Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூசையை சுற்றிய புனை கதைகளும் ,கிழக்கை சுருட்டும் புனை கதைகளும்

Featured Replies

சூசையை சுற்றிய புனை கதைகளும்

கிழக்கை சுருட்டும் புனை கதைகளும்

-சி.இதயச்சந்திரன்-

ஒளியைவிட அதிவேகமாகப் பரவும் பரப்புரையொன்று எதிரிகளால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள் என்று சகலத்திலும் முதன்மைச் செய்தியாகவும், மக்களின் அடிப்படைச் பிரச்சனை போன்றும் சோடிக்கப்பட்டு அலங்கார ஊர்தியாக பவனி வருகின்றது.

சூசைக்கும் பொட்டம்மானிற்கும் லடாய். இரண்டு ஆதரவாளகளுக்கு இடையே நோர்வேயில் வாள்சண்டை.

கடற்புலிகளின் பொறுப்பாளர் பதவியிலிருந்து சூசை விலக்கப்பட்டுள்ளார். அண்மையில் மூண்ட கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலித் தளபதிகள் இருவரின் இறுதி நிகழ்வில் சூசை கலந்துகொள்ளவில்லை என்றவாறு சுயதிருப்திப் பரப்புரைகள் மகிந்த விசுவாசிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

நம்மவர் பலர் இப்புனைகதைகளை விழுங்கி, சோர்வடைந்திருப்பதே பெரும் சோகம்.

'தளபதி சூசை" என்கிற சிவநேசன் மக்களோடு வாழ்நது கொண்டுதானிருக்கிறார்.

மண்மீதும் மக்கள் தலைவன் மேலும் கொண்டிருக்கும் பற்றுறுதி குலையாமல், இலட்சியம் நோக்கிய கடல் பயணத்தில் புதிய சாதனைகள் புரிந்திட இன்னமும் பணியாற்றிக் கொண்டிருகிறார்.

கனவிலாவது அவரைக் கொன்று திருப்தி கொள்ளும் தமிழ்த் தேசிய விரோதிகளின் கூச்சல்களிற்கு பதிலடி கொடுத்து கணக்குகள் தீர்க்கப்படும் காலம் அண்மிக்கின்றது.

சூசையின் குடும்ப வாழ்வு, போராளிகளால் சூழப்பட்டதொரு தளத்தினைக் கொண்டது.

முதல் மாவீரன் லெப். சங்கரின் சகோதரியே அவர் மனைவி.

அரச இராணுவம் மேற்கொண்ட வடமராட்சி ஓப்ரேசனில், மனைவின் தாயாரும், தாயின் தந்தையும் படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

பேரிழப்புகளையே வாழ்வாகக் கொண்ட குடும்ப உறுப்பினரொருவரை வாழ்க்கைத் துணைவியாக வரித்த சூசையின் போராட்ட உணர்வினைக் கொச்சைப்படுத்தும் போலிகளின் காழ்ப்புணர்விற்கு புலிகள் பதிலளிக்கத் தேவையில்லை.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி ரமேசின் மைத்துனர் சூசை என்பதால், பொட்டம்மானிற்கு எதிரான கோஷ்டி ஒன்று உருவாகியுள்ளதாக 'தினமுரசு" 'பொய்முரசு" கொட்டும் பத்திரிகை கூறுகின்றது.

பொட்டமானின் மனைவி மட்டு நகரைப் பிறப்பிடமாக கொண்டவரென்பதை இவர்கள் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

வடக்கு - கிழக்கை மகிந்தர் பிரித்தாலும், தம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டுமென்பதே இவர்களின் விருப்பம்.

பிரித்தாளும் சூத்திரத்துள் தம்மை இணைக்காவிட்டால் சங்கரியின் ஆளுமைக்குள் உள்ளுராட்சி சபைகள் சென்றுவிடுமென்கிற கலக்கம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆயினும் வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட ஐனநாயகத் தலைமைகள் பிரதேசவாதம் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

மகிந்தரின் வடக்கு வாரிசும், கிழக்குத் தளபதியும் அண்மையில் மட்டக்களப்பில் மோதிக்கொண்டது பிரதேசவாதத்தின் அடிப்படையிலா அல்லது நாற்காலிப் போட்டியின் அடிப்படையிலா என்பதை மக்கள் உணர்வார்கள்.

