Jump to content

இந்தியா இலங்கை கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இருபது - 20 அணிக்கு ஹார்திக் பாண்டியா தலைவர் ; ஒருநாள் அணிக்கு மீண்டும் ரோஹித் ஷர்மா தலைவர்

By DIGITAL DESK 5

28 DEC, 2022 | 12:29 PM
image

(என். வீ. ஏ.)

இலங்கைக்கு எதிராக புதுவருடத்தில் நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்ககளை முன்னிட்டு இந்தியாவின் இருபது கிரிக்கெட்  20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருபது 20 அணியின் உதவித் தலைவராக சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பாளர் ரிஷாப் பன்டுக்கு இரண்டு அணிகளிலும் இடம் வழங்கப்படாததுடன் பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் தலைவராக விளையாடிய ஷிக்கர் தவான் கருத்தில் கொள்ளப்படவில்லை.

விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகிய இருவரும் இருபது 20 குழாத்தில் இடம்பெறாதபோதிலும் ஒருநாள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இருபது 20 குழாத்தில் விக்கெட் காப்பாளராக அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷான் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலான வீரர்கள் 25க்கும் குறைவான போட்டிகளில் பங்குபற்றியவர்களாவர். அத்துடன் 4 வீரர்கள் முதல் தடவையாக இந்தியாவின் இருபது 20 குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

ஷுப்மான் கில், ராகுல் திருப்பதி, ஷிவம் மவி, முக்கேஷ் குமார் ஆகியோர் முதல் தடவையாக இருபது 20 குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடர் வான்கடே (ஜனவரி 1), பூனே (ஜனவரி 5), ராஜ்கோட் (ஜனவரி 7) ஆகிய மைதானங்களில் நடைபெறும்.

3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் குவாஹாட்டி (ஜனவரி 10), ஈடன் கார்ட்ன்ஸ் (ஜனவரி 12), திருவனந்தபுரம் (ஜனவரி 15) ஆகிய மைதானங்களில் நடைபெறும்.

இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஹார்திக் பாண்டியா (தலைவர்), இஷான் கிஷான், ருத்துராஜ் கய்க்வாட், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ் (உதவித் தலைவர்), தீப்பக் ஹூடா, ராகுல் திருப்பதி, சஞ்சு சம்சன், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், அக்ஸார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் பட்டேல், உம்ரன் மாலிக், ஷிவம் மவி, முக்கேஷ் குமார்.

இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல்,  மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

https://www.virakesari.lk/article/144323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசல் மென்டிஸ், வனிந்து ஹசரங்கவுக்கு புதிய பொறுப்பு ! 

29 DEC, 2022 | 08:47 AM
image

இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 20 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் குழாம் மற்றும் இருபதுக்கு 20 இலங்கை குழாம் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்குகிறார்.

இதேவேளை, ஒருநாள் அணிக்கு குசல்மெண்டிஸ் உபதலைவராக செயற்படவுள்ளார். இருபதுக 20 அணிக்கு வனிந்து ஹசரங்க உபதலைவராக செயற்படவுள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இந்தியாவின் வான்கடே மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

இலங்கை குழாமின் விபரம்

321435032_694540539057210_80672179961779

https://www.virakesari.lk/article/144391

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய் அடி வாங்கி கொண்டு நாடு திரும்ப‌ போகின‌ம்...............

அதிஷ்ட‌ன் கை கொடுத்தால் சில‌து வெற்றி பெற‌ முடியும் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான இருவகை தொடர்களில் திறமையை வெளிப்படுத்த இலங்கை முயற்சிக்கும் தசுன் ஷானக்க

By DIGITAL DESK 5

03 JAN, 2023 | 01:10 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது எப்போதும் சிரமமான காரியம். எனினும் எங்களிடமும் சிறந்த அணி இருக்கிறது. எனவே, இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதுடன் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியாவுடான தொடர்களைப் பயன்படுத்துவோம் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டி மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இரவு நடைபெறவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.

'அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபது 20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எமக்கு சிறப்பாக அமையவில்லை. எனவே, இந்தத் தொடரில் நாங்கள் மீண்டுவரவேண்டும். அதனை முன்னிட்டு நாங்கள் திமையாக விளையாடவேண்டும். அவுஸ்திரேலிய மண்ணில் சுப்பர் ஸ்டார் துடுப்பாட்ட வீரர்கள் பலர் பிரகாசிக்கத் தவறினர். 

ஆனால், அவுஸ்திரேலியா ஆடுகளங்களும் ஆசிய ஆடுகளங்களும் மாறுப்பட்டவை. எனவே, இந்தியாவில் எம்மால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இலங்கை விளையாடவுள்ள முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

இதேவேளை, இந்திய அணியில் முக்கிய 3 வீரர்கள் (ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, கே. எல். ராகுல்) இடம்பெறாதது குறித்து தசுன் ஷானக்கவிடம் வினவப்பட்டபோது, 'இந்திய அணியில் யார் இடம்பெற்றாலும் அவ்வணி பலம் மிக்கதாகவே இருக்கும். பொதுவாக இந்திய அணி எப்போதும் சவால் மிக்கது. நாங்கள் செய்யவேண்டியதெல்லாம் திறமையை வெளிப்படுத்துவதாகும். பலவான்கள் யார்? பலவீனர்கள் யார்? என்பதைக் கருத்தில்கொள்ளத் தேவையில்லை. போட்டி நடைபெறும் தினத்தில் எந்த அணி நம்பிக்கையுடன் திறமையை வெளிப்படுத்துகிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும். அந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியையும் தொடரையும் எதிர்கொள்வோம்' என தசுன் ஷானக்க பதிலளித்தார்.

இது இவ்வாறிருக்க, இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவிருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு அதன் மூலம் அனுபவங்களை பெறவுள்ளதாக குறிப்பிட்ட அவர், முதல் தடவையாக இந்தியாவில் விளையாடவுள்ள இலங்கையின் இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர்கள் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஹார்திக் பாண்டியா கருத்து

இலங்கையின் போராட்ட குணத்தைப் பாராட்டிப் பேசிய இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா, இலங்கை அணி பரபரப்பைத் தோற்றுவிக்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கைக்கு பதிலடி கொடுப்பதே தமது அணியின் பிரதான நோக்கம் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாவதற்கு அனுகூலமான அணி என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, இலங்கையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டு இலங்கை சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது.

'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் எம்மை இலங்கை வெற்றிகொண்டிருந்தது. ஆனால், அதே நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்யவேண்டும். எவ்வாறயினும் ஓரணியாக விளையாடும் இலங்கையுடனான இந்தத் தொடர் அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு இட்டுச்செல்லும் என நம்புகிறேன்' என ஹார்திக் பாண்டியா மேலும் கூறினார்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ அல்லது அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார.

இந்தியா: இஷான் கிஷான், ருத்துராஜ் கய்க்வாட், சூரியகுமார் யாதவ், சஞ்சு செம்சன், ஹார்திக் பாண்டியா (தலைவர்), தீப்பன் ஹூடா, வொஷிங்டன் சுந்தர், ஹர்ஷால் பட்டேல், அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், யுஸ்வேந்த்ர சஹால்.

https://www.virakesari.lk/article/144834

On 30/12/2022 at 02:59, பையன்26 said:

போய் அடி வாங்கி கொண்டு நாடு திரும்ப‌ போகின‌ம்...............

அதிஷ்ட‌ன் கை கொடுத்தால் சில‌து வெற்றி பெற‌ முடியும் 😂😁🤣

போராடி தோற்றது சிறிலங்கா அணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான ஒருநாள் போட்டிகளுக்கான  இந்திய குழாமில் பும்ரா 

By SETHU

03 JAN, 2023 | 06:02 PM
image

இலங்கையுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மோதவுள்ள இந்திய கிரிக்கெட் குழாமில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். 

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து, ஜஸ்பிரிட் பும்ரா போட்டிகளில் பங்குபற்றவில்லை. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபது20 உலகக்கிண்ண சுற்றுப்போட்டிக்கும் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபது20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது, 

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை, இந்திய அணிகள் மோதவுள்ளன. 

ஒருநாள் போட்டிக்களுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது, இருபது போட்டிகளுக்கான குழாமில் இடம்பெறாத விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல் முதலான சிரேஷ்ட வீரர்களும் ஒருநாள் போட்டிகளுக்கான குழாமில் இடம்பெற்றிருந்தனர். 

இந்நிலையில், ஜஸ்பிரிட் பும்ராவும் ஒருநாள் போட்டிகளுக்கான குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இன்று அறிவித்தது. 

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய குழாம்: ராகுல் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், (விக்கெட் காப்பாளர்), இஷான் கிஷான் (விக்கெட் காப்பாளர், ஹர்திக் பாண்டியா (உபதலைவர்). வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸார் பட்டேல், ஜஸ்பரிட் பும்ரா, மொஹம்மத் சமி, மொஹம்மத் சிராஜ், உம்ரான் மலிக், அர்ஷ்தீப், சிங்.

https://www.virakesari.lk/article/144883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை 2 ஓட்டங்களால் வென்றது இந்தியா

By SETHU

03 JAN, 2023 | 10:43 PM
image

இலங்கையுடனான முதலாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில்   இந்தியா 2 ஓட்டங்களால் வென்றது 

மும்பை வாங்கடே அரங்கில் இன்றிரவு இப்போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷான் 29 பந்துளில் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏனைய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிகத் தவறிய நிலையில், பின் வரிசை வீரர்களான  தீபக் ஹுதா 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் அக்ஸார் பட்டேல் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 29 ஓட்டங்களைப்பெற்றார். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 160 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. 

