Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனி: புறக்கணிக்கப்பட்ட வீரர்களை வின்னர்களாக மாற்றும் மாய வித்தைக்காரர்

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

2008-ம் ஆண்டு...

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அறிமுக தொடர் அது. 8 அணிகள் களம் கண்ட அந்த தொடரில் ரசிகர்களின் பார்வை முழுவதும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீதே குவிந்திருந்தது. கிப்ஸ், கில்கிறிஸ்ட், சைமன்ட்ஸ், அப்ரிடி போன்ற அதிரடியில் மிரட்டும் அசகாய சூரர்கள் நிறைந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, அந்த அணியோ லீக் சுற்றில் 14 போட்டிகளில் 12-ல் தோல்வியுற்று கடைசி இடத்தையே பிடித்தது.

அணி எவ்வளவு பலமிக்கதாக தோன்றினாலும், வி.வி.எஸ். லட்சுமணனின் கேப்டன்சி சரியில்லை என்று வெளிப்படையாகவே பேசினார் ஷாகித் அப்ரிடி. முதல் தொடரின் நடுவிலேயே கேப்டனை மாற்றிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கில்கிறிஸ்ட் தலைமையில் அடுத்த ஆண்டு கோப்பையை வென்றது வரலாறு.

இதேபோன்று தொடருக்கு நடுவே கேப்டனை மாற்றிய வரலாறு சென்னை சூப்பர் கிங்சுக்கும் இருக்கிறது. முந்தைய இரு தொடர்களில் களத்தில் மிகச்சிறந்த வீரராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜாவை, கடந்த தொடரில் கேப்டனாக்கி அழகு பார்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனிக்கு அடுத்தபடியாக அணியை முன்னோக்கி வழிநடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா ஏமாற்றத்தையே பரிசளித்தார். கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்த அவரிடம், கேப்டன்சி தந்த அழுத்தம் அப்பட்டமாக தெரிந்தது. அது அவரது ஆட்டத்திலும் எதிரொலிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விப்பாதையில் பயணித்தது.

கடந்த தொடரின் கடைசிப் பகுதியில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. லீக் சுற்றில் சென்னை அணியால் 9-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி பிளேஆஃபுக்கு முன்னேறாமல் போன 2-வது தொடர் அதுதான். 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீகரத்தில் நடத்தப்பட்ட தொடரில் லீக் சுற்றோடு சென்னை வெளியேறிவிட்டது. புதிய கேப்டனை வெள்ளோட்டம் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரலாற்றுத் தோல்வியே பரிசாக கிடைத்தது.

மிக மோசமாக சென்ற ஐ.பி.எல். தொடரை முடித்த அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் நடப்புத் தொடரிலும் களம் கண்டுள்ளது. அணியில் பெரிய மாற்றம் ஏதும். அதே வீரர்களே களம் காண்கிறார்கள். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை மிகச்சிறந்த 'கம்பேக்' கொடுத்துள்ளது. தொடக்கத்திலேயே முதல் 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, 'ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எப்போதும் நாங்கள் வெற்றிகரமான அணிதான்' என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தோல்வியுற்ற அதே அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய சாதுர்யம்

சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கேப்டன்சி தான். ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி, அதே அணியை, அதே வீரர்களை வைத்துக் கொண்டு தனது வழக்கமான தனித்துவமான அணுகுமுறையால் அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திருப்பியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மற்ற அணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது தோனியின் கேப்டன்சி தான். சாதாரண வீரர்களைக் கூட மேட்ச் வின்னர்களாக மாற்றும் திறமை தோனியின் கேப்டன்சிக்கு உண்டு.

ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான அணியாக பார்க்கப்படும் மற்றொரு அணியான மும்பை இந்தியன்சை எடுத்துக் கொண்டால், சச்சின், ஜெயசூர்யா, ஜாகீர்கான், ரோகித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார், பொல்லார்ட், பும்ரா, மலிங்கா என்று ஒவ்வொரு கால கட்டத்திலுமே பெரிய நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

பல தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய மேட்ச் வின்னர்கள் நிரம்பியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால், சென்னை சூப்பர் கிங்சை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு தொடரிலும் ஒரு புதிய மேட்ச் வின்னர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, அதன் பிறகு தற்போது ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸின் தூணாக நீண்ட காலம் விளையாடி வருகிறார்கள்.

மற்றபடி, ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக அதிகம் அறியப்பட்டிராத அல்லது ஃபார்மில் இல்லாத மற்ற அணிகளில் சொதப்பிய வீரர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் வின்னர்களாக உருவாக்கியுள்ளது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் அணுகுமுறையும், கேப்டன் தோனியின் கேப்டன்சியுமே காரணம்.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன்சியில் தனித்துவமான அணுகுமுறை

கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படும் தோனி களத்தில் எந்தவொரு கட்டத்திலும் நிதானம் இழக்காதவர். அணி எப்போதெல்லாம் இக்கட்டான நிலையில் இருக்கிறதோ அப்போதெல்லாம் மிக நேர்த்தியாக செயல்பட்டு லக்கானை சரியான திசையில் செலுத்தக் கூடியவர்.

அணி வீரர்களின் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்பவர். அத்துடன், எதிரணி வீரர்களின் பலம், பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப வியூகங்களை வகுத்து ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக திருப்பக் கூடியவர். ஆட்ட நுணுக்கம், புள்ளிவிவரம், மதி நுட்பம், புத்திசாலித்தனம் போன்ற எல்லாவற்றையும் தாண்டி தனது உள்ளுணர்வின் அடிப்படையில் தைரியமாக முடிவெடுக்கக் கூடியவர் என்று விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.

இந்திய அணிக்கு முதன் முறையாக, அதுவும் அறிமுக டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக டை ஆன போட்டியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட 'பவுல் அவுட்' முறையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உத்தப்பாவை பந்துவீசச் செய்தார் தோனி.

அதே பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பான இறுதிப் போட்டியில் நெருக்கடியான தருணத்தில் ஜோகிந்தர் சர்மாவுக்கு வழங்கி அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன் பக்கம் திருப்பினார் தோனி.

யாரும் பரீட்சித்து பார்க்கக் கூட விரும்பாத செயல்களை உலகக்கோப்பை போன்ற முக்கியமான, அதுவும் கேப்டனான முதல் தொடரிலேயே செய்யத் துணிந்த தோனி, ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதுபோன்ற புதுமையான, துணிச்சலான முடிவுகளால் பலமுறை வெற்றி தேடித் தந்துள்ளார். சூதாட்டத் தடையால் ஐ.பி.எல். தொடரில் இருந்து 2 ஆண்டுகள் விலகியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2018-ம் ஆண்டு மீண்டும் வந்த போது 'மூத்தோர் அணி' என்று கேலி செய்யப்பட்டது. காரணம், தோனி உள்பட அணியில் இருந்த ஷேன் வாட்சன், முகமது தாஹிர், பிராவோ, ஹர்பஜன் என பலரும் 35 வயதை தாண்டியிருந்தன. அந்த வீரர்களைக் கொண்டே, இளமைக்கிடையிலான போட்டியாக கருதப்படும் ஐ.பி.எல். டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் கோப்பையை வென்று கொடுத்தார்.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சு பலவீனத்தை நிவர்த்தி செய்யும் அபார வியூகம்

ஐ.பி.எல். தொடர் வரலாற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட் எப்போதுமே மிகச்சிறந்த ஒன்றாக இருந்ததில்லை. சென்னையின் பந்துவீச்சு பலவீனங்களை தனது அபாரமான பீல்டிங் வியூகங்கள் மூலம் நிவர்த்தி செய்து விடுகிறார் தோனி. பல் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட் அபாயகரமான ஒன்றாக மாறும் சூட்சுமம் இதுதான். இதில்தான் தோனி என்ற கேப்டன் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தனித்து நிற்கிறார்.

நடப்புத் தொடரில் காயம் காரணமாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், விலகியதும், தீபக் சாஹர் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்காததும் சென்னை அணியின் பந்துவீச்சு பலவீனத்தை மேலும் மோசமாக்கியது. அதிக விலை கொடுத்து வாங்கிய இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்சும் முழு உடல் தகுதியுடன் இருக்கவில்லை. சிஎஸ்கேவின் ரெண்டு ஸ்பின்னர்களும் சிறப்பான ஃபார்மில் இருக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், டெத் ஓவர்களை வீசுவதற்கு சென்னை அணியில் சரியான வேகப்பந்துவீச்சாளர்களே இல்லை. அந்த இடத்தில்தான் தோனி தனது அனுபவத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டினார்.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளம் வீரர்களை தயார் செய்யும் மதிநுட்பம்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது, கடைசிக் கட்டத்தில் பதற்றத்துடன் காணப்பட்ட மதிஷா பதிராணாவிடம் இரண்டு பாலுக்கு ஒருமுறை அருகில் சென்று, டெத் ஓவர்களில் எப்படி வீச வேண்டும் என்று தோனி ஆலோசனை வழங்கியதை பார்க்க முடிந்தது.

ஆசிரியர் மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பது போன்ற தோனியின் இந்த செயல்பாடே அவரது வெற்றிச் சூத்திரம். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இதை முன்னிறுத்தி செய்த ட்வீட் ரசிகர்களிடையே வைரலாகிப் போனது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

குட்டி மலிங்கா என்று வர்ணிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த மதிஷா பதிராணாவை தோனி பட்டை தீட்டினார். ரன்களை வாரி வழங்கிய இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டேவை தட்டிக் கொடுத்து உத்வேகம் அளித்தார் தோனி.

இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் ஓரளவு சிறப்பாக இவர்கள் செயல்பட, பிற்பாதியில் தீபக் சாஹரும் அணியில் இணைய, அவர்களுடன் தோனியின் வியூகங்களும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றிமேல் வெற்றி தேடித் தந்து கொண்டிருக்கின்றன.

அதன் உச்சக்கட்டமாகவே, இதுவரை ஒருமுறை கூட வென்றிராத குஜராத் டைட்டன்ஸ் அணியை முதல் முறையாக ஆல் அவுட் செய்து அணிக்கு வெற்றித் தேடித் தந்திருக்கிறார்கள் பந்துவீச்சாளர்கள்.

குஜராத் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஆட்டத்தின் அப்போதைய சூழல், ஆடுகளத்தின் தன்மை, பேட்ஸ்மேனின் மனநிலை ஆகியவற்றைப் பொருத்து அவ்வப்போது பீல்டிங் வியூகங்களை மாற்றி அமைத்து, பொறியில் விழச் செய்தார்.

அதிலும், குஜராத் அணிக்கு பேட்டிங்கில் தூணாக விளங்கும் இளம் நட்சத்திரம் சுப்மான் கில்லுக்கு தோனி வகுத்த வியூகம் சிறப்பானது.

எதிரணி பேட்ஸ்மேனை 'ஸ்கெட்ச்' போட்டு காலி செய்யும் புத்திசாலித்தனம்

சுப்மான் கில் களத்தில் நிற்கும் ஒவ்வொரு கனமுமே ஆபத்தானது என்பதை உணர்ந்த தோனி, அவரை அடித்தாட தூண்டும் வகையில் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிராணாவை பந்துவீசச் செய்தார். சுப்மான் கில் நிலைத்தால் சென்னை காலி என்பதால்தான், தீபக் சாஹருக்கு கடைசி ஓவராக இருந்தாலும் அவரையே அடுத்த ஓவரை வீசச் செய்தார் தோனி.

அதற்கு பலனும் கிடைத்தது. தோனி விரித்த வலையில் சுப்மான் கில் சிக்கிக் கொண்டார். சுப்மான் கில் அடித்தாடும் உத்வேகத்தில் இருந்ததை கண்டு கொண்ட தீபக் சாஹர் 111 கி.மீ. வேகத்தில் பந்தின் வேகத்தை குறைத்து வீச, அவரசரப்பட்டு புல் ஷாட் ஆடிய கில் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த கான்வேயிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.

தோனி நினைத்தபடியே ஆட்டமும் படிப்படியாக சென்னை வசம் வந்தது.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,BCCI/IPL

நிராகரிக்கப்பட்ட வீரர்களை மேட்ச் வின்னர்களாக்கும் வித்தை

பதிராணா போல் தோனி பட்டை தீட்டிய இளம் வீரர்கள் ஏராளம். ருதுராஜ் கெய்க்வாட் தீபக் சாஹர், தீட்ஷனா போன்ற பல இளம் வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் ஜொலிக்க தோனியும் ஒரு காரணம். வயது அதிகம், பார்மில் இல்லை என்பன போன்ற காரணங்களால் மற்ற அணிகளால் புறக்கணிக்கப்பட்ட வீரர்களை ஏலத்தில் வாங்கி அவர்களை மேட்ச் வின்னர்களாக்குவதும் தோனியின் அணுகுமுறைதான். ஷேன் வாட்சன், மொயீன் அலி, ராபின் உத்தப்பா என்று அந்த பட்டியல் மிக நீண்டது. நடப்புத் தொடரில் அஜிங்கியா ரஹானே அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போதைய சிஎஸ்கே அணியில் விளையாடுபவர்களில் ஜடேஜா, மொயீன் அலி ஆகிய 2 பேரைத் பேரை தவிர வேறு யாரும் எந்த நாட்டு தேசிய அணியிலும் இடம் பிடித்து சர்வதேச அளவில் விளையாடுபவர்கள் அல்ல. இத்தகைய பலவீனமான அணியை வைத்துக் கொண்டுதான் இப்போது மட்டுமல்ல, ஐ.பி.எல். வரலாறு நெடுகிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிகரமானதாகவே தொடரச் செய்திருக்கிறார் கேப்டன் தோனி.

சி.எஸ்.கே. உடன் தோனியின் பிணைப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தோனிக்கும் இடையிலான பிணைப்பே அலாதியானது. சென்னையை தனது இரண்டாவது வீடு என்றே தோனி பலமுறை வர்ணித்திருக்கிறார். சூதாட்டத் தடையால் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ஐ.பி.எல்.லுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பிய தருணம் தோனிக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக அமைந்தது. அன்றைய இரவு உணவின் போது தோனி உணர்ச்சி மேலிட கண்ணீர் விட்டதாக நேற்றைய போட்டியின் நடுவே வர்ணனையின் போது தெரியப்படுத்தினார் ஹர்பஜன் சிங். அப்போது உடனிருந்த முகமது தாஹிரும் அதனை ஆமோதித்தார். இருவருமே அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்கள். அத்துடன் தோனியின் கேப்டன்சியையும் ஹர்பஜன்சிங் வெகுவாக புகழ்ந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

வெற்றிகரமான கேப்டன்

டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என மூன்று வித போட்டிகளிலும் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைமை தாங்கி சுமார் 9 ஆண்டுகள் வழிநடத்திய தோனி, விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் எல்லாவற்றிற்கும் மேலாக கேப்டன் என மூன்று பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியுள்ளார்.

விக்கெட் கீப்பர் என்ற அதிக உழைப்பு தேவைப்படும் பணியுடன் பேட்ஸ்மேனாக அணிக்கு சிறப்பான பங்களிப்பையும் செய்துள்ள தோனி, கேப்டனாக 140 கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு தரும் மிக அதீதமான மன அழுத்தங்களையும் சமாளித்து வெற்றி கண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் முதல் இன்றுவரை கேப்டனாக இருந்து ரசிகர்களின் நம்பிக்கை என்னும் சிகரத்தில் வெற்றிகரமான தலைவராக உயர்ந்து நிற்கிறார் தோனி.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 226 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள தோனி 132 போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார்.

இந்த வெற்றி சதவிகிதம் ஐ.பி.எல்லுக்கு புதிதாக வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயேன்ஸ்ட் அணிகளுக்கு மட்டுமே உண்டு. 41 வயதை எட்டிவிட்ட நிலையிலும், டெத் ஓவர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேனாக தோனியே இருக்கிறார். டெத் ஓவர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 160-க்கும் அதிகம்.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓய்வு எப்போது? என்று விடாது துரத்தும் கேள்வி

நடப்பு ஐ.பி.எல். தொடர் தோனியின் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கலாம் என்றே தொடக்கம் முதலே கூறப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் ஒவ்வொரு போட்டியையுமே தோனியின் கடைசிப் போட்டியாக கருதியே நாடெங்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

எந்த அணியின் சொந்த மைதானமாக இருந்தாலும் தோனி என்ற மந்திரச் சொல் அவற்றையெல்லாம் மஞ்சள்மயமாக்கி சென்னை அணியின் ரசிகர் கூட்டமாக மாற்றிவிட்டிருந்தது.

ஒவ்வொரு போட்டி முடிவிலும் தோனியிடம் ஓய்வு குறித்த கேள்வியை நெறியாளர்கள் முன்வைப்பதும், அதற்கு பிடிகொடுக்காமல் தோனி பதில் கொடுப்பதுமே விடாமல் தொடர்கிறது.

நேற்றைய ஆட்டத்தின் முடிவிலும் அதே கேள்வியை தோனி எதிர்கொண்டார். அதற்கும் வழக்கம் போல், "எனக்குத் தெரியாது. அதுகுறித்து தீர்மானிக்க 8, 9 மாதங்கள் அவகாசம் இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் மினி வீரர்கள் ஏலம் நடக்கவிருக்கிறது. ஆகவே, அந்த தலைவலி இப்போது எதற்கு?" என்று பதில் கூறி நழுவிவிட்டார் தோனி.

"வீரராகவோ அல்லது களத்திற்கு வெளியிலோ நான் எப்போதும் சி.எஸ்.கே.வுக்காக இருப்பேன்." என்றும் உணர்ச்சி பொங்கக் கூறினார் கேப்டன் தோனி.

தோனி - சிஎஸ்கே கேப்டன்

பட மூலாதாரம்,BCCI/IPL

ரசிகர்கள் மனதில் என்றுமே 'தல' தோனிதான்

ஐபி.எல். வரலாற்றில் பங்கேற்ற 14 தொடர்களில் பிளேஆஃப் சுற்றுக்கு 12 முறையும், இறுதிப்போட்டிக்கு 10 முறையும் முன்னேறி சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இப்போது பத்தாவது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது. குஜராத் டைட்டன்சோ, லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸோ அல்லது பரம வைரியான மும்பை இந்தியன்ஸோ எது எதிரணியாக இருந்தாலும் தனது மந்திர வியூகத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கோப்பையை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

அமைதி, அரவணைக்கும் பண்பு, எளிமையான அணுகுமுறை, தனித்துவமான முடிவுகள், இளைஞர்களுக்கு வழிகாட்டும் தோழமை என்று தலைவனுக்கான அத்துணை தகுதிகளும் நிரம்பி இருப்பதால்தான் ரசிகர்களின் மனதில் 'தல' தோனியாக உயர்ந்து நிற்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/czkxzjr0kr1o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ராஜதந்திரமா? விதிமீறலா? – பதிரனவுக்காக தோனி களத்தில் செய்த காரியம்!

சிஎஸ்கே இளம் பந்துவீச்சாளர்  பதிரனவுக்காக நடுவர்களிடம் வாக்குவாதம் செய்து நேரத்தை கடத்திய தோனியின் செயலுக்கு இணையத்தில் பாராட்டும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

சேப்பாக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களில் வெற்றிப்பெற்று சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய குஜராத் 157 ரன்களுக்கு ஓல் அவுட்டானது. நேற்றையப் போட்டியில் தோனியின் ஃபீல்டிங் வியூகங்கள் அபாரமாக இருந்தது. குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பீல்டிங்கை அமைத்து விக்கெட்டுகளை அள்ளினார் தோனி.

Untitled-1-2.jpg

மேலும் நேற்றையப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களான தீக்ஷனா மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சு அருமையாக அமைந்து வெற்றிக்கு வித்திட்டது. இளம் பந்துவீச்சாளரான பதிரனவை சிறப்பாக கையாண்டார் தோனி.

அப்படி என்ன செய்தார் தோனி?
குஜராத் பேட்டிங்கின்போது 16வது ஓவரை வீச பதிரனாவை அழைத்தார் தோனி. அப்போது, அவரை கள நிடுவர்கள் திடீரென்று தடுத்தனர். இதனால் சற்றே கடுப்பான தோனி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிரன களத்தில் 8 நிமிடத்திற்கு மேலாக காணவில்லை என்றும், இதனால் பதிரானா எவ்வளவு நேரம் சென்றாரோ, அவ்வளவு நேரம் களத்தில் ஃபீல்டிங்கில் நின்றால் தான் பந்துவீச முடியும் என்றும் நடுவர்கள் கூறினர்.

Untitled-2-2.jpg

கிரிக்கெட்டின் விதிப்படி 8 நிமிடங்களுக்கு மட்டும் தான் களத்திற்கு வெளியே செல்லலாம். ஆனால் பதிரன ஒரு நிமிடம் தாமதமாக 9 நிமிடம் எடுத்துக்கொண்டு களத்திற்கு வந்தார். அதனால் பதிரன 5 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என நடுவர்கள் கூறினர். ஆனால் இதனை மறுத்த தோனி நடுவர்களிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே நேரத்தை கடத்தினார்.
அதற்குள் 5 நிமிடங்கள் கடந்ததால், பதிரனவை மீண்டும் பந்து வீச அழைத்தார் தோனி. ‘தோனி இதுபோன்று செய்தது தவறு, அவ்வாறு அவர் நேரத்தை கடத்தியிருக்க கூடாது’ என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தோனியின் ராஜதந்திரம் என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

https://thinakkural.lk/article/255226

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான்- ஹர்திக் பாண்ட்யா

சி.எஸ்.கே. அணியிடம் தோற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறாமல் போனமை தொடர்பில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

நாங்கள் பலமாக இருந்த போதும் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்களை கூடுதலாக விட்டு கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிறைய விடயங்களை நாங்கள் சரியாக செய்தோம். சில ஓவர்களில் ரன் அதிகமாக சென்றுவிட்டது.

screenshot26568-1666103575-300x169.jpg

ஆட்டத்தில் பனி வரும் என எதிர்பார்த்தேன். வரவில்லை. நாங்கள் பந்து வீச்சு, பெட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயற்படவில்லை.

இறுதிப் போட்டியில் நுழைய எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம்.

பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான். அவரை போன்று பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம்.

டோனி அடிக்கடி பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். பாராட்டு எல்லாம் டோனியை சாரும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் அவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/255230

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பையின் 'மாயாவி' ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் வரலாற்றை மாற்றி எழுதி இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியை எட்டியுள்ளது. அதாவது, குஜராத் டைட்டன்சை முதன் முறையாக சிஎஸ்க. வென்றதைப் போல, மும்பை இந்தியன்சும் முதன் முறையாக லக்னௌ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையைக் கணித்து இரு அணிகளும் ஒருவரை ஒருவர் வீழ்த்த வியூகங்களை வகுத்திருந்த போதிலும், லக்னௌ அணிக்கு நேற்றைய தினம் மோசமான நாளாகிப் போனது.

டாஸ் தொடங்கி முதல் பந்து வீசப்பட்டதில் இருந்தே அந்த அணியின் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியானதைப் பார்க்க முடிந்தது. பேட்டிங், பந்துவீச்சு மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்திய மும்பை வீரர்கள் ஆட்டத்தில் அனைத்து வகையிலும் ஆதிக்கம் செலுத்தியதைப் பார்க்க முடிந்தது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது எது? லக்னௌவின் திட்டங்கள் தோற்றுப் போனது எஙகே? மும்பையின் வெற்றிக்கு வழிகுத்த அந்த 2 ஓவர்களில் நடந்தது என்ன? 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பையின் மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஐ.பி.எல்,லில் புரிந்த சாதனை என்ன?

ஐபிஎல் லீக் சுற்றில் மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்த லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளேஆஃப் சுற்றின் வெளியேற்றுதல் போட்டியில் மோதின.

புள்ளிவிவரமும், முந்தைய வரலாறும் லக்னௌ அணிக்கே சாதகமாக இருந்தன. ஐபிஎல் தொடரில் புதிதாக உதயமான இரு ஜாம்பவான்ககளில் ஒன்றான லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இதற்கு முன்பு மோதிய 3 ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வியைச் சந்தித்திருந்தது. நடப்புத் தொடரில் லீக் சுற்றின் கடைசிப் போட்டி முடிவு தெரியும் வரை காத்திருந்த தட்டுத் தடுமாறியே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

இந்த அம்சம் லக்னௌவுக்கு சாதகமாக அமைந்திருந்த அதேநேரத்தில், பிளேஆஃப் சுற்றில் அதிகபட்ச வெற்றி சதவீதத்தைக் கொண்டிருக்கும் அணி என்பது மும்பை இந்தியன்சுக்கு உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்திருந்தது.

சென்னை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வியூகம்

சென்னை ஆடுகளம் மெதுவானது, சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடியது என்பதைக் கருத்தில் கொண்டே இரு அணிகளும் ஆடும் லெவனை தேர்வு செய்திருந்தன.

நடப்புத் தொடரில் லக்னௌ வீரர்கள் ஆஃப் ஸ்பின்னுக்கு திணறியதைக் கருத்தில் கொண்டு மும்பை அணி ஹிரித்திக் ஷோகீனுக்கு அணியில் இடம் கொடுத்தது. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இம்பாக்ட் பிளேயர் லிஸ்டில் குமார் காத்திகேயாவையும் மும்பை தயாராக வைத்திருந்தது.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

மறுபுறம் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் குருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருடன் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இம்பாக்ட் பிளேயர் லிஸ்டில் அமித் மிஸ்ராவும் இடம் பெற்றிருந்தார்.

லக்னௌவின் சுழல் வியூகத்தைத் தகர்த்த மும்பை தொடக்க ஜோடி

மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ய, எதிர்பார்க்கப்பட்ட படியே லக்னௌ அணியின் கேப்டன் குருணால் பாண்டியா முதல் ஓவரை வீச வந்தார். ஐபிஎல் வரலாற்றில் அவர் முதல் ஓவரை வீசுவது இது 6வது முறை.

நடப்புத் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவர் தொடங்கி பவர் பிளேவில் 3 ஓவர்களை வீசி, அபாயகரமான கோலி - டூப்ளெஸ்ஸி ஜோடியையே அவர் துரிதமாக ரன் சேர்க்க விடாமல் கட்டிப் போட்டிருந்தார். அதே நம்பிக்கையுடன் நேற்றும் முதல் ஓவரை வீச வந்த குருணால் பாண்டியாவை பவுண்டரியுடன் வரவேற்றார் இஷான் கிஷன்.

