Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் விக்கெட்டுக்காக கொண்டாடப்படும் அர்ஜூன் டெண்டுல்கரின் பிரச்னைகள் என்ன?

அர்ஜுன் டெண்டுல்கர்

பட மூலாதாரம்,SPORTZPICS

54 நிமிடங்களுக்கு முன்னர்

அர்ஜூன் ‘டெண்டுல்கர்’…

கிரிக்கெட் உலகில் தனக்கென அடையாளத்தை ஓர் உருவாக்கும்வரை அர்ஜூனுக்கு “டெண்டுல்கர்” என்ற பெயர் சுமையாக, அழுத்தமாக மாறலாம்.

கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனின் மகன், ‘பிராட்மேன்’ என்ற பெயர் தனக்கு பெரிய அழுத்தத்தை தருகிறது என்று கூறி கடந்த 1972ல் தனது பெயரை “பிராட்சன்” என்று மாற்றிக்கொண்டதையும் இங்கு நினைவுக்கூர வேண்டும்.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐ.பி.எல். விக்கெட்டை வீழ்த்தினார்.

 

ஹைதரபாத்தில் நடந்த ஐ.பி.எல். டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்திருந்தது.

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், 5 ரன்கள் விட்டுக்கொடுத்து, புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை சாய்த்தார். ஐ.பி.எல். தொடரில் தனது முதல் விக்கெட்டை எடுத்து, மும்பை அணிக்கு வெற்றியையும் அர்ஜூன் பெற்றுக்கொடுத்தார்.

எதுவும் நடக்கலாம்

ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகும் ஏராளமான இளம் வீரர்கள் தங்கள் முதல் விக்கெட்டை வீழ்த்தும்போது கொண்டாடப்படாதபோது, ஏன் அர்ஜூன் மட்டும் பேசுபொருளாக மாறிவிட்டார். காரணம், அவரின் பெயருக்கு பின் இருக்கும் டெண்டுல்கர் என்ற வார்த்தையின் ஈர்ப்பு, கவனம்தான் பேசப்படுகிறது.

புவனேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்தியது பெரியசாதனையா?, அவரென்ன பேட்ஸ்மேனா?, இதை பெரிதாகப் பேசுகிறீர்களே! என்றெல்லாம், அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீச்சு குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இதுவரை நடந்த ஐ.பி.எல். டி20 தொடரையும் போன்று இல்லாமல் இந்த ஐ.பி.எல். டி20 தொடர் சற்று வேறுபட்டு அமைந்திருக்கிறது. கடைசி ஓவர், கடைசி பந்துவரை போட்டியின் முடிவை கணிக்க முடியாத வகையில், அடையாளம் தெரியாத இளம் வீரர்கள் திடீரென ஹீரோவாகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால், புவனேஷ்வர் குமார் பௌலர் மட்டுமல்ல பேட்டிங்கிலும் சில போட்டிகளில் கணிசமான ரன்களை விளாசியவர். அவரது விக்கெட்டைதான் அர்ஜூன் சாய்த்திருக்கிறார்.

அர்ஜுன்

பட மூலாதாரம்,BCCI/IPL

சிறப்புக் கவனம்

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் பெற்ற வெற்றியை காட்டிலும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் எடுத்த முதல் விக்கெட் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகியுள்ளது. இதன் மூலம், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.

அதாவது கடந்த 2008-09ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணிக்காக ஆடிய புவனேஷ்வர் குமார், மும்பை அணிக்காக ஆடிய சச்சின் டெண்டுல்கரை டக்அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்தார். முதல் தரக் கிரிக்கெட்டில், சச்சின் டெண்டுல்கரை டக்அவுட்டில் வெளியேற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றிருந்தார்.

தனது தந்தை சச்சின் டெண்டுல்கரை முதல் தரப் போட்டியில் டக்அவுட் செய்த புவனேஷ்வர் குமார் விக்கெட்டை வீழ்த்தி அர்ஜூன் டெண்டுல்கர் தனது ஐ.பி.எல். முதல் விக்கெட்டாக மாற்றிக்கொண்டுள்ளார்.

அர்ஜூன்

பட மூலாதாரம்,BCCI/IPL

அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணம்

புலிக்கு பிறந்தது பூனையாகிவிடக்கூடாது என்பதில் சச்சின் மிகுந்து கவனம் செலுத்தி, ஒவ்வொரு அடியாக தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரை சிறு வயதிலிருந்து நகர்த்தினார்.

“நெபோடிசம்” என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதாவது தகுதியில்லாதவர்களை, உறவுமுறை, நட்புமுறையில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுவருவதாகும்.

தனது மகன் இந்த பேச்சுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் திறமையை மெருகேற்றும் விஷயத்தில் சச்சின் அதிகமான ஈடுபாடு செலுத்தினார் என்கின்றனர் கிரிக்கெட் கூர்நோக்கர்கள்.

சச்சின் டெண்டுல்கர் தனது 16-வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் களம் கண்டுவிட்டார். ஆனால், அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 23வயதில்தான் ஐ.பி.எல். தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றியதும் கவனிக்கத்தக்கது.

மும்பையில் பிறந்து வளர்ந்து, கிரிக்கெட் பயிற்சி எடுத்த அர்ஜுன் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கோவா அணி சார்பில் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஏனென்றால், மும்பை அணியில் இடம் பெற்று விளையாடுவதைவிட, மும்பை அணிக்கு எதிராக ஆடி, பேட்டிங்கில் ஸ்கோர் செய்தாலோ அல்லது பந்துவீசி விக்கெட் வீழ்த்தினாலோ அது பிசிசிஐ தேர்வாளர்களால் கவனிக்கப்படும்.

அது மட்டுமல்லாமல் மும்பை அணியில் இடம் பெறுவதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இந்த போட்டிகளில் முந்தி மும்பை அணியில் இடம் பெறுவதைவிட, மும்பை அணிக்கு எதிராக ஆடி, எளிதாக தேசிய அணியின் கதவுகளைத் தட்டிவிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

காரணம், உள்நாட்டு கிரிக்கெட் அணிகளில் மும்பை அணி வலிமையானதாகும். அந்த அணிக்கு எதிராக அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் ஸ்கோர் செய்தாலோ அல்லது விக்கெட் வீழ்த்தினாலோ அது நிச்சயம் தேசிய அணியின் கதவுகள் திறப்பதற்கு சாவியாக அமையக்கூடும்.

அர்ஜூன்

பட மூலாதாரம்,BCCI/IPL

அடையாளம்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில் அர்ஜுனுக்கு இடம் கிடைத்தது. அப்போதுதான் முதல்முறையாக கிரிக்கெட் ரசிகர்கள் அர்ஜுன் குறித்த செய்தியால் புருவம் உயர்த்தினார்கள். ஆனால், அர்ஜுனுக்கு ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு அவருக்கு கைகூடவில்லை.

2021 ஜனவரியில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாட மும்பையின் அணியில் இடம் கிடைத்தது. தனது முதல் போட்டியில் பந்துவீச மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஓவர்கள் பந்து வீசி 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் மும்பை அணி அர்ஜுனை எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இடம் கிடைக்கவில்லை. 2022 சீசனிலும் பிளெயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் மும்பைக்கு பதிலாக கோவா அணிக்கு விளையாட முடிவெடுத்தார் .தனது தேசிய அறிமுகத்துக்கான தொடக்க அடியை கோவா அணியில் இருந்தே அர்ஜூன் தொடங்கினார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நடந்த ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் சதம் அடித்து, 120 ரன்களில் ஆட்டமிழந்ததே உள்ளூர் போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக் இன்ஃபோ தளத்தின் தரவுகளின் படி, அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை 7 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 223 ரன்கள் சேர்த்துள்ளார், 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும். ஏ லெவல் போட்டிகளில் 7 ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். இதில் மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் பிடித்து மொத்தமாக 21 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் ஒரு போட்டியிலும் ஆட்டமிழக்கவில்லை.

இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளராக, கீழ்வரிசை பேட்ஸ்மேனாக அர்ஜூன் டெண்டுல்கர் தன்னை கிரிக்கெட்டில் அடையாளப்படுத்தி வருகிறார். இதுவரை நடந்த முதல்தரப் போட்டிகள், ஏ-லெவல் போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.

அர்ஜுன்

பட மூலாதாரம்,BCCI/IPL

யுவராஜ் சிங்கின் தந்தையிடம் பயிற்சி

அர்ஜூன் பெரிய அளவில் தனது திறமையை வெளிக்காட்ட தவறியநிலையில், கடந்த ஆண்டு யுவராஜ் சிங்கின் தந்தை, யோகராஜ் சிங் தான் அர்ஜூனுக்கு பயிற்சியளித்தார்.

சச்சின் தனது மகனுக்கு யுவராஜ் சிங் தந்தை பயிற்சியளிக்க வேண்டும் என யுவராஜ்சிங்கிடம் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தனது தந்தையிடம் பேசியிருக்கிறார் யுவராஜ் சிங்.

தன் மகன் தொலைபேசியில் இதைச் சொன்னபோது தன்னால் சச்சினின் கோரிக்கையை தட்டமுடியவில்லை என யோக்ராஜ் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

டெண்டுல்கர் தனக்கு மகன் போன்றவர் என்றும், ஆனால் தான் பயிற்சியளிக்கும்போது எந்தவித வெளிப்புற தலையீடும் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்றும், சுதந்திரமாக செயல்படுவேன் என்றும் யுவராஜிடம் அப்போது யோக்ராஜ் கூறியிருக்கிறார் .

சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரி மைதானத்தில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு 15 நாட்களுக்கும் மேலாக யோகராஜ் சிங் பயிற்சி அளித்தார்.

அப்போது அர்ஜூன் டெண்டுல்கரின் திறமையைப் பார்த்து யோகராஜ் மிகுந்த பெருமிதம் அடைந்துள்ளார். அர்ஜூனின் செயல்திறன், கவனம், பொறுமை, விடாமுயற்சி ஆகியவையும், அவரின் நுணுக்கமான பேட்டிங் திறமையும் தன்னை கவர்ந்துவிட்டதாக யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யோகராஜ் சிங் பெருமையுடன் அர்ஜுன் குறித்து கூறுகையில் “ யுவராஜ் சிங்கை நினைவூட்டும் வகையில் அர்ஜூன் டெண்டுல்கர் இருக்கிறார். அர்ஜூன் பந்துவீச்சாளராக இருப்பதைவிட பேட்ஸ்மேனாக ஜொலிப்பார். அற்புதமான, அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேனாக வருவார். யுவராஜ் சிங்கும் இதேபோன்றுதான் பேட்டிங் செய்வார். சச்சின் டெண்டுல்கர் பெயரை இந்த உலகம் நினைவில் வைப்பதைப் போல் ஒருநாள் அர்ஜூன் டெண்டுல்கர் பெயரையும் உலகம் நினைவில் வைக்கும்” என புகழாரம் சூட்டினார்.

அர்ஜூனுக்கு பேட்டிங்கில் அதிகமான ஈடுபாடு இருப்பதைக் யோகராஜ் கண்டறிந்து கிரிக்கெட் உலகிற்கு தெரியப்படுத்தினார்.

இந்த பயிற்சிக்கு பின்னரே ரஞ்சியில் அர்ஜுன் சதம் விளாசினார்.

அர்ஜுன்

பட மூலாதாரம்,BCCI/IPL

அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிடைத்த 'வாய்ப்புகள்'

அர்ஜூனுக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்திய அணிக்கு வலைப்பந்துவீச்சாளராக அர்ஜூன் அழைத்துச் செல்லப்பட்டார், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம் அர்ஜூன் பயிற்சி எடுத்தார், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜாகீர் கான் பயிற்சியிலும், நியூஸிலாந்து வேகப்புயல் ஷேன் பாண்ட் பயிற்சியிலும் அர்ஜூன் இருந்தார். இதுபோன்ற ஜாம்பவான்கள் மேற்பார்வையில் பயிற்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதல்முறையாக ஐபிஎல்லில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கியபோது இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் இரண்டு ஓவர்கள் வீசினார், பின்னர் இறுதி ஓவர் வீச அழைக்கப்பட்டார். ஆனால், ஏறக்குறைய மும்பை இந்தியன்ஸ் வெற்றி உறுதியாகிவிட்டநிலையில், களத்தில் வலுவான பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழலில் அர்ஜூனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2021-ல் இருந்தியே அர்ஜுன் இருந்தாலும், ப்ளேயிங் லெவனில் இந்த முறைதான் அர்ஜூனுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அர்ஜூன் குறித்து மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஒருமுறை கூறுகையில் “ அர்ஜூன் இன்னும் கடினமாக பயிற்சி பெற வேண்டும். மும்பை போன்ற அணிக்காக விளையாடும்போது, ப்ளேயிங் லெவனில் விளையாடுவது முக்கியமானது.

பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அர்ஜூன் தனக்கென இடத்தையும் அடையாளத்தையும் பெற முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

குழப்பம் இருக்கிறதா

அர்ஜூன் டெண்டுல்கர் பேட்டிங் ஆல்ரவுண்டரா, பௌலிங் ஆல்ரவுண்டரா, பேட்ஸ்மேனா அல்லது முழு நேர பந்து வீச்சாளரா என்பதை தனது திறன் மூலம் வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்.

ஐ.பி.எல். தொடரில் கடந்த இரு போட்டிகளில் அர்ஜூனுக்கு பந்துவீசுவதற்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைத்த நிலையில் இன்னும் பேட்டிங்கிற்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்போதுதான் அர்ஜூன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தக் கூடும்.

அர்ஜுன்

பட மூலாதாரம்,BCCI/IPL

கேப்டன் எனும் சிற்பி

ரவி சாஸ்திரி இந்தியக் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளராகத்தான் அறிமுகமாகினார். ஆனால், இங்கிலாந்து தொடரில் ரவி சாஸ்திரியை ஓபனிங் பேட்ஸ்மேனாக சுனில் கவாஸ்கர் களமிறக்கி பரிசோதித்தார். தான் ஓபனிங் இறங்கிய முதல் போட்டியிலேயே ரவி சாஸ்திரி 66 ரன்கள் சேர்த்தார். அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் இரட்டை சதம், மேற்கி இந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சதம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் என ரவி சாஸ்திரியின் கிரிக்கெட் வாழ்க்கை கவாஸ்கரால் மாற்றப்பட்டது.

பந்துவீச்சாளராக நுழைந்த ரவி சாஸ்திரி, தொடக்க ஆட்டக்காரராக தன்னை நிரூபித்துக்கொண்டார். அதேபோன்று இளம் வீரர்களை ஒரு கேப்டன் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை திசைமாறும். இனிவரும் போட்டியில் அர்ஜூனுக்கு பேட்டிங்கிலும் வாய்ப்பு வழங்கி அவரை பரிசோதிக்க வேண்டும்.

ஜாம்பவான்களின் மகன்கள்

பொதுவாக இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களின் மகன்கள் ஜொலித்தது இல்லை என்ற மரபு இருந்து வருகிறது. சுனில் கவாஸ்கர், ரோஜர் பின்னி போன்றவர்களின் மகன்கள், என்ன காரணத்தினாலோ ஜொலிக்கவில்லை.

இதைவிட, ஊடகத்தின் வெளிச்சம், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்ற அழுத்தம் அர்ஜூனுக்கு மறைமுகமான அழுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் இந்த மறைமுக அழுத்தத்தில் இருந்து தன்னை விலக்கி, பந்துவீச்சாளராக அல்லது பேட்ஸ்மேனாக அல்லது ஆல்ரவுண்டராக இதில் எவ்வாறு தன்னை அடையாளப்படுத்தப் போகிறார் என்பதில்தான் அவரின் வெற்றி அமைந்துள்ளது

https://www.bbc.com/tamil/articles/cnlx0lyne5do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லியின் ஆறாவது தோல்வியைத் தவிர்த்த 'அந்த தருணம்'; பேட்ஸ்மேன்கள் ஏன் இப்படி சறுக்குகிறார்கள்?

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

21 ஏப்ரல் 2023, 02:41 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டேவிட் வார்னரின் பொறுப்பான பேட்டிங், பந்துவீச்சாளர்களின் கடும் முயற்சி ஆகியவற்றால் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்.டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியது .

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி முதலில் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பின் இது குறித்து பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் வார்னர், `அடுத்த 5 நாட்களுக்குள் பலம் வாய்ந்த அணியாக திரும்ப வேண்டும். தற்போது எதுவும் சரியாக அமையவில்லை. அதே நேரத்தில் ஒருசில அணிகள் 0-5க்கு என்ற நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளன. அதேபோல், நாங்களும் மீண்டு வருவோம்` என்று குறிப்பிட்டார்.

நேற்றைய ஆட்டத்தில் கடுமையாக போராடி மீண்டு வந்துள்ள டெல்லி அணி, நடப்பு தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

 

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 127 ரன்களுக்கு சுருண்டது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 5 போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது புள்ளிக்கணக்கைத் தொடங்கியது. 2 புள்ளிகளை டெல்லி கேபிடல்ஸ் அணி பெற்றாலும், பட்டியலில் கடைசி இடத்தில்தான் இருக்கிறது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த வெற்றி, வறண்டுகிடந்த பூமி, மழையைப் பார்த்தது போன்ற மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் வீரர்களுக்கு ஏற்படுத்தும். இருப்பினும், ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்வது எளிதான காரியமல்ல, அடுத்துவரும் 8 போட்டிகளில் குறைந்தபட்சம் 7 வெற்றிகளை டெல்லி கேபிடல்ஸ் பெறுவது அவசியமாகும்.

டெல்லிக்கு புது தெம்பு ஊட்டிய இஷாந்த் ஷர்மா

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். இஷாந்த் ஷர்மா, ஆன்ரிச் நார்ட்ஜே, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோரின் கடும் உழைப்புதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 127 ரன்களில் சுருட்ட உதவியது.

டெல்லி அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் குழுவாகச் செயல்பட்டது முக்கியக் காரணமாகும். இல்லாவிட்டால், 127 ரன்களுக்குள் கொல்லக்தா நைட் ரைடர்ஸ் அணியை சுருட்டியிருக்க முடியாது.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

குறிப்பாக 2 ஆண்டுகளுக்குப்பின் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா, அதிவேகமாகப் பந்துவீசிய ஆன்ர்ச் நார்ட்ஜே, நடுப்பகுதியில் நெருக்கடி அளித்த சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பணி வெற்றிக்கு உதவின.

அதிலும் பவர்ப்ளே ஓவருக்குள் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா, வெங்கடேஷ், லிட்டன் தாஸ் ஆகிய 3 பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றி டெல்லி அளித்த நெருக்கடியில் இருந்து கடைசி வரை கொல்கத்தா அணியால் மீள முடியவில்லை.

2021ம் ஆண்டுக்குப்பின் ஐ.பி.எல். தொடரில் முதல்முறையாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பின்னர் பேசிய அவர், என் வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். இதைப்பற்றி மட்டுமே நினைத்துகொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் பந்துவீச்சில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போதில் இருந்து இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறேன்` என்று குறிப்பிட்டார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர், ஆன்ரிச் நார்ட்ஜேயின் பந்துகள் நேற்று மணிக்கு 150கி.மீ வேகத்தில் எகிறியதால், கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாட கடும் சிரமப்பட்டனர். 4 ஓவர்கள் வீசிய ஆன்ரிச் 16 டாட் பந்துகளுடன் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து சொதப்பும் பேட்ஸ்மேன்கள்

இது தவிர வழக்கம்போல் டேவிட் வார்னர்(57), தனிஒருவனாக போராடி இந்த சீசனில் 4வது அரைசதத்தை பதிவு செய்து ரன்களைச் சேர்த்ததும் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து 127 ரன்களில் கொல்கத்தா அணியை சுருட்டிக் கொடுத்தனர். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களின் மந்தமான ஆட்டத்தால், கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் கடைசி ஓவரில்தான் வெற்றி கிடைத்தது.

இந்த குறைந்த ஸ்கோரைக்கூட டெல்லி கேபிடல்ஸ் அணியால் எளிதாக சேஸிங் செய்ய முடியாமல் கடைசி ஓவர்வரை இழுத்துச் சென்று 4 பந்துகள் இருக்கையில் அக்ஸர் படேல் ஆட்டத்தை முடித்தார்.

எளிதாக எட்ட வேண்டிய இந்த ஸ்கோரை டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்று, போராடி வெல்வதற்கு காரணம் என்ன என்பதை அந்த அணி சுயபரிசோதனை செய்வது அவசியமாகும்.

ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிக்கு 30 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 6 விக்கெட்டுகள் என நல்ல நிலையில்தான் அணி இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நெருக்கடி நிலைக்கு டெல்லி கேபிடல்ஸ் வந்துவிட்டது.

ராணா வீசிய 19-வது ஓவரில் அக்ஸர் படேலுக்கான ஸ்டெம்பிங்கை விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் தவறவிடாமல் இருந்திருந்தால் நிச்சயம் டெல்லியின் தொடர் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,ANI

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தாலும், இன்னும் அந்த அணியின் பேட்டிங் வரிசை ஸ்திரமாகவில்லை, பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்பதையே இந்த ஆட்டத்தின் முடிவு உணர்த்துகிறது. நடுவரிசையில் மார்ஷ், பில் சால்ட், ப்ரித்வி ஷா, மணிஷ் பாண்டே ஆகியோர் இன்னும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் டேவிட் வார்னர் மட்டுமே சீராக ஸ்கோர் செய்துள்ளார். பேட்டிங்கில் மற்ற வீரர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாததே அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக இருந்து வருகிறது.

டெல்லி அணியின் பேட்டிங் தொடர்பான அதிருப்தியை அந்த அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலியும் நேற்று வெளிப்படுத்தினார், போட்டிக்கு பின்பு பேசிய அவர், இதை எனது முதல் டெஸ்ட் ஆட்டம் போன்று நினைக்கிறேன். இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசியுள்ளோம். ஆனால், பிரச்னை என்பது பேட்டிங்கில் இருக்கிறது. எப்படி இன்னும் சிறப்பாக செய்வது என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும்.` என்றார்.

ஸ்பின்னர்ஸை வைத்து போராடிய கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்களால் முடிந்த அளவு குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்ய முயன்றது. இதற்காக நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரேன், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்குல் ராய் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. இவர்களைப் பயன்படுத்தியதற்கும் ஓரளவு பலன்கிடைத்தது. இன்னும் கூடுதலாக 20 ரன்களை கொல்கத்தா சேர்த்திருந்தால் நிச்சயம் டெல்லியின் தோல்வி உறுதியாகியிருக்கும்.

சென்றார்.

பிரித்வி ஷா கழற்றிவிடப்படுகிறாரா?

பிரித்வி ஷாவின் ஐ.பி.எல். பயணம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. ப்ரித்வி ஷாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் 6 போட்டிகளாகத் தொடர்கிறது.

சன்சைரஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி ஒரு பேட்டியில் கூறுகையில் “ டெல்லி கேபிடல்ஸ் போதுமான வாய்ப்புகளை ப்ரித்வி ஷாவுக்கு வழங்கிவிட்டது. இனிமேலும் வாய்ப்புகளை வழங்குவதை விடுத்து, அவருக்குப் பதிலாக ஷான் மார்ஷை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். ஆதலால் அடுத்த போட்டியில் ப்ரித்வி ஷா நிலை என்னவென்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கடந்த 6 போட்டிகளில் பிரித்வி ஷா-வார்னர் ஜோடி குறைந்தபட்சம் பவர்ப்ளே ஓவர்கள்வரைகூட தாக்குப்பிடிக்கவில்லை. பிரித்வி ஷாவின் தவறான ஷாட்களாலும்,மோசமான ஃபார்ம் காரணமாகவும் விரைவாகவே ஆட்டமிழந்துவிடுகிறார். இந்த ஜோடி கடந்த 5 போட்டிகளில் 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஏமாற்றம் அளித்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்

கொல்கத்தா அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை நேற்றை ஆட்டத்தில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் நேற்றைய ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ராணா(4), லிட்டன் தாஸ்(4), மன்தீப் சிங்(12), ரிங்கு சிங்(6), சுனில் நரேன்(4) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய ஜேஸன் ராய் தனது வழக்கமான அதிரடியில் 43 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் ஆன்ட்ரே ரஸ்ஸலின்(38நாட்அவுட்) அதிரடி ஆட்டம் ஸ்கோரை உயர்த்த உதவியது. அதிலும் முகேஷ் குமாரின் கடைசி ஓவரில் ரஸ்ஸல் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு தூணாக அமைந்தது. ரஸ்ஸலும் சொதப்பி இருந்தால், கொல்கத்தா அணி 110 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். மற்ற வகையில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம்,ANI

‘தனி ஒருவன்’ வார்னர்

டெல்லி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு காரணமோ அதற்கு ஈடாக கேப்டன் டேவிட் வார்னரின் பங்களிப்பும் முக்கியமாகும். கடந்த 5 போட்டிகளிலும் டெல்லி அணி தோற்றபோதிலும், தனிஒருவனாக களத்தில் நின்று வார்னர் ஸ்கோர் செய்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் வார்னர் அடித்த 4வது அரைசதமாகும்.

டெல்லி கேப்டல்ஸ் பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் சீராக விக்கெட்டுகளை இழந்தாலும், வார்னர் மட்டும் நங்கூரமிட்டு ஆடினார். அதிலும் சுனில் நரேன் பந்துவீச்சில் வார்னர் 4 பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை வேகப்படுத்தினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தது, கொல்கத்தா அணிக்கு சற்று நம்பிக்கை ஏற்படுத்தியது, டெல்லி கேபிடல்ஸுக்கு பதற்றத்தை அதிகப்படுத்தியது. வார்னர் களத்தில் இருக்கும் வரை டெல்லி வெற்றி உறுதி என ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். ஆனால், வார்னர் ஆட்டமிழந்து சென்றபின் ஆட்டம் பரபரப்பை எட்டியது.

எனினும் அக்ஸர் படேல் 19 ரன்களுடன்ஆட்டமிழக்காமல் களத்தில் கடைசி வரை இருந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

https://www.bbc.com/tamil/articles/c168lngk474o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலியின் பேட்டிங் பெங்களூர் வெற்றிக்கு உண்மையிலேயே உதவியதா?

ஆர்சிபி

பட மூலாதாரம்,@RCBTWEETS

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 20 ஏப்ரல் 2023
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

டூப்பிளசிஸ், விராட் கோலியின் பேட்டிங், முகமது சிராஜ்ஜின் துல்லியமான பந்துவீச்சால், மொஹாலியில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன் பீ்ல்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 24 ரன்களில் தோல்வி அடைந்தது.

2 ஆண்டுகளுக்குப்பின் கேப்டன் பொறுப்பு

ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த 2021ம் ஆண்டு துறந்தபின், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார்.

 

தனக்கேஉரிய பாணியில் கோலியின் கேப்டன்ஷிப், பந்துவீச்சாளர்களை திறன்மிக்க வகையில் பயன்படுத்தியது, எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நேர்த்தி ஆகியவை ஆர்சிபி அணி வெற்றிக்கு உதவியது.

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸுக்கு தொடையில் தசைப்பிடிப்பு இருந்ததால், அவர் “இம்பாக்ட் ப்ளேயராக” மட்டுமே களமிறங்கி பேட்டிங் மட்டும் செய்தார். இதனால், கேப்டன் பொறுப்பை முழுமையாக விராட் கோலி கவனித்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

புள்ளிப்பட்டியல்

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் 3 வெற்றிகள், 2 தோல்விகளுடன் ஆர்பிசி அணி உள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

6 புள்ளிகளுடன் 5 அணிகள் உள்ளன, நிகர ரன் ரேட் அடிப்படையில்தான் இந்த அணிகளுக்கான தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அடுத்துவரும் ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாக அமையும்.

சிராஜ் ஆட்டநாயகன்

ஆர்சிபி

பட மூலாதாரம்,ANI

ஆர்பிசி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் ஆர்சிபி அணி சேர்த்த 174 ரன்கள் மொஹாலி ஆடுகளத்தில் எளிதாக சேஸிங் செய்துவிடமுடியும். ஆனால் அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்வதற்கு காரணமாக அமைந்தவர் சிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 13 டாட் பந்துகளுடன், 21 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.முகமது சிராஜ் வீழ்த்திய(அதர்வா, லிவிங்ஸ்டோன், பிரார், எல்லீஸ்) 4 விக்கெட்டுகளுமே ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய விக்கெட்டுகளாகும்.

ஆர்சிபி வெற்றிக்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா. 4 ஓவர்கள் வீசிய ஹசரங்கா7 டாட் பந்துகளை வீசி 39 ரன்கள் கொடுத்து 2 (ஷாருக்கான், ஷார்ட்) முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பவர்ப்ளேயில் ஆர்சிபி ஆதிக்கம்

ஆர்சிபி

பட மூலாதாரம்,ANI

ஆர்சிபி அணி தனது பேட்டிங் பவர்ப்ளே, பந்துவீச்சு பவர்ப்ளேயில் ஆதிக்கம் செலுத்தியதே வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். பேட்டிங்கின்போது ஆர்சிபி அணி, பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது. அதேபோல பந்துவீச்சில், பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை நெருக்கடியில் தள்ளியது.

ஆர்பிசி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அணியில் உள்ள டூப்பிளசிஸ்(84), விராட் கோலி(59) ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே பெரும்பான்மை பங்கு வகித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை.

கோலி, டூப்பிளசிஸ் நங்கூரம்

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை 16 ஓவர்கள்வரை விராட் கோலியும், டூப்பிளசிஸும் களத்தில் நங்கூரம் பாய்ச்சி 137 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அடுத்த 4 ஓவர்களில் அந்த அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆர்சிபி அணி பவர்ப்ளேயில் டூப்பிளசிஸ், கோலியின் அதிரடி ஆட்டத்தால், 59 ரன்கள் சேர்த்து 10 ரன் ரேட்டில் ராக்கெட் வேகத்தில் சென்றது. 11 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது.

மந்தமான பேட்டிங்

ஆர்சிபி

பட மூலாதாரம்,ANI

இதனால் எப்படியும் 200 ரன்களை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பவர்ப்ளே முடிந்தபின் கோலி, டூப்பிளசிஸ் இருவருக்கும் என்ன ஆச்சு எனத் தெரியவில்லை. ராகுல் சாஹர், பிரார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பவுண்டரி அடிக்கமுடியாமல் திணறியதால், ரன்ரேட் சரியத் தொடங்கியது.

களத்தில் செட்டிலான இரு அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் இருந்தும், ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்த முடியவில்லை. கோலி, டூப்பிளசிஸ் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்தபோதிலும், பவர்ப்ளேக்கு பின் ஏற்பட்ட மந்தமான பேட்டிங், ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும்.

பவர்ப்ளேயில் கோலி 19 பந்துகளில் 29 ரன்கள் என வேகமாக ஆடிய நிலையில், அடுத்த 28 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே அவரால் சேர்க்க முடிந்தது.

ஒருவேளை இப்படி இருந்திருந்தால்…

ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பதிலாக வேறு வலுவான அணி பேட் செய்திருந்தாலோ அல்லது பஞ்சாப் கிங்ஸ் அணியிலேயே யாரேனும் இரு பேட்ஸ்மேன்கள் வலுவாக களத்தில் நின்றிருந்தாலோ ஆர்சிபி அணியால் இந்த ஸ்கோரை டிபெண்ட் செய்திருப்பது கடினம்தான்.

ஏனென்றால், மொஹாலி ஆடுகளத்தில் சராசரியாக முதலில் பேட் செய்யும் அணி 190 ரன்கள் வரை அடிக்க முடியும். ஆனால், ஆர்சிபி அணி அந்த சராசரி ஸ்கோரைக் கூட எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.

தினேஷ் கார்த்திக்கிற்கு என்னாச்சு?

ஆர்சிபி

பட மூலாதாரம்,BCCI

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்(0), தினேஷ் கார்த்திக்(7) ஏமாற்றம் அளித்தனர்.

கடந்த சீசனில் ஆர்பிசி அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் 300க்கும் மேற்பட்ட ரன்கள் சேர்த்து தனது இருப்பை நிலைநிறுத்தினார். ஆனால், இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடிய தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில்கூட சொல்லிக் கொள்ளும் வகையில் பேட்டிங் செய்யவில்லை என்பது ஏன் எனத் தெரியவில்லை.

அற்புதமான பீல்டிங்

ஆர்பிசி அணியின் பீல்டிங் குறித்து முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வீரர்களின் பீல்டிங் மிகுந்த கட்டுக்கோப்பாக அமைந்ததால் பெரிதாக ரன்களை கோட்டைவிடவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் சாம் கரன், ஹர்பிரீத்சிங் இருவரையும் ரன் அவுட் ஆக்கிய சிராஜ், ஹசரங்கா இருவரின் பீல்டிங் அற்புதமாக அமைந்தது.

கேட்சை விட்ட கோலி

ஆர்சிபி வீரர்கள் ஒருபுறம் அருமையாக பீல்டிங் செய்துவர கேப்டன் பொறுப்பேற்ற விராட் கோலி, கடைசி நேரத்தில் பவுண்டரி லைனில் கேட்சை கோட்டைவிட்டதையும் குறிப்பிட வேண்டும். நல்லவேளை ஆர்சிபி வென்றுவிட்டது, ஒருவேளை தோல்வி அடைந்திருந்தால், கோலியின் பெயர் உருண்டிருக்கும்.

சிராஜ், ஹசரங்கா

ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் சிராஜ், ஹசரங்கா பங்களிப்பு முத்தாய்ப்பு. லிவிங்ஸ்டோன், அதர்வா இருவரின் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடியை ஏற்படுத்தினார். இதன் மூலம் சிராஜ் இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் 6-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார், அது மட்டுமல்லாமல் ஊதா நிறத் தொப்பியையும் பெற்றுவிட்டார்.

சிராஜ் தனது பந்துவீச்சில் காட்டிய வேறுபாடுகள், இன்-ஸ்விங்குகள் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக அமைந்தது. அதிலும் கடைசி நேரத்தில் டெய்லென்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டெம்புக்கு நேராக வீசி அவர்களை வெளியேற்றியது சிராஜ்ஜின் அனுபவத்துக்கு கிடைத்த பரிசாகும். அது மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் சிராஜ் ஒரு ரன் அவுட் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் தவறுகள்

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அணித் தேர்விலேயே சொதப்பிவிட்டது. அனுபவமிக்க பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவை அமரவைத்துவிட்டு, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நேத்தன் எல்லீஸைத் தேர்ந்தெடுத்தனர்.

