Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இறந்தபின் உங்கள் உடலை எரிப்பதையா அல்லது புதைப்பதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?

இறந்தபின் எமது உடலை என்ன செய்யலாம்.. ?? 34 members have voted

  1. 1. நீங்கள் இறந்ததும் உங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என விரும்புகின்றீர்கள்?

    • எரித்தல்!!
      10
    • புதைத்தல்!!
      2
    • தானம் செய்தல்!!
      5
    • என்னாவது செய்யட்டும்!!
      4
    • நான் சாக மாட்டேன்.. !!
      6
    • இனித்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்!!
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஜெனரல் கலைஞன்...............

சாவு பற்றிய பார்வை நல்லா இருக்கா அப்ப சாவும் நல்லா இருக்குமா குருவே........ :)

நான் எங்கப்பா படுத்தது யாழில இருந்து போகும் போதே 4 மணி விடிய அதற்கு பிறகும் எனக்கு ஒரே யோசனை இதை பற்றி தான் பிறகு 8 மணிக்கு விழுந்தடித்து யூனிக்கு போனா அங்கையும் எனக்கு இது தான் டவுட் பக்கத்தில இருகிறவனிட்ட வேற கேட்டனான் அவன் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டான்...............பிறகு பிரேக் நேரம் புரோபிட்ட வேற நம்ம டவுட்டை கேட்டனான் அவரும் நம்மளை பார்த்து சிரித்து போயிட்டார்..........என்றாலும் நல்ல டவுட் என்று சொன்னவர்............... :P :)

ஓ என்ட ஆசையை இத்தருணம் புத்துமாமா மற்றும் நிலா அக்கா மற்றும் சுண்டல் அண்ணா அவர்களுக்கு தெரிவித்து வைக்கிறேன் அத்தோட நம்ம குருவிற்கும் தெரிவித்து கொள்கிறேன் கரக்டா பேபிக்கு செய்து வையுங்கோ.......... :P

லாப்டொப் ஜடியா நல்லா இல்லையா குருவே அப்ப அதை நீக்கிவிடுவோம் இதனை அத்தனை யாழ்கள மெம்பர்சுக்கும் இத்தால் அறியதருகிறேன்........... :D

குருவே நீங்க எப்படி முன்னுக்கு சாவீங்க என்று உறுதியாக சொல்லுறீங்க உங்களுக்கு முன்னம் நாளைக்கே நான் மண்டையை போட்டுவிட்டேன் என்றா.........அப்படியே நீங்க முன்னுக்கே போய்விட்டீங்க என்றா சிறப்பாக செய்து தேவாரம் எல்லாம் பாடாம,சிவாஜி பாட்டு போடாம யாழில நீங்க இணைத்த இங்கிலிஸ் பாட்டை போட்டுவிடுகிறேன்........அதற்கு பிறகு யாரும் வந்து இது தமிழ் செத்த வீடு தமிழ் பாட்டு தான் போட வேண்டும் என்று சொன்னா நான் என்ன செய்ய நீங்க வேற நித்தாவா இருபீங்க...........சீடனான் நான் என்ன செய்யிறது சோ முதலே எழுதி வைகிறது என்னதுக்கும் நல்லது என்று நினைகிறென்.......... :D

ஆமாம் குருவே உடலை என்ன செய்யலாம்,எப்படி செத்த வீடு கொண்டலாம் என்று தீர்மானிசாத்து அடுத்த இலக்கை தீர்மானிபோம் அதற்கு அந்த பக்கம் வாரேன்.............. :P

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஜமுனாவின் ஜடியா நல்லா இருக்கே இப்படியே எனக்கும் செய்யுங்கோ

ஈழவன் அண்ணா நல்லாவா இருக்கு அப்ப கட்டாயம் செய்து அனுப்பிவிடுகிறோம்............. :P

  • Replies 84
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யமுனா,நீங்கள் இணைத்த படங்கள் உண்மையில் வித்தியாசமாக இருக்கு. இவற்றை எங்கு இருந்து பெற்றீர்கள்? இப்படி எந்த நாட்டில் இடம்பெறுகின்றது? இப்படிச் செய்ய நிறைய காசு செலவாகுமே? எல்லாராலும் இப்படி செய்ய முடியாதே?இந்த நாட்டுக்கு நாங்களும் குடிபெயர்ந்து செல்வோமா?எங்கள் அடுத்த இலக்கு என்ன?யோசித்துவிட்டு நான் இன்னொரு தலைப்பை ஆரம்பிக்கவா?மன்னிக்கவும் - ஜெனரல் யமுனா என்று திருத்தி வாசிக்கவும். ஜெனரல் என்று குறிப்பிட மறந்துவிட்டேன். ;)