அணித்தலைவர் தசுன் ஷானக்க 29 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்றார். 

https://www.virakesari.lk/article/144890

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய ‘ட்விஸ்ட்’

ஷிவம் மாவி

பட மூலாதாரம்,TWITTER/BCCI

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரில் மரியாதை, சர்வதேச போட்டியில் அறிமுகம், முதல் போட்டியிலேயே அசத்தல் என ஷிவம் மாவிக்கு இந்தப் புத்தாண்டு இனிமையாகவே தொடங்கியிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்புதான் அவரை ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டான்ஸ் அணி சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. அடுத்த சில நாள்களில் இந்தியாவின் டி 20 அணிக்கான அழைப்பு அவருக்கு வந்தது. இப்போது அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணியின் வெற்றிக்கு உதவிப் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையை ஷிவம் மாவி போக்கினார். தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.

இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய அவர், 22 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 162 ரன்களை எடுத்த அந்த அணி இரண்டு ரன்களில் வெற்றி பெறுவதற்கு அவரது பந்துவீச்சு பெரிதும் உதவியது.

 

பந்துவீச்சில் ஷிவம் மாவி என்றால், ரோஹித் ஷர்மா, கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத அணியில் தீபக் ஹூடாவும் அக்ஸர் படேலும் நின்று மரியாதையான அளவுக்கு ரன்களைக் குவிக்க உதவ வேண்டியதாயிற்று. கடைசி ஓவரில் இவர்கள் இருவரும் பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் இலங்கை அணியைக் கட்டுப்படுத்தி வெற்றியை வசமாக்கினார்கள்.

 

சரிந்த முன்வரிசை, காப்பாற்றிய பின்வரிசை

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த போட்டியின் மூலம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாயினர். திறமையை வெளிப்படுத்தியும் அணியில் இடம் தரப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பிடித்தார்.

இலங்கை அணி கேப்டன் டாசன் ஷனகா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - சுப்மான் கில் ஜோடி களமிறங்கியது.

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்த உற்சாகத்துடன் களம் கண்ட இஷான் கிஷன் சற்று நிதானமாகவே ஆடினார். 

மறுபுறம் சுப்மான் கில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன் எடுத்த நிலையில் ஹசரங்கா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், அண்மைக்காலமாக டி20 போட்டிகளில் கலக்கி வரும், நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் களமிறங்கினார். 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரும் 7 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் 5 ரன்களில் அவுட்டாகி, ஏமாற்றம் அளிக்க இந்திய அணி 7 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

 

இந்தியா டி20

பட மூலாதாரம்,TWITTER/BCCI

பின்னர், இஷான் கிஷனுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3 ஓவர்களில் 30 ரன் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 29 பந்துகளில் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி 27 பந்துகளில் 29 ரன்களையே சேர்த்தார். 

இறுதிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடாவும், அக்ஷர் படேலும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தீபக் ஹூடாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. தீபக் ஹூடா - அக்ஷர் படேல் இணை அதிரடியாக 50 ரன்களுக்கும் மேல் சேர்த்ததால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. 

தீபக் ஹூடா 23 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும், அக்ஷர் படேல் 20 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்தியா டி20

பட மூலாதாரம்,TWITTER/BCCI

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஷிவம் மாவி

163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிஷாங்கா ஒரு ரன்னிலேயே ஷிவம் மாவியின் அபார பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த தனஞ்ஜெயாவையும் 8 ரன்களில் ஷிவம் மாவி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். 

மறுமுனையில் தொடக்க வீரர் குசால் மென்டிஸ் நிதானமாக ஆடினார். 4-வது வரிசையில் களமிறங்கிய அசலங்காவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிதானத்தை கடைபிடித்தார். ஆனால், 15 பந்துகளில் 12 ரன் சேர்த்திருந்த அவரை உம்ரான் மாலிக் வெளியேற்றினார். உம்ரான் மாலிக் பந்துவீச்சில் விக்கெட்கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அசலங்கா பெவிலியன் திரும்பினார். 

நிலைத்து ஆடிய குசால் மென்டிசும் 28 ரன்களில் அடுத்த ஓவரில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாகி வெளியேற இலங்கை அணி தடுமாறியது. அந்த அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 66 ரன்களை எடுத்து தத்தளித்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்சே 10 ரன்களில் அவுட்டான பிறகு, ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் டாசன் ஷனகாவும், ஹசரங்காவும் அதிரடி காட்டினர். 

அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை விளாசி இருவரும் இந்திய பந்துவீச்ச்சாளர்களை திணறடித்தனர். இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக மாறிய இந்த ஜோடியை மீண்டும் பந்துவீச வந்த ஷிவம் மாவி பிரித்தார். ஹசரங்கா 10 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடம் 21 ரன் எடுத்த நிலையில் ஷிவம் மாவி பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

27 பந்துகளில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில் இலங்கை கேப்டன் டாசன் ஷனகாவும் சிறிது நேரத்தில் வெளியேறினாலும், வெற்றி இலக்கு அருகில் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. 

இந்தியா டி20

பட மூலாதாரம்,TWITTER/BCCI

கடைசி நேர ட்விஸ்ட்

இலங்கை அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை அக்ஷர் படேல் வீசினார். 

முதல் பந்தை வைடாக வீசிய அக்ஷர் படேல் அடுத்த பந்தில் ஒரு ரன் கொடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் எடுக்காத கருணாரத்னே, மூன்றாவது பந்தில் அபாரமாக சிக்சர் அடித்தார். 

இதனால், 3 பந்துகளில் 5 ரன் என்ற எளிய இலக்காகி, ஆட்டம் இலங்கைக்கு சாதகமானது போல் தோன்றியது. இதையடுத்து, கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு முனைக்கு சென்று, அக்ஷர் படேலுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

இதையடுத்து, நான்காவது பந்தில்  அக்ஷர் படேல் ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை. 5-வது பந்தில் கருணாரத்னே, டீப் மிட் விக்கெட்  செய்து பந்தை ஃப்ளிக் செய்து 2 ரன்களை எடுக்க முயல,  தீபக் ஹூடாவின் அபார பீல்டிங்கால் மறுமுனையில் இருந்த தில்ஷன் மதுஷங்கா ரன் அவுட்டானார். 

இந்தியா டி20

பட மூலாதாரம்,BCCI/TWITTER

கடைசி பந்தில் பவுண்டரி எடுத்தால் இலங்கை அணி வெற்றி என்ற நிலை ஏற்பட்டதால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். மிகவும் பரபரப்பான கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி பந்தை கருணாரத்னே எதிர்கொண்டார். 

அக்ஷர் படேல் வீசிய பந்தை அவர் ஓங்கி அடிக்க முயல, அது பேட்டில் சரியாக படாமல் மிட் விக்கெட் திசையில் ஓடியது. அப்போது இலங்கை வீரர்கள் 2 ரன்களை எடுக்க முயற்சிக்க, இம்முறையும் சரியாக செயல்பட்ட தீபக் ஹூடா தனது அபார செயல்பாட்டால் தில்ஷன் மதுஷங்காவை ரன்அவுட் செய்தார். இதனால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்களில் அடங்கிப் போனது.

கடைசிப் பந்து வரை பரபரப்பாக நீடித்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c98x0gppn7wo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடி தோத்தார்க‌ள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரை சமப்படுத்த இலங்கையும் தொடரைக் கைப்பற்ற இந்தியாவும் முயற்சி

By DIGITAL DESK 5

05 JAN, 2023 | 01:19 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் கடைசியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 2 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, புனேயில் இன்று வியாழக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்த முயற்சிக்கவுள்ளது.

முதலாவது போட்டியில் அணித் தலைவர் தசுன் ஷானக்க (45), குசல் மெண்டிஸ் (28), சாமிக்க கருணாரட்ன (23 ஆ.இ.), வனிந்து ஹசரங்க (21) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸன்க (1), தனஞ்சய டி சில்வா (8), சரித் அசலன்க (12), பானுக்க ராஜபக்ஷ (10 ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மும்பை ஆடுகளத்தில் சராசரியாக 175 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கையாக பெறப்பட்டு வந்துள்ளபோதிலும் இந்திய அணியை 162 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, துடுப்பாட்டத்தில் இழைத்த தவறுகளினால் தோல்வியைத் தழுவியது.

கடைசிக் கட்டத்தில் இலங்கைக்கு வெற்றி ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க சாமிக்க கருணாரட்ன கடும் முயற்சி எடுத்துக்கொண்டபோதிலும் போதிய அனுபவம் இன்மை காரணமாக அதிரடியை முறையாகப் பிரயோகிப்பதில் அவர் கோட்டை விட்டார்.

துடுப்பாட்டத்தில் ஏற்பட்ட குறைகளையும் இழைத்த தவறுகளையும் நிவர்த்தி செய்து இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த கடுமையாக முயற்சிப்பதாக தசுன் ஷானக்க கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மைக் காலமாக துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கத் தவறிவந்துள்ள தனஞ்சய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ ஆகிய இருவரையும் நீக்கிவிட்டு அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம ஆகிய இருவரையும் அணியில் இணைத்தால் துடுப்பாட்டம் பலப்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், அணி முகாமைத்துவம் என்ன தீர்மானத்தை எடுக்கும் என்பதை இன்றைய போட்டிக்கு முன்னர்தான் அறியக்கூடியதாக இருக்கும்.

இலங்கை பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகிய இரண்டு சுழல்பந்துவீச்சாளர்களும் திறமையாக பந்துவீசி இருந்தனர். வேகப்பந்துவீச்சாளர்களும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசினால் அது இலங்கை அணிக்கு 'போனஸாக' அமையும்.

தொடரை வெல்ல இந்தியா முயற்சி

இலங்கையுடனான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றும் கங்கணத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றியைக் குறிவைத்து இந்தியா விளையாடவுள்ளது.

அறிமுக வேகப்பந்துவீச்சாளர்களான ஷிவம் மாவி, உம்ரன் மாலிக் ஆகிய இருவரும் திறமையாக பந்துவீசி தம்மிடையே 6 விக்கெட்களைப் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரில் ஷிவம் மாவி மிகத் திறமையாக பந்துவீசி அறிமுகப் போட்டியில் 4 விக்கெட் குவியலைப் பதவி செய்து அசத்தி இருந்தார்.