விராட் கோலி, டூப்பிளசிஸை ஐபிஎல் தொடரில் 6 முறை ரபாடா ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பவர்ப்ளேயில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசக்கூடிய ரபாடாவை அமர வைத்தனர்.

2வதாக, கடந்த போட்டியில் மேட்ச்வின்னராக இருந்த சிக்கந்தர் ராசாவையும் அமரவைத்தனர். அருமையான ஃபார்மில் இருக்கும் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா இருந்திருந்தால் நடுவரிசை பேட்டிங் ஓரளவு பலப்பட்டிருக்கும். அணியில் லிவிங்ஸ்டன் சேர்த்ததால் பேட்டிங் வலுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிவிங்ஸ்டனும் சொதப்பிவிட்டார்.

3-வதாக குஜராத் அணிக்கு எதிராக பட்டையக் கிளப்பிய ஷாருக்கானும் இந்த ஆட்டத்தில் ஏமாற்றினார். ஹசரங்கா பந்துவீச்சில், தேவையில்லாமல் இறங்கி அடிக்க முற்பட்டு, ஷாருக்கான் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்தார்.

பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

ஆர்சிபி

பட மூலாதாரம்,BCCI

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்(இம்பாக்ட் ப்ளேயர்) பிரப்சிம்ரன் சிங்(46),விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா(41) இருவர் மட்டுமே ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை எட்டினர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஜிதேஷ் ஷர்மா நல்ல ஃபார்மில் இருந்தார். இவருக்கு துணையாக யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

ஆர்சிபி பந்துவீச்சாளர் சிராஜ் வீசிய 18-வது ஓவரில் பிரார், எல்லீஸ் இருவரும் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஒட்டுமொத்தத்தில் பஞ்சாப் அணி வீரர்களைத் தேர்வு செய்ததும், பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததுமே தோல்விக்கான காரணங்களாகும்.

ரபாடா ஏன் இல்லை?

அதேநேரம், பஞ்சாப் அணியின் பந்துவீச்சையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு கட்டத்தில் 200 ரன்களை ஆர்சிபி அணி எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டநிலையில் 10 ஓவர்களுக்கு மேல் அந்த அணியின் ரன்ரேட்டுக்கு ப்ரேக் போட்டதும் கவனிக்கத்தக்கது.

இதுபுறம் இருக்க கோலி, டூப்ளிசிஸ் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் 16 ஓவர்கள்வரை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறியது, அனுபவமின்மையை வெளிப்படுத்துகிறது. ரபாடா போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் களத்தில் இருந்திருந்தால், நிலைமை வேறுமாதிரியாக திரும்பி இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c2q1r5ll2dqo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு' - CSK vs SRH போட்டியில் அப்படி என்ன நடந்தது?

தோனி

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

“வரலாறு முக்கியம்” என்பார்கள். அப்படியொரு முக்கியமான வரலாற்றை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சிஎஸ்கே அணி கிடைத்த இந்த 4வது வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னையில் தோல்வி அடைந்தநிலையில், இந்த போட்டிக்காக முழுமையாகத் தயாராகி வந்திருந்தது என்பது பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங்கில் தெளிவாகத் தெரிந்தது.

 

அதிலும் கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஒவ்வொரு ஓவருக்கும் களத்தில் வீரர்களை மாற்றுவது, சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் பவுண்டரி, சிக்ஸர் அடித்துவிட்டால் உடனடியாக பீல்டிங்கை மாற்றுவது, ஒவ்வொரு பேட்ஸ்மேனின் பலவீனத்தை அறிந்து பந்துவீச்சாளர்களை மாற்றி, பீல்டிங்கையும் மாற்றுவது என கச்சிதமாக செய்தார்.

அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், மெதுவாக பந்துவீசும் வீரர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஜடேஜா, தீக்சனா, மொயின் அலிக்கு இன்றைய ஆட்டத்தில் அதிக முக்கியத்தை தோனி அளித்தார். அதற்கு ஏற்ற பலனும் கிடைத்தது.

 

வரலாறு சிஎஸ்கே பக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும்போதெல்லாம், சன்ரைசர்ஸ் அணிக்கு சிஎஸ்கே அணி சிம்மசொப்னமாகவே இருந்துள்ளது. இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை சிஎஸ்கே இந்தப் போட்டியில் தக்கவைத்தது.

அது மட்டுமல்லாமல் சென்னையில் விளையாடும் மற்ற அணிகள் பெரும்பாலும் சிஎஸ்கேவிடம் திணறத்தான் செய்துள்ளன. விதிவிலக்காக சில போட்டிகளில் வென்றுள்ளன. அந்த வகையில் பார்த்தால், சென்னையில் நடந்த 23 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 19 போட்டிகளில் வென்று, சூப்பர் கிங்ஸாக வலம் வருகிறது.

டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 8 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ரசிகர்களின் மகிழ்ச்சியும், சோகமும்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் சோகமும் இன்றைய ஆட்டத்தின் முடிவில் கிடைத்தது. மகிழ்ச்சிக்குக் காரணம், கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்ற சிஎஸ்கே இன்று வெற்றி பெற்றதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

சோகத்துக்கு காரணம், ரசிகர்களின் நாயகன் தல தோனி பேட் செய்வதைப் பார்க்க முடியவில்லையே என்பதால் வருத்தத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறினர்.

 

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

ஜடேஜா, கான்வே அதிரடிகள்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியக் காரணமாகும். அதிலும் ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 8 டாட் பந்துகளுடன் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

பேட்டிங்கில் டேவிட் கான்வே 57 பந்துகளில் 77 ரன்களுடன்(12பவுண்டரி, ஒரு சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கான்வே இந்த சீசனில் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். கான்வேயின் அர்ப்பணிப்பு பேட்டிங் சேஸிங்கை எளிமையாக்கியது.

 

கடைசிவரை இழுவை எதற்கு?

134 ரன்களை சிஎஸ்கே அணி எளிதாக, குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்து நிகர ரன்ரேட்டை உயர்த்தி இருக்கலாம். 134 ரன்களை சேஸிங் செய்ய 18 ஓவர்கள் வரை இழுத்திருக்க வேண்டியது இல்லை. ஒருவேளை சிஎஸ்கே அணி 12 ஓவர்களுக்குள் இந்த ஸ்கோரை சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட்டில் உயர்ந்திருக்கும். ஆனால், சிஎஸ்கே அணி ரன்ரேட்டைப் பற்றி கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.

வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “ இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டம் என்று பலரும் கூறினார்கள். எவ்வளவுநாள் முடியுமோ நான் விளையாடுவேன். 2 ஆண்டுகளுக்குப்பின் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து போட்டியை பார்த்து, ரசித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எங்கள் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் அளிக்கிறார்கள்.

பேட்டிங் செய்ய போதுமான வாய்ப்புகள் இல்லை. பனிப்பொழிவு இல்லை என்பதால், நாங்கள் 2ஆவது பேட் செய்யத் தயங்கினேன். பனிபொழிவுக்கான வாய்ப்பு இருக்கும்போதுதான், 2ஆவது பேட் செய்ய வேண்டும். சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர், நல்ல லைன் லென்த்தின் வீசினர். குறிப்பாக பதிரனா சூப்பராக பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

கிளாசனிடம் கொந்தளித்த ஜடேஜா

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜாவுக்கும், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் கிளாசனுக்கும் இடையே சிறிய உரசல் ஏற்பட்டது. ஜடேஜா வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தை மயங்க் அகர்வால் எதிர்கொண்டார். நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் கிளாசன் இருந்தார்.

மயங்க் அகர்வால் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜடேஜா முயன்றபோது, கிளாசன் குறுக்கே வந்தபோது ஜடேஜா கேட்ச்பிடிக்க முடியாமல்போனது. இதனால், ஜடேஜா உடனே கோபப்பட்டு கிளாசனிடம் பேச, இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அங்கிருந்த நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். அந்த ஓவர் முடிந்தபின்பும் இருவரும் மோதிக்கொண்டாலும், சிஎஸ்கே வீரர்களும், கேப்டன் தோனியும் ஜடேஜாவை சமாதானம் செய்தனர்.

 

தோனியின் முத்திரை

சிஎஸ்கே-யின் வெற்றியின் தோனியின் பங்களிப்பு இல்லாமலா இருக்கும். இந்த ஆட்டத்தில் தோனி பிடித்த கேட்ச், அகர்வாலுக்கு செய்த மின்னல் வேக ஸ்டெம்பிங் அற்புதமானவை. அதிலும் தீக்சனா வீசிய பந்தில் மார்க்ரம் பேட்டில் எட்ஜ் எடுத்துவந்த பந்தை கச்சிதமாக தோனி பிடித்தார்.

2ஆவதாக ஜடேஜா வீசிய 14வது ஓவரில் மயங்க் அகர்வால் இறங்கி அடிக்க முற்பட்டபோது, மின்னல் வேகத்தில் தோனி ஸ்டெம்பிங் செய்தது அவரின் தனித்திறமையைக் காட்டியது. இதன் மூலம் அதிகமான,அதாவது 280 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையை தோனி பெற்றுள்ளார்.

தனக்குத்தானே குழிபறித்த மாற்றங்கள்

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

நன்றாக இருந்த அணியில் பரிசோதனை முயற்சி என்ற பெயரில் பேட்ஸ்மேன்களை மேல்வரிசை, கீழ்வரிசை எனப் பந்தாடியது சன்ரைசர்ஸ் வீரர்களின் நிலைத்தன்மையைக் குலைத்துவிட்டது.

இந்த சீசன் தொடங்கும்போது, அபிஷேக், மயங்க் அகர்வால் ஓபனிங் செய்தனர், ப்ரூக் நடுவரிசையில் களமிறங்கினார். அடுத்தப் போட்டியில் அபிஷேக் நீக்கப்பட்டார். ப்ரூக், அகர்வால் ஓபனிங் செய்ய வைத்தனர். பின்னர், அபிஷேக் அணிக்குள் வரவழைக்கப்பட்டு நடுவரிசையில் களமிறக்கப்பட்டார். இப்போது அபிஷேக்கை ஓபனிங் செய்யவைத்து, 6வது வரிசைக்கு அகர்வாலை தள்ளவிட்டனர். இதுபோன்ற பரிசோதனை முயற்சி நிச்சயமாக பேட்ஸ்மேன்களின் நிலைத்தன்மையைக் குலைத்துவிடும்.

அகர்வால் தனது 6 இன்னிங்ஸில் 3வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியுள்ளார். ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்லத் தேவையில்லை என முடிவு எடுத்து சன்ரைசர்ஸ் விளையாடினால் யாரால் தடுக்க முடியும்.

134 ரன்களை சேர்த்துக்கொண்டு, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதுபோன்று சிஎஸ்கே அணியை டிபெண்ட் செய்வது நிச்சயமாக இயலாது என்பதை முதல் இன்னிங்ஸ் முடிந்தபோதே அந்த அணிக்குத் தெரிந்திருக்கும்.

சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஹேரி ப்ரூக்(18), அபிஷேக் சர்மா(34), திரிபாதி(21) ஆகியோரைத் தவிர பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் ஸ்கோர் செய்யாததே குறைவான ஸ்கோர் எடுத்தமைக்கு காரணமாகும்.

சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ வேதனையாக இருக்கிறது. பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை, நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 130 ரன்களைவைத்து டிபெண்ட் செய்வது கடினம்தான், 160 ரன்களையாவது எட்டியிருக்கவேண்டும்.

நல்ல பார்ட்னர்ஷிப் அமையாவிட்டால், அணியை முன்னெடுத்துச் செல்வது கடினம். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் துருப்புச்சீட்டாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் சரியாகத் திட்டமிட்டார்கள், எங்களிடம் இல்லை. எங்களுக்கு வெற்றிகள் தேவை, பேட்டிங்கிலும் வலிமையாக மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

7 ஓவர்களில் ரன் அடிக்காத சன்ரைசர்ஸ்

சிஎஸ்கே அணியில் இருந்ததைப் போல் சன்ரைசர்ஸ் அணியிலும் மயங்க் மார்க்கண்டே, வாஷிங்டன் சுந்தர், டாகர் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரன்களை கட்டுப்படுத்தினார்களேத் தவிர சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதத்திலும் நெருக்கடி ஏற்படுத்தவில்லை.

சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் மட்டும் இந்த ஆட்டத்தில் 42 டாட் பந்துகளை விட்டுள்ளனர். அதாவது 7 ஓவர்களுக்கு ரன்களே அடிக்கவில்லை எனலாம். மற்ற 13 ஓவர்களில்தான் இந்த 134 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இதில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தம் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். டி20 போட்டி என்றால் அதிரடி, சரவெடி, மின்னல் வேக ரன்குவிப்பு என்று இருக்க வேண்டும். டி20 போட்டி தாத்பரியம் தெரியாமல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் விளையாடியுள்ளனர்.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

இரு துருவங்கள் சேர்ந்த தருணம்

ப்ரூக்குடன் சேர்ந்து அபிஷேக் சர்மா களமிறக்கி பெரிதாக மாற்றம் எதையும் சன்ரைசர்ஸ் காணவில்லை. இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால், “ 2017ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக அபிஷேக் சர்மாவும், இங்கிலாந்து கேப்டனாக ஹேரி ப்ரூக்கும் இருந்தனர். இருவரும் எதிரணி கேப்டன்களாக விளையாடிய நிலையில் ஐ.பி.எல். தொடர் இருவரையும் ஒரே அணியில் ஒருங்கிணைத்து இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.”

 

சேப்பாக்கத்தைப் பற்றி தெரியுமா?

சேப்பாக்கம்

பட மூலாதாரம்,SPORTSPICS/BCCI

அதுமட்டுமல்லாமல் சன்ரைசர்ஸ் அணியினர் சென்னை சேப்பாக்கம் அணியின் தன்மையை முழுமையாக அறியாமல் களமிறங்கினார்களா என்பது பெரிய கேள்வியை எழுப்புகிறது. வேகம் குறைவாக, மந்தமான ஆடுகளமான சேப்பாக்கத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் தயாராகவில்லை என்பது பேட்டிங் செய்ததில் இருந்தே தெரிந்துவிட்டது.

சேப்பாக்கம் ஆடுகளம் மிதவேகப்பந்துவீச்சாளர்களுக்கும், ஸ்லோபாலில் ஸ்விங் செய்பவர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும்தான் அதிகமாக ஒத்துழைக்கும். சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம் தராமல் வீரர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு விலை கொடுத்துவிட்டது.

 

சுழற்பந்துவீச்சில் பலவீனம்

குறிப்பாக ஹேரி ப்ரூக்ஸ் வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் கை தேர்ந்தவர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் குறைவாக இருக்கிறது. இதைத் தெரிந்துதான் சன்ரைசர்ஸ் அணி அவரை தொடக்க வீரராக களமிறக்கியதா.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்த அணியாக இருப்பதை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளது. இப்படி மோசமான ரெக்கார்டு வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு திறமையாக ஆடும் பேட்ஸ்மேன்களை எடுத்ததாகத் தெரியவில்லை.

தோனி தக்கவைத்த 'சேப்பாக்கம் வரலாறு'

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

கட்டம் கட்டிய சிஎஸ்கே

சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்களை சமாளித்து விளையாடத் திணறுவார்கள் என்பதை அறிந்து சிஎஸ்கே அணி, கேப்டன் தோனி அந்த அணியை கட்டம்கட்டி தூக்கிவிட்டார்.

ரவிந்திர ஜடேஜா, தீக்சனா, மொயின் அலி ஆகியோரைப் பயன்படுத்தி தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தது. அதற்கு ஏற்றார்போல், ரவிந்திர ஜடேஜா முதல் ஓவரிலே அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் அவரின் 2வது ஓவரில் ராகுல் திரிபாதி விக்கெட்டையும், கடைசி ஓவரில் மயங்க் அகர்வால் விக்கெட்டையும் ஜடேஜா சாய்த்தார்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களான ராகுல் திரிபாதி(21), மயங்க் அகர்வால்(2), அபிஷேக் சர்மா(34) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரையன் லாரா கூறுகையில் “ சன்ரைசர்ஸ் அணிக்கு பிரத்தியேகமாக ஆட்டத்தை முடிக்கும் ஃபினிஷர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார்.

6வது இடத்தில் களமிறங்கும் கிளாசன் விரைவாக ஆட்டமிழந்துவிடுகிறார். அவர் நீண்டநேரம் நிலைத்து பேட் செய்தால், சிஎஸ்கே அணியின் அனுபவமற்ற டெத்ஓவர்களை எளிதாக சமாளித்து ஆட முடியும்” எனத் தெரிவித்திருந்ததையும் கவனிக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cp0eng1gj5do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்திஷா பதிரண: தோனியின் புதிய வார்ப்பான 'பேபி மலிங்கா' 175 கி.மீ. வேகத்தில் பந்துவீசக் கூடியவரா?

மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,BCCI/IPL

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தளவு அதிரடி பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறதோ அதே அளவு அசத்தல் பௌலர்களையும் கண்டுள்ளது. டக் பொலிஞ்சர், சுட்டி குழந்தை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம் கரண் ஆகியோர் வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்த மத்தீஷ பதிரண.

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின போது, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

`இலங்கை ரசிகர்களே, பதிரணவிடம் இருந்து முத்தான ஆட்டத்தை நீங்கள் எதிர்பாக்கலாம், தோனி அவரை தயார் செய்துகொண்டிருக்கிறார்` என்பதே அவரது ட்வீட்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே- ஆர்சிபி இடையே நடைபெற்ற ஆட்டத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம். முதலில் பேட்டிங் செய்து 226 ரன்கள் குவித்த போதும், சிஎஸ்கே போராடிதான் வெற்றி பெற்றது.

 

ஆர்சிபியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீசிய மத்தீஷ பதிரண 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சுயாஷ் பிரபுதேசாய் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். 18, 20வது ஓவர்களை வீசிய அவர் 14 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து சென்னையின் வெற்றிக்கு வழிகோலினார்.

இது குறித்து பின்னர் பேசிய மத்தீஷ பதிரண, `பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் என் முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் போயிருந்ததால், நான் சற்று பதற்றமாக இருந்தேன். அப்போது, தோனி என்னிடம் வந்து , கவலைப்படாதே, அமைதியாக இரு, உன் பலத்தை நம்பு என்றார், நானும் அதை செய்தேன்` என்றார்.

சிஎஸ்கே வீரர் மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கே அணிக்காக தனது19-வது வயதில்கடந்த சீசனில் அறிமுகமான பதிரண அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

பதிரணவின் பந்து வீச்சு தொடர்பான ஒரு வீடியோவை பார்த்து பிடித்துபோய் டோனி அவரை சிஎஸ்கேவில் சேர்த்துகொண்டார் என்று பதிரண பயிற்சி எடுக்கும் ட்ரினிட்டி கல்லூரியில் கிரிக்கெட்டிற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவக்கிய பிலால் ஃபாஸி `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

`அப்போது அவருக்கு 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. அப்போது தோனியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், பதிரணவை உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சிஎஸ்கே அணியில் இணையும்படி டோனி குறிப்பிட்டிருந்தார்.

பதிரண ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருந்தார். பங்களாதேஷ் லீக் போட்டிகளில் அவர் ஆடி வந்தார். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவரின் யாக்கர் பந்துவீச்சு தொடர்பாக வீடியோ ஒன்று வைரல் ஆனது. அதன் பின்னர் சிஎஸ்ஏ அவரை அணியில் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது` என்று குறிப்பிட்டார்.

சிஎஸ்கே என்றாலே சீனியர்களின் அணி என்று வழக்கமாக முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கு மாறாக, இந்த முறை ருத்ராஜ், தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரண என அணியில் இளைஞர்கள் அதிகம் தென்படுகிறார்கள். தனது தனித்துவமான பந்து வீச்சு மூலம் கவனத்தைச் ஈர்த்துள்ளார் பதிரண.

சிஎஸ்கே வீரர் மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கே வீரர் மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த மத்தீஷ பதிரண?

பதிரண கடந்த டிசம்பர் 18, 2002ல் இலங்கையின் கண்டி நகரத்தில் பிறந்தவர். சிஎஸ்கே அணி தனது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடியபோது அவருக்கு 6 வயதுதான் இருந்திருக்கும். தற்போது 20 வயது ஆகும் பதிரண, சிஸ்கேவின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்து வருகிறார்.

இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் பந்து வீசும் ஸ்டைலுடன் பதிரண பந்துவீசும் ஒத்துப் போவதால் ரசிகர்கள் அவரை பேபி மலிங்கா என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பதிரணவின் பந்துவீச்சை மலிங்காவும் வெகுவாக பாராட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், 'ரசிக்கும் விதத்தில் இருந்தது. அழுத்தம் நிறைந்த கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசியிருந்தீர்கள்` என்று மலிங்கா குறிப்பிட்டிருந்தார்.

இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் மதீஷா பதிரண ஒருகாலத்தில் மலிங்காவிடமும் பயிற்சி பெற்றுள்ளார் என்பது. தனது கல்லூரி காலத்தில் ட்ரினிட்டி அணிக்காக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பதிரண .

மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,GETTY IMAGES

பதிரணவை பாராட்டிய தோனி

கடந்த ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதன்முதலாக சிஎஸ்கேவுக்காக பதிரண களமிறங்கினார்.

தனது அறிமுக ஆட்டத்தின் முதல் பந்திலேயே சுப்மன் கில் விக்கெட்டை எடுத்து அசத்திய பதிரண, அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இஷாந்த் சர்மா, வில்கின் மோட்டா மற்றும் ஷேன் ஹார்வுட் ஆகியோரின் பட்டியலில் இணைந்தார். இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் சேர்த்து இரண்டு விக்கெட்களை அவர் வீழ்த்தியிருந்தார்.

அந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தபோதும் பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில், 'டெத் ஓவர்களில் பந்துவீசுவதில் மலிங்காவை போலவே அவர் சிறப்பாக இருக்கிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமானது. ஸ்லோ பால்களையும் சிறப்பாக வீசுகிறார். எனவே, அவரது பந்துவீச்சை கவனமாக பார்த்து விளையாட வேண்டும்` என்று பதிரணவை தோனி வெகுவாக பாராட்டி இருந்தார்.

மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,BCCI/IPL

175 கி.மி. வேகத்தில் பந்துவீசினாரா பதிரண?

மத்திஷ பதிரணவின் வேகப்பந்து வீச்சு சிறப்பானதாக உள்ளதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், கடந்த 2020ல் அவரது வேகப்பந்து தொடர்பான ஒரு சர்ச்சை வெடித்தது. அப்போது 17 வயதான பதிரண இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் 19வது வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஐ.பி.எல். சீசனில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அப்போது இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இருந்தார். அவருக்கு எதிராக நான்காவது ஓவரை வீசிய பதிரண வைடாக ஒரு பந்தை வீசினார்.

சிஎஸ்கே வீரர் மத்திஷ பதிரண

பட மூலாதாரம்,GETTY IMAGES

மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பந்தை வீசியதாக ஸ்பீட் கன் காட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 161. 3 கி.மீ வேகத்தில் பந்து வீசியதே கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சு எனும் நிலையில், அதனை பதிரண முறியடித்து விட்டதாகவே எண்ணப்பட்டது. இதனால், கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படும் வீரராக மத்திஷ பதிரண மாறினார்.

ஆனால், பதிரண 175 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதாக ஸ்பீட் கன் காட்டியது தவறு, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அவ்வாறு பதிவானது என்று பின்னர் விளக்கம் தரப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cxelmn4gylno

Posted

சிறந்த கேட்ச் பிடித்தும் விருது தரவில்லை!

சிறந்த கேட்ச் பிடித்தும் விருது தரவில்லை!

நேற்றைய ஹைதராபாத்துடனான போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் ஸ்டம்பிங், கேட்ச் என 200 முறை விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்தப் போட்டியில் தோனி கேட்ச், ஸ்டம்பிட், ரன் அவுட் என அனைத்திலும் அசத்தினார். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஹைதராபாத் கேப்டன் மார்கரம் சிஎஸ்கே ஸ்பின்னர் தீக்‌ஷனா பந்து வீச்சில் அவுட் ஆனார். இந்த விக்கெட் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. காரணம் தோனி பிடித்த கேட்ச் இந்த விக்கெட்தான். மார்கரம் பேட்டில் பந்து உறசி திடீரென மேலெழும். சாதாராணமாக இந்த கேட்சுகளை பிடிப்பது கடினம்.

சிறந்த கேட்ச் குறித்து தோனியிடம் கேட்டபோது, “நான் சிறந்தை கேட்சை பிடித்தேன். சில நேரங்களில் கீப்பர்கள் பிடிக்கும் கேட்ச் எளிதானதென நினைக்கிறார்கள். அது உண்மையில் சிறந்த கேட்ச். ஆனால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அந்த கேட்ச் பிடிக்க காரணம் நான் தவறான நிலையில் நின்று இருந்தேன். அதனால் என்னால் எளிமையாக பிடிக்க முடிந்தது. ராகுல் திராவிட்டும் இதுமாதிரி ஒரு கேட்ச் பிடித்திருக்கிறார்” என சிரித்துக் கொண்டே கூறினார். தோனியின் எளிமையை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் - கைக்கெட்டிய வெற்றியை கோட்டை விட யார் காரணம்?

ராகுல்

பட மூலாதாரம்,IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 22 ஏப்ரல் 2023
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவர், கடைசி பந்துவரை எதுவுமே உறுதியில்லை. எந்த பந்திலும் ஆட்டத்தின் போக்கு மாறும், வெற்றிக்கான அந்த தருணம் கிடைக்கும் என்பதற்கு இன்றைய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியே சிறந்த உதாரணம்.

லக்னெளவில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 30வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

டாஸ் வென்று குஜராத் அணி முதலில் பேட் செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது.

லக்னெளவுக்கு பாதிப்பா

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளில் 4வது வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது, நிகர ரன் ரேட்டும் உயர்ந்துள்ளது. லக்னெள ணி 7 போட்டிகளில் 3வது தோல்வியை சந்தித்தபோதிலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும் மற்ற அணிகளைவிட ஒரு போட்டி கூடுதலாக விளையாடிவிட்டது லக்னெளவுக்கு கடைசி நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

நம்பமுடியாத வெற்றி

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,IPL

இந்த போட்டியில் வெற்றி பெறுபெறுவோமா என்று குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஏனென்றால், 135 ரன்களை வைத்துக்கொண்டு வலிமையான லக்னெள அணியை டிஃபெண்ட் செய்வது கடினம் என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர்.

அதற்கு ஏற்றார்போல் லக்னெள அணியின் பவர்ப்ளே ஆட்டம், ரன்ரேட் அனைத்தும் வேகமாவே சென்றது. ஆனால், கடைசி 5 ஓவர்களில்தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. பொதுவாக டி20 போட்டிகளி்ல் கடைசி 5 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணிக்கும், பந்துவீசும் அணிக்கும் முக்கியமானது. அதை குஜராத் டைட்டன்ஸ் அணி கச்சிதமாகப் பயன்படுத்தியது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

தோல்வி ஏன்?

கடைசி 5 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடி, ரன்குவிப்பில் ஏற்பட்ட மந்தம், பவுண்டரிகள் இல்லாதது லக்னெள பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி நெருக்கடியில் தள்ளியது.

ஒரு கட்டத்தில் பந்துகளும், தேவைப்படும் ரன்களும் சமநிலையில் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பந்துகள் குறைவாகவும், தேவைப்படும் ரன்ரேட் எகிறத் தொடங்கியது. இது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதால், பெரிய ஷாட்கள் அடிக்க முயன்றபோது விக்கெட்டுகளை இழந்தனர்.

திக்..திக்.. கடைசி ஓவர்

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அதிலும் கடைசி ஓவரைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் லக்னெள வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தை சந்தித்த கேஎல் ராகுல் 2 ரன் சேர்த்தார். 2வது பந்தில் ராகுல்(68) ஸ்குயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் லாங்ஆன் திசையில் பவுண்டரி அடிக்க அங்கு நின்றிருந்த மில்லர் அதை கேட்ச் பிடிக்கவே டக்அவுட்டில் வெளியேற்றினார்.

4-வது பந்தில் ஹூடா 2 ரன் எடுக்க முற்பட்டபோது, பதோனி(8) ரன் அவுட் ஆகினார். 5வது பந்தில் தீபக்ஹூடா 2 ரன்கள் சேர்க்க முற்பட்டு அவரும் ரன் அவுட் ஆகினார். 4 பந்துகளில் 4விக்கெட்டுகளை பதற்றத்தில் லக்னெள பேட்ஸ்மேன்கள் இழந்தனர்.

சோக்கர்ஸ்-லக்னெள

கடைசி நேரத்தில் ஏற்பட்ட பதற்றம், நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் வீரர்களிடம் இல்லாதது லக்னெள பேட்ஸ்மேன்களை “சோக்கர்ஸ்” ஆக சித்தரித்தது. கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியைத்தான் “சோக்கர்ஸ்” என்று அழைப்பார்கள். இப்போது லக்னெள அணிக்கும் அந்த பெயர் வந்துவிட்டதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

50 டாட் பந்துகள் சரியான அணுகுமுறையா

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

ஒரு கட்டத்தில் லக்னெள அணி 49 பந்துகளில் 35 ரன்களே தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்து வெற்றியை பாக்கெட்டில் வைத்திருந்தது. இதில் குஜராத் அணி வீரர்களும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டனர். இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும் லக்னெள பக்கம் தோல்வி சென்றது என்றால் “வான்டட்டாக வந்து தோல்வி வண்டியில்” ஏறியதாகவே கூற வேண்டும்.

இந்த போட்டியில் லக்னெள பேட்ஸ்மேன்கள் மட்டும் 50 டாட் பந்துகளை விட்டுள்ளனர், அதாவது ஏறக்குறைய 8 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்காமல் டெஸ்ட் போட்டி போன்று ஆடியுள்ளனர்.

கடைசியாக 12-வது ஓவரில் லக்னெள அணி பவுண்டரி அடித்தது, அதன்பின் ஆட்டத்தின் முடிவுவரை பவுண்டரி அடிக்காமல் இருந்ததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

இதுபோன்ற குறைவான ஸ்கோரை சேஸிங் செய்யும்போது, அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து, ரன்ரேட்டை குறையவிடாமல் வைத்திருக்க வேண்டும். ஆனால் லக்னெள அணி வெறும் ஒற்றை, இரட்டை ரன்களை மட்டுமே நம்பி பயணித்தது, தோல்வியில் தள்ளியது.

தோல்விக்கு ராகுல் காரணமா?

ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,@GUJARAT_TITANS ·

இந்த ஆட்டம் நடந்த லக்னெள ஆடுகளம் மிகவும் மந்தமான, குறைந்த ஸ்கோர் அடிக்கும் மைதானமாகும். இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் சேர்த்தாலே எதிரணியை டிபெண்ட் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது வெற்றிக்கு அருகே வந்தபோதும்கூட லக்னெள கேப்டன் கேஎல்.ராகுல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

அதிலும் கேப்டன் ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி 38 பந்துகளில் அரைசதம் எட்டினார். செட்டில் ஆன பேட்ஸ்மேனாக ராகுல் களத்தில் இருந்தபோது, 12வது ஓவர் முதல் 19வது ஓவர் வரை பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் ரிஸ்க்கை ராகுல் எடுக்காதது தோல்விக்கு இட்டுச் சென்றது.

புதிதாக ஒரு பேட்ஸ்மேன் களத்துக்கு வந்து ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பேட்டிங் செய்ய சிறிது நேரமாகும். ஆதலால், செட்டில் பேட்ஸ்மேன் ராகுல் பவுண்டரி, சிக்ஸர் அடித்து நெருக்கடியை குறைக்க தவறியதே தோல்விக்கு முதன்மையான காரணமாகும்.

ஏறக்குறைய 45 பந்துகள் எந்தவிதமான பவுண்டரி, சிக்ஸர் இல்லாமல் லக்னெள அணி எந்தவிதமான அசட்டு நம்பிக்கையில் வெற்றியை நோக்கி பயணித்தது எனத் தெரியவில்லை.

கடைசி 6 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டும் சேர்த்த லக்னெள அணி, கடைசி 22 ரன்களுக்குள் மட்டும் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.

என்ன சொல்கிறார் கே.எல்.ராகுல்?

கே.எல். ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்வி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில் “ என்ன பேசுவதென்றே தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை. எப்படி இந்த தோல்வி நடந்தது என எனக்குத் தெரியவில்லை, இந்த தோல்வி விரைவாக நடந்துவிட்டது. வெற்றி எங்கள் பாக்கெட்டில் இருந்தபோது, எங்கு தவறவிட்டோம் என்று நான் சிந்திக்க முடியாது. பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் இன்று சிறப்பாகச் செயல்பட்டோம். 135 ரன்கள் என்பது, சேஸிங் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான்.

ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன்படுத்திக்கொண்டோம், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகவே தொடங்கினோம். ஆனால், இந்த தோல்வி எப்படி நடந்தது எனச் சொல்ல முடியவில்லை. 4 வெற்றிகளுடன் பயணிக்கிறோம். வெற்றியை நோக்கி சென்றோம், ஆனால், வலுவான பேட்டிங்கை கடைசிவரை நான் வெளிப்படுத்தவில்லை. நூர் முகமது, ஜெயந்த் இருவரும் நன்றாகப் பந்துவீசினர். புதிதாக களத்துக்கு வரும் பேட்ஸ்மேன்கள் எளிதாக ஷாட்களை ஆட இந்த ஆடுகளம் உகந்தது அல்ல. பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். பவுண்டரிகள் அடிக்கும்வாய்ப்பை தவறவிட்டது தோல்விக்கான காரணம்” எனத் தெரிவித்தார்.

ஏன் முதலில் பேட்டிங்?

இந்த ஐ.பி.எல். தொடரில் சேஸிங் என்பது டிரண்டாக இருக்கும்போது, லக்னெள மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகின்றன. அதிலும் குறிப்பாக பகலில் நடக்கும் போட்டிகளில் முதலில் பேட் செய்யவே விரும்புகின்றன.

இதற்கு முக்கியக் காரணம் பனிப்பொழிவு இல்லை, 2வதாக லக்னெளவில் நடந்த 6 டி20 போட்டிகளில் 5 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன என்பதால் ஹர்திக் பாண்டியாவும் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி சேஸிங் செய்து வென்றதுதான் விதவிலக்காகும்.

