Jump to content

இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பொலிஸில் சரண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பொலிஸில் சரண்

By VISHNU

14 NOV, 2022 | 08:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவுக்கு சென்று துணி மணிகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து  பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் உடமையிலிருந்த 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட  நால்வர் கொண்ட குழு நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (14) சரணடைந்தது. 

குறித்த நலவருக்கும் எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று குறித்த நால்வரும் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் சரணடைந்தனர்.

இந் நிலையில் அவர்களை சந்தேக நபர்களாக ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல, சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

25 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்களை அடையாள அனிவகுப்புக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்ட நீதிவான் ஹர்ஷன கெக்குணவல, அதற்காக அவர்களின் அடையாளங்களை மறைத்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சிறைச்சாலைகள்  அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.

மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான்  பிரேமரத்னவுக்கு  சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும்  மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.ஜே.வை.டி. கிரிஷாந்தவின் நேரடி கட்டுப்பாட்டில்  சிறப்புக் குழுவொன்று இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன் ஒருவர், இரு கான்ஸ்டபிள்கள்  அடங்கிய நால்வர் கொண்ட குழுவை கைது செய்யவே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள்  தற்காலிகமாக கடமையிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டனர். அவர்கள் விசாரணை ஆரம்பித்தது முதல் தலைமறைவான நிலையில் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டனர்.

இந் நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணையிகளில், கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த பொலிஸ் குழு, தனியார் ஒருவரின் வேனில் சென்று இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நடடுக்குள் தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை கடத்துவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்புக்காக  தாங்கள் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனினும் அவர்கள் அந்த சுற்றிவளைப்பு தொடர்பில் உயரதிகாரிகள் எவருக்கும் அறிவித்திருக்கவில்லை என  மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், இந்தியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்து அங்கிருந்து கொழும்பு நோக்கி வேன் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.

அந்த வேனை பின் தொடர்ந்து தனியார் வேன் ஒன்றில் வந்துள்ள இந்த பொலிஸ் குழு, அவர்களை ஜா எல பகுதியில் வைத்து  மறித்து கைது செய்துள்ளனர்.

கொழும்பு 13 கதிரேசன் வீதிஅயைச் சேர்ந்த ஒருவர், தெஹிவளையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் பின்னர் பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  விசாரணைகளின் போது அடிக்கடி இந்தியாவுக்கு சென்று துணிமணிகளை எடுத்துவரும் குழுவினரே அவர்கள் என தெரியவந்துள்ளது.

எனினும் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல், பொலிஸ் புத்தகங்களிலும் எந்த பதிவினையும் இடமால், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரவோடிரவாக விடுவிக்கப்பட்ட அவர்கள், மறு நாள் 10 ஆம் திகதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரதனவை சந்தித்து, முறைப்பாடளித்துள்ளனர்.

தம்மை கைது செய்து விடுவித்த பொலிஸ் குழுவினர், கைது செய்யும் போது அவர்களின் பொறுப்பிலெடுத்த 6 மோதிரங்கள், 4 தங்க வளையல்களையும் 38000  அமரிக்க டொலர்களையும் திருப்பித் தரவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே தற்போது குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/140030

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனுகளும் பாவம் என்னேய்றது! முந்திய மாரி செக்கிங் எண்டு தமிழாக்களிட்ட லொட்டா கொள்ளையடிக்கேலாது. அதான் இப்ப இப்பிடி வழிப்பறியில இறங்கீட்டானுகள்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன் ஒருவர், இரு கான்ஸ்டபிள்கள்  அடங்கிய நால்வர் கொண்ட குழுவை கைது செய்யவே

கொள்ளைக்கூட்டத்துக்கு பதவி வேறு, இவர்கள் நாட்டில் நீதியை நிலைநாட்டுகிறார்களாம்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.