எனினும் அந்த ஓவரில் பெரிதாக ரன்கள் வரவில்லை. ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி மும்பையின் அதிரடியை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார் இஷான் கிஷன். அவ்வளவுதான்... அதன் பிறகு மும்பை அணியின் ரன் ரேட் எந்த இடத்திலும் கீழே இறங்கவில்லை.

குருணால் வீசிய, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் ஷர்மா, 3வது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் குருணால் பாண்டியா 16 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஏமாற்றிய சுழல் - கைகொடுத்த வேகப்பந்துவீச்சு

பெரிதும் எதிர்பார்த்த சுழற்பந்துவீச்சு காலை வார, லக்னௌ அணி வேறு வழியின்றி வேகப்பந்துவீச்சுக்கு மாறியது. மூன்றாவது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் வீச வந்தார்.

சுழலுக்கு உதவும் சென்னை ஆடுகளத்தில் முதல் 3 ஓவர்கள் சுழற்பந்துவீச்சில் 30 ரன்களை விளாசிவிட்ட தெம்பில், தனக்கு விருப்பமான வேகப்பந்துவீச்சு வந்ததும் ரோகித் சர்மா அவசரப்பட, ஆயுஷ் படோனி கைகளில் கேட்சாகி வெளியேறினார்.

அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனை யாஷ் தாகூர் தனது வேகப்பந்துவீச்சில் வெளியேற்றினார்.

அதிரடியில் மிரட்டிய கிரீன் - ஸ்கை கூட்டணி

மும்பையின் தொடக்க ஜோடி வீழ்ந்தாலும், அடுத்து கைகோர்த்த கேமரூன் கிரீன் - சூர்யகுமார் கூட்டணி லக்னௌ பந்துவீச்சாளர்களை அதிரடியில் மிரள வைத்தது.

முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய கேமரூன் கிரீன், அடுத்தடுத்து பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டியபடி இருந்தார். மறுமுனையில் சூர்யகுமாரும் ஏதுவான பந்துகளை ஓடவிட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட் வெகுவாக எகிறியது.

அவர்களுக்கு வசதியாக சுழலுக்கு ஏற்ற சென்னை ஆடுகளத்தில் லக்னௌ அணி வேகப்பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து பயன்படுத்த, கிடைத்த வாய்ப்பை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

ரவி பிஷ்னோய் சிங்கிள்ஸ் வகையில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க அடுத்து வந்த மோசின்கான் ஓவரில் கிரீன் - ஸ்கை கூட்டணி ரன்ரேட்டை ஈடுகட்டிவிட்டது. இருவருமே தலா ஒரு சிக்சரை பறக்கவிட்டனர்.

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டிற்கு 98 ரன்களைத் திரட்டிவிட்டது. நடப்புத் தொடரில் சென்னை மைதானத்தில் இதற்கு முன்பு இருமுறை மட்டுமே 10 ஓவர்களில் இந்த ரன் கிடைத்துள்ளது.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஒரே ஓவரில் கிரீன், ஸ்கையை சாய்த்த நவீன்

நடப்புத் தொடரில் சிறந்த பந்துவீச்சுக்காக அல்லாமல், நட்சத்திர வீரர் விராட் கோலியுடனான மோதலால் பெரிதும் அறியப்பட்ட வீரராகிப் போன நவீன் உல் ஹக் நேற்றைய ஆட்டத்தில் ஜொலித்தார்.

11வது ஓவரை வீச வந்த அவர், லக்னௌ அணி விரும்பிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அந்த ஓவரின் 4வது பந்தை 107 கி.மீ வேகத்தில் மெதுவாக லெக் கட்டர் வீசி கேமரூன் கிரீனை கிளீன் போல்டாக்கினார். அதேபோல், கடைசிப் பந்தை 105 கி.மீ. வேகத்தில் ஆஃப் கட்டராக வீசி நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமாரை வெளியேற்றினார். இதன் பின்னரே மும்பை அணியின் ரன் குவிக்கும் வேகம் கட்டுக்குள் வந்தது.

18வது ஓவரில் மும்பையின் புதிய வளரும் வீரரான திலக் வர்மாவையும் காலி செய்த நவீன், நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்து நம்பிக்கை கொடுத்தார்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

வதேரா அதிரடியால் சவாலான ஸ்கோரை நிர்ணயித்த மும்பை

மும்பை அணியின் ரன் ரேட் மெல்ல மெல்ல சரியத் தொடங்கிய நேரத்தில் உள்ளே வந்த நேஹல் வதேரா கடைசிக் கட்டத்தில் சிறிது நேரம் அதிரடி காட்டி அணி சவாலான இலக்கை எட்ட உதவினார்.

அவர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 23 ரன்களை சேர்த்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்களையும் சூர்யகுமார் 20 பந்துகளில் 33 ரன்களையும் சேர்த்தனர்.

லக்னௌ அணி தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர்களான யாஷ் தாகூர் 3 விக்கெட்டுகளையும், மோசின் கான் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

சுழற்பந்துவீச்சுக்கு உகந்த மெதுவான சென்னை ஆடுகளத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எதையும் எடுக்கவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

சீட்டுக்கட்டு போல சரிந்த லக்னௌ பேட்டிங் வரிசை

சென்னை ஆடுகளத்தில் 183 ரன்னை சேஸிங் செய்வது எளிதல்ல என்பதால் முதல் பாதி ஆட்டம் முடிந்தபோதே மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓப்பீட்டளவில் ஓங்கிவிட்டது.

ஏனெனில், 170 ரன்களுக்கு மேல் சென்னை மைதானத்தில் சேஸிங் செய்யப்பட்டது அரிதானதுதான். புள்ளிவிவரம் தந்த உத்வேகத்துடன் களத்திற்கு வந்த மும்பை அணி, கச்சிதமாகத் தனது திட்டங்களை நிறைவேற்றியது.

முதல் ஓவரை வீசிய வேகப்பதுவீச்சாளர் ஜேசன் பெஹரன்டார்ஃப் 10 ரன்களை வாரிக் கொடுக்க இரண்டாவது ஓவரை மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலிடம் கொடுத்தது மும்பை அணி. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. வெகு சிக்கனமாக பந்துவீசிய மத்வால் 2 ரன்களை மட்டுமே கொடுத்து மன்கட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தடாலடி பேட்ஸ்மேன் கைல் மேயர்சை நான்காவது ஓவரில் கிறிஸ் ஜோர்டான் காலி செய்தார். மேயர்ஸ் 3 பவுண்டரிகளுடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

இதையடுத்து மூன்றாவது விக்கெட்டிற்கு சூப்பர் ஃபார்மில் இருக்கும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளே வந்தார். 3 ரன்களில் 5 ரன்களை சேர்த்திருந்தபோது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வதேரா தவறவிட, கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தனி ஒருவனாக மிரட்டிய ஸ்டோய்னிஸ்

மும்பையின் அசத்தல் பந்துவீச்சுக்கு எதிராக லக்னௌ அணியின் மற்ற வீரர்கள் ரன் சேர்க்கப் போராடிக் கொண்டிருக்க மார்கஸ் ஸ்டாய்னிசின் ஆட்டம் மட்டும் வேறு மாதிரியாக இருந்தது.

குறிப்பாக, லக்னௌவின் பலவீனத்தை அறிந்து அதற்காகவே மும்பை அணி உள்ளே கொண்டு வந்திருந்த ஆஃப் ஸ்பின்னர் ஹிரித்திக் ஷோகீனை அவர் கடுமையாக தண்டித்தார்.

அவரது ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 18 ரன்களை விட்டுக் கொடுத்த ஷோகீனுக்கு அதன் பிறகு பந்து வீச மும்பை அணி வாய்ப்பு தரவே இல்லை.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆட்டத்தை அடியோடு மாற்றிய 'அந்த 3 ஓவர்கள்'

7 ஓவர்களில் 2 விக்கெட்டிற்கு 65 ரன் என்று நல்ல நிலையில் இருந்த லக்னௌ அணி அடுத்த மூன்றே ஓவர்களில் தடம் புரண்டு விட்டது.

எட்டாவது ஓவரை கேமரூன் கிரீன் சிக்கனமாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், ரன்ரேட்டை உயர்த்தும் முனைப்பில் 9-வது ஓவரில் பியூஷ் சாவ்லா வீசிய புல்டாசை குருணால் பாண்டியா கிரீசில் இருந்து இறங்கி வந்து தூக்கி அடிக்க, டிம் டேவிட் கையில் அது எளிய கேட்ச்சாக மாறிப்போனது.

அடுத்த ஓவரை வீச வந்த மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால், லக்னௌ அணிக்கு இரட்டை அடி கொடுத்தார். அடுத்தடுத்த பந்துகளில் ஆயுஷ் படோனி, அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் ஆகிய இருவரையும் அவர் காலி செய்தார். அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டுமே களத்தில் இருந்தார்.

ஸ்டாய்னிஸ் உள்பட 3 பேர் ரன் அவுட்

ஒருமுனையில் ஸ்டோய்னிஸ் அடித்தாடினாலும், மறுமுனையில் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை. இந்தச் சூழலில் விதியும் லக்னௌவுக்கு எதிராக விளையாடியது.

12வது ஓவரில் பந்தை அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது, மற்றொரு பேட்ஸ்மேனான தீபக் ஹூடாவுடன் மோதி ஆடுகளத்தின் நடுவே கீழே விழுந்தார் ஸ்டாய்னிஸ்.

அதன் பிறகு அவர் சுதாரித்து எழுந்து வருவதற்குள் டிம் டேவிட் பீல்டிங் செய்து பந்தை எறிய, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஸ்டம்பை சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

தீபக் ஹூடாவும் அடுத்த சிறிது நேரத்தில் ரன் அவுட்டாகி சொற்ப ரன்களில் வெளியேறினார்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

101 ரன்களில் சுருண்டு போன லக்னௌ அணி

ஆறாவது விக்கெட்டாக ஸ்டாய்னிஸ் வீழ்ந்தபோதே லக்னௌ அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. அடுத்து வந்த வீரர்கள் மும்பை பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு சிரமமும் கொடுக்காமல் சரணடைந்துவிட்டனர்.

கிருஷ்ணப்பா கௌதமை கவர் திசையில் நின்றிருந்த ரோகித் ஷர்மா அபாரமாக ஃபீல்டிங் செய்து ஸ்டம்பை நோக்கி குறி தவறாமல் எறிந்து ரன் அவுட் செய்தார்.

கடைசிக் கட்டத்தில் ஆகாஷ் மத்வால் மேலும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவி பிஷ்னோய், மோசின்கான் ஆகிய இருவரும் ஆகாஷ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

லக்னௌ அணி 16.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இதனால், லக்னௌவுக்கு எதிராக முதல் வெற்றியை, அதுவும் 81 ரன் என்ற அதிக வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆகாஷ்

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல். தொடரில் 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்துவது இதுவே முதல்முறை. அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.

அத்துடன், ஐ.பி.எல். வரலாற்றிலும் இதுவொரு சாதனையாகப் பதிவாகியுள்ளது. அதாவது, ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதில் அனில் கும்ப்ளேதான் சிக்கனமாக பந்துவீசியிருந்தார்.

2009ஆம் ஆண்டு 3.1 ஓவர்களில் 5 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே அந்த வகையில் சாதனையாக இருந்து வந்தது. அதைத் தனது முதல் ஐ.பி.எல். தொடரிலேயே ஆகாஷ் மத்வால் முறியடித்துள்ளார்.

இருந்தும் கூடுதலாக 2 பந்துகளை வீசியிருப்பதன் மூலம் அவரது எகானமி ரேட் கும்ப்ளேவை காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.

போட்டியின் முடிவைத் தீர்மானித்தது எது?

சென்னை மைதானத்தின் மெதுவான ஆடுகளத்தின் தன்மையை ஒப்பீட்டளவில் லக்னௌவை காட்டிலும் மும்பை அணி சிறப்பாக்ோப் பயன்படுத்திக் கொண்டது.

லக்னௌ அணி வெகுவாக நம்பியிருந்த ரவி பிஷ்னோய் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவற, குருணால் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரின் பந்துகளும் எடுபடவில்லை.

இம்பாக்ட் விதி அறிமுகத்திற்குப் பின்னர் ஆல்ரவுண்டரின் தேவை குறைந்துவிட்ட நிலையில், அந்த கோட்டாவில் கிருஷ்ணப்பா கௌதமை கொண்டு வந்ததற்குப் பதிலாக, அனுபவம்மிக்க அமித் மிஸ்ராவை அணியில் சேர்த்திருக்கலாம்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம்,BCCI/IPL

நடப்புத் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ வெற்றியில் அவர் முக்கிய பங்காற்றியது நினைவிருக்கலாம். லக்னௌ அணி வீழ்த்திய 8 விக்கெட்டுகளுமே வேகப்பந்துவீச்சாளர்களுக்கே கிடைத்தன. சுழற்பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டைகூட வீழ்த்தவில்லை.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியோ மெதுவான ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. சுழற்பந்துவீச்சு மற்றும் ஆகாஷ் மத்வாலின் மித வேகத்தைக் கொண்டே லக்னௌ அணியை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்துவிட்டது. ஆகாஷ் மத்வால் அவரது வாழ்நாளின் மிகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

அதேபோல், சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என்று மாறி மாறி ஓவர் வீசச் செய்த லக்னௌ அணி கேப்டன் குருணாலின் உத்தியும் தவறாகிப் போனது. ரவி பிஷ்னோய் சிக்கனமாக பந்துவீச, அடுத்து வந்த வேகப்பந்துவீச்சாளரின் ஓவரில் ரன்களைக் குவித்து அணிக்கு நெருக்கடி வராமல் மும்பை பேட்ஸ்மேன்கள் பார்த்துக் கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தது என்ன?

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த கட்டமாக இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும். இந்தப் போட்டி ஆமதாபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.

நாளைய இரண்டாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி ஐ.பி.எல். கோப்பைக்காக இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அதே மைதானத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை பலப்பரீட்சை நடத்தும்.

சென்னையுடன் கோப்பைக்கு மல்லுக்கட்டப் போவது பரமவைரி மும்பை இந்தியன்ஸா அல்லது புதிய ஜாம்பவானான நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்சா என்பது நாளை இரவு தெரிய வரும்.

https://www.bbc.com/tamil/articles/c51dnve3j4do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகாஷ் மத்வால்: மும்பை அணியின் அடுத்த பும்ராவா - யார் இந்த பொறியாளர்?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,வாத்சல்யா ராய்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 26 மே 2023, 06:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

’ஐயாம் ப்ரெளட் ஆஃப் மைசெல்ஃப்’ அதாவது ’என் மீது நான் பெருமை கொள்கிறேன்’

ஐபிஎல் போட்டியில் தனது முதல் சீசனின் 7வது போட்டியில் விளையாடும் எத்தனை வீரர்கள் உலகமே கேட்டுக் கொண்டிருக்கும்போது இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்பார்கள்?

அவ்வாறு கூறிய முதல் வீரராக ஆகாஷ் மத்வால் இருக்கலாம்.

ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டியில் அவர் செய்த அற்புதத்தை, அவருக்கு முன் வேறு எந்த வீரரும் செய்ததில்லை. ஆகாஷ் மத்வால் ஒரு அன் கேப் பிளேயர். அவருக்கு முன்னால், எந்தவொரு சர்வதேச நாக் அவுட்டிலும் இவ்வளவு அற்புதமான பந்துவீச்சை யாரும் நிகழ்த்தியதில்லை.

ஐந்து ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள்.

ஐபிஎல் 2023இல் இருந்து லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸை 'நாக் அவுட்' செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் அவர் வீசிய பந்துகள் செய்த மாயாஜாலம் இது.

மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெளவை வென்றது
  • மும்பை இந்தியன்ஸ்: 182/8 (20 ஓவர்கள்), கேமரூன் கிரீன் - 41 ரன்கள், நவீன் உல் ஹக் - 38/4
  • லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ்: 101/10 (16.3 ஓவர்கள்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 40 ரன்கள்
  • ஐந்து ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்த ஆகாஷ் மத்வால் ஆட்ட நாயகன்

பெயரை நினைவில் கொள்ளுங்கள்

ஐபிஎல் போட்டியில் புதன்கிழமை நடந்த பந்தயத்திற்கு முன்பு லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியால் வீழ்த்த முடியவில்லை.

எலிமினேட்டர் பந்தயத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. முதலில் விளையாடிய மும்பை 182 ரன்கள் எடுத்தபோது கிரிக்கெட் வல்லுநர்கள் அனைவரும் போட்டி 'நெருக்கமான ஒன்றாக இருக்கும்' என்று கூறினர்.

மும்பைக்கு எதிரான லக்னெளவின் செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. கூடவே மும்பையின் பந்துவீச்சு சிறிது பலவீனமானது என்ற எண்ணமும் அவர்கள் மனதில் இருந்தது.

அந்த நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நான்கு பேட்ஸ்மேன்களை 'டூ ஆர் டை' போட்டியில் ஆட்டமிழக்கச் செய்த 29 வயது பந்து வீச்சாளர் அவர்களது நினைவுக்கு வரவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது பந்து வீச்சுக்குப் பலியான பேட்ஸ்மேன்களில் ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால் போன்ற பெரிய தலைகளும் அடக்கம்.

புதன்கிழமை தனது நான்காவது ஓவரில் மொஹ்சின் கானின் ஸ்டம்பை யார்க்கரால் தூக்கியபோது, கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, "இந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்! ஆகாஷ் மத்வால்" என்று ட்வீட் செய்தார்.

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில், ஆகாஷ் மத்வால், ’தன்னைப் பற்றி பெருமைப்படுவதாக’ கூறினார்.

ஆனால், இதைச் சொல்லும்போது ஆகாஷ் மத்வாலின் முகத்திலோ உடல் அசைவுகளிலோ எந்தத் தற்பெருமையும் இருக்கவில்லை. அவர் கண்களில் பிரகாசம் தெரிந்தது. முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் துளிர்விட்டாலும் சிறிதளவு தயக்கமும் இருந்தது.

வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மா கைகுலுக்கியபோதும் அவரது கூச்சமும் தன்னிச்சையான ஸ்டைலும் தெரிந்தது.

மும்பையின் பெயரை வெற்றி வானில் எழுதி வைத்த மத்வால், தனது கேப்டனை கண்ணோடு கண் பார்க்கவில்லை. தலை குனிந்த நிலையில் ரோஹித் ஷர்மாவின் அணைப்பிற்குள் ஐக்கியமானார். ரோஹித் ஷர்மா மத்வாலின் தலையில் தட்டி வாழ்த்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

புகழ் வானில் மத்வால்

புகழாரம் சூட்டினால் கூச்சப்படும் இந்த பந்து வீச்சாளர், களத்தில் வித்தியாசமான உருவத்தில் காணப்படுகிறார். இவரது அதிரடி பந்துவீச்சின் காரணமாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

லக்னெளவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மத்வால் தனது முதல் ஓவரிலேயே மும்பைக்கு முதல் விக்கெட்டை தந்தார். அப்போது அவர் லக்னெளவின் தொடக்க வீரர் பிரேரக் மன்கட்டை பெவிலியன் திரும்பச் செய்தார்.

ஆனால் மத்வாலின் உண்மையான அதிரடி பந்து வீச்சை அவரது இரண்டாவது ஓவரில் பார்க்க முடிந்தது. அது லக்னெள இன்னிங்ஸின் 10வது ஓவர்.

அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஆயுஷ் பதோனியால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. நான்காவது பந்து ஒரு நல்ல லென்த்துடன் வந்து பதோனியின் ஆஃப் ஸ்டம்பை எகிற வைத்தது.

மத்வாலின் பெயரை புகழ் வானில் எழுதிய பந்து, அந்த ஓவரின் ஐந்தாவது பந்து.

லக்னெளவின் மிகப்பெரிய பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் ஸ்டிரைக்கில் இருந்தார். ஆஃப்-ஸ்டம்பை விட்டு வெளியேறி பூரன் இந்தப் பந்தை விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மட்டையின் விளிம்பை தொட்ட இந்தப் பந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் கையுறைகளில் சிக்கியது.

இந்த விக்கெட்தான் லக்னெளவின் தோல்வியை முடிவு செய்தது. இந்தப் போட்டியில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொறியாளர் பட்டம், கிரிக்கெட் மோகம்

போட்டி முடிந்ததும், "இதுவரை எங்கே (மறைந்து) இருந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்கப்பட்டது.

மத்வால், "எங்கும் இல்லை. பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்," என்று பதிலளித்தார்.

"முதலில் பொறியியல் படித்தேன். பிறகு கிரிக்கெட் மீதிருந்த மோகத்தால் கடுமையாக உழைத்தேன். பிறகு இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார்.

“இஞ்சினியர்களுக்கு சீக்கிரம் கற்கும் குணம் உண்டு,” என்று சொல்ல ஆகாஷ் மறக்கவில்லை.

டென்னிஸ் பந்து முதல் கிரிக்கெட் பந்து வரை

ஆகாஷ் உண்மையில் விரைவாக கற்றுக்கொள்பவர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் 1993ஆம் ஆண்டு பிறந்த ஆகாஷ் மத்வால், ஐபிஎல் தொடரின் ஏழு போட்டிகளில் மட்டுமே விளையாடி கிரிக்கெட்டின் ஜாம்பவான்களை தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார்.

பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் அவரது சுயவிவரத்தை மனப்பாடம் செய்து வைத்துள்ளனர்.

ஆகாஷ் மத்வால் ரூர்க்கியில் இருந்து வந்த பி.டெக் பட்டதாரி. ‘‘23 வயது வரை அவர் டென்னிஸ் பந்தை வைத்து விளையாடி வந்தார்,” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கூறினார்.

மத்வால் 23 வயதுக்குப் பிறகுதான் கிரிக்கெட் பந்தை கையில் பிடித்தார். உத்தராகண்ட் அணியின் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர் தான் இவரது திறமையை முதலில் கவனித்தார்.

"அவர் (ஆகாஷ் மத்வால்) 2019இல் ட்ரயலுக்கு வந்தபோது, நாங்கள் அனைவரும் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டோம்," என்று உத்தராகண்டின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான மணீஷ் ஜா கூறியதாக அவரை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

வழி திறந்தது, ஆனால் மத்வாலின் இலக்கு வெகு தொலைவில் இருந்தது. ஐபிஎல் மூலம் கிரிக்கெட் உலகில் தனது பெயரைப் பதிக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகள் காத்திருப்பு

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் அவர் தனது போராட்டத்தின் கதையைப் பகிர்ந்து கொண்டார்.

"நான் மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தேன். நான் ஆர்சிபியில் நெட் பந்துவீச்சாளராக இருந்தேன். பின்னர் மும்பை இந்தியன்ஸில் சப்போர்ட் பந்துவீச்சாளராக இருந்தேன்,” என்று ஆகாஷ் மத்வால் கூறினார்.

"மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, ஐபிஎல் விளையாட வேண்டும் என்று என் இதயம் கூறியது,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் காயமடைந்தபோது அவருக்கு பதிலாக ஆகாஷ் மத்வால் அணியில் இடம் பிடித்தார்.

ஆனால், களம் இறங்குவதற்கான காத்திருப்பு தொடர்ந்தது. இந்த ஆண்டும், அணியின் முதல் எட்டு போட்டிகளில் அவர் தனது முறைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருக்கு முன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் பிற பந்துவீச்சாளர்கள் சோதிக்கப்பட்டனர்.

பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் 2023இல் செயல்பாடு

  • அவர் ஏழு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்
  • அதுவும் 12.8 என்ற சிறந்த சராசரியுடன்
  • அவர் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும் மற்றொரு போட்டியில் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்
  • யார்க்கர் அவரது பலமாகக் கருதப்படுகிறது

சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்

தனது சமீபத்திய வெற்றியின் பெருமை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவையே சேரும் என்று ஆகாஷ் மத்வால் குறிப்பிட்டார்.

"ரோஹித் என்னை அமைதிப்படுத்தினார். எனது பலம் எதுவோ அதன் அடிப்படையில் பந்துவீசச் சொன்னார்," என்று அவர் கூறினார்.

"கடந்த ஆண்டு அவர் எங்களுடன் சப்போர்ட் பந்துவீச்சாளராக இருந்தார். அவருடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும்," என்று ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

”ஜோஃப்ரா ஆர்ச்சர் திரும்பிச் சென்றபோது, வெற்றியை தேடித் தரக்கூடிய ஆளுமை ஆகாஷிடம் இருப்பதாக நான் நினைத்தேன்,” என்றார் ரோஹித்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

ரிஷப் பந்த் உடன் சிறப்பு தொடர்பு

ஆகாஷ் மத்வால் பலருக்கு மற்றொரு சாம்பியன் வீரரை நினைவுபடுத்துகிறார். அவர் பெயர் ரிஷப் பந்த்.

"அவர் ரிஷப்பின் பக்கத்து வீட்டுக்காரர்" என்று ரவி சாஸ்திரி கூறுகிறார்.

இருவரின் வீடுகளும் ரூர்க்கியில் அருகருகே உள்ளன. ரிஷப் பந்த் டெல்லிக்கு செல்வதற்கு முன்பு பயிற்சியாளர் அவதார் சிங்கிடம் பயிற்சி எடுத்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகாஷ் மத்வாலுக்கும் அவதார் சிங் கற்றுக் கொடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும்போது ஆகாஷ் மத்வால், 'பூம் பூம்' (ஜஸ்பிரீத்) பும்ராவுடன் ஒப்பிடப்படுகிறார். காயம் காரணமாக பும்ரா ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை.

ஆனால் தன்னை பும்ராவுடன் ஒப்பிடுவதை மத்வால் விரும்பவில்லை. அவர் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார்.

"பும்ரா பாய் அவருடைய இடத்தில் இருக்கிறார், நான் என்னுடைய இடத்தில் இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

பும்ராவும் அவரைப் பாராட்டும் இடத்தை மத்வால் இப்போது அடைந்துள்ளார்.

