Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதானம், அதிரடி என சுப்மான் கில் காட்டிய கிளாசிக் 'மாயாஜாலம்'

சுப்மான் கில்

பட மூலாதாரம்,BCCI

41 நிமிடங்களுக்கு முன்னர்

தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்!

இத்தனை வீரர்கள் நன்றாக ஆடினால், யாரைத்தான் தொடக்க நிலையில் களமிறக்குவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டைச் சதம். ஒரு காலத்தில் இரட்டைச் சதம் அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டு வந்தது. இப்போது அது சாதாரணமாகிவிட்டது என்பதையே சுப்மான் கில்லின் அதிரடி காட்டியிருக்கிறது.

ரோகித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என பலரும் தடுமாறிய ஒரு போட்டியில் சுப்மன் கில்லின் நீடித்த ஆட்டம் வியந்து பார்க்கப்படுகிறது. 

நியூஸிலாந்து அணிக்கு எதிராக 208 ரன்களை அடித்த கில் அதற்காக 149 பந்துகளைச் சந்தித்தார். 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் ஆகியவை அவரது ரன் குவிப்பில் அடங்கும். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 349 ரன்களை எடுத்தது. இரட்டைச் சதம் அடிக்கப்பட்ட ஒருநாள் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட மிகக் குறைவான ஒட்டுமொத்த ஸ்கோர் இதுதான். அந்த அளவுக்கு மற்ற வீரர்களைவிட தனித்து நின்று ஆடியிருக்கிறார் சுப்மான் கில்.

 

சுப்மன் கில்லின் ஆட்டம் 360 டிகிரி ஆட்டம் என்று கூற முடியாது. ஆனால் எல்லா வகையான கிரிக்கெட் ஷாட்களையும் அவர் ஆடியதை ஆடுகளத்தில் பார்க்க முடிந்தது. புல் ஷாட்களும், கவர் டிரைவ்களும் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரரை நினைவூட்டக்கூடியவையாக இருந்தன. 

இரண்டு ஃபீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் துல்லியமாக பவுண்டரிக்கு அனுப்புவதில் அவரது ஆட்டம் நுட்பமாக இருந்தது. அவரது 19 பவுண்டரிகளில் பலவும் இப்படித்தான் வந்தன. ஃபேக்புட் பஞ்ச், ஆன் டிரைவ் போன்றவையும் அவரது ரன்குவிப்பின் அங்கங்கள்.

ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் 150 ரன்களை அடித்தவரும், 200 ரன்களை அடித்தவர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. ஜாம்பவான்கள் பலருக்கும் கிடைக்காத பெருமை இது. அதே போல் ஒரு நாள் போட்டியில் அதி வேகமாக 1000 ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும்  கில் படைத்திருக்கிறார். இதில் 4 ஆயிரம் ரன் முதல் 12 ஆயிரம் ரன் வரையிலான சாதனை விராட் கோலியிடம் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட ஆயிரம் ரன்களின் சாதனை சச்சின் டெண்டுல்கருடையது.

அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்திருக்கும் சுப்மன் கில் தனது இடத்தை உறுதி செய்து கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். 

சுப்மான் கில்

பட மூலாதாரம்,BCCI

நிதானம், பிறகு அதிரடி

டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். சுப்மான் கில்லும் ரோகித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார். மிகவும் நிதானமாகவும் நீடித்தும் இருந்தது இந்தக் கூட்டணி.

ஒப்பீட்டளவில் சுப்மான் கில் ரோஹித்தை விட மிகவும் மெதுவாகவே ஆடினார். பத்தாவது ஓவர் முடிவில் 30 பந்துகளைச் சந்தித்த அவர் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 

13-ஆவது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்த பிறகு கில்லின் ஆட்டம் மேலும் நிதானமானது. ஆனால் 14-ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள், 15-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள் என படிப்படியாக வேகமெடுத்தார் கில். அடுத்த ஓவரில் கோலி ஆட்டமிழக்க, கில் மீண்டும் நிதானத்தை கடைப்பிடித்தார்.

19-ஓவரில் ஒரு சிக்சர் அடித்து அதிரடியைத் தொடங்கிய கில், அதன் பிறகு பல ஆட்டக்காரர்கள் வந்து போனபோதும் தனது பிடியை தளர்த்தவில்லை. அவ்வப்போது பவுண்டரிகள், மோசமான பந்துகளை சிக்சர்கள் என விரட்டினார்.

30 ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 99 ரன்களைத் தொட்ட அவர் அடுத்த பந்திலேயே சதம் அடித்தார். அதற்கு அவருக்கு மொத்தம் 87 பந்துகள் தேவைப்பட்டன.

43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார். 48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார். 208 ரன்கள் அடித்த பிறகுதான் அவரை நியூஸிலாந்து வீரர்களால் வெளியேற்ற முடிந்தது.

https://www.bbc.com/tamil/articles/c72rk4ve1dxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணிக்கு 'மரண பயம்' காட்டிய தனி ஒருவன்

கிரிக்கெட்

பட மூலாதாரம்,SPORTZPICS

18 ஜனவரி 2023
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கிட்டத்தட்ட 350 ரன்கள் எடுத்துவிட்டோம், எதிரணியின் முதல் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டோம், இனி தோல்விக்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்த இந்திய அணி வீரர்களுக்கு மரண பயத்தைக் காட்டியிருக்கிறார் நியூஸிலாந்தின் கடைசி நிலை ஆட்டக்காரர்.

ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என இருந்த நிலையில், அதிரடியான ஃபார்மில் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் ஸ்ட்ரைக்கில் நின்றார். முதல் பந்தே சிக்ஸ் அடிக்க நியூசிலாந்து அணி வெற்றிக்கு அருகில் நெருங்கியது. 

