Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் இன்று பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு – சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டம்

கொழும்பில் இன்று பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு – சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்பு

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) கண்டனப் பேரணியும் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பல்வேறு  அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.

எனினும் இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும் பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார விடயங்கள் மீட்சிக் காணும் சூழ்நிலையில், சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவுள்ள தருவாயில் இந்த போராட்டமானது அவற்றை சீர்குலைக்கும் செயற்பாடாக அமையும் என்றும் அந்த அமைப்புகள் கூட்டறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேநேரம்,  இன்றைய போராட்டத்தில் தமது கட்சி இணைந்து கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும் நெருக்கடியான பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும் வேளையில் இவ்வாறான போராட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவெளை, மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் போது எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பதன் நோக்கம் தெளிவாக இல்லை என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1308347

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று ரணிலுக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் - ஜனாதிபதிக்கு இது வெற்றியா, தோல்வியா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
1 நவம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இலங்கையில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சமீபத்திய போராட்டம்

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொருட்களின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டபோதும் நாட்டில் இப்போதும் பல தருணங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையே காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ வெளியேற வேண்டும் எனக் கோரி, நுகேகொடை - மிரிஹான பகுதியில் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பது வரை நீண்டது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முதலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக விரிவடைந்தது. பின்னரான காலத்தில் அது முழு அரசியல்வாதிகளுக்கும் எதிரானதாகியது.

காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம், மே மாதம் 9ஆம் தேதி வன்முறையாக தீவிரம் அடைந்தது. நாட்டின் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. அதன் விளைவாக கோடிக்கணக்கான ரூபா பெறுமதி சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு, பல உயிர்களும் பறிபோயின.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 9ஆம் தேதி இலங்கை பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

அதன் பின்னர், நிதி அமைச்சராக பதவி வகித்த பஷில் ராஜபக்ஷ, தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், பின்னரான காலத்தில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

எழுச்சி பெற்ற மக்கள் போராட்டம்

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கொழும்பில் நடைபெற்ற அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு போராட்டம்

இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்த நிலையின், ஜுலை மாதம் 9ஆம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகக் கோரி, லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகருக்குள் வருகை தந்து, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச சொத்துக்களை தமது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, ஜுலை மாதம் 13ஆம் தேதி மாலைத்தீவு நோக்கி தனது பாரியாருடன் சென்ற அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்திருந்தார்.

இதன்படி, சிங்கப்பூர் நோக்கி பயணித்த அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 14ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கோட்டபயவுக்கு மாற்றாக பதில் ஜனாதிபதியாக ஜுலை மாதம் 15ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ராணுவத்தை பயன்படுத்திய ரணில்

 

கொழும்பு போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவத்தை கொண்டு, அங்கிருந்து வெளியேற்றியிருந்தார்.

அதன்பின்னர், தனது நடவடிக்கைகளின் ஊடாக, எரிபொருள் வரிசைகளை குறைத்து, எரிவாயு வரிசைகளை குறைத்து, பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை குறைத்து, மின்சார வெட்டு நேரத்தை குறைத்து, பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாக மக்களை இயல்பு வாழ்க்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், இவ்வாறான சூழ்நிலையிலும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.

இந்த நிலையில், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், புனர்வாழ்வு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ் பெறுமாறு கோரியும் கொழும்பில் நவம்பர் 2ஆம் தேதி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு வழமைக்கு வருவதாக கூறப்படுகின்ற சூழ்நிலையிலும், ஏன் போராட்டம் தொடர்கின்றது என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

காலி முகத்திடலில் என்ன நடக்கிறது?

 

கொழும்பு போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலி முகத்திடல் போராட்ட களத்தில் முன்னின்று செயற்பட்டு, தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், பிபிசி தமிழுக்கு கருத்துரைத்தார்.

''பொருட்களின் விலைகள் குறைவடைந்து, நாடு வழமைக்கு திரும்புகின்றது என்பது ஒரு மாயை. 100 ரூபாவினால் விலையேற்றத்;தை மேற்கொண்டு விட்டு, 10 ரூபாவினால் விலையை குறைப்பதென்பது விலை குறைப்பு கிடையாது. 90 ரூபாவினால் விலை அதிகரித்து தான் இருக்கின்றது. மூன்று மாத காலத்தில், ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் மூன்று மடங்காக அதிகரித்து தான் இருக்கின்றது.

