Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சவால்'

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவால்!....

'அடடா..எப்படித்தான் ஒதுக்கி ஒதுக்கி வைச்சாலும் வைச்ச பொருள் வைச்ச இடத்தில் இருக்கிறதில்லை அலுத்துக்கொண்டாள்" கீர்த்தி. அன்றைய நாளுக்குரிய வேலைகளை காலையில் எழுந்ததும் அட்டவணை போட்டு அதை அசைபோட்ட படியே செய்து செய்து பழக்கப்பட்டவளுக்கு இன்று காலையில் வந்த தொலைபேசிச்செய்தி கேட்டதும் அத்தனையும் மறந்து போச்சு'...

கொஞ்சம் பின்னோக்கிப்பார்போமா?. யார் இந்த கீர்த்தி(...@@@@@@@ இது பின்னோக்கி போவதற்கான குறியீடு)

சூர்யா,இந்துமதி தம்பதிகளின் ஒரே ஒரு செல்லப்பெண் தான் கீர்த்தி., ஒரே பெண் என்பதால் அவள் கேட்ட அத்தனையும் கிடைத்துவிடும் என்று இல்லை. சூர்யா கனிவோடு கண்டிப்பும் மிக்கவர். அவளை சுதந்திரமாக வளர்த்தாரே அன்றி ஊர் சுற்றும் பிள்ளையாக அல்ல. இந்துமதியோ எப்போதும் புன்னகை உதிர்க்கும் உத்தமி. "பெண் பிள்ளைகள் சமையல் பழகியே இருக்க வேண்டும் என்பது அவள் ஒவ்வொரு நாளும் கீர்த்திக்கு உணர்த்தும் உபதேசம். அதனாலோ என்னவோ சமையலிலும் வெளுத்து வாங்குவாள் கீர்த்தி.

சமையல், சமூகம், சமயம் என்று அத்தனை துறைகளுக்குள்ளும் தன்னை வார்த்துக் கொண்டவள் கீர்த்தி. 'அம்மா அப்பாவே உலகம் அவளுக்கு" அந்த அன்பை விட வேறெங்கிலும் அத்தனை தூய அன்பும் எதனையும் எதிர்பார்க்காத பாசமும் கிடைக்காது என்பதை நன்கே உய்த்து உணர்ந்து அறிந்தவள். கவிதை, கட்டுரை, கதை என்று எதிலும் தன் திறமை நிரூபிக்கும் தனிப்பாங்கு எல்லோரையும் அவள் பால் ஈர்க்கும் அவள் அன்னை கொடுத்த சொத்தாக அந்தப்புன்னகை அவள் முகத்திலும் தவழும்.

தன் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அக்கம், பக்கம் உள்ள சின்னக்குழந்தைகளை எல்லாம் கூட்டி வந்து பாடம் சொல்லிக்கொடுப்பதும், விளையாடுவதுமாய் அவள் பொழுது போகும். குழந்தையாகவே இருந்து விட்டால் எந்த பிரச்சனைகளூமே இல்லை என்று அப்போதெல்லாம் எண்ணத்தோன்றவில்லை அவளுக்கு.

காலம் தானே கற்பிக்கின்றது அத்தனையும்"...!!!...

நாளும் பொழுதும் காத்திராமல் சுழன்றபடி ஓடவே அவளுக்கும் எட்டிப்பார்த்தது முகத்தில் 'பரு" பூக்கும் வயது. வயது கூடக்கூட பிரச்சனைகளும் கூடவே வரும் என்பது எப்படித்தெரியும் அந்த பேதைப்பெண்ணுக்கு" அந்த வயதில் அறியாமலேயே வந்து விடுகின்றது அத்தனையும்!...அவளையும் விட்டு வைக்குமா காலம்!...'நாளையைப்பற்றிக் கவலைப்படாத நாளைகளில் இருப்பவளுக்கு, இருந்தவளுக்கு.....'அன்றைய நாள்............................

தொடரும்.......