இந்நிலையில் ஷர்துல் தாகூர் வீசிய இரண்டாவது பந்து வைட் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 5 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் மூன்றாவது பந்து யார்க்கராக போக, அதனை அடித்து ஆட முயன்ற மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவரது அதிரடியான ஆட்டம் முடிவுக்கு வந்ததோடு, நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவும் கலைந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. 

 

போட்டியில் என்ன நடந்தது?

அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்து வென்ற இந்தியா தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்தது. 

டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமான தொடக்கத்தை அளித்த இந்த இணை 60 ரன்களில் உடைந்தது. ரோஹித் ஷர்மா 34 ரன்களை எடுத்து வெளியேறினார். அதன்பிறகு விளையாட வந்த விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முறையே 8 மற்றும் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் முறையே 31 ரன்கள் மற்றும் 28 ரன்கள் அடித்தனர். இப்படி தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 100 ரன்கள் வரை நிதானமாக ஆடிக்கொண்டிருந்த அவர், அதன் பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி 349 என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவியது. 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,SPORTZPICS

350 என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்க முதலே தடுமாற தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மட்டும் 40 ரன்கள் அடிக்க மற்ற வீரர்களான சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது நியூசிலாந்து அணி.

அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என இந்திய ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏழாவது பேட்ஸ்மேனாக களத்திற்குள் நுழைந்தார் மைக்கேல் பிரேஸ்வெல். தொடக்கம் முதலே அவர் அதிரடியாக விளாச, நியூசிலாந்து அணியின் ரன்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தன. அதிரடியாக விளையாடிய அவர் நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி மெல்ல அழைத்துக்கொண்டு போனார். 

இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக சுப்மான் கில் அறிவிக்கப்பட்டார்.

சுப்மான்

பட மூலாதாரம்,BCCI

தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்!

இத்தனை வீரர்கள் நன்றாக ஆடினால், யாரைத்தான் தொடக்க நிலையில் களமிறக்குவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டைச் சதம். ஒரு காலத்தில் இரட்டைச் சதம் அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டு வந்தது. இப்போது அது சாதாரணமாகிவிட்டது என்பதையே சுப்மான் கில்லின் அதிரடி காட்டியிருக்கிறது.

ரோகித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என பலரும் தடுமாறிய ஒரு போட்டியில் சுப்மன் கில்லின் நீடித்த ஆட்டம் வியந்து பார்க்கப்படுகிறது. 

நியூஸிலாந்து அணிக்கு எதிராக 208 ரன்களை அடித்த கில் அதற்காக 149 பந்துகளைச் சந்தித்தார். 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் ஆகியவை அவரது ரன் குவிப்பில் அடங்கும்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி 349 ரன்களை எடுத்தது. இரட்டைச் சதம் அடிக்கப்பட்ட ஒருநாள் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட மிகக் குறைவான ஒட்டுமொத்த ஸ்கோர் இதுதான். அந்த அளவுக்கு மற்ற வீரர்களைவிட தனித்து நின்று ஆடியிருக்கிறார் சுப்மான் கில்.

சுப்மான்

பட மூலாதாரம்,BCCI

ஒப்பீட்டளவில் சுப்மான் கில் ரோஹித்தை விட மிகவும் மெதுவாகவே ஆடினார். பத்தாவது ஓவர் முடிவில் 30 பந்துகளைச் சந்தித்த அவர் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 

13-ஆவது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்த பிறகு கில்லின் ஆட்டம் மேலும் நிதானமானது. ஆனால் 14-ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள், 15-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள் என படிப்படியாக வேகமெடுத்தார் கில். அடுத்த ஓவரில் கோலி ஆட்டமிழக்க, கில் மீண்டும் நிதானத்தை கடைப்பிடித்தார்.

19-ஓவரில் ஒரு சிக்சர் அடித்து அதிரடியைத் தொடங்கிய கில், அதன் பிறகு பல ஆட்டக்காரர்கள் வந்து போனபோதும் தனது பிடியை தளர்த்தவில்லை. அவ்வப்போது பவுண்டரிகள், மோசமான பந்துகளை சிக்சர்கள் என விரட்டினார்.

30 ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 99 ரன்களைத் தொட்ட அவர் அடுத்த பந்திலேயே சதம் அடித்தார். அதற்கு அவருக்கு மொத்தம் 87 பந்துகள் தேவைப்பட்டன.43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார்.

48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார். 208 ரன்கள் அடித்த பிறகுதான் அவரை நியூஸிலாந்து வீரர்களால் வெளியேற்ற முடிந்தது.

https://www.bbc.com/tamil/articles/crgv1x4dnplo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் கில், ப்றேஸ்வெல் அசத்தல் ; இந்தியாவுக்கு பரபரப்பான வெற்றி

By DIGITAL DESK 5

19 JAN, 2023 | 09:14 AM
image

(என்.வீ.ஏ.)

ஹைதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை 12 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

ஷுப்மான் கில் இரட்டைச் சதம் குவித்து இந்தியாவை பலப்படுத்திய போதிலும் நியூஸிலாந்தின் மைக்கல் ப்றேஸ்வெல் சதம் குவித்து இந்தியாவுக்கு கடும் சவாலை தோற்றுவித்தார்.

1802_shubman_gill_ind_vs_nz__2_.jpg

23 வயதான ஷுப்மான் கில் மிகக் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் இரட்டைச் சதம் குவித்த வீரர் என்ற சாதனையையும் இந்தியா சார்பாக குறைந்த போட்டிகளில் 1,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் தனது 19ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தது. அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை தனி ஒருவராக கில் பெற்றார்.

ரோஹித் ஷர்மாவுடன் ஆரம்ப விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷுப்மான் கில், 5ஆவது விக்கெட் ஹார்திக் பாண்டியாவுடன் மேலும் 74 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 5ஆவது விக்கெட் இணைப்பாட்டமே இந்திய இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மிகத் திறமையாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 149 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களுடன் 208 ஓட்டங்களைக் குவித்தார்.