 

ராஜ்குமார் ரஜீவ்காந்த்

 

படக்குறிப்பு,

ராஜ்குமார் ரஜீவ்காந்த்

வெறும் ஒரு வீதத்தை விடவும் குறைவாக அளவில் குறைக்கின்ற போது, அதனை விலை குறைவு என்று சொல்;ல முடியாது. விலை குறைவு என்பது வேறொரு விடயம். பெட்ரோல் வரிசைகளோ, அல்லது வேறு வரிசைகளோ குறைந்தது என்பதற்காக பொருளாதார பிரச்சினையை இல்லை என்று இல்லை. இன்றும் மூன்று வேளை உணவு உண்ண முடியாத, மக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளை வெளிகொணர்வதற்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இலங்கையின் குழந்தைகளுக்கான போஷாக்கு குறைப்பாடு உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. மருத்துவமனைகளில் இன்றும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. டாலர் இல்லாதமையினாலேயே பொருளாதார பிரச்சினை இவ்வளவு பூதாரமாகியது. ஆனாலும், டாலரை உழைப்பதற்கான வழி வகைகளும் இன்றும் செய்யப்படவில்லை.

தொடர்ந்தும் கடன் தான் வாங்கப்படுகின்றது. கடன் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற போது, நாம் மீண்டும் பிரச்சினைகளை எதிர்நோக்குவோம்" என அவர் கூறினார்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கி போராடும் மக்கள் இன்றும் ஒடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார். அதேபோன்று, ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

மேல் தட்டு வர்க்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் தற்போது இல்லாத நிலைமை இருந்தாலும், அடி மட்ட மக்கள் பொருளாதாரத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில, மக்களின் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இனவாதம், மதவாதம் இருக்கக்கூடாது என பல மாத காலமாக போராட்டம் நடத்திய போதிலும், இன்றும் இனவாதம், மதவாதம் அவ்வாறே இருக்கின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

"பிரச்சினை முடிவடையவில்லை"

அதனால், பிரச்சினை முடிவடைந்து விட்டது என கூற முடியாது என்கின்றார் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த்.

இதேவேளை, கொழும்பில் இன்று தினம் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டத்தின் போது குரல் எழுப்பியவர்கள், இன்று அதே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் போராட்ட களத்தில் ஈடுபட்ட சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம், பிபிசி தமிழுக்கு கேள்வி எழுப்பியது.

''எதிர்கட்சிகளை நாளைய போராட்டத்திற்கு இணைத்துக்கொண்டதானது, அவர்கள் எமது கோரிக்கைகளுக்கு உடன்பட்டு தான் வருகின்றார்கள். அதனாலேயே அவர்களை இணைத்துக்கொண்டோம். அரசியல்மயப்படுத்தப்பட்டது என கூற மாட்டேன். எல்லா போராட்டங்களும் அரசியல்மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் தான். உதாரணமாக காலி முகத்திடல் போராட்டம் கூட, அரசியல் கட்சிகளுக்கு சார்பான போராட்டமாக இல்லா விட்டாலும், அதுவும் ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து (சிஷ்டம் சோர்ன்ஞ்) என்ற வார்த்தையை முன்வைத்து அரசியல் கோரிக்கை முன்னிலைப்படுத்தினோம்.

 

சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம்

 

படக்குறிப்பு,

சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம்

ஆரம்பத்தில் அதிகரிக்கப்பட்ட வாழ்க்கை செலவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். பிறகு பிறகு அது அரசியல் கோரிக்கையாக மாறியது. நாளைய போராட்டத்திற்கு எதிர்கட்சிகளிலுள்ள அரசியல்வாதிகளும் எம்முடன் சேர்ந்துக்கொண்டுள்ளார்கள். இதற்கு குறிப்பிட்ட காரணம் இருக்கின்றது. காலி முகத்திடல் போராட்டத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட போராட்டங்களை போலீஸார் தொடர்ந்தும் கலைத்து வருகின்றார்கள். போலீஸார் போராட்டங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் போது, சாதாரண மக்கள் தெருவிற்கு வருவதற்கே பயன்படுகின்றார்கள்.

எனவே அதற்காக ஒரு உபாயமாக அரசியலிலுள்ள எதிர்கட்சிகளை தெருவிற்கு வாருங்கள் என கூறுகின்றோம். இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் கட்சிகள் வருகின்றமையினால், முன்னேற்றகரமான அரசியல் கொள்கைகளை கொண்டிருக்கின்றார்கள் என நாங்கள் கூறவில்லை. நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும், மக்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிதாக கொண்டு வரப்பட்ட புனர்வாழ்வு சட்டத்தை அரசாங்கம் முற்று முழுதாக நாடாளுமன்ற புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மிக குறுகிய பொது நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே இந்த அரசியல் கட்சிகள் வருகின்றார்கள். போராட்டக்காரர்களின் பாதுகாப்பிற்காகவே அரசியல் கட்சிகள் நாளை போராட்டத்திற்கு வருகின்றார்கள்" என சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம் தெரிவிக்கின்றார்.