இன்றைய போட்டியிலும் அவர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலம் சுகவீனம் காரணமாக முதலாவது போட்டியில் விளையாடாமல் இருந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்றைய போட்டியில் உமார் மாலிக்குப் பதிலாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணித் தலைவர் ஹார்திக் பட்டேல் ஆரம்ப பந்துவீச்சாளராக 3 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இலங்கை துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தி இருந்தார்.

துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்பத்திய ஆரம்ப வீரர் இஷான் கிஷான், மத்தியவரிசை வீரர்களான ஹார்திக் பாண்டியா, தீப்பக் ஹூடா, அக்சார் பட்டேல் ஆகியோர் இன்றைய போட்டியிலும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது போட்டியின்போது உபாதைக்குள்ளான சஞ்சு செம்சன் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, 5 நாட்கள் இடைவெளியில் 3 போட்டிகளில் அதுவும் இரவு நேரத்தில் விளையாடுவது இரண்டு அணியினருக்கும் போதிய ஓய்வு எடுக்க முடியாமல் இருக்கிறது. போட்டிகளுக்கு இடைப்பட்ட தினங்களில் இரண்டு அணியினரும் ஓரிடத்திலிருந்து மற்றைய இடத்திற்கு விமானம் மூலம் பயணிக்க வேண்டி இருப்பதால் அணி முகாமைத்துவம் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மிகவும் சுருக்கமாக வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் முறையான பயிற்சிகளில் ஈடுபடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அணிகள் விபரம்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா அல்லது அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ அல்லது சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க.

இந்தியா: இஷான் கிஷான், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹார்திக் பாண்டியா, தீப்பக் ஹூடா, அக்சார் பட்டேல், ஹர்ஷால் பட்டேல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரன் மாலிக், யுஸ்வேந்த்ர சஹால்.

https://www.virakesari.lk/article/145039

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை க‌ப்ட‌னால் இன்றையான் விளையாட்டு வெற்றி

 

என்ன‌ அடி க‌ட‌சி க‌ட்ட‌த்தில் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்; வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 ஜனவரி 2023
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவும் இலங்கையும் இன்று விளையாடிய டி20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், இறுதியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி முதல் ஓவரில் 2 ரன்களோடு தனது ஆட்டத்தைத் தொடங்கியது. யார்க்கர் பாலுடன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தொடங்கினார்.

ஆனால், இரண்டாவது ஓவரில் அஜந்தா மெண்டிஸ், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கான ரன் கணக்கைத் தொடங்கி வைத்தார். அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் ஒரு ஓவரிலேயே அடுத்தடுத்து மூன்று நோ பால் விழுந்த நிலையில் இலங்கை அணி அந்த ஓவர் இறுதியில் 21 ரன்களுடன் இருந்தது.

அடுத்தடுத்து பவுலிங் போட்ட ஷிவம் மாவி, அக்ஷர் பட்டேல், யஸ்வேந்திர சாஹல், என்று இந்திய அணி தரப்பில் பந்துவீச்சு பாணியை மாற்றி முயன்று கொண்டிருந்தனர். ஆனால், மெண்டிஸ் தொடர்ந்து அடித்த பவுண்டரிகள் இலங்கை அணியின் ஸ்கோர் கணக்கை ஆறாவது ஓவர் தொடங்கியபோது 50 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

 

ஏழாவது ஓவரிலும் 8வது ஓவரிலும் நிஸ்ஸாங்க, மெண்டிஸ் ஆகியோர் அடித்த சிக்ஸர்களும் பவுண்டரிகளும் 8வது ஓவர் இறுதியில் இலங்கை அணிக்கு 80 ரன்களைக் குவிக்க உதவியது. 9வது ஓவர் வரை இலங்கை தரப்பில் நிஸ்ஸாங்கவும் மெண்டிஸும் ஆடிக் கொண்டிருந்த அதிரடி ஆட்டத்தை யஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் மெண்டிஸ் எல்பிடபுள்யூ மூலம் அவுட்டானார்.

அதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஓவர்களில் பனுகா ராஜபக்ஷவும்(10வது ஓவரில்) பதும் நிஸ்ஸாங்கவும்(12வது ஓவரில்), அவுட்டானார்கள். 12வது ஓவர் இறுதியில் இலங்கை மூன்று விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்திருந்தது. 13வது ஓவரில் சாஹலுக்கு பதிலாக ஷிவம் மாவி பந்துவீச்சைத் தொடர்ந்தார். அசலங்க பேட்டிங்கின்போது அடித்த சிக்சர் மூலம் இலங்கை அணி 100 ரன்களைத் தாண்டியது.

அதற்கு அடுத்த ஓவரிலேயே தனஞ்சய டி சில்வா ரன் அவுட் ஆனார். ஆனால், அசலங்க விடாமல் 15வது ஓவரில் இரண்டு சிக்ஸ்களை அடித்து அணியின் ரன் கணக்கை 129 ஆக உயர்த்தினார். இலங்கை அணியின் ரன் எடுக்கும் வேகத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு பந்துவீசிய உம்ரான் மாலிக், அசலங்கவை அவுட்டாக்கினார்.

அவரைத் தொடர்ந்து வனிண்டு ஹசரங்கவும் உம்ரான் வீசிய 16வது ஓவரிலேயே அவுட்டானார். அந்த ஓவரில் அசலங்க ஒரு சிக்சர் அடித்திருந்தாலும், உம்ரான் மாலிக் பந்து வீச்சில் இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிந்த நிலையில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியா தனது பந்துவீச்சில் 7 நோ பால்களை வீசியது. அதில் ஐந்து நோ பால்கலை அர்ஷ்தீப் சீங் வீசியிருந்தார். டி20 தொடர்களில் தொடர்ந்து மூன்று நோ பால்களை வீசிய வீரர் என்ற பெயர் தற்போது அர்ஷ்தீப் சிங்குக்கு வந்துள்ளது. இந்தப் போட்டி அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை.

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

பட மூலாதாரம்,BBCI

அவர் நோ பால் வீசியது இலங்கை அணிக்குச் சாதகமாகவும் அமைந்தது. அந்த நோ பால்களை பவுண்டரிக்கு ஃபோரும் சிக்ஸுமாக பறக்கவிட்டு, தனது அணிகு ரன்களைக் குவித்தார் குசல் மெண்டிஸ். அவர் வீசிய ஒரு ஓவரில், 6 பந்துகள் மற்றும் 3 நோ பால்களில் இலங்கை அணி 19 ரன்களை எடுத்தது.

டி20 தொடரில் அதிக நோ பால்களை வீசிய வீரராகியுள்ளார். அவருடைய கணக்கில் இப்போது 12 நோ பால்கள் இருக்கின்றன. அவரைத் தொடர்ந்து 11 நோ பால்களை வீசிய பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இரண்டாவது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய வீரரான கீமோ பாலும் 11 முறை டி20 தொடரில் நோ பால் வீசி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, 20 பால்களை 50 ரன்களை அடித்தார். இதன்மூலம், டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் க்ரீன் உள்ளார்.

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

பட மூலாதாரம்,BCCI

 
படக்குறிப்பு,

அரை சதம் அடித்து, அணியின் ரன் கணக்கை உயர்த்துவதில் சூர்யகுமார் யாதவ் முக்கியப் பங்கு வகித்தார்

இலங்கையின் அதிரடி பந்துவீச்சும் ஃபீல்டிங்கும்

இலங்கை அணி நிர்ணயித்த ஸ்கோரை தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் தொடக்கமாக இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் பந்தை அநாயசமாக பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இஷான், ஷுப்மன் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே இந்திய அணி 12 ரன்களோடு தனது கணக்கைத் தொடங்கியது.

ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கக் காத்திருந்தார் கசுன் ரஜிதா. அவருடைய பந்துவீச்சின் தொடக்கத்திலேயே இஷான் கிஷன் அவுட்டானார். இலங்கை அணிக்கான விக்கெட் கணக்கையும் அவர் அதன் மூலம் தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, அதிரடியாக பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கினார்.

ஆனால், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் அதே ஓவரில் தீக்ஷனவின் கேட் மூலம் கில்லையும் அவுட்டாக்கினார் ரஜிதா. மூன்றாவது ஓவரை வீசிய மதுஷங்கவும் இரண்டாவது ஓவரில் அதிரடியாக பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கிய ராகுல் திரிபாதியை ஐந்து ரன்களோடு மெண்டிஸின் கேட்ச் மூலம் வெளியேறச் செய்தார்.

இந்தியாவின் ஆட்டத்தை இலங்கை அணியின் பந்துவீச்சும் கடுமையான ஃபீல்டிங்கும் திணறடித்துக் கொண்டிருந்தது. ஐந்தாவது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவும் மெண்டிஸின் கேட்ச் மூலம் அவுட்டானார். ஐந்தாவது ஓவர் வரை நான்கு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், இலங்கை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் ஐந்து ஓவர் இறுதியில் 49 ரன்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதைத் தொடர்ந்து 10வது ஓவர் வரை ரன்கள் ஏதும் பெரிதாக எடுக்க முடியாமல், இலங்கை அணியின் ஃபீல்டிங்கில் இந்திய அணி திணறிக் கொண்டிருக்க, 10வது ஓவர் முடியும்போது தனது ஐந்தாவது விக்கெட்டாக தீபக் ஹூடாவையும் இந்தியா இழக்க நேரிட்டது. வனிண்டு ஹசரங்க டி சில்வா பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா கேட்ச் மூலம் தீபக் ஹூடா அவுட்டானார். பத்து ஓவர்கள் முடிந்தபோது இந்திய அணியின் மொத்த ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு 64 ஆக மட்டுமே இருந்தது.

மேலும், 16வது ஓவரில் அரை சதம் அடித்த அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் வனிண்டு டி சில்வாவின் கேட்ச் மூலம் அவுட்டானார். இருபதாவது ஓவருக்குள் செல்லும்போது, 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. ஆனால், இறுதி ஓவரில் தசுன் ஷனகவின் பந்துவீச்சில் இந்திய அணியால் நான்கு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதி ஓவரில், அக்சர் பட்டேல், ஷிவம் மாவி ஆகிய இருவரும், கருணாரத்னே, தீக்ஷனா ஆகியோர் கேட்ச் பிடித்ததன் மூலம் அவுட்டானார்கள். இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிய முதல் இரண்டு ஓவர்களிலேயே முடிவாகிவிட்டதைப் போல் இருந்தது. அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள், இலங்கையின் ஸ்கோரை முந்துவதை இந்திய அணிக்குச் சவாலாக்கியது.