ரோஹித் ஷர்மா (34), சூரியகுமார் யாதவ் (31), ஹார்திக் பாண்டியா (28) ஆகியோரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற மற்றையவர்களாவர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் டெறில் மிச்செல் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹென்றி ஷிப்லி 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1802_michael_bracewell_nz_vs_ind__1_.jpg

350 ஓட்டங்கள் என்ற கடினமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

29ஆவது ஓவரில் நியூஸிலாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 131 ஓட்டங்களாக இருந்தது.

1802_michael_bracewell_nz_vs_ind__2_.jpg

ஆனால், மைக்கல் ப்றேஸ்வெல், அணித் தலைவர் டொம் லெதம் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

78 பந்துகளை எதிர்கொண்ட மைக்கல் ப்றேஸ்வெல் 12 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள் அடங்கலாக 140 ஓட்டங்களைக் குவித்து டிஆர்எஸ் முறையில் கடைசியாக ஆட்டமிழந்தார்.

தனது 17ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ப்றேஸ்வெல் குவித்த 2ஆவது சதம் இதுவாகும்.

டொம் லெதம் 57 ஓட்டங்களையும் ஃபின் அலன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷர்துல் தக்கூர் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/146155

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா- நியூசிலாந்து: ரோஹித் முடிவை நியாயப்படுத்திய பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் அசர வைக்கும் பந்துவீச்சுக்கு வரிசையாக விழும் நியூசிலாந்து விக்கெட்டுகள்

பட மூலாதாரம்,SPORTZPICS

6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. தொடரின் மூன்று போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதையடுத்து இரண்டாவது போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் தொடக்கத்தில், டாஸ் வென்றபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் செய்தார். ரோஹித் ஷர்மா டாஸ் வென்றபோது, அவருடைய முடிவு என்ன என்பதைக் கூறுவதற்கு நீண்ட நேரம் தயங்கினார்.

தலையில் கை வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவர், சில நொடிகள் கழித்தே பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகக் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

விக்கெட்டுகளை குவித்த இந்தியாவின் பந்து வீச்சு

தயக்கத்துடன் ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்தாலும், அவரது முடிவு சரியானதுதான் என்பதை தங்களின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்திய பந்துவீச்சாளர்கள் நிரூபித்தனர்.

 

முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, ஃபின் ஆலெனை வீழ்த்தினார். ஒரு ரன்கூட எடுக்காமல் இருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது.

இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ், மூன்று ரன்களை மட்டுமே கொடுத்தார். இப்படியாகத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து ஆறாவது ஓவரில் ஹென்ரி நிக்கோல்ஸ் விக்கெட்டை எடுத்தார்.

ஏழாவது ஓவரின் இறுதியில், எதிரணியின் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தபோது வெறும் 10 ரன்களோடு களத்தில் இருந்தது நியூசிலாந்து. அடுத்தடுத்து, 10, 11 என்று அடுத்தடுத்த ஓவர்களில், டேவான் கான்வே, டாம் லேதம் ஆகிய நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுகள் சரசரவென விழுந்தன.

 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மிகவும் மோசமான நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது. இதனால் 50 ரன்களை அந்த அணி தாண்டுவதே கடினமாக இருக்கும் என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.

 

முகமது ஷமி

பட மூலாதாரம்,BCCI

 
படக்குறிப்பு,

முகமது ஷமி

பெரும் சரிவில் இருந்து மீட்ட கடைசி நிலை ஆட்டக்காரர்கள்

11வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இரண்டு ஃபோர் அடித்த  கிளென் பிலிப்ஸ், கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 140 ரன்கள் குவித்த மைக்கேல் பிரேஸ்வெல் உடன்  சரிவின் பாதையில் இருந்த அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  

முகமது சமி  வீசிய 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் ஃபோருக்கு அனுப்பிய மைக்கேல் பிரேஸ்வெல், 3வதாக வீசப்பட்ட ஷார்ட் லெந்த் பந்தை அடிக்க முயற்சித்தபோது, பேட்டில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷானிடம் தஞ்சமடைந்தது. இதனால் 22 ரன்களுடன் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 56 ஆக இருந்தது. 

இதையடுத்து, கிளென் பிலிப்ஸ் உடன் மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்தார். இந்த அணி மேலும் விக்கெட் விழாத வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிடைத்த ஒருசில பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் அவர்கள் தவறவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. 47 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். 30வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் வீசிய ஃபுல் லெந்த் பந்தில் மிட்செல் சான்ட்னர் ஃபோல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கிளேன் பிலிப்ஸும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஆட்டக்காரர்களும் ஒற்றை இலக்க ரன்களின் வெளியேறினர்.

34.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்களை எடுத்தது.  இந்திய அணி தரப்பில் முகமது சமி மூன்று விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

 

தொடரை கைப்பற்றிய இந்திய அணி

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 47 பந்துகளில் 7 ஃபோர், 2 சிக்ஸர்களுடன் 50 அரை சதம் கடந்தார். எனினும் அடுத்த ஒரு ரன் எடுத்த நிலையில், ரோஹித் ஆட்டமிழந்தார். இறுதியில் 20.1 ஓவர் முடிவில் 111 ரன்கள் எடுத்து இந்திய அணி  வெற்றி பெற்றதோடு 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

https://www.bbc.com/tamil/articles/cle8753x3x1o

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையை தொட‌ர்ந்து நியுசிலாந்தும் ப‌டு தோல்வியை ச‌ந்திச்சு இருக்கு............🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்துக்கு மூன்று வகையில் இது மோசமான தோல்வி

நியூசிலாந்து

பட மூலாதாரம்,SPORTZPICS

21 ஜனவரி 2023

நியூஸிலாந்து கடந்த 20 ஆண்டுகளில் இப்படிப்பட்ட மோசமான முதல் 10 ஓவர்களை ஒரு நாள் போட்டியில் பார்த்திருக்கவில்லை. 

