Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி நின்று ஆட எவரையும் அனுமதியேன் – அமைச்சர் டக்ளஸ் சூளுரை

11-26.jpg

என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஹையா ஹையா என ஆடவும் விட முடியாது என்றார்.

நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாவீரர் தினம் மற்றும் திலீபனின் நினைவேந்தல் போன்றவற்றை மணிவண்ணன் தரப்பு மேற்கொண்டதாலா மாநகர சபையின் பாதீட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என கேள்வியெழுப்பிய போது,

அவ்வாறு கூற முடியாது. இது கட்சியின் கொள்கை. அவர்கள் வேண்டுமானால் தங்கள் சுயலாபத்திற்கு அவ்வாறு கூற முடியும் என்றார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சியாகும். அந்த வகையில் யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது.

ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பாதீட்டினை நிறைவேற்றவும் முடியாது. கடந்த வாரம் யாழ்.மாநகர சபையின் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது.

மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடுவதற்கு விடமுடியாது.

ஆகவே யாழ்.மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் பரிசீலிப்போம். என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவைக் கோர இதுவரை பேசவில்லை. கட்சி அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

https://akkinikkunchu.com/?p=233737

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும்

அட ....  பார்றா, கதையை மாத்துறவிதத்தை! இவரோடு சேர யார் அழைப்பெடுத்து காத்திருக்கினம்? இவர் பல அறிக்கை விட்டும் யாரும் இவரை சீண்டவில்லை, இப்போ கதை இப்பிடிப்போகுதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணிவண்ணன் அவர்கள் மீதான ததேமமுன்னணியின் குற்றச்சாட்டு வலுவிழக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் தானே, ஆட்சிக்கு வரும், சிங்கள கட்சிகள் தோல் மேல ஏறி சவாரி போறவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Nathamuni said:

இவர் தானே, ஆட்சிக்கு வரும், சிங்கள கட்சிகள் தோல் மேல ஏறி சவாரி போறவர்.

அதுசரி! இவரின் தோளில் ஏறி ஆடவேண்டும் என்று யார் இப்போ  அடம்பிடிப்பது? அவர் உயிர்பிழைத்திருப்பதே தமிழ் இளைஞரின் உயிரை குடித்து, வாழ்ந்தது இராணுவத்தின் கோட்டையில், செய்தது அடிமை வேலை. கொலை, கொள்ளை. இவரை சுற்றி இருந்தது மனித உரிமையை நசுக்கிய கூட்டம். கொடுக்கும் பதவி சகுனிப்பதவியை மந்திரிப்பதவி என்று நினைத்து தாம் தூம் என்று குதிப்பதோடு கற்பனை வேறு! விடுதலைப்போர் முறியடிக்கப்பட்ட ஆரம்பத்தில் கர்த்தால் என்று இவர் ஒன்றை தொடங்க ஆமிக்காரன் வந்து விரட்டியடிக்க தவறான கருத்து பரிமாற்றம் என்று வெக்கினேன் விடிஞ்சேன் என்று கதை முடிஞ்சுது. அவ்வளவும் ஏன்? தன் சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாமல் நாவடங்கி சுருட்டிக்கொண்டு இருந்தவர், தான் யார் என்று அறியாமல் அறிக்கை விடும் வீரன்! பிழைப்பது  இனத்தின் உரிமையை விற்று கதைப்பது கட்டப்பொம்மன் கணக்கு. இவருடன் பழகியவர்களை மனித உரிமை செயற்பாட்டாளர் என்று சொன்னால் 
 அது அந்த மனித உரிமைக்கே வெட்கக்கேடு. தங்கள் உயிருக்காக இந்த மிருகத்திடம் எத்தனை அப்பாவிகள் கெஞ்சியிருப்பார்கள். கிழட்டு அரசியல் செய்ய மாட்டேன் பதவி விலகிவிடுவேன் என்று கதை விட்டவர், எப்போ எங்கே பாத்தாலும் மக்கள் என்னை தெரியவில்லை இல்லையென்றால் அதை செய்திருப்பேன் இதை சாதித்திருப்பேன் என்று வாய்வீச்சும் புலம்பலும் பிச்சைக்காரன் போல்.