ஆனால், அக்சர் பட்டேலும் சூர்யகுமார் யாதவும் இறுதிவரை தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். 207 ரன்கள் என்ற பெரிய சேஸிங் ஆட்டத்தில், வெறும் 16 ரன்கள் வித்தியாசத்திலேயே இந்தியா தோற்றுள்ளது என்றால், அதற்கு இவர்களுடைய அதிரடி ஆட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

பட மூலாதாரம்,GETTY IMAGES

“பந்துவீச்சு, பேட்டிங் என்று இரண்டிலுமே இலங்கையின் பவர்பிளே எங்களுக்குச் சவாலாக இருந்தது. இந்த நிலையில், செய்யவே கூடாத அடிப்படையான தவறுகளை நாங்கள் செய்துள்ளோம்,” என்று ஹர்திக் பாண்ட்யா ஆட்டம் முடிந்த பிறகு தெரிவித்தார்.

“மோசமான நிலையில் நாம் இருக்கலாம், ஆனால் அடிப்படைகளை விட்டு விலகியிருக்கக் கூடாது. இந்தச் சூழ்நிலையில் அது மிகவும் கடினமாக இருந்தது,” எனக் கூறியவர் அர்ஷ்தீப் சிங்கின் நோ பால் குறித்தும் பேசினார். “முந்தைய போட்டிகளிலும் அவர் நோ பால் வீசியுள்ளார். அது குற்றஞ்சாட்டுவதைப் பற்றியதல்ல. ஆனால், நோ பால் வீசுவது ஒரு குற்றம்,” என்றவர் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்தும் பாராட்டினார்.

ஆட்டத்தின் மத்தியப் பகுதியில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக்க. “தொடக்க ஆட்டக்காரர்களால் ஆட்டம் அமைக்கப்படுகிறது. ஃபினிஷர்கள் சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைப்பதற்கு மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் நன்றாக விளையாட வேண்டும். அதற்கு இந்திய பேட்ஸ்மேன்களும் ஒரு காரணம்.

அவர்கள் எங்கள் கைகளில் இருந்த ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். ஆனால், இறுதியில் ஒருவழியாக எங்கள் கைகளுக்குக் கொண்டு வந்துவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.

இந்திய அணி இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும்கூட, ஆரம்பத்தில் விட்டதைப் பிடிப்பதற்காக இறுதி வரை போராடியது. ஆனால், இறுதியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றியது.

https://www.bbc.com/tamil/articles/c72r62452k9o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மண்ணில் முதலாவது இருபதுக்கு - 20 தொடரை வென்று வரலாறு படைக்க இலங்கை முயற்சி

By DIGITAL DESK 5

07 JAN, 2023 | 10:20 AM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஒன்றில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முதல் தடவையாக வெற்றிகொண்டு வரலாறு படைக்கும் குறிக்கோளுடன் ராஜ்கொட்டில் இன்று சனிக்கிழமை (07) இரவு நடைபெறவுள்ள 3 ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கை விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்தியா 4 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நடைபெற்ற 1ஆவது போட்டியில் இந்தியாவுக்கு சவால் விடுத்து 2 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, புனேயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியிருந்தது.

ரஞ்சியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இருபது 20 தொடரின் 2ஆவது போட்டியிலேயே இந்தியாவை அதன் சொந்த மண்ணில் கடைசியாக இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்தியாவில் இதுவரை இருதரப்பு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றிபெற்றதில்லை.

இந் நிலையில் இந்தியாவுக்கு எதிராக வியாழனன்று இலங்கை ஈட்டிய வெற்றிக்கு பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் இட்டுக்கொடுத்த சிறந்த ஆரம்பம் வழிவகுத்ததாக அணித் தலைவர் தசுன் ஷானக்க அப் போட்டியின் பின்னர் கூறியிருந்தார்.

எனினும் அப் போட்டியில் தசுன் ஷானக்கவின் சகலதுறை ஆட்டமே இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தது என்பதை யாரும் மறக்க முடியாது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர் குவித்த இலங்கைக்கான அதிவேக அரைச் சதமும் தீர்மானம் மிக்க கடைசி ஓவரை புத்திசாதுரியத்துடன் வீசி 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியமையும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காயிற்றியருந்தன.

இன்றைய போட்டியிலும் இலங்கை அணி திறமையை வெளிப்படுத்தி தொடரைக் கைப்பற்ற முயற்சிக்கவுள்ளது.

துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, தசுன் ஷானக்க, சாமிக கருணாரட்ன ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், தனஞ்சய டி சில்வாவும் பானுக்க ராஜபக்ஷவும் பிரகாசிக்கத் தவறியுள்ளனர். இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவர்கள் இருவரையும் இறுதி அணியில் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்து அணி முகாமைத்துவம் அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகியோரும் இரண்டாவது போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசியதையும் மறக்கலாகாது.

எனினும் தனது சொந்த மண்ணில் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் தொடரை வெற்றிகொள்ள ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டாவது போட்டியில் ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களுடன் தடுமாறிக்கொண்டிருந்த இந்தியாவுக்கு, அக்சார் பட்டேல், சூரியகுமார் யாதவ், ஷிவம் மாவி ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டங்கள் நம்பிக்கையைக் கொடுத்தன. ஆனால், இந்தியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கடைசி ஓவரை துணிந்து வீச தீர்மானித்த தசுன் ஷானக்க பரபரப்பான வெற்றியை இலங்கைக்கு ஈட்டிக்கொடுத்தார்.

அணிகள் விபரம்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ அல்லது சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷன்க.

இந்தியா: இஷான் கிஷான், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹார்திக் பாண்டியா, தீப்பக் ஹூடா, அக்சார் பட்டேல், ஹர்ஷால் பட்டேல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்த்ர சஹால்.

https://www.virakesari.lk/article/145172

Link to comment
Share on other sites

தசுன் ஷானக போன்ற வீரரை இழந்துவிட்டனர்

தசுன் ஷானக போன்ற வீரரை இழந்துவிட்டனர்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக இலங்கை - இந்தியா ரி20 போட்டியை நடத்தியிருந்தால், இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகவை வாங்க சில அணிகளிடம் போதிய பணம் இருந்திருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் உரையாற்றி அவர், இலங்கை இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகவின் துடுப்பாட்ட பாணியைக் கருத்தில் கொண்டு மிகவும் மதிக்கப்பட வேண்டிய வீரர் என்பதை நிரூபித்தார்.

தசுன் ஷானக் வெளிப்படுத்திய துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறமையினால் இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற முடிந்தது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், அடிப்படைத் தொகையான 50 லட்சம் இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்ட தசுன் ஷானகவை எந்த அணியும் வாங்கவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அகோர‌ வெற்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேக சதம் அடித்த சூர்யகுமார், தொடரை வென்ற இந்தியா - ஆட்டம் எப்படி இருந்தது?

சூர்யகுமார் அடித்த அதிவேக சதம் இந்திய அணியின் வெற்றிக்குக் கைகொடுக்குமா?

பட மூலாதாரம்,BCCI

7 ஜனவரி 2023

தற்போது நடைபெற்று வரும் இலங்கையுடனான போட்டியில், சூர்யகுமார் யாதவ் ஏழாவது ஓவரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி, 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்துள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் டி20 தொடருக்கான ராஜ்கோட் மைதானத்தில் இன்று விளையாடின. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன. கடந்த இரு போட்டிகளிலுமே தங்கள் அதிரடியை வெளிப்படுத்தி, இந்தியாவின் ரன் வேட்டைக்கு உதவிய சூர்யகுமார் யாதவ், அக்ஷர் பட்டேல் இருவரும் இந்த முறையும் தங்களுடைய வேகத்தைச் சிறிதளவும் குறைத்துக் கொள்ளவில்லை.

மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களோடு தனது ஆட்டத்தைப் பூர்த்தி செய்தது. அதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை 17வது ஓவரிலேயே 10 விக்கெட்களையும் இழந்து 137 ரன்களோடு தோல்வியடைந்தது.

மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கையுடனான இந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வென்றுள்ள மூன்றாவது தொடர்.

 

இந்தியாவின் பந்துவீச்சில், முந்தைய போட்டியில் தொடர்ந்து மூன்று நோ பால்களை போட்ட அர்ஷ்தீப் சிங் இந்த முறை மூன்று விக்கெட்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஆனால், முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் மதுஷங்கவின் பந்துவிச்சில் தனஞ்சய கேட்சில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லோடு கூட்டணியில் ஆடுவதற்கு மூன்றாவதாகக் களமிறங்கினார் ராகுல் திரிபாதி.

ஆனால் ஆறாவது ஓவரில், 16 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அவரும் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ். அவர் களமிறங்கியபோது ஏழாவது ஓவர் தொடக்கத்தில், இந்திய அணியின் ஸ்கோர் கணக்கு 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களாக இருந்தது.

ஏழாவது ஓவரில் ஷுப்மன் கில் அடித்த சிக்சர் உட்பட மொத்தம் 10 ரன்களை இந்திய அணிக்குக் கொடுத்திருந்தார் ஹசரங்க. அதைத் தொடர்ந்து 8வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங்கை ஒரு பவுண்டரிக்கு பந்தைத் தட்டிவிட்டுத் தொடங்கினார்.

சூர்யகுமார் அடித்த அதிவேக சதம் இந்திய அணியின் வெற்றிக்குக் கைகொடுக்குமா?

பட மூலாதாரம்,BCCI

அதற்கு அடுத்த பந்திலேயே மீண்டுமொரு சிக்சர். இரண்டே பந்துகளில் 10 ரன்களைக் குவித்து, தனது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். அடுத்த நான்கு பந்துகளில் நான்கு ரன்ககளை எடுத்து மொத்தம் 14 ரன்களோடு தனது முதல் ஓவரை முடித்தார் சூர்யகுமார்.

முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் அவுட்டானதில் சோர்வடைந்திருந்த ரசிகர்களுக்கு சூர்யகுமாரின் முதல் ஓவரே ஓர் உற்சாகத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து வந்த பந்துகளில் ஹசரங்க முதல் நான்கு பந்துகளில் மூன்றே ரன்களை வழங்கி, அவருடைய ரன் குவிப்பைத் தடுக்க முயன்றார். ஆனால், அதை முறியடிக்கும் விதமாக அந்த ஓவரின் ஐந்தாவது பந்து அவர் அடித்த ஷாட் மூலம் பவுண்டரிக்கு பறந்தது.

ரன் குவிப்பைத் தடுக்க ஹசரங்க முயன்ற அந்த ஓவரிலும் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இப்படியாக ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் பறக்கவிட்ட பந்துகள் அவரை மூன்றாவது டி20 சதத்தை அடிக்க வைத்தது.

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முந்தைய ஆட்டத்தில் இலங்கை பவர் ப்ளேவை கையாண்டது. இந்த முறை பவர் ப்ளே மூலம் இரண்டு விக்கெட்டுக்கு 52 ரன்களை இந்தியா எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் களத்திற்குள் நுழைந்தார். இறங்கிய வேகத்தில் அவர் தொடங்கிய அசர வைக்கும் பேட்டிங் மூலம் 45 பந்துகளிலேயே வேகமாக சதம் அடித்தார்.

அவர் 34 பந்துகளில் 77 ரன்களைச் சேர்த்திருந்தார். அந்த நேரத்தில் மூன்றாவது விக்கெட்டாக விழுந்த ஷுப்மன் கில்லுடனான கூட்டணியில் இருவரும் 111 ரன்களை எடுத்திருந்தார்கள். ஷுப்மன் கில், 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

32 வயதான சூர்யகுமார் யாதவ், 19வது ஓவரில் சதம் அடித்தார். இந்திய மண்ணில் அவருடைய முதல் சதம் இது. அவர் ஆடிய 51 பந்துகளில் மொத்தம் ஏழு பவுண்டரிகள், ஒன்பது சிக்சர்களை அடித்து, மொத்தமாக 112 ரன்களை எடுத்து, ஆட்டமிழக்காமல் முடித்தார். இதன்மூலம், இந்தியா 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 228 ரன்களோடு பேட்டிங்கை நிறைவு செய்தது.

சூர்யகுமார் அடித்த அதிவேக சதம் இந்திய அணியின் வெற்றிக்குக் கைகொடுக்குமா?

பட மூலாதாரம்,BCCI

2022இல் டி20 போட்டிகளில் அதிக ரன் ஸ்கோரர் பட்டியலில், 31 இன்னிங்ஸ்களில் 1164 ரன்களோடு முன்னணியில் இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது முதல் டி20 சதத்தை அடித்தார்.

கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு இந்தியா மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது சூர்யகுமார் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்களை எடுத்தார்.

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டி20 சதங்களை அடித்த ஐந்து பேட்ஸ்மேன்களில் சூர்யகுமாரும் ஒருவர். ரோஹித் ஷர்மா நான்கு சதங்களுடன் முதலிடத்திலும், சூர்யகுமார், கிளென் மேக்ஸ்வெல்(3), காலின் முன்ரோ(3), சபாவூன் டேவிசி(3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளார்கள். மூன்று வெவ்வேறு நாடுகளில் டி20 போட்டிகளில் சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல்லை தொடர்ந்து சூர்யகுமாரும் பெற்றுள்ளார்.

2017இல் இந்தூரில் இலங்கைக்கு எதிராகவே ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார். அதற்குப் பிறகு, சூர்யகுமாரின் சதம் ஓர் இந்தியர் அடித்துள்ள அதிவேக சதமாகப் பதிவாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c72v6l55yxxo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் 360 டிகிரி: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைத்த 'பொக்கிஷம்' சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி

பட மூலாதாரம்,TWITTER/ BCCI

8 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கைக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் மேதைகளும் கூட சூர்யகுமாரின் ஆட்டத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.  

 

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சூர்யகுமார் தான் இன்றைய பேசுபடுபொருள். எங்கு பார்த்தாலும் அவரது புகைப்படங்களும், புகழுரைகளுமாகவே காணக் கிடைக்கிறது. சமூக ஊடகங்களில் சூர்யகுமாரின் பெயர் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. 

 

 

இன்று கிரிக்கெட் உலகமே கொண்டாடும் சூர்யகுமார் இளம் வயதிலேயே சிறந்த வீரராக அடையாளம் காணப்பட்டாலும் மிகத் தாமதமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்திறன் மூலமாக இளம் வயதிலேயே ரஞ்சிக் கோப்பைக்கான மும்பை அணியில் இடம் பிடித்தார். டெல்லிக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே 73 ரன் எடுத்து அசத்தினார். அந்த போட்டியில் மும்பை அணியின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஒரே வீரர் சூர்யகுமார்தான். அது முதல் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராகிப் போனார். 

 

ரஞ்சி கிரிக்கெட்டிலேயே 80 ரன்னுக்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த சூர்யகுமாரை 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. எனினும், 2012-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடாத சூர்யகுமாரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. 

 

2014-ம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட சூர்யகுமார், அந்த அணிக்காக சில சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார்.  பேட்டிங் வரிசையில் கடைசியில் இறக்கப்பட்ட அவருக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு கிட்டவில்லை. 

 

2018-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பிய பிறகுதான் சூர்யகுமாருக்கு பொற்காலம் தொடங்கியது. அது முதல் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் தான். 

 

2018 ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் ஆடிய சூர்யகுமார் அதிரடியாக 512 ரன் குவித்தார். அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரன் சேர்த்த வீரர் அவர்தான்.

சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதுகெலும்பாக சூர்யகுமார் திகழ்ந்தார். ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து முத்திரை பதித்த அவர் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். 

 

உலகமே உற்றுநோக்கிய ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடம்பிடித்த காலம் அது. ஆனால், மும்பை அணிக்காக 3 ஐ.பி.எல். தொடர்களில்  தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி அதிக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக இருந்தாலும் சூர்யகுமாருக்கு அது எளிதில் வாய்க்கவில்லை. 

 

சூர்யகுமாருக்கு மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் கதவுகள் இன்றும் திறக்காதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த போதுதான், ஒருவழியாக 2021-ம் ஆண்டு மார்ச்சில் இங்கிலாந்து எதிரான டி20 தொடரின் இரண்டாவது ஆட்டத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 30-வது வயதில் அவர் தடம் பதித்தார். 

சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் பேட்ஸ்மேனாக சாதிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாள் எதிர்பார்த்து, இந்திய அணியில் இடம் பிடித்த முதல் போட்டியிலேயே பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு கிட்டாத நிலையிலேயே இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் சூர்யகுமாருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. 

 

அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைய, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான அணியில் மீண்டும் அவர் இடம் பிடித்தார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும், களம் கண்ட சூர்யகுமார் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 

 

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஆடும் முதல் இன்னிங்ஸா இது? என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் வியக்கும் வகையில் அவரது ஆட்டம் அமைந்தது. ஐ.பி.எல். தொடரில் காட்டிய அதிரடியை அப்படியே சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ந்தார் சூர்யகுமார். எதிரணி வீரர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த அவர், 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 57 ரன்களைக் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தமது வருகையை பறைசாற்றினார். 

சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

பேட்ஸ்மேனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதித்துக் காட்டிய சூர்யகுமாருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அது முதல் ஏறுமுகம்தான். அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவர் பேட்டில் பட்ட பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாக பறந்தன. பேட்டிங்கில் மிக முக்கியமான 4-வது வரிசை பேட்ஸ்மேனாக அவரே நிரந்தரமாகிப் போனார். 

 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் முதல் சதம், அவர் அறிமுகமான அதே இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் வந்தது. அதுவும் அவர்களது சொந்த மண்ணில். 

 

கடந்த ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த சூர்யகுமார் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 117 ரன்களை குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.72ஆக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சிக்ஸர், பவுண்டரிகளாக மட்டுமே 92 ரன்கள் வந்தன. 

சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தையும் வெளிநாட்டு மண்ணிலேயே விளாசி சாதித்தார் சூர்யகுமார். கடந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்களை சேர்த்து கிரிக்கெட் ரசிகர்களின் புருவங்களை உயரச் செய்தார். ஸ்ட்ரைக் ரேட் முந்தைய சதத்தைக் காட்டிலும் அதிகம். அதாவது, 217.64. மொத்தம் 7 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை அவர் அடித்திருந்தார். 

 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வெல்லக் காரணமாக சூர்யகுமாரின் நேற்றைய(சனிக்கிழமை) இன்னிங்ஸ் அவருக்கு மூன்றாவது சதமாக அமைந்தது. வெறும் 51 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை விளாசி 112 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது சதத்தை வெறும் 43-வது இன்னிங்சிலேயே எட்டியுள்ளார் சூர்யகுமார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் மூன்றாவது சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் இவர்தான். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். 

 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 843 பந்துகளில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ், அதிவிரைவில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இதுவரை 45 போட்டிகளில் 43-ல் பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ள அவர் 1,578 ரன்களைக் குவித்துள்ளார். 9  போட்டிகளில் அவர் நாட்அவுட். 46.41 ரன் சராசரியைக் கொண்டுள்ள அவரது ஸ்ட்ரைக் ரேட் 180.34.  அதிரடியாக 3 சதங்களையும், 13 அரைசதங்களையும் கண்டுள்ள சூர்யகுமார் 142 பவுண்டரிகள், 92 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 

 

இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கென்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக இயந்திரம் போன்று, களம் கண்டதும் எதிர்கொள்ளும் முதல் பந்தில் இருந்தே ரன்களை குவிக்கத் தொடங்கி விடுவது சூர்யகுமாரின் ஸ்டைல். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை விரட்டியடிக்கும் அவரது ஆட்டத்தைக் காண கண் கோடி வேண்டும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களும், ரசிகர்களும் கூறுவது வாடிக்கை. 