எப்படி வென்றது குஜராத் அணி?

குஜராத் டைட்ன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னெள ஆடுகளம் கறுப்பு மண் கலந்த பிட்ச். இதுபோன்ற கரிசல்மண் ஆடுகளம் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், மெதுவாகப் பந்துவீசுவோருக்கு ஏற்றதாகவே இருக்கும். இதனால்தான், குஜராத் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்துவீச்சாளர்களை நம்பி களத்தில் இறங்கினார்.

135 ரன்கள் என்பது குஜராத் அணியால் டிபெண்ட் செய்யக் கூடிய ஸ்கோர் இல்லை என்பது ஹர்திக் பாண்டியாவுக்குத் தெரியும். இருப்பினும், களத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி சாதுர்யமாகப் பயன்படுத்தியது, சுழற்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தி நெருக்கி ஏற்படுத்தியது, கட்டுக்கோப்பான பீல்டிங், குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களை புத்திசாலித்தனமாப் பயன்படுத்தியது வெற்றிக்கு உதவியது.

லக்னெள கையில் சென்ற வெற்றியை பறித்து வந்து குஜராத்திடம் வழங்கியதில் முகமது ஷமி, நூர் முகமது, மோகித் சர்மா ஆகிய பந்துவீச்சாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

அபாரமான பந்துவீச்சு

குறிப்பாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் முகமது, 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் எடுத்து 18 ரன்கள் கொடுத்தார்.

மோகித் சர்மா 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இவர்களின் பங்களிப்பு பாண்டியாவை பெருமூச்சுவிடச் செய்தது. அதிலும் மோகித் சர்மாவின் துல்லிய யார்கர்கள், ஸ்லோவர் பால், ஷமி வீசிய 19வது ஓவரில் 5 ரன்கள் ஆகியவை லக்னெளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

குஜராத்தும் சளைக்கவில்லை

குஜராத் டைட்ன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் அணியின் பேட்டிங்கிலும் விருதிமான் சாஹா(47) ஹர்திக் பாண்டியா(66) ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாகப் பங்களிப்புச் செய்யவில்லை. சுப்மான் கில்(0), அபினவ் மனோகர்(3),விஜய் சங்கர்(10) மில்லர்(6) என ஏமாற்றம் அளித்தனர். பேட்ஸ்மேன்கள் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருந்தால் ஸ்கோர் இன்னும் 20ரன்கள் உயர்ந்திருக்கும்.

குஜராத் அணியும் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. ஏறக்குறைய 42 டாட் பந்துகளை விட்டனர், அதாவது 7 ஓவர்களில் ரன் அடிக்கவில்லை. இந்த 7 ஓவர்களையும் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் ஸ்கோர் 175 ரன்களை எட்டியிருக்கும்.

“அவர் வார்த்தையை நம்பினேன்”

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ 2 போட்டிகள் தோல்விக்குப்பின் வெற்றி கிடைத்துள்ளது. எதை உன்னிடம் எடுத்தேனோ அதை உன்னிடம் திருப்பிக்கொடுப்பேன் என்று இறைவன் கூறியுள்ளார். அதுபோலத்தான் சூழல் அனைத்தும் இன்றும் திடீரென்று மாறியது.

விக்கெட்டுகளை மளமளவென எடுத்தபோது, எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்த டி20 தொடரில் ஒரு தோல்வி உங்கள் நம்பிக்கையை உடைக்கும், ஆனால், இதுபோன்ற வெற்றி அதற்கு மாறுபட்டதாக இருக்கும். இன்னும் நாங்கள் 10 ரன்கள் கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்.

புதிய பேட்ஸ்மேன்கள் வந்து ஆடுவது இந்த ஆடுகளத்தில் கடினம் என்பதால், விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த யுத்தியை கையில் எடுத்தோம். 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலையில் லக்னெள அணியை வெல்லும் என நினைத்தேன். ஆனால், சிறிய தவறுகூட போட்டியில் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்பதை உணர்ந்தேன், ஆட்டத்தில் மாற்றம் நிகழ்ந்தது. மோகித், ஷமி, ஜெயந்த், நூர் சிறப்பாகப் பந்துவீசினர்” எனத் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியாவும் அவரின் இயல்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தவில்லை. கடைசி நேரத்தில் பிஷ்னாய் ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடிக்காமல் இருந்திருந்தால், அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும், அணியின் ஸ்கோரும் குறைந்திருக்கும்.

பாவம் பிஷ்னாய்

லக்னெள சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் நிலைமைதான் மோசம். குஜராத் அணி சேர்த்த 135 ரன்களில் 49 ரன்கள் அதாவது 33 சதவீதம் ரவி பிஷ்னாய் ஓவரில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒருவேளை பிஷ்னாய் சிக்கனமாகப் பந்துவீசியிருந்தால், ஆட்டம் திசைமாறியிருக்கும்.

நம்பிக்கையை இழக்கவில்லை

பிஷ்னோய்

பட மூலாதாரம்,LSG

ஆட்டநாயகன் வென்ற மோகித் சர்மா கூறுகையில் “ எதுவும் ஸ்பெஷலாகச் செய்யவில்லை, இயல்பாகவே செயல்பட்டேன். அனுபவத்தை பயன்படுத்தினேன். வெற்றியோ, தோல்வியை கடமையை மட்டும் சரியாகச் செய் என்பதையே செயல்படுத்துகிறோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.

முதல் ஓவர், முதல் பந்தில் இருந்தே ஹர்திக் பாண்டியா வெற்றி நம்பக்கம் இருக்கிறது என்று கூறி வந்தார். அந்த நம்பிக்கைதான் வெற்றிக்கு ஆதாரம். கட்டுக்கோப்பாக, நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீச வேண்டும் என்ற எனது திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நான் வீசிய ஸ்லோவர் பால், யார்கர், ஸ்லோவர் பவுன்ஸர் ஆகியவற்றை லக்னெள பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c519je071nno

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ஜூன் டெண்டுல்கரின் ஒரே ஓவரில் 31 ரன்: வெற்றியை வேகமாக நெருங்கிய மும்பை தோற்றுப் போனது எப்படி?

MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/IPL

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைப்பது, கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை முடிவு தெரியாமல் இதயத்துடிப்பை எகிறவைப்பது, போட்டிபோட்டு காட்டடி அடித்து ஸ்கோர் செய்வது என நீண்ட காலத்துக்குப்பின் பரபரப்பான ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு ரசிகர்களுக்கு நேற்றைய மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டத்தில் கிடைத்திருக்கும்.

ஏற்கனவே ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் 2 முறை சூப்பர் ஓவர் வரை சென்றதால் இந்தமுறையும் அவ்வாறு நடந்து விடுமோ என்ற பதற்றம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட்செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

8 புள்ளிகளுடன் 5 அணிகள்

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி நிகர ரன்ரேட்டில் குறைவாக இருப்பதால் 5வது இடத்தில் இருக்கிறது.

முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் அனைத்தும் 8 புள்ளிகளுடன் உள்ள நிலையில், நிகர ரன்ரேட் மட்டுமே அணிகளை தரவரிசைப் படுத்துகிறது. ஆதலால், அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியிலும் அணிகள் நிகர ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தும். மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன், 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

IPL MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/ IPL

25 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகள்

மும்பை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு உண்மையான விருந்தாக அமைந்தது. கடைசி ஓவர், கடைசி பந்துவரை திக் திக் தருணமாகவே இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் மொத்தமாக 25 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகள் விளாசப்பட்டன.

மும்பை அணி சேஸிங் செய்யத் தொடங்கி, 15-வது ஓவரில் இருந்து ஆட்டத்தில் அனல் பறந்தது, ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறது. 30 பந்துகளில் 66 ரன்கள் தேவையுடன் மும்பை அணி வெற்றியைத் துரத்தியது.

அதிரடியாக ஆடிய கேமரூன் க்ரீன்(67), சிக்ஸர், பவுண்டரி அடித்து எல்லீஸ் வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் களத்தில் இருந்ததால், மும்பை அணி நிச்சயம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர். சூர்யகுமார் யாதவும், சாம் கரன் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 14 ரன்கள் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

ஆட்டத்தை மாற்றிய தருணம்

அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் டிம் டேவிட், 114 மீட்டர் தூர சிக்ஸர் அடித்து, 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தை சந்தித்த சூர்யகுமார், லோவர் ஃபுல்டாஸ் பந்தை அடித்தபோது மிட் விக்கெட்டில் டெய்டேவால் கேட்ச் பிடிக்கப்பட்டார். சூர்யகுமார் 26 பந்துகளில் 57 ரன்களுடன்(3 சிக்ஸர்,7பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

சூர்யகுமார் களத்தில் இருந்தவரை வெற்றி அவர்களிடம் இல்லை என்றுதான் பஞ்சாப் அணியினர் நினைத்திருந்தனர். சூர்யகுமார் ஆட்டமிழந்த இந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இங்கிருந்துதான் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணி கரங்களுக்கு மாறியது.

IPL MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/ IPL

கடைசி ஓவரில் 2 முறை ஸ்டம்பை உடைத்த அர்ஷ்தீப்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு யாரை உரித்தாக்குவது எனத் தெரியவில்லை. ஸ்கோர் உயர்வதற்காக காட்டடி அடித்த சாம் கரன் (29 பந்துகளில் 55), ஹர்ப்ரீத் சிங்(28 பந்துகளில் 41) ஆகியோரைச் சொல்வதா, கடைசி ஓவரில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி இரு யார்க்கர்கள் மூலம் ஸ்டெம்பை உடைத்து வெற்றியை வசமாக்கிய அர்ஷ்தீப் சிங்கைக் கூறுவதா எனத் தெரியவில்லை.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது சாம் கரனுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், உண்மையில் ஹீரோ அர்ஷ்தீப் சிங்தான். “டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான” அர்ஷ்தீப், கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் கடைசி ஓவரை வீசினார்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட டிம் டேவிட் ஒரு ரன் எடுத்தார். மறுமுனையில் இருந்த திலக் வர்மா 2வது பந்தில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 3வது பந்தை அர்ஷ்தீப் யார்க்கராக வீச, ஸ்டெம்ப் உடைந்து, திலக் வர்மா க்ளீன் போல்டாகினார்.

4வது பந்தைச் சந்திக்க வந்த, வதேராவும் அதிரடிக்கு முயல அவருக்கும் அர்ஷ்தீப் சிங் யார்க்கராக வீச, ஸ்டெம்ப் 2வது முறையாக உடைந்தது. கடைசி இரு பந்துகளில் 15 ரன்கள் சாத்தியமில்லை என்பதால் பஞ்சாப் வெற்றி உறுதியானது.

“வானத்தில் பறக்கவில்லை”

கடைசி ஓவரில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் கூறுகையில் “ நான் விக்கெட் வீழ்த்தும்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வேன், அதிலும் விக்கெட்டுடன் வெற்றி கிடைத்தது சிறப்பு. ஐபிஎல் தொடருக்கு முன்பாக, நான் பந்துவீச்சில் மாற்றம் செய்து, நோபால் வீசுவதை நிறுத்தினேன். என்னுடைய பந்துவீச்சை நான் ரசிக்கிறேன். வெற்றியால் நான் வானத்தில் பறக்கவில்லை, அமைதியாகவே இருக்கிறேன். என்னுடைய இதயத்துடிப்பு 120க்கு மேல் செல்லவில்லை” எனச் சொல்லி சிரித்தார்.

IPL MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/ IPL

6 ஓவரில் 109

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் ஹர்ப்ரீத் சிங், சாம் கரன், மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய மூவரின் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. 14-வது ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்திருந்தனர்.

சாம் கரன் 8 பந்துகளில் 12 ரன்கள், ஹர்ப்ரீத் சிங் 16 பந்துகளில் 15 ரன்கள் என்று பேட் செய்திருந்தனர். அதன்பின் இருவரும் கியரை மாற்றி, டாப் கியரில் ரன் குவிக்கத் தொடங்கினர். அடுத்த 6 ஓவர்களில் பஞ்சாப் அணி, மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, 109 ரன்களைச் சேர்த்தது.

வள்ளலாக மாறிய அர்ஜூன் டெண்டுல்கர்

பஞ்சாப் கிங்ஸ் அணி 15வது ஓவரில் 13 ரன்கள் சேர்த்து. 16-வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் ஓவரை சாம்கரன், ஹர்ப்ரீத் சிங் இருவரும் விளாசி 31 ரன்கள் சேர்த்தனர். ஐ.பி.எல்.லில் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பந்துவீச்சாளர் பட்டியலில் அர்ஜூனும் இணைந்தார். அனுபவமின்மை, யார்க்கர்களை வீச துல்லியத்தன்மை இல்லாதது, நெருக்கடி நேரத்தில் பந்துவீசத் தெரியாதது போன்றவற்றுக்கு அர்ஜூன் விலை கொடுத்தார். இந்த ஆட்டத்தில் ஏற்குறைய 50 ரன்களை அர்ஜூன் மட்டும் பஞ்சாப் கிங்ஸுக்கு வழங்கினார்.

ரன் மெஷின்கள்

அதன்பின் 17-வது ஓவரில் 13 ரன்கள்,18-வது ஓவரில் 25 ரன்கள் என பஞ்சாப் கிங்ஸ் அணி, கடைசி 5 ஓவர்களில் ரன் மெஷினாக மாறியது. மைதானத்தில் சிக்ஸர்களும், பவுண்டர்களும் பறந்தவாறு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.

அதிரடியாக ஆடிய சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் இருவரும் 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். ஹர்பிரீத் சிங் 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சில் போல்டாகினார்.

சாம் கரன் 29 பந்துகளில் 55 ரன்கள்(4 சிக்ஸர், 5 பவுண்டரி) சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜிதேஷ் சர்மா 7 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 3 பேட்ஸ்மேன்கள்தான் கடைசி நேர ரன்குவிப்புக்கு காரணமாகும்.

IPL MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/ IPL

“கேப்டன் ப்ரோடெக்ட்”

காயம் காரணமாக ஷிகர் தவன் கேப்டன் பொறுப்புக்கு வராத நிலையில் சாம் கரன் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகிறார். அவர் கேப்டன் பொறுப்பில் பெறும் 2வது வெற்றி இதுவாகும். “கேப்டன் ப்ரோடக்ட்” என்று கிரிக்கெட்டில் சொல்வார்கள், அந்த ரகத்தில் சாம் கரனை வைக்க வேண்டும்.

அணியை வழிநடத்திச் செல்வது, இக்கட்டான நேரத்தில் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை தருவது, தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்டுவது என கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டார். இருப்பினும், சாம் கரன் பேட்டியளிக்கும்போது, “ நான் தற்காலிகக் கேப்டன்தான்” என்ற வார்த்தையை மட்டும் எச்சரிக்கையாக உச்சரிக்க மறக்கவில்லை.

“நான் காரணமில்லை”

வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் சாம் கரன் கூறுகையில் “ ஸ்பெஷல் வெற்றி, அற்புதமான மைதானம், ரசிகர்கள். பல போட்டிகளில் பல அணிகளுக்காக இங்கு விளையாடி இருக்கிறேன். நான் ஆட்டநாயகன் விருதுக்கு பொருத்தமானவர் இல்லை, எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் காரணம். அர்ஷ்தீப், நாதன் எல்லீஸ் இருவரும் அற்புதமாகப் பந்துவீசினர், சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். நான் பேட்டிங் செய்யவரும்போது, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது தெரியும். அதை சரியாகப் பயன்படுத்தினேன். ஷிகர் தவன் காயத்திலிருந்து விரைவில் திரும்பி கேப்டன் பொறுப்பேற்பார் அவருக்கு துணையாக இருப்போம்” எனத் தெரிவித்தார்

IPL MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/ IPL

ரோஹித் சர்மா மைல்கல்

மிகுந்த சவாலான இலக்கை எட்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் சளைக்காமல் களத்தில் சண்டை செய்தது. தொடக்கத்திலேயே இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா, கேமரூன் க்ரீன் இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகள், சிக்ஸர்களை விளாசி அதிரடியாக ஆடினார்கள். பவர் ப்ளேயில் 51 ரன்களை மும்பை அணி சேர்த்தது.

ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் கிறிஸ் கெயில்(357), 2வது இடத்தில் டிவில்லியர்ஸ்(251), உள்ளனர். ரோஹித்துக்கு பின் தோனி(235), கோலி(229) உள்ளனர்.

டி20-ல் 6 ஆயிரம் ரன்களை கடந்த சூர்யகுமார்

ரோஹித் சர்மா(44 ரன்கள்) ஆட்டமிழந்தபோதிலும், அடுத்துவந்த சூர்யகுமார், க்ரீனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் மும்பை அணியின் பக்கம்தான் இருந்தது. சூர்யகுமார் நேற்றைய ஆட்டத்தில் விரைவாக அரைசதம் அடித்து, டி20 போட்டியில் 6,000 ரன்களை எட்டினார். குறைந்த பந்துகளில் அதாவது 4,107 பந்துகளில் 6 ஆயிரம் ரன்களை சூர்யகுமார் எட்டினார்.

கடைசி 10 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது. லிவிங்ஸ்டன் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து சூர்யகுமார் ரன்ரேட்டை டாப் கியருக்கு மாற்றினார். சூர்யகுமார் அடித்த 57 ரன்களில் 33 ரன்கள் “ஸ்கொயர் லெக்” திசையில் இருந்தே கிடைத்தது. மறுபுறம் கேமரூன் க்ரீனும் சளைக்காமல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை வறுத்தெடுத்து சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார்.

IPL MI vs PBKS

பட மூலாதாரம்,BCCI/ IPL

திருப்புமுனை தருணங்கள்

எல்லீஸ் வீசிய 16-வது ஓவரில் கேமரூன் சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில், ஸ்லோபாலாக வீசப்பட்ட 3வது பந்தில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி, வெற்றி அருகே நகர்த்திச் சென்றது.

செட்டிலான பேட்ஸ்மேனை வெளியேற்றியதன் மூலம் பஞ்சாப் அணி மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சுவிட்டது. அதன்பின் சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தியதும் ஆட்டம் முழுவதும் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் எல்லீஸ், அர்ஷ்தீப் சிங்கை வைத்து ஆட்டத்தை முடித்தது.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ களத்தில் சில தவறுகளைச் செய்தோம், ஆனால் அதை பெரிதாகப் பார்க்கவில்லை. கடைசி 3 போட்டிகளை வென்றோம், அதற்கு முன் வரிசையாக 3 போட்டிகளில் தோற்றோம். ஆதலால் நம்பிக்கையுடன் இருங்கள் என வீரர்களிடம் தெரிவித்தேன். இந்த தொடரில் எங்களைத் தக்கவைக்க, உயர்ப்புடன் இருப்பது அவசியம், அதற்கு அவகாசம் இருக்கிறது. க்ரீன், சூர்யா பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது, இருவரும் கடைசிவரை ஆட்டத்தை கொண்டு சென்றனர். அர்ஷ்தீப் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது, நன்றாக சண்டை செய்தாலும், இந்த நாள் எங்களுடையது அல்ல” எனத் தெரிவித்தார்

மும்பை அணியின் டிம் டேவிட் சிக்ஸர் அடிக்கும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன், இந்த ஆட்டத்தில் நல்ல ஃபார்மில் இருந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்று இருந்தபோது, முதல் பந்தைச் சந்தித்த டிம் டேவிட், ஒரு ரன் ஓடாமல் ஸ்ட்ரைக்கை தக்கவைத்திருக்கலாம். . அவ்வாறு தக்கவைத்திருந்தால், டிம் டேவிட் இரு பெரிய ஷாட்களை ஆடி ஆட்டத்தை திருப்பி இருக்கலாம். ஆனால் டிம் டேவிட் ஒரு ரன் ஓடிய தவறுதான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்தது.

https://www.bbc.com/tamil/articles/cyre8mgdlmro

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வா? சி.எஸ்.கே. கேப்டன் தோனி என்ன சொன்னார்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 ஏப்ரல் 2023, 06:19 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

“நான் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது சென்னையில்தான். ஏலத்தில் சென்னை அணியால் தேர்வு செய்யப்படுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இது, நான் பிறந்த ஊரில் இருந்து மிகவும் வேறுபட்ட கலாச்சாரத்தை அறிந்துகொள்ள எனக்கு உதவியது.

இங்குள்ள ரசிகர்கள் அவர்களின் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரத்தில் மற்ற அணிகள் தோற்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். என் கடைசி ஆட்டம் சென்னையில் தான் நடைபெறும்” சிஎஸ்கே கடந்த 2021ஆம் ஆண்டு 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோனி பேசிய வார்த்தைகள் இவை.

2020ல் சுதந்திர தினத்தன்று அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இருந்தாலும் ஐபிஎல் தொடரில் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வி தோனியை அந்த ஆண்டில் இருந்தே துரத்தி வருகிறது.

2020ல் ஓய்வு குறித்த கேள்வியை எதிர்கொண்ட தோனி, `நிச்சயமாக இல்லை` என்று பதிலளித்தார். 2021ல் ஐபிஎல் கோப்பையை வென்றப் பின் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய தோனி, `எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான்` என்றார். கொரோனா காரணமாக 2020, 2021 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் துபாயை நடைபெற்ற நிலையில், 2022ல் ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க மஹாராஷ்டிராவிலேயே நடைபெற்றது. தற்போதைய ஐபிஎல் தொடர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஹோம் கிரவுண்ட்களில் நடைபெற்று வருகிறது.

 

ஏப்ரல் 21ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

போட்டிக்கு பின் பேசிய தோனி, ' நாம் எவ்வளவு விளையாடினாலும் ஐபிஎல்லை ரசிப்பது மிகவும் முக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இங்கு கூட்டமாக கூடி ஆட்டத்தை ரசிக்கின்றனர். இங்கு விளையாடுவது நல்ல உணர்வை ஏற்படுகிறது. சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பு நெகிழச் செய்கிறது` என்று குறிப்பிட்டார்.

தற்போதும் வேகமாக ஸ்டம்பிங் செய்வது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தோனியிடம் கேட்டப்போது, 'நிச்சயமாக எனக்கு வயதாகிவிட்டது, அதை நான் மறைக்க முடியாது. என் கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி கட்டம் இது` என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வா?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐபிஎல் வரலாற்றில் தோனி செய்த சாதனைகள்

2008ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தற்போதுவரை அந்த அணியின் கேப்டனாகவே தொடர்கிறார். சூதாட்ட புகார் காரணமாக சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் 2016, 2017 ஆண்டுகளில் புனே அணிக்காக தோனி விளையாடினார். இருந்தபோதும், சிஎஸ்கேவே தோனியின் தாய்வீடாக இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்ஏவிற்காக 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் தோனி தலைமை தாங்கியுள்ளார். இது யாராலும் நெருங்க முடியாத சாதனையாக இருக்கிறது. 2016, 2017 ஆண்டுகள் நீங்கலாக சிஎஸ்ஏ அணிக்கு 14 ஆண்டுகள் தலைமை தாங்கியுள்ள தோனி, 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டிராப்பியையும் அவர் தலைமையிலான சென்னை அணி வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வா?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஓய்வுக்கு தயாராகிறாரா தோனி?

இந்த ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் சூழலில், தோனியின் தற்போதைய கருத்து அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். நடப்பு தொடரில் சிஎஸ்கே அணிக்கு சென்னையில் இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. பஞ்சாப், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் அந்த அணி விளையாடவுள்ளது. இதுபோக, இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கான முதல் தகுதி ஆட்டம் மற்றும் வெளியேற்றுதல் ஆட்டம் ஆகியவையும் இந்த முறை சென்னையில் நடைபெறுகிறது.

சென்னையில் தான் தனது கடைசி ஆட்டம் என தோனி முன்னரே அறிவித்திருந்த நிலையில், தற்போதைய அவரது பேட்டியையும் தொடர்புப் படுத்தி பார்க்கும்போது, அவர் இந்த தொடரோடு ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என தோனியின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஓய்வுக்கு தயாராகிறாரா தோனி?

பட மூலாதாரம்,BCCI/IPL

அதுமட்டுமல்ல, நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதை விட அணியை முன்னிலைப்படுத்துவதிலேயே அவர் அதிக மும்முரம் காட்டி வருகின்றார். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தோனி களமிறங்கவே இல்லை.

நடப்பு தொடரைப் பொறுத்தவரை சிஎஸ்கே 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. தோனி தொடர்ந்து 8வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி வருவதால், இந்த தொடரில் 4 ஆட்டங்களில் மட்டுமே அவர் பேட்டிங் செய்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 28பந்துகளை எதிர்கொண்டுள்ள தோனி 59 ரன்களை எடுத்துள்ளார். அவரது அதிகபட்சம் 32 ரன்கள் ஆகும். தான் அணியில் இல்லாவிட்டாலும் சிஎஸ்கே வலுவாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் பிற பேட்ஸ்மேன்களுக்கு அவர் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவே இதனை கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 2020ல் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்களும், 2021ல் 16 போட்டிகளில் விளையாடி 114 ரன்களும், கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் 14 போட்டிகளில் 232 ரன்களும் என தோனியின் பேட்டிங் தொடர்பாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. தோனி சென்னை அணிக்காக நிறைய செய்துவிட்டார். அவர் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழிவிடுவதே சரியாக இருக்கும் என ஒருசிலர் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தோனி குறித்து தெரிவித்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. `அவர் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பாருங்கள், இத்தனை ஆண்டுகளாக தான் கற்றுகொண்டதை அணியினரிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார். அவரைப் போன்ற கேப்டன் கிடைத்திருப்பதற்கு அவர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர் இல்லையென்றால்தான், அவரை எந்தளவு நாம் இழந்து வாடுகிறோம் என்பது தெரியும்.

https://www.bbc.com/tamil/articles/cz9r18rz601o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனிக்காக மஞ்சள்மயமான ஈடன் கார்டன்: ரஹானே 2.0 ரகசியம் என்ன?

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீறுநடை தொடர்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அசுர வெற்றி பெற்று சென்னை அணி முதலிடத்திற்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. போட்டி நடந்தது சென்னையிலா அல்லது கொல்கத்தாவிலா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு ஈடன் கார்டன் மைதானமே மஞ்சள்மயமாக காட்சியளித்தது.

இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாகிவிட்ட தோனியை வரவேற்க, சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து பெரும்பாலான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திவிட்டது என்றே சொல்லலாம்.

சென்னை அணி பேட்டிங் செய்த போது, தொடக்கம் முதல் இறுதி வரை இடையில் எந்தவொரு ஓவரிலும் தொய்வில்லாமல் ரன்மழை பொழிந்து கொண்டே இருந்தது. இதன் மூலம் இமாலய இலக்கை நிர்ணயித்த சென்னை அணி, பவுலிங்கின் போதும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கி முற்றிலுமாக கொல்கத்தா அணியை முடக்கிப் போட்டுவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய துருப்புச் சீட்டாக உருவெடுத்துள்ள ரஹானே தொடர்ச்சியாக தனது மெகா அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்படுவதால் இம்பாக்ட் பிளேயர் விதி மூலம் தற்காலிகமாக வாய்ப்பு பெற்ற ரஹானே, அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். ரஹானே 2.0 விஸ்வரூபத்தைப் பார்த்து ரசிகர்களே மெய்சிலிர்த்துப் போயுள்ளனர்.

 

ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் பல வீரர்கள் இடம்பிடித்த முன்னுதாரணம் இருப்பதால், எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கு நான்காவது வரிசை பேட்ஸ்மேனாக ரஹானே தேர்வானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு அவரது ஆட்டத்தில் உள்ள நேர்த்தியும், கிரிக்கெட் நுட்பமும், கிளாசிக் ஷாட்களை ஆடும் ஸ்டைலும் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வல்லுநர்களையுமே மாய்ந்துமாய்ந்து ரசிக்க வைத்துள்ளது.

இமாலய இலக்கால் கொல்கத்தாவுக்கு அழுத்தம், நெருக்கடி

ஐ.பி.எல். வரலாற்றில் எந்த அணியும் இந்த இலக்கை சேஸிங் செய்தது இல்லை என்பதால், 235 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தபோதே வெற்றி என்பது ஏறக்குறைய 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. மீதமுள்ள 10 சதவீதம் சிஎஸ்கே அணியின் திட்டமிடலுக்கும், செயல்பாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

அதுமட்டுமல்லாமல் 235 ரன்களை எதிரணி அடித்துவிட்டாலே, சேஸிங் செய்யும் அணிக்கு மனதீரியான அழுத்தம் ஏற்பட்டுவிடும். அதற்கு கொல்கத்தா அணியும் விதிவிலக்கு அல்ல. கொல்கத்தா பேட்ஸ்மேன்கள், ஆந்த்ரே ரஸல், வெங்கடேஷ், ராணா, சுனில் நரேன் ஆகியோரிடம் இருந்து மிகப்பெரிய ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது. இதுபோன்ற பெரிய ஸ்கோரை துரத்தும்போது, சேஸிங்கில் உள்ள அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சேர்ந்து “ஃபயரானால்” மட்டுமே வெற்றியை நெருங்க முடியும்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஈடன் கார்டனில் சிக்ஸர் மழை

ஈடன் கார்டனில் நேற்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் கொடுத்த காசுக்கு நல்ல வாண வேடிக்கையை பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக சிஎஸ்கே அணி 18 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளை பறக்கவிட்டது.

ஐபிஎல் தொடரில் ஒரே ஆட்டத்தில் 21 சிக்ஸர்களை விளாசிய ஆர்சிபி அணி 2013, ஏப்ரல் 23ம் தேதியில்தான் அந்த சாதனையை நிகழ்த்தியது. 2022, ஏப்ரல் 23ம் தேதி(நேற்று) அந்த சாதனையை ஈடு செய்ய சிஎஸ்கே அணிக்கு 3 சிக்ஸர்கள் மட்டுமே குறைவாக இருந்தது.

கொல்கத்தா அணி சார்பிலும் 12 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் விளாசப்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்டத்தில் 30 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகள் விளாசி ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் தோனியைத் தவிர களம்கண்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிக்ஸரை விளாசினர். தோனிக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால், சிக்ஸர் பறக்கவிட்டிருப்பார் ஆனால் கடைசி 3 பந்துகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது துரதிர்ஷ்டம்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் மஞ்சள்மயம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று 60ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர். எங்கு பார்த்தாலும், மஞ்சள் மயம். ரசிகர்கள் சிஎஸ்கே அணியை வரவேற்கும் விதத்திலும், குறிப்பாக “கிங் ஆஃப் ஈஸ்ட்” மகேந்திர சிங் தோனியை வரவேற்கவே ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு இருக்கும் ரசிகர்களைவிட சிஎஸ்கேவுக்குதான் ஆதரவு அதிகமாக இருந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 4 போட்டிகளில் 3 ஆட்டங்கள் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன. அது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்ஸ்மேன்களின் வெற்றி

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு நேற்று பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்றுதான் கூற வேண்டும். கான்வே(56), ரஹானே 71 நாட்அவுட்(29 பந்துகள், 5 சிக்ஸர்கள்,6 பவுண்டரிகள்), ஷிவம் துபே 21 பந்துகளில் 50 ரன்கள் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) கெய்க்வாட் 35 ரன்களை விளாசித்தள்ளினர்.

சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி கூறுகையில் “ சிஎஸ்கேவுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி, மிகப்பெரிய அளவில் மக்கள் வந்துள்ளார்கள். கொல்கத்தா அணியின் அடுத்த போட்டிக்கும் இதேபோன்று ஆதரவு தர வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சாளர்களும்அவர்களின் பணியைச் செய்தனர். எதிரணியை எப்போதுமே நெருக்கடியில் வைத்திருந்தோம், கொல்கத்தா பேட்டிங் வரிசையில் கீழ்நிலையில் இருக்கும் பிக் ஹிட்டர்ஸைக் கூட நாங்கள் கவனமாகக் கையாண்டோம்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

காயமடைந்தவர்களால் ஏதும் செய்ய முடியாது. ஆதலால் அந்த நேரத்தில் எந்த வீரர் சிறப்பாக தயாராகிருக்கிறார்களோ, அந்த இளம் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது, அவர்களை ஊக்கப்படுத்துகிறேன். இது தொடரும் என நம்புகிறேன். ஒருவரிடம் திறமை இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அவரை அவரின் ஸ்டைலில் விளையாட அனுமதிக்க வேண்டும். உங்கள் பலம்தான் உங்களை முன்னோக்கி நகர்த்தும், அதை அனுபவித்து செய்ய வேண்டும். அதுபோன்ற வீரர்களை சரியான இடத்தில் களமிறக்கி ரன் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

சி.எஸ்.கே.வின் துருப்புச்சீட்டு கான்வே

வெளிநாட்டு வீரரான டெவோன் கான்வே இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் அநாயசமாக எதிர்கொண்டு விளையாடி வருகிறார்.

இந்த ஐபிஎல் சீசனில் கான்வே தொடர்ந்து 4வது அரைசதத்தை(50, 83,77, 56) பதிவு செய்தார். இதற்கு முன் சிஎஸ்கேயில் இருந்த டுப்ளெஸ்ஸி மட்டுமே தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்திருந்த நிலையில் தற்போது கான்வேயும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

அடுத்துவரும் அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு முக்கியத் துருப்புச்சீட்டாக கான்வே இருக்கப் போகிறார்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஹானே ராஜ்ஜியம் - மிரளும் எதிரணிகள்

இந்த ஐபிஎல் சீசனில் ரஹானேவின் விஸ்வரூபத்தை குறிப்பிட்டே தீர வேண்டும். இது ரஹானேவா என்று கேட்கும் அளவுக்கு அவரின் அதிரடி ஆட்டம், சிக்ஸர்களை பார்க்கும் ரசிகர்களை மிரள வைக்கிறது.

ரஹானே களத்துக்கு வந்து மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கி, பின்னர் அவரின் பேட்டிங்கும், ஷாட்களும் டாப் கியரில் சென்றது. கேகேஆர் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்து, வெளுத்து வாங்கிய ரஹானே 24 பந்துகளில் அரைசதம்அடித்தார். இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதையும் ரஹானே வென்றார்.

உமேஷ் வீசிய 15வது ஓவரில் இருந்து ரஹானே ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். உமேஷ் ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை ரஹானே விளாசினார்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஸல் ஓவரில் ஒருசிக்ஸர், பவுண்டரி அடித்த ரஹானே இந்த சீசனில் 2-வது அரைசதம் அடித்தார். வருண் சக்கரவர்த்தி வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என ரஹானே விஸ்வரூபமெடுத்தார். இந்த ஐபிஎல் சீசனில் ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் 199, சராசரி 52.55 என்பது மிரட்டலானது.