புதன்கிழமையன்று மத்வாலின் மேட்ச் வின்னிங் செயல்பாட்டிற்குப் பிறகு பும்ரா ட்விட்டரில், "வாட் எ ஸ்பெல் பை ஆகாஷ் மத்வால்" என்று எழுதினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவும் ஆகாஷ் மத்வாலை பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில் Vs மத்வால்

புதன்கிழமையன்று 3.3 ஓவர்களில் ஐபிஎல் 2023இல் இருந்து லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 'அவுட்' செய்த ஆகாஷ் மத்வாலின் மாயாஜாலம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை மிகவும் கவலையடையச் செய்திருக்கும்.

முன்னதாக மும்பை, குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

குஜராத்தின் வெற்றிகரமான பேட்ஸ்மேன் ஷுப்மன் கில்லின் ஆஃப்-ஸ்டம்பை பிடுங்கி, அதைச் சுழலும் கம்பு போல மாற்றிய அந்தப் பந்தின் நினைவுதான் அந்தக் கவலைக்கு மிகப்பெரிய காரணம்.

கில்லுடன் ஆகாஷ் மத்வாலின் அடுத்த சந்திப்புக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. 2023 மே 26. அதாவது இன்று.

https://www.bbc.com/tamil/articles/cgrgwr9551jo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதீச பாதுகாப்பான கரங்களில் உள்ளார் -டோனியை சந்தித்த பின்னர் மதீசவின் சகோதரி

Published By: RAJEEBAN

26 MAY, 2023 | 11:11 AM
image

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீசபத்திரனவின் குடும்பத்தினரை இந்திய அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான  எம்எஸ்டோனி நேற்று சென்னையில்சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது டோனி மதீசபத்திரன குறித்து நீங்கள் கவலைப்படதேவையில்லை அவர் எப்போதும் என்னுடன் இருப்பார் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள லீலா பலஸ்ஹோட்டலில் டோனி மதீசபத்திரனவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்,இந்த ஹோட்டலிலேயே சென்னை அணியினர் தங்கியுள்ளனர்,

டோனியை சந்தித்த படங்களை மதீசபத்திரனவின் சகோதரி விசுக்கா பத்திரன இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

matheeshapathiranamsdhoni.jpg

எம்எஸ்ஸின் ரசிகையான விசுக்கா இந்த சந்திப்பை நான் கனவுகண்டதிற்கு அப்பாற்பட்ட விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பேபி மலிங்க என அழைக்கப்படும் தனது சகோதரர் பாதுகாப்பான கரங்களில் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தல நீங்கள் மதீசவை பற்றி கவலைப்படத்தேவையில்லை  அவர் எப்போதும்  என்னுடன் இருப்பார் என தெரிவித்துள்ளதால் தம்பி தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளார் என நாங்கள் உறுதியாக உள்ளோம் இது எனது கனவில் நான் கண்டதற்கு அப்பால் பட்ட தருணம் என அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156198

பதிரன குடும்பத்திடம் டோனி சொன்னது என்ன?

Pathirana Family With MS Dhoni

இந்த சீசனில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண் மதீஷ பதிரன தான். இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர் என சொல்லும் அளவுக்கு கடைசிகட்ட ஓவர்களில் கலக்கியிருந்தார் மதீஷ பதிரன. இளம் வீரரான பதிரனவின் இந்த எழுச்சிக்கு டோனியும் ஒரு முக்கியமான காரணம் என அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. “இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார்” என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டிருந்தார்.

“தோனி சொல்வதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லை!” – லசித் மலிங்கா
Matheesha Pathirana: “டோனி சொல்வதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லை!” – லசித் மலிங்கா

டோனியும் தொடர்ந்து பதிரனவின் பந்துவீச்சை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி வந்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பதிரன குறித்து அறிவுரை எல்லாம் கொடுத்தார் அவர். வளர்ப்பு மகன் போல பதிரனவை டோனி பார்த்துக்கொள்கிறார் என இணையத்தில் மீம்களும் பறந்தன. இந்நிலையில் மதீஷ பதிரனவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் அவரது சகோதரி விஷுகா பதிரன.

Vishuka Pathirana - MS Dhoni

அதில்,
“மதீஷ பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எப்போதும் அவருடன் நான் இருப்பேன்’ என தோனி எங்களிடம் சொன்னார்” எனக் கூறியிருக்கிறார்.

“இப்படியான விஷயத்தை நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை” என இந்தச் சந்திப்பு குறித்து உருகியிருக்கிறார் அவர்.

ஞாயிறு இறுதிப்போட்டியில் ஆடும் சென்னை அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக பதிரன இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது!

https://thinakkural.lk/article/255478

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷித் கான்: 'சுழற்பந்துவீச்சின் முடிசூடா மன்னன்' - மும்பைக்கு சவாலாகும் குஜராத்தின் துருப்புச் சீட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னேவுக்கு அடுத்தாற்போல் சிறந்த ‘லெக் ஸ்பின்னர்’ உருவாகியிருக்கிறார்களா என்று கிரிக்கெட் தெரிந்தவர்களிடம் கேட்டால் முதலில் உச்சரிப்பது இவரது பெயரைத்தான்…

17 வயதில் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம், 19 வயதில் தேசிய அணிக்கு கேப்டன், உலகில் நடக்கும் பெரும்பாலான லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்டார் ப்ளேயர், பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் பந்துவீச்சாளர் ரஷித் கான் பற்றித்தான் குறிப்பிடுகிறோம்.

அடையாளத்தை மாற்றுபவர்

ஆப்கானிஸ்தானில் இளைஞர்கள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு வருவதற்கும், அவர்கள் நேர்வழிக்கு வருவதற்கும் ஏராளமான உதவிகளை ரஷித் கான் செய்து வருகிறார்.

போர்மேகம் சூழ்ந்த தேசம், எந்த நேரத்தில் எங்கு மரணம் நேரும் என்பது தெரியாத சூழல், இளைஞர்கள் எளிதாக பாதை மாறிச் செல்ல அதிகமான வாய்ப்புகள் இருக்கும் அந்நாட்டில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு வருவதற்குத் தூண்டுகோலாக, உத்வேகமாக, மிகப் பெரிய உந்துசக்தியாக மாறியுள்ளார் ரஷித் கான்.

ஐபிஎல் தொடரில் இன்று விளையாடும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் அகமது, ஃபரூக்கி, நவீன் உல் ஹக் போன்ற ஏராளமான வீரர்கள் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மாடலாக, காரணகர்த்தாவாக இருந்தவர் ரஷித் கான். இதை அந்தந்த வீரர்களே தங்களின் பல்வேறு பேட்டிகளில் ரஷித் கான் குறித்துப் பெருமிதமாகத் தெரிவித்துள்ளனர்.

 

அது மட்டுமல்லாமல் ஆப்கன் இளைஞர்களுக்குத் தேவையான கிரிக்கெட் பயிற்சிகள், ஆலோசனைகள், அறிவுரைகள், உதவிகளையும் ரஷித் கான் செய்து வருகிறார்.

இதற்காக 'ரஷித் கான் ஃபவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் உடல்நலன், கல்வி, சுத்தமான குடிநீர் வழங்குவது மட்டுமின்றி, திறமையானவர்களை ஊக்கப்படுத்துவதுமாகும்.

2019ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கி ரஷித் கான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “என்னால் மிகப் பெரிய அற்புதங்களைச் செய்ய முடியாது, ஆனால், சிறிய விஷயங்களை உயர்ந்த அன்புடனும், ஊக்கத்துடனும் செய்ய முடியும்,” எனத் தெரிவித்தார்.

லெக் ஸ்பின் முடிசூடா மன்னர்

2015ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகிய ரஷித் கான், கடந்த 8 ஆண்டுகளாக லெக் ஸ்பின்னில் முடிசூடா மன்னராக இருந்து வருகிறார். ரஷித் கான் உண்மையில் சுழற்பந்து ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை.

உலகில் நடக்கும் பல்வேறு லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி, அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் தனது துல்லியமான லெக் ஸ்பின்னால் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் தொடங்கி, குஜராத் டைட்டன்ஸ், கரீபியன் லீக்கில் பர்படாஸ் ட்ரீடன்ட்ஸ், கயனா அமேசான் வாரியர்ஸ், பிக் பாஸ் லீக்கில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், தென்னாப்பிரிக்காவில் டர்பன் ஹீட், பாகிஸ்தானில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ், காபூல் ஈகிள்ஸ், லாகூர் குலாலன்டர்ஸ் எனப் பல்வேறு லீக் போட்டிகளில் ரஷித் கான் விளையாடியுள்ளார்.

உலகளவில் இத்தனை லீக் தொடர்களில் விளையாடி பல பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செய்து வருகிறார் ரஷித் கான்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

உலகளவில் 406 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் இதுவரை 553 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகளவில் பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் ஆடும் ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணிக்காக, 86 ஒருநாள் போட்டிகள் விளையாடி 164 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் 129 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

குறைந்த போட்டிகளில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டி சாதனை, டி20 போட்டி, ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடம், ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் என சிறு வயதிலேயே ரஷித் கான் சாதித்து தன்னை ஜாம்பவான்கள் வரிசையில் சேர்த்துக்கொண்டார்.

இன்றைய சூழலில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 போட்டிகளில் உலகளவில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் எடுத்தால் அதில் ரஷித் கான் முதல் 3 இடங்களில் வரக்கூடியவர்.

ஒரு நாள் போட்டிகளில் ரஷித் கான் பிரகாசிக்க அவரின் தேசிய அணியில் வாய்ப்புகள் குறைவு என்றாலும் டி20 போட்டிகளில் அவரது ராஜ்ஜியம் தொடர்ந்து வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஷித் கான் பந்துவீச்சில் என்ன சிறப்பு?

ரஷித் கானின் பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், கூக்ளி வீச்சு, பேட்ஸ்மேன்களால் கண்டுபிடிக்க முடியாத பந்துவீச்சு ஸ்டைல் போன்றவைதான் அவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

ரஷித் கான் பந்துவீச களத்துக்குள் வந்துவிட்டாலே பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் விதத்தில் பந்துவீசக்கூடியவர். பந்துவீச்சில் மிகப்பெரிய ஆயுதமே துல்லியமான கூக்ளி பந்துவீச்சுதான். கூக்ளியில் இவர் காட்டும் பல்வேறு விதங்களும் அற்புதம்.

ரஷித் கான் பந்துவீச்சில் வெற்றிக்குக் காரணம் குறித்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறுகையில், “ரஷித் கான் வீசும் கூக்ளி பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து ஆடுவது மிகக் கடினமாக இருக்கிறது. இதுதான் இவரை ஸ்பெஷல் கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது.

ரஷித் கான் சாதாரண மரபுவழி லெக் ஸ்பின்னர் அல்ல. மரபுவழிகளை உடைத்து வீசும் லெக் ஸ்பின்னர். பந்துவீசும்போது அவரின் கை மணிக்கட்டிலிருந்து பந்து பேட்ஸ்மேனை நோக்கி வெளியேறுவது வேகமாக இருக்கும்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்ஸ்மேன்கள் ஆடுவது கடினம்

பந்தை அவர் பிடித்திருக்கும் முறை என்பது லெக் ஸ்பின்னுக்கும், கூக்ளிக்கும் இடைப்பட்ட ஸ்டைலில் இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ரஷித் கான் பந்துவீச்சைக் கணித்து ஆடுவது மிகக்கடினமாக இருக்கும்.

அவர் வீசும் பந்து பிட்ச் ஆன பிறகுதான் அது எந்த திசையில் டர்ன் ஆகிறது என்பதை அறிய முடியும். இதனால் பேட்ஸ்மேன்கள் பிரண்ட் ஃபுட் எடுத்து வைத்து ரஷித் கான் பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும்.

ஏனென்றால், ஒரு ஆஃப் ஸ்பின்னர் பந்தை பிடித்திருக்கும் முறையில் பிடித்து வீசும் ரஷித் கான், நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே பெரிய இடைவெளி வைத்து வீசுவார். இதனால்தான் அவரால் துல்லியமான கூக்ளியை வீசி பேட்ஸ்மேன்களை கதற வைக்க முடிகிறது.

ஒரு பேட்ஸ்மேன் ரஷித் கானின் கூக்ளி பந்துவீச்சை சரியாகக் கணித்து ஆடத் தவறினால் விக்கெட்டை இழப்பார் அல்லது அது டாட் பாலாக மாறும். ரன் சேர்ப்பதும் கடினமாக இருக்கும். இந்த மாயாஜால பந்துவீச்சால்தான் ரஷித் கான் உலக பேட்ஸ்மேன்களை ஆட்டிப் படைத்து வருகிறார்.

ரஷித் கான் பந்தைப் பிடித்திருக்கும் முறை எளிதாக கூக்ளியை சரியான லைன் லென்த்தில் வீச உதவுகிறது. மற்ற சுழற்பந்துவீச்சாளர்களிடம் இருந்து இதுதான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

மிரள வைக்கும் ‘எக்னாமி ரேட்’

உலகளவில் இதற்கு முன் வந்த சுழற்பந்துவீச்சாளர்களின் எக்னாமி ரேட் என்பது சற்று உயர்வாகவே இருக்கும். ஆனால், ரஷித் கான் தனது பந்துவீச்சில் டி20 போட்டிகளில் எக்னாமி ரேட்டை 6.18 ஆகவும், ஒருநாள் போட்டிகளில் 4.17 ஆகவும், டெஸ்ட் போட்டிகளில் 2.97 ஆகவும் வைத்துள்ளது வியப்புக்குரியதாகும்.

ரஷித் கானுக்கு அடுத்தாற்போல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், இலங்கையின் ஹசரங்கா ஆகியோர் 7 எக்கானமி ரேட் வைத்துள்ளனர்.

டி20 போட்டிகளில் உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, பிரவின் டாம்பேவுக்கு அடுத்தாற்போல் குறைவான எக்கானமி ரேட் வைத்திருப்பதும் ரஷித் கான் மட்டும்தான்.

கட்டுக்கோப்பான வேகம்

ரஷித் கான் பந்துவீச்சு டி20 போட்டிகளில் வெற்றிகரமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அவரின் பந்துவீச்சு வேகம்தான்.

மற்ற லெக் ஸ்பின்னர்கள் மணிக்கு 95 கி.மீ வேகத்துக்குள் வீசுவார்கள். ஆனால், ரஷித் கான் பந்துவீச்சு பெரும்பாலும் 95 கி.மீ வேகத்துக்கு மேல் இருக்கும், தனது பந்துவீச்சில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் திறன் அதிகமாக இருக்கும்.

இதனால்தான் ரஷித் கான் வீசும் ஒவ்வொரு பந்தும் ஒரே மாதிரியான வேகத்தில் பேட்ஸ்மேனை நோக்கிச் செல்லாது. ஒவ்வொரு பந்தை வீசும்போதும், வேகத்தை மாற்றி, சரியான லைன் லென்த்தில் வீசுவதால் இவரது பந்தில் பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் ஆடக் கடினமாக இருக்கும்.

அலைகழிக்கப்பட்ட இளமை வாழ்க்கை

தன்னுடைய தாய் நாட்டின் முகத்தை மாற்றவும், புதிய அடையாளத்தை வழங்கவும் முயற்சிகள் செய்துவரும் ரஷித் கானின் இளமை வாழ்க்கை வசந்தத்தோடு இருந்தது இல்லை.

1998இல் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கார்ஹாரில் உள்ள ஜலாலாபாத்தில் பிறந்தவர் ரஷித் கான். இவரோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர்.

தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றி ரஷித் கான் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், “நான் சிறுவயதாக இருந்தபோதே, ஆப்கானிஸ்தானில் இருந்த மோசமான சூழலால், அங்கிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தோம். அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினோம்.

நான் பள்ளிப்பருவத்தில் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். என் குடும்பத்தில் மருத்துவப் படிப்பு யாரும் படிக்கவில்லை என்பதால், நான் மருத்துவம் படிக்க வேண்டுமென என் பெற்றோர் விரும்பினர். கிரிக்கெட் வீரராக என் வீட்டில் அனுமதிக்கவில்லை.

என் பெற்றோர் அடிக்கடி கூறுவது வெளியுலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதைப் பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனமாக இரு, கிரிக்கெட் விளையாடுவது சகோதரர்கள் வீட்டோடு இருக்க வேண்டும், நண்பர்களுடன் சென்று விளையாட அனுமதியில்லை என்றனர்.

ஷாகித் அப்ரிடி உந்துசக்தி

என் சகோதரர்களுடன்தான் கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுத்தேன். வெளியே நிலவும் உறுதியற்ற சூழலால் என்னை வெளியே சென்று கிரிக்கெட் விளையாட பெற்றோர் அனுமதிக்கவில்லை.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கும், பந்துவீச்சுக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தவர், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிதான்.

டாக்டர்தான் என் கனவு

நான் ஒரு கிரிக்கெட் வீரராக உருவாகுவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவேன் என்றாலும் என் தேசத்தின் சார்பாகவும், இதுபோல் உலகளவில் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் நினைக்கவில்லை.

நான் ஒரு மருத்துவராகத்தான் விரும்பினேன், என் பெற்றோர்களும் அதைத்தான் விரும்பினர். குறிப்பாக என் தாய் என்னை மருத்துவராக்க விரும்பினார், என்னை மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

திருப்புமுனை தருணம்

கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடிய நிலையில், முதல்முறையாக பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர்களுடன் லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாடினேன்.

அப்போது 65 ரன்கள் சேர்த்தபோதுதான் எனக்குள் நம்பிக்கை வந்தது, கிரிக்கெட்டை நேசிக்கத் தொடங்கினேன்.

அங்கிருந்து கிரிக்கெட் கனவு எனக்குள் உருவானது. அதன்பின் ஆப்கனில் கிளப் போட்டிகளில் விளையாடினேன், என் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் ஏன் தேசிய அணியில் சேர்ந்து உள்நாட்டுப் போட்டியில் விளையாடக் கூடாது என்றனர்.

அதன்பின் பெற்றோரிடம் அனுமதி பெற்று, கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன், எனக்குத் தேவையான சுதந்திரத்தையும் அவர்கள் அளித்தனர்,” எனத் தெரிவித்தார்.

டி20 போட்டிகளில் உலகளவில் சிறந்த வீரர்களைக் கொண்டு ஓர் அணியை உருவாக்கினால், அதில் ரஷித் கான் இல்லாமல் அந்த அணியில் ப்ளேயிங் லெவன் நிரம்பாது எனலாம். டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள், நடுப்பகுதி ஓவர்களை வீசுவதில் ரஷித் கான் பந்துவீச்சு உலகத் தரமாக இருக்கும்.

பேட்டிங்கில் கண்டுகொள்ளப்படாத ரஷித் கான்

ரஷித் கான் இன்று உலகளவில் சிறந்த லெக் ஸ்பின்னராக மட்டுமே அடையாளம் காணப்பட்டு வருகிறார் என்றாலும், அவருக்குள் இருக்கும் பேட்டிங் திறமையை அணிகள் பெரிதும் பயன்படுத்தியதில்லை.

சமீபத்திய எடுத்துக்காட்டு, ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரஷித் கானின் மின்னல் வேக அரைசதம், 10 சிக்ஸர்கள் விளாசியதும் அவரின் பேட்டிங் திறமைக்குச் சான்று.

சர்வதேச அரங்கில் லெக் ஸ்பின்னராக அறிமுகமாகி இன்று ஆல்ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் ரஷித் கான்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஷித் கான் பேட்டிங் திறமையை அணிகள் சரியாகப் பயன்படுத்தாதது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் “டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் பேட்டிங்கை இன்னும் அணிகள் சரியாகப் பயன்படுத்தவில்லை.

ரஷித் கான் களமிறங்கும்போதெல்லாம் அருமையான கேமியோ ஆடுகிறார். சுழற்பந்து, வேகப்பந்துகளை அடித்து ஆடக்கூடிய பேட்டிங் திறமை அவரிடம் இருக்கிறது. யாரும் அடிக்காத பகுதிகளில் ஷாட்களை அடிக்கும் வல்லமை, இயற்கையின் பரிசு ரஷித் கானிடம் இருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷித் கான் ஒரு பேட் பிரியர். எப்போதும் அவரிடம் குறைந்தபட்சம் 10 பேட்களை வைத்திருப்பார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் எப்போதும் குறைந்தபட்சம் 10 பேட்களையாவது வைத்திருப்பேன். 10 பேட்களுக்கு மேல் இல்லாமல் இருந்தால் நான் எதையாவது இழந்ததுபோன்று நினைக்கத் தோன்றும். நான் வைத்திருக்கும் அனைத்து பேட்களுமே எனக்குப் பிடித்தமானவே. நான் ஒரு பேட் பிரியன்,” எனத் தெரிவித்துள்ளார்.

சவாலாக மாறும் ரஷித்

ஐபிஎல் டி20 போட்டியின் 2வது தகுதிச்சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரஷித் கானின் பந்துவீச்சும், பேட்டிங்கும் நிச்சயம் சவாலாக இருக்கும்.

ஏற்கெனவே மும்பை அணியினர் ரஷித் கான் பேட்டிங் விளாசலைப் பார்த்துவிட்டார்கள் என்பதால் அவரை எச்சரிக்கையுடனே கையாள்வார்கள்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மஞ்சரேக்கர் கூறுகையில், “இன்றைய ஐபிஎல் 2வது தகுதிச் சுற்று ஆட்டம், மும்பை இந்தியன்ஸ் அணியின் 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கும், தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.

இருவரின் போட்டி ஆட்டத்தை முடிவு செய்யும் எனச் சொல்லவில்லை, இருவரின் ஆட்டம் போட்டியை முன்னெடுத்துச் செல்லும். மிகச் சில தருணங்களில் மட்டும்தான் டி20 சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செய்திருக்கிறார்கள்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c10q05mnlpvo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'கில்' சூறாவளியில் சிக்கி காணாமல் போனது மும்பை: ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ்

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரில் 2023ம் ஆண்டு சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிக்கு அடுத்தார்போல் தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த 233 ரன்கள் , ப்ளேஆஃப் சுற்றில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2014ல் சிஎஸ்கேவுக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் 226 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் இமாலய ஸ்கோரை அடித்து, தன்னை சாம்பியன் என்று மீண்டும் நிரூபித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த எழுச்சி, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

குறிப்பாக சுப்மான் கில்லின் முரட்டுத்தனமான பேட்டிங் ஃபார்ம், சிஎஸ்கே அணிக்கு பைனலில் சிம்ம சொப்னமாக அமையும். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 23 வயதான சுப்மான் கில் 60 பந்துகளில் 129 ரன்கள்(10சிக்ஸர், 7பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த சீசனில் சுப்மான் கில் அடித்த 3வது சதமாகும். சுப்மான் கில் பவுண்டரி, சிக்ஸர் மூலம் மட்டுமே 88 ரன்களைக் குவித்துவிட்டார். முதல் அரைசதத்தை 32பந்துகளிலும் அடுத்த 50 ரன்களை 17 பந்துகளிலும் கில் மின்னல் வேகத்தில்அடைந்தார்.

கில் ராஜ்ஜியம்

மழை காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கினாலும், கில், சாஹா மந்தமாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் கில், சாஹா சேர்த்து 5 ஓவர்களில் 38 ரன்களையே குஜராத் சேர்த்திருந்தது. கிறிஸ் ஜோர்டன் வீசிய 6வது ஓவரிலிருந்துதான் கில் தனது ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றி, சிக்ஸர் மழை பொழியத் தொடங்கினார். பவர்ப்ளே முடிவில் குஜராத் 50 ரன்கள் சேர்த்திருந்தது.

சாஹா தொடக்கத்தில் இருந்தே ஷாட்களை அடிக்க சிரமப்பட்டார். மத்வால் வீசிய பவுன்ஸர் சாஹாவின் ஹெல்மெட்டின் காதுப்பகுதியில் தாக்கியது. அதன்பின் சிறிது நேரமே தாக்குப்பிடித்த சாஹா 18 ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்துவந்த சாய் சுதர்சன், கில்லுக்கு ஒத்துழைத்து பேட் செய்தார்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

டேவிட் செய்த தவறு

கில் 30 ரன்கள் இருந்தபோது, மத்வால் பந்தில் அடித்த கேட்சை டிம் டேவிட் கோட்டை விட்டார். இந்த கேட்சை நழுவவிட்டதற்கு விலையை கடைசியில் மும்பை அணி கொடுத்தது. கேட்சை வாய்ப்பு நழுவவிட்டபின அடுத்த 40 பந்துகளில் கில் 99 ரன்களைச் சேர்த்து மும்பை அணியின் தோல்விக்கு அடித்தளமிட்டார்.

மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துகளை கில் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டபோதெல்லாம் மைதானத்தில் ரோஹித் சர்மா தலையில் கை வைத்தும், முகத்தை மூடிக்கொண்டும் தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் சிக்ஸராகப் பறக்கவி்ட்ட கில்லின் முரட்டுத்தனமான ஹிட்டிங்கைப் பார்த்து மும்பை பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

மின்னல் வேக அரைசதம்

அதிரடியை வெளிப்படுத்திய கில் 32 பந்துகளில் அரைசதத்தை அடித்தார். அதன்பின் கில் ரன் குவிப்பு வேகம் ராக்கெட் வேகத்தில் சென்றது. மத்வால், சாவ்லா வீசிய 9 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசிய கில், அடுத்த 17 பந்துகளில் 50 ரன்களை எட்டி 49 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்தவுடன் கேமரூன் கிரீன் பந்தில் 2 சிக்ஸர்கள், பவுண்டரியை கில் விளாசினார்.

யார் பந்துவீசினாலும் சிக்ஸர்களாக அடித்த கில்லின் ஆட்டத்தைப் பார்த்து மும்பை பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர், எப்படி பந்துவீசுவதென்றே தெரியாமல் கையைக் கசக்கினர்.

ஏற்கெனவே கில்லுக்கு ஒருமுறை கேட்சை விட்ட டிம் டேவிட் 2வது முறையாக தவறவிடவில்லை. மத்வால் பந்துவீச்சில் கில் மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை டேவிட் கேட்ச் பிடிக்கவே கில் 129 ரன்னில் வெளியேறினார். அதன்பின் சாய் சுதர்சனும் ரிட்டயர் ஹர்ட்டில் 43 ரன்னில் பெவிலியன் சென்றார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் சிறிய கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

ஒட்டுமொத்தத்தில் குஜராத் அணியின் பேட்டிங் இன்னிங்ஸ் முழுவதுமே கில் ராஜ்ஜியம்தான்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பை நம்பிக்கையை உடைத்த கில்

லக்னெள அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய மத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தநிலையில் நேற்று 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை வாரி வழங்கினார். பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 45 ரன்கள்,ஜோர்டன் 4 ஓவர்களில் 56 ரன்கள் என வாரி வழங்கினர்.