10 hours ago, ஏராளன் said:

மணிவண்ணன் அவர்கள் மீதான ததேமமுன்னணியின் குற்றச்சாட்டு வலுவிழக்கிறது.

போட்ட டீல் பிழைச்சுப்போச்சாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, கிருபன் said:

என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும்

தான் உத்தமர் போன்று இவர் இங்கு யாரை குறிப்பிடுகின்றார் என்று யாருக்காவது தெரியுமா?

11 hours ago, ஏராளன் said:

மணிவண்ணன் அவர்கள் மீதான ததேமமுன்னணியின் குற்றச்சாட்டு வலுவிழக்கிறது.

மணிவண்ணனின் மேயர் பதவி; சுமந்திரன் பாதி, தாடியர் பாதி சேர்ந்து செய்த கலவை. சுயநலம், ஒருவரை ஒருவர் பழிவாங்குந்தன்மை, பாதிக்கப்படுவது இவர்களை நம்பியிருக்கும் அப்பாவி தமிழ் மக்கள். இதற்குத்தான் அன்றொரு பாட்டி சொல்லிச்சென்றா  "வஞ்சனை செய்வாரோடிணங்க வேண்டாம்." என்று. யார் கேக்கிறா அதையெல்லாம்? எப்படியாகிலும் நான் பதவி பெற்று, பழிவாங்க வேண்டும் என்கிற வெறி,தானும் அழிந்து தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கும்!  "இனம் இனத்தோடுதான் சேருமய்யா."

 

10 hours ago, Nathamuni said:

இவர் தானே, ஆட்சிக்கு வரும், சிங்கள கட்சிகள் தோல் மேல ஏறி சவாரி போறவர்.

இவர் சேருறாரோ, அவர்கள் அழைக்கிறார்களோ செய்யுந்தொழிலைப் பொறுத்திருக்கு. ஒருவரை அழிக்க நினைப்பவர் முதலில் கொலை செய்வதற்கு தகுதியானவரை தேடுவார், ஒரு வீட்டில் இழவு விழுந்தால் அந்த உடலை அப்புறப்படுத்தும் பணியாளரை அழைப்பார். சிங்களத்துக்கு எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அத்தகையோர் பணியே முதன்மையாக்கப்படுகிறது. இவர் ரணிலின் கட்சியை சேர்ந்தவரல்லர், ஆனால் பதவியேற்றவுடன் முதலில் அழைக்கப்பட்ட ......? இந்த விடுவெளியில் எதுவேண்டுமானாலும் சேர்த்து வாசியுங்கள். அவரது திட்டம், தமிழரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒன்றுமில்லாமல் பண்ணுவது, அதற்கு யார் தேவையோ? அதற்கு தகுதியானவர்கள் இணைய முன்வந்தார்கள், இணைத்தும் கொள்ளப்பட்டார்கள்.

14 hours ago, கிருபன் said:

என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவைக் கோர இதுவரை பேசவில்லை.

ஆனந்த சங்கரியின் நோய் பரவுகிறது. மக்கள் நலனல்ல இங்கு முன்னிற்பது, "நான்."

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று வன்னி எம்பி வினோதரலிங்கம் பேச்சு கேட்டேன்.

தமிழர் சாபக்கேடு குறித்து பேசினார். சரியாக சொல்கிறார் என்று நினைக்கிறேன். 

தமிழரிடையே எத்தனை கட்சிகள் என்கிறார். கூட்டமைப்பால் கொண்டு வரப்பட்ட, விக்கியர் ஒரு கட்சி ஆரம்பித்தார். அவரது அமைச்சரவையில் இருந்து, மோசடி என்று அனுப்பப்பட்ட ஐங்கரநேசன் ஒரு கட்சி ஆரம்பித்தார். அனந்தி சசிதரன் வேறு ஒரு கட்சி.

அப்படியே பிளாட்டில் இருந்து பிரிந்தவர்கள்... eprlf இருந்து பிரிந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்....என்று அடுக்கிக்கொண்டே போனார். 

தலை சுத்தியது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.