ஆட்டநாயகன் விருது வென்ற ரஹானே கூறுகையில் “ தெளிவான மனநிலையில் விளையாடினேன், வேறேதும் இல்லை. சரியாக இருந்தால், எதையும் செய்யலாம், என் மனதை தெளிவாக வைத்திருக்கிறேன். இந்த சீசனுக்காக நான் நன்றாகத் தயாராகி இருந்தேன். இந்த சீசனில் எனது ஆட்டத்தை ரசிக்கிறேன். தோனியின் கீழ் விளையாடும்போது அதிகமான விஷயங்களைக் கற்கிறேன், சிஎஸ்கேவுக்காக முதல்முறையாக ஆடுகிறேன். தோனி என்ன சொன்னாலும் கவனித்தால் போதும்” எனத் தெரிவித்தார்.

சிக்சர் மன்னன் ஷிவம் துபே

ஷிவம் துபேவும் சளைக்காமல் ரஹானேவுக்கு ஈடாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருவரும் களத்தில் இருக்கும்போது ரசிகர்கள் வானத்தை நோக்கியே இருக்கும் அளவுக்கு சிக்ஸர்கள் பறந்தன. துபே 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரும் சேர்ந்து 32 பந்துகளில் 85 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் 59 ரன்கள் சேர்த்தநிலையில் 7-வது முதல் 15 ஓவர் வரை மட்டும் 102 ரன்கள் சேர்த்தது. இதுதான் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும்.

ஷிவம் துபே கூறுகையில் “ இந்த முறை ரசித்து சிக்ஸர் அடித்தேன், அனைத்தும் நன்றாக முடிந்தது. அணியின் ரன்ரேட்டை உயர்த்த எனக்கு பணி கொடுக்கப்பட்டிருந்தது, அதை அனுபவித்துச் செய்தேன். கடந்த காலத்தில் கேகேஆர் சுழற்பந்துவீச்சாளர்களிடம் திணறியிருக்கிறேன், அதை மனதில் வைத்து இன்று விளையாடினேன். ரஹானே எனக்கு ஸ்ட்ரைக்கை மாற்றி அமைத்து எனக்கு உதவினார்” எனத் தெரிவித்தார்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

இமாலய இலக்கால் மலைத்துப்போன கொல்கத்தா

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை 235 ரன்கள் என்ற இமாலய இலக்கு பேட்ஸ்மேன்களுக்கு மலைப்பை ஏற்படுத்தி இருக்கும். அதிலும் தொடக்கத்திலேயே சுனில் நரேன், ஜெகதீசன் விக்கெட்டுகளை இழந்தபோதே, கொல்கத்தா பக்கம் நெருக்கடி தொற்றிக்கொண்டது.

சுனில் நரேன் கைதேர்ந்த பேட்ஸ்மேன் கிடையாது. ஏதாவது ஒரு போட்டியில் ஒரு கேமியோ ஆடுவார் என்பதற்காக அவரை இன்னும் கேகேஆர் அணி பேட்ஸ்மேன் பட்டியலில் வைத்திருப்பதும், தொடக்கவீரராக களமிறக்குவதும் வேடிக்கையாக இருக்கிறது.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜேஸன் ராய் தந்த நம்பிக்கை

காயத்தால் அவதிப்பட்டிருந்த ஜேஸன் ராய் நடுவரிசையில் களமிறங்கி தனக்கே உரிய கேமியோவை ஆடினார். பெரிதாக ரன்களை ஓடி எடுக்காமல் க்ரீஸில் இருந்தபடியே சிக்ஸர், பவுண்டரிகளை ஜேஸன் ராய் விளாசித் தள்ளினார். குறிப்பாக மொயின் அலி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை ராய் அடித்து நொறுக்கினார். 21 பந்துகளில் ஜேஸன் ராய் அரைசதம் அடித்தார்.

ஜேஸன் ராய் களத்தில் இருந்தவரை கொல்கத்தா அணி நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்ந்தது. ஜேஸன் ராய்க்கு துணையாக ரிங்கு சிங்கும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார்.

ரஹானே 2.0 ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிங்கு சிங் போராட்டம்

தீக்சனா பந்துவீச்சில் ஜேசன் ராய் 61 ரன்னில் போல்டாகி வெளியேறினார். கேப்டன் ராணா 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கடைசியாக களமிறங்கிய ரஸல்(9), டேவிட் வீஸ்(1) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். ரிங்கு சிங் 53 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் 235 ரன்கள் சேஸிங் என்பது எளிதானது இல்லை. ரஹானேவுக்கு பாராட்டுகள். பெரிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் தவறுகளைச் செய்தால் பின்நோக்கிதான் செல்ல வேண்டியதிருக்கும். பெரிய ஸ்கோரை துரத்தும்போது, பவர் ப்ளேயில் நல்ல தொடக்கம் தேவை அது கிடைக்கவில்லை. அதனால்தான் போட்டியில் தோற்றோம்” எனத் தெரிவித்தார்.

சென்னை அணி முதலிடம் - புதிய சாதனை

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 வெற்றிகள் கிடைத்தாலே போதுமானது.

சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணி நேற்று விளாசிய 235 ரன்கள் என்பது இந்த ஐ.பி.எல். சீசனில் அதிகபட்ச ஸ்கோராகும். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிதான் அதிகமுறை, அதாவது 26 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே.

https://www.bbc.com/tamil/articles/cnl9ddv2jjeo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாடு வீரரின் அசத்தல் ஆட்டம் வீண்; எளிய இலக்கை எட்ட முடியாமல் ஹைதராபாத் தோற்றது எப்படி?

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயித்த எளிய இலக்கை எட்ட முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியில் விளையாடும் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரின் அசத்தல் ஆட்டம் ஆடி கடைசிப் பந்து வரை நடத்திய போராட்டம் வீணாகிப் போனது. பேட்டிங்கில் அந்த அணி மீண்டும் சொதப்பியதற்கு பரிசாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியடைந்துள்ளது.

கிரிக்கெட்டில் ஓர் அணியின் வெற்றி என்பது அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால்தான் முழுமையாகவந்து சேரும். ஆனால், வெற்றிக்காக சிலர் மட்டுமே கடின உழைப்பது என்பது போதுமானதாக இருக்காது. இந்த தொடரில் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் தந்தாலும் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்து மிடில் ஓவர்களில் மந்தமாக செயல்பட்டது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதித்துவிட்டது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி குலைத்த வாஷிங்டன் சுந்தர், கட்டுக்கோப்பாக 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர், கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கிளாசன், வாஷிங்டன் சுந்தர் என பட்டியலிட்டாலும் இறுதியில் வெற்றி என்னமோ டெல்லி கேபிட்டல்ஸிடம் சரணடைந்தது.

டேவிட் வார்னரின் முதல் சிக்ஸர்

சர்வதேச போட்டிகளோ, ஐ.பி.எல். போட்டிகளோ டேவிட் வார்னரின் ஸ்டைலே தடாலடியாக ஆடி ரன்களைக் குவிப்பது தான். அவரது பேட்டில் இருந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்த வண்ணம் இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் வார்னரின் ஆட்டம் வழக்கமான ஒன்றாக அமையவில்லை.

 

வழக்கமான அதிரடியை காட்ட முடியாமல் தடுமாறி வரும் வார்னர், இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக டாட் பந்துகளை விட்ட பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெல்லி அணியில் அதிக ரன் சேர்த்த வீரர் என்றாலும் கூட, நேற்றைய போட்டிக்கு முன்பு வரை இந்த சீசனில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காதவராக வார்னர் இருந்தார்.

அந்த குறை நேற்றைய ஆட்டத்தில்தீர்ந்தது. வாஷிங்டன் பந்துவீச்சில் வார்னர் சிக்ஸர் விளாசினார்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

தொடர்ந்து சொதப்பி வரும் ப்ரித்வி ஷா நீக்கம்

கடந்த 5 போட்டிகளில் சொதப்பிய ப்ரித்வி ஷாவுக்குப் பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட பில் சால்ட்டும் ஏமாற்றம் அளித்தார்.

மிட்ஷெல் மார்ஷ் அதிரடியாக ஆடி 25 ரன்கள் சேர்த்தாலும் பொறுப்புடன் பேட் செய்யவில்லை. டி20 கிரிக்கெட்டுக்கு மார்ஷ் ஒன்றும் புதிதானவர் அல்ல, ஏறக்குறைய 160 போட்டிகளில் விளையாடியவர், ஐபிஎல் தொடருக்கும் புதியவர் அல்ல.

இருப்பினும் தொடர்ந்து சொதப்பி வரும் மார்ஷுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது எனத் தெரியவில்லை. ரோமன் பாவல் என்ற அதிரடி பேட்ஸ்மேன் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை ஏன் பயன்படுத்த டெல்லி தயங்குகிறது.

அதுமட்டுமல்ல மார்ஷ் தனது பேட்டிங்கில் எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு திணறக்கூடியவர். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மார்ஷ் சராசரி ரன் குவிப்பு 24 என இருக்கும்போது, இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 17 மட்டுமே வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 16 முறை இடதுகை வேகப்பந்துவீச்சில் மார்ஷ் ஆட்டமிழந்துள்ளார்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

டெல்லிக்கு 'நம்பிக்கை' பார்ட்னர்ஷிப்

டெல்லி அணியில் அக்ஸர் படேல்(34), மணிஷ் பாண்டே(34) இருவரும் 6-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 69 ரன்கள் சேர்த்துதான் ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை எட்டமுடிந்தது. இல்லாவிட்டால், டெல்லி அணியின் கதை 100 ரன்களுக்குள் முடிந்திருக்கும். பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த அக்ஸர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக 131 ரன்களில் இருந்து, அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே அதன் பேட்டிங் வரிசை வலுவின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

புவனேஷ்வர் கட்டுக்கோப்பான பந்துவீச்சு

சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஏற்று ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகத்தான் இருந்தது. குறிப்பாக ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீசினார்.

உம்ரான் மாலிக் அதிகபட்சமாக 152 வேகத்தில் பந்துவீசியும், பெரிதாக ரன்களை வழங்கவில்லை, விக்கெட்டும் வீழ்த்தினார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவில்லை. மார்கோ ஜான்ஸனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை உம்ரான் மாலிக்கிற்கு வழங்கியிருக்கலாம்.

சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்க்கண்டே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் வழங்கினாலும், விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

சரிவில் இருந்து மீண்டு வந்த நடராஜன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடந்த 2 போட்டிகளில் சரிவர விளையாடத நடராஜன் நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தது போல் தெரிந்தது. பவர் பிளேவில் நான்காவது ஓவரை வீசிய அவர், மிட்செல் மார்ஷை காலி செய்தார். சரியான லைன், லென்த்தில் நடராஜன் வீசிய அந்த பந்தை, மார்ஷ் சரியாக கணிக்கத் தவறி கால் காப்பில் வாங்கினார். களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால், டி.ஆர்.எஸ். முறைப்படி சன்ரைசர்ஸ் அணி அப்பீல் செய்தது. அதில், பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரிந்ததால் மார்ஷ் வெளியேற்றப்பட்டார்.

இதேபோல், டெல்லி கேபிட்டல்ஸ் இன்னிங்சின் கடைசிக் கட்டத்தில் 19-வது ஓவரை வீசிய நடராஜன் சிக்கனம் காட்டினார். அந்த ஓவரில் டெல்லி வீரர்களால் பவுண்டரி, சிக்சர்கள் ஏதும் அடிக்க முடியவில்லை. 5 ஒற்றை ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த போட்டியில் பீல்டிங்கில் சொதப்பிய வாஷிங்டன் சுந்தர், இந்த ஓவரில் அசத்தலாக பீல்டிங் செய்து மணிஷ் பாண்டேவை ரன் அவுட் செய்தார்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரே ஓவரில் 3 விக்கெட் - வாஷிங்டன் சுந்தர் அசத்தல்

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் துருப்புச் சீட்டாக திகழ்ந்த வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் நடப்பு சீசனில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை 6 போட்டிகளில் 14.3 ஓவர்களை வீசியும் அவர் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. வழக்கமாக பவர் பிளேவில் அணிக்கு கைகொடுக்கும் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு இந்த சீசனில் எடுபடவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் வீசிய மூன்றாவது ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்சரையும் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் வலுவாக மீண்டு வந்த வாஷிங்டன் சுந்தர் 8-வது ஓவரில் வார்னரை அவுட்டாக்கி பதிலடி கொடுத்தார். அந்த ஓவரில் அமன் கான், சர்பிராஸ் கான் ஆகியோரையும் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டத்தை சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அவர் மாற்றினார்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

முதல் ஓவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்த வாஷிங்டன் சுந்தர், அடுத்த 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இக்கட்டான நேரத்தில் அவர் கைகொடுத்தார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல ஸ்கூப் ஷாட் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். கடைசிக் கட்டத்தில் அணிக்கும் தேவையான நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டினாலும், அது வெற்றிக்குப் போதுமானதாக இருக்கவில்லை. 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்த அவர், அணி தோல்வியடைந்ததால் ஏமாற்றமடைந்தார்.

பரபரப்பான கடைசி ஓவர்

கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. வாஷிங்டன் சுந்தர், ஜான்ஸன் களத்தில் இருந்தனர். ஆனால், டெல்லி கேபிட்டல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ், மிகுந்த அமைதியுடன், கட்டுக்கோப்பாக யார்கர்களை வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றியை தங்கள் வசமாக்கினார்.

வாஷிங்டன் சுந்தர், ஜான்ஸன் இருவரும் தொழில்முறை பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், தோல்விக்கான சுமையை அவர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.

ஐ.பி.எல். டி20 தொடரில் குறைந்த ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்து, எதிரணியை அதற்குள் சுருட்டி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் இருவரும் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்து, சன்ரைசர்ஸ் அணியை ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டனர்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

சேஸிங்கில் பவுண்டரி, சிக்ஸர் அவசியம்

இதுபோன்ற குறைவான ஸ்கோரை துரத்தும்போது, சேஸிங் அணி அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிப்பது ரன்ரேட்டை சீராக கொண்டு செல்ல உதவும். ஆனால், நேற்று சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து நேற்று வெறும் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தது.

டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ரன்ரேட்டுக்கு பெரிய ஸ்பீடுபிரேக்அமைத்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி, 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்விக்கு காரணம் என்ன?

சன் ரைசர்ஸ் அணியைவிட டெல்லி கேபிடல்ஸ் அணிதான் அதிகமான டாட் பந்துகளை விட்டபோதிலும், வெற்றி மட்டும் சன்ரைசர்ஸ் பக்கம் செல்லாதது வியப்புக்குரியதுதான். டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் 44 டாட் பந்துகளை அதாவது ஏறக்குறைய 7 ஓவர்களில் ரன் இன்றி கழித்தனர்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 39 பந்துகள்தான் டாட் பந்துகளாக இருந்தன. இது டெல்லி அணியைவிட 8 பந்துகள் அதிகம், ஏறக்குறைய 6 ஓவர்கள் ரன் அடிக்காமல் கழிந்தது. டாட் பந்துகளை குறைவாக எடுத்தநிலையிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்றது, முழுமையாக பேட்ஸ்மேன்கள் மனநிலையோடு தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டம் மட்டுமல்ல கடந்த சில போட்டிகளாகவே சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஃபார்மின்றி தடுமாறி வருகிறார்கள். எந்தப் பந்தில் பெரிய ஷாட்களை அடிப்பது, எந்த பந்தை டிபெண்ட் செய்து விளையாடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது என்பது நேற்றைய ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் செய்வது ஏன்?

சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் தங்களின் பேட்டிங் யுத்தியை மாற்றி பேட்டிங் செய்யவில்லை. குறிப்பாக ரிஸ்க் ஏதும் எடுக்கத் தயாராக இல்லை என்பது நேற்றைய ஆட்டமிழந்த பேட்ஸ்மேன்கள் ஸ்டைல் மூலம் தெரிந்தது. குறிப்பாக ஹேரி ப்ரூக், திரிபாதி, அபிஷேக் சர்மா, கேப்டன் மார்க்ரம் ஆகியோர் ஆட்டமிழந்த விதமே சாட்சி.

அதுமட்டுமல்ல பேட்டிங் வரிசையை தொடர்ந்து மாற்றுவது வீரர்களின் மனநிலை, நிலைத்தன்மையை பெருமளவு குலைத்துவிடும். கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட அபிஷேக் இந்த ஆட்டத்தில் நடுப்பகுதிக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆட்டத்தில் 6வது வரிசையாக இறக்கப்பட்ட மயங்க்அகர்வால் தொடக்கம் அளிக்கவந்தார். இதுபோன்ற குழப்பமான முடிவுகள் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.

குறிப்பாக கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை ரன்ரேட் குறைவாக இருக்கும்போது களமிறக்கி விளையாடச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் ரன்ரேட் அழுத்தம் இருக்கும்போது அவரை களமிறக்கியதற்கு விலையை சன்ரைசர்ஸ் அணி நேற்று கொடுத்தது.

சன்ரைசர்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் அதாவது 7 முதல் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

தோல்வியின் பாதையில் தள்ளிய அகர்வால் - திரிபாதி ஜோடி

மயங்க் அகர்வால் கடந்த போட்டிகளை விட இந்த ஆட்டத்தில் சற்று நிதானமாகவும், பொறுப்புடனும் பேட் செய்தார். ஆனால் ஆட்டத்தில் பவுண்டரி, சிக்ஸருக்கு ஏற்பட்ட பஞ்சம், தேவைப்படும் ரன்ரேட்டை தொடர்ந்து அதிகரிக்க வைத்தது.

ஹைதராபாத் மைதானம் ரன் அடிக்க முடியாத மோசமான ஆடுகளமும் இல்லை. அப்படி இருந்தும், பவுண்டரி, சிக்ஸர் அடிக்க சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சோம்பேறித்தனம் காட்டியதன் விளைவு, கடைசிவரிசை பேட்ஸ்மேன்களுக்கு ரன்ரேட் வீதத்தை உயர்த்தி நெருக்கடியை ஏற்படுத்தியது.

அதுபோன்ற நெருக்கடி நிலையிலும்கூட கிளாசன் களமிறங்கி அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை கட்டுக்குள் கொண்டுவந்து, வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். ஆனால், 19பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த கிளாசனும் ஆட்டமிழக்கவே டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கான பிரகாசம் தெரிந்தது.

ஆனால், வாஷிங்டன் சுந்தர் தலையில் மட்டுமே வெற்றிக்கான பாரத்தை கடைசி நேரத்தில் வைத்தது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 15 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்தும், அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

தொடக்க வரிசை, நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்கால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் எகிறி, கடைசி வரிசை பேட்ஸ்மேன்களுக்கு சுமையாக மாறிப் போனது.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் காட்டிய தீவிரம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களிடம் இருந்ததா என்பது கேள்விக்குறியே. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்த விதத்தைப் பார்க்கும் யாருக்கும் அந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் கடைசி வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆதிக்கம் செய்தது போல் தெரிந்தாலும் இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத்தான் வெற்றி கிடைத்தது.

'வீரர்களிடம் நம்பிக்கை இல்லீங்க' - மார்க்ரம்

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ மீண்டும் நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை, போதுமான அளவு நம்பிக்கையுடன் பேட்ஸ்மேன்கள் செயல்படவில்லை. வெற்றியைப் பெறாதாநிலையால் அணிக்குள் வீரர்களிடம் உற்சாகமின்மை தொற்றிக்கொண்டது துரதிர்ஷ்டம். இந்த குறைந்த ஸ்கோரை எவ்வாறு சேஸிங்செய்திருக்கலாம் என்று ஆலோசிப்போம். வீரர்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கி, ஆலோசனை கேட்போம், அது அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த உதவும்.

நாங்கள் ஒருவகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வந்திருக்கிறோம். அதில் தவறு ஏற்படாமல் செயல்பட்டால்தான் நிம்மதியாக உறங்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டமாக வீரர்களிடம் அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. எங்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் இருந்தும், நம்பிக்கை என்ற அம்சம் குறைந்துவிட்டது தோல்விக்கு காரணமாகும்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

வெற்றி கிடைக்க சிறப்பாக விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டது பெருமையாக இருக்கிறது, ஆடுகளத்தை சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆனால், பேட்ஸ்மேன்கள்தான் அவர்கள் பணியைச் செய்யவில்லை. தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் ஒருபோதும் காரணமல்ல” எனத் தெரிவித்தார்

ஹைதராபாத்தை வென்றதில் வார்னர் பெருமகிழ்ச்சி

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் வார்னர் கூறுகையில் “ ஹைதராபாத்தை விரும்புகிறேன், ஏராளமான ரசிகர்கள் கூட்டம். நீண்டகாலத்துக்குப்பின் சந்திக்கிறேன். இங்கு வெற்றியுடன் செல்ல வேண்டும் என விரும்பினேன், அது நடந்துவிட்டது. சில சவால்களை இந்தப் போட்டிஅளித்தது. கடைசி ஓவரில் முகேஷ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, இரு சுழற்பந்துவீச்சாளர்களும் அருமையாக செயல்பட்டனர். இசாந்த் சர்மா கடின உழைப்புக்குப்பின் ஐபிஎல்க்கு திரும்பி வந்துள்ளார். இந்த வெற்றி அடுத்த வெற்றிக்கு எங்களைத் தயார்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

ஹைதராபாத் தோற்றது எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

புவனேஷ்வர் காலில் விழுந்த வார்னர்

சன்ரைசர்ஸ் அணியின் முன்ளாள் கேப்டன், ஏறக்குறைய 7 சீசன்களில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், போட்டி தொடங்கும் முன் புவனேஷ்வர் காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத புவனேஷ்வர் அவரை எழுப்பி, கட்டியணைத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cm5lzp78jjyo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனிக்காக ஆடும் ரஹானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ரஹானே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஹானேவுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கான கதவுகள் திறந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதுவும் நேரடியாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

2021 ஜூன் முதல் 2023 ஜூன் வரையிலான சர்வதேச டெஸ்ட் தொடர்களை அடிப்படையாக கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. 

இந்த முறை புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது, இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது. 

 

இவ்விரு அணிகளும் லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யாருக்கு என மல்லுக்கட்டவுள்ளன. 

இந்த போட்டி வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் தற்போது அஜிங்கிய ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். 

15 பேர் கொண்ட அணியில் ஷுப்மன் கில், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, கே எல் ராகுல், கே எஸ் பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், மொஹம்மத் ஷமி, மொஹம்மத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

காயம் காரணமாக பும்ரா இடம்பெறவில்லை, தவிர புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெறவில்லை. 

சி.எஸ். அணிக்காக மிரட்டல் ஆட்டம்

இந்த ஐபிஎல் சீசனில் புதிய ஆட்டபாணியில் அசத்தி வருகிறார். நீண்டகாலமாக ராஜஸ்தான் அணிக்கு விளையாடி வந்தவர், கேப்டனாக செயல்பட்டவர் என்றபோதிலும் கடந்த ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவை அணியில் சேர்த்துக்கொள்ள பெரும்பாலான அணிகள் தயங்கின. 

அந்த வேளையில் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர், பென் ஸ்டோக்சுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே  பிளெயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டார். 

மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே சார்பில் தான் விளையாடிய முதல்  போட்டியிலேயே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருபவர் கடந்த ஐந்து போட்களில் இரண்டு அரைசதத்தோடு 209 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்த தொடரில் இதுவரை 18 பௌண்டரிகள், 11 சிக்ஸர்கள் விளாசியுள்ள ரஹானே 199 எனும் ஸ்ட்ரைக் ரேட்டோடு வலம் வருகிறார்.

 

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை குறைந்தபட்சம் 100 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் ரஹானே தான். ஐபிஎல் தொடங்கிய சீசனில்  இருந்து விளையாடி வரும்  இதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 137 எனும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதுவே அவரது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ரஹானே

பட மூலாதாரம்,GETTY IMAGES

உள்ளூர் போட்டிகளிலும் அசத்தல்

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடினார் ரஹானே. 

குறிப்பாக ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியவர் முதல் சில ஆட்டங்களில் தடுமாறினார். ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி இரட்டைக் சதம் விளாசினார். 

அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் 191 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் பிரித்வி ஷா ரஹானே ஜோடி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 401 ரன்கள் குவித்தது. 

ஒட்டுமொத்தமாக ஏழு போட்டிகளில் விளையாடி 57 எனும் சராசரியோடு 634 ரன்கள் குவித்தார். 

கடந்த ஆண்டு சென்னை மண்ணில் நடந்த துலீப் டிராபி காலிறுதி போட்டியிலும் வட கிழக்கு மண்டலத்துக்கு எதிரான போட்டியொன்றில் 207 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த டெஸ்டில் 78 எனும் ஸ்ட்ரைக்  ரேட்டோடு விளையாடினார். 

இதையெல்லாம் வைத்துதான் ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், இந்த சீசனில் அஜிங்க்ய ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் மலைப்பூட்டுகிறது. தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது அவருக்கு உதவியிருக்கிறது என எழுதினார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

சிஎஸ்கே ஆட்டங்களில் மூலம் ரஹானேவுக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்த சூழலில் தற்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ரஹானே கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டி எது?

முன்னதாக, கடந்த 2022 ஜனவரியில்  தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடியதே அவரது கடைசி டெஸ்ட் தொடராகும். கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

2020-ம் ஆண்டு இறுதியில் மெல்பர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  அவர் சதமடித்ததே, தற்போது வரை அவரது கடைசி டெஸ்ட் சதமாகும். அதன் பின்னர் அவர் விளையாடிய 15 டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் ஏதும் எடுக்கவில்லை. தவிர மூன்று அரை சதம் மட்டுமே விளாசியிருந்தார். 

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ரஹானே

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ரஹானே 49 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர வேறு எந்த இந்திய  வீரரும் அதிக ரன்கள் எடுக்கவில்லை. அந்த போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது அஜிங்க்ய ரஹானேவுக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தான்.

https://www.bbc.com/tamil/articles/c190nx1wv39o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பை இந்தியன்ஸ்: 5 முறை சாம்பியன் தடுமாறுவது ஏன்? - அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் டாப் கிளாஸ் ஆட்டத்தை விளையாட்டை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அதிரடியான பேட்டிங், பந்துவீச்சில் துல்லியம், சீராக விக்கெட்டுகளை வீழ்த்தியது போன்ற காரணங்களால் அந்த அணியின் வெற்றி எளிதாகிப் போனது.

பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்தலாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை, அந்த அணியின் பலவீனமாக பந்துவீச்சு இம்முறை அப்பட்டமாக வெளிப்பட்டது. முதன் முறையாக பேட்டிங் வாய்ப்பு பெற்ற அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முயற்சியிலேயே தந்தை சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அசத்தல் தொடக்கம்

குஜராத் டைடன்ஸ் அணியின் வெற்றிக்கு சுப்மான் கில், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அபினவ் மனோகர், திவேட்டியா, மில்லர் ஆகியோரின் வலுவான பேட்டிங் முக்கியக் காரணம். பேட்ஸ்மேன்கள் அமைத்துக் கொடுத்த தளத்தில் பந்துவீச்சாளர்களும் லாவகமாக பந்துவீசியது, வெற்றியை எளிதாக்கியது.

குஜராத் அணியின் தொடக்கஜோடி சுப்மான் கில், விருதிமான் சாஹா இந்த சீசனில் 3 ஓவர்களுக்கு மேல் நிலைத்தது இல்லை, இந்த ஆட்டத்திலும்அப்படித்தான் நிகழ்ந்து. ஆனால், தனித்தனியாக இருவரும்தங்களின் திறமையை நிரூபித்து ரன் சேர்க்கத் தவறவில்லை.

 

கில் விரைவாக வெளியாறினால் சாஹா ஸ்கோர் செய்தார், சாஹா வெளியேறிய நிலையில் நேற்று கில் ரன்களைக் குவித்து 34பந்துகளில் அரைசதம் அடித்து 54 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

நடுவரிசை பேட்ஸமேன்கள் ஹர்திக் பாண்டியா(13), விஜய் சங்கர்(19) என பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மில்லர் “தி கில்லர்”

ஆனால், அபினவ் மனோகர், மில்லர் இருவரும் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் சேர்ந்து சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து 35 பந்துகளில் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர்.

12 ஓவர்கள்வரை குஜராத் அணி 100 ரன்களைக் கூட எட்டவில்லை 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால் மில்லர், மனோகர் கூட்டணி ரன் வேகத்தை டாப் கியருக்கு மாற்றியது. சாவ்லாவின் 15ஓவரில்2 பவுண்டரி, சிக்ஸர் என 17 ரன்களை மனோகர் குவித்தார்.

மெரிடித் வீசிய 17-வது ஓவரில் மில்லர் இரு பவுண்டரிகள் உள்ளிட்ட 13 ரன்கள் குவித்தார். கேமீருன்வீசிய 18வது ஓவரில் மனோகர் 2 சிக்ஸர்கள், மில்லர் ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் விளாசினர்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசிக் கட்டத்தில் ராகுல் திவேட்டியா விளாசல்

அதன்பின் மனோகர்(42) ஆட்டமிழந்தபின் திவேட்டியா நுழைந்து பேட்டை சுழற்றினார். மெரிடித் வீசிய 19வது ஓவரில் திவேட்டியா ஒரு சிக்ஸர், மில்லர் இரு சிக்ஸர்கள் என 19 ரன்கள் சேர்த்தனர். மெஹர்டார்ப் வீசிய 20வது ஓவரில் திவேட்டியா இரு சிக்ஸர்கள் விளாசி 5 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.

குஜராத் நடுவரிசை பேட்ஸ்மேன்களின் கடைசி 4 ஓவர்கள் அளித்த பங்களிப்பை, பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு துல்லியமாகப் பந்துவீசியதுதான்வெற்றிக்குக் காரணமாகும். கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணி 70 ரன்கள் சேர்த்தது, இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். அதுமட்டுமல்லாமல், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டேவிட் 3 பேரும் ஆட்டமிழந்தபோதே, ஆட்டத்தின் வெற்றி குஜராத் கரங்களுக்குச் சென்றுவிட்டது.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் பலவீனமான பந்துவீச்சை அடித்து நொறுக்கிய குஜராத்

மும்பை அணியின் டெத் ஓவர் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி 5 ஓவர்களில் 96 ரன்களை வாரி வழங்கிய மும்பை இந்தியன்ஸ், இந்த ஆட்டத்தில் கடைசி 4 ஓவர்களில் 70 ரன்களைக் கொடுத்தது. டேவிட் மில்லர், திவேட்டியா, அபினவ் மனோகர் காட்டிய அதிரடியால் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் உயர்ந்தது.

வலுவான, துல்லியமான டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் இருந்திருந்தால், ரன்கள் செல்வதைத் தடுத்திருக்கலாம். குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் குவிப்பும் வேகத்துக்கு ஸ்பீல் பிரேக்கர் போட்டிருக்கலாம்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜூன் டெண்டுல்கரின் ஆட்டம் எப்படி?

கடந்த ஆட்டத்தில் டெத் ஓவரில் அர்ஜூன் டெண்டுல்கர் ஓவரில்தான் 31 ரன்கள் விளாசி பஞ்சாப் கிங்ஸ் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. ஆதலால், அதே தவறை இந்த ஆட்டத்தில் செய்யக்கூடாது என்பதிலும், குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் இருக்கும் ஃபார்மைப் பார்த்தும் அர்ஜூனுக்கு 2 ஓவர்களோடு ரோஹித் சர்மா நிறுத்திக்கொண்டார்.

ஐ.பி.எல்.லில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே தந்தை சச்சின் டெண்டுல்கரை மிஞ்சிவிட்டார் அர்ஜூன் டெண்டுல்கர். 2008ல் சச்சின் தனது ஐபிஎல் அறிமுக ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 12 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்றய ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் 13 ரன்கள் சேர்த்து தந்தையைவிட கூடுதலாக ஒரு ரன் சேர்த்து வெளியேறினார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பைக்கு நெருக்கடி தந்த ஷமி, பாண்டியா

சேஸிங்கில் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திச் சென்ற மும்பை அணிக்கு தொடக்கத்திலிருந்து மொஹம்மது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அளித்த நெருக்கடியான பந்துவீச்சு கைமேல் பலன் அளித்தது.

ரன் அடிக்க வேண்டும், பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும், அழுத்தமும் இஷான் கிஷன், ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் தெரிந்தது. ஆனால், ஷமியின் டெஸ்ட் போட்டி பந்துவீச்சும், துல்லியமான லைன் லென்த்தும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்னமாக இருந்தது.

ஹர்திக் பாண்டியாவும் 145கி.மீ வேகத்தில் அவுட் ஸ்விங்குகளை வீசி, தன் பங்கிற்கு பட்டையைக் களப்பினார். அதற்கு ஏற்றார்போல், ரோஹித் சர்மா(2) விக்கெட்டை தூக்கியவுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்ற ரீதியில் ஹர்திக் தனது பந்துவீச்சை நிறுத்தினார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

முகமது ஷமி மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சு

நேற்றைய ஆட்டத்தில் முகமது ஷமியின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ் என்று கூற வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஷமி பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், வேகம், ஸ்விங் திறன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும். ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்டு, பந்து ஸ்விங் ஆவதைப் பார்த்து ரோஹித் சர்மா உதிர்த்த புன்னகையே அதற்கு சாட்சி.

இஷான் கிஷனுக்கு டெஸ்ட் பவுலிங்கை ஷமி வீசி, மிரளச் செய்தார். உடம்பை உரசிச் செல்லும் லெக் கட்டர், அவுட் ஸ்விங்கால் இஷான் கிஷன் அச்சப்பட்டார். இதனால் பவர்ப்ளேயில் இஷான் கிஷன் 17 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஷமி 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்தார், இதில் 14 டாட் பந்துகளாகும். அதாவது ஏறக்குறைய 2 ஓவர்கள் மெய்டன்களாகும்.

10 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரி - மும்பை மந்தம்

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்ததால், ஹர்திக் பாண்டியா, ஷமி களம் கண்டு மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதை கட்டிப்போட்டனர். இதனால் பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 29 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது.

ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட்டை இழந்து 50 ரன்கள் சேர்த்திருந்தது. 10 ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே சேர்த்திருந்தது.