இவர்கள் 3 பேர் மட்டுமே 153 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. பெரன்டார்ப், கார்த்திகேயா மட்டுமே 7 ரன்கள் எக்கானமி வைத்திருந்தனர், மற்ற பந்துவீச்சாளர்கள் கில் புயலில் சிக்கி சின்னாபின்னமாகினர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மான் கில் அடித்த ஸ்கோர்தான் மிகப்பெரிய ஸ்கோராகும். சாய் சுதர்சன் பெரும்பாலும் கில்லுக்கு ஒத்துழைத்து பேட் செய்து 43 ரன்களில் ரிட்டயர் ஹர்ட்டில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா(28), ரஷித் கான்(5) கடைசி நேரத்தில் சிறிய கேமியோ ஆடி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆக, குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் முழுவதுமே கில்லின் ராஜ்ஜியமாகவே இருந்தது. கில்லின் ஆட்டம் மட்டுமே குஜராத் அணியின் பேட்டிங்கில் நீக்கமரநிறைந்திருந்தது. சுப்மான் கில் தன்னால் முடிந்தவரையிலான அதிகபட்ச பங்களிப்பை அளித்து அணியை பைனலுக்கு கொண்டு சென்றார்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

ஷாக் அளித்த ஷமி

மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் காயத்தால் களமிறங்கவில்லை என்பது பின்னடைவாக இருந்தது. அவருக்குப் பதிலாக நேஹல் வத்ரா, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து களமிறங்கினார். புதிய பந்தில் ஷமியின் பந்துவீச்சு ராக்கெட் போல் சீறிச்செல்லும் என்பதை உணரவில்லை. ஷமியின் முதல் ஓவரிலேயே வதேரா 4 ரன்னில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த சீசன் முழுவதும் ஃபார்மின்றி தவித்த ரோஹித் சர்மா 8 ரன்னில் ஷமி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இரு விக்கெட்டுகளை வீழ்த்தியபின் குஜராத் அணிக்கு நம்பிக்கை பிறந்தது. கேமரூன் 3 ரன்களில் காயத்தால் வெளியேறி பின்னர் களமிறங்கினார்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

திலக் வர்மா, சூர்யா நம்பிக்கை

குஜராத் அணி நம்பிக்கையை உடைக்கும் வகையில் திலக் வர்மா, சூர்யகுமார் பேட் செய்தனர். அதிலும் திலக் வர்மா, குஜராத் பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினார். திலக் வர்மா களத்துக்கு வந்து சந்தித்த 4 பந்துகளில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் ஷமி ஓவரில் 4 பவுண்டரிகளை திலக் வர்மா விளாசினார். 13 பந்துகளில் திலக் வர்மா 43 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை குஜராத்துக்கு இணையாக பயணிக்க வைத்தார். திலக் வர்மாவுக்கு செக் வைக்கும் நோக்கில் ரஷித் கானை பந்துவீச ஹார்திக் அழைத்தார்.

ரஷித் கான் ஓவரிலும் சிக்ஸர், பவுண்டரிகள் பறந்தநிலையில் அதே ஓவரில் கிளீன் போல்டாகி திலக் வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதன்பின் கேமரூன் கிரீன், சூர்யகுமார் சேர்ந்து அணியை வழிநடத்தினர். இருவரும் சேர்ந்து அடுத்த 5ஓவர்களில் 50 ரன்களைக் குவித்து மும்பைக்கு நம்பிக்கையூட்டினர். சூர்யகுமார் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

விக்கெட் சரிவு

கேமரூன் கிரீன் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜோஷ் லிட்டில் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். சூர்யகுமார் மட்டும் தனிஒருவனாக ஆடி வந்தார், அவர் களத்தில் இருக்கும்வரை மும்பைக்கு வெற்றி சாத்தியம் என்று நம்பப்பட்டது.

திருப்புமுனையை ஏற்படுத்த 14 ஓவர்களுக்குப்பின் மோகித் சர்மாவை பந்துவீச ஹர்திக் அழைத்தார். மோகித் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே பலன் கிடைத்தது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்ற சூர்யகுமார் யாதவ், க்ளீன் போல்டாகி 61 ரன்னில் பெவிலியின் திரும்பினார்.

சூர்யகுமார் பெவிலியன் செல்லும்போது மும்பை அணியின் நம்பிக்கையையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டார். அதன்பின் சிறிதுநேரத்தில் மும்பை அணியின் இனிங்ஸே முடிந்துவிட்டது.

மோகித் சர்மா வீசிய அதே ஓவரில் சூர்ய குமாருக்குப்பின் களமிறங்கிய விஷ்னு 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் 2 ரன்னில் கால்காப்பில் வாங்கி ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மோகித் சர்மா வீசிய 2வது ஓவரில் ஜோர்டன்(2), சாவ்லா(0), கார்த்திகேயா ஆகியோரும் ஆட்டமிழந்து 171 ரன்னில் இன்னிங்ஸ் முடிந்தது. 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணிக்கு சவாலாக சென்ற மும்பை அணி, அடுத்த 16 ரன்களுக்குள் இன்னிங்ஸை இழந்து தோல்வியைத் தழுவியது.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

மோகித், ரஷித், ஷமி திருப்புமுனை

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு சுப்மான் கில் ஒரு முக்கியக் காரணம் என்றால் பந்துவீச்சில் மோகித் சர்மா, ரஷித் கான், ஷமி ஆகியோரின் பங்களிப்பு மிகப்பெரியது. அதிலும் மும்பை அணிக்கு எதிராக 3 ஆட்டங்ககளிலும் விக்கெட் எடுக்காமல் இருந்த ஷமி தொடக்தத்திலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கையை உடைத்தார்.

மும்பை அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்ல முயன்ற திலக் வர்மா, கிரீன் இருவரையும் ரஷித் கான் பார்த்துக் கொண்டார், கடைசிவரிசை பேட்ஸ்மேன்களை மோகித் சர்மா ஆட்டமிழக்கச் செய்தார். அருமையாகப் பந்துவீசிய மோகித் சர்மா 2.2ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஐபிஎல் சீசனில் பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் ஷமி(28விக்கெட்டுகள்), 2வது இடத்தி்ல் இருக்கும் ரஷித் கான்(27), மோகித் சர்மா(24) 3வது இடம் ஆகியோர் குஜராத் அணியிலேயே இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

சுப்மான் கில்லின் சாதனைகள்

சுப்மான் கில் சேர்த்த 129 ரன்கள், ப்ளே ஆப் சுற்றில் தனிஒரு பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2014ல் சிஎஸ்கே அணிக்கு எதிராக கிங்ஸ்லெவன் பஞ்சாப் பேட்ஸ்மேன் சேவாக் 122 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாகும். டி20 போட்டிகளிலேயே ப்ளே ஆஃப்பில் கில் ஸ்கோர் 3வது அதிகபட்சமாகும்.

சுப்மான் கில் நேற்றைய ஆட்டத்தில் 7வது ஓவரில் இருந்து 16வது ஓவர்கள் வரை 36 பந்துகளைச் சந்தித்து 94 ரன்கள் குவித்தார். நடுப்பகுதி ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் செய்தது கிறிஸ் கெயில்(108), சேவாக்(107) ஆகியோர் மட்டுமே இருந்தனர். 3வதாக கில் இணைந்துவிட்டார்.

இந்த சீசனில் சுப்மான் கில் அடித்த 3வது சதமாகும். ஒரு சீசனில் 4 சதங்களை விராட் கோலி(2016), ஜாஸ் பட்லர்(2022) ஆகியோர் மட்டுமே அடித்துள்ளனர். அதற்கு அடுத்தார்போல் கில் அடித்துள்ளார். கில் அடித்த 3 சதங்களுமே கடைசி 4 இன்னிங்ஸில் அடிக்கப்பட்டவை.

இந்த சீசனில் மட்டும் கில் 851 ரன்கள் சேர்த்துள்ளார். ஒருசீசனில் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்த 3வது அதிகபட்ச ஸ்கோராகும். பட்லர் கடந்தசீசனில் 864ரன்கள் சேர்ததார். கோலி 2016ல் 973 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

அகமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் 8வது முறையாக ஆடிய கில் 4 அரைசதங்களையும், 2 சதங்களையும் அடித்துள்ளார்.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

கில் சூப்பர் ஸ்டார்

குஜராஜ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ எங்கள் வெற்றிக்குப்பின் ஏராளமான கடின உழைப்பு இருக்கிறது, வீரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைத்தார்கள். சுப்மான் ஆட்டம் அற்புதம். எந்த நேரத்திலும் கில், தனது ஷாட்களின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. தேசத்துக்கும், அணிக்கும் கில் ஒரு சூப்பர்ஸ்டார்.

நல்ல நிலையில் வீரர்களை வைத்திருக்க என்னால் முடிந்த பணிகளைச் செய்தேன். ஒவ்வொரு வீரரும் பொறுப்புடன் பணியைச் செய்தது அற்புதம். ரஷித் கான் விக்கெட் எடுத்தப்பின்புதான் ஆட்டம் என் கைகளுக்குத் திரும்பியது சிறந்த கிரிக்கெட் இதுவரை விளையாடியுள்ளோம், பைனலிலும் இதேபோன்று செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்

ஆடுகளத்தை குறை சொல்வதா?

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப்பில் ஸ்வாரஸ்யத்தை அதிகப்படுத்த இதுபோன்ற பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான ஆடுகளம் அமைக்கப்படுவது இயல்பாகும். அதிலும் ஹைஸ்கோரிங் பிட்ச் இருந்தால்தான் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது இயல்பு. மும்பை அணியாலும் இந்த ஸ்கோரை சேஸிங் செய்திருக்க முடியும், ஆனால், வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது, விரைவாக ஆட்டமிழந்தது, ஹிட்டர் ஜொலிக்காதது போன்றவை தோல்விக்கு காரணம்.

மற்றவகையில் முதலில் பேட் செய்யும் அணி அடிக்கும் ஸ்கோரை சேஸிங் செய்யவும் இந்த ஆடுகளம் ஒத்துழைக்கும். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் அவர்களின் நம்பிக்கையை உடைத்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய பந்து நேராக பேட்ஸ்மேனை நோக்கியே சென்றது, ஸ்விங் என்பதே இல்லை, அதேபோல சுழற்பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தும் டர்ன் ஆகாமல் இருந்தது. இதைப் புரிந்து கொண்ட ரஷித் கான் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் வீசி திணறவிட்டார்.

இது போன்ற ஆடுகளங்கள் இரு அணிகளின் பேட்டிங் வல்லமையை காட்டுவதற்கு சரியாக இருக்கும் ஆனால், பந்துவீச்சாளர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்துவிடும்.

மும்பை தோல்விக்கு காரணம் என்ன?

பெரும்பாலும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை சேஸிங் செய்ய வேண்டும் என்றாலே எதிரணியில் உள்ள பேட்ஸ்மேன்கள், அதிலும் பெரிய ஹிட்டர்கள், மனதளவில் தயாராக இருந்தால்தான் சாத்தியம். அதிலும் 234 ரன்கள் என்ற இலக்கு மனரீதியாகவே எதிரணியை நிலைகுலையச் செய்துவிடும்.

அதுதான் நேற்றை ஆட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்களுக்கும் ஏற்பட்டது. இஷான் கிஷன் காயத்தால் விளையாடவில்லை, ரோஹித் சர்மாவின் ஏமாற்றமான பேட்டிங், கேமரூன் கிரீன் ரிட்டயர் ஹர்ட்டில் சென்றது, டிம் டேவிட் ஆட்டமிழந்தது என அடிக்குமேல் அடி, மனரீதியாக சோர்வை ஏற்படுத்தியது.

இருப்பினும் திலக் வர்மா, சூர்யகுமார் களத்தில் இருந்தவரை மும்பை ரசிகர்களுக்கு நம்பிக்கை குறையவில்லை. இருவரும் சென்றபின் ஆட்டமே தலைகீழானது. சூர்யகுமார் ஆட்டமிழந்தவுடன் பின்வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையின்றி பேட் செய்தனர். மும்பை அணி்க்கு தொடக்கம், நடுவரிசை மட்டுமே வலுவான பேட்டிங் இருக்கிறது.பின்வரிசையில் இல்லை என்பதால், குஜராத் அணிக்கு வேலை எளிதாக இருந்தது.

15 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்த மும்பை அணி, அதன்பின், வெறும் 16 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்து தோல்வி அடைந்தது பேட்ஸ்மேன்களின் மனரீதியான சோர்வையே காட்டுகிறது.

MI vs GT

பட மூலாதாரம்,BCCI/IPL

'கில் மாதிரி ஒருத்தர் இருந்தால் போதும்'

தோல்விக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறுகையில் “சுப்மான் நன்றாக பேட் செய்தார், ஆடுகளம் அருமையாக இருந்தது. 25 ரன்கள் கூடுதலாக நாங்கள் வழங்கிவிட்டோம். சேஸிங்கில் முதல்பகுதியில் நம்பிக்கையாக இருந்தேன், ஆனால் 2வது பகுதியில் இல்லை. பவர்ப்ளேயில் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. குஜராத்தில் இருந்ததைப் போல் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றிருப்போம். நல்ல பேட்டிங் ஆடுகளம், சிறிய பவுண்டரிகள் என ஆட்டம் திசை மாறியிருக்கும்.

இஷான் கிஷன் காயமடைந்தது எதிர்பாராதது. இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்று வலுவாக அடுத்த சீசனில் வருவோம். கில் இதே ஃபார்மை தொடர வேண்டும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72927n7r0do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?

christopherMay 27, 2023 11:20AM
tFMh2ZA0-image.jpg

இந்தியாவில் சாதி, மதம் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி எதற்கு உள்ளது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் அது கிரிக்கெட் தான் என்று.

நாட்டில் அறிவிக்கப்படாத மதமாக கருதப்படும் கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு ஹீரோ தோன்றுவார்கள். அவர்கள் தங்களது அசாத்திய திறமையின் மூலம் மக்களின் கண்களை தங்களை நோக்கியே பார்க்கும்படி எப்போதும் வைத்திருப்பார்கள்.

அதன்படி இந்தியாவில் கிரிக்கெட் தொடங்கிய காலம் தொட்டு விஜய் ஹசாரே முதல் விராட்கோலிவரை என மைதானத்திலும், ரசிகர்களின் மனதிலும் ஹீரோக்களாய் பதிந்த பல வீரர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

Cy8KgryH-image.jpg

சச்சின், கோலி வரிசையில் கில்

அதிலும் குறிப்பாக, தங்களது அபாரமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் மற்றும் விராட்கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தங்களது பெயரை ஆழமாக, அழகாக பொறித்த இந்திய நட்சத்திரங்களாக கருதப்படுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது மக்கள் மனதில் மெல்ல மெல்ல சிம்மாசனமிட்டு அமர்ந்து வருகிறார் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமும், நம்பிக்கையுமாய் உருவாகி வரும் சுப்மன் கில்.

சமீபகாலமாக ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் உச்சக்கட்ட பார்மில் இருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுப்மன் கில்லின் சாதனைகள் இல்லாத போட்டியே இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் தான் சச்சின், விராட்கோலி வரிசையில் அடுத்தடுத்து சதம் கண்டு சாதனை மன்னனாக வலம் வரும் சுப்மன் கில்லை கிரிக்கெட் உலகின் அடுத்த அவதார கடவுளாக ரசிகர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர்.

EaRQco5o-image.jpg

மூன்று வயதில் கிரிக்கெட்!

1999ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள ஃபாசில்கா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சுப்மன் கில். அவரது தந்தை லக்விந்தர் சிங் ஒரு விவசாயி என்றபோதும், சிறுவயதிலேயே கில்லுக்குள் ஒளிந்திருந்த கிரிக்கெட் ஆர்வத்தை கண்டறிந்தார்.

எனவே அவர் பயிற்சி பெற ஏதுவாக தனது வயலிலேயே ஒரு மைதானத்தை உருவாக்கினார். மேலும் கில் பயிற்சி பெறுவதற்காக கிராமத்தில் இருந்த மூத்த சிறுவர்களை வரவழைப்பார். அவர்களிடம் ’கில்லின் விக்கெட்டை யாரால் எடுக்க முடியுமோ, அவர்களுக்கு 100 ரூபாய் கொடுப்பேன்’ என்று லக்விந்தர் போட்டிகளும் நடத்தியுள்ளார். லக்விந்தரின் இந்த ஆரம்பகால பயிற்சி தான் இன்று மைதானத்தில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் சவால் விடும் அதிரடியான பேட்ஸ்மேனாக கில்லை மாற்றியுள்ளது.

சுப்மன் கில் வளர வளர அவர் கிரிக்கெட்டில் சாதிக்க இன்னும் சிறந்த வசதிகள் தேவை என்பதை லக்விந்தர் உணர்ந்தார். எனவே அவர் மொஹாலி நகருக்குச் சென்று கில்லை பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் அகாடமியில் சேர்த்தார்.  மேலும் மகனுக்காக, கில் பயிற்சி பெறும் பிசிஏ ஸ்டேடியம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கவனித்துக்கொண்டார்.

கில் குறித்து அவர் தந்தை அளித்த ஒரு பேட்டியில், “சுப்மனுக்கு மூன்று வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. அப்போதிருந்தே அவன் கிரிக்கெட் விளையாடினான். அந்த வயது குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவார்கள். ஆனால் கில்லுக்கு ஒரு பேட்டும், பாலுமே போதுமானதாக இருந்த்து. இன்னும் சொல்லப்போனால் சிறுவயதில் கில் எப்போதும் தனது பேட், பந்துடன் தான் தூங்குவான்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் லக்விந்தர். 

ayMK5BBM-image.jpg

பாகிஸ்தானை பந்தாடிய கில்

அதனால் தான் 2014 ஆம் ஆண்டு, பஞ்சாபின் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆட்டமிழக்காமல் 351 ரன்கள் எடுத்தார். மேலும் தொடக்க வீரர் நிர்மல் சிங்குடன் ஜோடி சேர்ந்து 587 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

அதனைத்தொடர்ந்து தனது 16 வயதுக்குட்பட்ட பஞ்சாப் அணிக்காக அறிமுகமான கில், விஜய் மெர்ச்சண்ட் டிராபியில் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

அதுமுதல் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பக்கம் மெல்ல மெல்ல திருப்பினார் இந்த பஞ்சாப் கில்லி. அதன்பிறகு அவரது கிரிக்கெட் கேரியரில் எங்கு திரும்பினாலும் ஜெட் வேக வளர்ச்சி தான்.

2016ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் லிஸ்ட்-ஏ அணியில் அறிமுகமான கில், 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக முதல் தர வீரராக அறிமுகம் ஆனார்.

அதில் சிறப்பாக செயல்பட்ட கில், 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் ஒரு சதம்(102) உட்பட அந்த தொடரில் 372 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்திய அணி உலக்கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

e6L8tP6R-image.jpg

குஜராத் அணிக்காக முதல் கோப்பை!

அதனைத்தொடர்ந்து ஐபிஎல் 2018 ஆம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணிக்காக 1.8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த அணிக்காக 4 ஆண்டுகள் விளையாடினார். 

அதன்பின்னர் 2022ஆம் ஆண்டில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு சுப்மன் கில்லின் தனித்துவமான ஆட்டம் உதவியது என்றால் மிகையல்ல.

6J26FVnR-image.jpg

இரட்டை சதம் அடித்த இளம் வீரர்!

இதற்கிடையே இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து சர்வதேச பார்மட்டுகளிலும் சுப்மன் கில் கால் பதித்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வரும் கில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 7 சதங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 2,403 ரன்கள் குவித்துள்ளார்.

அதிலும் இந்தாண்டு ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து பலரின் புருவத்தையும் உயரவைத்தார் 23 வயதே ஆன சுப்மன் கில். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை பதிவு செய்த இளம் வீரர் மற்றும் ஐந்தாவது இந்தியர் என்ற அபார சாதனை படைத்தார்.

NJ4KxsgS-image.jpg

அடுத்தடுத்து சதம்… அபார சாதனை!

அதன் தொடர்ச்சியாக மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் அசுரனாக உருவெடுத்துள்ளார் சுப்மன் கில்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நடப்பு ஐபில் தொடரில் இதுவரை 3 சதங்கள் அடித்துள்ளார்.

லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 101 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 104 ரன்களும் என அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திரும்ப வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று மே 26ஆம் தேதி நடைபெற்ற குவாலிபையர் 2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை பஞ்சு பஞ்சாய் பவுண்டரி லைனுக்கு பறக்கவிட்டு 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் விராட் கோலிக்கு பிறகு ஒரே சீசனில் 3 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். 49 பந்துகளில் சதத்தை எட்டிய சுப்மன் கில்,  60 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் விளாசி ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.

மேலும் 2016ஆம் ஆண்டு 973 ரன்களை குவித்த கோலி மற்றும் 2022ஆம் ஆண்டு 863 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் ஆகியோருக்குப் பிறகு ஐபிஎல் சீசனில் ஒட்டுமொத்தமாக 850 ரன்களைக் கடந்த மூன்றாவது பேட்ஸ்மேன் (851*) என்ற அரிய சாதனையை கில் தன்வசமாக்கியுள்ளார்.

நடப்பு தொடரில் 3 சதங்கள், 4 அரை சதங்களுடன் 851 ரன்கள் குவித்து அதிகப்பட்ச ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியையும் தற்போது அவர் கைப்பற்றியுள்ளார்.

wFQkXJhD-image.jpg

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்?

இப்படி ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனால் சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சுப்மன் கில், விரைவில் கேப்டனாகவும் இந்திய அணியை வழிநடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கிரிக்கெட் பேட்டுடன் சிறுவயதில் உறங்கியவர். இன்று தனது விடாமுயற்சியாலும், உழைப்பாலும் இன்று தனது கனவை நனவாக்கி களத்தில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.

அதை விட முக்கியம் நமது கனவுகளுக்காக நேர்மையுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற என்பதற்கான சிறந்த உதராணமாக உருவாகியுள்ளார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்!

கிறிஸ்டோபர் ஜெமா
 

https://minnambalam.com/sports/who-is-shubman-gill/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமா? 'கூல்' கேப்டன் தோனியின் வியூகமா?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 27 மே 2023, 10:34 GMT
    புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சீசன் ஆரம்பத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று, பெரிய இலக்கை சேஸிங் செய்து டாம்பீகம் செய்த அணிகள் இறுதியில் ப்ளே ஆஃப் கூட செல்லாமல் போனதுண்டு.

ஆனால், தொடக்கம் முதல் கடைசிவரை பேட்டிங், பந்துவீச்சில் நிலைத்தன்மையை உறுதி செய்து, திட்டமிட்டு போட்டியை எதிர்கொண்டு வென்ற அணிகள், பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்காத அணிகள்தான் ப்ளே ஆஃப் வரை செல்கின்றன, சாம்பியன்களாக உருநஎடுக்கின்றன என்பதற்கு புள்ளிவிவரங்களே சாட்சி.

ஸ்மார்ட் கேப்டன்

அதில் முக்கியமானதும் முதலிடத்தில் இருப்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் கேப்டன் மகேந்திர சிங் தோனியும்தான்.

மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என்று ரசிகர்கள் வர்ணிக்கும் அதேநேரத்தில் அவர் திட்டங்களை வகுத்து, சரியாகச் செயல்படுத்தும் ‘ஸ்மார்ட் கேப்டன்’ என்பதையும் மறுக்க முடியாது.

மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று, பெரிய ஸ்கோரை மிகவும் சிரமப்பட்டு சேஸிங் செய்து, போராடி ப்ளே ஆஃப் செல்வதை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பெரும்பாலும் விரும்புவது இல்லை.

இதற்கு கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடப்பு தொடர் வரை சிஎஸ்கே எந்தவிதமான டென்ஷமும் இல்லாமல் பெற்ற வெற்றிகளே சாட்சி.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல என்ன தேவை, எத்தனை புள்ளிகள் வேண்டும், நிகர ரன்ரேட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தக்கூடியவர்.

ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பாக இடம் பெறுவதற்கு நிகர ரன்ரேட்டை பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்து, அதை ஒவ்வொரு போட்டியிலும் கடைபிடித்து எதிர்கொண்டு வெற்றிகளைப் பெறக்கூடிய அணி சிஎஸ்கே.

அதனால்தான் சிஎஸ்கே அணி கடந்த 14 சீசன்களில் 10வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நிகர ரன்ரேட் மாயஜாலம்

தோனியின் திட்டமிட்ட அணுகுமுறையை ஒரு சிறிய சான்றின் மூலம் விளக்க முடியும்.

புராணங்களில் வரும் கதையில் உலகத்தைச் சுற்றிவர முருகன் மயிலை எடுத்துக்கொண்டு சென்ற நிலையில், விநாயகரோ தனது, தாய், தந்தையைச் சுற்றி ஞானப்பழத்தைப் பெற்றார் எனக் கூறப்படுவது உண்டு.

விநாயகரைப் போலத்தான் தோனியும். சுருக்கமான, ஸ்மார்ட்டான வழியில் எவ்வாறு இலக்கை அடைவது என்பதைத் தெரிந்துகொண்டு நிகர ரன்ரேட்டை பின்பற்றியே ப்ளே ஆஃப் சுற்றுக்கும் எளிதில் சென்றுவிடுவார்.

ஒரு போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்குச் சென்று திடீரென விக்கெட் சரிவை சந்தித்து தோல்வியின் பிடிக்குச் சென்றாலும், எளிதாகத் தோல்வியை எதிரணியிடம் தந்துவிடமாட்டார்கள். அந்தப் போட்டியை கடைசி ஓவர்வரை இழுத்துச் சென்று, குறைந்த ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை ஏற்பார்கள்.

அதாவது மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்காமல் இருப்பதில் சிஎஸ்கே அணி எப்போதும் கவனமாக இருக்கும்.