  • Replies 72
  • Views 11.3k
  • Created
  • Last Reply

(...@@@@@@@ இது பின்னோக்கி போவதற்கான குறியீடு)

சினிமா ஸ்டைல்ல ப்ளாஸ்பாக்கோ

நல்லாருக்கு தொடருங்கோ ஒளவையாரே...

தமிழ்தங்கை அக்காவின் கதை மீண்டும் வந்தது மகிழ்ச்சி ஆவலா வாசித்து கொண்டிருக்கும் போது தொடரும் போட்டு விட்டீங்களே............மீண்டும் எப்ப கதை வரும் அக்கா........... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
"சினிமா ஸ்டைல்ல ப்ளாஸ்பாக்கோ "தம்பி கவி :lol: உங்களுக்கு என்னோட ஒரு நக்கல்!! நடத்துங்கோ நடத்துங்கோ :)நல்லாருக்கு தொடருங்கோ ஒளவையாரே...
<<தொடர்ந்து வாசிக்க நீங்கள் 'சரி" என்றால் தொடருவோம் :Dநன்றி!. கவி முதல் முதலான தங்கள் பின்னூட்டத்துக்கு! எப்படித்தான் கடைசியா வந்தவை முந்தினாலும் முதல் எப்போதும் முதல்" தான் :)
தமிழ்தங்கை அக்காவின் கதை மீண்டும் வந்தது மகிழ்ச்சி ஆவலா வாசித்து கொண்டிருக்கும் போது தொடரும் போட்டு விட்டீங்களே............மீண்டும் எப்ப கதை வரும் அக்கா........... :)
<<அப்பதானே தங்கைச்சி! ஒரு சுவை, சுவாரஸ்யம் எல்லாம் வரும், இனி வரும் ஞாயிறு அடுத்த தொடர் வரும் மூன்றாவது பகுதி எழுதி முடிச்சதுக்குப்பிறகுதான் 2ம் பகுதி போட வேணும்! :)நன்றி ஜம்மு!.

என்னது முகத்தில் பரு பூக்குமா? :lol: பரு வந்தால் முகம் பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்குமே? உங்களுக்கு பருவை பார்க்க பூ மாதிரி இருக்கோ? நல்ல ரசனைதான்! ;)

ஓ தமிழ்தங்கை அக்காவின் இன்னோர் கதையா? "சவால்" ம்ம் நல்லா இருக்கு ஆரம்பமே . ம்ம் தொடருங்க. வாசிக்க நாம தயார்.

தமிழ்த்தங்கை, யாருக்கு சவால்?

எழுதும் உங்களுக்கா? வாசிக்கும் எங்களுக்கா?

சவாலை அருமையாக நடத்திச் செல்லுங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கை உங்கள் கதை அழகு ஆனால் கொஞ்சமா எழுதிவிட்டு தொடரும் எண்டு போட்டால் எப்படிங்க,?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னது முகத்தில் பரு பூக்குமா? :lol: பரு வந்தால் முகம் பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்குமே? உங்களுக்கு பருவை பார்க்க பூ மாதிரி இருக்கோ? நல்ல ரசனைதான்! ;)
கலைஞா, இதைக்கூட இரசிக்காவிட்டால் எப்படி? :lol: அந்த வயதில்(அதனால் தான் அது பரு(வ)யது! ;) !பூவில் பனித்துளி மாதிரி பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அதை நகங்களால் கிள்ளி காயப்படுத்தி நோண்டி நொங்கெடுத்தால் அதுதான் கோரமாகும் பார்வைக்கும் விகாரமாகும்.
ஓ தமிழ்தங்கை அக்காவின் இன்னோர் கதையா? "சவால்" ம்ம் நல்லா இருக்கு ஆரம்பமே . ம்ம் தொடருங்க. வாசிக்க நாம தயார்.
<<தங்கை/அக்காவென்று முரண்பாட்டு மூட்டையா போகுது என் பெயர் ;) !கட்டாயம் வெண்ணிலா உங்களைப்போன்றவர்களுக்காகத் தொடர்வேன்.
தமிழ்த்தங்கை, யாருக்கு சவால்? எழுதும் உங்களுக்கா? வாசிக்கும் எங்களுக்கா? சவாலை அருமையாக நடத்திச் செல்லுங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்.
<<<வாசித்துவிட்டு நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்களேன் :lol:
தமிழ்தங்கை உங்கள் கதை அழகு ஆனால் கொஞ்சமா எழுதிவிட்டு தொடரும் எண்டு போட்டால் எப்படிங்க,?
அக்கா நன்றிகள், உங்கள் பின்னூட்டம் நிறைய்ய எழுதத் தூண்டுகின்றது. உங்கள் ஆர்வத்தையும் காட்டுகின்றது.மீண்டும் நன்றிகள் அக்கா.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவால் 2