 

கிரிக்கெட்டில் அதிரடிக்கு புதிய இலக்கணம் வகுத்து, மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் தென் ஆப்ரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸைப் போல ஆடுவதாக வர்ணிக்கப்படுபவர் சூர்யகுமார். ஏ.பி.டிவில்லியர்சைப் போலவே மைதானத்தில் 360 டிகிரிக்கு சுழன்று, பந்துகளை விரட்டியடிக்கும் சூர்யகுமாருக்கு இந்தியாவின் ஏ.பி.டி. என்ற செல்லப் பெயரும் உண்டு. 

சூர்யகுமார் யாதவ், 360 டிகிரி

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமாருக்கு அதற்கேற்ற பெருமையும் கூடி வந்தது. கடந்த நவம்பர் மாதம் ஐ.சி.சி.வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் முதன் முறையாக சூர்யகுமார் முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக, முடிசூடா ராஜாவாக வலம் வரும் அவர், நம்பர் ஒன் அரியணையில் அன்று முதல் இன்று வரை தொடர்கிறார். 

 

இந்திய அணியில் தாமதமாக இடம் பிடித்தாலும், இன்று கிரிக்கெட் உலகமே கொண்டாடும் பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ள சூர்யகுமாருக்கு இருபது ஓவர் மட்டுமின்றி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் ஆகியவற்றிலும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கவுதம் கம்பீர், இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமாரை சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். 

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை கொண்டாடும் வேளையில், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் இயன் பிஷப் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யகுமார் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

6 ஆண்டுகளுக்கு முன்பே சூர்யகுமார் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையைத் தூண்டுகிறது அவரது ட்வீட். 

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

பிஷப்பின் ட்வீட், "சூர்யகுமாருக்கு இந்திய அணியில் தாமதமாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டது" என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பொதிந்திருந்த ஆதங்கத்தை மீண்டும் கிளறிவிட்டுள்ளது.  டி20 போட்டிகளைப் போல அல்லாமல், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமாருக்கு விரைந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்களும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டி, அதன் மீதான ரசிகர்களின் பார்வையையே மாற்றியமைத்த இந்திய வீரர் வீரேந்திர சேவாக் போல சூர்யகுமாரும் மிகச்சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cj72y2mvd0yo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

India vs Sri Lanka 1st T20 Highlights 2023 - Ind vs Sl highlights 2023

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அபார வெற்றி: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது

இந்தியா ரன் குவிப்பு: கோலி சதம்

பட மூலாதாரம்,TWITTER/ BCCI

10 ஜனவரி 2023, 12:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை பதிவு செய்து விராட் கோலி அசத்தியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றனர். 

 

ரோகித் - சுப்மான் கில் தொடக்க ஜோடி அசத்தல்

இந்தியா - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

 

இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களம் கண்ட கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மான் கில்லும் நிலைத்து ஆடினர். பொறுமையாக ஆடிய அவர்கள் அவ்வப்போது ஏதுவான பந்துகளை எல்லைகோட்டிற்கு விரட்டவும் தவறவில்லை. இதனால், இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ந்து, 6 ரன்னுக்கும் அதிகமாகவே இருந்தது. 

இருவருமே நிலைத்து ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 100 ரன்களை கடந்துவிட்டது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித்தும், சுப்மான் கில்லும் அரைசதம் விளாசினர். 

இந்தியா ரன் குவிப்பு: கோலி சதம்

பட மூலாதாரம்,TWITTER/ BCCI

விராட் கோலி அபார சதம்

20-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. சுப்மான் கில் 6 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன் எடுத்த நிலையில் இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 

 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், 83 ரன்களை எடுத்த நிலையில் தில்ஷன் மதுஷன்கா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 67 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். 

 

தொடக்க ஜோடி ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் 28 ரன்களும், ராகுல் 39 ரன்களும் சேர்த்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். 

அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இந்திய அணி 373 ரன் குவிப்பு

கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் இது 45 ஆவது சதம், சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 73வது சதமாக அமைந்தது. 

 

இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 87 பந்துகளில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 113 ரன் சேர்த்த நிலையில் கசுன் ரஜிதா பந்துவீச்சில் குசால் மென்டிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களைக் குவித்தது.

இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே சோகம்

இதையடுத்து, 374 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 23 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 5 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களம் கண்ட குசால் மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

நிலைத்து ஆடிய தொடக்க வீரர் நிஸாங்கா அவுட்

மற்றொரு தொடக்க வீரர் நிஸாங்கா நிலைத்து நின்று நிதானமாக ஆடினார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த அசலங்கா 23 ரன்களும், தனஞ்ஜெயா 47  ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷனகா நேர்த்தியாக, அதேநேரத்தில் அதிரடியாக மட்டையை சுழற்றினார். ஆனால், அவருக்கு மறுபுறத்தில் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நிலைத்து ஆடிய தொடக்க வீரர் நிஸாங்கா 72 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இந்தியா அபார வெற்றி - இலங்கையை வீழ்த்தியது

பட மூலாதாரம்,TWITTER/ BCCI

கடைசி வரை போராடிய இலங்கை கேப்டன்

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் மலைபோல் நின்று இலங்கை அணியை கரை சேர்க்க கேப்டன் ஷனகா போராடினார். அவ்வப்போது சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அவர் பறக்கவிட்டார். 

 

எனினும், அவரது ஆட்டம் இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் தருவதாக மட்டுமே அமைந்தது. வெற்றி இலக்கை எட்டுவதற்குப் போதுமானதாக இல்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்தியா 67 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எடுத்தது. ஷனகா 88 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடடன் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 

இந்தியா தரப்பில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 3 விக்கெட், முகமது சிராஜ் 2 விக்கெட், முகமது சமி, ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cer0zk3rzk4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பந்துவீச்சாளர்களை கோஹ்லி, ஷுப்மான், ரோஹித் துவம்சம் செய்ய 67 ஓட்டங்களால் இந்தியா வெற்றி : தசுன் ஷானக்க அபார சதம் குவித்து அசத்தல்

10 JAN, 2023 | 09:30 PM
image

 

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக குவாஹாட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது.

விராத் கோஹ்லி குவித்த 45ஆவது சர்வதேச ஒருநாள் சதம், ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டன.

இலங்கை சார்பாக  அணித் தலைவர் தசுன் ஷானக்க சதம் குவித்திராவிட்டால் இலங்கை இதனைவிட மிக மோசமான தோல்வியைத் தழுவியிருக்கும்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களைக் குவித்தது.

ஷுப்மான் கில், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 19.4 ஓவர்களில் 143 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஷுப்மான் கில் 67 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 83 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 60 பந்துகளில் 11 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

இருவரும் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இரண்டு இணைப்பாட்டங்களில் விராத் கோஹ்லி பங்காற்றி இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

28 ஓட்டங்களைப் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி, 39 ஓட்டங்களைப் பெற்ற கே.எல். ராகுலுடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 90 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஹார்திக் பாண்டியா (14), அக்சார் பட்டேல் (9) ஆகிய இருவரும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயன்று குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 87 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 113 ஓட்டங்களைக் குவித்து 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

இந்தியாவின் முன்வரிசை வீரர்களால்  துவம்சம் செய்யப்பட்ட கசுன் ராஜித்த 10 ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் 88 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா விக்கெட் எதுவும் இன்றி 67 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே விக்கெட் எதுவும் இன்றி 65 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி 54 ஓட்டங்களையும் வாரி வழங்கியிருந்தனர்.

374 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கையின் துடுப்பாட்டத்தில் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

16 மாதங்கள் இடைவெளியின் பின்னர் இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் வந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (23 - 2 விக்.)

பெத்தும் நிஸ்ஸன்கவும் சரித் அசலன்கவும் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தபோதிலும் மொத்த எண்ணிக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது அசலன்க (23 ஓட்டங்கள்) 3ஆவதாக ஆட்டமிழந்தார்.

எனினும் பெத்தும நிஸ்ஸன்கவும் தனஞ்சய டி சில்வாவும் 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிது உற்சாகத்தைக் கொடுத்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தனஞ்சய டி சில்வா 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் வழமைபோல் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 11 பவுண்டறிகளுடன் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் வனிந்து ஹசரங்க டி சில்வா (16), துனித் வெல்லாலகே (0), சாமிக்க கருணாரட்ன (14), ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் போன்று திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் தசுன் ஷானக்க 88 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 108 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

தனது 46ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தசுன் ஷானக்க 2ஆவது சதத்தைக் குவித்ததுடன் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.

அவருக்கு பக்கபலமாக விக்கெட்டைத் தக்கவைத்துக்கொண்டு துடுப்பெடுத்தாடிய கசுன் ராஜித்த 19 பந்துகளில் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அத்துடன் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் தசுன் ஷானக்கவுடன் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இந்திய பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 57ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைபற்றினர்.

https://www.virakesari.lk/article/145453

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெற்றிக்கு உதவிய ராகுலின் ‘டிராவிட் ஆட்டம்’

ராகுல் இந்திய கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

51 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி குறைந்த இலக்கையே எட்ட முடியாமல் திணறியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி 370-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய அணியும் அதை விரட்டிய இலங்கை அணியும் ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் ரன்களை எடுக்கத் தடுமாறின.

இலங்கை அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த ரன்களை எட்டுவதற்கு இந்திய அணிக்கு 40-க்கும் அதிகமான ஓவர்கள் தேவைப்பட்டதுடன் 6 முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்திய அணியில் கேஎல் ராகுல் நிதானமாக நீடித்து நின்று ஆடிய ஆட்டமே வெற்றிக்கு உதவியது. கடைசிவரை ஆட்டமிழக்காத அவர் 103 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். 

இந்தியப் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அந்த அணியால் 40 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்திய அணிக்கும் இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.

 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்றிருக்கிறது.

