Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

சர்வகட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதற்காகவும் சர்வதேச சமூகத்துடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1315998

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13 க்கு அப்பால் செல்வது சவாலானது - பாக்கியசோதி சரவணமுத்து

By Digital Desk 2

18 Dec, 2022 | 09:45 AM
image

(ஆர்.ராம்)

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வது சவலானது விடயமாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பு தொடர்பில் இருவேறு பிரதிபலிப்புக்கள் வெளிவந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நோக்கத்தினையும் உள்ளடக்கி சர்வகட்சிகளின் மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு கிடைகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவறாக கொள்ள முடியாது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதன் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான தீர்வினை முழுமையாகப் பெற்றுக்கொடுபதற்கு அதியுச்சமாக முனைய வேண்டும்.

இதனைவிடவும் குறித்த மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கரிசனை கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தியதாகவே இருக்கும். 

அதாவது, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோரமுடியும்.

அதற்கு, அப்பால் சென்று அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எனக்குள்ளது. ஏனென்றால், தற்போதைய அரசாங்கம் மக்கள் அiணையை முழுமையாக பெறாதவொன்றாகும். அத்துடன், ஸ்திரமான நிலைமையிலும் இல்லை.

ஆகவே, அவ்விதமான அரசாங்கமொன்றால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வல்ல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமானவிடயமாகும். அந்தஅடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதே உசிதமானதாக இருக்கும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/143394

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வது சவலானது விடயமாகும்

எதற்காக இவ்வளவு காலமும் இந்தத் திருத்தச்சட்டத்தை இழுத்து பிடித்து வைத்திருந்தவர்கள்? ஏலாகட்டத்தில் இதைக்கட்டி கதையை தமிழரின் வாயை மூடிவிடுவதே நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

சர்வகட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

இவரை இலங்கை பிரஜை ஆக்கிவிடுங்கப்பா.....பிரச்சனை முடிஞ்சுது 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

சர்வகட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

என்ன இவர் ஒட்டகத்தின் விளையாட்டு மாதிரி இருக்கே.

முதல்ல காலநிலை என்று வந்து தலையை ஓட்டினார்.

இப்போ மெதுமெதுவா அரசியலுக்குள் வாறாரே யுவர் ஆனர்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.