வேறை சிந்தனையே இல்லையா குருவுக்கும் சீடனுக்கும்

அடுத்த விசயம் என்னவென்றா பெட்டிகுள்ள கொஞ்சம் உடுப்பு,பவுடர்,சென்ட்,தண்ணி போத்தல் ஒரு ஆறு மாசதிற்கு தேவையான சாப்பாடு சுவீட்ஸ் அப்படி தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வைத்து மற்றது கதை புத்தகம் எல்லாம் வைத்து விட வேண்டும் இவைக்கு தெரியுமா பெட்டிகுள்ள மூடினா பிறகு எவ்வளவு போராக இருக்கும் என்று..முக்கியாமாக வானொலி மற்றது சீடிகள் பாட்டு சீடி எல்லாம் வைத்து விட்டா சந்தோசமாக நாம அதுகுள்ள இருக்கலாம்.................
ஏன் பீடீங்க் போத்தல்ல பால் வைக்க வேணாமோ?
  • தொடங்கியவர்

ஜெனரல் யமுனா சொன்ன விசயங்கள் பிழையாக தெரியவில்லை. அதுவும் பிரேதப் பெட்டியினுள் மூச்சு விடுவதற்கு ஓட்டை ஒன்று போடவேண்டும் என்று சொன்ன ஐடியா சூப்பர்! :D

நானும் பல தடவைகள் யோசிப்பேன். அதாவது என்னதான் இறந்த உடலாக இருந்தாலும், அதை கற்பனை பண்ணி பார்க்கும்போது, மிகவும் பயமாக இருக்கின்றது. ஆனால் சிறிய ஓட்டை வைத்தால் பயமில்லை.

மேலும், நான் இறந்ததும் என்னதான் எனக்கு கண் தெரியாது என்று சொல்லப்பட்டாலும் எனது உடலை கண்ணாடி பெட்டி ஒன்றினுள் வைக்கப்படுவதையே நான் விரும்புகின்றேன். அப்பத்தான் நான் வெளியில் பார்க்க முடியும். இல்லாவிட்டால் மரப்பெட்டியினுள் உள்ளே ஒரே இருட்டாக பயமாக இருக்குமே? :)

ஜெனரல் அவர்களே...............

படங்கள் எல்லாம் ஈமெயிலில இருந்து வந்தது ஆனபடியா எந்த நாடு போன்ற விசயங்கள் அதில் இருக்கவில்லை................நண்பணிட்ட கேட்டு பார்கிறேன் கண்டு பிடித்தா சொல்லுறன்.............ஆமாம் குருவே இந்த நாட்டிற்கு குடி பெயர்ந்து செல்லும் யோசனை நன்றாக இருகிறது உங்கள் சித்தம் அவ்வாறாயின் அப்படியே செய்வோம்.........அடுத்த இலக்கு மரணத்தை எப்படி எதிர் கொள்வது என்பதே குரு அதை நீங்கள் தொடங்கி வைத்திருகிறீர்கள் அதை பற்றிய ஆய்வே நமது அடுத்த இலக்கு........ஓ ஜெனரல் என குறிபிட மறந்துவிட்டீர்களா பரவாயில்லை ஜெனரல் அவர்களே............ :D :P

ஓ என்னுடைய ஜடியா நன்றாகவா இருந்தது நன்றி குருவே........நல்ல யோசனை கண்ணாடி பெட்டிகுள் தான் வைக்க வேண்டும் அப்ப தான் வெளியால பார்க்க முடியும் என்பது நல்ல யோசனையாக இருகிறது குருவே.......... :P

பி.கு-குருவே இப்படி ஒரு தலைப்பை தொடங்கிவிட்டு மேலே உறவோசையில் அப்படி ஒரு தலைப்பை தொடங்கியவுடன் பலர் வித்தியாசமாக நினைகிறார்கள் கவனமப்பா............ B)

இப்படிக்கு

ஜெனரல் ஜமுனா.........

வேறை சிந்தனையே இல்லையா குருவுக்கும் சீடனுக்கும்ஏன் பீடீங்க் போத்தல்ல பால் வைக்க வேணாமோ?