ஷமி, சிராஜ், ஹர்திக் என இந்தியப் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களை திணறடித்தனர்.

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவிடம் இழந்தது ஒருபுறம் என்றால் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்விகளுள் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.

9-ஆவது ஓவரில்தான் நியூஸிலாந்து அணி தனது முதல் பவுண்டரியை அடித்தது. முதல் பத்து ஓவர்களில் அடிக்கப்பட்ட ஒரேயொரு பவுண்டரி அதுதான்.

 

முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஒருநாள் போட்டி ஒன்றில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.  கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படும் நியூஸிலாந்துக்கு இது பெருங்கறையாக அமைந்திருக்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 11 ரன்களையே எடுத்திருக்கின்றனர். ஆறாவது ஏழாவது விக்கெட்டுகளில் ஆடியவர்கள் ரன்களை எடுக்கத் தவறியிருந்தால் நியூசிலாந்து அணி இன்னும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்.

15 ரன்களை எடுப்பதற்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்ததும் நியூசிலாந்தின் மோசமான புள்ளி விவரங்களுள் முதன்மையானது. இதற்கு முன் முதல் 5 விக்கெட்டுக்கு 18 ரன்களை எடுத்ததுதான் அந்த அணிக்கு மோசமான ரன் சேகரிப்பாக இருந்தது. இன்று அதையும் விடக் குறைவான ரன்களுக்கு முதல் 5 வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர்.

நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து எடுத்த 108 ரன்களை இந்திய அணி 179 பந்துகள் மீதமிருக்கையில் 21-ஆவது ஓவரிலேயே கடந்துவிட்டது. 

தாம் ஆடிய கடந்த 10 ஒருநாள் போட்டிகளிலும் பவர் பிளேயில் விக்கெட்டை எடுத்து சாதனை படைத்திருக்கிறார் முகமது சிராஜ். தற்காலத்தில் முக்கியமான பந்துவீச்சாளர்களுக்கும் கிடைக்காத பெருமை இது.

நியூசிலாந்து

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்தியாவின் பந்துவீச்சு எப்படி இருந்தது?

முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, ஃபின் ஆலெனை வீழ்த்தினார். ஒரு ரன்கூட எடுக்காமல் இருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது.

இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ், மூன்று ரன்களை மட்டுமே கொடுத்தார். இப்படியாகத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து ஆறாவது ஓவரில் ஹென்ரி நிக்கோல்ஸ் விக்கெட்டை எடுத்தார்.

ஏழாவது ஓவரின் இறுதியில், எதிரணியின் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தபோது வெறும் 10 ரன்களோடு களத்தில் இருந்தது நியூசிலாந்து. அடுத்தடுத்து, 10, 11 என்று அடுத்தடுத்த ஓவர்களில், டேவான் கான்வே, டாம் லேதம் ஆகிய நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுகள் சரசரவென விழுந்தன.

 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மிகவும் மோசமான நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது. இதனால் 50 ரன்களை அந்த அணி தாண்டுவதே கடினமாக இருக்கும் என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.

11வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இரண்டு ஃபோர் அடித்த  கிளென் பிலிப்ஸ், கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 140 ரன்கள் குவித்த மைக்கேல் பிரேஸ்வெல் உடன்  சரிவின் பாதையில் இருந்த அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  

முகமது சமி  வீசிய 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் ஃபோருக்கு அனுப்பிய மைக்கேல் பிரேஸ்வெல், 3வதாக வீசப்பட்ட ஷார்ட் லெந்த் பந்தை அடிக்க முயற்சித்தபோது, பேட்டில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷானிடம் தஞ்சமடைந்தது. இதனால் 22 ரன்களுடன் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 56 ஆக இருந்தது. 

 

நியூசிலாந்து

பட மூலாதாரம்,SPORTZPICS

இதையடுத்து, கிளென் பிலிப்ஸ் உடன் மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்தார். இந்த அணி மேலும் விக்கெட் விழாத வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிடைத்த ஒருசில பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் அவர்கள் தவறவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. 47 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். 30வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் வீசிய ஃபுல் லெந்த் பந்தில் மிட்செல் சான்ட்னர் ஃபோல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கிளேன் பிலிப்ஸும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஆட்டக்காரர்களும் ஒற்றை இலக்க ரன்களின் வெளியேறினர்.

34.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்களை எடுத்தது.  இந்திய அணி தரப்பில் முகமது சமி மூன்று விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.bbc.com/tamil/articles/cd1xky4ygnxo

  • கருத்துக்கள உறவுகள்

கில்லின் ஆட்டம் பிரமிக்க வைத்தது. அவரால் தான் (200 க்கு மேலான ஓட்டங்கள்) இந்தியா வெல்ல முடிந்தது.

மாமாவை முந்துவாரா?🙂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு நாள் உலக கோப்பை இந்தியாவிற்குதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்த ஒரு நாள் உலக கோப்பை இந்தியாவிற்குதான்.

அவ‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் 
அவ‌ங்க‌ள் தான் கோப்பை தூக்குவாங்க‌ள் போல் தெரியுது
இந்தியா ம‌ண்ணில் இங்லாந் வீர‌ர்க‌ளும் ந‌ல்லா விளையாட‌க் கூடிய‌வ‌ர்க‌ள்

இந்த‌ உல‌க‌ கோப்பையையும் இந்தியா தோத்தா ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம்
ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் 12 வ‌ருட‌மாய் உல‌க‌ கோப்பை தூக்காம‌ இருப்ப‌து இந்திய‌ அணிக்கு வெக்க‌க் கேடாய் பார்க்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

அவ‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் 
அவ‌ங்க‌ள் தான் கோப்பை தூக்குவாங்க‌ள் போல் தெரியுது
இந்தியா ம‌ண்ணில் இங்லாந் வீர‌ர்க‌ளும் ந‌ல்லா விளையாட‌க் கூடிய‌வ‌ர்க‌ள்

இந்த‌ உல‌க‌ கோப்பையையும் இந்தியா தோத்தா ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம்
ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் 12 வ‌ருட‌மாய் உல‌க‌ கோப்பை தூக்காம‌ இருப்ப‌து இந்திய‌ அணிக்கு வெக்க‌க் கேடாய் பார்க்கிறேன் 

அவுஸ்ரேலிய அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு வந்து இந்தியாவிடம் அடிவாங்க தயாராகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதம் அடித்து ரசிகர்களின் தாகம் தணித்த 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா - சிறப்பு என்ன?

ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏறத்தாழ 1100 நாட்களுக்குப் பிறகு சதத்தை தேடிய பயணத்தில் தனது தீராத தாகத்தை தணித்துக்கொண்டார் ரோஹித் சர்மா. விராட் கோலியைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் ரோஹித். நடப்பாண்டில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இது இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்திருக்கிறது.

விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலளித்த ‘ஹிட் மேன்’

“ரோஹித் சர்மா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ரோஹித் சதம் அடித்து பல நாள் ஆகிறது. ரோஹித் கேப்டன் ஷிப்புக்கு தகுதியற்றவர். ரோஹித் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்” இப்படி அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு இன்று தனது பேட்டிங்கால் பதில் அளித்திருக்கிறார் 'ஹிட் மேன்'.

இந்தூரில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித், 83 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 30வது சதம்.

தனது ஆட்டப்பாணி குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, தன்னிடம் இருந்து பெரியளவில் ரன் வருவதில்லை என்பது தனக்குத் தெரியும் என்றும் பெரிதாக கவலைப்படாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருவதாகவும் அண்மையில் பகிரங்கமாக கூறியிருந்தார் ரோஹித். விரைவாகவே பெரிய ரன்கள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

 
ரோஹித்

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

டி20 உலகக்கோப்பையில் ரோஹித்தின் பேட்டிங் ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடாமல்போனதும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. எதிர்வரும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரோஹித்திற்கு பலப்பரிசையாக இருக்கக்கூடும் என கருதப்பட்ட நிலையில், 3 ஆண்டுகள் கழித்து சதம் அடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன்பு ரோஹித் வைட் பால் (White ball) கிரிக்கெட்டில் சதம் விளாசியது ஜனவரி 2020ல்தான். பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 119 ரன்கள் குவித்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ரோஹித்துக்கு குரல் கொடுத்த டிராவிட்

அண்மைக்காலமாக ரோஹித்தின் ஆட்டம் விவாதத்தை கிளப்பிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, அவருக்காக ஆதரவு அளித்து பேசியிருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

“ரோஹித் ஷர்மாவை 17 அல்லது 18 வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் அவர் ஆடியபோது கவனித்திருக்கிறேன். எல்லா இளைஞர்களும் சிறுவயதில் ஆடியது போன்றே தங்களது திறமைகளை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் சாதிப்பார்கள் என சொல்ல முடியாது. ஆனால் ரோஹித் அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு மகத்தான சேவையை புரிந்திருக்கிறார்” என ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டினார்.

“நீங்கள் வேகமாக ஷார்ட் பால் போட்டாலும் சரி, பந்தை ஸ்விங் செய்தாலும் சரி, ஸ்பின் போட்டாலும் சரி எதையும் துணிச்சலாக எதிர்கொள்பவர் ரோஹித் ஷர்மா. அவர் அற்புதமான ஆட்டக்காரர். அவருக்கே உரிய பாணியில் ஆடுவதை பார்க்க சிறப்பாக இருக்கும்” என கூறியிருந்தார் டிராவிட்.

இளம் வீரர்களின் நெருக்கடியை போக்கும் ரோஹித்

ரோஹித்

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

ரோஹித் சமீப காலமாக தடுமாறினாலும், ஒருநாள் ஆட்டத்தை அவர் எதிர்கொள்ளும் விதமே தனி. 50 ஓவர்கள் முழுமைக்கும் ஆட முயற்சிப்பார். தொடக்கத்தில் நிதானம் காட்டுவார். போகப் போகப் அதிரடிகளை கட்டவிழ்ப்பார். இந்த யுத்திதான் அவருக்கு 3 இரட்டைச் சதங்களை குவிக்க உதவியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்த ஒரு தனி நபரும் 2 முறைகூட இரட்டைச் சதம் விளாசியது கிடையாது. அண்மையில் இஷான் கிஷன், சுப்மன் கில் தங்களது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தனர். இளம் வீரர்கள் இரட்டைச் சதம் விளாசிய பெருமையில் ரோஹித்திற்கும் சிறிதளவு பங்குண்டு என்கின்றது ஈ.எஸ்.பி.என். இணையதளம்.

ரோஹித் தனது பழைய பாணியை விட்டுவிட்டு புதிய கோணத்தில் ஆட்டத்தை அணுகுகிறார். தொடக்கம் முதலே ரன் குவிப்பில் கவனம் செலுத்துகிறார். இது அவருடன் இணைந்து ஆடும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரருக்கு நெருக்கடியற்ற சூழலை உருவாக்கித் தருகிறது. தன்னோடு ஆடுபவர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த ரோஹித் ஒத்துழைக்கிறார். ஆனால் சில சமயங்களில் அது அவரது விக்கெட்டையும் இழக்கச் செய்கிறது என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

இதுதவிர, அண்மைக் காலமாக ஒருநாள் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் முத்திரை பதித்து வரும் நிலையில், ரோஹித் ஷர்மா தற்போது அதிரடியான சதம் மூலம் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/ckdj4ql8728o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தை வீழ்த்தி கிரிக்கெட்டில் மீண்டும் உச்சத்தை எட்டிய இந்தியா

BCCI/ Sportzpics

பட மூலாதாரம்,BCCI/ SPORTZPICS

24 ஜனவரி 2023

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3-0 என்ற கணக்கில் தொடரையும் ஒட்டுமொத்தமாக வென்றிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. 