அன்றைய நாள் விடியலின் நாளா இருளின் முதல் தொடக்கமா என்று அறிய முடியவில்லை இன்று வரை.

“கீத்திக்கா என்று அடுத்த வீட்டு சின்னப்பிள்ளை கைநீட்டி ஒரு கடதாசி கொடுக்கவும்" என்னடாம்மா என்று வாங்கிப்பார்த்தவளுக்கு "எல்லோருமே அழகாயிருந்தார்கள் ஒரே ஒரு புன்னகை உதிர்த்தாய் அதன்பின் உன்னைவிட யாருமே அழகாயில்லை"...எழுதி இருந்த அந்த வரிகளை படித்ததும் ஒரு கணம் தடுமாறித்தான் போனாள்.

என்ன செய்வதென்று புரியவில்லை அந்த அழகான அச்சாய் வார்க்கப்பட்ட முத்து முத்தான எழுத்துக்கள் இதயத்தில் ஒட்டிப்போனதென்னவோ நிஜம். அந்த கணங்களில் இருந்து நிஜத்திற்கு சுதாகரித்தவள்,,யார் தந்தார்கள் என்று கேட்க முன்னே ஓடிவிட்டாள் சின்னப்பிள்ளை.

எப்படித்தான் பெற்றோர் அன்பை கொட்டி கொட்டி வளர்த்தாலும் இப்படி ஓர் உணர்வு வந்து தொட்டுப்போனதும் எப்படி தடுமாறுகின்றது இந்த வெட்கம் கெட்ட மனசு"...சீ..சீ..என்று சலித்துக்கொண்டே அன்றைய வேலைகளைக் கவனிக்கத்தொடங்கிவிட்டாள்.

அடுத்த நாளும் இதே போல் ஆனால் அவள் வீட்டு வாசலில்.யாரும் பார்க்கின்றார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வாசிகக்த்தொடங்கினாள்..'பெண்ணே உன் பொறுமையும், தெளிவும், என்னைக்கட்டிப்போட்டு விட்ட முதல் காதல். முடிவும் அதுவே' ...என்னை நீ பார்க்க ஆசைப்படுவாய் இல்லை அறியவேனும் ஆர்வப்படுவாய் என்ன செய்ய காற்று கண்ணுக்குத்தெரிவதில்லை அதைப்போல் பொறுத்துக்கொள் உன்னைத்தேடி உனக்காக நான் வருவேன்"...!..

படித்து முடித்ததும் வேர்த்துக்கொட்டியது அவளுக்கு. என்ன செய்வது 'அம்மாவிடம் சொல்லி விடலாமா? ஏன் அன்றே சொல்லவில்லை என்று கேட்டால், எதையும் மறைக்காமல் ஒளிவுமறைவின்றிச் சொல்லும் அம்மாவிடம்...என்ன சொல்வது? சொல்வதா வேண்டாமா?....'முதல் முதல் அவள் தன்னையே குழப்பிக்கொண்டது அன்றுதான்.

நாளை மறுநாள் ஒரு விவாதப்போட்டியில் பங்கேற்க வேண்டி இருந்தமையால் ஓரளவு தன்னை தேற்றிக்கொண்டே தாயின் முகம் பார்த்தாள். 'என்றுமே செல்லப்பெண்ணாய் தாயைக்கட்டிக்கொள்ளும் பெண் அன்று ஏதோ தவறு செய்ததாய் எண்ணி எட்டி நிற்கவே".....என்ன ஆச்சு கீர்த்...எப்போதும் போல உன் முகம் இல்லையே? என்னடா ஆச்சு?!...தலைவலிக்குதா? 'தேத்தண்ணி போட்டுத்தரட்டுமா?...