ஒவ்வொரு சீசனிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதைத் தாரக மந்திரமாக எடுத்துச் செயல்படுகிறது. அவ்வாறு செயல்பட்டு ஐபிஎல் தொடரில் 5 சீசன்களில் நிகர ரன்ரேட் மூலமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சிஎஸ்கே பெற்றிருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

2010 ஐபிஎல்

கடந்த 2010இல் நடந்த ஐபிஎல் சீசனில் 4 அணிகள், அதாவது, சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஆர்சிபி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

ஆனால், நிகர ரன்ரேட்டில் மற்ற 3 அணிகளை விடவும் சிறப்பாக பிளஸ் 0.279 ரன்ரேட்டுடன் சிஎஸ்கே அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது.

நிகர ரன்ரேட்டிலும் டாப்-4 அணிகளில் 3வது இடத்தையும் சிஎஸ்கே பெற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டமும் வென்றது.

2012 சீசனில் 4வது இடம்

இரண்டாவதாக 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் முறை கொண்டுவரப்பட்டது. அதில் முதல் இரு இடங்களில் இடம் பெறுவது முக்கியமாகக் கருதப்பட்டது.

மூன்றாவது மற்றும் 4வது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் போட்டியிட்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி நிகர ரன்ரேட் மைனசில் இருந்தாலும், புள்ளி அடிப்படையில் 20 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்தது.

ஆனால், சிஎஸ்கே அணியும், ஆர்சிபியும் 17 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. அப்போது நிகர ரன்ரேட் ஒப்பீட்டில் ஆர்சிபி மைனஸ் 0.22 என்ற நிலையில் இருந்தபோது, சிஎஸ்கே பிளஸ் 0.100 எனப் பெற்று 4வது இடத்தைப் பெற்றது. அந்த சீசனில் 2வது இடத்தையும் சிஎஸ்கே உறுதி செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி 2009ஆம் ஆண்டில் சென்னை அணியின் கேப்டன் ஸ்டீஃபன் ப்ளெம்மிங் உடன் பயிற்சி வேளையின்போது...

2019இல் டாப் 2

மூன்றாவதாக 2019ஆம் ஆண்டு சீசனில் டாப் 2 இடங்களைப் பிடிக்க டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்தது.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. ஆனால், நிகர ரன்ரேட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணி 0.044 என பிளசில் இருந்தது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் 0.131 என பிளசில் உயர்வாக இருந்து 2வது இடத்தைப் பிடித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே 2வது இடத்தைப் பிடித்தது.

2021இல் ஆர்சிபி-சிஎஸ்கே போட்டி

2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், டாப் 2 இடங்களைப் பெற ஆர்சிபிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே போட்டி உருவானது.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் மல்லுக்கட்டின. முடிவில் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.140 ஆக இருந்தது. ஆனால், சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் 0.455 என்று உயர்வாக இருந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

2014இல் கோட்டைவிட்ட சிஎஸ்கே

ஆனால் 2014ஆம் ஆண்டில் மட்டும்தான் சிஎஸ்கே அணி நிகர ரன்ரேட்டை பராமரிக்காமல் இருந்தது. அதற்கு தண்டனையாக 2வது இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சிஎஸ்கே இழந்தது.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் சமநிலை வகித்து 2வது இடத்திற்குப் போட்டியிட்டனர். ஆனால், நிகர ரன்ரேட்டியில் சிஎஸ்கே அணி பிளஸ் 0.385 ஆக இருந்தது. ஆனால், கொல்கத்தா அணி பிளஸ் 0.418 ஆக வைத்து இரணாவது இடத்தைப் பிடித்தது.

சாகச கேப்டன் அல்ல

பெரும்பாலான ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியால் எவ்வாறு ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடிகிறது. இது அதிர்ஷ்டத்தால் இடம் கிடைக்கிறதா என்றால் இல்லை.

சிஎஸ்கே அணி அதன் கேப்டன் தோனியின் திட்டமிட்ட செயல்பாட்டால், அணுகுமுறையால் நிகர ரன்ரேட் பராமரிப்பால் கிடைத்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் பிற அணிகளின் கேப்டன்களை போல் ‘சாகச கேப்டனாக’ தோனி தன்னை எப்போதும் வெளிப்படுத்தியதே இல்லை. திட்டங்களை வகுப்பவராக, திட்டங்களைச் செயல்படுத்தும் ‘புத்திசாலித்தனமான கேப்டனாக’ தோனி தொடர்ந்து செயல்பட்டுள்ளார்.

வெற்றிக்கும், நிகர ரன்ரேட் உயர்வுக்கும் என்ன தேவை, ஓர் இலக்கை அடைவதில் சிரமம் இருக்கும்பட்சத்தில் நிகர ரன்ரேட்டை பராமரிப்பது எப்படி என்பதைத் திட்டமிட்டு வீரர்களைக் களமாடச் செய்வதில் தோனியின் ஸ்மார்ட் திறன் மதிப்பெண்களை அள்ளுகிறது.

மிகப்பெரிய சாதனை வெற்றிகளை விரும்புவதைவிட, மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சந்திக்கும் தோல்வியை சிஎஸ்கே அணியும், கேப்டன் தோனியும் சந்திக்க விரும்பாதவர்கள்.

நிகர ரன்ரேட்டை எவ்வாறு உயர்த்துவது, ஓர் இலக்கை எவ்வளவு விரைவாக எட்டுவது, பெரிய வித்தியாசத்தில் எதிரணியை சுருட்டுவது எப்படி என்பதில் சிஎஸ்கே அணி கவனத்துடன் செயல்படும்.

சுருக்கமாகக் கூறினால், தோற்றாலும் பெரிய சேதாரத்தைச் சந்திக்காமல் இருக்க வேண்டும், வெற்றியானாலும், தோல்வியானாலும், நிகர ரன்ரேட் அடிவாங்கிவிடக் கூடாது என்பதில் சிஎஸ்கேவின் கவனம் அலாதிதான்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

2023 ஐபிஎல் சீசனில் எப்படி

இதைத்தான் சிஎஸ்கே கடந்த 14 ஐபிஎல் சீசன்களிலும் துல்லியமாகச் செய்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாடி வந்துள்ளது. இதற்கான பாதையை வகுத்து தோனியும் அணியை வழிநடத்தி ஸ்மார்ட் கேப்டனாக ஜொலித்து வருகிறார். இந்த சீசனில்கூட சிஎஸ்கே அணி இதைத்தான் செய்தது.

சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் தோற்றபோதிலும்கூட அனைத்து ஆட்டங்களையும் கடைசி ஓவர் அல்லது 19வது ஓவர்வரை இழுத்து வந்திருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 32 ரன்களில் தோற்றதுதான் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும்.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எடுத்துக்கொண்டால், ஈடன் கார்டனில் இரு போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும்கூட ஆர்சிபி, குஜராத்திடம் மோசமான தோல்விகளைச் சந்தித்தது.

இதன் விளைவு, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி, ஆர்சிபியிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது...

நிகர ரன்ரேட்டை கடும் ஏற்றத்தாழ்வுகளுடன் பராமரிப்பதால்தான் ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதில் திட்டமிட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது கடினமாக இருந்தது.

கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியை மும்பை அணி வீழ்த்தியது ராஜஸ்தான் அணிக்குப் பாதகமாக அமைந்தது. நிகர ரன்ரேட்டை ராஜஸ்தான் அணி தொடக்கத்திலிருந்தே சீராகப் பராமரித்து இருந்தால், நிச்சயமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்திருக்க வாய்ப்புள்ளது.

தோனி கூறியது என்ன

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு, நிகர ரன்ரேட்டை பராமரிப்பது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறுகையில் “176 ரன்களை சேஸிங் செய்ய நினைத்தோம், ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

இருப்பினும் எங்களால் நிகர ரன்ரேட்டை இழக்க முடியாது, நிகர ரன்ரேட் முக்கியம் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நாங்கள் தயாராக இல்லை,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cjj9j185qv0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா? சுப்மன் கில்லை எப்படி சமாளிக்கப் போகிறது?

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 40 நிமிடங்களுக்கு முன்னர்

50 நாட்களுக்கும் மேலாக நடந்த ஐபிஎல் டி20 திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சாம்பியன் யார் என்பதை உறுதி செய்ய ஆமதாபாத்தில் உள்ள மொடீரா மைதானத்தில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் தொடர் தொடங்கும்போது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதின, இன்று நடக்கும் இறுதி ஆட்டத்திலும் இரு அணிகளுமே களம் காண்கின்றன.

பைனலில் சிஎஸ்கே

குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றாலும், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், சிஎஸ்கேவிடம் தோற்றது குஜராத். முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி.

முதல் தகுதிச்சுற்று நடந்த சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருந்தது. ஆனால் இன்று நடக்கும் ஆமதாபாத் ஆடுகளம், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. இங்கு முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 193 ரன்களை தாராளமாக சேர்க்க முடியும். இதனால், இரு அணிகளும் பேட்ஸ்மேன்களை கூர்தீட்டி வருகின்றன.

மைதானம் யாருக்கு சாதகம்?

ஆமதாபாத்தில் இதுவரை 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி குஜராத்துடன் மோதி, அனைத்திலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது, ஒரு ஆட்டத்தில்கூட இங்கு சிஎஸ்கே வென்றது இல்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆடுகளத்தில் 9 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வாகை சூடியுள்ளது.

சிஎஸ்கே அணி இந்த முறை கோப்பையை வென்றால், 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கேயும் சேர்ந்துவிடும். அதேசமயம், அறிமுக சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, 2 வது முறையாக கோப்பையைத் தக்கவைக்கவும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியும் கடுமையாகப் போராடும்,

இரு அணிகளின் போராட்ட உத்தியைத் தவிர்த்து சில விஷயங்களை பொதுவாகச் செய்து வருகின்றன. அணியில் உள்ள வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, பதற்றத்தைப் போக்கும் விதத்தில் பயிறச்சிகள், சூழலை உருவாக்குதல், இனிமையான சூழலில் வீரர்கள் ஓய்வெடுத்தலை இரு அணியினரும் செய்தனர்.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

தோனிக்கு 11வது பைனல்

இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி ஆட்டம் என்பது தோனிக்கு சிஎஸ்கே கேப்டனாக 10-வது ஐபிஎல் பைனலாகும், ஒட்டுமொத்தத்தில் 11வது பைனல். ஹர்திக் பாண்டியாவுக்கு 5வது பைனலாகும்,

ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ நான் அதிகமாகக் கற்றுக்கொள்வேன். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானதையும் தோனியிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆதலால், இன்று நடக்கும் ஆட்டம், ஹர்திக் பாண்டியா இதுவரை கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஒரு சவாலாக அமையும்.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே பெரும்பாலும் ப்ளேயிங் லெவனில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய மாட்டார்கள் எனத் தெரிகிறது. இம்பாக்ட் ப்ளேயர் விதியில் சுப்மான் கில், ஜோஷ் லிட்டல் ஆகியோரும், சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே, மதீஷா பத்திரணாவும் இம்பாக்ட் ப்ளேயராக வரக்கூடும்.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

ஷமி, ரஷித்கான் துருப்புச்சீட்டு

பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டால் போட்டியை வெல்லலாம், பந்துவீச்சாளர்கள் செயல்பட்டால் தொடரையே வெல்லலாம் என்பார்கள். அதுபோல குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முக்கியத் துருப்புச் சீட்டாக இருப்பார்கள்.

அதிலும் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஊதா தொப்பியுடன் இருக்கும் ஷமி, சிஎஸ்கே தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே, கெய்க்வாட்டுக்கு சிம்மசொப்னாக இருப்பார். கடந்த 3 இன்னிங்ஸில் கான்வே 3 முறை ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், ஷமி பந்துவீச்சில் இதுவரை கெய்க்வாட் ஆட்டமிழந்தது இல்லை. ஆமதாபாத்தில் இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் ஆடிய ஷமி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

ரஷித் கானைப் பொறுத்தவரை கெய்க்வாட், அம்பதி ராயுடுவுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் ரஷித் கான் பந்துவீச்சில் கெய்க்வாட், ராயுடு திணறித்தான் செய்துள்ளார்கள், ஸ்ட்ரைக் ரேட்டும் குறைவாகவே வைத்துள்ளனர்.

அதேநேரம், ராயுடுவுக்கு எதிராக மோகித் சர்மாவின் பந்துவீச்சு சவாலாக இருக்கும். இதுவரை 6 முறை ராயுடுவை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் மோகித் சர்மா. 44 பந்துகளைச் சந்தித்த ராயுடு 54 ரன்களையே சேர்த்துள்ளார்.

அதேபோல சிஎஸ்கே அணியில் ஜடேஜாவுக்கு எதிராக டேவிட் மில்லர் 168 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கில் ஒருவேளை களத்தில் நின்றாலும் அது ஜடேஜாவுக்கு சவாலாக இருக்கும். இதுவரை கில்லை ஒருமுறைகூட ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தது இல்லை.

சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர் தீக்சனா சென்னையில் இல்லாமல் பல்வேறு மைதானங்களில் நடந்த ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை தீக்சனா கைப்பற்றியுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கும்.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆடுகளம் எப்படி?

ஆமதாபாத் மொட்டீரா மைதானத்தின் ஆடுகளம் இந்த சீசனில் ஹை-ஸ்கோரின் பிட்சாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் நடந்த 8ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 193 ரன்களாக இருக்கிறது. இங்கு நடந்த 8 ஆட்டங்களில் 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளனர்.

இந்த ஐபிஎல் சீசனில் கூட முதலில் பேட் செய்த அணிகளே 40 வெற்றிகளையும், 32 தோல்விகளையும் சந்தித்துள்ளன. ஆதலால், முதலில் பேட் செய்யும் அணிக்கே புள்ளிவிவரங்கள் சாதகமாக உள்ளன. இன்றைய ஆட்டத்தில் பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் அச்சுறுத்தும் அளவுக்கு இருக்காது மேகமூட்டத்துடனே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது.

இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் இருமுறை மோதியுள்ளன. இதில் இரு போட்டிகளிலும் டைட்டன்ஸ் டாஸ் வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் குஜராத் அணியும், 2வது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் வென்றன. இதுவரை 4 ஆட்டங்களில் குஜராத்துடன் மோதியுள்ள சிஎஸ்கே ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2வது தகுதிச்சுற்றில் ஹர்திக் பாண்டியா பந்துவீசியதால், இன்றைய ஆட்டத்திலும் அவரின் பந்துவீச்சு நடுப்பகுதி ஓவர்களில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

சுப்மன் கில்லை எப்படி சமாளிக்கப் போகிறது சிஎஸ்கே?

சிஎஸ்கே கேப்டன் தோனி, ஒவ்வொரு அணிக்கும், ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் தனித்தனியாக யுத்திகளை வகுத்து செயல்படக்கூடியவர். முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஒவ்வொரு வீரரையும் கட்டம் கட்டி தூக்கினார். அந்த ஆட்டத்தில்கூட கில்லை ஆட்டமிழக்கச் செய்வது கடினமாக இருந்தது. அதன்பின் நடந்த 2வது தகுதிச்சுற்றில் கில் அற்புதமான சதம் அடித்து மிரட்டலான ஃபார்மில் இருப்பதால், கில்லைச் சமாளிக்க தனியாகத் திட்டம் சிஎஸ்கேவிடம் இருக்கும்.

சுப்மன் கில் கடந்த போட்டிகளிலும் சிஎஸ்கேயின் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், தனக்கிருக்கும் ஷார்ட் பால் சிக்கலை சரி செய்த கில், மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பந்தை வெளுத்து வாங்கினார். ஆதலால், கில்லுக்கு ஷார்ட் பந்துவீசும் சிஎஸ்கேவின் யுத்தி எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியாது. கில்லுக்கு வீசப்படும் ஷார்ட் பந்து, ஸ்லோவர் பாலாகவோ அல்லது, ஸ்டெம்பை நோக்கியோ, லென்த்தில் வீசப்படுகிறதா என்பதைப் பொருத்து கில்லுக்கு கடிவாளம் போடும். இல்லாவிட்டால் கில் பேட்டிங் சிஎஸ்கேவுக்கு தில்லாக இருக்கும்.

தீபக் சாஹர் புதிய பந்தில், அதிலும் பவர்ப்ளேயில் விக்கெட் வீ்ழ்த்தக்கூடியவர். அதிலும் 2021ல் கில்லுக்கு 18 பந்துகளை வீசி 21 ரன்கள் கொடுத்து 2 முறை சாஹர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆனால், நிலைமை இப்போது மாறிவிட்டது. இந்த சீசனில் 14 பந்துகளை கில்லுக்கு வீசிய தீபக் சாஹர் 17 ரன்கள் கொடுத்து ஒருமுறை மட்டுமே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஆதலால், தீபக் சாஹரை கில்லுக்கு எதிராக எவ்வாறு தோனி பயன்படுத்தப்போகிறார் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

டாஸ் வென்றால் என்ன செய்வது?

டாஸ் வெல்லும் அணி அடுத்து என்ன செய்யும், பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்குமா அல்லது பீல்டிங்கைத் தேர்வு செய்யுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் முதலில் பேட் செய்த அணிகளே அதிகம் வென்றுள்ளன, அதாவது 40 போட்டிகளில் 54.8% வெற்றியை பெற்றுள்ளன. இதில் விதிவிலக்காக இம்பாக்ட் ப்ளேயரை சரியாகப் பயன்படுத்தும் அணி, சேஸிங்கில் வென்றுள்ளது.

கடந்த 2வது தகுதிச்சுற்றில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு பெரிய தவறு செய்தது. கில்லின் அதிரடி ஆட்டம் மும்பைக்குத் தலைவலியாக மாறியது, பனிப்பொழிவும் இல்லாதது மும்பைக்கு பாதகமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆமதாபாத்தில் மழைக்கு சிறிய வாய்ப்புள்ளது, ஆனால், பனிப்பொழிவுக்கும் வாய்ப்பு இருக்கிறது, இந்த கணிப்புகள் மாற்றத்துக்கு உட்பட்டவைதான். ஆதலால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வதா, அல்லது பந்துவீசுவதா என்பது சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கும்.

GT vs CSK

பட மூலாதாரம்,BCCI/IPL

 

குஜராத் டைட்டன்ஸ்(உத்தேச அணி)

சுப்மான் கில், விருதிமான் சாஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேட்டியா, நூர் அகமது, மோகித் சர்மா, முகமது ஷமி, ஜோஷ் லிட்டில்

சென்னை சூப்பர் கிங்ஸ்(உத்தேச அணி)

ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே, ஷிவம் துபே, அஜிங்கியே ரஹானே, மொயின்அலி, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா, மகேஷ் பத்திரணா

https://www.bbc.com/tamil/articles/c2xp0lgp61xo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டோனி போன்ற தலைவரை மீண்டும் நாங்கள் பார்க்கப்போவதில்லை - இறுதிப்போட்டிக்கு முன்னர் சென்னை ரசிகர்கள்

Published By: RAJEEBAN

28 MAY, 2023 | 11:28 AM
image
 

எம்எஸ்டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்அணியும் குஜராத் அணியும் 2023 ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் இன்று மோதவுள்ள நிலையில் போட்டிக்கு முன்பாக சென்னையின் டோனி  ரசிகர்கள் டோனிக்கான விசேட செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

dhoni-csk-fans.jpg

ராஞ்சியை சேர்ந்த டோனிக்கும் சென்னைக்கும் விசேட பிணைப்புள்ளது எம்ஏசிதம்பரம் மைதானத்தில் அவர் சென்னைஅணிக்காக  பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் விளையாடுவதற்காக களத்தில் இறங்கும் தருணங்களில் எல்லாம் ரசிகர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல்லின் டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் டோனியின் ரசிகர்களின் விசேட செய்தி காணப்படுகின்றது.

FiWaLfJUAAAQCZc.jpg

பத்து வருடங்களாக ஐபிஎல் கடமைகளில் நான் ஈடுபட்டுள்ளேன், டோனியை பார்க்கவேண்டும் என்பதே ஆரம்பத்தில் எனது பணிக்கான ஒரே நோக்கமாகயிருந்தது என  தெரிவித்துள்ளார். ஆகவே நான் இந்த பணியில் என்னை தொடர அனுமதிக்கவேண்டும் என விசேட அனுமதியை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தோனியை மிஸ் பண்ணப்போகின்றோம் என நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ள அவர் இது தான் டோனியின் இறுதி ஐபிஎல் என மக்கள்தெரிவிக்கின்றனர், அது உண்மையா என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

FvXJXQcWcAUlYZf.jpg

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணிக்கு பலர் தலைமை தாங்குவார்கள் ஆனால் டோனி போன்ற ஒருவரை மீண்டும் நாங்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகிடைக்காது, அவர் மீண்டும் மீண்டும் எனது கனவுகளில் வருகின்றார் எனவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

நிலைமை எவ்வாறானதாகயிருந்தாலும் டோனி மிகவும் நிதானமானவர், அமைதியானவர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு ரசிகர் தல எப்போதும் தலதான் எனவும் தெரிவித்துள்ளார்.

dhoni-csk-fans.jpg

எனது சிறுவயதிலிருந்து எப்போதும் டோனிதான் என்றாவது ஒருநாள் அவரை பார்ப்போம் என சிந்தித்தவேளை நான் அவரை பார்த்தேன். அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ள முடியுமா என நான் எண்ணியவேளை அதுவும் நடந்தது என மற்றுமொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156349

Posted

 

IPL இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை

IPL இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் குஜராத்தில் தற்போது நிலவும் வானிலை ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபையர்- 2 போட்டியின் போதும் மழை பெய்தது.

இன்று மதிய நிலவரப்படி வானம் ஓரளவு தெளிவாக இருந்தது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்குப் பிறகு போட்டி தொடங்கி குறைந்தபட்சம் 5 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும். ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி நடைபெறும். இன்று டாஸ் போடப்பட்டாலும், ஆட்டம் நடக்காத சூழ்நிலையில், நாளை இரு தரப்புக்கும் 20 ஓவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு போட்டி தொடங்கும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடப்படும். அணிகளில் மாற்றம் செய்ய கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் இறுதிப்போட்டியில் 'விளையாடிய' மழை: இன்றும் மழை தடுத்தால் என்ன நடக்கும்?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 28 மே 2023, 19:24 GMT
    புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

மாலையில் இருந்து இடைவெளிவிட்டு, தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, குறைந்த அளவு ஓவர்களில்கூட போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, ரிசர்வ் டே-க்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

இதையடுத்து, ரிசர்வ் டே-வான திங்கட்கிழமை, இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நாளையும் மழை குறுக்கிடாமல் இருக்கும் பட்சத்தில் 20 ஓவர்கள் கொண்டதாக போட்டி அமையும்.

இறுதிப்போட்டியில் விளையாடிய மழை

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்த ஐபிஎல் டி20 திருவிழா இன்றுடன் முடிவுக்கு வர இருந்தது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் மோதவிருந்தன.

மாலை 7.30 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கவிருந்தது. ஆனால் ஆமதாபாத்தில் மாலையிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது.

மழை இடைவெளி விட்டுப் பெய்து, பிறகு இடியுடன் கூடிய பலத்த மழையாக இருந்ததால், டாஸ் போடும் நிகழ்வைக் குறித்த நேரத்தில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சிஎஸ்கே ரசிகர்கள் மஞ்சள் ஆடையுடன் நரேந்திர மோதி மைதானம் முழுவதும் நிரம்பியிருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு நம்பிக்கையுடன் வந்திருந்தனர்.

ஆமதாபாத் வானிலை நிலவரப்படி மழைக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் குறைவு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மழையால், ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்

ஆமதாபாத்தில் மழை விட்டுவிட்டு பெய்தது. மழை நின்றபோது, சிஎஸ்கே ரசிகர்கள் குஷியாகி, தோனி, சிஎஸ்கே என்று கோஷமிட்டனர். ஆனால், மழை மீண்டும் தொடர்ந்து பெய்யத் தொடங்கியதையடுத்து, ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

மழை நின்றுவிட்டால் ஓவர்களை குறைத்துக்கூட இறுதிப்போட்டியை நடத்திவிடலாம் என்று நடுவர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், திடீரென நின்ற மழை மிகச் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெய்யத் தொடங்கியதால் எந்த முடிவையும் நடுவர்களால் எடுக்க முடியவில்லை.

மழையால் மைதானத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. ஆகவே, அதை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடந்தது. இதனால், மழை நின்றாலும் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

பிறகு இரவு 9.30 மணியிலிருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ஆடுகளத்தை மூடியிருந்த கவர்களை எடுத்த ஊழியர்கள், ஆடுகளத்தை பாதுகாப்பதற்காக மீண்டும் அந்த கவர்களை கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழை ஓரளவுக்கு நின்றதால் 9.35 மணிக்கு முழு ஓவர்கள் கொண்டதாக ஆட்டம் நடத்தப்பட வாய்ப்பு இருந்தது. ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், சிறிது விட்ட மழை மீண்டும் பெய்யத் தொடங்கியதால், ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

'கட் ஆஃப் டைமுக்கும்' வாய்ப்பில்லை

எப்படியும் இரவு 12 மணிக்குள் மழை நின்றுவிட்டால் “கட் ஆஃப் டைம்” என்ற அடிப்படையில் இறுதிப் போட்டியை 5 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்திவிடலாம் என்ற திட்டத்துடன் நடுவர்கள் இருந்தனர்.

ஆனால், மழை தொடர்ந்து பெய்தது. ஒருவேளை மழை நின்றாலும் மைதானத்தில் உள்ள நீரை அகற்றுவதற்கு ஊழியர்களுக்கு ஒரு மணிநேரம் தேவைப்படும். ஆனால், இரவு 11 மணிவரை மழை விட்டுவிட்டு பெய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் 12 மணிக்கு மேல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போட்டி நடுவர்கள் சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெம்மிங், குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் நெஹ்ரா ஆகியோருடன் ஆலோசனை செய்து, இறுதி ஆட்டத்தை ரத்து செய்யும் முடிவை அறிவித்தனர்.

இதையடுத்து, ரிசர்வ் நாளான திங்கட்கிழமை மழை இல்லாத பட்சத்தில் போட்டி 20 ஓவர்கள் கொண்டதாக முழுமையாக இறுதிப் போட்டி நடத்தப்படும்.

ரசிகர்கள் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை திங்கட்கிழமை பயன்படுத்தலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமையும் மழை குறுக்கிட்டால், சாம்பியன் யார் என்பது சூப்பர் ஓவர் நடத்தி அதன் மூலம் அறிவிக்கப்படும்.