கேப்டன் ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் நியூஸிலாந்தின் பந்துவீச்சாளர்களைத் திணறவைத்து அடித்த சதத்தால் இந்திய அணி 385 என்ற பெரிய ரன்குவிப்பை செய்ய முடிந்தது.

ரோஹித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் அடித்தார்கள். 

 

முதலில் பேட் செய்த இந்திய அணி அடுத்தடுத்து அடிக்கும் மிகப் பிரமாண்டமான ஸ்கோர்.

ஏறுமுகத்தில் இந்திய ரன் ரேட்

BCCI/ Sportzpics

பட மூலாதாரம்,BCCI/ SPORTZPICS

இந்திய அணி முதலில் பேட் செய்த கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் முறைய 409, 373, 390, 349, 385 என பெரிய அளவில் ரன்களைக் குவித்திருக்கிறது. 

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் அந்த முடிவு தவறு என்பதை முதல் பத்து ஓவர்களிலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், சுப்மான் கில்லும் நிரூபித்து விட்டார்கள்.

அவ்வப்போது 4 ரன்களும், 6 ரன்களும் அடித்து நிதானமாகவும் நீடித்தும் ரன்குவித்த அவர்கள், ஆறாவது ஓவரைத் தவிர பெரிதாக எந்த ஓவரிலும் ரன்களை எடுக்கச் சிரமப்படவில்லை. குறப்பாக 8-ஆவது ஓவரில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்சரையும் அடித்தார் சுப்மான் கில்.

அதேபோல் 10-ஆவது ஓவரில் இரண்டு சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் ரோஹித் சர்மா அடித்தார். 10-ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை எடுத்திருந்தது. 12-ஆவது ஓவரில் சுப்மன் கில் அரைச் சதத்தைக் கடந்தார். 14-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்சர் அடித்து 50 ரன்களைக் கடந்தார்.

20-ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 165 ரன்களை எடுத்திருந்தது. சுப்மான் கில் 77 ரன்களும், ரோஹித் சர்மா 80 ரன்களையும் அடித்திருந்தனர். அவர்களது ரன் குவிப்பு வேகம் ஓரளவு சரிசமமாகவே இருந்தது. எனினும் ரோஹித் சர்மா அதிகப் பந்துகளை எடுத்துக் கொண்டார்.

BCCI/ Sportzpics

பட மூலாதாரம்,BCCI/ SPORTZPICS

26-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 83 பந்துகளில் சதம் அடித்தார். இரு பந்துகளுக்குப் பிறகு பவுண்டரி அடுத்து சுப்மான் கில்லும் சதத்தை கடந்தார். அவர் எடுத்துக் கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 72.

ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஆடவந்த கோலி தான் சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்சருக்கு விரட்டு ரன்குவிப்பை அதிரடியாகத் தொடங்கினார். ஆனால் மறு முனையில் சதமடித்திருந்த சுப்மான கில் 112 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்னரின் பந்துவீச்சில் கான்வேயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி-இஷான் இணை ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மோசமான ரன் எடுக்கும் முயற்சியில் இஷான் ஆட்டமிழந்தார். 36 ரன்களை எடுத்திருந்தபோது கோலியுடம் ஆட்டமிழந்தார். 360 டிகிரி ஆட்டக்காரர் என்று புகழப்படும் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் வெளியேறினார்.

43-ஆவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தபோது, மறு முனையில் ஹர்திக் பாண்ட்யா நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். 44-ஆவது ஓவரில் 2 ரன்களையும், 45-ஆவது ஓவரில் 4 ரன்களையும் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. 

BCCI/ Sportzpics

பட மூலாதாரம்,BCCI/ SPORTZPICS

45-ஆவது ஓவருக்குப் பிறகு ரன்குவிப்பு வேகமெடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழுந்தன. 49-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 50-ஓவர் முடிவில் இந்திய அணி 385 ரன்களை எடுத்தது. 

ஒரு கட்டத்தில் நானூறு ரன்களுக்கு மேல் இந்தியா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 212 ரன்களை எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. 294 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது 11 ஓவர்கள் மீதமிருந்தன. ஆனால் அதன் பிறகும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கும் வகையில் யாரும் ஆடவில்லை.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்த்திக்கின் இரண்டாவது பந்தில் ஃபின் ஆலன் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஆனால் அதன் பிறகு நிகோலஸும் கான்வேயும் விக்கெட்டைக் காப்பாற்றி ஆடத் தொடங்கினார்கள். 

BCCI/ Sportzpics

பட மூலாதாரம்,BCCI/ SPORTZPICS

15-ஆவது ஓவர் வரை ஆடிய நிகோல்ஸ் 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் கான்வே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் 26-ஆவது ஓவரில் ஷ்ரத்துல் தாக்குர் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார். மிட்செல், லேதம் ஆகிய இருவரும் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன் பிறகு அந்த அணி தடுமாறத் தொடங்கியது.

கடைசியில் 42-ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 295 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கான்வே 138 ரன்களை எடுத்திருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை ஒட்டுமொத்தமாக வென்றிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cpw17w7q03yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷுப்மான் கில்  சாதனைகள்… !

1-8.jpg

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள்கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் ஷுப்மான் கில்  இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஷுப்மான் கில்  149 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ஆட்டமிழந்தார்.

208 ரன்கள் விளாசிய ஷுப்மான் கில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைசதம் விளாசிய 8ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்தியஅணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது ஆட்டம் வரும் 21ஆம் திகதி நடைபெறுகிறது.

2-7.jpg

விரைவான 1,000: நியூஸிலாந்துக்கு எதிரான ஹைதராபாத் போட்டியில் ஷுப்மான் கில் 106 ரன்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 19 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் தலா 24 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர். இந்த சாதனையை தற்போது ஷுப்மான் கில் முறியடித்துள்ளார்.