நல்ல சிந்தனை தானே அக்கா...................ஓ பீடிங் போத்தில் முக்கியம் அக்கா...........நீங்களும் என்னோட வாறீங்களா........ :P :D

நல்ல சிந்தனை தானே அக்கா...................ஓ பீடிங் போத்தில் முக்கியம் அக்கா...........நீங்களும் என்னோட வாறீங்களா........ :P :D

:angry: ஏன் தனிய போக பயமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு! இது எல்லாம் நடைமுறைச்சாத்தியமா? நீங்கள் விளையாட்டுக்காகவே எழுதினாலும் இல்லை கருத்தொருமித்து எழுதினாலும் இதனால் என்ன பயன்? என்று நான் அறிந்து கொள்ளலாமோ?

போர்க்களத்தில் நிற்கின்ற எங்கள் உறவுகள், தோழர்களே 'சாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வெற்றி கொள்ள வேணும்! எங்கள் தலைமுறைக்காக எப்படியான ஒரு மண்ணை விட்டுச்செல்ல வேண்டும் என்று செயற்படுறாங்க!..

வாற கோவத்துக்கு கலைஞனுக்கும், ஜம்முவுக்கும் 'இரண்டு சாத்து சாத்தினா' என்னெண்டு இருக்கு எனக்கு!.!

இறந்த பின்னாலும் வாழ வேண்டும்? அதுதான் வாழ்க்கை!. அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தியுங்கள், செயற்படுத்துங்கள்.

சுவாமி விவேகானந்தர் சொல்வார்' நற்காரியங்களை புகழுக்காகவே செய்யிறதா இருந்தாலும் அதைச் செய்யுங்கள் நாளடைவில் அது உங்களுக்கே பிடித்துப்போய்விடும்" ஆகவே உடல் இறந்தாலும் உங்கள் புகழ் என்றும் நின்று நிலவட்டும்! அந்த வகையில் உங்கள் செயலைத்தொடங்குங்கள்.

காலம் மிக மிக மிகக் குறுகியது! "சாவின் நாட்கள் தெரிந்து விட்டால் வாழ்நாள் நரகமாகிவிடும் பலருக்கு! ஆனால் சிலருக்கு அதற்குள்ளாகவே எத்தனை செயலைச் செய்யலாம் என்றே செயற்படுவார்கள்.

பாரதியார், விவேகானந்தர் இவர்கள் எல்லாம் நாற்பதின் எல்லையைக் கூட எட்டாத வயதில் எத்தனையோ சாதனைகள் புரிந்தவர்கள்.

ஆகவே, தயவு செய்து புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்!

நன்றி! நன்றி! நன்றி.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஏற்கனவே Organ donor வாக என்னை பதிவுசெய்து வைத்திருக்கிறேன். அதாவது என்னுடைய உடல் உறுப்புக்கள் அனைத்தும் மற்றவொருவருக்கு பயன்படுத்துவதற்கான எனது ஒப்பந்தம்.

அதற்கான காட்டும் என்னுடைய பணப்பையில் எப்பவும் கொண்டு திரிகிறேன்..

விடயங்களை வாசித்தால் சிரிப்புதான் எனக்கு வருகிறது. நீங்கள் இறந்த பிறகு உங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு உயில். பிரேதம் பற்றிய கேள்வி எழுந்திருக்கையில் உயிருடனிருக்கும் உங்களைப்பற்றியேன் கவலைப்படவேண்டும். " நீ இந்த உடலல்ல" என்று இந்துத் தத்துவங்கள் சொல்கின்றன. ஆகவே உடலைத் தானம் செய்யும்படி கூறிவிட்டு மரணமடையப் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் 3 பாகங்களை தானம் பண்ண சம்மதித்திருக்கிறேன். முழு உடலையும் கூட தானம் செய்வதே விருப்பம். எம்மை உருவாக்கியவர்களின் விருப்பங்களும் இதில் அடங்கனும் என்பது எனது நிலைப்பாடு. மரணம் என்பதை நான் பல தடவை உணர்ந்துவிட்டேன். கனவில் இறந்து கூட இருக்கிறேன். ஆனால் இன்னும் நிஜத்தில் சந்திக்கல்ல. அதாலதான் இங்கிருக்கிறேன். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான், கிசான், இறைவன், சின்னப்பு, தமிழ்தங்கை, ஈழத்திருமகன், மற்றும் உங்கள் உடலின் பாகங்களை தானம் செய்யப் போவதாய் அறிவித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! :icon_idea:

நீங்கள் உங்களைப் பற்றி பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டும். இப்படி தானம் செய்ய முன்வருவது எல்லாராலும் முடியாது. என்னாலும் முடியாது!