விடாமல் அடுக்கிக்கொண்டே போன தன் தாயிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல்..."இல்லைம்மா...இல்ல்லை ஒரு விவாதப்போட்டி இன்னும் இரண்டுநாளில் அதைப்பற்றி யோசித்துகொண்டிருந்தேன்.

அந்த முதல் பொய்" ............

தொடரும்.....................................

காதல் வந்தால் பொய்யும் சேர்ந்து வந்துடுமா? ஹீஹீ

கடதாசி ல கவிதையாக எழுதிக் கொடுத்தவன் யாரோ? வாசிக்கும் ஆவலில்

நல்லா இருக்கு உங்க கதை

"எல்லோருமே அழகாயிருந்தார்கள் ஒரே ஒரு புன்னகை உதிர்த்தாய் அதன்பின் உன்னைவிட யாருமே அழகாயில்லை"...

அனுபவக்கதையா ..? பாராட்டுக்கள் தொடருங்கள்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு... 2 வரி இல தொடரும் எண்டு இழுக்காமல் 4 வரி கூட எழுதலாமே?????

அம்மாவிடம் வந்த காதல் கடிதம் பற்றி சொல்லலாமா? எங்களைப் போன்ற ஆண்களிற்கு இப்படி செய்தால் பிரச்சனை இல்லை. அம்மா, அப்பாவிற்கு கூறுவதில் சிக்கலோ அல்லது வெட்கமோ அல்லது பயமோ இல்லை. ஆனால்..

பொண்ணுங்கள் பெற்றோரிடம் இப்படியான விசயங்களை சொல்வது கொஞ்சம் சிக்கலாக இருக்குமோ? அவர்கள் தமது சகோதரிகளிடமே இப்படியான விசயங்களை கதைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

எங்கள் வீட்டிலும் இதுதான் நடந்தது. எனது அக்கா ஒருவரை விரும்பியபோது அவர் எனது மற்றைய அக்காவிடம் காதலை கூறி, மற்றைய அக்காவே பெற்றோரிடம் சொல்லி காதல் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தார். ஆனால் கீர்த்திகாவை போல் ஒரே ஒரு பிள்ளையாக இருந்தால் சிக்கல்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா இன்னொரு தொடரா?

ஆரம்பமே நல்லா இருக்கு. தொடருங்கோ...

தமிழ்தங்கை அக்காவின் கதை வந்துவிட்டதா நல்லா இருக்குது கதை ஆனாலும் பொறுத்த இடத்தில கொண்டுவந்து நிற்பாட்டி பேபிக்கு கோவம் வர பண்ணிட்டா அக்கா........... ;)

எனக்கு ஒரு டவுட் காதல் கடிதத்தை அம்மாவிட்டம் அல்லது அப்பாவிட்ட சொல்ல ஏன் தயக்கம்............நேரா போய் சொல்லுறது தானே??? :P

எனக்கு ஒரு டவுட் காதல் கடிதத்தை அம்மாவிட்டம் அல்லது அப்பாவிட்ட சொல்ல ஏன் தயக்கம்............நேரா போய் சொல்லுறது தானே??? :P

ஜம்மு நீங்கள் ஒரு பொண்ணுக்கு கடிதம் கொடுக்க நேரிட்டால் அதை அவளின் வீட்டில் கொண்டு போய் அவளின் பெற்றோர் முன்னிலை ல கொடுங்கோ அப்ப உங்கள் சந்தேகம் தீர்ந்திடும். சரியா :lol:

ஜம்மு நீங்கள் ஒரு பொண்ணுக்கு கடிதம் கொடுக்க நேரிட்டால் அதை அவளின் வீட்டில் கொண்டு போய் அவளின் பெற்றோர் முன்னிலை ல கொடுங்கோ அப்ப உங்கள் சந்தேகம் தீர்ந்திடும். சரியா :D