இதே குஜராத் டைட்டன்ஸ் அணி 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. இதிலிருந்தே குஜராத் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைத் தெரிந்து கொள்ளலாம்.

200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும்போது ஓவருக்கு ஒரு சிஸ்கர், பவுண்டரி கட்டாயமாகும். ஆனால், 10 ஓவர்களாக ஒரே பவுண்டரியை வைத்துக்கொண்டு சமாளிப்பது மும்பை வெற்றிக்கு உதவாது.

நூர் , ரஷித்கான் மிரட்டல்

பவர்ப்ளேவுக்கு அடுத்தார்போல் அடுத்த 8 ஓவர்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், நூர் முகம்மது ஆகியோர் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். நடுப்பகுதி ஓவர்களில் ராஜ்ஜியம் செய்த இருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன் சேர்க்க மும்பை பேட்ஸ்மேன்களால் முடியவில்லை, ரன் அடிக்க முயற்சி்த்தபோது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

குறிப்பாக இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து மிரட்டல் ஃபார்மில் இருக்கும் திலக் வர்மாவை 2 ரன்னில் ரஷித் கான் வெளியேற்றினார். இந்த சீசனில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, ரஷித் கான் ஊதா நிறத் தொப்பியையும் வென்றார்.

ஆபத்தான பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ்(23), கேமரூன் க்ரீன்(33), டிம் டேவிட்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை நூர் முகம்மது கைப்பற்றி அசத்தினார். இதில் நூர் முகம்மது வீசிய 11வது ஓவரில் க்ரீன், சூர்யகுமார் ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் கரங்களுக்கு மாறியது.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையை வெகுவாக பாதித்த 'டாட்' பந்துகள்

இந்த ஆட்டத்தில் மட்டும் மும்பை பேட்ஸ்மேன்கள் 51 டாட் பந்துகளை விட்டுள்ளர், ஏறக்குறைய 9 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் ரன் சேர்க்கவில்லை என்று அர்த்தம். இதுபோன்ற சவாலானஸ்கோரை விரட்டும்போது, டாட் பந்துகள், ரன் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். ஆனால், குஜராத் அணியைப் பொறுத்தவரை 35 டாட் பந்துகள்தான்விட்டுள்ளனர்.

மும்பை பேட்ஸ்மேன் நேஹல் வதேரா மட்டும் தனியாகப் போராடி 40 ரன்கள் சேர்த்து மோகித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வலுவான பேட்டிங் வரிசை இருந்தும் தோல்வி

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த தோல்வி வருத்தத்தை அளிக்கிறது. கடைசி ஓவர்கள்வரை ஆட்டத்தைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றோம், ஆனால் கடைசியில் அதிக ரன்களைவிட்டுவிட்டோம். பேட்டிங்கில் எங்கள் செயல்பாடுகளை சரி செய்வது அவசியம்.

எது சரி, யார் சரியான பேட்ஸ்மேன் என்பதை கண்டறிந்து களமிறக்குவது அவசியம். ஆனால், அதைச்செய்யவில்லை, அதிகமான ரன்களையும் விட்டுவிட்டோம். ஒவ்வொரு அணியும் வித்தியாசமான பலத்துடன் இருப்பதை பார்க்கிறீர்கள்.

எங்களிடமும் வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது, இந்த இலக்கையும் எட்ட முடியும். ஆனால், இந்த ஆட்டத்தில் பேட்டிங் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை. இரவில் பனியும் லேசாக இருந்தது, நாங்கள் நிதானமாக பேட் செய்திருந்தால், நிச்சயம் இந்தஸ்கோரை சேஸிங் செய்திருப்போம். எங்களின் தொடக்கம் சரியில்லாமல் இருந்தது. 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, தொடக்கத்தில் சொதப்பில் ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித்துக்கு ஓய்வு தேவையா?

வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து ரோஹித் சர்மாவுக்கு சிறிது ஓய்வு தேவை என்று சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் அளித்த ஆலோசனையில் “ மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் தேவை என்று நான் விரும்புகிறேன்.

நான் நேர்மையாகக் கூறுவது என்னவென்றால், சில போட்டிகளுக்கு ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தன்னை தயார்படுத்தலாம். அதன்பின் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டங்களில் ரோஹித் ஆடலாம். இப்போதுள்ள நிலையில் ரோஹித் சர்மா அவரின் பேட்டிங் ஃபார்மைத் தக்கவைக்க சிறிது ஓய்வு தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இதுபோன்ற மோசமான ஃபார்மில் இருக்கும்போது, ஒரு பேட்ஸ்மேன் சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு, போதுமான பயிற்சி எடுத்துத்து களம் காணும்போது, அவரின் இழந்த ஃபார்மை மீட்கமுடியும்.

எதையும் திட்டமிடுவது இல்லை

குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ கேப்டன்ஷிப்பில் முன்கூட்டியே திட்டமிடுவதைவிட, அந்தந்த நேரத்துக்கு ஏற்றார்போல்தான் நான் முடிவு எடுப்பேன். அதுதான் என் வெற்றிக்கு காரணம். கேப்டன்ஷிப் என்பது வித்தியாசமானது.

ரஷித் கான், நூர் இருவரும் கிரீன், டேவிட் விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன் வேகத்தை குறைத்துவிட்டனர். அபினவ் பேட்டிங் அருமையாக இருந்தது, அவரின் உழைப்பு தெரிகிறது. கடந்த ஆண்டைவிடஇந்த ஆண்டு சிறப்பாக பேட் செய்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் முன்னேறிச் செல்ல விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்

அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பையை பழிதீர்த்து 2-வது இடத்திற்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஒருமுறை மட்டுமே மோதியிருந்தன. அதில் சில ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. அந்தத் தோல்விக்கு இந்தமுறை குஜராத் டைட்டன்ஸ் பழிதீர்த்துவிட்டது.

இந்த வெற்றி மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

புள்ளிக்கணக்கில் சிஎஸ்கே அணிக்கு இணையாக குஜராத் டைட்டன்ஸ் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த இரு தோல்வியால், 7-வது இடத்துக்குச் சரிந்தது. 7 போட்டிகளில் 3வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா படை உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cql3q541557o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொந்த மண்ணில் மீண்டும் தோற்ற விராட் கோலியின் வேதனைப் பேச்சுக்கு என்ன காரணம்?

கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 27 ஏப்ரல் 2023, 03:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐ.பி.எல். டி20 தொடரின் 2வது பகுதியை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து வந்த அந்த அணி அனைத்து வீரர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பால், ஆர்சிபியை வென்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 36-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. பெங்களூரு அணி முதலில் அதிரடியாக தொடங்கினாலும் வெற்றிக்கு தேவையான 200 ரன்களை அந்த அணியால் எட்ட முடியாமல் போனது.

201 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் துரத்திச் சென்ற ஆர்சிபி அணியிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றால் வெற்றியைப் பறித்தது கொல்கத்தா ரைடர்ஸ் அணி.

இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகள் என மொத்தம் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

 

ஆர்சிபி-க்கு சுயாஸ் சர்மா கொடுத்த அதிர்ச்சி

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியுள்ள 19 வயதான சுயாஸ் சர்மா சுழற்பந்து வீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய ஆட்டத்திலும் இது தொடர்ந்து.

முதல் 2 ஓவர்களுக்கு பெங்களூர் அணி 30 ரன்களை கடந்திருந்த நிலையில், மூன்றாவது ஓவரை வீச வந்த சுயாஸ் , டூ ப்பிளசிஸ் விக்கெட்டை வீழ்த்தி பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்தார். சுயாஸ் வீசிய அடுத்த ஓவரில் ஷாபாஸ் அகமத் (2) வெளியேற, பெங்களூரு அணிக்கு நெருக்கடி தொடங்கியது.

IPL 2023: RCB vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜேஸன் ராய் அடித்தளம்

கொல்கத்தா வெற்றிக்கும், ரன் குவிப்புக்கும் ஜேஸன் ராய் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஜெகதீசனோடு சேர்ந்து களமிறங்கிய ஜேஸன் ராய், ஆர்சிபி பந்துவீச்சை சிதைத்துவிட்டார். பவுண்டரி, சிக்ஸர்கள் என பவர்ப்ளேயில் 10 ரன்ரேட்டை ஜேஸன் ராய் எகிறச் செய்தார். ஷாபாஸ் அகமது வீசிய ஓவரில் 4 சிக்ஸர்களை ராய் பறக்கவிட்டார். 2022-ஐபிஎல் தொடரில் இருந்து 11 தொடக்க ஜோடியை கொல்கத்தா பரிசோதித்த நிலையில் இப்போதுதான் சரியான நபரைப் பிடித்துள்ளது.

ஜேஸன் ராய் பேட்டிங் ஒருபுறம் அதிவேகத்தில் செல்ல, ஜெகதீசனின் ஆட்டமோ ஆமை வேகத்தில் இருந்தது. ஆர்சிபி பந்துவீச்சை நொறுக்கி எடுத்த ராய் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். வியாசக் பந்துவீச்சில் யார்க்கரில் க்ளீன் போல்டாகி 56 ரன்களில் ராய் வெளியேறினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிங்கு சிங், டேவிட் வீஸ் தங்கள் பங்களிப்பை வழங்கினார். அசுர ஃபார்மில் இருக்கும் ரிங்கு சிங், 10பந்துகளில் 18 ரன்களும், வீஸ் 2 சிக்ஸர்களுடன் 12 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து 200 ரன்கள் ஸ்கோரை எட்ட உதவினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் தொடங்கியதில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரன் ரேட்டுக்கு இணையாகவே ஆர்சிபி அணியும் சென்றது. இதனால் வெற்றி பெற்றுவிடும் என்றே ரசிகர்கள் நம்பினர்.

ஆனால், 12-வது ஓவரில் மகிபால் லாம்ரோர், கோலி கூட்டணி உடைந்தபின் ஆட்டத்தில் சரிவு தொடங்கியது. 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த ஆர்சிபி அணி அடுத்த 41 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

சொந்த மண்ணில் 2-ஆவது தோல்வி

ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தில் இந்த சீசனில் சந்தித்த 2வது தோல்வி இதுவாகும்.

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் 3வது முறையாக விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்றார். கோலி கேப்டன் பொறுப்பேற்று 2 முறையும், எதிரணியை டிபெண்ட் செய்து வென்றிருந்தது. ஆனால் , இந்த சீசனில் 2வது முறையாக சேஸிங் செய்து, அதில்ஆர்சிபி தோற்றுள்ளது.

IPL 2023: RCB vs KKR

பட மூலாதாரம்,ANI

கோலியின் புதிய சாதனை

பெங்களூரு அணி தோல்வியை தழுவிய போதிலும், விராட்கோலி நேற்று புதிய சாதனையை படைத்தார். டி20 போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 3ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும், டி20 போட்டியில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 3ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதற்கு முன் வங்கதேச பேட்ஸ்மேன் முஸ்பிகுர் ரஹ்மான் மட்டும்தான் ஒரே மைதானத்தில் 2985 ரன்கள் குவித்து சாதனை செய்திருந்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள்(6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் கோலி அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். மேலும், இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்களை நிறைவு செய்த முதல் இந்திய பேட்ஸ்மேனும் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே விராட் கோலி பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார். “கிளாசிக் கோலி”யை மீண்டும் ரசிகர்கள் பார்த்தது போன்ற பிரமிப்பையும், நினைவுகளையும் பேட்டிங் கிளறிவிடுகிறது.

குறிப்பாக இந்த சீசனில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வேகப்பந்துவீச்சில் 111 பந்துகளை எதிர்கொண்ட கோலி 190 ரன்களைக் குவித்துள்ளார், சராசரி 95 ஆகவும், 171 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

IPL 2023: RCB vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

வெற்றியை தாரைவார்த்துவிட்டோம்

ஆட்டம் ஆர்சிபி பக்கம் சென்றதுபோன்று காணப்பட்டபோது, கோலி அடித்த ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் அரங்கில் இருந்த ரசிகர்கள் அடித்த விசில், கரகோஷம் காதைப் பிளந்தது. ஆனால், ரஸல் வீசிய 13 ஓவரில் விராட் கோலி அடித்த ஷாட்டை லாங்கான் திசையில் வெங்கடேஷ் கேட்ச் பிடித்தபின், மைதானத்தில் ரசிகர்கள் திடீரென சோகமாகினர். கோலி ஆட்டமிழந்தவுடன், மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்தை இழந்து, திடீரென மாயன அமைதி நிலவியதைக் காண முடிந்தது.

தோல்விக்குப் பின் விராட் கோலி கூறுகையில். “நேர்மையாகச் சொன்னால், நாங்கள் வெற்றியைத் தாரைவார்த்துவிட்டோம். மைதானத்தில் பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்படாததால், இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.

பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தார்கள், ஆனால், பேட்ஸ்மேன்கள் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. டி20 கிரிக்கெட்டில் இலவசம் என்பதைப் போல், வெற்றியை எளிதாக கொல்கத்தாவிடம் கொடுத்துவிட்டோம். இந்த ஆட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை.

அதேநேரம், விளையாடிய விதம் பெருமையாக இருக்கிறது, ஆனால் உயர்ந்த தரத்தில் இல்லை, இதற்கு வெட்கப்படுகிறேன். சில தருணங்களில் ஆட்டத்தை மாற்றக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டோம். கேட்சுகளைத் தவறவிட்டதால் கூடுதலாக 30 முதல் 40 ரன்களை இழக்க நேர்ந்தது” எனத் தெரிவித்தார்

 

 

ஆர்சிபி தோல்விக்கான காரணங்கள்

ஃபா டூப்பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் ஆகிய மும்மூர்த்திகள்தான் அணியின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்து வருகிறார்கள். இந்த 3 பேருமே அல்லது யாரேனும் இருவரும் மிகப்பெரிய ஸ்கோர் செய்யும் போதொல்லம் பெரும்பாலும் ஆர்சிபி வெல்கிறது. இந்த 3 பேட்ஸ்மேன்களும் சொதப்பும்போது ஆர்சிபி அணி தோல்வி அடைகிறது.

ஆர்சிபி அணியில் வலுவான நடுவரிசை பேட்ஸ்மேன்கள் இல்லை. விக்கெட்டை நிலைநிறுத்தி சேஸிங் செய்யவோ அல்லது ரன்களை குவிக்கவோ சரியான வீரர்கள் இந்த 3 பேட்ஸ்மேன்களைத் தவிர இல்லை என்பதே நிதர்சனம்.

இந்த சீசனில் முதல்முறையாக பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. பவர்ப்ளேயில் 58 ரன்களைச் சேர்த்தாலும், டூப்பிளசிஸ்(17), ஷாபாஸ் அகமது(2), மேக்ஸ்வெல்(5) ஆகிய 3பெரிய விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.

IPL 2023: RCB vs KKR

பட மூலாதாரம்,ANI

“கேட்ச் லாஸ், மேட்ச் லாஸ்”

ஒரு போட்டியில் ஒரு வீரர் கேட்சை நழுவவிடுவது ஆட்டத்தின் வெற்றியை நழுவவிடுவதற்கு சமம் என்பார்கள். ஆனால், நேற்று ஆர்சிபி அணி வீரர்கள், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவின் கேட்சை ஒருமுறை அல்ல, 2 முறை தவறவிட்டனர். அந்த கேட்சை தவறவிட்டதற்கு வெற்றியை விலையாகக் கொடுத்தனர்.

13-வது ஓவரில் வியாசக் வீசிய ஓவரில் ராணா 5 ரன்னில் இருந்தபோது கொடுத்த கேட்சை சிராஜ் தவறவிட்டார். அதன்பின் சிராஜ் வீசிய 15வது ஓவரில் ராணா 19 ரன்களில் இருந்தபோது ஹர்சல் படேல் கேட்சைத் தவறவிட்டார்.

இரு கேட்சுகளை தவறவிட்டதால் ராணா ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்து 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.

முதல் வாய்ப்பிலேயே ராணா கேட்சை பிடித்திருந்தால், ஆர்சிபி அணி 43 ரன்களே சேமித்திருக்கும், 2வது வாய்ப்பில் கேட்சைப் பிடித்திருந்தால்கூட 29 ரன்களைத் தடுத்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக கொல்கத்தா அணியின் ஸ்கோரை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆதலால் ஆர்சிபி வீரர்கள் கேட்சைக் கோட்டவிடவில்லை, மேட்சைக் கோட்டைவிட்டனர்.

அபாரமான பந்துவீச்சு

ஆர்சிபி அணியின் பேட்டிங்தான் நேற்று மோசமாக இருந்ததேத் தவிர பந்துவீச்சு இந்த சீசனில் சிறப்பாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, புதிய பந்தில் பந்துவீசும்போது, 7 போட்டிகளில் பவர்ப்ளேயில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

அதிலும் முகமது சிராஜ் இந்த சீசனில் 15 விக்கெட்டுகளுடன் மீண்டும் ஊதா தொப்பியை கைப்பற்றினார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை வைத்துள்ள சிராஜ், 4.9 ஸ்ட்ரைக் ரேட் என குறைவாக வைத்துள்ளார். இந்த சீசனிலேயே 100 டாட் பந்துகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையயைும் சிராஜ் செய்துள்ளார்.

கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

“டிகே” மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா?

தினேஷ் கார்த்திக்(டிகே) மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா என்ற கேள்வி நேற்றைய ஆட்டத்தில் எழுந்துள்ளது. கோலி, டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் சென்றநிலையில், அனுபவமிக்க பேட்ஸ்மேன், ஃபினிஷராக இருக்கும் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடாமல் 22ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாகவும், பல ஆண்டுகள் அணியில் பயணித்த தினேஷ் கார்த்திக் அந்த அணியின் பந்துவீச்சை நன்கு அறிந்தவர். குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தமிழக அணியில் இருந்தபோதே அவரின் பந்துவீச்சை அதிகமாகச் எதிர்கொண்டு ஆடி இருப்பார். ஆனால், நேற்று வருண் பந்துவீச்சில் டிகே விக்கெட்டை இழந்தது வேதனை. அதிலும், அணியில் இக்கட்டான நிலையில் அனுபவமான பேட்ஸ்மேன் பொறுப்பற்ற முறையில் தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்ததால் ஆர்சிபி ரசிகர்கள் டிகே மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் எனத் தெரிகிறது. இந்த சீசனில் டிகே-யின் மோசமான ஃபார்ம், ஆட்டம் தொடர்ந்து வருகிறது.

4 தமிழக வீரர்கள்

இந்த ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடினர். இதில் கொல்கத்தாவில் வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ், ஜெகதீசன் ஆகியோரும் ஆர்சிபியில் தினேஷ் கார்த்திக்கும் இருந்தனர்.

வருண் பந்துவீசும்போதெல்லாம், ஜெகதீசனும், வருணும் தமிழில் உரையாடியது ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்தது. ஆனால், ஜெகதீசன் நேற்று பேட்டிங்கில் சொதப்பியதும், மந்தமாக ஆடியதும் வருத்தத்திற்குரியது. வெங்கடேஷ் பொறுப்புடன் பேட் செய்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

IPL 2023: RCB vs KKR

பட மூலாதாரம்,BCCI/IPL

அதிக டாட் பால்கள்

கொல்கத்தா அணியோடு ஒப்பிடும்போது ஆர்சிபி குறைவான டாட் பந்துகளை நேற்று விட்டும் தோற்றுள்ளது. ஆர்சிபி அணி, 31 டாட் பந்துகளை அதாவது 5 ஓவர்களில் ரன் அடிக்காமல் கடந்தது. ஆனால், கொல்கத்தா அணி 37 டாட் பந்துகளை விட்டும் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை டூப்பிளசிஸ், விராட் கோலி அடித்து நொறுக்கியதை புரிந்துகொண்ட கேப்டன் ராணா விரைவாகவே சுயாஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தியை பந்துவீசச் செய்தார். நடுப்பகுதியில் சுனில் நரேன் பந்துவீச்சு என சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி ஆர்சிபி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியளித்தார்.

அதற்கு ஏற்றார்போல் பவர்ப்ளேக்குள்ளாக டூப்பிளசிஸ், ஷாபாஸ் அகமது விக்கெட்டை சுயாஷ் ஷர்மாவும், மேக்ஸ்வெல் விக்கெட்டை வருணும் வீழ்த்தினர். நடுப்பகுதியில் லாம்ரோர், தினேஷ் விக்கெட்டையும் வருண் கைப்பற்றி அசத்தினார். வருண், சுயாஷ் இருவர் கட்டுக்கோப்பாக பந்துவீசினர், ஆனால், ஃபார்மில் இல்லாத நரேன் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

குறிப்பாக ரஸலின் பந்துவீச்சு கடைசி நேரத்தில் ஆர்சிபிக்கு நெருக்கடியாக இருந்தது. விராட் கோலியின் விக்கெட்டை ரஸல் வீழ்த்தியபோதே, ஆட்டம் கொல்கத்தா அணியின் பக்கம் சென்றது. கோலி ஆட்டமிழந்த அந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும்.

வெற்றிக்கு பின் ராணா சொன்னது என்ன?

வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “ நாங்கள் குழுவாக ஆடத் தொடங்கினால், வெற்றிவந்துவிடும் என்று கடந்த 4 ஆட்டங்களாக நான் தெரிவித்திருந்தேன், அது நடந்துவிட்டது.

ஓய்வறையில் வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் பேசினார்கள், தன்னம்பிக்கையை இழக்காமல் ஆடியது வெற்றிக்கு இட்டுச் சென்றது. சிறந்த ஸ்கோரை அமைத்து, சுழற்பந்துவீச்சால் நம்பிக்கை பெற்றோம். ஆடுகளம் நன்கு உலர்ந்திருந்ததால், நன்றாக பந்துசுழன்றது. சுயாஷ் எந்த நேரத்தில் பந்துவீச அழைத்தாலும் தயாராக இருப்பார், சிறப்பாகப் பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cmmel3e4d6do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கே வீரர்களிடம் 'கேப்டன் கூல்' தோனி கோபப்பட்டது ஏன்? ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடந்து என்ன?

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்தடுத்த 2 தோல்விகளுக்குப் பின், துவண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் 2வது முறையாக சிஎஸ்கே அணியை நேற்று வீழ்த்தி புதிய உற்சாகம் பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் சவாய்மான் சிங் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோற்கடித்துள்ளது.

டாஸ்வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த மைதானத்தில் முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல், (5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்) குவித்தது. 203 ரன்களைத் துரத்திய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து 32 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஜெய்ப்பூர் சவாய்மான் சிங் மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

 

சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் அணிகளைவிட அதிக நிகர ரன்ரேட் (0.939) வைத்திருப்பதால் ராஜஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

ஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்த 5 வெற்றிகளில் 4 வெற்றி என்பது முதலில் பேட் செய்து, எதிரணியை சுருட்டி அதன் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்படித்தக்கது.

சிஎஸ்கே மீது ஆதிக்கம் செய்யும் ராஜஸ்தான்

சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் தொடர்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம், தற்போது ஜெய்பூரில் நடைபெற்ற ஆட்டம் என ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதிய இரண்டு ஆட்டங்களிலுமே சிஎஸ்கே அணி தோல்வியையே தழுவியுள்ளது.

அது மட்டுமல்லாமல் கடந்த 2020ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் 6 முறை மோதியுள்ளன. இதில் 5 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வென்றுள்ளது, ஒருமுறை மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என ஒட்டுமொத்தமாகவே சிறப்பாகச் செயல்பட்டதால்தான் வலிமையான சிஎஸ்கே அணியை வீழ்த்த முடிந்தது.

அதிலும் ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே துணிச்சலான முடிவுகளை எடுத்தது. டாஸ் வென்றதும், மெதுவான ஆடுகளமான ஜெய்ப்பூர் மைதானத்தில் முதலில் பேட் செய்தது, பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி பந்துவீச்சை துவம்சம் செய்ய முடிவு செய்தது, பந்துவீச்சில் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடியளிக்கும் திட்டம் என அனைத்துமே துணிச்சலானவை.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

பட்டாசாக வெடித்த ஜெய்ஸ்வால்

ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்கு எதிராக திட்டமிட்டு “ஹோம் ஓர்க்” செய்து களத்தில் இறங்கியதற்கு முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் யாஹஸ்வி ஜெய்ஸ்வால் (43 பந்துகளில் 77 ரன்கள்) அமைத்துக் கொடுத்த அடித்தளம் முக்கியமானதாகும். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால், பவர்ப்ளேயில் 10 ரன்ரேட்டுக்கு உயர்த்தினார். அணியின் ஸ்கோரை 10 ஓவர்களுக்குள் 100 ரன்களுக்கு கொண்டு சென்றார்.

ஜூரேல், படிக்கல் அதிரடி

நடுப்பகுதியில் நடுவரிசை வீரர்கள் சற்று மந்தமாக பேட் செய்ததால் ராஜஸ்தான் ஸ்கோர் 200 ரன்களுக்குள் குறைந்துவிடும் என்று எண்ணப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜூரேல் (15 பந்துகளில் 34), தேவ்தத் படிக்கல்(13 பந்துகளில் 27) இருவரும் ஆடிய “ கேமியோ” ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தியது.

அதிலும் துருவ் ஜூரேல் இந்த ஐபிஎல் சீசனில்தான் அறிமுகமாகினார். 22வயதான ஜூரேல் இதுவரை தான் களமிறங்கிய ஆட்டங்களில் எல்லாம் கடைசி நேரத்தில் அருமையான கேமியோவை ஆடி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்துள்ளார். அதாவது 32(15பந்துகள்), 8(3), 4(6), 18(10),0(1), 34(16), 34(15) என ஜூரேல் ஃபினிஷராக உருவெடுத்துள்ளார்.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

ஹெட்மயர், சாம்ஸன் ஏமாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் அருமையான தொடக்கத்தை அளித்தனர். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, அவருக்கு துணையாக பட்லர் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர், பட்லர் 27 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த சஞ்சு சாம்ஸன்(17), ஹெட்மயர்(8) இருவருமே ஸ்கோர் செய்யத் தவறினர். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் அதிரடியை நிறுத்தவில்லை, 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், 43 பந்துகளில் 77 ரன்களில் எடுத்திருந்தபோது தேஷ்பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார். அவரது ரன் கணக்கில் 4 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும்.

ஜெய்ஸ்வால், சாம்ஸன் இருவரும் ஆட்டமிழந்தபின் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர் வேகம் திடீரெனக் குறைந்தது. அதாவது 14 ஓவர் முதல் 17-வது ஓவர் வரை வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துருவ் ஜூரேல், படிக்கல் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர், இருவரும் 48 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். ஜூரேல் 34 ரன்னில் தோனியால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

வீரர்களை கடிந்துகொண்ட தோனி

சிஎஸ்கே அணி நேற்று படுமந்தமாக பீல்டிங் செய்தது. பல தருணங்களில் பீல்டிங்கை கோட்டைவிட்டது கேப்டன் தோனிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பலமுறை வீரர்களை சைகை மூலம் தோனி கடிந்து கொண்டார். குறிப்பாக பத்திரனா வீசிய 16-வது ஓவரில் ரன்அடித்து ஓட முயன்றபோது தோனி பீல்டிங் செய்து நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் ரன்அவுட் செய்ய பந்தை எறிந்தார். அப்போது குறுக்கே பத்திரனா வந்து பந்தைப் பிடித்ததால் களத்திலேயே சத்தமிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ‘கேப்டன் கூல்’ தோனி.

முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஸம்பா

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் காயம் காரணமாக விளையாடாததால் அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா நேற்று அற்புதமான பங்களிப்பை வழங்கினார். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட்(47), கான்வே(8), மொயின் அலி(23) என முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்தார். ஆடம் ஸம்பா 3 ஓவர்கள் மட்டுமே வீசி 7 டாட் பந்துகளுடன் 22ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சிஎஸ்கே அணியின் ரன் சேர்ப்புக்கு பெரிய பிரேக் போட்டது என்பது ஆடம் ஸம்பா என்பதில் சந்தேகமில்லை.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

"சிஎஸ்கே-னா அஸ்வினுக்கு அல்வா"

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கியவர் அஸ்வின். ஆனால், அந்த அணியால் கழற்றிவிடப்பட்டத்தில் இருந்து, சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் என்றாலே அஸ்வினுக்கு புதிய உற்சாகம் பிறந்துவிடுகிறது. பந்துவீச்சிலும் துல்லியத்தை வெளிப்படுத்திவிடுகிறார். முடிந்தவரை சிறப்பாகச்செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளிப்பது என அஸ்வினுக்கு சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் என்றாலே அல்வா சாப்பிடுவது போன்று இருக்கிறது.

இந்த ஆட்டத்திலும் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து ரஹானே, ராயுடு ஆகிய இரு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி சிஎஸ்கே பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்தார். அதிலும் அசுர ஃபார்மில் இருக்கும் ரஹானேவுக்கு அருமையான கேரம் பந்துவீசி விக்கெட்டை அஸ்வின் தூக்கினார். ராயுடு வந்த வேகத்தில் ஸ்வீப் ஆட முயன்று அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். இருவரையும் திட்டமிட்டு தூக்கியதுபோல் அஸ்வினின் பந்துவீச்சு இருந்தது.

மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் யஜூவேந்திர சஹலுக்கு நேற்று 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இவரும் கட்டுக்கோப்பாக பந்துவீசியபோதிலும் கூடுதலாக ஓவர்கள் தரப்படவில்லை.

கண்டுகொள்ளப்படாத சந்தீப் சர்மா

இந்திய அணியால் இன்னும் கண்டு கொள்ளப்படாத வேகப்பந்துவீச்சாளராகவே சந்தீப் சர்மா உள்ளார். மாற்றுவீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை ஏலத்தில் விலைக்கு வாங்கியது. ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திலும் சந்தீப் சர்மா பந்துவீச்சு அற்புதமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்திலும் துல்லியமான யார்கர்கள், லைன் லென்த்தில் வீசிய சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி10 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்டாக மாறினார். இவருக்கு துணையாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் வீசிய 18 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்தினார்.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

ஹோல்டர் வீணாக்கப்படுகிறாரா?

ஜோஸன் ஹோல்டர் மட்டும் நேற்றை ஆட்டத்தில் ரன்களை சற்று வாரி வழங்கியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சாளராகவே பயன்படுத்தி அவரை வீணாக்கி வருவது வேதனையானது. ஹோல்டர் பேட்டிங், ஆல்ரவுண்டர் என்பதையே அந்த அணி மறந்துவிட்டது. பந்துவீச்சைவிட பேட்டிங்கில் ஹோல்டர் சிறப்பாக ஆடக்கூடியவர், நேற்றைய ஆட்டத்தில்கூட அஸ்வினுக்கு பதிலாக ஹோல்டரை களமிறக்கி கேமியோ ஆட வைத்திருக்கலாம்.

சிஎஸ்கே-வின் பலவீனத்தை கச்சிதமாக ஊகித்த ராஜஸ்தான்

சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மந்தமாக ஆடக்கூடியவர்கள் எனக் கணித்து நேற்றைய ஆட்டத்தில் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் ராஜஸ்தான் களமிறங்கியது வெற்றிக்கு முதல் காரணமாகும்.

டாஸ் வென்றவுடன் பேட் செய்து,சேஸிங்கில் வலிமையான சிஎஸ்கேவை சுருட்ட திட்டமிட்ட துணிச்சலான முடிவு, தொடக்கத்தில் இருந்தே ஜெய்ஸ்வாலின் அதிரடி ரன் குவிப்பு ஆகியவையும் காரணமாகும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பெரிதாக பீல்டிங்கில் கோட்டை விடவில்லை, ரன்களை முடிந்தவரை கட்டுப்படுத்தி பீல்டிங் செய்ததும், கேட்சுகளை நழுவவிடாமல் பிடித்ததும் சிஎஸ்கே அணியின் ரன்குவிப்பையும், விக்கெட் சரிவையும் ஏற்படுத்தியது.

அட்டாக்..அட்டாக் மட்டுமே

வெற்றிக்கு பின் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், "இந்த வெற்றி எங்களுக்கு அவசியமானது. ஜெய்ஸ்வால், தேவ்தத், ஜூரேல் ஆகியோர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. ஓய்வறையில் நாங்கள் பேசியது, எதிரணியை அட்டாக் செய்வது, அட்டாக் அட்டாக் மட்டும்தான். பேட்டிங்கில் துவம்சம் செய்வது மட்டும்தான் வெற்றியை எளிமையாக்கும் என ஆலோசித்தோம். அதை செய்தோம். எங்கள் வெற்றிக்கு பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது, ஜெய்ஸ்வால் ஆடிய விதம் குறித்து பெருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனியின் தவறான முடிவுகள்

ஜெய்ப்பூர் மைதானம் மெதுவான ஆடுகளம். இங்கு வேகப்பந்துவீச்சு பெரிதாக எடுபடாது, சுழற்பந்துவீச்சு அதிலும் மெதுவாக வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் எனத் தெரிந்தும் வேகப்பந்துவீச்சுக்கு தோனி முக்கியத்துவம் கொடுத்தார்.

சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் பதிரண அல்லது ஆகாஷ் சிங்கிற்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னரை களமிறக்கி இருந்தால், ராஜஸ்தான் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

சிஎஸ்கே அணியில் இருக்கும் வழக்கமான சுழற்பந்துவீச்சாளர்களான தீக்சனா, ஜடேஜா இருவருமே நேற்று ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசியதால் சான்ட்னரும் சேர்க்கப்பட்டிருந்தால் கூடுதல் பலமாகியிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் மொயின் அலி நேற்று 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அவருக்கு கூடுதலாக 2 ஓவர்களை வழங்காமல் தோனி தவிர்த்துவிட்டது தவறான முடிவாகும். மொயின் அலி ரன்களை வழங்கினாலும் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்.

பதிரண பந்துவீச்சு- தோனி சொன்னது என்ன?

சிஎஸ்கே கேப்டன் தோனி பேசும்போது, "இந்த ஸ்கோர் சற்று அதிகமானதுதான். நாங்கள் அதிகமான சிக்ஸர்களை வழங்கிவிட்டோம். அதேசமயம், ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. நடுப்பகுதியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டார்கள், ஆனால், பல பவுண்டரிகள் பேட்டின் முனையில்பட்டு சென்றன. பவர்ப்ளேயில் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை.