போராட்டம்: யாருக்கு தோல்வி, யாருக்கு வெற்றி?

காலி முகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கான போராட்டங்களே தற்போது தொடர்வதாகவும், உண்மையான போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளரும், மூத்த ஊடகவியலாளருமான அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

 

இலங்கை

 

படக்குறிப்பு,

அ.நிக்சன், மூத்த ஊடகவியலாளர்

''எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகி வருகின்றது. இதற்கு போராட்டம் நடத்துவதை விடுத்து, காலி முகத்திடல் போராட்டத்தில் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கான போராட்டமே நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நெருக்கடியை மூடி மறைத்து விட்டார்.

அது அவருக்கு கிடைத்த வெற்றி. ராஜபக்ஷ குடும்பத்தை ரணில் வழமையான அரசியல் செயற்பாடுகளுக்குள் கொண்டு வந்து விட்டார். இந்த பின்னணியில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரி போராட்டத்தை நடத்துகின்றீர்கள். காலி முகத்திடலில் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்காக இப்போது போராடுகின்றீர்கள்.

காலி முகத்திடல் போராட்டத்தின் பக்கவிளைவு என்ன? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் மீள அமலாக்கப்பட்டது.

புனர்வாழ்வு சட்டமூலம் கொண்டு வரப்பட்டது போன்றவற்றிற்காகவே போராடுகின்றார்கள். பொருளாதார நெருக்கடிக்காகவே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த போராட்ட நெருக்கடி இன்றும் இருக்கின்றது. அதைபற்றி இப்போது கதைப்பது குறைந்துள்ளது. அப்படி பார்க்கும் போது, ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரம் வெற்றி பெற்றிருக்கின்றது. ரணிலிடம் ராஜதந்திரம் கிடையாது. நரி தந்திரமே உள்ளது. ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் இல்லாமல், ராஜபக்ஷ குடும்பத்தையும் அவரது ஆதரவாளர்களையும் மீண்டும் வழமையான அரசியலுக்குள் கொண்டு வந்து விட்டார்.

சிஷ்டம் சேஞ்ச் என்ற அடிப்படையை போராட்டக்காரர்கள் விட்டு விட்டார்கள். சிஷ்டம் சேஞ்ச் செய்திருந்தால், ரணில் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார். உண்மையான கோரிக்கை வெற்றி பெறவில்லை. அதனால், போராட்டக்காரர்களின் போராட்டம் தோல்வி. ரணில் வெற்றி அப்படி தான் நான் பார்க்கின்றேன்." என அரசியல் ஆய்வாளரும், மூத்த ஊடகவியலாளருமான அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-63477388

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில்அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?

By DIGITAL DESK 5

02 NOV, 2022 | 04:18 PM
image

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Capture_8.PNG

ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரஜைகளின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதற்கான தளத்தினை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை அமைதியாக பயன்படுத்தவேண்டும் எனவும்  கேட்டுகொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/138966

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி சென்றவர்களை தடுக்கும் பொலிஸார் !

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி சென்றவர்களை தடுக்கும் பொலிஸார் !

கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டமானது மருதானையிலிருந்து ஆரம்பமானது.

இந்த எதிர்ப்பு பேரணி காரணமாக மருதானையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

processed-1-600x450.jpeg

processed-2-600x450.jpeg

processed-600x450.jpeg

https://athavannews.com/2022/1308504

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, பொது மக்களும் பெருமளவிலானோர் தற்போது அங்கு விரைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு  அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு இரண்டிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே..என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் இது தொடர்பான கடிதம் போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

IMG-20221102-WA0011-600x450.jpg

IMG-20221102-WA0012-600x450.jpg

IMG-20221102-WA0013-600x450.jpg

IMG-20221102-WA0014-600x450.jpg

IMG-20221102-WA0006-600x450.jpg

IMG-20221102-WA0007-600x450.jpg

IMG-20221102-WA0008-600x450.jpg

IMG-20221102-WA0010-600x450.jpg

https://athavannews.com/2022/1308477

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர்! அதிரும் கொழும்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவில உந்த பிரச்சனை 30 வருசமாய் இருக்கெல்லோ? இப்பதான் சிங்களச்சனத்துக்கு தெரிஞ்சுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

