்பிரட் துரையப்பா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பின்னர் குட்டிமணியினால் நடத்தப்பட்ட மூன்று குண்டெறி தாக்குதல்கள் மற்றும் உலகநாதனின் கொலை ஆகியன சமாதானத்தை விரும்பும், ஒழுக்கமான யாழ்சமூகத்தை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஆனால், இத்தாக்குதல்கள் இன்னும் இரு ஆயுத அமைப்புக்களை தாக்குதல்களினை மேற்கொள்ள உந்தியிருந்தது. அதில் ஒன்று பிரபாகரனுடையது மற்றையது தமிழ் மாணவர் ஒன்றியத்தினுடையது.

தங்கத்துரை - குட்டிமணி அமைப்பினராலோ அல்லது சிவகுமாரனின் அமைப்பினராலோ தாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதென்பதில் உறுதியாகவிருந்த தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் சத்தியசீலன் உடனடியாகச் செயற்பட்டு அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான வட்டுக்கோட்டை தியாகராஜாவைக் கொல்வதற்கு திஸ்ஸவீரசிங்கத்தையும், ஜீவன் எனப்படும் ஜீவராஜாவையும் அனுப்பிவைத்தார். அப்போது பம்பலப்பிட்டியவில் தியாகராஜா வாழ்ந்துவந்தார். ஆனி மாதம் 7 ஆம் திகதி காலையில் அவரது வீட்டிற்குச் சென்ற தாக்குதல் அணியினர், அவரது வீட்டின் கதவைத் தட்ட, தியாகராஜவும் கதவைத் திறந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலிருக்கும் பத்திரிக்கை ஒன்றிலிருந்து அவரைப் பேட்டியெடுக்கத் தாம் வந்திருப்பதாக திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் அவரிடம் தெரிவிக்க, "என்னை எந்தப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று குமாரசூரியர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்" என்று கூறிக்கொண்டே அவர்களை அமரச் சொன்னார் தியாகராஜா.

திஸ்ஸவீரசிங்கம் அமர விரும்பவில்லை. அவர் தியாகாராஜின் அருகிலேயே நின்ருகொண்டிருந்தார். ஜீவன் கதவின் அருகில் சாய்ந்தபடி நின்றிருந்தார்.

தியாகராஜா காரைநகர் இந்துக் கல்லூரியின் அனுபவம் மிக்க அதிபர். தன்னிடம் வந்திருந்த இரு விருந்தாளிகளினதும் உடல்மொழி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஜீவன் தனது காற்சட்டை வாரிற்குள் இருக்கமாகச் செருகப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை வெளியே உறுவி எடுத்தார், பதற்றத்தில் அவரது கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. முன்னர் துப்பாக்கியால் சுட்டுப் பழக்கமில்லாதவர், தான் கொண்டுவந்த துப்பாக்கிச் சுடுமா என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. குறிபார்ப்பதுகூட அவ்ருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் செய்யப்பட்ட அத்துப்பாக்கியில் அவர் அதிகம் பயிற்சிகூடப் பெற்றிருக்கவில்லை.

"சுடடா" என்று ஜீவனைப் பார்த்து பொறுமையிழந்து கத்தினார் திஸ்ஸவீரசிங்கம்.

"திஸ்ஸா" என்று கத்திய ஜீவன் அவரை அப்பால் செல்லுமாறு கூறிவிட்டு கதவை நோக்கி ஓடினார் .

சுதாரித்துக்கொண்ட தியாகராஜா, சடுதியாகக் குனிந்து, தரையிலிருந்த விரிப்பை வேகமா இழுத்தார். நிலவிரிப்பில் நின்றுகொண்டு சுட எத்தனித்த ஜீவன் நிலை தடுமாறி விழ, சன்னங்கள் சுவரில் பட்டுத் தெறிக்க தியாகராஜா உயிர் தப்பினார். திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் உடனேயே அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார்கள்.