பதிரண நன்றாகப் பந்துவீசுகிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் மோசமாக செயல்படவில்லை. அவர் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாலும் ஸ்கோர்கார்டில் அது பிரதிபலிக்கவில்லை என்ரு நினைக்கிறேன். ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பாக பேட் செய்தனர். எனக்கு இந்த மைதானம் முக்கியமானது, விசாகப்பட்டினத்தில் நான் அடித்த எனது முதல் ஒரு நாள் சதம், எனக்கு கூடுதலாக 10 ஆட்டங்களைப் பெற்றுக்கொடுத்தது. ஆனால்,இந்த மைதானத்தில் நான் அடித்த 183 ரன்கள், எனக்கு மேலும் ஒரு வருடத்தை பெற்றுக்கொடுத்தது. மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

ஏமாற்றம் அளித்த பேட்ஸ்மேன்கள்

200 ரன்களுக்கு மேல் சேஸிங் என்றாலே பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி, ரன்ரேட்டை உயர்த்தினால்தான் வெல்ல முடியும். நடுப்பகுதி ஓவர்களையோ அல்லது கடைசி ஓவர்களையே நம்ப இருத்தல்கூடாது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, பவர்ப்ளேயில் 1 விக்கெட்டை இழந்து 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

டேவிட் கான்வே ஆட்டமிழந்தது மிகப்பெரிய பலவீனமாகும். அடுத்துவந்த ரஹானே அசுர ஃபார்மில் இருந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு எதிரான அவரின் பேட்டிங் பலவீனமாகும். ரஹானே இந்த சீசனில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 48 பந்துகளைச் சந்தித்து 122 ரன்களைக் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 254 வைத்துள்ளார். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்த அளவு ரன் குவிக்கவில்லை.

ரஹானே(15) ரன்னில் ஆட்டமிழந்தது, அடுத்துவந்த நம்பிக்கை நாயகர் ராயுடு டக்அவுட்டில் வெளியேறிது என முக்கியத்தூண்கள் வீழ்ந்தது சிஎஸ்கே அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. களத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் நிதானமாக ஆடிய கெய்க்வாட்டும் 47ரன்னில் நடையைக் கட்டியது, தேவைப்படும் ரன்ரேட்டை அதிகப்படுத்தியது.

நடுவரிசையில் ஷிவம் துபே, மொயின் அலி இருவரும் ஆடத் தொடங்கியபோது, சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. 9 ஓவர்களில் வெற்றிக்கு 130 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் துபேவின் சரவெடி ஆட்டம், மொயின்அலியின் டைமிங் ஷாட்கள் ஆகியவை ரன்களை குவித்தன. இந்த ஜோடி, அடுத்த 3 ஓவர்களில் 4சிக்ஸர்கள், 4பவுண்டரிகளை அடித்ததால் ரன்ரேட்எகிறியது.

கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் சிஎஸ்கே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், மொயின் அலி விக்கெட்டை பறிக்க அழைக்கப்பட்ட ஸம்பா அதை கச்சிதமாகச் செய்து முடித்தார். கடைசிவரை போராடிய துபே 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து(4சிக்ஸர்,2பவுண்டரி) ஆட்டமிழந்தார். இந்த சீசனில் துபே தொடர்ச்சியாக அடித்த 3வது அரைசதமாகும்.

IPL CSK vs RR

பட மூலாதாரம்,BCCI/IPL

150 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரண

சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிரண நேற்று 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் என வாரி வழங்கினாலும், பந்துவீச்சில் அதிகரிக்கும் வேகம் கேப்டன் தோனிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. எதிர்காலத்தில் அணிக்காக வலிமையான வேகப்பந்து வீச்சாளரை தயார் செய்து வருகிறது சிஎஸ்கே. சிஎஸ்கேவுக்கு பதிரண தயாராகிறாரோ இல்லையோ வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியில் பதிரணவுக்கு இடம் கிடைப்பது நிச்சயம்.

சிஎஸ்கே-வை தொடரும் மஞ்சள் படை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த தொடரோடு ஓய்வுப் பெறக்கூடும் என பேசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக சிஎஸ்கே விளையாடும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் படை (ரசிகர்கள்) அதிகமாக குவிந்து விடுகின்றனர். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈடன் கார்டன் மைதானமா அல்லது சேப்பாக்கம் மைதானமா என கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு தோனிக்காக ரசிகர்கள் குவிந்தனர். இந்த ஆட்டத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைவிட, சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c728d8n3n4lo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல். சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த லக்னௌவின் 'சூப்பர்' ஆட்டம் - பஞ்சாப் வியூகம் தகர்ந்து போனது எங்கே?

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மொஹாலியில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இமாலய வெற்றியை லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பெற்றது. இதன் மூலம் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலிருந்து 2வது இடத்துக்கு முன்னேறி அனைத்து அணிகளுக்கும் சவால் விடுத்துள்ளது.

‘தோற்கப்போகிறோம்’ எனத் தெரிந்து கொண்டு சேஸிங்கில் ஒரு அணி களமிறங்கினால் அந்த ஆட்டம் ஸ்வாரஸ்யமாக இருக்குமா என்ன!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. 258 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து 56 ரன்களில் தோல்வி அடைந்தது.

2வது இடத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்த இமாலய வெற்றியின் மூலம் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. 8 போட்டிகளில் ஆடிய லக்னெள அணி 5 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் அபாரமாக முன்னேறி 2வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. அதேசமயம், 10 புள்ளிகளுடன் இருந்தாலும், சிஎஸ்கே அணி நிகர ரன்ரேட் அடிப்படையில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதலிடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3வது இடத்திலும் உள்ளன.

 

படைக்கப்பட்ட சாதனைகள் என்ன?

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சேர்த்த 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் என்பது ஐபிஎல் வரலாற்றில் 2வது மிகப்பெரிய ஸ்கோராகும். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸுக்கு எதிராக ஆர்சிபி அணி 5விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்தில் கெய்ல் 175 ரன்கள் அடித்தது ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நெருங்கக்கூட முடியாத சாதனையாக தொடர்கிறது.

இதேபோல், நடப்பு தொடரில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து 458 ரன்களை சேர்த்தன. ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகப்பட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 19 முறை அணிகள் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துள்ளன. கடந்த சீசனில் 18 முறையாக இருந்தது.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

பேட்ஸ்மேன்களின் வெற்றி

லக்னெள அணிக்கு கிடைத்த வெற்றி என்பது பேட்ஸ்மேன்களுக்கான வெற்றியாகும். குறிப்பாக ஸ்டாய்னிஸ்(40 பந்துகளில் 72), மேயர்ஸ் (24 பந்துகளில் 54), பதோனி(24 பந்துகளில் 43), நிகோலஸ் பூரன்(19 பந்துகளில் 45) ஆகியோரின் அட்டகாசமான அதிரடி ஆட்டம்தான் இமாலய ஸ்கோருக்கு காரணமாகும்.

257 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டிவிட்டபோதே, லக்னெள அணியின் வெற்றியும் உறுதியாகிவிட்டது.

இந்த ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பேட்ஸ்மேன்கள் 27 பவுண்டரிகள், 14 சிக்ஸர்களை விளாசினர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த 3வது அணியாகும்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 45 பவுண்டரிகளும் 22 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய பாதிப்பை புள்ளிப்பட்டியலில் ஏற்படுத்தியுள்ளது. 8 புள்ளிகள் எடுத்திருந்த போதிலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் 7வது இடத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

“கில்லர்” கைல்

கைல் மேயர்ஸ் தொடக்கத்தில் இருந்தே தனது சரவெடி ஆட்டத்தை காண்பித்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசிய மேயர்ஸ், அறிமுக வீரர் குர்னூர் பிரார் ஓவரில் ப்ரீஹிட்டில் மிட்விக்கெட்டில் இமாலய சிக்ஸரை விளாசினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர் சிக்கந்தர் ராசா வந்தபோதிலும், 5வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை மேயர்ஸ் குவித்து 20 பந்துகளில் அரைசதம் அடித்து 54ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் மேயர்ஸ் 4வது அரைசதமாகும், அதில் 2 அரைசதங்கள் பவர்ப்ளே ஓவருக்குள் அடிக்கப்பட்டவவை.

வாய்ப்பை தவறவிட்ட ராகுல்

கேப்டன் ராகுலுக்கு கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் தவறவிட்ட போதிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை. 12 ரன் அடித்த நிலையில் ரபாடா ஓவரில் ராகுல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பவர்ப்ளே ஓவரில் லக்னெள அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 74 ரன்கள் குவித்து.

அதன்பின், பதோனி, ஸ்டாய்னிஸ் கூட்டணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பஞ்சு, பஞ்சாகப் பிய்த்து உதறியது. நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 12 ஓவர்களில் மட்டும் லக்னெள அணி ஒரு விக்கெட்டை இழந்து 126 ரன்களைக் குவித்தது. இதில் 10பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஸ்டாய்னிஷ் விளாசல்

இந்த ரன் சேர்ப்புக்கு ஸ்டாய்னிஸ், பதோனியின் விளாசல் முக்கியக் காரணமாகும். குறிப்பாக ஸ்டாய்னிஸ் இந்த சீசனில் 7 இன்னிங்ஸில் 5 இன்னிங்ஸ்களில் 21 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருந்தார்.

அனைத்துக்கும் சேர்த்துவைத்து இந்த ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் வெளுத்து வாங்கினார். ஆர்சிபி அணிக்கு எதிராக 213 ரன்களை சேஸிங் செய்தபோது, 30 பந்துகளில் 64 ரன்களை சேர்த்ததுபோன்று இந்த ஆட்டத்திலும் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் அனல் பறந்தது.

31 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்டாய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு பதோனி-ஸ்டாய்னிஸ் கூட்டணி 89 ரன்களைக் குவித்தனர்.

பதோனி, பூரனின் சரவெடி ஆட்டம்

ஆயுஷ் பதோனியின் ஆட்டத்திலும் நேற்று அனல் பறந்தது. இந்த சீசனில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை 180 ஆக வைத்துள்ள பதோனி, சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி பஞ்சாப் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார். 23 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பதோனி 3 பவுண்டரி 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

அடுத்துவந்த நிகோலஸ் பூரன் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரிகளை பூரன் விளாசி ரன்ரேட்டை எகிறச் செய்தார். நிகோலஸ் பூரன் 19பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், அவரின் ஆட்டம் மிகவும் ஸ்டைலாக இருந்தது. பீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி பார்த்து, டைமிங் ஷாட்டில் பவுண்டரிகளை பூரன் நகர்த்தினார். 7 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் பூரன் விளாசினார். பூரன்-ஸ்டாய்னிஸ் கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், பதோனி, பூரன் ஆகியோரின் மெய்சிலிர்க்கும் அதிரடி ஆட்டத்தால் லக்னெள அணி 15.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களை விரைவாக எட்டிய 2வது அணி என்ற பெருமையை லக்னெள அணி பெற்றது. 2016-ல் ஆர்சிபி அணி பஞ்சாப் அணிக்கு எதிராக 14.1 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. 2013ல் ஆர்சிபி அணி 15.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் லக்னெள அணி 2 ஓவர்களைத் தவிர 18 ஓவர்களிலும் குறைந்தபட்சம் 2 பவுண்டரிகளை அடித்திருந்தது. குர்னூர் வீசிய முதல் ஓவரிலும் ராகுல் சாஹர் வீசிய 9-வது ஓவரிலும் பவுண்டரி இல்லாமல் லக்னெள இருந்தது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் பவர் ப்ளேயில் லக்னெள அணி 74 ரன்களையும், நடுப்பகுதியில் 7 முதல் 15 ஓவர்கள்வரை 126 ரன்களையும், கடைசி 4ஓவர்களில் 57 ரன்களையும் விரைவாகச் சேர்த்ததே இமாலய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு காரணங்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவண், வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இருவரும் காயத்திலிருந்து குணமடைந்து நேற்று விளையாடியும் மோசமான தோல்வியைச் சந்தித்தனர்.

லக்னெள அணியின் ரன் குவிப்பைப் பார்த்த கேப்டன் ஷிகர் தவண் முகத்தில் ஒருவிதமான பதற்றமும், அச்சமும் காணப்பட்டது. “இந்த ஸ்கோரை எப்படி சேஸிங் செய்யப் போகிறோம் என்ற அவரின் மைண்ட் வாய்ஸ்” அவரின் ஆட்டத்திலேயே தெரிந்தது. அதனால்தான், ஸ்டாய்னிஷ் வீசிய முதல் ஓவரிலேயே 2 ரன்னில் தவண் விக்கெட்டை இழந்தார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் நவீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளயேில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தனர்.

வள்ளல்களாகிய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் நேற்று மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது தோல்விக்கு முதல் காரணமாகும். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகமோசமான பந்துவீச்சாக இது அமைந்தது. ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சராசரியாக ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர்.

அதிலும் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். ரபாடா பந்துவீச்சும் நேற்று தப்பவில்லை, 4 ஓவர்களில் 52 ரன்களை ரபாடா வாரி வழங்கி வள்ளலாகினார். குர்னூர் பிரார் 42, சாம் கரன் 38 என வஞ்சகமில்லாமல் ரன்களை லக்னெளவுக்கு வாரிக் கொடுத்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நேற்று 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 184 ரன்களை வாரி வழங்கியிருந்தார்கள். இதற்கு முன் 2014ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொஹாலி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், மெதுவாகப் பந்துவீசுவோருக்கும் ஏற்றது. இதில் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் தவண் களமிறங்கியது தவறாகும். ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குப் பதிலாக 3வது சுழற்ப்பந்துவீச்சாளர் இருந்திருந்தால், லக்னெள ரன் குவிப்பைக் குறைத்திருக்கலாம்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

அழுத்தம், நெருக்கடி

200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கு ஒருவித அழுத்தம் ஏற்படும் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை துரத்தும் போது சொல்லவா வேண்டும்? நெருக்கடி, அழுத்தம், தேவைப்படும் ரன்ரேட் திரையில் தெரியும்போதெல்லாம் படபடப்பு ஆகியவை விக்கெட்டை பறிகொடுக்கவைத்து நிலை குலையச் செய்யும். அதுதான் இந்த ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களுக்கு நேர்ந்தது.

ஆறுதல் அளித்த அதர்வா ஆட்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆட்டத்தில் ஆறுதலான ஒரு விஷயம் என்னவென்றால் அதர்வா டைடேவின் அதிரடி ஆட்டம்தான். மிகப்பெரிய ஸ்கோரை நெருங்க முடியாது என்றபோதிலும் அதை துரத்தும் முயற்சியில் இருந்த டைடே 36 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும்.

இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக பேட் செய்த சாம் கரன் 21 ரன்னில் நவீன் பந்துவீச்சில் ஸ்லோ பந்துக்கு விக்கெட்டை இழந்தார். சிக்கந்தர் ராசா 36, ஜிதேஷ் சர்மா 3 சிக்ஸர் உள்ளிட்ட 24 ரன்களைச் சேர்த்தாலும் இலக்கை எட்ட முடியவில்லை. ஆனாலும் 200 ரன்களைக் கடந்துவிட்ட மனநிறைவுடன் தோல்வியைத் தழுவியது பஞ்சாப் அணி.

முக்கியமாக தமிழக வீரர் ஷாருக்கான் சிறந்த ஹிட்டர். பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர். நின்ற இடத்திலேயே சிக்ஸர் அடிக்கும் வலிமை கொண்ட ஹிட்டர்களை 8வது இடத்தில் களமிறக்கி கேப்டன் தவண் வீணடித்தார். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கேமியோ ஆடுவதற்கு ஷாருக்கானை முன்கூட்டியே களமிறக்காமல் தவறவிட்டனர்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஏமாற்றம் அளித்த லிவிங்ஸ்டன்

பெரிய ஷாட்களை அடிக்கும் திறமையுடைய லிவிங்ஸ்டன், சாம் கரன், கேப்டன் தவண் ஆகியோர் நிலைத்து பேட் செய்திருந்தால், பஞ்சாப் அணி இலக்கை நெருங்கியிருக்கும், மனது வைத்திருந்தால் வென்றிருக்கவும் முடியும்.

10 ஓவர்களில் வெற்றிக்கு 165 ரன்கள், 7ஓவர்களில் 131 ரன்கள் என தேவைப்படும் ரன்ரேட் உயர, உயர பஞ்சாப் அணியின் விக்கெட் விழும் வேகம் அதிகரித்தது. 152 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி, அடுத்த 49 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

விலை கொடுத்துள்ளோம்

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண் கூறுகையில் “ அதிகமான ரன்கள் வழங்கியதற்கு விலை கொடுத்துள்ளோம். கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்து ஆடியது எங்களுக்கு ஃபேக்பயராக மாறிவிட்டது. ராகுல் கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை பயன்படுத்தினார்.

பல மாற்றங்களை பந்துவீச்சில் நான் கொண்டுவர முயன்றும் தோல்வியில் முடிந்தது, ஏதும் நடக்கவில்லை. எனக்கு நல்ல அனுபவப் பாடம், வலிமையோடு திரும்பி வருவோம். ஷாருக்கானை 8வது வீரராக களமிறக்க எந்த காரணமும் இல்லை. லிவிங்ஸ்டன், சாம் கரன் இருவருமே நல்ல ஹிட்டர்கள் என்பதால் ஷாருக்கான் 8வது வீரராக களமிறங்கினார். சில நேரங்களில் இம்பாக்ட் ப்ளேயர் திட்டம் வெற்றி பெறுகிறது, சில நேரங்களில் தோல்வி அடைகிறது” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே-வை எப்படி எதிர்கொள்ளும்?

மிகப்பெரிய ஸ்கோரை துரத்தி தோல்வி அடைந்து துவண்டுள்ள, பஞ்சாப் அணி, நாளை சிஎஸ்கே அணியை சென்னையில் சந்திக்கிறது. ஏற்கெனவே பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை வீழ்த்த பஞ்சாப் அணிக்கு சிறப்பான, சரியான திட்டமிடல் அவசியமாகும்.

ஐபிஎல்: லக்னௌ- பஞ்சாப்

பட மூலாதாரம்,BCCI/IPL

9 பந்துவீச்சாளர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்று நிகர ரன்ரேட்டை உயர்த்துவதற்காக லக்னெள கேப்டன் கேஎல் ராகுல் நேற்று 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். விக்கெட் கீப்பர் பூரன், கேப்டன் ராகுல், தீபக் ஹூடா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் நேற்று பந்துவீசினார்கள்.

இதில் யாஷ் தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

சேஸிங் செய்திருப்போம்

லக்னெள கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில் “ டாஸ் வென்றிருந்தால் நாங்கள் சேஸிங் செய்திருப்போம். கடந்த ஆட்டத்தில் எங்கள் நம்பிக்கை சிறிது தளர்ந்துவிட்டது, 4 நாட்கள் இடைவெளி எங்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. அனைவரின் மனதும் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வெடுத்தது.

மொஹாலியில் நாங்கள் மீண்டும் விளையாட வந்தபோது, ஆடுகளம் மாறியிருந்தது. இதுபோன்ற ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உற்சாகத்தை வரவழைக்கும். 250 ரன்களுக்கு மேல் ரன் குவிப்பு என்பது எங்கள் பேட்டிங்கின் வலிமை. தொடக்கத்திலேயே பந்துவீச்சாளர்கள் மீது மேயர்ஸ் ஆதிக்கம் செலுத்தி, அடித்தளம் அமைத்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக வியூகம் அமைக்க அதிகநேரம் செலவிட்டோம். கைல் மேயர்ஸ், பூரன், ஸ்டாய்னிஸ் ஆகிய 3 பவர் ஹிட்டர்ஸ் அவர்கள் பணியை சிறப்பாகச் செய்தார்கள்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c1rl0n20e9jo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'பீனிக்ஸ் பறவைகள்' ரஹானே, இஷாந்த், பியூஷ் ஆகிய சீனியர் வீரர்கள் மீண்டு வந்தது எப்படி?

ஐபிஎல் கிரிக்கெட்

பட மூலாதாரம்,R.SATISH BABU

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பராக் பதாக்
  • பதவி,பிபிசி மராத்தி சேவை
  • 28 ஏப்ரல் 2023

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில், 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே அது அவர்கள் விளையாட்டுப் பயணத்தின் இறுதிக் கட்டம் என்று கருதப்படுகிறது. டி20 வகை கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த முறை ஐபிஎல் சற்று வித்தியாசமானது.

கேரீரின் கடைசி கட்டத்தில் இருக்கும் பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் ரஹானே, அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் உள்ளனர்.

அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் தொடரில் சதம் அடித்து அதிக ரன்களை குவித்து, இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய வீரர். ஆனால் இந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்தது.

 

காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் ஒரு புதிய அவதாரம் எடுத்தார்.

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கொச்சியில் நடந்த ஏலத்தில் இவரை எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே ஆர்வம் காட்டியது.

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாகச் செயல்படாத நிலையில், ரஹானேவுக்கு வாய்ப்பு கொடுக்க மற்ற அணிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், ரஹானே தனது அடிப்படை விலையான ரூ 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அவரது போராட்டம் இத்துடன் ஓயவில்லை. மார்ச் 27 அன்று, பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது, அதில் அஜிங்க்யா ரஹானேவின் பெயர் இல்லை.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட முடியவில்லை. மொயின் அலியும் உடல் தகுதி பெறவில்லை. இதன் காரணமாக ரஹானேவுக்குப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

இப்போட்டியில் சென்னை அணி மும்பையை 157 ரன்களுக்குச் சுருட்டியது. இந்த இலக்கு மிகப்பெரியதாக இல்லையெனினும், முதல் ஓவரிலேயே கான்வேயிடம் விக்கெட்டை இழந்தது சென்னை.

ஸ்டோக்ஸ் அணியில் இல்லை. காயம் காரணமாக தோனி கடைசியாக பேட்டிங் செய்ய இறங்குகிறார். அத்தகைய சூழ்நிலையில், பவர்பிளே ஓவர்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வது அவசியமாக இருந்தது.

அந்தப் போட்டியில் அஜிங்க்யா ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அந்த இன்னிங்ஸ் தான் சென்னையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

2020க்குப் பிறகு ஐபிஎல்லில் அவர் அடித்த முதல் அரை சதம் இதுவாகும்.

கொல்கத்தாவுக்கு எதிராக அஜிங்க்யா 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஹானே.

இந்த இன்னிங்ஸ் சென்னையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

ரஹானே தனது தனிச் சிறப்பு வாய்ந்த, பாரம்பரிய பாணிக்குப் பெயர் பெற்றவர். அவர் நிச்சயமாக அதிரடியாக ரன்களை எடுக்கக்கூடியவர் தான் என்றாலும், சிறப்பான எந்த ஒரு ஸ்ட்ரோக்கையும் அடிப்பதில்லை. ரஹானேவின் பேட்டிங்கை பார்ப்பது எப்போதும் பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவமாக இருந்து வருகிறது.

இந்த சீசனில், அவரது அணுகுமுறை வித்தியாசமாகப் பரிமளிக்கிறது. அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடி வருகிறார்.

ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியை பிசிசிஐ தேர்வு செய்தது, அதில் அஜிங்க்யா ரஹானே பெயர் இடம் பெற்றுள்ளது.

காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் விளையாட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், சிறந்த பார்மில் விளையாடிய இவரது அனுபவம் அணிக்கு முக்கியமானது.

ரஹானேவின் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது. இவரது ஐபிஎல் சிக்ஸர்களால், இந்திய அணியின் கதவு திறந்தது

இஷாந்த் ஷர்மா

ஐபிஎல் கிரிக்கெட்

பட மூலாதாரம்,NOAH SEELAM

இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா, தற்போது டீம் இந்தியாவில் இடம் பெறுவது கடினமாக உள்ளது. பிசிசிஐயின் நம்பிக்கையை அவர் பெறவில்லை போலத் தோன்றுகிறது.

சமீபத்தில், பிசிசிஐ தனது வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷாந்தை நீக்கியது.

இரண்டு ஆண்டுகளாக இஷாந்த் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த அனுபவமிக்க பந்து வீச்சாளர் மீண்டும் இடம்பெறக் கடுமையாக உழைத்தார்.

டெல்லி அணியின் ஆரம்ப ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், இஷாந்துக்கு வாய்ப்பு அளிக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்தது.

இஷாந்த் மீண்டும் களமிறங்கியது மட்டுமின்றி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இஷாந்த் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லியின் அருண் ஜெட்லி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இஷாந்தின் அன்னை பூமி போன்றது.

இங்கு விளையாடிய அனுபவம் உள்ள இஷாந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவை வீழ்த்தினார். ராணா பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ராணா, இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

அவரை அவுட் செய்து கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தார் இஷாந்த். பிஞ்ச் ஹிட்டராக ஆட வந்த சுனில் நரைனையும் இஷாந்த் அவுட்டாக்கினார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் டெல்லி இஷாந்தை நம்பியது. மூன்று ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து ராகுல் திரிபாதியின் விக்கெட்டை இஷாந்த் கைப்பற்றினார்.

இஷாந்த் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

34 வயதான இஷாந்த் இன்னும் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறுவதில்லை என்று நிரூபித்துள்ளார்.

ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 50 லட்சம் கொடுத்து இஷாந்தை அணியில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கெரீரின் கடைசி கட்டத்தில் இருக்கும் இஷாந்த், பௌண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கிடையில், டி 20 -ல் தன்னை நிரூபிக்க முடியுமா என்ற ஐயப்பாடு எழுந்தது.

இஷாந்த் போன்ற மூத்த வீரர்கள் இம்பேக்ட் பிளேயர் போல் 40 ஓவர்கள் முழுவதுமாக விளையாட வேண்டிய அவசியமில்லை.

நான்கு ஓவர்கள் பந்து வீசிய பிறகு, அவருக்கு பேட்ஸ்மேன் என்ற இடம் வழங்கப்படுகிறது.

முதலில் பேட்டிங்க் என்றால், ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதிலாகப் பின்னர் அவருக்கு இடம் வழங்கப்படும். ஐ பி எல்-ல் முதல் பட்டியலிலேயே இடம் பெறும் குறிப்பிட்ட சிலருக்குள் இஷாந்தும் ஒருவர்.

மோஹித் ஷர்மா

ஐபிஎல் கிரிக்கெட்

"நெட் பந்துவீச்சாளராக இருப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல. பெரிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கும். உடற்தகுதியை பராமரிக்க வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டுடன் தொடர்பில் இருப்பது தான் எனக்கு முக்கியம். எங்கள் அணி ஐபிஎல் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றதால், நெட் பௌலர் என்பதில் எனக்கு வருத்தமில்லை. நாங்கள் மிகச் சிறப்பாக அந்த வெற்றியைக் கொண்டாடினோம். அணியும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை." - இவை மோஹித் ஷர்மாவின் வார்த்தைகள்.

மோஹித் ஷர்மாவின் பெயர் கிரிக்கெட் பிரியர்களுக்கு புதிதல்ல. 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோஹித் ஷர்மா பர்பிள் கேப் விருதை வென்றார்.

ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்களுக்கு ஊதா நிறத் தொப்பி வழங்கப்படும்.

2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணியில் மோஹித் இடம்பெற்றார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது, மகேந்திர சிங் தோனி டெத் ஓவர்களுக்கு அவரை வெகுவாக நம்பினார்.

சென்னையைத் தொடர்ந்து மோஹித் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அவரது ஃபார்ம் குறைந்துவிட்டது.

பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். 2020 மற்றும் 2021 ஐபிஎல் சீசன்கள் உட்பட நான்கு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

2022 சீசனுக்கான ஏலத்தில் அவருக்கு எந்த அணியும் இடம் கொடுக்கவில்லை.

புதிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அவரை அழைத்தார்.

நெட் பௌலராக அணியில் சேர முடியுமா என்று கேட்டார்.

முதுகு அறுவைசிகிச்சைக்குப் பிறகு திரும்பி விளையாடத் தயாரான மோஹித், நெஹ்ரா அளித்த இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர், முன்னணி பந்துவீச்சாளராக விளையாடிய அனுபவம் கொண்ட மோஹித், நெட் பௌலரானார். அதாவது, பேட்ஸ்மேன்களின் பயிற்சியின் போது, இளம் பந்துவீச்சாளர்களை பந்துவீச வைக்கிறார்கள். மோஹித் இந்தப் பணியைத் திறம்படச் செய்தார்.

2023 சீசனுக்கு முன் நடந்த ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் மோஹித் சேர்க்கப்பட்டார்.

தொடக்க ஆட்டங்களில் மோஹித்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் மோஹித் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தப் பந்துவீச்சிற்காக மோஹித் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

ஏப்ரல் 22 அன்று, மோஹித் மற்றொரு சாதனையை நிகழ்த்தினார்.

லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தின் ஸ்லோ பிட்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி 135 ரன்கள் எடுத்தது.

இந்த இலக்குடன் அடுத்து ஆடிய லக்னோ அணி தடுமாறியது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

கே.எல்.ராகுலையும், மார்கஸ் ஸ்டோயின்ஸையும் ஆட்டமிழக்கச் செய்து மோஹித் சர்மா ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு, குஜராத் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

மோஹித் மீண்டும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

சந்தீப் ஷர்மா

ஐபிஎல் கிரிக்கெட் டி20

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன் நடந்த ஏலத்தில் சந்தீப் ஷர்மாவின் பெயர் வந்ததால், அவரை அணிகள் ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை.

ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சந்தீப்பின் அனுபவம் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் சந்தீப் ஏமாற்றம் அடையவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, காயம் காரணமாக போட்டியிலிருந்து முற்றிலும் விலகினார். கால விரயம் செய்யாமல், உடனடியாக, சந்தீப்பைச் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

சென்னைக்கு எதிரான போட்டியில் சந்தீப் தனது வாழ்க்கையில் மிக முக்கியமான பந்து வீச்சைப் பதிவு செய்தார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சென்னை அணிக்கு 6 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

ஆடுகளத்தில் மகேந்திர சிங் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் இருந்ததால் சென்னை ரசிகர்கள் வெற்றியை எதிர்பார்த்தனர்.

சந்தீப்பின் முதல் பந்து வைட் ஆனது. இரண்டாவது பந்தும் வைட் ஆனது. இதனால் சந்தீப் மீதான அழுத்தம் அதிகரித்தது.

ஆனால் மூன்றாவது பந்து டாட் பால் ஆனது. தோனி போன்ற ஃபினிஷருக்கு முன்னால் சந்தீப் யார்க்கரை வீசினார்.

இரண்டாவது பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். பந்துகளில் 13 ரன் தேவை என்றானது. மூன்றாவது பந்தில் தோனி மேலும் ஒரு சிக்சர் அடித்தார்.

சந்தீப் தடுமாறினாலும், நான்காவது பந்தில் ஒரு சிங்கிள் ரன் மட்டுமே தோனி ஒட முடிந்தது.

ஐந்தாவது பந்தில் ஜடேஜாவும் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் சென்னைக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. மைதானம் முழுவதும் தோனிக்காக கோஷம் எழுப்பியது.

ஒரு சிறிய தவறு கூட தோனிக்கு சிக்ஸரைக் கொடுத்திருக்கலாம். ஆனால் சந்தீப் தனது யார்க்கர் பந்தை நம்பினார்.

தோனி இறக்கி அடிக்க முயன்றார். ஆனால் மீண்டும் ஒரு சிங்கிள் ரன் மட்டுமே சாத்தியமானது.

கடவுளுக்கு நன்றி சொல்லி சந்தீப் வானத்தைப் பார்த்தார். தோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேனை வெற்றியிலிருந்து விலக்கி வைத்தார் சந்தீப்.

ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்தப் பந்து வீச்சாளர் அந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில், தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பியூஷ் சாவ்லா

ஐபிஎல் கிரிக்கெட்

34 வயதான பியூஷ் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் பியூஷ் மீது ஆர்வம் காட்டியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் பியூஷின் சுழற்பந்து வீச்சு பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

ஏப்ரல் 22ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இது நிரூபணம் ஆனது.

பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தது. பியூஷ் சாவ்லாவைத் தவிர அனைத்துப் பந்து வீச்சாளர்களின் பந்துகளும் எதிரணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவின.

மூன்று ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ரோஹித் ஷர்மா, நான்காவது ஓவரை அவருக்கு வழங்காமல் இருந்தது கிரிக்கெட் பிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

பியூஷ் விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, ரன் ரேட்டையும் கட்டுப்படுத்துகிறார். இந்த சீசன் மும்பை அணிக்கு சவாலானது.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக களமிறங்கவில்லை.

ஜோஃப்ரா ஆர்ச்சரும் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்களின் பற்றாக்குறை இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பியூஷ் சாவ்லா அணிக்கு வலு சேர்த்துள்ளார்.

அமித் மிஷ்ரா

ஐபிஎல் கிரிக்கெட்

பட மூலாதாரம்,NURPHOTO

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார்.

இந்தப் போட்டியில் மூன்று முறை ஹாட்ரிக் அடித்துள்ளார். 40 வயதான அமித் மிஷ்ரா ஐபிஎல்-ல் பெரும் பெயர் பெற்றவர்.

அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சேர்த்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனால் அமித் மிஷ்ரா தனது செயல்பாட்டால் விமர்சகர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

அமித் மிஷ்ரா தொடர்ந்து முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி மிகக் குறைவான ரன்களைக் கொடுத்து வருகிறார்.

அமித் மிஷ்ராவின் நான்கு ஓவர்களில் பெரிய ஸ்ட்ரோக்குகளை விளையாடும் ரிஸ்கை பேட்ஸ்மேன்கள் எடுப்பதில்லை.

அவரது நான்கு ஓவர்களில், எதிரணியின் ரன் குவிப்பு வேகம் குறைகிறது.

டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய அமித் மிஷ்ராவின் அனுபவம் லக்னோ அணிக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c9e3y873gd0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'யார்க்கர்' வீசி கைகொடுத்த நடராஜன்: தோல்வியின் விளிம்பில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீண்டது எப்படி?

நடராஜன் அசத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த சன்ரைசர்ஸ் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த வாரத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சென்று சன்ரைசர்ஸ் அணியை வார்னர் படை வென்றது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் தோற்கடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 2020ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் இந்த வெற்றி மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆக்ரோஷம், வெற்றி அவசியம்

இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. புள்ளிப்பட்டியலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்வதற்கு இந்த போட்டியில் வெற்றி அவசியம் என்பதால், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் இடையே தொடக்கம் முதலே கடும் ஆக்ரோஷம் காணப்பட்டது.

இரு அணி வீரர்களும் சளைக்காமல் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினார்கள். சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, கிளாசன் பேட்டிங்கில் அசத்தினர், பந்துவீச்சில், மார்க்கண்டே, நடராஜன், புவனேஷ்வர் என பட்டையைக் கிளப்பினர்.

