Jump to content

ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

By Sethu

22 Dec, 2022 | 11:54 AM
image

மியன்மாரின் முன்னாள் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களைக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. 

2021 பெப்ரவரி முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுகிறது. நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபை நேற்று புதன்கிழமை நிறைவேற்றியது. 

மியன்மார் தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபையினால் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் இதுவாகும்.

15 அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான அப்பிராய பேதங்கள் காரணமாக, இதற்கு முன், மியன்மார் நிலைவரம் தொடர்பாக சம்பிரதாய பூர்வ அறிக்கைகள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன. 

இந்நிலையில், ஆங் சான்சூகி மற்றும் முன்னாள் ஜனாதிபதி வின் மியின்ட் உட்பட கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் கோரியுள்ளது.

அதேவேளை, அனைத்து வகையான வன்முறைகளையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் மனித உரிகைமகள், அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இத்தீர்மானம் கோரியுள்ளது.

ஐநா பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்தவர்களில் 12 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதன் நிரந்தர அங்கத்தவர்களான ரஷ்யா, சீனா வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. தீர்மான வரைபில் மாற்றங்கள் செய்யப்பட்டதையடுத்து, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதை இந்நாடுகள் தவிர்த்துக்கொண்டன. இந்தியாவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

 

https://www.virakesari.lk/article/143832

 

Link to comment
Share on other sites

ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்: ஐ.நா., வலியுறுத்தல்

‘மியான்மர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி, மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை’ எனக்கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு இ ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மியான்மர் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதோடு ஆங் சான் சூகி, வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை கைது செய்து சிறை வைத்துள்ளது. மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மியான்மரில் இராணுவத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
இது குறித்து பேசிய ஐ.நா., தலைவர் அண்டோனியோ குட்டாரெஸ், ‘தற்போது மியான்மரில் நிலவி வரும் சூழ்நிலை கவலையளிக்கிறது. ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டும். மியான்மர் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இ ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என, வலியுறுத்தினார்.

https://thinakkural.lk/article/229582

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.