பிரதேசவாதம் பேசிய மகிந்தரின் கிழக்குத் தளபதிகளுக்குள் இரணகளப் போர் நிகழ்ந்து குறுநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டதையும் நினைவிற் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் இறுக்கமான, ஒழுங்கான, கட்டமைப்பை விமர்சித்து மக்களின் விடுதலை உணர்வை சிதைத்திட விரும்பும் இந்நபர்கள் மகிந்தரின் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து வாய் திறக்க மாட்டார்கள்.

திருகோணமலையின் சகல திசைகளிலும் சிங்களக் கைதிகளை குடியமர்த்தி புத்தர் சிலையை நட்டு பெயர்சூட்டு விழாக்களை நடாத்தும் மகிந்த சகோதரர்களின் இன அழிப்பிற்கு துணைபோகும் 'தமிழ் ஐனநாசவாதிகள்" மக்கள் சார்பாக பேசும் தகுதியை இழந்து பல காலமாகி விட்டது.

புலிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தம்மைக் காப்பாற்ற ஆயுதமேந்தியிருப்பதாகக் கூறும் தமிழ் ஐனநாயகத்தார் அவ்வாயுதங்களை மக்கள் மீது பிரயோகிப்பதையிட்டு ஐ.நா. மனித உரிமைச் சங்கங்களே அலறுகின்றன.

'விடியும்வரை காத்திரு" என்ற ஒருநாள் புரட்சிக்காரர் சித்தார்த்தனும், ஒற்றையாளாக நின்று தமிழின அழிவிற்காக போராடும் கூட்டணித் தலைவர் சங்கரியும், நாபாவின் வாரிசுப் போட்டியில் சிதறிய முத்துக்களில் ஒன்றான ஈழப்புரட்சிக் கூட்டத்தில் ஒருவராக விளங்கும் சுகு என்கிற சிறீதரனும் இணைந்து மகிந்த சிந்தனைக்கு வடிவம் கொடுக்கிறார்கள்.

கிழக்கு மக்களுக்கு உள்ளுராட்சி சபையே போதுமான தீர்வென்றால், விடியும் வரை காத்திருக்க தேவையும் ஏற்பட்டிருக்காது, ஈழ மக்கள் புரட்சியென்று தத்துவமும் தோன்றியிருக்காது.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயப் பின்னகர்வால், சருகுகள் அப்பிரதேசத்தில் மிதந்து சலசலக்கின்றன.

புலம்பெயர் நாடுகளிலும் இச்சலசலப்புகள் எதிரொலிக்கின்றன.

சத்தம் வெளிவராவிட்டால் சமாதி நிலையடைந்து விட்டார்களென்று மகிந்தர் கருதுவதால், சூசைக்கதைகளும் ரமேஷ் பிரிப்புகளும் இணையத்தளங்களில் அதிர்வினை ஏற்படுத்துகின்றன.

எதிரியின் தசாவராங்கள் சகல திசைகளிலிருந்தும் வெளிவரும்.

இலட்சிய நீர்பாச்சி, விருட்சமான மரத்தினை அசைத்திட சில்லறைக் காற்றுக்கள் சீண்டிப்பார்க்கும்.

கருகிய இலைகள் 'மொறகொட" காற்றடித்து அள்ளுண்டு போன கதைகள் வரலாறாகிவிட்டது.

விழுதுகளிற்கு விஷ ஊசி ஏற்றி விருட்சத்ரைத விழுத்தலாமென்று கனவு காண்கிறது பேரினவாதம்.