போட்டியில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் பந்திலேயே பவுண்டரி மூலம் கணக்கைத் தொடங்கிய அந்த அணிக்கு அதன் பிறகு வேகமாக ரன் குவிக்கும் வேறெந்த முயற்சியும் பலன் தரவில்லை. ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ சிராஜ் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு குசால் மென்டிஸும், நுவனிது ஃபெர்னாண்டோவும் நிதானமாக ஆடி ரன்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். 16-ஆவது ஓவரில் இலங்கை அணிக்கான முதல் சிக்சரை மென்டிஸ் அடித்தார். அந்த ஓவரில் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்த ஓவரில் 100 ரன்களை எட்டிய இலங்கைக்கு கடைசி பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் குசால் மென்டிஸ் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் புதிதாக வந்த தனஞ்ஜெயா ரன்ஏதும் எடுக்காமல் முதல்பந்திலேயே ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் வீசிய பந்து நடு ஸ்டம்ப்பை தகர்த்தது.

மூன்று விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி அதன் பிறகு ரன்களை எடுக்கத் தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்த நுவனிது ஃபெர்னாண்டோ 22-ஆவது ஓவரில் ரன் அவுட் ஆனார். 63 பந்துகளுக்கு 50 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

 

இந்திய கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. 23-ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் மற்றொரு முறை ஸ்டம்பைத் தகர்த்தார். இந்த முறை ஷனகா நடுஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த அவர் இந்த முறை 2 ரன்களை மட்டுமே எடுத்தார்.

குல்தீப் யாதவின் பந்துவீச்சு மிரட்டல் 25-ஆவது ஓவரிலும் தொடர்ந்தது. இந்த முறை அசலாங்கா அடித்த பந்தை தானே கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் குல்தீப். 25-ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

எனினும் மறுமுனையில் இருந்த ஹசரங்க டி சில்வா அதிரடியாக ஆடத் தொடங்கினார். 27-ஆவது ஓவரில் ஒரு சிக்சர், இரு பவுண்டரிகளை அவர் விளாசினார். ஆனால் அவராலும் நீடித்து நிற்க முடியவில்லை. இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளரான உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சில் அக்சர் படேலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இலங்கை அணியால் 40 ஓவர்களைக்கூட நிறைவு செய்ய முடியவில்லை. அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்த உதவிய வெல்லலகே சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 39.4 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இந்திய கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

இந்தியப் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவும், முகமது சிராஜும் தலை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இலங்கை அணியின் நுவனிது 50 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்.

அதன் பிறகு ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே மெதுவாக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 5-ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் கருணரத்னே பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில்லும் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழந்ததால் இந்திய அணியின் ரன்குவிப்பு வேகம் குறைந்தது. 10-ஆவது ஓவரில் லஹிரு குமார பந்துவீச்சில் விராட் கோலி ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

10 ஓவர் முடிவில் 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. 15-ஆவது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுக்கு ஆடமிழந்தார். இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் கேஎல் ராகுலும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினர். ஓவருக்கு 4 ரன்கள் வீதமே ரன்குவிப்பு வேகம் இருந்தது. அவ்வப்போது மட்டுமே எல்லைக் கோட்டைத் தாண்டி பந்து சென்றது. மற்படி ஒன்றும் இரண்டுமாகவே அவர்கள் ரன்களைச் சேகரித்தனர்.

இந்திய கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

நிலைத்து ஆடிக் கொண்டிருந்த ஹர்திக், 35-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்தார். அதன் பிறகு அக்சர் படேல் களத்துக்கு வந்தார். 21 பந்துகளில் 21 ரன்களை எடுத்த அவர் 40-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மறு முனையில் கேஎல் ராகுல் நீடித்து பொறுமையாக ஆடிக் கொண்டிருந்தார். 93 பந்துகளில் அவர் 50 ரன்களை அடித்தார். கடைசியாக 43.2 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

https://www.bbc.com/tamil/articles/crgw3g5y606o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடுத‌ல் ஓட்ட‌ம் குவிச்சு இருக்க‌னும் அடிச்சு ஆட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் சீக்கிர‌வாய் அவுட் ஆகின‌ ப‌டியால் வெறி இல‌க்கை அடை முடிய‌ வில்லை...........என்டாலும் இந்தியாவின் முன்ன‌னி வீர‌ர்க‌ளை அவுட் ஆக்கிட்டின‌ம்........கே ல் ராகுலும் அவுட் ஆகி இருந்தா விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி குல்தீப் யாதவுக்கு மறக்க முடியாத போட்டி என்று கூடச் சொல்லலாம்.

அவர், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் மிடில் ஆர்டர் ஆட்டத்தைச் செயலிழக்க வைத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சரியான நேரத்தில் யஸ்வேந்திர சாஹல் குணமடையாத காரணத்தால் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். அப்படிச் சேர்க்கப்பட்டதற்கு சரியான ஆட்டத்தை நேற்று அவர் வழங்கினார்.

இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 102 ரன்களை எடுத்திருந்தபோது, 17வது ஓவரில் ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவை களமிறக்கினார். குல்தீப், குசல் மெண்டிஸை எல்பிடபிள்யூ விக்கெட் மூலம் வெளியேற்றினார்.

இலங்கை அணியின் கேப்டனான 28 வயது நிரம்பிய தசுன் ஷனகாவை இரண்டே ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த பெருமையும் குல்தீப்பையே சேரும். தசுன் ஷனகா குல்தீப்பின் முழு நீள பந்துவீச்சை தட்டிவிட முயன்றார். ஆனால் அந்த முயற்சியால் அவருடைய கால் பகுதியில் பந்து ஊடுருவி அவரை அந்தப் பந்து போல்ட் ஆக்கியது.

 

200வது சர்வதேச விக்கெட்

குல்தீப் யாதவ், இலங்கை அணியின் கேப்டனை வீழ்த்தியதோடு நிற்கவில்லை. அவர் வீசிய ஐந்தாவது ஓவரில் சரித் அசலங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி வெளியேற்றினார்.

இடது கை பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேலுடன் சேர்ந்துகொண்ட குல்தீப் யாதவ், இலங்கை பேட்டிங்கின்போது பந்துவீச்சை மிகவும் இறுக்கமான பாணியில் வைத்திருந்தனர். இலங்கையால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை வழங்க அவர்கள் மறுத்தனர். இதன்மூலம், தனது 107வது சர்வதேச போட்டியில் 200வது சர்வதேச விக்கெட்டை எடுத்தார்.

இது உலகக் கோப்பை ஆண்டாக இருக்கும் நிலையில், அதிலும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டம் யாராலும் தவிர்த்துவிட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சவாலான ஈடன் கார்டன் மைதானம்

“முதலில் பேட்டிங் செய்வதா வேண்டாமா என்று இரண்டு மனநிலையில் நான் இருந்தேன். கடந்த முறை நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதைக் கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் தேர்வு செய்ய விரும்பினேன். ஆனால், இந்த மைதானத்தைப் பார்த்த பிறகு, ஃபீல்டிங்கை தேர்வு செய்ய விரும்பினேன்,” என்று டாஸ் போடும்போது ரோஹித் ஷர்மா கூறினார்

ஆனால், இலங்கை அணி டாஸ் வென்றது. தசுன் ஷனக பேட்டிங்கை தேர்வு செய்தார். சொல்லப்போனால், இந்தியாவுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் ரோஹித் ஷர்மா கூறியதைப் போல் ஃபீல்டிங் கிடைத்தது நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தைப் பொறுத்தவரை, ஒருநாள் போட்டியில், பகல் நேரத்தில் பந்து வீசுவது எளிதல்ல. அங்கு நிலவும் பருவநிலை காரணமாக இரவில் பந்தைப் பிடிப்பதைக் கடினமாக்கும். அதனால்தான், சில கேப்டன்கள் முதலில் ஃபீல்டிங் வேண்டுமெனக் கேட்க நினைப்பார்கள்.

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் வலுவான பேட்டிங்

ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை, அந்த மைதானத்தில் 300க்கும் மேல் ஸ்கோர் செய்வது அரிதாகவே நிகழ்கின்றன, அங்கு 250 ரன்களை பெறுவதே கடினம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிக ரன்களை ஸ்கோர் செய்து, இரண்டாவதாக பேட்டிங் வரும் அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேப்டன்கள் நினைப்பதுண்டு. தசுன் ஷனகாவும் அதையே செய்துள்ளார்.

இலங்கைக்கு அதுவொரு வலுவான தொடக்கமாக இருந்தது. ஆனால், அவிஷ்க ஃபெர்னாண்டோ, 17 பந்துகளில் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, குசல் மெண்டிஸ், நுவனிடு ஃபெர்னாண்டோ ஆகியோர் இரண்டாவது விக்கெட் வீழ்வதற்கு முன்பாக 73 ரன்களைச் சேர்த்தனர். இருவரும் 17வது ஓவரில் இலங்கையின் ரன் கணக்கை 100க்கும் மேல் கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் இலங்கை அணி, அவர்களுடைய ரன் கணக்கை 300 ரன்களுக்கும் மேல் கொண்டு செல்லப் போகிறது எனத் தோன்றியது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் மேஜிக்கில் சிக்கியதால், அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை.

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியைத் தேடித் தரும் பவுலர்

17வது ஓவரின் கடைசி பந்தில் குல்தீப், மெண்டிஸை எல்பிடபிள்யூ அவுட்டாக்கினார். இந்த விக்கெட்டில் தொடங்கியது இலங்கை அணியின் பின்னடைவு. அவர்களுடைய அடுத்த 6 விக்கெட்டுகளும் அடுத்த 50 ரன்களுக்குள் விழுந்தன. இதில் மெண்டிஸை தவிர அஸ்லங்க, கேப்டன் தசுன் ஷனக ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை குல்தீப் யாதவையே சேரும்.