நீங்கள் இறந்ததும், உங்கள் உடல் உறுப்புக்கள் மற்றவர்களுக்கு பயன்படவேண்டும் என்று நினைத்து செயற்படும் தன்மையை மெய்ச்சுகின்றேன்.

இந்த கருத்தாடல் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டாலும், நீங்கள் மற்றவர்களும் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை காட்டி, மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கின்றீர்கள்! நன்றிகள்! மீண்டும் உங்கள் நல்ல இதயங்களிற்கு வாழ்த்துக்கள்! :huh:

பி/கு: என்ன ஜெனரல், நான் சொன்னது சரிதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழுகிற காலத்தில் உள்ள பிரச்சனைகளையே சமாளிக்கமுடியவில்லை.. எனவே செத்தபின் என்ன ஆகும் என்ற சிந்தனை தேவையற்றது..

:angry: ஏன் தனிய போக பயமோ?

அக்கா இல்லாம எங்கையும் தனிய போய் பழக்கமில்லை அது தான் அக்காவையும் கூப்பிட்டனான் நிலா அக்கா வாங்கோ.......... :P

தமிழ்தங்கை அக்கா...............

இது எல்லாம் நடைமுறை சாத்தியமாகும் ஏன் என்றா பாருங்கோ............ஜயர் வாறது மந்திரம் சொல்லுறது பிறகு முட்டி உடைத்து இப்படி பல செயற்பாடுகள் எப்படி உருவாக்கம் பெற்றது செத்தவீட்டில் யாரோ என்னை மாதிரியும் நம்ம குரு மாதிரியும் அறிவாளிகள் முதலில் செய்ய அதை பின்பற்றி மற்ற அறிவுகொழுந்துகளும் செய்கிறார்கள் :icon_idea: ..........அதே போல் நாம ஒருக்கா செய்துவிட்டா பிறகு மற்றவர் செய்ய இப்படியே பரவிடும்........அதற்கு பிறகு பெட்டிகுள்ள ஓட்டை கட்டாயம் வைக்க வேண்டும் என்று பெரிய...........பெரிய ஆட்கள் எல்லாரும் சொல்லுவீனம் அக்கா..............ஆகவே எனக்கும் குருவிற்கும் சாத்தாம பாவம் நாங்கள் எங்களை மன்னித்துவிடுங்கள் ;) .............நாங்கள் செய்யிற செத்தவீட்டை பார்த்து பிறகு உலக மக்கள் எல்லாரும் பின்பற்றூவீனம் என்று நினைகிறேன்.......ஜெனரல் நான் சொல்லுறது சரி தானே...... :P

இறந்த பின்னாலே வாழவேண்டும் அதற்காக எனக்கு ஒரு சிலையை ஜெனரல் வைப்பார் நான் அவருக்கு ஒரு சிலையை வைப்பேன் அப்ப சரியா அக்கா :P ...........என்னை ஜெனரல் வைப்பீங்க தானே சிலை........ஆனா என்ன பிரயோசனம் சிலை வைத்தா காக்கா,குருவி எல்லாம் எச்சம் போட்டுவிட்டு போகும் ஒரு நல்ல நாளைக்கு மட்டும் அதை துடைத்து மாலை போடுவாங்க அதை விட சிலை வைக்காம இருக்கலாம் தானே குருவே............ :huh:

சாவின் நாட்கள் தெரிந்தால் தான் வாழ்நாள் சொர்க்கமாகிடும் இது ஜெனரல் ஜம்மு சொல்லி இருகிறார் :P ..........குருவே இதை எழுதி வையுங்கோ பிற்கால சந்ததியினருக்கு உபயோகமா இருக்கும்........அதாவது ஒரு இலட்சியம் இருந்தா தான் போராடலாம் அதே மாதிரி சாவு வருது என்று தெரிந்தா மனிசன் மற்றவனோட சண்டை பிடிக்காம் ஒற்றுமையா இருந்து பல விசயங்களை சாதிபாங்கள் என்பது என் கருத்து இதை பற்றிய குருவின் கருத்து என்ன....... :P

