Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

895862.jpg  
 

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம், மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நீண்ட காலம் சிறையில் இருந்த 6 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். மாநில அரசின் உரிமைகளை உறுதிப்படுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டுக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது ஆளுநரும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து, காலத்தில் விடுதலை செய்ய தவறிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தில் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதை வரவேற்கிறோம்..

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சிறையில் இருப்போரை விடுதலை செய்வது குறித்து முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் மோசடி நாடகத்தை நடத்தி வந்தனர். இதற்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து, நீதி வென்றே தீரும் என்பதை நிலைநாட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 2018-ல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால், அப்போதே அவர்கள் விடுதலையாகி இருப்பார்கள். அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது.

விசிக தலைவர் திருமாவளவன்: 6 பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. தமிழர் விரோத ஆளுநருக்கு தக்க பாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரி.

26 தமிழர் உயிர் காப்புக் குழுதலைவர் பழ.நெடுமாறன்: விடுதலையான 6 பேரில் 4 பேர் இலங்கை தமிழர்கள். அவர்களை பிற வெளிநாடுகளில் வாழும் அவர்களது உறவினர்களிடம் அனுப்ப வேண்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு. இனியாவது அரசமைப்புச் சட்ட கடமையில் இருந்து தவறாமல் ஆளுநர்கள் நடக்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பேரறிவாளனை தொடர்ந்து, மற்ற 6 தமிழர்களின் நீண்ட சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவர்கள் புதியதோர் வாழ்வை தொடங்க வாழ்த்துகள்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 7 பேர் விடுதலைக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனிசாமி ஆட்சியின்போது, அமைச்சரவையைக் கூட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவின் சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா, தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் சேது.கருணாஸ் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு | 6 people including Nalini were released - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of 1 person and text that says 'சீமான் @Seem... இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!'

  • கருத்துக்கள உறவுகள்

அறுவர் விடுதலை பற்றி பேராசிரியர் கல்யாணசுந்தரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

By RAJEEBAN

12 NOV, 2022 | 02:47 PM
image

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை கடந்த மே மாதம்,  142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில்  இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்சநீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது.

jeyram_ramesh.jpg

இந்நிலையில் 6 பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தவறானது என்றும் கூறியுள்ளார். 6 பேர் விடுதலைக்கு எதிராக உறுதியான கருத்தை காங்கிரஸ் கொண்டிருப்பதாக கூறியுள்ள ஜெய்ராம் ராமேஷ், இதனை முற்றிலும் நியாயப்படுத்த முடியாததாகவும் காங்கிரஸ் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், 6 பேரும் நிரபராதிகள் எனக்கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவர்களின் விடுதலையை யாரும் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 6 பேரும் ஹீரோக்கள் அல்ல எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

https://www.virakesari.lk/article/139813

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

இதில் என்னவோ சொல்லுவதை சொல்லட்டும்.. ஆனால்.. ஈழத்தில் ராஜீவின் படைகள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பில் காங்கிரஸ்காரர்களையும் சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டும். ஏனெனில்.. 1987 இல் இருந்து 2009 இனப்படுகொலை வரை ஈழப் பெருந்துயர்களில் காங்கிரஸின் நேரடி.. மறைமுகப் பங்களிப்புக்களை அவர்களே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில்.. செய்யாத குற்றத்திப் பெயரால்.. ஈழத்தமிழினம்.. காங்கிரஸ் கொடியவர்களால் பழிவாங்கப்பட்டிருப்பது.. இலகுவாகக் கடந்து செல்லக் கூடிய ஒரு விடயம் அல்ல. ஒரு இனத்தை முற்றாக அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்புக்குள் நிறுத்தி வைத்த ஒரு பெருங் கொடுமையை காங்கிரஸ் ஆதரவளித்து செய்திருப்பது மன்னிக்கக் கூடிய ஒன்றும் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

இதில் என்னவோ சொல்லுவதை சொல்லட்டும்.. ஆனால்.. ஈழத்தில் ராஜீவின் படைகள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பில் காங்கிரஸ்காரர்களையும் சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டும். ஏனெனில்.. 1987 இல் இருந்து 2009 இனப்படுகொலை வரை ஈழப் பெருந்துயர்களில் காங்கிரஸின் நேரடி.. மறைமுகப் பங்களிப்புக்களை அவர்களே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில்.. செய்யாத குற்றத்திப் பெயரால்.. ஈழத்தமிழினம்.. காங்கிரஸ் கொடியவர்களால் பழிவாங்கப்பட்டிருப்பது.. இலகுவாகக் கடந்து செல்லக் கூடிய ஒரு விடயம் அல்ல. ஒரு இனத்தை முற்றாக அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்புக்குள் நிறுத்தி வைத்த ஒரு பெருங் கொடுமையை காங்கிரஸ் ஆதரவளித்து செய்திருப்பது மன்னிக்கக் கூடிய ஒன்றும் அல்ல. 

இந்த வட இந்தியன் கக்கும் விஷத்தை விட…
இன்னும், இரண்டொரு நாளில், தமிழக காங்கிரசில் இருந்து அதிக விஷம் கக்குவார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிர எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது: நாராயணசாமி

895948.jpg நாராயணசாமி | கோப்புப் படம்
 

புதுச்சேரி: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிரமாக தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமான வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தால் நளினி மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை விஞ்ஞான நாடாக மாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திய ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாடே அவருடைய இறப்புக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலமாக தண்டிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது மறுபடியும் ஆயுள் தண்டனையாக மாறியது. தமிழக அரசு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் வழக்கு தொடரப்பட்டு பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விடுதலை செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற ஒரு நிலையில் அதை பார்க்காமல் அவரை விடுதலை செய்தார்கள். பழைய தீர்ப்பின் அடிப்படையில் மொத்தம் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இது அனைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய மன வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசினுடைய வழக்கறிஞர் கலந்து கொள்ளாமல் மத்திய அரசினுடைய நிலையை சொல்லாமல் இருப்பது நரேந்திர மோடியின் அரசின் செயலற்றத்தன்மையை காட்டுகின்றது.

தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இந்த விடுதலையை கொண்டாடுகின்றனர். அது மேலும் வேதனையை நமக்கு உருவாக்குகிறது. ஓர் அரசியல் கட்சியினுடைய மாபெரும் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு முழுமையான நீதி வழங்கியும் அதை நீதிமன்றம் என்ற போர்வையில் தட்டி பறிப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.

மத்திய நரேந்திர மோடி அரசு அந்த 6 பேர்களுடைய விடுதலை சம்பந்தமான மனுவில் தங்களுடைய தீவிரமான எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும். மத்திய அரசு தவறிவிட்டது. மற்ற அரசியல் கட்சியினுடைய தலைவர் படுகொலை செய்யப்பட்டால் அந்தக் கட்சியினர் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? சில அரசியல் கட்சிகள் அடிக்கடி தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்கின்ற போக்கு பெரும் வேதனை தருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக நாங்கள் எதிர்க்கின்றோம். குறிப்பாக, சில அரசியல் கட்சிகள் தலைவரை இழந்து வாடுகின்ற அந்தக் கட்சி தொண்டர்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியினுடைய துணைவியார் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவர்களை மன்னித்து விட்டோம் என்று கூறியிருப்பதாக சிலர் பேசுகின்றார்கள். இது அந்த தலைவர்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால், ஒரு கட்சியின் தொண்டன் என்ற முறையிலே ராஜீவ் காந்தியினுடைய படுகொலையை கண்டித்து முழுமையான நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/895948-narayanasamy-on-rajiv-gandhi-s-killers-release-2.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.