ஒருவேளை சூப்பர் ஓவர்கூட நடத்த முடியாத சூழலில் மழை பெய்தால், சாம்பியன் பட்டம் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் விதிப்படி வழங்கப்படும். குஜராத் டைட்டன்ஸ் 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியனாக அறிவிக்கப்படும்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் டைடன்ஸுக்கு சாதகமா?

குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றில் 10 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளுடன் உள்ளது.

அதேநேரம், சிஎஸ்கே அணி 17 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்தது.

ஆமதாபாத்தில் இதுவரை 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி குஜராத்துடன் மோதி, அனைத்திலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.

ஒரு ஆட்டத்தில்கூட இங்கு சிஎஸ்கே வென்றது இல்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆடுகளத்தில் 9 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வாகை சூடியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c8947ej5jjno

  • கருத்துக்கள உறவுகள்
Posted

CSK vs GT: கேப்டன்சியில் குருவை விஞ்சிய சிஷ்யன் ஆகிறாரா ஹர்திக் பாண்டியா?

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,BCCI/IPL

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 29 மே 2023, 05:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அந்த நாளும் வந்துவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த ஐ.பி.எல். திருவிழாவில் லீக், பிளே ஆஃப் நிறைவடைந்து, கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. ஆமதாபாத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி ரிசர்வ் நாளான இன்றைய தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அதனை தக்க வைக்கவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கோதாவில் மற்ற அணிகளை எல்லாம் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள இரு அணிகளுமே மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களைக் கொண்டுள்ளன. சுப்மன் கில், முகமது ஷமி, ரஷித் கான், ருதுராஜ், கான்வே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா போன்ற மேட்ச் வின்னர்களைத் தாண்டி, இரு அணிகளின் வெற்றியிலும் அவற்றின் கேப்டன்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

வீரர்களை ஒருங்கிணைத்து, உற்சாகப்படுத்தி ஒரு அணியாக சிறப்பாக வழிநடத்துவதிலும், இக்கட்டான தருணங்களில் அந்த பரபரப்பை மனதிற்குள் ஏற்றிக் கொள்ளாமல் நிதானமாக முடிவுகளை எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தருவதிலும் இருவரும் வல்லவர்கள். "கேப்டன்சியில் தோனியே எனக்கு முன்னோடி, அவரைப் பார்த்தே பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகவே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆகவேதான், இன்றையப் போட்டி குருவுக்கும் சிஷ்யனுக்குமான போட்டியாக கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது.

என்னதான் குரு - சிஷ்யன் என்று சொல்லிவிட்டாலும், போட்டி என்று வந்துவிட்டால் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியமாகிறது. கேப்டனாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அணிக்கு அவர்கள் எவ்விதம் பங்களித்துள்ளனர்? பிளே ஆஃப், இறுதிப்போட்டி போன்ற மிகப்பெரிய போட்டிகளை ஒரு கேப்டனாக அவர்கள் எவ்விதம் அணுகுகின்றனர்? ஐ.பி.எல். இறுதிப்போட்டி வரலாறு என்ன சொல்கிறது? இருவருக்கும் காத்திருக்கும் சாதனைகள் என்ன? புள்ளிவிவரங்கள் வழியே விரிவாகப் பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனி

தோனியின் கேப்டன்சி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து மிகக் குறுகிய காலத்திலேயே யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் இந்திய அணியின் தலைமைப்பொறுப்பை ஏற்று, சுமார் 9 ஆண்டுகள் ஒட்டுமொத்த இந்தியர்களின் நம்பிக்கையை சுமந்து உலகக்கோப்பை உள்பட பல கோப்பைகளை வென்று கொடுத்தவர். ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே என்றால் தோனி, தோனி என்றால் சி.எஸ்.கே. என்று சொல்லும் அளவுக்கு மந்திரச் சொல்லாக நிலைத்துவிட்டவர். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான அணியாக உலா வருவதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐ.சி.சி. தொடர்கள், ஆசிய கோப்பை என சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அழுத்தம் தரும் பல இக்கட்டான தருணங்களை சந்தித்துள்ள தோனி, ஐ.பி.எல்.லில் 11-ஆவது முறையாக இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறார். சூதாட்டத் தடை காரணமாக ஐ.பி.எல்.லில் சென்னை அணி பங்கேற்க முடியாத 2 ஆண்டுகளில் 2016-ம் ஆண்டில் மட்டும் புனே ரைசிங் சூப்பர் ஜெயென்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய அவர், அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

சி.எஸ்.கே.வுடன் தோனியின் பந்தம் மிக நெருக்கமானது. ஒரு கேப்டனாக சி.எஸ்.கே. அணியை பத்தாவது முறையாக இறுதிப்போட்டிற்கு அழைத்துச் சென்றுள்ள தோனி, 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2010, 2011-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2018, 2021 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியனாக ஜொலித்தது.

ஈராண்டு சூதாட்ட தடைக்குப் பின்னர் மீண்டும் ஐ.பி.எல்.லுக்கு திரும்பிய போது, மூத்தோர் அணி என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு 35 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் நிரம்பியதாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாம்பியனாக்கி காட்டினார் தோனி. அதன் மூலம், தோனி இனி அவ்வளவுதான் என்று கூறிய விமர்சகர்களை அவர் வாயடைக்கச் செய்தார்.

கேப்டன்சியில் தோனியைத் தாண்டி சிந்தித்திராத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை, அடுத்த தலைமுறை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை பரீட்சித்துப் பார்த்து கையை சுட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த அதே அணியை, அதே வீரர்களைக் கொண்டே இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் தோனி. அதுதான் தோனி ஸ்பெஷல்! தோனி கேப்டன்சியின் ஸ்பெஷல்!

பேட்டிங் வரிசையில் ஒன் டவுன் முதல் ஒன்பதாவது வீரர் வரை அணியின் தேவைக்கேற்ப எந்தவொரு இடத்திலும் களம் கண்டு சாதிக்கும் வல்லமை பெற்ற தோனி, சமீபத்திய ஆண்டுகளில் பின் வரிசையில் களம் காண்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, டெத் ஓவர்களில் களமிறங்கி முதல் பந்து முதலே அடித்தாடுவதையே அணிக்கான தன்னுடைய பங்களிப்பாக அவர் கொண்டிருக்கிறார். அந்த வகையில், நடப்புத் தொடரில் பெரும்பாலும் அவர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார்

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடப்புத் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி, ஒட்டுமொத்தமாக 56 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களை எடுத்துள்ள அவரது சராசரி 34.67 ஆகும். காரணம், 8 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை அவர் களத்தில் இருந்துள்ளார். 3 பவுண்டரிகளையும், 10 சிக்ஸர்களையும் தோனி விளாசியுள்ளார். அவரது அதிகபட்ச ரன் 32, ஸ்டிரைக் ரேட் 185.71.

விக்கெட் கீப்பராக 6 கேட்சுகளை பிடித்துள்ள தோனி, 3 பேரை ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தனியொரு வீரராக தோனியின் பங்களிப்பு குறைவாக தென்பட்டாலும், ஒரு கேப்டனாக சென்னை அணியின் வெற்றியில் அவரது பங்கு மிகவும் அதிகம். களத்திலும், களத்திற்கு வெளியே வீரர்கள் ஓய்வறையிலும் தோனியின் இருப்பே மற்ற வீரர்களுக்கு உத்வேகம் தரக் கூடியது.

அணியின் வெற்றிக்கான திட்டங்களை வகுப்பதிலும், அதனை இம்மி பிசகாமல் களத்தில் செயல்படுத்துவதிலும் தோனிக்கு நிகர் தோனிதான். இக்கட்டான தருணங்களில் ஆட்டம் தரும் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் தானே உள்வாங்கிக் கொண்டு, எந்தவொரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அணியின் மற்ற வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வதில் கைதேர்ந்தவர்.

ஒரு கேப்டனாக, அணி வீரர்களிடம் இருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வதில் தோனி நிபுணத்துவம் பெற்றவர். பார்மில் உள்ள வீரர்களை மற்ற அணிகள் எல்லாம் பயன்படுத்திக்கொள்ளும் போது, பார்மை இழந்து தவிக்கும் புறக்கணிக்கப்பட்ட வீரர்களையும், இளம் வீரர்களையும் மேட்ச் வின்னர்களாக்கும் வித்தை தோனிக்கே உரியது. ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து, அதனை அணியின் வெற்றிக்கு தேவையான இடத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே தோனி என்ற கேப்டனின் வெற்றிக்கான சூத்திரம் என்று அவருடன் விளையாடிய ஷேன் வாட்சன் போன்ற முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த வகையில், நடப்புத் தொடரில் ரஹானே நம் கண் முன் நிற்கும் உதாரணம். சி.எஸ்.கே. அணியில் தோனி தலைமையின் கீழ் விளையாடிய பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ள முடிந்ததால் இங்கிலாந்து அணியில் தனது முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது என்பது மொயீன் அலியின் ஸ்டேட்மென்ட்.

வீரர்களை மெருகேற்றுவதுடன் மன அழுத்தம் தரும் ஐ.பி.எல். இறுதிப்போட்டிகளில் அணிக்காக தோனி மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அந்த வகையில், 8 இன்னிங்ஸ்களில் 180 ரன்கள் சேர்த்துள்ள தோனியின் அதிகபட்ச ரன் 63 ஆகும். ஐ.பி.எல். இறுதிப்போட்டிகளில் தோனியின் சராசரி 36, ஸ்டிரைக் ரேட் 135.

இன்றைய ஆட்டத்தில் தோனி 70 ரன் எடுத்தால், ஐ.பி.எல். இறுதிப்போட்டிகளில் ஒட்டுமொத்தத்தில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை படைக்க முடியும். பேட்டிங்கில் பின் வரிசையில் களமாடும் தோனிக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் முதல் 3 இடங்களுக்குள் அவர் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹர்திக் பாண்டியா

தோனியைப் போன்றே, கேப்டன்சியில் அவரது சிஷ்யனாக வர்ணிக்கப்படும் ஹர்திக் பாண்டியாவும் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டவர். எந்தவொரு அணியையும் தலைமையேற்று வழிநடத்திய அனுபவமே இருந்திராத ஹர்திக், குஜராத் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டதுமே வழக்கமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர், இன்று இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டனாக வலம் வருகிறார். எதிர்காலத்தில் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்திக் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐ.பி.எல். களத்தில் ஜாம்பவான்களாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை பின்னுக்குத் தள்ளி, அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதிலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்திருப்பதிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கேப்டனாக மட்டுமின்றி, ஒரு வீரராகவும் ஆல் ரவுண்டராக தனிப்பட்ட வகையில் அவர் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்தது ஹர்திக் பாண்டியாதான். பேட்ஸ்மேனாக 487 ரன்கள் சேர்த்த அவர், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்திருந்தார். நடப்புத் தொடரைப் பொருத்தவரை, பேட்டிங்கில் தொடக்க வீரர் சுப்மன் கில் நிலையாக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நான்காவது அல்லது பின்வரிசையில் வரும் ஹர்திக்கிற்கு ஒப்பீட்டளவில் சாதிக்க கிடைத்த வாய்ப்பு குறைவு. ஆனால், கிடைத்த வாய்ப்புகளில் நிறைவாகவே அவர் செயல்பட்டிருக்கிறார்.

நடப்புத் தொடரில் இதுவரை 15 ஆட்டங்களில் 325 ரன்களை சேர்த்துள்ள ஹர்திக், லீக் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணிக்கு எதிராக அடித்த 66 ரன்களே அதிகபட்சமாகும். முகமது ஷமி, ரஷித் கான், நூர் முகமது ஆகியோருடன் ஒரு வேகப்பந்துவீச்சாளராக பவுலிங்கிலும் அணிக்கு அவர் கைகொடுத்துள்ளார். இதுவரை 26 ஓவர்களை வீசியுள்ள அவர், 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப முகமது ஷமியுடன் இணைந்து பவர் பிளே ஓவர்களை அவர் வீசி வருகிறார்.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,BCCI/IPL

கேப்டன்சி அணுகுமுறையில் தோனியிடம் இருந்து பல விஷயங்களை எடுத்துக் கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா, அவரைப் போன்றே வெற்றி, தோல்விகளைப் பொருட்படுத்தாமல் அணியின் செயல்பாட்டை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்தக் கூடியவர். லீக் சுற்றில் முதலிடம் பிடித்து பிளேஆஃபில் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியுற்ற போது கூட, பெரிதாக சலனப்படாமல், "அடிப்படையில் சில தவறுகளைச் செய்துவிட்டோம். ஆனால், எங்களுக்கு பல விஷயங்கள் சரியாக அமைந்தன. அதைப்பற்றி அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. இரண்டே நாட்களில் வலுவுடன் மீண்டு வருவோம்" என்று ஹர்திக் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். அதனை செயலில் காட்டி, தற்போது இறுதிப்போட்டிக்கும் குஜராத் டைட்டன்சை தகுதிபெறச் செய்துவிட்டார்.

காத்திருக்கும் சாதனைகள்

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு கேப்டனாக 11-வது முறையாக இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைக்கும் தோனி 4 முறை தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதுவே, ஹர்திக்கை எடுத்துக் கொண்டால் ஆறாவது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடப் போகிறார். இதுவரை அவர் விளையாடிய 5 இறுதிப்போட்டிகளிலுமே வாகை சூடியுள்ளார். 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரராகவும், ஒரு முறை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் ஐ.பி.எல். கோப்பையை உச்சி முகர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வென்றால் தோனியின் கைகளில் ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பை தவழும். இதன் மூலம் அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கேப்டன் என்ற வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவை தோனி சமன் செய்வார்.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல், மற்றொரு வகையில் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு உள்ளது. அது என்னவென்றால், அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்தியவர் என்ற வகையில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனையாகும். மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 5 முறையும், 2009-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரராக ஒரு முறையும் ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா கையில் ஏந்தியுள்ளார். இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றால் அது ஹர்திக் பாண்டியாவுக்கு ஆறாவது முறையாக அமையும் என்பதால் ரோகித் சாதனையை அவர் சமன் செய்துவிடுவார். மும்பை இந்தியன்ஸ் வீரராக 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக ஒரு முறையும் ஐ.பி.எல். கோப்பையை அவர் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் வீரராகவும், கேப்டனாகவும் களம் கண்ட ஒவ்வொரு போட்டியிலுமே ஹர்திக் பாண்டியா வாகை சூடியுள்ளார். அந்த சிறப்பைத் தொடர ஹர்திக்கும், தனது பெருமைமிகு கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக தொடர தோனியும் முனைப்பு காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம்,BCCI/IPL

சர்வதேச கிரிக்கெட்லும், ஐ.பி.எல். வரலாற்றிலும் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்துள்ள தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கிறார். கேப்டன்சியில் அவரது அடியொற்றி வந்துள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு ஐ.பி.எல். இறுதிப்போட்டி புள்ளிவிவரங்கள் சாதகமாக இருந்தாலும், கேப்டன்சியைப் பொருத்தவரை இன்னும் தொடக்க காலத்திலேயே இருக்கிறார்.

ஐ.பி.எல்.லிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் சாதிக்க இன்னும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. கேப்டன்சியில் இப்போதே தோனியுடன் ஹர்திக்கை ஒப்பிடுவது சிறந்ததாக இருக்காது. ஹர்திக் மட்டுமல்ல இனி வரும் கேப்டன்கள் பலரிடமும் தோனியின் தாக்கம் இருக்கும் என்னும் வகையில் கேப்டன்சி அணுகுமுறைக்கு ஒரு தனி இலக்கணத்தையே அவர் படைத்துள்ளார். ஆகவே, கேப்டன்சியில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை என்பதே நிதர்சனம்.

https://www.bbc.com/tamil/articles/c72z8jrpn7ko

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌க் கிழ‌மை புள்ளா சென்னையின் வெற்றிய‌ த‌மிழ் நாட்டு யூடுப்ப‌ர் கொண்டாடுவின‌ம்..................த‌ல‌ டோனி மாஸ்

த‌ல‌ நீ அடுத்த‌ ஜ‌பிஎல்லையும் விளையாட‌னும் அது இது என்று புல‌ம்ப‌ போகின‌ம் ஹா ஹா...........................

Posted

IPL 2023: வெற்றி கோப்பையில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்ன?

கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒவ்வொருவரின் மனதிலும் ஐபிஎல்-க்கு தனியிடம் இருக்கிறது. இப்படி சிறப்பான தொடராக விளங்கும் ஐபிஎல்-க்கு சிறப்பான கோப்பையும் கொடுக்கப்படுவதில் ஆச்சரியமொன்றும் இல்லை தானே?
IPL 2023: வெற்றி கோப்பையில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்ன?
IPL 2023: வெற்றி கோப்பையில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்ன?Twitter
 
  •  
  •  
  •  
  •  
  •  
 

ஐபிஎல் கோப்பை கிரிக்கெட் உலகில் மதிப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. வடிவமைப்பிலும் அழகிலும் கூட கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. 

ஐபிஎல் கோப்பை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள வரிகளை ஒருவேளை புகைப்படத்தில் பார்த்திருக்கலாம். அந்த எழுத்துகளின் அர்த்தம் என்ன எனத் தெரியுமா?

ஐபிஎல் பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கியிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் இளம்  வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட சிறந்த தளமாக இயங்குகிறது.

 

ஐபிஎல் நாடுகளைக் கடந்து மக்களால் ரசிக்கப்படுகிறது. வீரர்களுக்கு பிற சர்வதேச போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகள் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. 

newssensetn%2F2023-05%2Fd449322c-8638-43
 

கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒவ்வொருவரின் மனதிலும் ஐபிஎல்-க்கு தனியிடம் இருக்கிறது. இப்படி சிறப்பான தொடராக விளங்கும் ஐபிஎல்-க்கு சிறப்பான கோப்பையும் கொடுக்கப்படுவதில் ஆச்சரியமொன்றும் இல்லை தானே?

ஐபிஎல் கோப்பையின் விலை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. 30 - 50 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.ன் இதனை Orra என்ற நகை வடிவமைப்பு நிறுவனம் வடிவமைக்கிறது.

 

ஒவ்வொரு தொடரின் முடிவிலும் வெற்றி பெறும் அணி இறுதியில் நிமிர்ந்து, கர்வமாக கோப்பையுடன் போஸ் கொடுக்கும் தருணம் மறக்க முடியாததாக இருக்கும். சரி விஷயத்துக்கு வருவோம்,

“யாத்ரா ப்ரதிபா அவ்சரா ப்ரப்னோதி” (“Yatra Pratibha Avsara Prapnothi”) என்ற வரி தான் ஐபிஎல் கோப்பையில் எழுதப்பட்டிருக்கிறது. 

இதற்கு, “திறமையானவர்கள் வாய்ப்புகளைக் கண்டடையும் போது” என்று பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் ‘இறுதி யுத்தம்’: ஜடேஜா படைத்த வரலாறு - குஜராத்தை வீழ்த்தி கோப்பையை வென்ற சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

29 மே 2023, 21:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சிஎஸ்கே வெற்றிபெற கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. அரங்கம் முழுக்க ஒருவித பதற்றம். சிலரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்களுடைய இதயத்துடிப்பு நிச்சயம் சீரற்றதாகவே இருந்திருக்கும்.

இறுதி ஓவரின் முதல் 4 பந்துகளிலும் பவுலரே ஆதிக்கம் செலுத்தியிருந்தார். மோஹித் சர்மா 5வது பந்தை வீசினார். ஹர்திக் பாண்டியா நம்பிக்கையோடு அவரை தட்டிக்கொடுத்தார்.

குஜராத் அணியினர் வெற்றியைக் கொண்டாட ஆயத்தமாகினர். அந்தப் பந்து வெற்றியைத் தீர்மானிக்கும் முதற்படியாகவே இருந்தது. ஸ்டிரைக்கில் ஜடேஜா நின்றுகொண்டிருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரங்கத்தின் நிசப்தம்

இதுவரை ஜடேஜா ஆடும்போது ‘தோனி... தோனி...’ என எழுந்த முழக்கம் இப்போது நிசப்தம் அடைந்திருந்தது.

ஜடேஜா மீது அத்தனை விழிகளும் உற்று நோக்கின. வெற்றிக்கான ஒற்றை நம்பிக்கையாக ஜடேஜா மட்டுமே நின்று கொண்டிருந்தார்.

தோனி உட்பட பலரது முகங்களும் கலக்கத்திலேயே இருந்தன. 5வது பந்தை யார்க்கராக வீசும் முயற்சி. ஆனால் மோஹித் சர்மா தவறு செய்து விட்டார்.

யார்கர் மிஸ் ஆனது. பந்து ஸ்லாட்டில் விழுந்தது. அத்தனை ரசிகர்களின் நம்பிக்கையையும் ஆற்றலாகத் திரட்டி பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஜடேஜா.

அரங்கம் அதிர்ந்தது. குஜராத் ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன்

கடைசி பந்தில் சி.எஸ்.கேவின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. இப்போது சென்னை ரசிகர்களோடு குஜராத் ரசிகர்களும் பதற்றப் போட்டியில் சேர்ந்து கொண்டனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

இறுதிப் பந்தில் மீண்டும் யார்க்கருக்கான முயற்சி. ஆனால் லோ ஃபுல்டாசாக மாறியது. சாமர்த்தியமாக அதை எதிர்கொண்டு பந்தை பவுண்டரிக்கு லேசாகத் தட்டி விட்டார் ஜடேஜா.

அவ்வளவுதான் அடித்த மாத்திரத்தில் கையை உயர்த்தியவாறு கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தார். சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய ருதுராஜ்-கான்வே

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதியுத்தம் மழையால் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சாய் சுதர்சனின் அதிரடியான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை சேர்த்தது குஜராத்.

மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இன்னிங்ஸ் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 15 ஓவர்களுக்கு சுருக்கப்பட்டது. சிஎஸ்கேவுக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

பவர் பிளே 4 ஓவர்களுக்கும் பவுலர்கள் தலா 3 ஓவர்களை வீசிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

விறுவிறுப்பான சேசிங் முதல் பந்தில் இருந்தே தொடங்கிவிட்டது. ஹர்திக்கின் 2வது ஓவரில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி.

ஷமி வீசிய 3வது ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரி என ருத்துராஜ் கெய்க்வாட்டும் கான்வேவும் மாறி மாறி பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதே வேகத்தோடு, ரஷீத் கானின் பந்துவீச்சையும் எந்தவித தயக்கமுமின்றி விளாசித் தள்ளினர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னையின் வேகத்தைத் தணித்த நூர் அகமது

சென்னையின் கை ஓங்கிக் கொண்டிருந்தபோது நூர் அகமதுவை கொண்டு வந்தார் ஹர்திக் பாண்டியா.

சென்னையின் வேகம் தணிந்தது. முதல் ஓவரை சிறப்பாக வீசிய நூர் அகமது, அவரது 2வது ஓவரில் அதுவரை அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட் 26 ரன்களை எடுத்திருந்தபோது கான்வே 47 ரன்களை எடுத்திருந்தபோதும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நூர் அகமது 3வது ஓவரை வீச, அதில் பெரிதாக சென்னை பேட்டர்களால் ஆட முடியாமல் போனது. ஒரு பவுண்டரிகூட அடிக்க விடாமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஆட்டத்தை குஜராத் பக்கம் திரும்பியிருந்தார் நூர் அகமது.

30 பந்துகளில் சி.எஸ்.கேவின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டன.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

சோகத்தில் மூழ்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

ரஹானே கேமியோ ரோலில் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசி விடைபெற்றார்.

துபே முதல் 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தார். பந்து சரியாக பேட்டில் படாததால் அவரே வெளிப்படையாக அதிருப்தி அடைந்திருந்தார்.

ரஷீத் கான் தனது கடைசி ஓவரை வீச வந்தார். முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. அதுவரை தடுமாறிக் கொண்டிருந்த துபே, ரஷீத் கானை குறி வைத்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார்.

இப்போது 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவை. அம்பத்தி ராயுடு ஸ்டிரைக்கில் நின்றார். மோஹித் சர்மா வீசிய முதல் பந்து சிக்ஸ், அடுத்த பந்து பவுண்டரி, 3வது பந்து சிக்ஸ் என ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றினார் ராயுடு. ஆனால் 4வது பந்தில் மோஹித்திடமே கேட்ச் கொடுத்து 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரங்கம் தோனி தோனி என அதிர்ந்தது. களத்திற்குள் தோனி வந்தார். பெஸ்ட் ஃபினிசர் என அறியப்பட்ட கேப்டன் தோனி முதல் பந்தே டக் அவுட். அவரது முகம் வாடிப்போனது. ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சிஎஸ்கேவின் வெற்றி சதவீதம் வெறும் 35 சதவீதம் மட்டுமே எனக் கணிப்புகள் வெளியாகின.

ஜடேஜா படைத்த வரலாறு

இப்போது 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை. ஷமி பந்து வீசினார். அந்த ஓவர் அவரது அனுபவத்தைக் காட்டியது. நேர்த்தியான பந்துவீச்சால் வெறும் 8 ரன்கள் மட்டுமே வழங்கினார்.

இப்போது சென்னையின் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,BCCI/IPL

களத்தில் ஜடேஜாவும் துபேவும் நின்று கொண்டிருந்தனர். ஸ்டிரைக்கில் துபே நின்றார். முதல் பந்து டாட் பால். அடுத்த 3 பந்துகளும் சிங்கில். துல்லியமான யார்க்கர்களை வீசினார் மோஹித் சர்மா.

துபே, ஜடேஜா இருவராலும் முதல் 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியவில்லை. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்து வரலாறு படைத்தார் ரவீந்திர ஜடேஜா.

களத்திற்குள் ஆர்ப்பரித்தவாறு ஓடிச் சென்றனர் சி.எஸ்.கே வீரர்கள். தோனி உட்பட பலரும் ஜடேஜாவை தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

தோனியின் மஞ்சள் படை

நரேந்திர மோதி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருமுறைகூட குஜராத்தை வீழ்த்தியதில்லை என்கிற வாக்கியம் திருத்தி எழுதப்பட்டிக்கிறது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாகக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கபட்டது. பிறகு, மீண்டும் மழையால் ஓவர்கள் சுருக்கம்.

இப்படியாக அடுத்தடுத்து எழுந்த அத்தனை தடைகளையும் தாண்டி நடந்த முக்கியமான ‘இறுதி யுத்தத்தில்’ பலம் வாய்ந்த குஜராத்தை வென்றுவிட்டது தோனியின் மஞ்சள் படை.

