Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் பேசுவதில் அர்த்தமில்லை – ஆனந்தசங்கரி

அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியையும் முன்வைத்தனர்.

அவ்வாறாக போர் நிலவிய நேரத்தில் சம்மந்தனும் திருட்டு தனமாக நாடாளுமன்றம் சென்ற 22 பேரும் மக்களிடம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரசாரம் செய்தனர். இதனால் ரணில் தோற்றார். அவர்களை நம்பி மக்களும் வாக்களித்தனர். சமஷ்டியை செல்லா காசாக்கினார்கள்.

அன்று சமஷ்டி வேண்டாம் என்று பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், இன்று நானா நீயா என்று போட்டி போடுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலை புலிகளையும் உள்ளடக்கியதாக அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்று உதய சூரியன் கொடி கேட்டு கொண்டது. ஆனால் சம்பந்தன் பிரபாகரனை ஒரு பக்கமாகவும் தானும் சேனாதிராஜாவும் தமிழ்ச்செல்வனோடும் இணைந்தனர்.

எம் இனத்தை காட்டி குடுத்த சம்மந்தன் 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர், நாடாளுமன்றத்தில் இருக்க தகுதி அற்றவர். இந்த பிரச்சினை பற்றிய கதைகளை நிறுத்துங்கள் கதைத்து ஒன்றும் ஆகபோவதில்லை”  என்றார்.

https://athavannews.com/2022/1317426

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, தமிழ் சிறி said:

“அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

ஆஹா இதுதான் காரணமா இந்த வயிற்றெரிச்சலுக்கு!

16 hours ago, தமிழ் சிறி said:

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது

அப்படிப்பட்டவர்களோடு எதுக்கு கூடியிருந்து கொட்டமடித்தீர்கள்? அறிக்கைகள் அனுப்பினீர்கள்? நீங்களெல்லோரும் எழுபத்தைந்து வருடங்களாக கூடியிருந்து சாதித்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/12/2022 at 08:25, தமிழ் சிறி said:

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத

ஆண்டவரே,

89 வருடமாக இருக்கும் ஆனந்தசங்கரி என்ற பிரச்சனையை தீர்த்து வைக்கமாட்டீரா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

ஆண்டவரே,

89 வருடமாக இருக்கும் ஆனந்தசங்கரி என்ற பிரச்சனையை தீர்த்து வைக்கமாட்டீரா?🤣

On 27/12/2022 at 09:25, தமிழ் சிறி said:

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலை புலிகளையும் உள்ளடக்கியதாக அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்று உதய சூரியன் கொடி கேட்டு கொண்டது. ஆனால் சம்பந்தன் பிரபாகரனை ஒரு பக்கமாகவும் தானும் சேனாதிராஜாவும் தமிழ்ச்செல்வனோடும் இணைந்தனர்.

எம் இனத்தை காட்டி குடுத்த சம்மந்தன் 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர், நாடாளுமன்றத்தில் இருக்க தகுதி அற்றவர். இந்த பிரச்சினை பற்றிய கதைகளை நிறுத்துங்கள் கதைத்து ஒன்றும் ஆகபோவதில்லை”  என்றார்.

இப்ப 89 வயதுடைய... ஆனந்தசங்கரிக்கும் (15.06.1933) , சம்பந்தனுக்கும் (05.02.1933) 
ஆர் பெரிசு... எண்டதுதான் பிரச்சினை. 
சங்கரிக்கு... தன்னை இந்தப் பேச்சு வார்த்தையில் சேர்க்கவில்லை என்ற கோபத்தில்...
கண் எல்லாம் சிவந்து, பல்லெல்லாம் நெருமிக் கொண்டு நிற்கிறார். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, தமிழ் சிறி said:

கண் எல்லாம் சிவந்து

கிறிஸ்மஸ் பார்ட்டி ஓவராய் போனதால் ஹங் ஓவர்🤣

52 minutes ago, தமிழ் சிறி said:

பல்லெல்லாம்

தரவு பிழை: முரசை கடிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

தரவு பிழை: முரசை கடிக்கிறார்

சாரி. 89 வயதில் பல் இல்லை, முரசு. 😂
(முடியல)🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆண்டவரே,

89 வருடமாக இருக்கும் ஆனந்தசங்கரி என்ற பிரச்சனையை தீர்த்து வைக்கமாட்டீரா?🤣

இந்தப் பதிவைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். ஆனால், அவர்கள் வல்ல சீவன்கள் மிச்சம்மீதியிருக்கிற தமிழரின் அரைஞாண்கயிறை அறுக்கும்வரை இருப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

இப்ப 89 வயதுடைய... ஆனந்தசங்கரிக்கும் (15.06.1933) , சம்பந்தனுக்கும் (05.02.1933) 
ஆர் பெரிசு... எண்டதுதான் பிரச்சினை. 
சங்கரிக்கு... தன்னை இந்தப் பேச்சு வார்த்தையில் சேர்க்கவில்லை என்ற கோபத்தில்...
கண் எல்லாம் சிவந்து, பல்லெல்லாம் நெருமிக் கொண்டு நிற்கிறார். 😂

தாங்கள் மூத்தவர்கள் என்று அடம்பிடிக்கும் இவர்கள் இவ்வளவு காலமாய் சாதித்தது என்ன? அப்படியேதும் இருந்தால் மற்றவர் நினைவில் இருந்திருப்பார், கூடி ஆலோசிக்க தோன்றியிருக்கும். தேவையற்றவைகளை ஏன் சேர்க்கவேண்டும், குழப்புவதற்கா?

அதற்கு சம்பந்தனே போதும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

இப்ப 89 வயதுடைய... ஆனந்தசங்கரிக்கும் (15.06.1933) , சம்பந்தனுக்கும் (05.02.1933) 
ஆர் பெரிசு... எண்டதுதான் பிரச்சினை. 

இருவருக்கும், தாங்களாகவே எழுந்து நின்று தங்கள் அன்றாட கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை, அதில யார் தலைமை தாங்குகிறது என்கிற பிரச்சனை வேறு. தமிழன் எந்தக்காலத்திலும் தலை நிமிரக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தும், தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று ஆத்திரப்படுகிற முதல் ஆள் இவராகத்தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன்  முக்கியமான இடங்களுக்கு (சம்பந்தரை) பிடித்துச்  செல்வதால், அவருக்கு குனியிறார் தலைவர். அதை சாதகமாக வைத்து சுமந்திரன் சட்டாம்பி வேலை பாக்குது மற்ற கட்சிகளுக்கும் அங்கத்தவர்களுக்கும். சம்பந்தனின் வயதுக்கு மரியாதை கொடுத்து மற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இதனால் சுமந்திரன் எளிதாக கட்சியை கூறு போடுது. இத்தனை வயதாகியும் சபைப்பண்பு தெரியவில்லை, பெரும்பாலானவரின்  கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று தெரியவில்லை, சர்வாதிகாரிபோல செயற்படுகிறார். குருட்டு வழிகாட்டிக்கு பின்னால போய் மாழுறோம் என்று நிக்கிறார்கள். அவரோ இறுதியில் இருக்கிறார், இழப்பு ஒன்றுமில்லை, வேண்டியமட்டும் அனுபவித்து விட்டார். மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்கிற எண்ணமில்லை, ஒரு குழப்பியை கொண்டுவந்து குழப்பிக்கொண்டு இருக்கிறார். போ என்றாலும் போகாதாம் அது. அதாலை இதாலை எண்டு பூந்திடுது.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.