ஊசிகளை கையிலேந்தியவாறு உலக வலம் வரும் ஐனநாயகக் கூத்தாடிகள், தாயக மக்களின் அவல வாழ்வு குறித்து எதுவித அக்கறையுமின்றி, மகிந்த புராணம் முத்திபெற வைக்குமென ஆள்திரட்டும் படலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீய பரப்புரைகள் கண்டு விழிப்பா இருத்தலே தாயக விடுதலைக்கு பலம் சேர்க்கும்.

http://www.tamilnaatham.com/

  • கருத்துக்கள உறவுகள்

விசயங்களை முடிந்தவரை தெளிவாக அதே நேரம் சுருக்கமாக எழுதி மக்களுடைய சந்தேகங்களைப் போக்கவேணும் பாருங்கோ. சும்மா புதுக்கவிதைப் பாணியில இத்தகைய விசயங்களை எழுதினா சந்தேகம் இன்னும் வலுக்கப் பார்க்கும். நெருப்பில்லாமப் புகையாது என்பார்கள். அப்பிடியில்யெண்டா புகையில்ல அது வெறும் பனிப்புகார்தான் சூரியன் உதிக்கக்குள்ள மறைஞ்சுபோயிருமெண்டத தெளிவா உறுதிப்படுத்துங்கோ. எனக்கும் புதுக்கவிதை வரப்பார்க்குது. சரி நான் வாறன்.

விசயங்களை முடிந்தவரை தெளிவாக அதே நேரம் சுருக்கமாக எழுதி மக்களுடைய சந்தேகங்களைப் போக்கவேணும் பாருங்கோ. சும்மா புதுக்கவிதைப் பாணியில இத்தகைய விசயங்களை எழுதினா சந்தேகம் இன்னும் வலுக்கப் பார்க்கும். நெருப்பில்லாமப் புகையாது என்பார்கள். அப்பிடியில்யெண்டா புகையில்ல அது வெறும் பனிப்புகார்தான் சூரியன் உதிக்கக்குள்ள மறைஞ்சுபோயிருமெண்டத தெளிவா உறுதிப்படுத்துங்கோ. எனக்கும் புதுக்கவிதை வரப்பார்க்குது. சரி நான் வாறன்.

ஒருவேளை உண்மையாக நெருப்பு இருந்தால் என்ன செய்வீங்கள்...?? அதுக்கை தீக்குளிச்சு போடுவியளோ...??

யார் வெணும் எண்டாலும் எதையும் சொல்லாம்.. அதன் மெய் பொருள் காண்பது அறிவு...!

சேளியன் குடும்பி சும்மா ஆடாது எண்டும் சொல்லுறவை... அரச சார்பு ஒட்டுண்ணிகள் எதுக்கு தங்கட குடும்பியை ஆட்டுகினம் எண்டும் சிந்தியுங்கோ.... என்ன நான் சொல்லுறது விளங்குதோ...??

  • கருத்துக்கள உறவுகள்

இதே பம்மாத்து ஒட்டு ஊடகங்கள் பிரபாகரன் இறந்து விட்டதாக வதந்தியை உலாவரவிட்டது எல்லோரும் அறிந்ததே .இவர்களின் நம்பகதன்மையை தமிழ் மக்கள் காலம் காலமாக இனம் கண்டுள்ளார்கள்,காணுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் கிளியரா விளங்குது. நெருப்பு இருந்தா

தயாவுக்குப் பதில்:

தீக்குளிக்கிறத விட்டுப்போட்டு அதை அணைக்கப் பார்க்கவேணும். எதுக்கும் நெருப்பு இருக்குதா எண்டிறதில தீர்மானம் வேணும். மெய்ப்பொருள் காணத்தானே முயற்சிக்கவேண்டியிருக்குது. யாரும் எதையும் எழுதுவினம். ஆனால் மறுத்து எழுதுறவையள் கொஞ்சம் விளக்கமாக எழுதுறது நல்லதுதானே. சும்மா பொடி போட்டு எழுதினா எதையும் சரியாகத் தீர்மானிக்கிறது எப்பிடி? உந்த விசயங்களில அக்கறையிருக்கிறதால கொஞ்சம் கவலைப்படவேண்டியிருக்குது.