சிஎஸ்கே செய்த தவறுகள்

தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கே வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான தவறுகளைச் செய்தனர். கேட்சைக் கோட்டைவிடுதல், ரன்அவுட்டை தவறவிடுதல், ஓவர்த்ரோ மூலம் ரன்களை விடுதல் என பல வாய்ப்புகளை வீணடித்தனர்.

குறிப்பாக, 2வது ஓவரிலே சுப்மான் கில் ஆட்டமிழக்க வேண்டியது. கில் லெக் திசையில் அடித்த ஷாட்டை தீபக் சாஹர் கையில் பந்து விழுந்தும், கேட்சைப் பிடிக்காமல் கோட்டை விட்டார்.

தீக்சனா வீசிய 5வது ஓவரில், சுப்மான் கில் அடித்த ஷாட்டில் பந்தை தடுக்க வாய்ப்பு இருந்தும், டேவன் கான் கோட்டைவிட்டதால் பவுண்டரி சென்றது.

அதன்பின், ரவிந்திர ஜடேஜா பந்துவீச வந்தபோது, இரு ரன் அவுட்டை கோட்டைவிட்டார். தீக்சனா, தேஷ் பாண்டே இருவரும் பல பவுண்டரிகளை கோட்டைவிட்டனர். ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்தது. இதை கச்சிதமாக செய்திருந்தால், இன்னும் 20 ரன்கள் வரை குஜராத் அணியை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

கில், சாஹா அதிரடி

சுப்மான் கில், சாஹா இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி 2 ஓவர்கள்வரை பொறுமை காத்தனர். தேஷ் பாண்டே வீசிய 2வது ஓவரில் கில் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட்டை தீபக் சாஹர் கோட்டை விட்டார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் கோட்டைவிட்ட கேட்சால் கில் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் என்னஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

3வது ஓவரில் இருந்து சாஹா அதிரடிக்கு மாறி சாஹர் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஏற்கெனவே முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கும் கில், தேஷ் பாண்டேவின் 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். கில்லின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த, தோனி தீக்சனாவைக் கொண்டுவந்தார். தீக்சனா வீசிய 5வது ஓவரில் கில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். இருவரின் அதிரடியால், 10 ரன்ரேட்டில் சென்றது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்தது.

தோனியின் மின்னல் ஸ்டெம்பிங்

தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

பவர்ப்ளே ஓவர் முடிந்து ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரின் 2வது பந்தில் 2ரன்கள் ஓட கில் முயன்றார். அப்போது கில் ரன்அவுட் செய்யும் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். அதே ஓவரில் 5வது பந்தில் சஹாவுக்கு ஒரு ரன்அவுட்டையும் ஜடேஜா கோட்டைவிட்டார்.

கடைசிப் பந்தில் அந்த திருப்புமுனை நடந்தது. ஜடேஜா வீசிய பந்து கில் பிரன்ட்புட்டில் அடிக்க முயல பந்து லெக் ஸ்பின்னாகி தோனியிடம் வந்தது. இந்த வாய்ப்பை தவறவிடாத தோனி, 0.1 வினாடிகளில், மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து கில்லை வெளியேற்றினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கில் 39 ரன்னில் வெளியேற்றி சிஎஸ்கே அணியினர் பெருத்த நிம்மதி அடைந்தனர். 250 ஐபிஎல் போட்டியில் விளையாடிய தோனி, கில்லை ஸ்டெம்பிங் செய்து தனது 300-வது டிஸ்மிசலை எட்டினார்.

தமிழ்நாடு வீரரின் மிரட்டல் ஆட்டம்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,BCCI/IPL

அதன்பின் சாய் சுதர்ஷன் ஆட்டத்தை டாப்கியருக்கு மாற்றினார். தீக்சனா வீசிய 15-வது ஓவரில் சாய் சுதர்ஷன் மிட்விக்கெட்டில் இரு சிக்ஸர்களை விளாசி 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். சுதர்ஷன் அரைசதம் விளாசியதும் அவரைக் கட்டித்தழுவி ஹர்திக் பாண்டியா ஊக்கப்படுத்தினார்.

பதிரனா வீசிய 16-வது ஓவரிலும் 2 பவுண்டரிகள் விளாசி சுதர்ஷன் ரன்ரேட்டை வேகப்படுத்தினார். தேஷ் பாண்டே வீசிய 17-வது ஓவரை வெளுத்துவாங்கிய சுதர்ஷன் தேர்டு மேன் திசையில் ஒரு சிக்ஸர், மற்றும் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி 20 ரன்களைச் சேர்த்தார்.

தேஷ் பாண்டே வீசிய 19-வது ஓவரை ஹர்திக்கும், சுதர்ஷனும் பொட்லகம் கட்டினர். . ஹர்திக் இரு சிக்ஸர்களையும், சுதர்சன் பவுண்டரியும் அடித்து 18 ரன்கள் சேர்த்தனர்.

டக்அவுட்டில் வரவேற்பு

பத்திரணா வீசிய கடைசி ஓவரை சுதர்ஷன் எதிர்கொண்டார். முதல் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸரும், 2வது பந்தில் லாங்ஆனில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். இதைப் பார்த்த ஹர்திக், சுதர்சனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

3வது பந்தில் சாய் சுதர்ஷன் கால்காப்பில் வாங்கி 96 ரன்களில் ஆட்டமிழந்தார்(47பந்துகள், 6 சிக்ஸர், 8 பவுண்டரி). சாய் சுதர்ஷனின் அருமையான ஆட்டத்தை வரவேற்ற குஜராத் அணியினர் அவரை டக்அவுட் பகுதியில் வரவேற்று அவரை உற்சாகப்படுத்தினர். கடைசியில் களமிறங்கிய ரஷித் கான் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் தனது முதல்27 பந்துகளில் 37 ரன்கள்தான் சேர்த்திருந்தார். ஆனால், அதிரடிக்கு மாறியபின், கடைசி 20 பந்துகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக உயர்ந்தது. ஐபிஎல் பைனலில் மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற பெயரை சாய் சுதர்சன் பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் அடித்த 96 ரன்கள் என்பது ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த 3வது அதிகபட்ச ஸ்கோர்.

20 ஓவர்கள் முடிவில்குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

‘தோனியிடம்தானே தோற்றேன்’

தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ இந்த சீசனில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். எந்த நேரத்திலும், இடத்திலும் தோல்வி அடையாமல் இருக்க குழுவாக மிகுந்தநம்பிக்கையுடன் விளையாடினோம். ஒன்றாகவே வென்றோம், ஒன்றாகவே தோற்றோம். இந்த ஆட்டமும் அப்படித்தான். தோல்விக்கு ஏதும் காரணம் கூறப்போவதில்லை.

சாய் சுதர்ஷன் ஆட்டம் அற்புதமானது, இனி அவர் வாழ்வில் அதியசங்கள் நிகழும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். ரஷித்கான், ஷமி, மோகித் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். சிஎஸ்கே சிறந்த கிரிக்கெட்டை ஆடினார்கள். தோனியை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த கோப்பை அவருக்கென எழுதப்பட்டுள்ளது, நான் தோல்வி அடைந்தாலும், தோனியிடம் தோற்றதை மனதில் வைக்கமாட்டேன் நல்ல மனிதர்களுக்கு நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார்.

‘அடுத்த சீசனும் வருவேன்’

தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

வெற்றிக்குப்பின் மகிழ்ச்சியுடன் பேசிய தோனி “சூழலைப் பார்த்து ஓய்வை அறிவிக்க சிறந்த நேரமாக இருந்தால், எளிதாக நன்றி சொல்லி, ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால், இன்னும் 9மாதங்கள் கடினமாக உழைத்து, இன்னும் ஒரு சீசன் விளையாட முயல்கிறேன், ஆனால், அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும், அதற்கு தயார் செய்ய வேண்டும்.

ஏராளமான அன்பை, நான் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளேன், இன்னும் ஒரு சீசன் ஆடுவது எனக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். சிஎஸ்கே ரசிகர்கள் வெளிப்படுத்திய அன்பு, உணர்வுகள் அவர்களுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும் என்கிறது. இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப்பகுதி. நான் இங்குதான் பேசத் தொடங்கியதும், என் பெயரை ரசிகர்கள் உச்சரிக்கிறார்கள், இதேதான் சென்னையிலும் நடந்துத. என்னால்முடிந்த அளவு திரும்பி வந்து நான் விளையாடுவேன்.

ஒவ்வொரு கோப்பை, சீரிஸ் வெல்லும்போதும் அது எனக்கான சவால்தான். ஒவ்வொருவரும் விதவிதமான அழுத்தத்தைச் சந்தித்தார்கள். ரஹானே அனுபவமானவர். மற்ற வீரர்கள் இலைஞர்கள், புதியவர்கள், குழப்பத்தில் ஆழ்ந்தனர். ராயுடு களத்தில் இருந்தாலே 100% வெற்றியைக் கொடுத்துவிடுவார். இந்தியா ஏ அணிக்கு இருவரும் இணைந்து விளையாடியுள்ளோம். எப்போதும் சிறப்பாக ஏதேனும் செய்வார் என ராயுடு மீது எனக்கு நம்பிக்கை இருக்கும். என்னைப் போலவே அதிகம் செல்போன் பயன்படுத்தமாட்டார்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c0wv9p9pdw4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘திரும்பி வருவேன்’ - ஓய்வு குறித்து உருக்கமாக அறிவித்த தோனி

தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நேற்றைய ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்ற நொடியை உற்சாகமாக கொண்டாடிய ரசிகர்கள், போட்டிக்கு பிறகு மற்றொரு முறை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

சென்னை அணியின் கேப்டன் ‘கூல்’ தோனி பேச வந்த தருணம். ஆமதாபாத் மைதானத்திலிருந்த ஒரு லட்சம் இதயங்களில் இருந்த அந்த ஒரு கேள்வியை ரசிகர்களின் சார்பாக தோனியிடம் முன்வைத்தார் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே.

“கடந்தமுறை நீங்கள் தோற்றபோது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். சிஎஸ்கே என்ற பெரிய பாரம்பரிய அடையாளத்தை உருவாக்கி விட்டு செல்கிறீர்களா என்று நான் கேட்ட போது, நான் இன்னும் செல்லவில்லை, இங்குதான் இருக்கிறேன் என்று சொன்னீர்கள்,” என்று ஹர்ஷா போக்லே தோனியிடம் சொன்னார்.

அதற்கு தோனி பதிலளித்தபோது மைதானமே ‘தோனி, தோனி’ என்ற முழக்கத்தில் மூழ்கியது.

 

“என் மீது அன்பு வைத்த ரசிகர்களுக்கு நான் திருப்பி அளிக்கும் பரிசு, அவர்களுக்காக இன்னும் ஒரு சீசஸ் விளையாடுவதுதான்,“ என்று தனது ஓய்வு குறித்த முடிவை மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

ஐபிஎல் போட்டிகளில் தோனி

கேப்டன் கூல் தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16 சீசன்களில் இதுவரை 250 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 5 ஆயிரத்து 82 ரன்களை சிஎஸ்கேவுக்காக குவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி அந்த அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த உதவியாக இருந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார்.

14 சீசன்களின் சென்னை அணியை 10 முறை இறுதிபோட்டிக்கு வழிநடத்தியுள்ளார் தோனி.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கி தடை செய்யப்பட்டிருந்த போது புனே அணியை ஒரு முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறார் தோனி.

சென்னை அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் 5 முறை வெற்றிக் கோப்பை பெற்று கொடுத்த தோனி, இந்த காரணங்களினால் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

தோனியின் ஓய்வு முடிவு

கேப்டன் கூல் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போதே தோனியின் ஓய்வு குறித்த சலசலப்பும் எழுந்தது.

42 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் ஊகித்தனர்.

ஆனால் தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு தனது ரசிகர்களுக்கு மற்றொரு சீசனில் விளையாடி "பரிசு" கொடுக்க விரும்புவதாக சிஎஸ்கே கேப்டன் நேற்றைய போட்டிக்கு பிறகு தெரிவித்துள்ளார்.

கோப்பையை வென்ற பிறகு பேசிய தோனி, “இப்போதுள்ள சூழலில் என் ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த நேரமாக இருக்கும். ஆனால் என் மீது ரசிகர்கள் காட்டிய அன்புக்காக நான் ஏதாவது ஒன்றை திருப்பித் தரவேண்டும். இந்த தருணத்தில் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லி விடைபெறுவது எனக்கு மிக எளிமையானது. ஆனால் இன்னும் 9 மாதங்கள் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாட நினைக்கிறேன்.“

“அடுத்த ஆறேழு மாதங்கள் என் உடல் ஒத்துழைப்பதை பொறுத்து நான் அடுத்த சீசனிலும் ஆட விரும்புகிறேன். அதற்காக நான் தயாராக வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் நான் எங்கு சென்றாலும் சிஎஸ்கே ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய அன்பு எனக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்காக நான் திருப்பி அளிக்கும் பரிசு, இன்னும் ஒரு சீசன் விளையாடுவதாகதான் இருக்கமுடியும்,“ என்று தோனி கூறினார்.

‘கண்களில் நீர் ததும்ப’

கேப்டன் கூல் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

கேப்டன் கூல் தோனி, கடைசியாக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியின் போது ஏன் உணர்ச்சிவசப்பட்டார் என்று ஹர்ஷா போக்லே தோனியிடம் கேள்வி எழுப்பினார்.

“சில நேரங்களில் அனைவருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படும். நான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். கடந்த போட்டியின்போது நான் விளையாட மைதானத்திற்குள் நுழைந்த போது மொத்த மைதானமும் என்னுடைய பெயரை உச்சரித்தது. அப்போது என்னுடைய கண்கள் கண்ணீரில் நிரம்பின. கொஞ்ச நேரம் டக்அவுட்டில் (Dug Out) நின்று அதை அனுபவித்த பிறகு நான் விளையாட வந்தேன். அந்த வகையில் சென்னை மைதானம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது,“ என்று எம்.எஸ். தோனி பதிலளித்தார்.

எப்போது எப்படி அமைதியாக இருக்கிறீர்கள் என தோனியிடம் கேட்ட போது, “என்னை விரும்பும் ரசிகர்கள் நான் இப்படி இருப்பதை தான் விரும்புகிறார்கள். இங்கு கிரிக்கெட் விளையாடும் பலரும் இப்படிதான் விளையாடுகின்றனர். அதனால் ரசிகர்கள் என்னை மிக எளிதாக அவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். இது இப்படியே நீடிக்க நான் விரும்புகிறேன்,“ என்றார்.

தோனியின் கேப்டன்சி

கேப்டன் கூல் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்த இளைஞர்களையும், அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை சிறப்பாக வழிநடத்தியதற்காக தோனி புகழப்பட்டார்.

சென்னை அணியின் இளம் வீரர்களான ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, பதிரண போன்ற வீரர்கள் அணிக்காக விளையாடிய விதம் குறித்து பல தருணங்களில் தோனி பாராட்டினார்.

“வெற்றியை தீர்மானிக்க இறுதி கட்டம் வரை செல்லும் போட்டிகளுக்காக வீரர்களை தயார் செய்வது ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கியமான ஒன்று. இதையே நாங்கள் எப்போது செய்வதாக நினைக்கிறேன். மற்றவர்களை போலவே எனக்கும் விருப்பு, வெறுப்புகள் உள்ளன. ஆனால் பிரச்னை என்ன என்பதை அறிய நான் முயற்சிகிறேன். யாராவது தவறு செய்யும் அவர்களின் நிலையிலிருந்து யோசித்து செயல்படுகிறேன். அவர்கள் எப்படி தங்களின் அழுத்தங்களை கையாள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு நபரையும் தனித்தனியாக தட்டிக் கொடுக்கிறேன்.“

கேப்டன் கூல் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு போன்ற சீனியர் வீரர்களுக்கு கம்பேக் சீசனாகவும் நடப்பு ஐபிஎல் தொடர் அமைந்தது.

“ரஹானே அனுபவம் வாய்ந்தவர். அவர்கள் பற்றி நான் அதிகம் கவலை கொள்வதில்லை. சீனியர் வீரர்கள் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்கு குழப்பம் இருந்தால் என்னிடம் வந்து பேசலாம்,“ என தோனி சீனியர் வீரர்கள் குறித்து பேசினார்.

இறுதிப்போட்டிக்கு முன்பே ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்திருந்தார்.

"ராயுடுவின் சிறப்பு என்னவென்றால், அவர் களத்தில் இருந்தால் அவரின் 100% அளிப்பார். ஆனால் அவரை அணியில் வைத்திருந்தால் ஃபேர்பிளே விருது கிடைக்காது. இந்தியா ஏ அணிக்காக நாங்கள் ஒன்றாக விளையாடிய நாள் முதல் ராயுடு ஒரு அற்புதமான வீரர். சுழற்பந்தையும், வேகப்பந்தையும் எதிர்த்து ஒரே மாதிரியாக சிறப்பாக விளையாடக்கூடியவர் ராயுடு. என்னைப் போலவே அவரும் அதிகம் செல்போனை பயன்படுத்தமாட்டார். இன்றைய போட்டி அவர் நிச்சயம் மறக்கமாட்டார்," என்று ராயுடு குறித்து போட்டிக்கு பிறகு தோனி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce7615d5ekgo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை ர‌சிக‌ர்க‌ளின் தொல்லை பெரிய‌ தொல்லையா இருக்கு................இந்தியா உல‌க‌ கோப்பையில் தோல்வி அடைஞ்சு வெளி ஏறினால் இவ‌ர்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை ஆனால் ஜ‌பிஎல் தான் இவ‌ர்க‌ளுக்கு முக்கிய‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடப்பு சம்பியன் குஜராத்தை வீழ்த்தி 5ஆவது தடவையாக சம்பியனானது சென்னை

30 MAY, 2023 | 11:04 AM
image
Placehoder--_40.jpg

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக் 16ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் கடைசிப் பந்தில் 5 விக்கெட்களால்  வெற்றி ஈட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் 5ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இதன் மூலம் மும்பை இண்டியன்ஸின் 5 சம்பியன் பட்டங்களை சென்னை சுப்பர் கிங்ஸ் சமப்படுத்தியது. மேலும் தோனியின் தலைமையில் சென்னை ஈட்டிய 5ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். அத்துடன் தோனி விளையாடிய 250ஆவது ஐபிஎல் போட்டி இதுவாகும்.

இம்முறை 10ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை இதற்கு முன்னர் 2010, 2011, 2018, 2021 ஆகிய வருடங்களில் சம்பியனாகியிருந்தது.

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சென்னை ஈட்டிய இந்த வெற்றியை ஆயிரக்கணக்கான சென்னை இரசிகர்கள் நேரடியாக கண்டுகளித்து  கொண்டாடி மகிழ்ந்ததுடன் கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்தனர்.

சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் வெற்றிக் கிண்ணத்துடன் இந்திய நாணயப்படி சுமார் 20 கோடி ரூபாவும் 2ஆம் இடத்தைப் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்திய நாணயப்படி 12.5 கோடி ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது,

திங்கட்கிழமை (29) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகி செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 1.35 மணி அளவில் 16ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டி நிறைவுக்கு வந்தது.

15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 15  ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறவேண்டிய இந்த இறுதிப் போட்டி அன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக ஒதுக்கப்பட்ட மறுநாளான திங்கட்கிழமை நடைபெற்றது.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளில் 3 ஓட்டங்களை மாத்திரமே கொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அனுபவம் வாய்ந்த ரவிந்த்ர ஜடேஜா அடுத்த 2 பந்துகளில் சிக்ஸையும் பவுண்டறியையும் விளாசி சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியனாவதை உறுதிசெய்தார்.          

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் முதலாவது ஒவரில் 3 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் இரவு 9.50 மணியளவில் ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்த பின்னர் மைதானத்தின் பல பகுதிகளில் நீர் இருந்ததால் இயந்திரம் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மைதானம் உலரவைக்கப்பட்டது. மைதானத்தை உலரவைக்க சுமார் 2 மணிநேரம் செலவிடப்பட்டது.

இப் போட்டி நள்ளிரவுக்குப் பின்னர் 12.10 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அணிக்கு 15 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு திருத்தப்பட்ட வெற்றி இலக்கு 171 ஓட்டங்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டெவன் கொன்வேயும் ருத்துராஜ் கய்க்வாடும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தவண்ணம் இருந்தனர்.

அவர்கள் இருவரும் 37 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ருத்துராஜ் கய்க்வாட் 26 ஓட்டங்களைப் பெற்று ஆப்கானிஸ்தான் ஜோடியினரான நூர் அஹ்மத் பந்துவீச்சில் ராஷித் கானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 4 ஓட்டங்கள் சேர்ந்தபோது அதே ஓவரில் நூர் அஹ்மதின் பந்துவீச்சில் மோஹித் ஷர்மாவிடம் பிடிகொடுத்து டெவன் கொன்வே 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அஜின்கியா ரஹானேயும் ஷிவம் டுபேயும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து ஓட்ட வேகத்தை அதிகரித்த வண்ணம் இருந்தனர். ஆனால், மோஹித் ஷர்மாவின் மந்தகதியிலான பந்தை ரஹானே அரை குறை மனதுடன் உயர்த்தி அடிக்க விஜய் ஷன்கர் நிதானமாக பிடியை எடுத்தார். (117 - 3 விக்.) ரஹானே 13 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 149 ஓட்டங்களாக இருந்தபோது ஷர்மாவின் பந்து வீச்சில் அவரிடமே இலகுவான பிடியைக் கொடுத்த அம்பாட்டி ராயுடு 19 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அடுத்த பந்தில் தோனி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். மோஹித் ஷர்மாவின் பந்தை தோனி வீசுக்கி அடிக்க, பந்து நேராக டேவிட் மில்லரின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

எனினும் ஷிவம் டுபேயும் ரவிந்த்ர ஜடேஜாவும் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட 13 ஓட்டங்களை பரபரப்புக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்து குஜராத்தை வெற்றிகொள்ள சென்னைக்கு உதவினர்.

ஷிவம் டுபே 32 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

குஜராத் பந்துவீச்சில் மொஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நூர் அஹ்மத் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியில் மொஹமத் ஷமி விக்கெட் எதனையும் வீழ்த்தாத போதிலும் 28 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி 2023 ஐபிஎல் சுற்றுப் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கான ஊதா நிறத் தொப்பியை தனதாக்கிக்கொண்டார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

போட்டியின் 2ஆவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேயின் பந்துவீச்சில் ஷுப்மான் கில் கொடுத்த சற்று இலகுவான பிடியை தவறவிட்ட தீப்பக் சஹார் 5ஆவது ஓவரில் ரிதிமான் சஹா கொடுத்த கடினமான பிடியை தனது சொந்த பந்து வீச்சில் தவறவிட்டார்.

ரிதிமான் சஹா, ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸின் அதிரடி நாயகன் ஷுப்மான் கில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ரவீந்த்ர ஜடேஜாவின் பந்துவீச்சில் தோனியினால் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் விக்கெட் காப்பாளராக 300ஆவது ஆட்டமிழப்பில் தோனி பங்களிப்பு செய்திருந்தார்.

இந்த வருடம் 17 போட்டிகளில் விளையாடிய ஷுப்மான் கில் 3 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் மொத்தமாக 890 ஓட்டங்களைப் பெற்று செம்மஞ்சள் (ஒரேஞ்) தொப்பியை தனதாக்கிக்கொண்டார்.  

தொடர்ந்து ரிதிமான் சஹாவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் 42 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சஹா 39 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்று சஹாரின் பந்துவீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் சாய் சுதர்ஷுனும் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவும் 3ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 96 ஓட்டங்களைப் பெற்றார். அவர் கடைசி ஓவரில் மதீஷ பத்தரணவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் களம் விட்டகன்றார்.

அதே ஓவரின் கடைசிப் பந்தில் ராஷித் கான் சிக்ஸ் அடிக்க முயற்சித்து கய்க்வாடிடம் பிடிகொடுத்து ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பக் சஹார், ரவீந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 38 ஓட்டங்களுக்கு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை வீரர் மதீஷ பத்திரண 12 போட்டிகளில் மொத்தமாக 19 விக்கெட்களை வீழ்த்தி சென்னை இரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.

 

IPL winners list with captains' names

2008 - Rajasthan Royals (Skipper Shane Warne)

 

2009 - Deccan Chargers (now defunct - skipper Adam Gilchrist)

 

2010 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

 

2011 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

 

2012 - Kolkata Knight Riders (Skipper Gautam Gambhir)

 

2013 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

 

2014 - Kolkata Knight Riders (Skipper Gautam Gambhir)

 

2015 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

 

2016 - Sunrisers Hyderabad (Skipper David Warner)

 

2017 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

 

2018 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

 

2019 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

 

2020 - Mumbai Indians (Skipper Rohit Sharma)

 

2021 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

 

2022 - Gujarat Titans (Skipper Hardik Pandya)

 

2023 - Chennai Super Kings (Skipper M.S. Dhoni)

014161-01-02.jpg

014360-01-02.jpg

014250-01-02.jpg

014492-01-02.jpg

014563-01-02.jpg

 

https://www.virakesari.lk/article/156477

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டு ஆண்டு சென்னை அணிக்கு த‌டை விதிக்காட்டி அவ‌ர்க‌ள் அதிலும் ஒரு முறையாவ‌து ச‌ம்பிய‌ன் ஆகி இருப்பின‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணுக்கு விருந்து - சாய் சுதர்சனின் இனிங்ஸ் குறித்து சச்சின் பாராட்டு - ஜாம்பவான்களின் பாராட்டுகள் குவிகின்றன

Published By: RAJEEBAN

30 MAY, 2023 | 11:52 AM
image
 

ஐபிஎல் 2023 இன் இறுதிப்போட்டியில் அற்புதமாக துடுப்பெடுத்தாடியமைக்காக  குஜராத் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள்  பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

சென்னை அணிக்கு எதிரான  இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ஓட்டங்களை பெற்றார் இதில் ஆறு சிக்சர்கள் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

sai_sutha.png

இந்த இனிங்ஸ் குறித்து டுவிட்டரில் பதிவுசெய்துள்ள சச்சின் டெண்டுல்கர் சாய் சுதர்சனின் இனிங்ஸ் கண்களிற்கு விருந்தாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இன்றிரவு சாய் கண்களிற்கு விருந்தளித்தார்  என சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சாய் சுதர்சனின் துடுப்பாட்டத்தை பாராட்டியுள்ள முன்னாள் துடுப்பாட்டவீரர்  விரேந்திரசெவாக்  குஜராத் அணியின் இலக்கை துரத்திபிடிப்பதற்கு சிஎஸ்கே தனது முழுதிறமையையும் பயன்படுத்தவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

sai3.jpg

சாய் சுதர்சனிடமிருந்து என்ன ஒரு வியப்பூட்டும் துடுப்பாட்டம் என செவாக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாட்டத்தில் என்ன ஒரு துடுப்பாட்டம் என சுரெய்ரெய்னாவும் சுதர்சனின் துடுப்பாட்டத்தை புகழ்ந்துள்ளார்.