இளம் வீரர்…: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மான் கில். அவர், 23 வயது 132 நாட்களில் இரட்டை சதத்தை அடித்துள்ளார். இந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் இஷான் கிஷன் 24 வயது 145 நாட்களில் இரட்டை சதம் விளாசியிருந்தார்.

சச்சினை முந்தினார்: ஹைதராபாத் மைதானத்தில் இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன்கள் குவித்ததே தனிநபரின் சிறந்த ரன்குவிப்பாக இருந்தது. இதை தற்போது 208 ரன்கள் விளாசி காலி செய்துள்ளார் ஷுப்மான் கில்.

4 நாட்களில் இரு சதம்… இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஷுப்மான் கில் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தி உள்ளார்.

3-7-1024x668.jpg

2,000: உலக அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக ஆயிரம் ரன்களை குவித்த வீரர்களில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்குடன் 2ஆ வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் இந்தியாவின் ஷுப்மான் கில். இந்த வகை சாதனையில் பாகிஸ்தானின் பஹர் ஸமான் 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

அதிகபட்ச ரன்: நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷுப்மான் கில் 208 ரன்கள் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இது அவரது அதிகபட்ச ரன்குவிப்பாக அமைந்தது. இதற்கு முன்னர் 2022ஆம் ஒகஸ்ட் 8ஆம் திகதி சிம்பாவேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 130 ரன்கள் சேர்த்ததே ஷுப்மான் கில்லின் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

நியூஸி.க்கு எதிராக வேட்டை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மான் கில் (208 ரன்கள்). இதற்கு முன்னர் சச்சின் 186, மேத்யூ ஹைடன் 181 ரன்களை நியூஸிலாந்துக்கு எதிராக விளாசியிருந்தனர்.

தப்பித்த ஷுப்மான் கில்: ஷுப்மான் கில் 124 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ஹென்றி சிப்லி தவறவிட்டார். இந்த வாய்ப்பை ஷுப்மான் கில் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

4-7.jpg

https://thinakkural.lk/article/234566

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ரில் அடைந்த‌ ப‌டு தோல்வியால்

20ஓவ‌ர் முத‌லாவ‌து போட்டியில் வென்று விட்டார்க‌ள்

இனி வ‌ரும் போட்டியிலும் வென்றால் தொட‌ர‌ வெல்லுவின‌ம்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை தோற்கடித்த ‘பவர் பிளே திகில்’

இந்திய அணி

பட மூலாதாரம்,SPORTZPICS/BCCI

27 ஜனவரி 2023

360 டிகிரி ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் ஒரு ஓவர் முழுவதும் கிரீஸில் நின்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றால் நம்பமுடியவில்லை அல்லவா. இப்படி நம்ப முடியாத பலவும் நடந்தது நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய முதலாவது டி20 போட்டியில்.

சூர்யகுமார் யாதவ் அப்படி நின்றது பவர்பிளேயின் கடைசி ஓவரில். சான்ட்னர் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி மாயாஜாலங்கள் எதையும் நிகழ்த்த முடியவில்லை.

ஆனால் அவரது பொறுமையையும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் 177 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 15 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அளவுக்கு பவர் பிளேயில் மோசமாக ஆடினார்கள் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்.

சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் ஓரளவு ரன்களைக் குவிக்க முயன்றாலும் அது நியூசிலாந்தை வீழ்த்தப் போதுமானதாக இல்லை. சூர்யகுமார் யாதவும் 47 ரன்களிலும் ஹர்திக் 21 ரன்களிலும் வெளியேறியபிறகு, இந்திய அணியின் தடுமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

 

வாஷிங்டன் சுந்தரைத் தவிர வேறு யாரும் நீடித்து நிற்கவில்லை. 

இதைவிடவும் மோசமான ஒன்று இந்திய அணி பந்துவீசிய கடைசி ஓவரில் நடந்தது. அந்த ஓவரின் முதல் பந்து நோபாலாக வீச, அதில் மிட்சல் சிக்சர் அடித்தார். அதற்காகக் கொடுக்கப் பட்ட ப்ரீ ஹிட்டிலும் மிட்சல் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் சிக்சரானது. அதற்கடுத்த பந்தில் பவுண்டரியை விளாசினார் மிட்சல் . கடைசி ஓவரில் மட்டும் அர்ஷ்தீப் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 176 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. 

இந்த ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கவும் வாய்ப்பிருந்ததாகவே கருதலாம். ஏனென்றால் கடைசி ஓவர் வரை நின்று அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி 150 ரன்களைக் கடக்க உதவினார். ஆனால் அது வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. 

இறுதியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் என்ன நடந்தது?

பிசிசிஐ

பட மூலாதாரம்,BCCI/ SPORTZPICS

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண அவர் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இரவு நேரம் செல்லச் செல்ல பனித்துளிகள் பட்டு களம் ஈரமாகிவிடும் என்பதால்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார். 

ஆனால் முதல் ஓவரிலேயே ஹர்திக்கின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அதிரடியாக பேட்டிங்கை தொடங்கினார் நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரரான ஆலன். இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப்பின் பந்துவீச்சையும் அவர் விட்டுவைக்கவில்லை. நான்காவது ஓவரிலும் ஐந்தாவது ஓவரிலும் சிக்சர் அடித்த ஆலனின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். 

5-ஆவது ஓவரின் ஆறாவது பந்தை மார்க் சாப்மனுக்கு வீசினார் சுந்தர்.  ஸ்ட்ரைட் திசையில் தனக்கு வலக்கைப் பக்கமாக வந்த பந்தை பாய்ந்து சென்று ஒருகையால் பிடித்து சாப்மனை வெளியேற்றினார். பார்ப்பதற்கு ஏதோ மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டைப் போன்றே தோன்றியது. முதலில் கள நடுவர் ஆட்டமிழந்ததாகக் கூறினாலும், மூன்றாம் நடுவரின் ஆய்வுக்குப் பிறகே அது அவுட் எனத் தீர்மானிக்கப்பட்டது. 