ஆமாம் அக்கா பாரதியார்,விவேகானந்தர் எல்லாம் 40 வர முன்னம் நல்ல விசயங்கள் எல்லாம் செய்திருக்கீனம் இந்த ஜம்முவும்,குருவும் இந்த சின்ன வயசில எத்தனை சாதனி செய்து இருக்கீனம் நீங்க அதை சொல்லவில்லை அழுகையா வருது குருவும் பிறகு அழுவார் ஆனபடியா அழவில்லை......... :P :huh:

ஜெனரல் கலைஞன் அவர்களே ஓவரா உளறிட்டோமோ............... :P

  • தொடங்கியவர்

விவேகானந்தர் பற்றி சொல்லி இருக்கிறீங்கள்.

நான் ஒருமுறை விவேகானந்தரின் வரலாற்றை படித்தபோது அவர் தான் எப்போது சாவார் என்று (அவர்கள் பாசையில் சமாதி அடைதல் என்று சொல்வார்கள்..) பல வருடங்களின் முன்பே தனது சீடர்களிற்கு கூறியதாகவும், சீடர்கள் அவர் அப்போது அவ்வாறு கூறியதை பெரிதாக எடுக்கவில்லை என்றும், ஆனால் அவர் சொன்ன தினமன்றே சுவாமி விவேகானந்தர் ஏற்கனவே அறிந்தபடி தனது சாவை அணைத்துக் கொண்டதாகவும் வாசித்தேன்.

அதாவது, சில ஞானியருக்கு தமக்கு சாவு எப்போது வரும் என்பது முன்பே தெரியுமாம். உண்மை, பொய் தெரியவில்லை. விஞ்ஞானம் மூலம் இவற்றை விளக்க முடியுமா தெரியவில்லை.

ஞானிகளுக்கு தெரியுமா குருவே அப்பா உங்களுக்கும் தெரிந்திருக்குமே.......... :P

  • தொடங்கியவர்

இதை நீங்கள் பகிடிக்கு கேட்டாலும், இதனுள் பல விசயங்கள் இருப்பதால் சற்று விளக்கமாக எழுதுகின்றேன்.

நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன் அதாவது ஆன்மீகத்தையும், சித்து வித்தைகள், மெஜிக்கையும் கலக்க கூடாது என்று!

நாங்கள் ஞானியர் என்று எதிர்பார்ப்பது வேறு! உண்மையாக ஞானியர் என்பவர்கள் வேறு!

ஞானியர் என்பவர்கள் தாடி வளர்த்து, துறவறம் பூண்டவர்களாக இருக்க வேண்டும் என்று இல்லை. சாதாரண மானவர்களாகவும் இருக்கலாம்.

ஒரு குழந்தை போல் இருந்து வாழ்வை பூப் போல அணுகுவதை - கொண்டு செல்வதை ஞானம் என்று ஓரளவு சொல்லாலாம். அதாவது டென்சன் ஆகாமல், மற்றவரை நோகடிக்காமல், அதேநேரம் நாம் நினைத்த காரியங்களை சாதிப்பது என்பது லேசான வேலை அல்ல! இது எல்லாராலும் முடியாது! ஆனால், இது சிலது உங்களது அப்பாவால் முடியக் கூடியதாய் இருக்கும். அதாவது உங்கள் வீட்டிலேயே ஞானிகள் இருக்கலாம்.

ஆனால், நாம் எதையோ மனதில் கற்பனை பண்ணிக்கொண்டு ஆற்றில் இருப்பதை குளத்தில் தேடுகின்றோம் அல்லது அருகில் இருக்கும் ஒன்றை தேடி பல்லாயிரம் மைல் தூரம் பயணம் செய்கின்றோம்.

ஞானிகள் என்பவர்கள் இவர்கள் என்று முகத்தில் ஒருவருக்கும் ஒட்டி இல்லை. பலர் ஞானிகளாக இருக்கலாம், ஞானிகளாக வாழலாம். ஆனால், அவர்கள் ஞானியர் எனும் விசயம் அவர்களிற்கே தெரியாமல் இருக்கலாம்.