சாய்சுதர்சனின் அடுத்த அணி எது என கேள்வி எழுப்பியுள்ள ரவிசந்திரன் அஸ்வின் அவரை 20 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தமைக்காக குஜராத் அணியை பாராட்டியுள்ளார்.

sai_sutha1.jpg

ஆழ்வார்பேட்டை சிசியிலிருந்துஜொலிரோவர்ஸ் அணிக்கும் அந்த அணியிலிருந்து தமிழ்நாடுஅணிக்கும் செல்வதற்கும் அவருக்கு மூன்று வருடங்களே எடுத்தது என சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள பதிவிட்டுள்ள ரவிசந்திரன் அஸ்வின் அடுத்தது என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

மயங்அகர்வாலும் சாய் சுதர்சினின் இனிங்சை பாராட்டியுள்ளார்.

 சாய் சுதர்சன் 2023 ஐபிஎல்லில் தனக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.எட்டு இனிங்ஸ்களில் அவர் 362 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

sai_sutha_main.jpg

https://www.virakesari.lk/article/156500

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜடேஜா: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் 'தோனியின் தளபதி'

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,TWITTER/RAVINDRASINH JADEJA

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

“ஜடேஜாவின் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் எளிதாக எண்ணிவிடதீர்கள். இந்திய அணிக்காக மிகவும் முக்கியத் தருணங்களில் ரன் சேர்த்து தருபவர், கிரிக்கெட் அறிவு கூர்மையாக உள்ளவர். ஜடேஜாவின் பேட்டிங் திறமை, பந்துவீச்சு திறன் கடந்த சில ஆண்டுகளாக மெருகேறியுள்ளது. ஏற்கெனவே ஜடேஜா சிறந்த பீல்டர், தற்போது சிறந்த பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளராக உயர்ந்துள்ளார்”

இந்த பெருமைக்குரிய கருத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் கூறியது. இயான் சேப்பலின் வார்த்தைகள் உண்மையானவை என்று ஜடேஜா இந்திய அணிக்கு ஆடிய பல்வேறு போட்டிகளில் நிரூபித்துள்ளார்.

தோனியின் தளபதி

ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை கடந்த 2012ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்குள் வந்ததில் இருந்து, கேப்டன் தோனிக்கான தளபதியாகவே ஜடேஜா இருந்து வருகிறார். சிஎஸ்கே அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்திக் கொடுப்பது, இக்கட்டான நேரத்தில் பேட்டிங்கில் அசத்துவது, முக்கியத் தருணத்தில் அருமையான கேமியோ ஆடி அணியை வெல்ல வைப்பது என அனைத்திலும் சிஎஸ்கே அணியின், தோனியின் தளபதியாக ஜடேஜா இருந்து வருகிறார்.

2023-ஐபிஎல் சீசனின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் கூட கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த ஜடேஜா, மோகித் சர்மா பந்தில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி சிஎஸ்கே கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். சிஎஸ்கே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நினைப்புடன் டக்அவுட்டில் கண்ணைமூடி மவுனம் காத்த தோனியின் எண்ணத்தை ஜடேஜா நனவாக்கி அந்த வெற்றியையும் தோனிக்கே அர்ப்பணித்தார்.

ஜடேஜா - 'தோனியின் தளபதி'

அதுமட்டுல்ல நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிரட்டலான ஃபார்மில் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அப்போது கில்லை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஜடேஜாவுக்கு பந்துவீச தோனி வாய்ப்பளி்த்தார். ஜடேஜா பந்துவீனால் இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்த்துவார் என்பதை அறிந்த தோனி அவருக்கு வாய்ப்பளித்தார்.

தோனியின் திட்டப்படி பந்துவீசிய ஜடேஜா, அருமையான லெக் ஸ்பின்னை வீசி, கில்லை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து தோனி வெளியேற்றினார். அப்போது தோனியைப் பார்த்து ஜடேஜா பெருவிரலை காட்ட, தோனியும் சிறிய புன்னகையுடன் “நான் சொன்னது நடந்திருச்சா” என்ற ரீதியில் ஜடேஜாவின் கரங்களைப் பற்றினார். தோனி எனும் கேப்டன் எண்ணத்தை நினவாக்கும் தளபதியாகவே சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளங்கி வருகிறார்.

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,BCCI/IPL

ஜடேஜாவைக் கைவிடாத தோனி

சிஎஸ்கே அணிக்குள் ஜடேஜா வந்தபின் தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார். காயம் காரணமாக ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படுமேத் தவிர பெரும்பாலான போட்டிகளில் ஜடேஜா இல்லாமல் சிஎஸ்கே அணி களம் காண்பதில்லை, தோனியும் ஜடேஜா இல்லாமல் களத்துக்கும் வருவதில்லை.

இதற்கு ஜடேஜாவின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் மீதான நம்பிக்கையும், எந்த நேரத்திலும் ஆட்டத்தை திசைதிருப்பும் திறமைசாலி என்பதை தோனி நன்கு உணர்ந்தவர். அது மட்டுமல்லாமல் ஜடேஜா பீல்டிங்கில் நிற்கும் பகுதியில் பெரும்பாலும் கேட்ச் கோட்டைவிடுவதோ, பீல்டிங்கில் கோட்டைவிடுவதோ இருக்காது.

களத்தில் மிகச்சிறந்த பீல்டராக ஜடேஜா தன்னை எப்போதும் நிரூபிப்பவர். அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களில் நிதானமாக பேட் செய்யவும், டெத்ஓவர்களில் ஃபினிஷிங் செய்யவும் ஜடேஜாவுக்கு நிகர் அவர்தான். எந்த நேரத்திலும் தனது பேட்டிங் கியரை மாற்றக்கூடிய வல்லமை ஜடேஜாவுக்கு உண்டு.

மேலும், ஜடேஜா பந்துவீச வந்தால், மின்னல் வேகத்தில் தனது ஓவரை வீசி முடித்துவிடுவார், இது கேப்டனுக்கு பெரிய சுமையைக் குறைத்துவிடும். டி20 போட்டியில் தனது ஓவர்களை சில நிமிடங்களில் ஜடேஜா வீசி முடித்துக் கொடுத்து கேப்டன் தோனிக்கு உதவி செய்யக்கூடியவர்.

சிஎஸ்கே அணியில் நடுப்பகுதி ஓவர்கள், டெத் ஓவர்களில் வீசக்கூடிய திறமையும் ஜடேஜாவுக்கு உண்டு என்பதால், எந்த சூழலிலும் ஜடேஜாவை பயன்படுத்தலாம் என்று தோனி திட்டத்தோடு இருப்பார். இதுபோன்ற காரணங்களால் தோனியோடு ஜடேஜாவும் பிரிக்க முடியாதவராகிவிட்டார், சிஎஸ்கே அணியோடு இணைபிரியாத அங்கமாக மாறிவிட்டார்.

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,BCCI/IPL

மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்

ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா தன்னை சிறந்த பந்துவீச்சாளராக, பீல்டராக, சிறந்த ஆல்ரவுண்டராக நிரூபித்துள்ளார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜாவின் திறமை பன்மடங்கு மெருகேறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களைப் பட்டியலிட்டால் அதில் ஜடேஜாவுக்கு தனி இடமுண்டு. ஒருநாள் போட்டிகளில் 191 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல்முறையாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடதுகை இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றவர்.

டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 264 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 3 விதமான ஃபார்மட்டுக்கும் தான்பொருத்தமானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

சர்வதேச ஆல்ரவுண்டர்கள் வரிசையில் தனி இடம் வகிக்கும் ஜடேஜா 64 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் உள்ளிட்ட 2,658 ரன்களைக் குவித்துள்ளார். 174 ஒருநாள் போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2,526 ரன்கள் சேர்த்துள்ளார்.

64 டி20 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 457 ரன்கள் சேர்த்து, தனது ஸ்ட்ரைக் ரேட்டை 125க்கு குறைவில்லாமல் வைத்துள்ளார். ஏறக்குறைய 308 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ஜடேஜா 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 3,359 ரன்களைக் குவித்துள்ளார்.

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

திறமையை மெருகேற்ற தயங்காதவர்

இந்திய அணியின் அனைத்துவிதமான ஃபார்மட்டுக்கும் தன்னை பொருத்தமானவராக வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜடேஜா தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேற்றிக்கொண்டவர். ஏதாவது ஒரு தொடரில் ஜடேஜாவின் ஆட்டம் சரியில்லாமல் அடுத்தத் தொடரில் நீக்கப்பட்டால், உடனடியாக உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி விளையாடி தனது குறைபாடுகளைச் சரிசெய்து, தேவைப்படும் பயிற்சிகளை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவர் ஜடேஜா.

அதனால்தான் 2009ம் ஆண்டு உலக டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவின் மந்தமான பேட்டிங் காரணம் என விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய பேட்டிங் ஃபார்மை ஜடேஜா நிரூபித்தவுடன், இந்திய அணிக்குள் மீண்டும் ஜடேஜா இடம் பெற்றார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமானநிலையி்ல் இருந்தபோது, அப்போது கேப்டனாக இருந்த தோனியுடன் சேர்ந்து 112 ரன்கள் ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்ததும், அஸ்வினுடன் சேர்ந்து 5 ஓவர்களி்ல் 59 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராணுவ வீரராக வேண்டும் என்று கனவு

1988ம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் நவாம் கெட் நகரில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ரவிந்திர ஜடேஜா. ஜடேஜாவின் தந்தை அனிருத் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருந்தார். ஜடேஜாவை ராணுவத்தில் சேர்த்து அதிகாரியாக்க வேண்டும் என்ற கனவில் அவரின் தந்தை அனிருத் இருந்தார்.

ஆனால், ஜடேஜாவுக்கு கிரிக்கெட் மீது காதல் இருந்தது. கடந்த 2005ம் ஆண்டு ஜடேஜாவின் தாய் லதா விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் கனவுகளைப் புதைத்துவிட்டு, விலகவிடும் எண்ணத்தில் ஜடேஜா இருந்தார். ஆனால் அவரின் சகோதரி நைனா அளித்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட் விளையாடி ஜடேஜா தனக்குரிய அங்கீகாரத்தை அடைந்தார்.

உலகக்கோப்பை அணி

ஜடேஜா தனது 16வயதில் இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இடம் பெற்று, இலங்கையில் நடந்த, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணியில் இடம் பெற்றார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2008 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

திறமையை மெருகேற்றும் வித்தை தெரிந்தவர்

இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் தங்களின் பேட்டிங் ஃபார்ம், பந்துவீச்சு ஃபார்ம் குறைந்து அணியிலிருந்து நீக்கப்பட்டால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால், ஜடேஜா சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரராக இருந்தாலும் உள்ளூர் போட்டிகள், ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி போன்றவற்றில் ஆடும் வழக்கத்தை வைத்து தனது திறமையை மெருகேற்றும் வித்தை தெரிந்தவர்.

2006-07ல் துலீப் டிராபி மூலம் ஜடேஜாவுக்கு முதல்தரப் போட்டிகளில் அறிமுகம் கிடைத்தது. மேற்கு மண்டலத்துக்காகவும், ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காகவும் ஜடேஜா விளையாடியவர்.

2012-ல் முதல் தரப் போட்டிகளில் 3 முச்சதங்களை விளாசி ஜடேஜா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிராட்மேன், பிரையன் லாரா, ஹேமண்ட், கிரேஸ், கிரேம் ஹிக், ஹசி ஆகியோர் வரிசையில் ஜடேஜாவும் இணைந்தார். ஒடிசா அணி, குஜராத் அணி, ரயில்வேஸ் அணிக்கு எதிராக முச்சதங்களை விளாசி ஜடேஜா தன்னை ஆல்ரவுண்டராக நிரூபித்தார்.

இந்திய அணியில் அறிமுகம்

2008-09ல் ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணியில் இடம் பெற்ற ஜடேஜா 42 விக்கெட்டுகள், 739 ரன்கள் சேர்த்ததன் மூலம் பிசிசிஐ தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணியில் வாய்ப்புப் பெற்ற ஜடேஜா, 2009, பிப்ரவரி 8ம் தேதி நடந்த ஆட்டத்தில் அறிமுகமாகினார்.

2012-13ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை சவுராஷ்டிரா அணிக்காக அடித்ததையடுத்து, ஜடேஜாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக வாய்ப்புக் கிடைத்தது

டெஸ்ட் தொடரில் வாய்ப்பு

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா அறிமுகமானார். இந்திய அணியில் 2009ம் ஆண்டு ஜடேஜாவுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் 4 ஆண்டுகளுக்குப் பின்புதான் டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்தது.

நாக்பூரில் நடந்த இங்கிலாந்து டெஸ்டில் அறிமுகமான ஜடேஜா, அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொச்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் 61 ரன்கள் குவித்து தன்னாலும் கேமியோ ஆட முடியும் என்பதை நிரூபித்து, 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா சாய்த்தார்.

2013ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கை மட்டும் 5 முறை ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார். 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த ஜடேஜா, அந்த தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற கோல்டன்பால் விருதைப் பெற்றார்.

ஐசிசி தர வரிசையில் முதலிடம்

அந்த ஆண்டில் ஐசிசி ஒருநாள் போட்டியில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக ஜடேஜா உயர்ந்தார். இதன் மூலம் கபில்தேவ், மணிந்தர் சிங், கும்ப்ளே வரிசையில், 1996-ம் ஆண்டுக்குப் பிறகு நம்பர்ஒன் பந்துவீச்சாளராக உயர்ந்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று ஆல்ரவுண்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றாலும் முதல் அரைசதத்தை 2014ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகவே அடித்தார். புவனேஷ்வர் குமாருடன் இணைந்து, 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 68 ரன்கள் சேர்த்த ஜடேஜாவால்தான் இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கை இந்தியாவால் நிர்ணயிக்க முடிந்தது.

கடந்த 10 ஆண்டு காலப் பயணம்

2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜடேஜா மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு, வங்கதேசத் தொடரிலிருந்து கழற்றிவிடப்பட்டார். அதன்பின்பும் மனம் தளராமல், ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடிய ஜடேஜா 38 விக்கெட்டுகளையும் 215 ரன்களும் அடித்தார்.

ஜடேஜாவின் ஃபார்மைப் பார்த்த பிசிசிஐ தேர்வாளர்கள், இந்தியாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளித்தனர். 4 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

2017ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஜடேஜா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதங்களை விளாசினார். 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் ஒருநாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களையும், 150 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்

2019ம் ஆண்டில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜடேஜா தனது 200-வது டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 2022 மார்ச் 5ம் தேதி இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள் சேர்த்தும், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியும் கபில் தேவின் சாதனையை ஜடேஜா முறியடித்தார்.

அது மட்டுமல்லாமல் 2022ல் இங்கிலாந்து பயணத்தில் முதல்முறையாக வெளிநாட்டில் ஜடேஜா சதம் அடித்தார். அந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய ஒருநாள் அணிக்கு துணைக் கேப்டனாகவும் ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபார்ம் அல்ல, திறமைதான்

இதுபோன்று ஜடேஜா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை மெருகேற்றிக்கொண்டே வந்துள்ளார். இந்திய அணியில் இருந்து ஃபார்ம் குறைவு போன்ற காரணத்தால் நீக்கப்பட்டால், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை ஜடேஜா நிரூபிக்க சிறிது கூட ஜடேஜா தயங்கியது இல்லை.

ஃபார்ம் என்பது நிலையானது அல்ல, திறமைதான் நிலையானது என்பதை தனது பேட்டிங், பந்துவீச்சு மூலம் பிசிசிஐக்கு ஜடேஜா உணர்த்தியதால்தால் அணிக்குள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐபிஎல் “ராக் ஸ்டார்”

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியபோது, மறைந்த ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜா இடம் பெற்றார். பைனலில் சிஎஸ்கே அணியை ராஜஸ்தான் அணி தோற்கடிக்க ஜடேஜா முக்கியக் காரணமாக அமைந்தார். ஜடேஜாவின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன வார்ன், ஜடேஜாவை “ராக் ஸ்டார்” என்று அழைத்தார்.

அதன்பின் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளிலும் ஜடேஜா பயணித்தார்.

சிஎஸ்கேவும் ஜட்டுவும்

2012-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரூ.7 கோடிக்கு ஜடேஜா ஏலத்தில் வாங்கப்பட்டு அதன்பின் இப்போது ஜடேஜாவின் மதிப்பு ரூ.16 கோடியாக அதிகரித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு வந்தது முதல் ஜடேஜா முக்கிய அங்கமாக நீடித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தருணங்களில் ஜடேஜா சிறப்பாக பேட் செய்தும், பந்துவீசியும் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

2013ல் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டம், 2020ல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 11பந்துகளில் 31 ரன்கள், 2021ல் ஆர்சிபிக்கு எதிராக 28 பந்துகளில் 62 ரன்கள் என ஜடேஜா தன்னுடைய முழுமையாக பங்களிப்பை அளித்துள்ளார்.

ஜடேஜா - தோனியின் தளபதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?

ஆனாலும், சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பங்களிப்புகள் பல செய்தபோதிலும் அணி நிர்வாகத்தாலும், சிஎஸ்கே ரசிகர்களாலும் உரிய அங்கீகாரம் ஜடேஜாவுக்கு கிடைக்கவில்லை. ஜடேஜா களமிறங்கியபோதெல்லாம் அவருக்கு அடுத்தாற்போல் தோனி களமிறங்க வேண்டும் என்பதால், ஜட்டு அவுட்ஆகுங்கள் என்ற ரசிகர்களின் கோஷம், அவரை வெகுவாகப் பாதித்தது. இது குறித்து ஜடேஜா வெளிப்படையாகவே சிரித்துக்கொண்டே தெரிவித்தார். குறிப்பாக சேப்பாக்கத்தில் தோனிக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த விசில் சத்தம், வரவேற்பு, ஜடேஜாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கடந்த சீசனில் ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை வழங்கிவிட்டு பாதியிலேயே அவரிடம் இருந்து பதவியை பறித்ததும் அவரை பாதித்தது. இந்த விஷயத்தில் ஜடேஜாவுக்கு ஆதரவாக தோனி செயல்பட்டதால் ஜடேஜா அணியிலிருந்து வெளியேறுவதிலிருந்து தடுக்கப்பட்டார்.

ஜடேஜாவின் வருத்தம்

இந்த சம்பவத்துக்குப்பின் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “ யாருக்காகவும் அல்லது எதற்காகவும் உங்கள் தரத்தை இழக்காதீர்கள். சுயமரியாதைதான் முக்கியம்”எ னத் தெரிவித்தார்.

இந்த சீசனிலும் ஜடேஜா தனது ட்விட்டில் புதிரான பதிவிட்டார். கடந்த 21ம் தேதி ட்விட்டரில் “ கர்மா உங்களுக்கு விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டியதை வழங்கும்” எனத் தெரிவித்தார்

Twitter பதிவை கடந்து செல்ல

Definitely 👍 pic.twitter.com/JXZNrMjVvC

— Ravindrasinh jadeja (@imjadeja) May 21, 2023
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

 

ரசிகர்களுக்கு தெரியலயே?

இதற்கிடையே நேற்று சிஎஸ்கே சாம்பியன் பட்டம் பெற்ற நிகழ்ச்சியில், ஜடேஜாவுக்கு அப்டாக்ஸ் மதிப்பு மிக்க வீரர் விருது வழங்கப்பட்டது. அந்தபுகைப்படத்தை ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்டு “ அப்டாக்ஸ் என்னுடைய மதிப்பு தெரிந்திருக்கிறது. ஆனால், சில ரசிகர்களுக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தகுதியான வீரராக, திறமையான வீரராக, சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தும் ஜடேஜாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. ஜடேஜாவின் பந்துவீச்சு கடந்த 15 ஆண்டுகளில் உலகத் தரத்துக்கு இணையாக உருமாறிவிட்டது. பந்துவீச்சாளராக பரிணமதித்த ஜடேஜா இன்று ஆல்ரவுண்டராக உலக அணிகள் மதிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்.

அதுமட்டும்லலாமல் இயான் போத்தம், கபில் தேவ், ஆன்ட்ரூ பிளின்டாப், ஷான் போலக் ஆகிய ஆல்ரவுண்டர்களின் பேட்டிங் சராசரியைவிட அதிகமாக ஜடேஜா வைத்துள்ளார். பிஷன்சிங் பேடி, எர்ரபள்ளி பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரசேகர் ஆகியோரைவிட சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஜடேஜாவுக்கு உரிய அங்கீகாரத்தை இந்திய ரசிகர்கள் இன்னும் வழங்கவில்லை என்பது நிதர்சனம்.

https://www.bbc.com/tamil/articles/c045edzvgypo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி ஓவரில் நடந்தது என்ன ? மோகித்சர்மா

Published By: RAJEEBAN

31 MAY, 2023 | 03:26 PM
image
 

ஐபிஎல் 2023 இன்இறுதிப்போட்டியின் விதியை மாற்றிய கடைசி ஓவர் குறித்து  அந்த ஓவரை வீசிய மோகித்சர்மா மனம்திறந்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு ஒருபக்கம்  பரவசமும் மறுபக்கம் வேதனையும் கலந்த மற்றொரு கதை.

mohit3.jpg

அகமதாபாத்தின் நரேந்திரமோடி மைதானத்தில் மிகவும் அற்புதமான விதத்தில் ரவீந்திர ஜடேஜா வெற்றிக்கான ஓட்டங்களை பெற்றதும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கொண்டாட்டம் ஒரு காவியம் போன்று காணப்பட்டது,அதேவேளை இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற இலக்கை தனது பந்து வீச்சால்கட்டுப்படுத்த முடியாத மோகித்சர்மா முற்றிலும் மனமுடைந்து போனார்.கண்ணீர் விட்டுஅழுதார்.

இந்த போட்டி குறித்து இறுதி ஓவரை வீசிய மோகித் சர்மா மனம் திறந்துள்ளார்.

கடந்தகாலங்களில் பலதடவை இவ்வாறான நிலையில்இருந்துள்ளதால் தன்னிடம் தெளிவான திட்டங்கள்காணப்பட்டதாக மோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஓவருக்கு முந்தைய ஓவரில்  மோகித்சர்மா சிறப்பாக பந்துவீசியிருந்தார் அடுத்தடுத்து இரண்டு விக்கட்களை வீழ்த்தியிருந்தார்.

என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நான் தெளிவாகயிருந்தேன் வலைப்பயிற்சிகளில் நான் அவ்வாறான சூழ்நிலைக்கு பழக்கப்பட்டிருந்தேன் ஆகவே நான் அந்த ஓவரில் யோக்கர் பந்துகளை வீச தீர்மானித்தேன் என மோகித்சர்மா தெரிவித்துள்ளார்.

முதல் நான்குபந்துகளை யோர்க்கர் பந்துகளாவே வீசிய அவர் மூன்று ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்திருந்தார்.

மோகித் நம்பிக்கையோடு காணப்பட்ட போதிலும் அணித்தலைவர் பாண்ட்யா அவருடன்சில செகன்ட்கள் உரையாடினார், 

mohit1.jpg

அது குறித்து தெரிவித்துள்ள மோகித்சர்மா அவர் நான் என்ன செய்யப்போகின்றேன் என கேட்டார் நான் தொடர்ந்தும் யோர்க்கர் பந்துகளை வீசப்போகின்றேன் என தெரிவித்தேன் என  குறிப்பிட்டுள்ளார்.

பண்;ட்டியாவிற்கும் எனக்கும்இடையிலான அந்த உரையாடல்குறித்து பலர் பலவிதமாக கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் அதில் ஒன்றும் இல்லை எனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்பது தெரியும் என மோகித் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த உரையாடலால் எதிர்மறையான பாதிப்பே ஏற்பட்டது  அதுவரை சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த மோகித் தனது லைனில்தவறினார்- 

யோர்க்கரை தவறாக வீசியதால் ஜடேஜா  அதனை தூக்கிசிக்சர் அடித்தார்.

எனினும் மோகித் நம்பிக்கையுடன் காணப்பட்டார்-முதல் நான்கு பந்துகளை போல வீச நினைத்தார், ஜடேஜாவின் கால்களை கால்விரல்களை இலக்குவைத்து யோக்கர் பந்தினை வீச நினைத்தார்.

நான் யோக்கரை வீச திட்டமிட்டேன்ஆனால் பந்து எங்கு விழவேண்டுமோ அங்கு விழவில்லை  நான் என்னால் முடிந்தவரை சிறப்பாக முயற்சி செய்தேன் என மோகித்சர்மா தெரிவித்துள்ளார்.

mohit2.jpg

ஆனால் அவரது திட்டப்படி அது அமையவில்லை அது லோபுல்டொஸாக மாறியது ஜடேஜா அதனை தட்டிவிட்டார் அது பைன்லெக்கில் எல்லைக்கோட்டை கடந்து வெற்றி பவுண்டரியாக மாறியது.

நான் அன்றிரவு உறங்கவில்லை என மோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156616




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள் கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன?   ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்21 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜக்மீத் சிங் ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். "லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தாண்டு செப்டம்பரில் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார். டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், "கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன. இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது, அவருக்கு ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை. டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார். கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும். இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் "ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?21 டிசம்பர் 2024 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ட்ரூடோ வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரைவில் மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. புகைபிடித்தல், உடல் பருமனை தாண்டியும் 100 ஆண்டுகளுக்கு மேல் சிலர் உயிர் வாழும் ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?20 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங். அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை. பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது. ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்.. ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், "இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை. "கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்." என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர். வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgl9gd1gdryo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.