அதற்காக அவருக்கு ஆட்டநாயகன் பட்டமும் கிடைத்தது. உலகக் கோப்பை நடக்கவுள்ள இந்த ஆண்டில், வெற்றியைத் தேடித் தரும் ஒரு பவுலர் என்பதை குல்தீப் யாதவ் நிரூபித்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா கூட்டணி

இந்தியா 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய கே.எல்.ராகுலின் பேட்டிங், இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகவும் சோர்வடையச் செய்யும் அளவுக்கு இருந்தது. மிகவும் கடினமான சூழ்நிலையிலும் 5வதாக அவர் களமிறங்கினார். ஹர்திக் பாண்ட்யாவுடன் விவேகமான கூட்டணியை அவர் உருவாக்கினார்.

இருவரும் இணைந்து 75 ரன்களை எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், ராகுல் கடைசி வரை நின்று இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

அவர் 103 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் விரைவாக ரன் எடுத்தாக வேண்டுமென்ற அவசரம் இருக்கவில்லை. ஆனால், விக்கெட் இழக்காமல் இருக்க வேண்டியது அவசியம். அதை நன்கு உணர்ந்து விவேகமான ஆட்டத்தை ஆடினார் கே.எல்.ராகுல்.

அவருடைய கூர்மையான அணுகுமுறை இலங்கையை வீழ்த்துவதில் இந்தியாவுக்குப் பெரும் உதவியாக இருந்தது.

இறுதியாக 44வது ஓவரில் இந்தியா இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c4ndv3w5vkqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தியது

12 JAN, 2023 | 09:09 PM
image

(நெவில் அன்தனி)

 

இலங்கைக்கு எதராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6.4 ஓவர்கள் மீதமிருக்க 4 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை அடுத்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இப்போதைக்கு 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா தனதாக்கிக்கொண்டுள்ளது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 43.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆனால், வெற்றி இலக்கை அடைவது இந்தியாவுக்கு சுலபமாக அமையவில்லை.

பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் கே.எல். ராகுல் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஓட்டங்கள் பெறுவது கடினமாக அமைந்த அப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 15ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 86 ஓட்டங்களாக இருந்தது.

ரோஹித் ஷர்மா (17), ஷுப்மான் கில் (21), விராத் கோஹ்லி (4), ஷ்ரேயாஸ் ஐயர் (28) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்ததால் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

இந் நிலையில் கே. எல். ராகுலும் ஹார்திக் பாண்டியாவும் 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு சிறிது தெம்பை ஊட்டினர்.

ஹார்திக் பாண்டியா 36 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் அதன் பின்னர் ராகுலும் குல்தீப் யாதவ்வும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

வெற்றியை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ராகுல் 103 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடனும் குல்தீப் யாதவ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தை ஓரளவு சிறப்பாக ஆரம்பித்த இலங்கை, அதன் மத்திய வரிசை வீரர்களின் கவனக் குறைவினாலும் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தினாலும் சரிவு கண்டது.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை, எஞ்சிய 9 விக்கெட்களை 113 ஓட்டங்களுக்கு இழந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஆரம்ப வீரர் நுவனிது பெர்னாண்டோ 50 ஓட்டங்களைக் குவித்து பாராட்டைப் பெற்றார். ஆனால், அரைச் சதம் பெற்ற சூட்டோடு அவசரத் துடுக்கை காரணமாக ரன் அவுட் முறையில் 4ஆவதாக ஆட்டமிழந்தார்.

பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளானதால் அவருக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். மற்றைய ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்ளைப் பெற்றார்.

நுவனிது பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

ஆனால் அதன் பின்னர் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

குசல் மெண்டிஸ் (34), தனஞ்சய டி சில்வா (0), அணித் தலைவர் தசுன் ஷானக்க (2), சரித் அசலன்க (15), வனிந்து ஹசரங்க டி சில்வா (21), சாமிக்க கருணரட்ன (15) ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். (177 - 8 விக்.)

துனித் வெல்லாலகே (32), கசுன் ராஜித்த (17) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து 200 ஓட்டங்களைக் கடக்க இலங்கைக்கு உதவினர்.

இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/145670

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி, சுப்மன் கில் அதிரடி சதம்- பந்து வீச்சில் கலக்கிய சிராஜ்: இலங்கைக்கு எதிராக இந்திய அணி `சாதனை` வெற்றி

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சதத்தில் ஒரு சாதனை - விராட் கோலி (கோப்புப் படம்)

15 ஜனவரி 2023, 11:49 GMT
புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கை உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோரின் சதம் , முகமது சிராஜ் பந்து வீச்சு ஆகியவை இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற தகுதியை இந்த வெற்றியின் மூலம் இந்தியா பெற்றுள்ளது.

இலங்கை- இந்தியா இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் 5 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்த ஜோடி, அதன் பின்னர் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. லஹிரு குமார வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த ரோகித் அடுத்த பந்தில் 1 ரன் அடித்து சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். மீதமிருந்த 4 பந்துகளிலும் 4 ஃபோர் அடித்த கில் அணியின் ரன்னை மளமளவென உயர்த்தினார்.

 

அணியின் ஸ்கோர் 95 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 42 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதையடுத்து சுப்மன் கில்லுடன் இணைந்த விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம், சுப்மன் கில் தனது சதத்தை எட்டினார். அவர் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து வெளியேறியபோது இந்திய அணியின் ஸ்கோர் 226 ஆக இருந்தது. இதையடுத்து கோலியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்த்தார்.

கடந்த ஆட்டத்தில் 4 ரன்களில் வெளியேறிய விராட் கோலி, இந்த ஆட்டத்தில் மிகவும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்தப் பின் தனது அதிரடியை தொடர்ந்த விராட் கோலி, அடுத்த 21 பந்துகளில் 50 அடித்து 150 ரன்கள் என்னும் இலக்கை எட்டினார். இறுதி வரை ஆட்டம் இழக்காத அவர், 110 பந்துகளில் 166 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் லஹிரு குமார மற்றும் கசூன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் கோலியின் இந்த இன்னிங்க்ஸ் அமைந்துள்ளது. தான் விளையாடிய கடந்த 4 ஆட்டங்களில் விராட் கோலி அடித்த 3வது சதம் இதுவாகும். கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் (113) கண்ட அவர், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம்(113), 2வது போட்டியில் 4 ரன்கள், தற்போது சதம் என எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சச்சினின் சாதனை முறியடிப்பு

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார்.  இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனை தாண்டியுள்ளார். 

 

ஒரு நாள் போட்டி: சதத்தில் சச்சினை விரைவில் முந்த வாய்ப்பு

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 

கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 46-வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 74-வது சதமாகவும் இது பதிவாகியுள்ளது.

தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி

391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நுவானிது ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடக்க இணையாக விளையாடினார். 2வது ஓவரில் சிராஜின் பந்துவீச்சில் அவிஷ்கா ஆட்டமிழந்தார். 3வது ஓவரில் இந்திய பந்துவீச்சாளர் சமி தொடர்ந்து 5 வைட்களை வீசி ரன்களை விட்டுக்கொடுத்தார். இதை தவிர்த்து பார்க்கும்போது இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சையே வெளிப்படுத்தினர்.

இதனால், இலங்கை அணியால் அதிரடியாக ரன்களை சேர்க்க முடியாமல் போனது. இறுதியில் 22 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. நுவானிது ஃபெர்னாண்டோ, தஸுன் ஷனகா, கசுன் ரஜிதா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கங்களில் ரன்களை எடுத்தனர். இதனால் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், முகமது சமி மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 77 ரன்கள் , அந்த அணியின் 4வது குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இலங்கை எடுத்திருந்த 43 ரன்களே அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

அதேவேளையில், ஒருநாள் போட்டியில் அதிக ரன் (317) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/ce53rr43gx2o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் ........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொன்னது புரிந்தது. ஆனால்... விளங்காத மாதிரி, நூல் விட்டுப் பார்த்தேன். 😂
    • "வெளியுறவுக் கொள்ளை"? என் கண்பார்வை பிரச்சினையா அல்லது இந்த இடிவிழுவார் இவ்வளவு முக்கியமான ஆவணத்தில் கூட தமிழைச் சரிபார்க்கவில்லையா?
    • பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ? தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார்.   இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,   தபால் மூல வாக்களிப்பும், வாக்கு சீட்டு விநியோகமும் நிறைவடைந்துள்ளன. வாக்கு சீட்டுக்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.    சகல பிரசார நடவடிக்கைகளும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் அமைதி காலமாகும். இக்காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.   அத்தோடு வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இம்முறை இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.    பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும். ஏனைய 19 மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும்.   வாக்களிக்கும் போது தாம் தெரிவு செய்யும் கட்சி சின்னத்துக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு அருகில் புள்ளடியிட வேண்டும். அவ்வாறு புள்ளடியிடப்படாத வாக்குசீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.    அதன் பின்னர் தமது விருப்பத்தெரிவான வேட்பாளரது இலக்கத்துக்கு புள்ளடியிட வேண்டும். ஒரு வாக்களருக்கு மூன்று விருப்பத் தெரிவுகள் உள்ளன.   வேட்பாளர்களது இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் இம்முறை வீடுகளுக்கே விநியோகிகப்பட்டுள்ளது. எனவே அதில் தாம் வாக்களிக்கவுள்ள வேட்பாளர்களது எண்களை தெளிவாக அவதானிக்க முடியும்.    மேலே தெரிவு செய்யப்படும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும். மாறாக ஒரு கட்சியை தெரிவு செய்து, பிரிதொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது.   அவ்வாறான வாக்கு சீட்டுக்கள் நிராகரிக்கப்படும். அதே போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்குகளும் நிராகரிக்கப்படும். மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும் என்றார்.  https://www.virakesari.lk/article/198181
    • விஜய்க்கு... அவரின் மனைவி, பிள்ளைகள் கூட வாக்குப் போட முடியாதாமே...  🤣
    • பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது. எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கு நமது செலவினங்களில் பெரும் சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கேற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும். புத்தாண்டில் பாடசாலை தொடங்கும் போது, பாடசாலை மாணவர்களுக்கு, குறிப்பாக அப்பியாச புத்தகங்களுக்கு நிவாரணம் தருவோம் என நம்புகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்…” என்றார். https://thinakkural.lk/article/311899
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.