கொடுத்தா போச்சு உது எல்லாம் பெரிய வேளையா யாருக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கோ போய் கொடுகிறேன்.........அந்த கடிதத்தை அவாவின்ட அப்பாவிற்கே கொடுகிறேன் அக்கா............. :lol:

கொடுத்தா போச்சு உது எல்லாம் பெரிய வேளையா யாருக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கோ போய் கொடுகிறேன்.........அந்த கடிதத்தை அவாவின்ட அப்பாவிற்கே கொடுகிறேன் அக்கா............. :lol:

:o:o ஓ அந்த வீடு என்ன யாழ் களம் என்ற நினைப்போ? இஸ்டத்துக்கு கொடுக்க :D

:o:o ஓ அந்த வீடு என்ன யாழ் களம் என்ற நினைப்போ? இஸ்டத்துக்கு கொடுக்க :lol:

எல்லாம் எனக்கு யாழ்களம் மாதிரி தான் நான் கொடுபேன் எனக்கு பயமா............அவை ஓவரா கதைத்தா 000 க்கு போன் பண்ணுவன் தானே....... :P :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவால் 3

அந்த முதல் பொய்!! இப்போது நினைத்தாலும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு; வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கணவனின் ஆடைகளை மடித்து வைத்தவளுக்கு மீண்டும் நினைவுச்சுழிகள் கடந்த காலத்திற்கே அழைத்துச்சென்றன. அம்மாவுக்கு சொன்ன பொய் நெஞ்சை உறுத்திக்கொண்டே இருந்ததும் அன்றைய இரவு சிவராத்திரியாகவே ஆகிப்போனதும் அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள். விவாதப்போட்டிக்குத் தன்னை தெளிவாகத் தயார் படுத்திக்கொண்டிருந்தாள்

தான் வணங்கும் விநாயகர் படத்துக்கு முன் போய் நின்றுகொண்டே “பிள்ளையாரப்பா, என் குழந்தை வயசில் இருந்தே நீதான் என் தோழன், வழிகாட்டி, ஆசான் எல்லாமே அலைபாயும் இந்த மனசை நீதான்பா ஒரு கட்டுக்குள்ள நிறுத்தணும். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு எனக்குப் பிடிக்கவே இல்லை. என் மனசை இப்படிப் போட்டு வாட்டுறது உனக்கே நல்லா இருக்கா. என்னமோப்பா இன்றைய விவாதப்போட்டியில் எல்லாம் நல்ல படியா நடக்கணும்பா”. என்று வேண்டிக்கொண்டே தாயிடம் வந்தாள்;

என்ன கீர்த்’ கண்ணை முழிச்சு ஆயத்தப்படுத்தும் அளவுக்கு என்ன பெரிய விவாதம் பாருடா…கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு! அழுதியா என்ன?! ம்..ம்.. சரி சரி பாற்பொங்கலும் சம்பலும் இருக்கு போட்டு வைச்சிருக்கேன் நல்லாச் சாப்பிடு! இந்த வயசுதான் நல்லா சாப்பிடுற வயசு தேத்தண்ணியும் போட்டு வைச்சிருக்கன் மறக்காம குடிச்சிட்டுப்போம்மா” !. அந்த தாயின் பரிவு,குழைவு காட்டும் அக்கறை! மீண்டும் நெஞ்சை முள்ளாய்க்குத்தவே ‘ என்னை மன்னிச்சிடும்மா” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு காலைச்சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு புறப்பட்டு விட்டாள்!.