எள்ளோடு சேர்ந்து எலிப் புளுக்கையும் காயுது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: "ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்" - கொழும்பில் தடையை மீறி திரண்ட மக்கள்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை போராட்டம்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பு வீதியில் இன்று ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இன்று (நவம்பர் 2) அரசுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தினார்கள். காவல்துறை தடையை மீறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அடக்குமுறைக்கு எதிராகவும், பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும், உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியில் பங்கெடுத்தனர்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதில் பங்கெடுத்தவர்கள், பேரணியாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி புறப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு காவல்துறை தடை விதித்திருந்தபோதும், பெருமளவில் திரண்ட மக்கள் கூட்டம் காரணமாக, அவர்களை காவல்துறையினர் பேரணி தொடங்கிய வேளையில் தடுத்து நிறுத்தவில்லை.

 

சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கள நிலவரம் என்ன?

இந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் நாட்டில் அடக்குமுறை போன்ற சூழலை ஆளும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வருவதால் அந்தப்போக்கைக் கைவிடுமாறு குரல் கொடுத்து வருவதாக கொழும்பில் போராட்டக்களத்தில் பிபிசி தமிழுக்காக செய்தி சேகரித்து வரும் ரஞ்சன் அருண் பிரசாத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாதாலி சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயசிரி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இலங்கை தமிழ் போராட்டம்

பிபிசி தமிழிடம் பேசிய உதயகுமார், "இன்று நாடு பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் சூழலில் மக்களின் ஆணையின்றி ரணில் விக்ரமசங்க ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அவர் அடக்குமுறையைக் கையாண்டு, ஊடகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்கி வருகிறார்.

மேலும், மக்களின் அடிப்படை போராடும் உரிமையை கூட பறித்து அவர்களுக்கு எதிராக கைது பிரயோகம் செய்கிறார். பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி கைது நடவடிக்கை மேற்கொள்கிறார். இது ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்புடையதல்ல, இந்த செயல்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்று கூறினார்.

எதிர்க்கட்சி முழு ஆதரவு

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை சமகி ஜன பலவேக 100 சதவீதம் ஆதரிப்பதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 43ஆவது டிவிசன் உட்பட கிட்டத்தட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் கிட்டத்தட்ட 150 தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இரண்டு பிரதான விடயங்களின் கீழ் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"அரசாங்கத்தின் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகிய இரண்டு கோரிக்கைகள் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை" என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அந்த கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, "சந்தர்ப்பவாதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.

 

இலங்கை போராட்டம்

இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மெளலவி ஃபர்ஹான், "எங்களை ஜாதி அடையாளம் மூலமாக பிரித்து வைத்தார்கள். இந்த நாடு பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் உள்பட எல்லோருக்கும் உரியது. நாங்கள் இங்குதான் பிறந்தோம், இங்குதான் சாவோம். ஒற்றுமையோடு எங்களுடைய பிரச்னையை எதிர்கொள்வோம். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியை குட்டிச்சுவர் ஆக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்," என்கிறார்.

 

இலங்கை போராட்டம்

 

படக்குறிப்பு,

மெளலவி இஸ்மத்

சில வாரங்களுக்கு முன்பு காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்ததால் கைது நடவடிக்கைக்கு உள்ளான மெளலவி இஸ்மத் பிபிசி தமிழிடம் பேசும்போது, "மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் அவரை நாங்கள் வரவேற்போம். ஜனாதிபதி வேலையை ரணில் செய்யாமல் ராஜபக்ஷ குடும்பத்தினர் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். என்னை இரண்டு முறை சிங்கக் கொடியை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்தார்கள். ரணில் பதவி விலகட்டும். மக்கள் ஓட்டு போட்டு ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்யட்டும்," என்று கூறினார்.

முக்கிய கோரிக்கைகள் என்ன?

 

இலங்கை போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை வர்த்தக சம்மேளனம் உட்பட ஆறு முக்கிய வர்த்தக சபைகள், கூட்டறிக்கையில், பேரணி குறித்து கவலைகளை எழுப்பியதுடன், திட்டமிட்ட எதிர்ப்பு அணிவகுப்பை கைவிடுமாறு அனைத்து பிரிவுகளையும் அரசியல் குழுக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற போராட்டங்களை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் வர்த்தக சபைகள் கூறியுள்ளன.

https://www.bbc.com/tamil/sri-lanka-63487192

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.