 

இதற்கு பதிலடியாக டெல்லியின் மார்ஷ், பில் சால்ட் பேட்டிங்கில் மிரட்டி, வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஆனால், நடுவரிசை பேட்டிங் சொதப்பலால், சன்ரைசர்ஸிடம் டெல்லி பணிந்தது.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

திருப்புமுனையான சால்ட் விக்கெட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 198 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அதை நோக்கி சீராக நகர்ந்தது. வார்னரை முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் வெளியேற்றிய நிலையில் பில் சால்ட், மிட்ஷெல் மார்ஷ் வலுவான அடித்தளம் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இருவரின் அதிரடியால் 11-வது ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 112 ரன்களை எட்டியிருந்தது. பில்சால்ட், மார்ஷ் இருவரும் அதிரடியான ஆட்டத்தால் அரைசதம் அடித்து வலுவான நிலையில்இருந்தார்கள். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், கணிப்புகளும் தெரிவித்தன.

ஆனால், பில் சால்ட்(59) ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 112 ரன் பாட்னர்ஷிப்பை மார்க்கண்டே உடைத்தது சன்ரைசர்ஸுக்கு பெரிய நிம்மதியை அளித்தது.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு

இந்த விக்கெட்தான் டெல்லி கேபிடல்ஸ் சரிவுக்கு முன்னுரையாக அமைந்து. அடுத்தடுத்து ஒவ்வோர் ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தவாறு இருந்தது. 13-வது ஓவரில் மணிஷ் பாண்டே ஒரு ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

14-வது ஓவரில், ஹூசைன் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று மார்ஷ்(63) விக்கெட்டை இழந்தார். ஹூசைன் வீசிய இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த மார்ஷ், 2வது சிக்ஸரையும் அடிக்க முயன்றபோதுதான் மார்க்ரமிடம் கேட்சாகினார். 16-வது ஓவரில் பிரியம் கார்க்(9), 17-வது ஓவரில் சர்பிராஸ் கான் என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து தோல்வியில் முடிந்தது.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

டெல்லி கேபிடல்ஸ் எங்கே சறுக்கியது?

டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வி எப்படி நேர்ந்தது என்பது அந்த அணிக்கே சற்று ஆச்சர்யமாக இருந்திருக்கும். விக்கெட்டுகளை இழக்கிறோம் என்று உணர்வதற்குள் அடுத்த விக்கெட் இழப்பு என சன்ரைசர்ஸ் அளித்த நெருக்கடி வெற்றியை தாரைவார்க்க வைத்தது. ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமிருந்த டெல்லி கேபிடல்ஸ் ஒரு விக்கெட்டில் பெரிய திருப்புமுனையைச் சந்தித்தது.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால், விரைவாக மீண்ட டெல்லி அணிக்கு, பில் சால்ட்டுடன், மார்ஷ் நம்பிக்கையளித்தனர்.

உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், ஹூசைன் ஓவர்களை மார்ஷ் - சால்ட் இருவரும் வெளுத்து வாங்கினர். குறிப்பாக உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் மார்ஷ் இரு சிக்ஸர்ளையும், சால்ட் 2 பவுண்டரிகள் என 22 ரன்களைச் சேர்த்தனர்.

இருவரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பவர் ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும், 29 பந்துகளில் அரைசத்தை எட்டியது.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

சால்ட் 29 பந்துகளிலும், மார்ஷ் 28 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரின் அதிரடி அரைசதத்தைப் பார்த்து பெவிலியனில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியினர் மிகுந்த ரிலாக்ஸாக இருந்தனர், நம்பிக்கையுடன் காணப்பட்டனர். அனைத்தும் நன்றாகவே சென்றது. 54 பந்துகளில் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களை எட்டியது.

மார்க்கண்டே வீசிய 12வது ஓவரில்தான் அந்த திருப்புமுனை நிகழ்ந்தது. பில் சால்ட் விக்கெட்டுதான் தங்களின் சரிவுக்கான முகவுரை என்பதை டெல்லி கேபிடல்ஸ் உணரவில்லை. பில்ட் சால்ட் நேராக அடித்த பந்தை மார்க்கண்டே அருமையாக கேட்ச் பிடிக்க 59 ரன்னில் வெளியேறினார்.

இதன்பின் ஆட்டம் சன்ரைசர்ஸ் கரங்களுக்கு மாறியது. அடுத்துவந்த மணிஷ் பாண்டே(1) ரன்னில் ஆட்டமிழந்தார், பொறுப்புடன் பேட் செய்த மார்ஷ் 63 ரன்னில்(39 பந்துகள் ஒருபவுண்டரி, 6 சிக்ஸர்) ஹூசைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மார்ஷ் ஆட்டமிழந்தவுடன் டெல்லி கேபிடல்ஸ் தோல்வி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.

அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்கள்

அனுபவம் இல்லாத நடுவரிசை பேட்ஸ்மேன்களால், அழுத்தத்தையும், நெருக்கடியையும் சமாளித்து ஆடத் தெரியவில்லை. பிரியம் கார்க், சர்பிராஸ்கான், மணிஷ் பாண்டே போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சர்வதேச அனுபவம், நெருக்கடியை சமாளித்து ஆடுதல் குறித்த புரிதல் இல்லாததால் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

அபிஷேக் அற்புத தொடக்கம்

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகியவை சிறப்பாக இருந்ததே காரணம். பேட்டிங்கில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா(67), கிளாசன்(53) அப்துல் சமது(28) ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.

குறிப்பாக அபிஷேக் சர்மா தொடக்க வீரராக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்த போதிலும் அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை மட்டும் கைவிடவில்லை. டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் வீசிய தவறான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸர்களுக்கும் அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.

இசாந்த் சர்மா வீசிய தொடக்க ஓவரில் 2 பவுண்டரிகளை அபிஷேக் விளாசினார். மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தோடு இசாந்த் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகளை அபிஷேக் பறக்கவிட்டார்.

பவர் ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை சன்ரைசர்ஸ் சேர்க்க அபிஷேக் சர்மா ஆட்டம் முக்கியக் காரணமாகும். டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

ரூ.13 கோடி ஹேரி ப்ரூக் என்னாச்சு!

ஆனால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் யாரும், அபிஷேக் சர்மாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ராகுல் திரிபாதி பொறுப்பற்ற ஷாட் ஆடி (10) ரன்னில் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம்(8), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேரி ப்ரூக் டக் அவுட்டிலும் வெளியேறினர்.

ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்ட ஹேரி ப்ரூக், ஒரு சதம் அடித்து தனது இருப்பை நிலைப்படுத்தினார். ஆனால், மற்ற இன்னிங்ஸ்களில் ஹேரி ப்ரூக் இதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. ஹேரி ப்ரூக் இந்தமுறையும் சொதப்பிவிட்டதைப் பார்த்து நெட்டிஸன்கள் அவரை வைத்து ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைத்தளதில் வெளியிட்டனர்

அற்புதமாக பேட் செய்த அபிஷேக் சர்மா 67 ரன்னில்(36பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/ IPL

“கிளாசிக்” கிளாசன்

பின்வரிசையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் கிளாசன் “கிளாசிக்”கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவர்களுக்குப்பின் கிளாசன் தனது அதிரடிபேட்டிங்கை வெளிப்படுத்தி சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார். இவருக்குத் துணையாக அப்துல் சமதும், அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார்.

குறிப்பாக அக்ஸர் படேல் வீசிய 16வது ஓவரில் இரு பெரிய சிக்ஸர்களையும், நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் கிளாசன் பறக்கவிட்டார். அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசன் 25 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

கிளாசனின் ஆட்டம் கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது, பெரிய ஸ்கோருக்கு உயர்த்துவதற்கு கிளாசனின் பங்களிப்பு முக்கியமானது.

கிளாசன்-அப்துல் சமது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தனர். ஹூசைன் கடைசி நேரத்தில் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி தனது பங்களிப்பை வழங்கினார். இதனால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 62 ரன்களை குவித்தது.

கிளாசன் 27 பந்துகளில் 53 ரன்களுடன்(4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹூசைன் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேட் செய்யாவிட்டாலும் கடைசிவரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு, அணியின் குழு செயல்பாட்டுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருந்தது.

ப்ரூக்கை பாராட்டிய மார்ஷ்

பீல்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட்டதை குறிப்பிட வேண்டும். இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வீரர்கள் எந்தவிதமான கேட்சுகளையும் கோட்டைவிட வில்லை. கடைசி நேரத்தில் மார்க்ரம் கேட்சை தவறிவிட்டது என்பது பெரிய முயற்சிக்குப் பின் முடியாமல் போனதாகும்.

அதிலும் சிக்ஸரை தடுத்து 5 ரன்கள் சேமித்துக் கொடுத்த ஹேரி ப்ரூக்கின் பீல்டிங் பாராட்டுக்குரியது. மார்ஷ் அடித்த சிக்ஸரை பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்த ஹேரி ப்ரூக் பவுண்டரி லைனில் கால் வைத்துவிடும்முன் தூக்கி எறிந்துவிட்டார். இதனால் கேட்ச் பிடிக்க முடியாவிட்டாலும், 5 ரன்களை அணிக்காக சேமித்துக் கொடுத்தார். ஹேரி ப்ரூக்கின் பீல்டிங்கைப் பார்த்த மார்ஷ் தனது பேட்டால் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வெற்றி தொடர வேண்டும்

சன்ரைசர்ஸ் வெற்றிக்குப்பின் கேப்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் “ ஒட்டுமொத்த அணியின் உழைப்பால் வெற்றி கிடைத்து. அனைத்து வீரர்களின் பங்களிப்பால் கிடைத்த வெற்றியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக பேட்ஸமேன்கள், பந்துவீச்சாளர்களின் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது.

கிரிக்கெட் களத்தில் சில விஷயங்கள்,கணிப்புகள் தவறாக நடப்பதை நான் பெரிதாகக் கொள்ளவில்லை, ஆனால், சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும். கிளாசன் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அபிஷேக் சர்மா பொறுப்புடன் ஆடி அணியை முன்னெடுத்தார். கடைசி நேரத்தில் கிளாசன், சமதுஆட்டம் நம்பிக்கையளித்தது.

மார்க்கண்டே பிடித்த கேட்ச்தான் ஆட்டத்துக்குள் எங்களை அழைத்துச் சென்றது. பந்துவீச்சாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன், உற்சாகத்துடன் செயல்பட்டனர். அடுத்துவரும் போட்டிகளிலும் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/IPL

நடராஜன் அசத்தல் பௌலிங்க்

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீசும்போது டெத் ஓவர்களில் தமிழக வீரர் நடராஜனின் துல்லியமான யார்க்கர்கள், கட்டுக்கோப்பான பந்துவீச்சு டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்புக்கு பிரேக் போட்டன. புவனேஷ் குமார் கூட டெத் ஓவர்களில் ரன்களை வழங்கினார். ஆனால் நடராஜன் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது. களத்தில் இருந்த அக்ஸர் படேல், சர்பிராஸ் கான், ரிபால் படேலுக்கு தனது துல்லியமான யார்கர்களை இறக்கி நடராஜன் திணறடித்தார்.

கடைசி 4 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஸர் படேல், சர்பிராஸ்கான் களத்தில் இருந்தனர். 17-வது ஓவரை வீசிய நடராஜன் முதல் பந்தில் இருந்தே துல்லியமான யார்க்கர்களை வீசி அக்ஸர் படேல், சர்பிராஸ்கானை திணறடித்தார். 4வது பந்தில் பவுண்டரி அடித்த சர்பிராஸ் கான், அடுத்தபந்தில் நடராஜன் யார்க்கரில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். இந்த ஓவரில் நடராஜன் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

19-வது ஓவரை நடராஜன் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த சீசனில் துல்லியமான யார்க்கரை வீச முடியாமல், ஃபார்மில்லாமல் நடராஜன் இருந்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் டெத் ஓவர்களை நடராஜன் பிரமாதமாக வீசி வெற்றிக்கான காரணங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

நடராஜனின் பந்துவீச்சில் நேற்று தீர்க்கமும், தெளிவும் காணப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கு யார்க்கரையும், வைட் யார்க்கர்களையும் தவிர வேறு எதையும் வீசக்கூடாது என்ற நோக்கில் நடராஜன் தனக்குரிய பங்களிப்பை சிறப்பாகச் செய்தார்.

சிறந்த ஆல்ரவுண்டர் மார்ஷ்

மார்ஷ் பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் கலக்கலாகச் செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசி, ஒருமெய்டன் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆனால், மார்ஷ் உழைப்பு அனைத்தையும் பின்வரிசையில் வந்த வீரர்கள் எடுத்துச் செல்லத் தவறியதால், அனைத்தும் வீணாகி, வெற்றியை சன்ரைசர்ஸிடம் தாரை வார்த்தது டெல்லி கேபிடல்ஸ்.

மார்ஷ் ஆட்டமிழந்தபின் டெல்லி சரிவு வேகமாக இருந்தது, பிரியம் கார்க், சர்பிராஸ் கான் ஜொலிக்காததால் கடைசி நேரத்தில் அக்ஸர் படேல், ரிப்பால் படேல் மீது அழுத்தம் விழுந்தது.

தேவைப்படும் ரன் ரேட் அதிகமாக இருந்ததும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், டெல்லி கேபிடல்ஸ் தோல்வியை உறுதி செய்தன. அக்ஸர் படேல் கடைசி வரை போராடி 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ரிப்பால் படேல் 11 ரன்கள் சேர்த்திருந்தார்.

IPL: DC vs SRH

பட மூலாதாரம்,BCCI/ IPL

நொடிப்பொழுதில் நடந்துவிட்டது

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் “ 9 ரன்னில் தோல்வி என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் களம்செல்வதும், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புவதும் நொடிப்பொழுதில் நடந்துவிட்டது. 9 ரன்னில் தோல்வியடைந்தது வருத்தமாக இருக்கிறது, அருமையான ஆடுகளம்.

மிட்ஷெல் மார்ஷ் பந்துவீச்சு, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டார். மார்ஷ், சால்ட் ஆட்டம் அருமையாக இருந்தது. பெரிய இலக்கைத் துரத்தினோம், நடுவரிசையில் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். நல்ல பார்ட்னர்ஷிப் அமையாததும் முக்கியக் காரணம். அக்ஸர் படேல் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

சன்ரைசர்ஸ் அணியிடம் 2 இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்து நெருக்கடி அளித்தனர், எங்களிடம் அக்ஸர் மட்டுமே இருந்தார். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மட்டும் நிலைத்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும், 80 ரன்களுக்கு மேல் மூத்தவீரர்கள் பொறுப்புடன் நிலைத்து ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம்” எனத் தெரிவித்தார்.

வார்னர் தலைமை சரியில்லையா?

டெல்லி அணியின் தோல்வியைத் தொடர்ந்து, வர்ணனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யூசுப் பதான் ஆகியோர் டேவிட் வார்னரின் கேப்டன்சி குறித்து விமர்சனத்தை முன் வைத்தனர். வார்னரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அக்ஸர் பட்டேலை கடைசி நேரத்தில் களமிறக்கியது குறித்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

ஹர்பஜன் சிங் பேசும்போது, `வார்னரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அக்சர் பட்டேலை கேப்டனாக நியமிக்கலாம். வார்னர் உருப்படியாக செய்யும் ஒரே விஷயம் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால், ஆட்டம் முடிந்த பின்னர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க நாம் விரும்பவில்லை. ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதையே நாம் பார்க்கிறோம். அக்சர் பட்டேலை முன்பாக களமிறக்க வேண்டும் அல்லது அவரை கேப்டனாக்க வேண்டும்` என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cj7038k0304o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேப்டன் கூல் 2.0: தோனியுடன் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் ஒப்பிடுவது ஏன்?

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம்,FACEBOOK/SANJU SAMSON

54 நிமிடங்களுக்கு முன்னர்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது.

அதன் பின்னர், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், வாட்சன், ரஹானே என பலர் ராஜஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியிருந்தாலும் ஒருமுறை கூட அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.

இதனை சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு மாற்றிக்காட்டினார். கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ராஜஸ்தான் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 40 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த மூன்று போட்டிகளிலுமே அந்த அணி 10 அல்லது அதற்கும் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றுள்ளது.

 

நடப்புத் தொடரில் கேப்டன்சியில் அசத்தல்

வழக்கம் போலவே இந்த ஐ.பி.எல். தொடரிலும் வெற்றிகரமான அணியாக வலம்வரும் சிஎஸ்கே, ராஜஸ்தான் அணியை தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளும் மோதிய கடைசி 7 ஆட்டங்களில் 6 முறை ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் சிறந்த செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சனின் கேப்டன்சிதான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஐபிஎல் தொடர்களை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி வெற்றிகரமான கேப்டனாகவே வலம் வருகிறார். தோனியைப் போன்று சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பிங்கோடு கேப்டன்ஸியை கவனிப்பது ஆகியவற்றை வைத்து சஞ்சு சாம்சனை கேப்டன் கூல் 2.0 என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்சனுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கிரிக்இன்ஃபோ-விடம் பேசும்போது, தோனிக்கு நிகரான குணாதிசயங்கள் சஞ்சு சாம்சனிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

`நான் பார்த்தவரை அவர் மிகவும் அமைதியானவர், நிதானமானவர். அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், தனது வீரர்களுடன் நன்றாக தொடர்புகொள்கிறார். அவர் எவ்வளவு அதிகமாக வேலையைச் செய்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் அனுபவத்துடன் கற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கிறேன். தோனியைப் போன்றே முடிவுகளை அவரே எடுக்கிறார். அது சரியான முடிவோ, தவறான முடிவோ, சஞ்சு மேம்பட்டுள்ளார்.` என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

ஒற்றை ஆளாக போராடிய சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் அணிக்காக 2013ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், சூதாட்ட புகார் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டப் போது டெல்லி அணிக்காக விளையாடினார். 2018ல் ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பிய சஞ்சு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் அந்த அணிக்கு கேப்டனாக உயர்ந்தார்.

எனினும் 2021ல் ராஜஸ்தான் அணியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சஞ்சு சாம்சன் ஒற்றை ஆளாக ராஜஸ்தானுக்காக சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வழங்கியிருந்தார். பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 119 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். எனினும், அந்த தொடரில் ராஜஸ்தான் அணி 7வது இடத்தையே பிடித்தது. ஆனால், அடுத்த ஆண்டே ஃபீனிக்ஸ் பறவையாகவே மீண்டு ஃபைனல் வரை வந்து 2வது இடத்தை பிடித்தது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட 2021ல் அவருக்கு கேப்டன்சி பிடிபடவில்லை என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது கேப்டன்சி சிறப்பாக மேம்பட்டுள்ளது.

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனியை கூலாக கையாண்ட சஞ்சு சாம்சன்

நடப்பு ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் சிறப்பான ஃபார்மிலேயே உள்ளது. ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், போல்ட், யுஸ்வேந்திர சஹால், ஜெய்ஸ்வால், படிக்கல் என சிறப்பான அணி அமைந்துள்ளதும் சஞ்சு சாம்சனுக்கு மிகப் பெரிய பலமாகும்.

ஆக்ரோசமான போக்கு அவரிடம் அதிகம் காணப்படுவது இல்லை. தோனியைப் போன்றே சஞ்சு சாம்சனும் மிகவும் சாந்தமாக சூழல்களை கையாள்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. சந்திப் சர்மா வீசிய அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட, 3 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்தது தோனி என்பதால் இது எளிதான இலக்காக தோன்றியது. அப்போது சஞ்சு சாம்சன் சந்திப் சர்மாவை அழைத்துப் பேசினார்.

இது குறித்து சந்திப் சர்மா குறிப்பிடும்போது, `இரண்டு சிக்ஸர்கள் போனதும் அடுத்த 3 பந்துகளை எப்படி வீசுவது என்று நானும் சஞ்சு சாம்சனும் ஆலோசனை செய்தோம். அவர் மிகவும் நிதானமாகவே இருந்தார். எனக்கு எந்த யோசனையையும் அவர் கொடுக்கவில்லை. என்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார். நான் என் திட்டத்தை கூறியதும் அவர் அதற்கு ஆதரவு தெரிவித்தார். அழுத்தம் நிறைந்த அந்த வேளையிலும் இதுபோன்று நிதானமாக இருப்பது அரிதிலும் அரிது` என்றார்.

சிஎஸ்கேவுக்கு எதிரான சமீபத்திய வெற்றிக்கு பின் அணி வீரர்களிடம் பேசிய ராஜஸ்தான் பயிற்சியாளர் சங்கக்காரா, 'சஞ்சு சாம்சன் எப்போதும் தன்னுடைய அணியை முன்னிலைப்படுத்திதான் ஆடுகிறார். ரன்கள் என்பது முக்கியம் அல்ல. அந்த ரன்களை அவர் எப்படி எடுக்கிறார் என்பதுதான் முக்கியம். அந்தவிதத்தில் அணியில் உள்ள எல்லோருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார். அணியின் வெற்றிக்காக அவர் காட்டும் முனைப்பு பாராட்டுக்குரியது. அவர் விளையாட்டில் வகுத்து வைத்திருக்கும் சில திட்டங்கள் மற்ற வீரர்கள் பின்பற்ற ஒரு சிறந்த முன் உதாரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்` என்று வெகுவாக பாராட்டி இருந்தார்.

Captain Cool 2.0: Sanju samson - MS Dhoni

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்சன் கேப்டன்சியை புகழும் சஹால்

வெற்றியைப் போலவே தோல்வியையும் சஞ்சு சாம்சன் வெகு இயல்பாகவே எடுத்துக்கொள்கிறார்.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் தோல்வி அடைந்த பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடன் பேசிய சஞ்சு சாம்சன், ` ஐபிஎல் தொடரில் இரண்டு தோல்விகளையோ, வெற்றிகளையோ பெறுவதும் மேலேயோ, கீழேயோ செல்வதும் மிகவும் சாதாரணமானதுதான். ஆனால், உயரத்துக்கு செல்லும்போது தாழ்மையுடன் இருப்பதும், கீழே செல்லும்போது நம் மீது நாம் நம்பிக்கைக் கொள்வதுமே நம் அணியின் ஸ்டைல்` என்றார். எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் தொடரில் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார். தனக்கு பிடித்த கேப்டன் குறித்த கேள்விக்கு Humans of Bombay-க்கு சஹால் அளித்த பேட்டியில் குறிப்பிட்டது சஞ்சு சாம்சனை தான்.

`ஐபிஎல் தொடரை பொருத்தவரை நிச்சயமாக எனக்கு பிடித்த கேப்டன் சஞ்சு சாம்சன் தான். அவருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் பார்க்கிறேன். தோனியைப் போலவே அவரும் அமைதியாகவும் எளிமையாகவும் உள்ளார். கடந்த ஆண்டில் , ஒரு பந்துவீச்சாளராக நான் என்ன வளர்ச்சி அடைந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் சஞ்சு தான் காரணம்` என்று புகழ்ந்திருந்தார்.

தோனியுடன் ஒப்பிடுவது பற்றி சாம்சன் கூறியது என்ன?

தன்னை தோனியுடன் ஒப்பிடுவது குறித்து சஞ்சு சாம்சன் கடந்த 2020ல் ஒரு பதில் அளித்திருந்தார். `தோனியைப் போல் அனைவராலும் ஆக முடியும் என்று நான் நினைக்கவில்லை. தோனியைப் போல் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். நான் என்னைப் போல் இருக்கவே விரும்புகிறேன். சஞ்சு சாம்சனாக இருப்பதே நன்றாக இருக்கிறது` என்றார்.

கேப்டன் பொறுப்பை கவனித்துக்கொள்ளும் அதே வேளையில் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கான பங்களிப்பை தருவதிலும் அவர் தவறவில்லை. 2021, 2022 ஐபிஎல் தொடர்களில் தலா 450 ரன்களுக்கு மேல் அடித்திருந்த சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இதுவரை 2 அரை சதங்களுடன் 198 ரன்களை அடித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 150க்கு மேல் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த முறை இறுதிப்போட்டி வரை வழிநடத்தி, நூலிழையில் கோப்பையைத் தவறவிட்ட சஞ்சு சாம்சன், இம்முறை அந்த குறையைப் போக்கும் முனைப்பில் இருக்கிறார். நடப்புத் தொடரில் தொடக்கத்தில் இருந்தே புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்படுவதில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சிக்கும் முக்கிய பங்கு உண்டு. கேப்டன் கூல் 2.0 என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சஞ்சு சாம்சன் அதனை சாதிப்பார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c976e3pddd4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: தோனியின் பாராட்டை பெற்ற இந்த அதிரடி வீரருக்கு இந்திய அணியின் கதவு திறக்குமா?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்குள் நுழைவதற்கான ஒரு குறுகிய வழி. இந்த போட்டிகளில் பல வீரர்கள் அதிரடியாக ஆடி தேசிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஒரு காலத்தில் ரஞ்சிக் கோப்பையும் இரானி கோப்பையும் இந்த நிலையில் இருந்தன. அணியில் அறிமுகமாக வேண்டுமென்றால் ரஞ்சி கோப்பையில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கவேண்டி இருந்தது.

இரானி டிராஃபிக்காக, ரஞ்சி சாம்பியன்களுக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் நடைபெறும் போட்டியில் சிறப்பாக விளையாடி தேர்வாளர்களை ஈர்க்க வேண்டியிருந்தது.

இதில் நாட்டின் சிறந்த மற்றும் ஃபார்மில் உள்ள எல்லா வீரர்களும் விளையாடியதால், அனைவரையும் ஒரே போட்டியில் பார்க்கும் வாய்ப்பு தேர்வாளர்களுக்கு கிடைத்தது.

 

ரஞ்சி டிராஃபி இப்போதும் நாட்டின் முதல் நிலை நான்கு நாள் போட்டியாக இருக்கும்போதிலும், டி20-ல் இளம் திறமைகளை சோதிக்க ஐபிஎல், ஒரு தனித்துவமான தளத்தை தேர்வாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா குணால் பாண்டியா, ரிதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ராகுல் திரிபாதி ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அணிக்கு வந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் சில புதிய திறமைசாலிகள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை கண்டிப்பாகப்பெறுகிறார்கள்.

இந்த முறையும் பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஆனால் இதுவரை மிக அதிகமாக பேசப்பட்டு வருபவர் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜெய்ஸ்வால்.

சென்னைக்கு எதிராக பேட்டின் இடிமுழக்கம், தோனி பாராட்டு

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு நல்ல இளம் வீரருக்கு அடையாளம், அவர் எப்போதும் மூத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பதே. ஜெய்ஸ்வாலும் இன்னிங்ஸுக்கு முன் ராபின் ஊத்தப்பாவுடன் ஆலோசனை செய்தார். 'நீங்கள் உங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாடுங்கள், அதாவது ஆக்ரோஷமான பேட்டிங்கை மட்டுமே நம்புங்கள்' என்று ஊத்தப்பா அவரிடம் கூறினார்.

யஷஸ்வி இதே போல் செய்து இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்தார். பின்னர் ஆகாஷ் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசினார்.

யஷஸ்வியின் தரப்பிலிருந்து இதுபோன்ற பவுண்டரி மழை பொழிந்து கொண்டிருந்ததால், மறுமுனையில் 'ஜோஸ் தி பாஸ்' ஜோஸ் பட்லர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதையே பார்வையாளர்கள் மறந்துவிட்டனர்.

வர்ணனையாளர் கெவின் பீட்டர்சனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டினார். "ஜோஸ் பட்லருடன் பேட்டிங் செய்துகொண்டு, அவரை விட ஆக்ரோஷமாக இருக்கும் பேட்ஸ்மேனை உலக கிரிக்கெட்டில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் இந்த இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால் அவ்வாறு செய்துள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பான 86 ரன்களில், பட்லர் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக அதாவது 27 ரன்கள் மட்டுமே அடித்தார் என்பதை பார்க்கும்போது, யஷஸ்வியின் இந்த வேகமான பேட்டிங்கை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? பட்லர் ஆட்டமிழந்த பிறகும் ஜெய்ஸ்வால் நிற்கவில்லை.

அவர் 26 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்தார். 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டேயின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 179 ஆக இருந்தது.

அவரது இன்னிங்ஸின் உதவியுடன் ராஜஸ்தான் அணி முதல் முறையாக ஜெய்ப்பூரில் 200 ரன்களுக்கு மேல் குவித்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸைப் பாராட்டி, எட்டுவதற்கு சிரமான இலக்கை ராயல்ஸ் அணி நிர்ணயித்ததே சென்னையின் தோல்விக்குக் காரணம் என்று கூறினார்.

இன்னிங்ஸின் தொடக்கத்தில் யஷஸ்வி ஆக்ரோஷமான பேட்டிங் செய்த விதம், போட்டியின் திசையை ராஜஸ்தானை நோக்கித்திருப்பியது என்று அவர் கூறினார்.

ஜெய்ஸ்வாலின் அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு தென்னாப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்திடம், ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கதவைத் தட்டுகிறாரா என்று கேட்கப்பட்டது.

"இந்தியாவில் நிறைய திறமையானவர்கள் உள்ளனர். ஆனால் யஷஸ்வி சிறப்பானவர். அவர் அணியில் இடம்பெற வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை, அவர் தொடர்ந்து இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும்" என்று ஸ்மித் கூறினார்.

சிறந்த ஃபார்ம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடப்பு ஐபிஎல் போட்டிக்கு முன் சையது முஷ்டாக் அலி போட்டியில் மும்பை அணி கோப்பையை வென்றதில் யஷஸ்விக்கு முக்கிய பங்கு உண்டு.

ஒன்பது இன்னிங்ஸ்களில் அவர் 33 ரன் சராசரி மற்றும் 142 ஸ்ட்ரைக் ரேட்டில் 266 ரன்கள் எடுத்தார். மும்பையின் இன்னிங்ஸுக்கு வலுவான அடித்தளம் ஏற்பட இது உதவியது.

இது தவிர அவர் 15 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 1845 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரான 265 ரன்களும் அடங்கும்.

அதே நேரத்தில் ஐபிஎல் 2023 இல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டு இன்னிங்ஸ்களில் 38 ரன் சராசரியுடன் 304 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் 3 அரை சதங்கள் அடித்துள்ளார் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.57 ஆகும்.

சீசனில் அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில் அவர் ஆறாவது இடத்தில் உள்ளார். வரும் பந்தயங்களில் அவர் தனது நிலையை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கில் மாற்றம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெக்னிக்கில் சிறிது மாற்றம் செய்துள்ளார். இது அவரது பேட்டிங்கை மேலும் மேம்படுத்தியுள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான தீப் தாஸ்குப்தா கருதுகிறார்.

சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கடந்த சீசனில் ஒரு பந்தை விளையாடுவதற்கு முன் அவரது ட்ரிகர் மூவ்மெண்டு மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் அவர் சற்று நிலையற்றவராக இருந்தார். மேலும் வேகப்பந்துவீச்சை விளையாடுவதில் தாமதமானது," என்று கூறினார்.

"இந்த சீசனில் அவர் ஷாட் ஆடுவதற்கு முன்பு அசைவைக் குறைத்திருப்பதை நாம் காண்கிறோம். இதன் காரணமாக அவர் நேர் பேட்டால் விளையாட முடிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக டைமிங்கிலும் அவர் ஈடுபடுகிறார்," என்று அவர் கூறினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெய்ஸ்வாலின் சவால்கள்

பவர்பிளேயில் வேகமாக பேட் செய்யக்கூடியவராகவும், பின்னர் வேகம் சற்று குறைந்துவிடக்கூடிய பேட்ஸ்மேனாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை கருதப்படுகிறார்.

யஷஸ்வி ஒரு பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் என்ற தனது இமேஜை விட்டுவிட்டு முழு இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டவராக மாற வேண்டும்.

21 வயதான யஷஸ்விக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர் இன்னும் தனது உச்சத்தை எட்டவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதாவது யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகி வரும் வீரராக உள்ளார். விரைவில் அவர் அணியில் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது.

இதற்கு ஸ்மித் கூறியது போல் அவர் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸுகளை விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cyjpv3rp14eo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கே எந்த இடத்தில் சறுக்கியது? பஞ்சாப் கிங்ஸுக்கு வெற்றி தேடித்தந்த ‘மூவர்’

csk vs punjab kings

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்

லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா ஆகிய மூவரின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தைப் நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் இதயத் துடிப்பை உச்சக் கட்டத்துக்கு இந்த ஐ.பி.எல்.ஆட்டம் அழைத்துச் சென்றது.

திக்.. திக்.. கடைசி ஓவர்

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய ஓவரின் முதல் பந்தில் சிக்கந்தர் ராசா ஒரு ரன்னும், ஷாருக்கான் லெக்-பையில் ஒரு ரன்னும் எடுத்தனர். 3வது பந்தில் ராசா ரன் எடுக்காததால், சிஎஸ்கே ரசிகர்கள் கரகோஷம் அரங்கை அதிரச் செய்தது.

4வது பந்தில் ராசா ஸ்ட்ரைட் டீப் மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க 2 ரன்களை எடுத்தார். 5-வது பந்திலும் ராசா லெக்-சைடில் அடிக்க ஜடேஜா பீல்டிங் செய்து எறிந்தபோதிலும், 2 ரன்கள் பஞ்சாப்புக்குக் கிடைத்தது.

கடைசிப் பந்தில் பஞ்சாப் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 2 ரன்கள் எடுத்தால், சூப்பர் ஓவர், பவுண்டரி அடித்தால் வெற்றி என்று கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் சிக்கந்தர் ராசா ஸ்ட்ரைக்கில் இருந்தார்.

 

பவுண்டரி , சிக்ஸர் அடிக்கவிடக்கூடாது என்பதற்காக பீல்டர்களை தோனி எல்லைக் கோட்டில் அமைத்திருந்தார். அடுத்து என்ன நடக்கும் சிஎஸ்கே வெற்றியா?, சூப்பர் ஓவரா?, பஞ்சாப் வெற்றியா? என்பதை அறிய ரசிகர்கள் மார்பில் கைவைத்தும், இருக்கையின் நுணியிலும் அமர்ந்திருந்தனர்.

ஸ்லோவர் பால்

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது…!