அவர்களின் கொலைமுயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்துவந்த பல தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும்  அது ஒரு மிகத் தெளிவான செய்தியைக் கொடுத்திருந்தது.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்னடித்த தமிழ் தலைவர்கள்

சிறிமாவோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமிழ் இளைஞர்களின் வன்முறையின் பின்னாலிருந்த அரசியலினப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் அனைவருமே இவை சாதாரண வன்முறைகள்தான் என்று புறந்தள்ளிவிட்டிருந்தனர். தனது பொலீஸார் இந்த வன்முறையினை மிக இலகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று சிறிமா நம்பியிருக்க, தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமது தளபதியான அமிர்தலிங்கம் இந்த வன்முறைகளை ஏவும் இளைஞர்களை இலகுவாக வழிக்குக் கொண்டுவந்துவிடுவார் என்றே நம்பினர். ஏனென்றால், ஒருமுறை அமிர்தலிங்கமே ஏனைய தமிழ் அரசியல்த் தலிவர்களிடம், "என்னால் அவர்களை இலகுவாகச் சமாளிக்க முடியும்" என்று கூறியிருந்தார். 

குடியரசு தினத்திற்கு 4 தினங்களுக்கு முன்னதாகவே காவல்த்துறை இளைஞர் தலைவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்திருந்தது. தமிழ் மாணவர் அமைப்பினரின் ஸ்த்தாபக உறுப்பினரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அன்று கைதுசெய்யப்பட்டார். ஆனி 9 ஆம் திகதி சிவாநந்தனும் சிவஜெயமும் கைதுசெய்யப்பட்டார்கள். மறுநாள் நமசிவாயம் ஆனந்தவிநாயகம் ஆனி 10 திகதியும், காசி ஆனந்தன் ஆனி 15 திகதியும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் மயில்வாகனம் ராஜசூரியர் 30 திகதியும் சின்னையா குவேந்திரராஜா ஆடி 9 அன்றும், அமரசிங்கம் ஆடி 12 ஆம் திகதியும் செல்லையா தனபாலசிங்கம் ஆகிய செட்டி, பொன்னுத்துரை சிவகுமாரன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை தமிழர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பரவலான ஆர்ப்பாட்டங்களும் இதனையடுத்து இடம்பெறத் தொடங்கின. 

இளைஞர்களின் மனோநிலையை சரியாகப் புரிந்துகொள்ள அமிர்தலிங்கம் தவறிவிட்டிருந்தார். இது 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணத்தை அவர் எடுத்தபோது தெளிவாகத் தெரிந்தது. ஐக்கிய தமிழர் முன்னணியினரை பாராளுமன்றத்தைப் புறக்கணிக்குமாறு இளைஞர்கள் கோரியிருந்தனர். அவர்களது வாதம் மிகவும் எளிமையானது. "புதிய அரசியலமைப்பினை முற்றாகப் புறக்கணித்து, அதற்கெதிராக ஆறு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து, யாப்பு பிரகடணப்படுத்தப்பட்ட நாளினை கரிநாளாக அறிவித்து, மக்களை அந்த யாப்பினை எரிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே,  அதே அரசிய யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது எந்தவிதத்தில் நியாயம்?" என்று அவர்கள் தலைவர்களிடம் கேட்டார்கள். 

யாழ்ப்பாணத்தின் பழைய பூங்கா தெருவில் தமிழ் அரசியல்த் தலைவர்களின் இந்த இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் வாசகம் ஒன்று தொங்கவிடப்பட்டது, அதில் "ஏமாற்றுவதே உங்களின் புதிய அரசியல் விளையாட்டு" என்று எழுதப்பட்டிருந்தது. 

இளைஞர்களின் எதிர்ப்பும், போராட்டமும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் பாராளுமன்றத்திற்குச் சென்று சத்தியப்பிரமாணம் செய்வதை தடுக்கவில்லை. ஆடி 4 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தோன்றிய அவர்கள் பின்வருமாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். " இலங்கைக் குடியரசுக்கு எனது பூரண விசுவாசத்தையும், தோழமையினையும் காட்டுவேன் என்றும், என்னாலான அனைத்து வழிகளிலும் நேர்மையுடன் இலங்கைக் குடியரசுக்காக நம்பிக்கையுடன் எனக்கு தரப்பட்ட பணியை செவ்வணே செய்வேன் என்றும் அமிர்தலிங்கம் ஆகிய நான் அரசியல் அமைப்பின்படியும், இந்த நாட்டின் சட்டத்தின்படியும் சத்தியம் செய்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்தார்கள். 