யாழில் கூட ஞானியர் இருக்கலாம். இது பகிடி இல்லை. என்னைப் பொறுத்தவரை ஞானியர் என்பவர், வாழ்வை இலகுவாக - சிம்பிளாக எடுத்து - மனநிறைவுடன் - மகிழ்ச்சியுடன் - ஒரு குழந்தையாக வாழ்பவர்கள்! மற்றவனை நோகடித்து, சித்து வேலைகள் செய்து , மெஜிக்குகள் காட்டி, தானே கடவுள் என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து, தாடி, தலைமயிர் வளர்த்து, தன்னை சாதாரணமான மனிதர்களில் இருந்து வித்தியாசமான ஒரு ஆளாக படம் காட்டி.. இவ்வாறு எல்லாம் செய்பவன் ஞானியே அல்ல!

மேலும், ஞான நிலையை அடைந்தால் எமது மூளையில் நாம் எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நாம் சாகப்போகின்றோம்.. இத்தனையாம் திகதி இவர் சாவார்.. இப்படி எல்லாம் ஸ்கிரீனில் - மனத் திரையில் காட்டாது!

முக்காலம் உணர்தல், தீர்க்கதரிசனம் என்பன வேறு, மெஜிக் - சித்து வித்தைகள் என்பன வேறு!

30+ கிழட்டுக் குஞ்சு

யாரும் சங்கு ஊதமுதல் ஓடிப்போய் The Grey Zone என்று 2001 இல் வெளிவந்த படத்தை (DVD இலயும் வந்துட்டுது) எடுத்துப் பார்க்கவும் (இதுவரை பார்த்திருக்காவிட்டால்).

http://en.wikipedia.org/wiki/The_Grey_Zone

http://www.amazon.com/Grey-Zone-David-Arquette/dp/B000087EYX

  • தொடங்கியவர்

ஆ பால்குடியை பார்த்து உது என்ன கதை?

கதையை வாசிச்சேன்.. மோசமான படம் போல இருக்குதே? இப்படிப் படங்கள் தான் நீங்கள் பாப்பீங்களோ?

நான் இப்படியான பயங்கர படங்கள் பார்ப்பதில்லை. பிறகு இரவு ஒண்டுக்கு போவதும் கஸ்டம். என்னைச் சுற்றி பேய் உலாவுவதாக பயம் எல்லாம் வந்துவிடும்...

வேறு ஏதாவது 'American Wedding' மாதிரி ஏதாவது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் இருந்தால் சொல்லுங்கோ..

குருவே ஞானிகள் பற்றிய விளக்கம் அருமை.......நான் நினைத்த ஞானிகள் எல்லாம் தாடி வைத்து இருபீனம் என்று அப்ப யாழிலேயே ஞானிகள் இருக்கீனம் ஒன்று நீங்க எனி தான் ஆக போறீங்க அப்ப இதுவரை யாரப்பா அப்படி இருக்கீனம் என்றா மோகண் அண்ணா என்று சொல்லாம் ஆனால் அவர் குழந்தை மாதிரி இல்லை...... :icon_idea: .

நான் இப்படியான பயங்கர படங்கள் பார்ப்பதில்லை. பிறகு இரவு ஒண்டுக்கு போவதும் கஸ்டம். என்னைச் சுற்றி பேய் உலாவுவதாக பயம் எல்லாம் வந்துவிடும்...

அட ஜெனரலிற்கே பயமா எனக்கு தான் கண்டுகாதையுங்கோ............ஆனா பயங்கரபடம் எல்லாம் இரவு இருந்து பார்போமல........... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேகானந்தர் பற்றி சொல்லி இருக்கிறீங்கள்.

நான் ஒருமுறை விவேகானந்தரின் வரலாற்றை படித்தபோது அவர் தான் எப்போது சாவார் என்று (அவர்கள் பாசையில் சமாதி அடைதல் என்று சொல்வார்கள்..) பல வருடங்களின் முன்பே தனது சீடர்களிற்கு கூறியதாகவும், சீடர்கள் அவர் அப்போது அவ்வாறு கூறியதை பெரிதாக எடுக்கவில்லை என்றும், ஆனால் அவர் சொன்ன தினமன்றே சுவாமி விவேகானந்தர் ஏற்கனவே அறிந்தபடி தனது சாவை அணைத்துக் கொண்டதாகவும் வாசித்தேன்.