கடைசிப் பந்தை பதிரனா ஸ்லோவராக, ஆஃப் சைடில் விலக்கி வீசினார். அனுபவம் மிக்க சிக்கந்தர் ராசா ஆப்சைடில் சிறிது நகர்ந்து, பந்தை ஸ்குயர் லெக் சைடில் தட்டிவிட்டார். பவுண்டரி நோக்கிச் சென்ற அந்தப் பந்தை ஆகாஷ் சிங் முயன்று தடுத்த நேரத்துக்குள் 3 ரன்கள் ஓடி பஞ்சாப் அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

வரலாறு திருத்தப்பட்டது

சிக்கந்தர் ராசாவின் கடைசி நேர சாதுர்யமான ஆட்டம், டைமிங் ஷாட் ஆகியவை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸை அதன் மண்ணிலேயே பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் வரலாற்றில், சிஎஸ்கே இதுவரை 200 ரன்களுக்கு மேல் எடுத்த ஆட்டங்கள் அனைத்திலும் வென்றிருந்தது. ஆனால், முதல்முறையாக 200 ரன்கள் அடித்து தோனி ஆர்மி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் பகலில் நடந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்து முதல்முறையாக சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.

சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்

சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே-வின் வெற்றியைக் கொண்டாடவும், ஆர்ப்பரித்து விசில்போடவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தோல்வியைத் தாங்க முடியாமல் தவித்தனர். இந்த சீசனில் சிஎஸ்கே சொந்த மண்ணில் 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தானிடம் தோற்ற சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்துள்ளது.

10 புள்ளிகளில் 4 அணிகள்

ஆர்ப்பரிப்பான வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி 5வது இடத்தில் உள்ளது.

திருப்புமுனை நாயகர்கள்

punjab kings

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 3 வீரர்களை குறிப்பிட்டே தீர வேண்டும், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, சிக்ந்தர் ராசா ஆகிய 3 பேரின் ஆர்ப்பணிப்பான பேட்டிங், வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த சீசனில் இதுவரை தனது இயல்பான ஆட்டத்துக்கு வராத லிவிங்ஸ்டோன், இந்த ஆட்டத்தில் வெளுத்துவாங்கினார். தேஷ் பாண்டே வீசிய 15வது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து லிவிங்ஸ்டன் 40ரன்னில்(24பந்துகள், ஒருபவுண்டரி 4சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். இந்த ஒருஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் வெற்றிக்கு 30பந்துகளில் 72 ரன்கள் தேவை என்ற நெருக்கடி நிலை இருந்தது. ஆனால் லிவிங்ஸ்டன் அதிரடிக்குப்பின், வெற்றிக்கான ரன் 48 ஆகக் குறைந்தது. லிவிங்ஸ்டனின் இந்த மிரட்டலான ஆட்டம் ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்பி, நம்பிக்கை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, ஜிதேஷ் சர்மா. இந்த சீசன் முழுவதும் தனது பேட்டிங்கால் கலக்கி வருகிறார். பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகராக வலம் வரும் ஜிதேஷ் இந்த ஆட்டத்திலும் வெற்றிக்கு கலங்கரை விளக்காக திகழ்ந்தார்.

ஜிதேஷ் சர்மா களம்புகுந்த வேகத்தில், ஜடேஜா ஓவரில் ஒரு சிக்ஸரும், பதிரனாவின் 17-வது ஓவரிலும், தேஷ்பாண்டேவின் 18-வது ஓவரிலும் அடித்த பவுண்டரிகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. சிறிய கேமியோ ஆடிய ஜிதேஷ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விவாதமான கேட்ச்

அதிலும் ஜிதேஷ் சர்மா ஆட்டமிழந்தவிதம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்த, ரஷீத் பவுண்டரி கோட்டை காலால் தொட்டாரா என்று பலமுறை டிவி ரீப்ளேயில் 3வது நடுவர் பார்த்து அவுட் அளித்தார். ஜிதேஷ் சர்மா களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை பஞ்சாப் அணி கடைசிவரை ஆட்டத்தை கொண்டு சென்றிருக்கத் தேவையில்லை.

ராசா இல்லை ‘ராஜா’

ஜிம்பாப்பே வீரர் சிக்கந்தர் ராசா பற்றி குறிப்பிட்டே தீர வேண்டும். சிக்கந்தர் ராசா களமிறங்கியவுடன் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன்பின் ஒருபந்தைக் கூட வீணாக்காமல் சூழலை அறிந்து ரன் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில், சிக்கந்தர் ராசாவின் பொறுப்பான ஆட்டம், கடைசிப் பந்தை, லாவகமாக லெக் சைடில் தட்டிவிட்டு 3 ரன்கள் எடுத்தது ஆகியவை மாஸ்டர் கிளாஸ்.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு தகுதியானது என்றால், அதில் ராஜாவாக இருந்தது வெற்றியை பெற்றுக்கொடுத்தது சிக்கந்தர் ராசாதான். பந்துவீச்சிலும் அசத்திய சிக்கந்தர் ராசா ஒருவிக்கெட்டையும் கைப்பற்றினார்.

‘எனக்கே தெரியவில்லை’

ஆட்டத்தின் ஹீரோவான சிக்கந்தர் ராசா கூறுகையில் “ ஜிம்பாப்பே கலாசாரத்தில் இருந்து வந்தேன், தனிநபர் ஆட்டத்தைவிட அணியின் வெற்றியைத்தான் அதிகம் விரும்புகிறேன். கடைசிப் பந்துக்கு முன் என்ன பேசினேன் என எனக்கேத் தெரியவில்லை. டக்அவுட்டில் ஏராளமானோர் என்னைப் பார்த்து கை அசைத்தனர். லிவிங்ஸ்டன் அமைத்துக் கொடுத்த தளத்தில், ஜிதேஷ் வழிகாட்டினார், அனைத்து ஆட்டத்திலும் ஜிதேஷ் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இருவரின் பேட்டிங் ஸ்கோரை சேஸிங் செய்ய உதவியாக இருந்தது. என்னால் முடிந்த பங்களிப்பை பந்துவீச்சு, பேட்டிங்கில் வழங்கினேன்” எனத் தெரிவித்தார்

பஞ்சாப் பந்துவீச்சு எப்படி?

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்றுதான் கூற முடியும். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரிந்தும், சிக்கந்தர் ராசா, ராகுல் சாஹர் மட்டுமே பந்துவீசினர், ஆனால், ஹர்பிரீத் பிராருக்கு பந்துவீசும் வாய்ப்பு வழங்கவே இல்லை.

சுழற்பந்துவீச்சில் சஹர், ராசா ஓரளவுக்கு கட்டுக் கோப்பாக பந்துவீசினர். சாம் கரன் ரன்களை கூடுதலாக வழங்கினார். ரபாடா, அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் ரன்களைக் கொடுத்தாலும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை மிரட்டிவிட்டனர். ஒட்டுமொத்தத்தில் இன்னும் கட்டுக்கோப்பாக பந்துவீசியிருந்தால், 200 ரன்களுக்குள் சிஎஸ்கேவை சுருட்டியிருக்கலாம்.

பதிரனா மீது தவறா?

csk vs punjab kings

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய பதிரனா கடைசிப் பந்தில் ஸ்லோவர் பாலாக வீசியது சமூக வலைத்தளத்தில் விவாதமாகியுள்ளது. கடைசிப் பந்தை ஸ்லோவர் பந்தாக வீசாமல் வைடு யார்கராகவோ அல்லது யார்கராவோ வீசியிருக்கலாம் என்று நெட்டிசன்கள் விவாதிக்கிறார்கள். ஆனால், பதிரனா டெத்ஓவர்களை எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே வீசினார்.

பதிரனா தான் வீசிய 18-வது ஓவரில் 8 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்டநிலையில், பஞ்சாப் பேட்ஸ்மேனை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் நெருக்கடி நேரத்தில் பதிரனா சிறப்பாகப் பந்துவீசினார்.

சர்வதேச வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆடும் பதிரனா இதுபோன்ற “ஹைடெம்போ” போட்டிகளில் டெத் ஓவரை திறமையாக வீசுவது பாராட்டுக்குரியது. கடைசிப் பந்தில் ஸ்லோவர் பாலாக பதிரனா வீசியது என்பது ராசா பெரிய ஷாட் அடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால், சிக்கந்தர் ராசா ஆப்சைடில் விலகிச் சென்று ஸ்குயர்லெக்கில் தட்டிவிட்டார். இது நிச்சயமாக பதிரனா தவறாக இருக்க முடியாது. 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சரியான வேகப்பந்துவீச்சாளராக பதிரனாவை கண்டுபிடித்துள்ளது. இலங்கை அணிக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

சிஎஸ்கே எங்கு சறுக்கியது?

chennai super kings

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கம் சொந்த மைதானம். சேப்பாகம் ஆடுகளத்தைப் பற்றி நன்கு தெரிந்த அணி. 200 ரன்கள் சேர்த்தும், பஞ்சாப் அணியைச் சுருட்ட முடியவில்லை என்றால், எங்குசறுக்கியது என்பதை ஆய்வு செய்வது அவசியம்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பஞ்சாப் அணியும் 10 ரன்ரேட்டில்தான் சென்றது. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என பஞ்சாப் அணியும் விடாமல் துரத்தி வந்தது.

11-வது ஓவரில் இருந்து 15வது ஓவர் வரை பஞ்சாப் கிங்ஸ் ரன்வேகம் திடீரென குறைந்தது. இந்த 5 ஓவர்களில் பஞ்சாப் அணி, 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது, ஒருவிக்கெட்டையும் இழந்தது. சாம்கரன், லிவிங்ஸ்டனும் மந்தமாக ஆட தொடங்கினர்.

15 ஓவர் முடிவில் பஞ்சாப் வெற்றிக்கு 30 பந்துகளில் 72 ரன்கள் தேவைப்பட்டது. இதுவரை ஆட்டம் சிஎஸ்கே கைகளில்தான் இருந்தது. ஆனால், தேஷ்பாண்டே வீசிய 16-வது ஓவரில் லிவிங்ஸ்டன் சேர்த்த 24 ரன்கள் சிஎஸ்கேயிடம் இருந்து ஆட்டம் பஞ்சாப்புக்கு மாறியது.

அதன்பின் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள்பக்கம் இழுக்க முயன்றாலும், பஞ்சாப் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் ரன் சேர்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர்.

பந்துவீச்சில் ஜடேஜா சிறப்பாகச் செயல்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. கடைசி நேரத்தில் பெரிய ஷாட்கள் அடிப்பார் என ஜடேஜா களமிறக்கப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.

ஒருவேளை ஜடேஜா பெரிய ஷாட்களை ஆடி சிக்ஸர், பவுண்டரி அடித்திருந்தால், சிஎஸ்கே இன்னும் கூடுதலாக ரன்களைச் சேர்த்து வெற்றியை எளிதாக்கி இருக்கும். தோனியும் கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை விளாசவில்லை என்றால் சிஎஸ்கே ஸ்கோர், 200 ரன்களுக்குள்ளேதான் இருந்திருக்கும்

2 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “ நடுப்பகுதியில் இரு ஓவர்களில்தான் ஆட்டத்தைத் தவறிவிட்டோம். பந்துவீச்சாளர்கள்தான் என்ன தேவை என்பதை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாங்கள் பேட்டிங் செய்தபோது கடைசி ஓவர்களில் 10 ரன்களுக்கும் மேல்தான் அடிக்க முடிந்தது.

எங்கள் பந்துவீச்சுக்கு இன்னும் பயிற்சி தேவை, பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டோம். 200 ரன்கள் வெற்றிக்குப் போதுமானதுதான், ஆனால், 2 ஓவர்களை மோசமாக வீசி ஆட்டத்தை இழந்தோம். பதிரனா சிறப்பாகப் பந்துவீசினார். எங்கள் திட்டம் தவறானதா அல்லது செயல்படுத்தியவிதம் தவறா என்பதை ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார்

கான்வே, ருதுராஜ் வலுவான தொடக்கம்

சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் நல்ல தொடக்கம் அளித்து வரும் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி இந்த முறையும் ஏமாற்றவில்லை. 2வது ஓவரில் இருந்து கான்வே அதிரடியில் இறங்கி, ரபாடா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளும், அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் கெய்க்வாட் 2 பவுண்டரிகளும், அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.

சாம்கரன் வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரிகளை கெய்க்வாட் விளாசி பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தினார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி, 57 ரன்கள் குவித்தது. ஓவருக்கு 10 ரன்ரேட் திட்டத்தோடு கான்வே, கெய்க்வாட் ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால், சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துக்கும், மெதுவாக பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும், ராகுல் சஹர், சிக்கந்தர் ராசாவை பந்துவீசச் செய்து சிஎஸ்கே ரன் குவிப்புக்கு பிரேக் அமைக்க முயன்றனர்.

பஞ்சாப் அணி சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது ஓரளவு பலன்கொடுத்தது. 7 முதல் 9-வது ஓவர் வரை சிஎஸ்கே ரன் சேர்ப்பு மந்தமாகியது. அதன்பின் கைகொடுக்கவில்லை. சிக்கந்தர் வீசிய 10-வது ஓவரில் கான்வே இரு பவுண்டரிகளை விளாசினார். 4வது பந்தை கெய்க்வாட் இறங்கி அடிக்க முற்பட்டபோது, சிக்கந்தர் கேரம் பந்துவீச, அது நன்கு சுழன்று கீப்பர் கையில் தஞ்சமடைந்ததால், ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

முதல் விக்கெட்டுக்கு கெய்க்வாட், கான்வே கூட்டணி 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கெய்க்வாட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹானே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஷிவம் துபே வந்தார்.

csk Vs punjab kings

பட மூலாதாரம்,GETTY IMAGES

துபே, மொயின் அலி ஏமாற்றம்

இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியால் மிரட்டிவரும் துபே இந்த முறையும் ஏமாற்றவில்லை. சிக்கந்தர் வீசிய 12 ஓவரில் துபே லாங்ஆன் திசையில் சிக்ஸரை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய கான்வே 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கான்வே இந்த சீசனில் அடிக்கும் 5-வது அரைசதமாகும். ஒரு சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கான்வேவும் இணைந்தார். கான்வே கடந்த 6 போட்டிகளில் 50,83,77,56,8,92 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரபாடா வீசிய 13வது ஓவரில் துபே மிட்-விக்கெட்டில் பெரிய சிக்ஸரை விளாசினார், அதே ஓவரின் கடைசிப் பந்தில் கான்வே பவுண்டரிக்கு அனுப்பி ரன்ரேட்டை உயர்த்தினர்.

ஷிவம் துபே பவுன்ஸரை விளையாடுவதற்கு சிரமப்படுவார் எனத் தெரிந்து அர்ஷதீப் சிங் 14வது ஓவரை வீசினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது, கடைசிப் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க துபே முயன்று அங்கு சிக்கந்தர் ராசாவால் கேட்ச் பிடிக்கப்பட்டார். குறுகிய நேரமே களத்தில் இருந்தாலும், துபே(28) சிறிய கேமியோவை சிஎஸ்கே அணிக்காக விளையாடிக் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த மொயின் அலியும் நிலைக்கவில்லை மொயின் அலி இரு பவுண்டரிகள் உள்ளிட்ட 10 ரன்கள் சேர்த்தநிலையில் ராகுல் சஹர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார்.

ஜடேஜா மந்தமான பேட்டிங்

அடுத்து வந்த ஜடேஜா, கான்வே ஜோடி கடைசி நேரத்தில் ரன் சேர்க்க முயன்றும் பெரிதாக பலன் அளிக்கவில்லை. ரபாடாவும், அர்ஷ்தீப் சிங்கும் கட்டுக் கோப்பாக பந்துவீசியதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களால் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரில் 8 ரன்களும், ரபாடா வீசிய 19வது ஓவரில் 8 ரன்களும்மட்டுமே சிஎஸ்கேவுக்கு கிடைத்தது.

கடைசி ஓவரை சாம் கரன் வீசினார். முதல் பந்திலேயே ஜடேஜா டீப் மிட்-விக்கெட்டில் தூக்கி அடிக்க லிவிங்ஸ்டனிடம் விக்கெட்டை இழந்து 12 ரன்னில் வெளியேறினார்.

தோனியைப் பார்த்து ஆர்ப்பரித்த ரசிகர்கள்

dhoni

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னையில் சிஎஸ்கே ஆட்டம் என்றாலே ஏதும் சொல்லத் தேவையில்லை. தோனியை வரவேற்கவும், சிஎஸ்கேவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் அரங்கில் ரசிகர்கள் குவிவார்கள். இன்றைய ஆட்டத்தைக் காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அடுத்ததாக சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த கேப்டன் எம்எஸ் தோனி களம்புகுந்தார். பாட்ஷா, பாட்ஷா பாடல் பின்புலத்தில் ஒலிக்க, தோனி வீரநடையுடன் மைதானத்துக்குள் வந்தார். தோனி மைதானத்துக்குள் வந்தவுடன் “தோனி, தோனி” என்று ரசிகர்களின் குரலும், விசில் சத்தமும் அரங்கை அதிரவைத்தன.

தோனியின் 86 மீட்டர் சிக்ஸர்

தோனி தான் சந்தித்த 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்தபந்தில் கான்வே ஒரு ரன் எடுக்கவே 5வது பந்தை தோனி சந்தித்தார். சான் கரன் ஆப்சைடில் விலக்கி வீசிய பவுன்ஸரை லாவகமாக அடித்து சிக்ஸருக்கு தோனி பறக்கவிட்டார். தோனி சிக்ஸர் அடித்தவுடன், அரங்கில் இருந்த ரசிகர்களிடம் கரகோஷமும், விசில் சத்தமும் காதைக் கிழித்தன.

கடைசிப் பந்தில் சாம்கரன் யார்கர் வீச முயன்று ஃபுல்டாசாக மாறியது. இதுபோன்ற ஃபுல்டாஸ் பந்துகளை தோனி யோசிக்காமல் சிக்ஸருக்கு பறக்கவிடுவார். இந்த முறையும் டீப் மிட்விக்கெட்டில் தோனி சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த சிக்ஸர் 86 மீட்டர் உயரம் சென்றது.

41வயதிலும் அசராத தோனி

கடைசி இருபந்துகளில் தோனி அடித்த இரு சிக்ஸர்கள் அவரின் பேட்டிங்கை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 41வயதாகியும், இன்னும் களத்தில் சிங்கம்போல் களமிறங்கி விளையாடும் தோனிக்கு சிக்ஸர் அடிக்கும் திறன், பேட்டிங் வலிமை குறையவில்லை.

தோனியும், 20-வது ஓவர் சிக்ஸர்களும்

தோனி குறித்த ஸ்வரஸ்யமான புள்ளிவிவரம் என்னவென்றால், ஐபிஎல் வரலாற்றில், 20வது ஓவரில் மட்டும் தோனி 209 பந்துகளைச் சந்தித்து இதுவரை 709 ரன்கள் குவித்துள்ளார். இதில் 59 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவரில் மட்டும் 15 முறை 2 சிக்ஸர்களை தோனி இதுவரை அடித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.

அதுமட்டுமல்லாமல் கடைசிஓவர்களில் 59 சிக்ஸர்களை அடித்து தோனி முதலிடத்திலும், கெய்ரன் பொலார்ட்33 சிக்ஸர்களுடன் 2வதுஇடத்திலும் உள்ளனர்.

“தி கிரேட் ஃபினிஷர்” என்று பெயரெடுத்த தோனிக்கு கடைசி ஓவரில் கூலாக மேட்சை முடித்து வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதேநேரம், தோனி கடைசி ஓவரில் களத்தில் இருந்தாலும் பந்துகள் எந்தத் திசையில் பறக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. அதை இந்தமுறையும் கச்சிதமாக முடித்தார்.

இருப்பினும், சிஎஸ்கே அணி கடைசி 5 ஓவர்களில் எதிர்பார்த்த அளவு ரன்களைச் சேர்க்கவில்லை, 54 ரன்கள் சேர்த்து ஒருவிக்கெட்டை இழந்தனர். ரபாடா, அர்ஷ்தீப் பந்துகளையும் விளாசியிருந்தால் நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் உயர்ந்திருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cl528y80k9wo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெய்ஸ்வால் நிர்ணயித்த இமாலய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டிப் பிடிக்க முக்கியக் காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்த அதிரடி சதம் வீணாகிப் போனது.

மும்பை அணியின் வெற்றியில் கேமரூன் கிரீன், 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார், அதிரடி வீரர் டிம் டேவிட் ஆகிய மும்மூர்த்திகளுக்கு முக்கிய பங்கு உண்டு. வெற்றியை நோக்கி கிரீன், சூர்யகுமார் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசியில் டிம் டேவிட் தனது வாண வேடிக்கையால் போட்டியை தித்திப்பாக முடித்துக் கொடுத்தார்.

ஐ.பி.எல். தொடங்கி ஆயிரமாவது போட்டியாக பதிவான இந்தப் போட்டி, வரலாற்றில் அழுத்தமாக இடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 3 போட்டிகளில் களம் கண்ட அர்ஜூன் டெண்டுல்கர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன் குவிப்பில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பங்கு என்ன? இமாலய இலக்கைத் துரத்துகையில் மும்பை இந்தியன்ஸ் அணி எத்தகைய பாணியை பின்பற்றியது? பரபரப்பான இந்தப் போட்டியின் முக்கியமான தருணங்கள் என்ன? இக்கட்டான சூழலில் இரு அணிகளும் எத்தகைய உத்திகளை கைக்கொண்டன?

 

இளம் நாயகன் ஜெய்ஸ்வால் விஸ்வரூபம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றாலும் அதில் ஆறுதலாக அம்சாக இருப்பது யாஹல்ஸிவி ஜெய்ஸ்வால் பேட்டிங் மட்டும்தான். இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் ஏதும் அடிக்கவில்லை.

ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து ராஜஸ்தான் அணியில் பெரிய ஸ்கோர் என்பது பட்லர் அடித்த 18 ரன்கள் என்பது வேதனைக்குரியது. சாம்ஸன்(14), படிக்கல்(2), ஹோல்டர்(11),ஹெட்மெயர்(8), ஜூரேல்(2) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மண்ணைக் கவ்வினர். ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியையும் ஜெய்ஸ்வால் நேற்று தனது தோளில் சுமந்து சென்றும், அனைத்தும் வீணாகியது.

தனி ஒருவனாகக் களமாடிய 21 வயதான ஜெய்ஸ்வால், அனுபவம் மிக்க பேட்ஸ்மேன் போல் நேற்று ஷாட்களை அடித்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த, 21 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

அத்தனையும் தரமான ஷாட்கள்

ஜெய்ஸ்வாலின் தரமான ஷாட்கள் அவரின் பேட்டிங் திறமைக்கு சான்றாகும். ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பந்தில் சிக்ஸர் விளாசியது, அனுபவம் மிக்க பியூஷ் சாவ்லா பந்தில் ஓவர் பாயிண்டில் சிக்ஸர், மெரிடித் ஓவரில் ஃபைன்லெக்கில் சிக்ஸர், கவர் டிரைவ் ஷாட்டில் பவுண்டரி அடித்து அரைசதம், பிரண்ட் ஸ்குயரில் ஃபுல்ஷாட் அடித்து சதத்தை நிறைவு செய்தது என ஜெய்ஸ்வால் ஷாட்கள் அனைத்தும் ஏ-கிளாஸ் ரகம்.

அதிலும் சர்வதேச அரங்கில் பேட்ஸ்மேன்களை அதிரவைக்கும் ஆர்ச்சர் பந்தில் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. 62 பந்துகளில் 124 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்டம், போராட்டம் அனைத்தும் வீணாகினாலும் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பை பந்துவீச்சு எப்படி?

மும்பை அணியின் பந்துவீச்சு நேற்று மிகவும் சுமார் ரகம் என்றுதான் கூற முடியும். குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா தவிர மற்ற எந்த பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீசவில்லை. குறிப்பாக மெரிடித் 51 ரன்களையும், அர்ஷத் கான் 39 ரன்களையும் வாரிவழங்கினர். அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 13 ரன்ரேட் அதிகபட்சமாகும். கேமரூன் கிரீனும் 10 ரன்ரேட்டில் ரன்களை வழங்கியதுதான் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய ஸ்கோர் செய்யக் காரணமாகும்.

மும்பை அணியும் ‘மூன்று வீரர்களும்’

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த வெற்றிக்கு கேமரூன் க்ரீன், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகியோரைத் தான் குறிப்பிட வேண்டும். அதிலும் இந்த சீசனில் அற்புதமாக ஆடி வரும் கேமரூன் க்ரீன் 26 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.

சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்தவுடனே அஸ்வின் பந்தில் லெக் சைடில் சிக்ஸர் விளாசினார். ராஜஸ்தான் வீரர் யார் பந்துவீசினாலும் மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் பவுண்டரி, சிக்ஸராக சூர்யகுமார் பறக்கவிட்டார்.

இவருக்கு எப்படி பந்து வீசுவதென்றே தெரியாமல் நேற்று ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் திகைத்து நின்றனர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 24 பந்துகளில்அரைசதம் அடித்தார், இந்த அரைசதத்தில் மட்டும் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள். அதாவது, 40 ரன்கள் சிக்ஸர், பவுண்டரியில் வந்தன. சூர்யகுமார் 55 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் மும்பை சேஸிங் இன்னும் வேகமாக இருந்திருக்கும்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிம் டேவிட் நேற்றைய ஆட்டத்தின் ஹீரோ. 14 பந்துகளைச் சந்தித்த டேவிட் 45 ரன்கள்(5 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி) சேர்த்து வெற்றிக்கு காரணமாகத் திகழ்ந்தார். திலக் வர்மா 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிம் டேவிட் களமிறங்கிய போது, மும்பை அணி வெற்றிக்கு 24பந்துகளில் 57 ரன்கள் தேவை என்ற நெருக்கடியில் இருந்தது. ஹோல்டர் வீசிய 17-வது ஓவரில் டேவிட் ஒரு சிக்ஸர், திலக்வர்மா அடித்த பவுண்டரியால் 14 ரன்கள் கிடைத்தன.

சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் டேவிட் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

வரலாற்றுத் தருணம்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட், திலக் வர்மா களத்தில் இருந்தனர்.

ஜேஸன் ஹோல்டர் வீசிய பந்தை டிம் டேவிட் எதிர்கொண்டார். முதல் பந்து வைடு ஃபுல்டாசாக வீசப்படவே அதை சிக்ஸருக்கு டிம் டேவிட் அனுப்பினார்.

2வது பந்தும் அவுட்சைட் ஆஃபில் ஃபுல்டாசாக ஹோல்டர் வீச, அந்தப் பந்தையும் மிட்விக்கெட் திசையில் 84 மீட்டருக்கு சிக்ஸராக டேவிட் பறக்கவிட்டார்.

3-வது பந்தையும் ஹோல்டர் ஃபுல்டாசாக வீச, மிட்விக்கெட்டில் மீண்டும் அபாரமான சிக்ஸராக டிம் டேவிட் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

ஆஸ்திரேலிய வீரரான டிம் டேவிட் 14 பந்துகளில் 5 சிக்ஸர், 2பவுண்டரி உள்ளிட்ட 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஹோல்டருக்கு கடைசி ஓவர் கொடுத்தது சரியா?

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டரான ஜேஸன் ஹோல்டர், பேட்டிங் ஆல்ரவுண்டரேத் தவிர பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அல்ல. டி20 போட்டிகளுக்கும் புதியவர், நெருக்கடி நேரத்தில் பந்துவீசி அனுபவம் இல்லாதவர்.

அதுமட்டுமல்லாமல் டிம் டேவிட் போன்ற உயரமான, வலுவான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக யார்கர்களை துல்லியமாக வீச வேண்டும், யார்கர்கள் சற்று தவறினாலும், பந்தை சிக்ஸரில்தான் பார்க்க நேரிடும். இதே கதைதான் நேற்றும் நடந்தது. யார்கர் வீசுவதற்கும் போதுமான அனுபவமும் ஹோல்டருக்கு இல்லை.

கடந்த 3 ஓவர்களையும் மோசமாக வீசிய ஹோல்டரிடமே கடைசி ஓவரையும் வழங்கியது, கேப்டன் சாம்ஸன் வெற்றியை தூக்கி மும்பையிடம் கொடுத்ததற்கு சமம்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ராஜஸ்தான் தோல்விக்கு யார் காரணம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்த 213 ரன்கள், டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் என நம்பப்பட்டது. அதிலும், வான்ஹடே மைதானம் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் கூட 20 ஓவர்களில் இதை சேஸிங் செய்வது கடினம் என நம்பப்பட்டது.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 பந்துவீச்சாளர்களால்தான் நேற்றைய தோல்வி எழுதப்பட்டது என்றால் மிகையல்ல. முதலாவது ஜேஸன் ஹோல்டர், குல்தீப் சென், டிரன்ட் போல்ட். இதில் 3.3 ஓவர்களை வீசிய ஜேஸன் ஹோல்டர் 55 ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதன் மூலம் டெத்ஓவர்கள் வீசுவதற்கு லாயக்கில்லாத பந்துவீச்சாளராகினார்.

சர்வதேச அளவில் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் டிரன்ட் போல்ட் கூட நேற்று 43 ரன்களை வாரிக்கொடுத்தார். குல்தீப் ஒரே ஓவரில் 20 ரன்களைக் கொடுத்தார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து, 118 ரன்களை வழங்கிய வள்ளல்களாகினர். இந்த 3 பந்துவீச்சாளர்களைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

டெத் ஓவரை ஹோல்டருக்குப் பதிலாக சஹல் அல்லது டிரன்ட் போல்ட் அல்லது சந்தீப் சர்மாவுக்கு கேப்டன் சாம்ஸன் வழங்கியிருக்கலாம்.

200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து, கைமேல் கிடைத்த வெற்றியை ராஜஸ்தான் அணி தாரை வார்த்துவிட்டது. 200 ரன்களை அடித்தும் அதை டிஃபெண்ட் செய்யக்கூடிய முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது என்பது முழுக்கமுழுக்க பந்துவீச்சாளர்களின் தோல்வியாகவும், திட்டமிடப்படாத கேப்டன்ஷிப்பாகவும்தான் பார்க்கப்பட வேண்டும்.

அஸ்வினும் 6 சிக்ஸர்களும்

அதேசமயம் ரவிச்சந்திர அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சஹலும் 3 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளி்ல் மட்டும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் மைல்கல்லை எட்டினார். இந்த சீசனில் 200 பந்துகளை வீசியுள்ள அஸ்வின் இதுவரை 6 சிக்ஸர்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐபிஎல் போட்டியில் 10 அணிகளாலும் விலைக்கு வாங்கப்படாமல், பதிலி வீரராக உள்ளே வந்த சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து ரோஹித் சர்மா விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த 3 வீரர்களும் தங்களின் பங்களிப்பை சரியாக அளித்தனர்.

கடைசி 4 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது.இந்த ரன்களைக் கூட ராஜஸ்தான் அணியால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனைதான். இந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு திருப்புமுனையாக அமைந்த தருணங்கள் ஹோல்டர் ஓவரில்தான் அமைந்தன என்றாலும் அது மிகையல்ல. ஹோல்டர் வீசிய முதல் ஓவரிலேயே சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரிகளுடன் 14 ரன்கள் குவித்தார், அவரின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி டிம் டேவிட் வெற்றி பெற வைத்தார்.

800க்கும் அதிகமான ரன்கள்

ஐபிஎல் தொடரில் நேற்றுநடந்த 2 போட்டிகளில் மட்டும் மொத்தம் 800 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய ஆட்டமும் 200 ரன்களை சேஸிங் செய்த ஆட்டமாக அமைந்தது. அதேபோல் இந்த ஆட்டமும் 213 ரன்களை சேஸிங் செய்த போட்டியாக வரலாறு படைத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று பிறந்தநாள், அவரின் இந்த பிறந்தநாளுக்கு மும்பை வீரர்கள் மிகச்சிறந்த பரிசாக இந்த வெற்றியை அளித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜெய்ஸ்வாலுக்கு புகழாரம்

வெற்றிக்குப்பின் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ சேஸிங்கைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த போட்டியிலும் இதேபோன்று நெருக்கமாக வந்து தோற்றோம். டிம் டேவிட் திறமையான பேட்ஸ்மேன். எங்களின் அணியில் சில மாற்றங்களை செய்தது கடினமானதுதான், சூழலுக்கு ஏற்றார்போல் வீரர்களை சேர்க்கவும் மாற்றங்கள் செய்தோம்.

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் அற்புதமாக இருந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டத்தை கடந்த ஆண்டே பார்த்தேன், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த பேட்டிங் பவரை எங்கிருந்து பெற்றீர்கள் என்று அவரிடம் கேட்டிருக்கிறேன், இந்திய அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் சரியானவர்” எனத் தெரிவித்தார்

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

பட மூலாதாரம்,BCCI/IPL

டிம் புயலில் சிக்கிய ஹோல்டர்

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தை திருப்ப எங்களுக்கு நம்பிக்கை கிடைத்தது. ஆனால், டிம் டேவிட் ஆட்டம் ஸ்பெஷலானது. கடைசி நேரத்தில் சிறிது பனிப்பொழிவு இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 9 போட்டிகளிலும் நாங்கள் ஆடிய ஆட்டங்கள் வெற்றியோ, தோல்வியோ அனைத்திலும் உயர்ந்த தரத்தை அளித்திருக்கிறோம்.

ஜெய்ஸ்வால் முயற்சி வீணாகியது. தனிப்பட்ட முறையில் அவரைப் பார்த்து மகிழ்கிறேன். அஸ்வின், சஹல் சிறப்பாகப் பந்துவீசனர், இருவரின் ஓவர்களும் விரைவாக முடிந்துவிட்டது. போல்ட், சந்தீப் டெத் ஓவர்களை நன்குவீசினர். ஆனால் ஹோல்டரின் ஓவரால் மும்பைக்கு பெரிய விலை கொடுத்துவிட்டோம், டேவிட்டின் புயலில் ஹோல்டர் சிக்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cl741dd9rwro

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ஏராளன்.நான் தான் இடை சுகம் பச்சை குத்துறனான்.சாப்பிட்டு விட்டு மொய் எழுதாமல் போகக் கூடாது எல்லோ.😃

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, சுவைப்பிரியன் said:

நன்றி ஏராளன்.நான் தான் இடை சுகம் பச்சை குத்துறனான்.சாப்பிட்டு விட்டு மொய் எழுதாமல் போகக் கூடாது எல்லோ.😃

நான் சுவியண்ணா என்று நினைத்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் அப்பப்ப உங்களுக்கு குத்துறனான் மொய் ......!  😂

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.