அங்கே இவளை எதிர்பார்த்து தமிழ் வாத்தியார் சிவானந்தன் பிள்ளை காத்துக்கொண்டிருந்தார். “ ஓ மன்னிக்கணும் ஐயா. கொஞ்சம் தாமதமாகிவிட்டது என்று தயங்கியவளை, “இல்லை மகள் நான் தான் நேரத்துக்கே வந்திட்டன் எங்கட பாடசாலையாலை அனுப்பிறவையை நான் தானே தயார் படுத்த வேணும். ஏன் மகள் கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்? இந்த இடத்தில் சிவானந்தம் பிள்ளையைப்பற்றிச்சொல்லியே ஆகவேண்டும். தமிழ் வித்துவான் என்று சொல்லலாம். தமிழே மூச்சாய் தமிழே பேச்சாய் தமிழே வீச்சாய் வாழும் ஒரு சிலருள் இவரும் ஒருவர். இவர் பேரூந்து, வீதி, காலை ஆகாரம்” என்று கதைக்கும் போதெல்லாம் கீர்த்திக்கும் சிரிப்பு வருவதென்னவோ உண்மை. மாணவர்களையும் மகன்/மகள் என்றே அழைப்பதும் அவர் வழக்கம். அவரைத் தொடர்ந்து கொண்டே அவளும் வகுப்பினுள் நுழைந்தாள். அங்கே எல்லோரும் வந்திருந்தார்கள். அங்கு இவளையே வைத்த கண் வாங்காது கவனித்துக்கொண்டிருந்த ஒரு சோடிக் கண்களை இவள் அன்றே கவனித்திருந்தால். !...

அங்கு இவளையே வைத்த கண் வாங்காது கவனித்துக்கொண்டிருந்த ஒரு சோடிக் கண்களை இவள் அன்றே கவனித்திருந்தால். !...

அப்போ கீர்த் கல்யாணம் செய்துட்டாவா. இப்பதான் மனசுக்குள் நிம்மதி.

அடுத்த சவாலையும் சொல்லுங்கோ அக்கா.

தமிழ்தங்கை நீங்கள் உறுத்துதல், குழைவு என்று இரு சொற்களை பாவித்து உள்ளீர்கள். இங்கு வரும் று, ழை என்பன சரியா? எழுத்துப் பிழை இல்லையா? நான் உருத்துதல், குலைவு என்று எழுதுவேன் என்று நினைக்கின்றேன். சரியோ பிழையோ தெரியாது. அல்லது அவற்றுக்கு வேறு அர்த்தமா? குழப்பமாக இருக்கிறது. கடைசியா தமிழ் படித்தது பல வருடங்களுக்கு முன் ஓ.எல் இல்.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை நீங்கள் உறுத்துதல், குழைவு என்று இரு சொற்களை பாவித்து உள்ளீர்கள். இங்கு வரும் று, ழை என்பன சரியா? எழுத்துப் பிழை இல்லையா? நான் உருத்துதல், குலைவு என்று எழுதுவேன் என்று நினைக்கின்றேன். சரியோ பிழையோ தெரியாது. அல்லது அவற்றுக்கு வேறு அர்த்தமா? குழப்பமாக இருக்கிறது. கடைசியா தமிழ் படித்தது பல வருடங்களுக்கு முன் ஓ.எல் இல்.. :icon_idea:

கலைஞா,

உறுத்துதல் என்பதன் தொடக்கம் "உறை, உறைப்பு என்பதை ஒட்டி வரும் சொல்லடை. ஆகவே "உறைத்தல்" (மிளகாய் உறைக்கும்/ உப்பு உறைக்கும்) என்பது தான் சரியான வார்த்தை, மனசில் உறைக்கும் படி உரை!. "உருத்துதல்" என்பது தவறு. ! அப்படி ஒரு சொல்லே இல்லை!

அதைப்போலவே, குழைவு என்பது "குழை" யில் இருந்து வந்த சொல்லடை! குழை(சோற்றைக் கறியோடு குழைத்தல், பிசைதல் , அதற்கு அணைதல் என்றொரு பொருளும் உண்டு. !குலை என்பது வாழைக்குலை, அல்லது குலை (கலைத்தல்) ஒழுங்காய் அடுக்கி வைத்திருந்ததை 'குலைச்சுப்போட்டாள்'/ன் என்போமே...

நானும் அங்கு பத்தாம் வகுப்பு வரைதான் படித்தேன் அதன் பிறகு கனடா வாசம் ஆனாலும் எழுத்துப்பிழைகள் தவிர்த்து சொல் விளங்கி எழுதுதல் எல்லாம் அம்மாவிடம் கற்றுக்கொண்டது.

நன்றி! நன்றிகள் உங்கள் விளக்கத்திற்கு! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.