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை சர்வதேசத்திற்குக் காண்பித்த அரசாங்கம், தமிழர்கள் புதிய அரசியலமைப்பினை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பறைசாற்றியது. இது இளைஞர்களை கடும் விசனத்திற்குள்ளாக்கியது. தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலம், இந்த அரசியல் யாப்பிற்கு சட்டரீதியான அந்தஸ்த்தினை இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிவிட்டனர் என்று சாடிய இளைஞர்கள், பாராளுமன்றத்தினைப் புறக்கணிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 1972 ஆம் ஆண்டின் யாப்பு, சமாதான, ஜனநாயக வழிகளில் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருந்த அனைத்து வழிகளையும் முற்றாக அடைத்து விட்டதனால், தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஒரே வழி தனிநாடுதான் என்று கூறினர். தனிநாட்டினை அடைவதற்கு இருக்கும் ஒரே மார்க்கம் ஆயுதவழிப் போராட்டமே என்று உறுதியாகக் கூறிய இளைஞர்கள், தமிழ் அரசியல்த் தலைவர்களை உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாரிய விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோரினர். 

சிறிமாவின் செயற்பாடுகளும் இளைஞர்களின் கருத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. தந்தை செல்வாவினால் தனக்கு எழுதப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை தொடர்பான கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பியிருக்கவில்லை. தந்தை செல்வா தனது முன்னைய கடிதம் குறித்து மீண்டும் அவரை வினவியிருந்தார். ஆனால், அவரது இரு கடிதங்களும் கிடைக்கப்பட்டது என்கிற பதில் மட்டுமே பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணி கேட்டுக்கொண்ட ஆறு அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை மாற்றும் எந்தப் பேச்சுமே இருக்கவில்லை. ஆகவே, தந்தை செல்வாவின் முதலாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல புரட்டாதி 30 இற்குள் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவிடத்து, தமிழரின் சுதந்திரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள  தமிழ் தலைவர்கள் உடனடியாக வன்முறையற்ற போராட்டங்களை முடுக்கிவிடவேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால், தமிழத் தலைவர்களிடம் அதற்கான துணிவு இருக்கவில்லை. இளைஞர்களோ தலைவர்கள் கூறியபடி செயற்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றனர். புரட்டாதி 17 ஆம் திகதி, துரையாப்பா விளையாட்டரங்கில் நடந்துகொண்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் 17 வயதே நிரம்பிய பிரபாகரன் குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டார். இத்தாக்குதல் தமிழ் இளைஞர்களை காவல்த்துறை கைதுசெய்வதைக் கண்டித்தும், அதற்கு மேலதிகமாக அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவுமே இதனை அவர் செய்திருந்தார். இந்த களியாட்ட நிகழ்வினை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், ராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் சேவையினைப் பாராட்டியே இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையாகும். ஆனால், எவருக்குமே இந்தத் தாக்குதலில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. 

மார்கழி 20 ஆம் திகதி உடுவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வினோதனின் வீட்டின்மேல் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினர் கைய்யெறிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் இளைஞர்களத் தேடி பொலீஸார் நடத்திய கடுமையான கைது நடவடிக்கைகளையடுத்து வன்முறைகள் வெகுவாகக் குறையத் தொடங்கியிருந்தன.  பெரும்பாலான ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது தப்பியோடி  தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியுமிருந்தார்கள்.  சுமார் 2 வருடங்களும் 7 மாதங்களும் மிகவும் அமைதியாகவே கழிந்துகொண்டிருந்தபொழுது மிகவும் குறிப்பிடத் தக்க வன்முறையாக 1975 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி முன்னாள் யாழ்நகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை நடந்தேறியது.

 

 

  • Like 1
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
    • கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்! அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!              
    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.