அதாவது, சில ஞானியருக்கு தமக்கு சாவு எப்போது வரும் என்பது முன்பே தெரியுமாம். உண்மை, பொய் தெரியவில்லை. விஞ்ஞானம் மூலம் இவற்றை விளக்க முடியுமா தெரியவில்லை.

<<<

விஞ்ஞானம் மூலம் விளக்கமுடியாததுதான் மெய்ஞானம் கலைஞா,

விவேகானந்தருக்கு தன் முற்பிறப்பும் தெரியும் தன் வாழ்நாளின் எண்ணிக்கையும் தெரியும். உங்களை முற்றாக உணர்ந்துகொண்டால் அதுதான் ஞானம். 'இன்பம் துன்பம், சோகம், நரகம், சொர்க்கம் என்று எந்த நிலையிலும் உங்களை பாதிக்காத பூரண நிலைக்க்கு உங்களை உட்படுத்துதல்.

எனக்கு வழிகாட்டியே 'சுவாமி விவேகானந்தர்' தான். மீசை இருந்தால் தான் ஆண்கள் அழகு :icon_idea: என்ற என் குழந்தைத் தனமான எண்ணத்தையே புரட்டிப்போட்டவர்! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விவேகானந்தர் மீது ஒரு தீராத காதலே உண்டு! :huh:

அவரின் ஞானதீபம்" வாசித்துப்பாருங்கள்! மனசுக்கும் ஆறுதலாக இருக்கும் நிறைந்த உற்சாகமாகவும் இருக்கும்!.

  • தொடங்கியவர்

ஓம் ஞானதீபதை நான் முன்பு வாசித்து முடித்தேன்.. யாழ்ப்பாணத்தில் நாவலர் ரோட் + வைமன் றோட் சந்தியில் என்று நினைக்கின்றேன்.. ஆறுமுகநாவலர் கலாச்சார மண்டபம் என்று ஒரு இடம் இருக்கின்றது தெரியுமா? அங்கே அவரது அனைத்து அந்த நூல் பகுதிகளையும் வாசிச்சு முடித்தேன் என்று நினைக்கின்றேன். அங்கு வயசு போன ஆக்கள் தான் பெரும்பாலும் வருவார்கள். ஏனென்றால் அங்குள்ள புத்தகங்கள் அப்படி! எல்லாம் சீவன் போற நேரத்தில் படிக்கிற புத்தகங்கள்! நான் அப்போது வயசு போன ஆட்களின் செயற்பாட்டை செய்ததாலேயே இப்போது குழந்தைகளின் செயற்பாட்டை செய்யவேண்டி உள்ளது.. :icon_idea:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஞானதீபதை நான் முன்பு வாசித்து முடித்தேன்.. யாழ்ப்பாணத்தில் நாவலர் ரோட் + வைமன் றோட் சந்தியில் என்று நினைக்கின்றேன்.. ஆறுமுகநாவலர் கலாச்சார மண்டபம் என்று ஒரு இடம் இருக்கின்றது தெரியுமா? அங்கே அவரது அனைத்து அந்த நூல் பகுதிகளையும் வாசிச்சு முடித்தேன் என்று நினைக்கின்றேன். அங்கு வயசு போன ஆக்கள் தான் பெரும்பாலும் வருவார்கள். ஏனென்றால் அங்குள்ள புத்தகங்கள் அப்படி! எல்லாம் சீவன் போற நேரத்தில் படிக்கிற புத்தகங்கள்! நான் அப்போது வயசு போன ஆட்களின் செயற்பாட்டை செய்ததாலேயே இப்போது குழந்தைகளின் செயற்பாட்டை செய்யவேண்டி உள்ளது.. :icon_idea:

கலைஞா,

நாவலர் அதாவது ஆறுமுக நாவலர் எங்கள் பூட்டனார்! பலர் சொன்னாலும் நம்ப மாட்டார்களே என்பதால் சொல்வதில்லை!

விவேகானந்தரின் கருத்துக்கள் யாவும் புரிந்து கொண்டாலே போதுமானது!. எனக்கு யாழ்ப்பாணம் தெரியாது.

நான் பிறந்தது திருகோணமலையில் (தமிழீழத்தின் தலை நகரில்) ஆனால் அம்மா, அப்பாவின் பூர்விகம் யாழ்ப்பாணம் தான்!.

அது சரி 'சீவன் போற காலம் என்ற ஒன்று இருக்கே?!!..போற உயிருக்கு வயசு இல்லைக் கலைஞா!!..

:huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.