Edited by karu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி சூசை எமது அரண் அதேபோல் தளபதி பொட்டம்மான் எமது கவண் இவர்கள் சுலநலம் மிக்க கருணா போனறவர்கள் அல்ல என்பதை விரைவில் மக்கள் அறிவார்கள். வீணாகக் குழப்பாதீர்கள்!!

  • தொடங்கியவர்

தளபதி சூசை எமது அரண் அதேபோல் தளபதி பொட்டம்மான் எமது கவண் இவர்கள் சுலநலம் மிக்க கருணா போனறவர்கள் அல்ல என்பதை விரைவில் மக்கள் அறிவார்கள். வீணாகக் குழப்பாதீர்கள்!!

உண்மை

தயாவுக்குப் பதில்:

தீக்குளிக்கிறத விட்டுப்போட்டு அதை அணைக்கப் பார்க்கவேணும். எதுக்கும் நெருப்பு இருக்குதா எண்டிறதில தீர்மானம் வேணும். மெய்ப்பொருள் காணத்தானே முயற்சிக்கவேண்டியிருக்குது. யாரும் எதையும் எழுதுவினம். ஆனால் மறுத்து எழுதுறவையள் கொஞ்சம் விளக்கமாக எழுதுறது நல்லதுதானே. சும்மா பொடி போட்டு எழுதினா எதையும் சரியாகத் தீர்மானிக்கிறது எப்பிடி? உந்த விசயங்களில அக்கறையிருக்கிறதால கொஞ்சம் கவலைப்படவேண்டியிருக்குது.

எப்போதுமே சாதனைகள் முறையடிக்க பட்டுக்கொண்டு இருக்கின்றன... ஒருவரின் சாதனைகளை பின்னால் வருபவர்கள் முறையடித்து முன்னேறி செல்வார்கள்.... இதுதான் சொல்வது மாற்றமே இல்லாது எண்று ஒண்றுமே இல்லை எண்று... ஒரு முக்கிய வேலை அதை அந்த ஒருவரை தவிர வேறு ஒருவரும் அதை செய்ய முடியாது என்பது தவறானது..

உதாரணமாக சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதியாக இருந்த (மாவீரர் லெப் கேணல்) ராஜன் அண்ணா சண்டையில் மிகவும் சாதித்த ஒருவர்.... அவரை அந்த பதவியில் இருந்து தூக்கிய தலைவர் அதிகாரிகள் பயிற்ச்சி கல்லூரியின் தலைமை பொறுப்பில் நியமித்தார்... பின்னர் சமர் திட்டமிடல் பிரிவில் இணைத்து இருந்தார்... அது வெற்றும் ஓய்வான பதவி நிலைகள்தான் ஆனால் அதன் முக்கியத்துவம் அனேகருக்கு புரிவதில்லை.... அதனால் ராஜன் அண்ணாவை தலைவர் அவரில் ஏற்பட்ட பொறாமையினால் பதவி நீக்கிவிட்டார் எண்று சொல்வதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா... ???

இதுதான் அங்கு நடந்தது அல்லது நடக்கிறது எண்று நான் சொல்ல வரவில்லை... ஆனால் தலைமை எந்த முடிவை எடுத்தாலும் தேச நலன் அதில் அடங்கி இருக்கும்... திறமையானவர்கள் தமிழீழத்தை வளி நடத்துவர்... இது காலம் காலமாய் நடப்பது ஆகும்...

நெருப்பில்லாமல் புகையாது என்னும் நபர்கள் நீங்கள் அந்த செய்தி அறிவதில் ஏன் ஆர்வம் காட்டுகின்றீர்கள் அல்லது ஏன் அந்த கட்டுகதைக்கு ஓ போடுகின்றீர்கள் தலைவர் பொட்டு அண்ணா ஆகியோர் இறந்ததாக சொன்னவர்தான் கருணா.என் விசுவாசம் தலமைக்கே தலமை என்ன முடிவு எடுத்தாலும் அந்த முடிவு சரியாணதாகவே இருக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.