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரரான கான்வே மறுமுனையில் கணிசமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.

10 ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை எடுத்திருந்தது. 

 

BCCI

பட மூலாதாரம்,BCCI/SPORTZPICS

18-ஆவது ஓவரில் அரைச் சதம் அடித்திருந்த கான்வே அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளுக்குப் பிறகு அதிரடி ஆட்டக்காரரான பிரேஸ்வெல்லும் ரன் அவுட் ஆனார். 

19-ஆவது ஓவர் வரை இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு கட்டுப்பாடாகவே இருந்தது. ஆனால் 20-ஆவது ஓவரில் அது முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. ஏற்கெனவே டி20 போட்டிகளில் நோபால்கள் அதிகம் வீசப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியின் கடைசி ஓவரிலும் ஒரே பந்தில் 13 ரன்களைக் கொடுக்கும்படியாகிவிட்டது. 

அந்த ஓவரின் முதல் பந்து நோபாலாக வீச, அதில் மிட்சல் சிக்சர் அடித்தார். அதற்காகக் கொடுக்கப் பட்ட ப்ரீ ஹிட்டிலும் மிட்சல் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் சிக்சரானது. அதற்கடுத்த பந்தில் பவுண்டரியை விளாசினார் மிட்சல் . கடைசி ஓவரில் மட்டும் அர்ஷ்தீப் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 176 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. 

 

பிசிசிஐ

பட மூலாதாரம்,BCCI/SPORTZPICS

பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறத் தொடங்கியது. இரண்டாவது ஓவரிலேயே பிரேஸ்வெல்லின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான் இஷான் கிஷன். அதன் பிறகு பந்த ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல்  டஃப்பியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சுப்மான் கில்லும் ஆட்டமிழந்தார். இந்திய அணி 15 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே முதல் 3 விக்கெட்டை இழந்துவிட்டது. 

பின்னர் சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் சற்று நீடித்து ஆடினார்கள். 

விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்ததால் ஆறாவது ஓவரில்  பொறுமையாக ஆடிய சூர்யகுமார் ஆறு பந்துகளிலும் ரன் ஏதும் எடுக்கவில்லை. 

இவ்விருவரும் ஆட்டமிழந்தபிறகு இந்திய அணியின் வெற்றி மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது. கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டமும் வெற்றியைப் பெறுவதற்குப் போதுமானதாக இல்லை.

https://www.bbc.com/tamil/articles/c72wpr287r1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு அடிகோலின 

By NANTHINI

28 JAN, 2023 | 11:53 AM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டிய இந்தியா, சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவியது.

ரஞ்சி ஜே.எஸ்.சீ.ஏ. சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 21 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிகொண்டது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

2701_devon_convey_nz_vs_ind.jpg

அதிரடி ஆட்டக்காரர்களான டெவன் கொன்வே, டெறில் மிச்செல் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள், மிச்செல் சென்ட்னர், மிச்செல் ப்றேஸ்வெல், லொக்கி பெர்குசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன நியூஸிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இந்தியாவின் முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்க தவறியதை தொடர்ந்து சூரியகுமார் யாதவ், வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அணியின் வெற்றிக்காக எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போயின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து, 176 ஓட்டங்களை குவித்தது.

அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் டெறில் மிச்செல் 3 சிக்ஸ்கள் உட்பட 26 ஓட்டங்களை குவித்ததுடன் நோ போல் மூலம் உதிரி ஒன்றும் கிடைத்தது. அதுவே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

பின் அலன் (37), டெவன் கொன்வே ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி, 28 பந்துகளில் 43 ஓட்டங்களை பகிர்ந்து, சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அலென், மார்க் செப்மன் (0) ஆகிய இருவரும் ஒரே ஓவரில் அதே எண்ணிக்கையில் ஆட்டமிழந்தனர்.

எனினும், டெவன் கொன்வே (17), க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 60 ஓட்டங்களை பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.

2701_nz_celebrates_vs_ind.jpg

டெவன் கொன்வே 35 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மேலும் இருவர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

மறுபக்கத்தில் டெறில் மிச்செல் 30 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 3 பவண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை குவித்தார்.

இந்திய பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து, 155 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.

ஹார்திக் பாண்டியாவின் தலைமையிலான இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 

ஷுப்மான் கில் (7), இஷான் கிஷான் (4), ராகுல் த்ரிபதி (0) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை வெறும் 15 ஓட்டங்களாக இருந்தது.

சூரியகுமார் யாதவ் (47), ஹார்திக் பாண்டியா (21) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களை பகிர்ந்தபோதிலும், ஓட்ட வேகம் போதுமானதாக இருக்கவில்லை.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் இந்திய வீரர்களை நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் இலகுவாக ஆட்டமிழக்கச் செய்தனர்.

வொஷிங்டன் சுந்தர் மிக திறமையாக துடுப்பெடுத்தாடி, 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களை பெற்றார்.

நியூஸிலாந்து களத்தடுப்பாளர்கள் 3 இலகுவான பிடிகளை தவறவிட்டதால், இந்தியா படுதோல்வியிலிருந்து தப்பித்துக்கொண்டது.

நியூஸிலாந்து பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் ப்றேஸ்வெல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/146890

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

360 டிகிரி ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் ஒரு ஓவர் முழுவதும் கிரீஸில் நின்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றால் நம்பமுடியவில்லை அல்லவா. இப்படி நம்ப முடியாத பலவும் நடந்தது நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய முதலாவது டி20 போட்டியில்.

 

India vs New Zealand: SKY-க்கே மெய்டன் ஓவர் வீசிய பவுலர். இந்தியாவின் தோல்விக்கு இதுதான் Reason

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்னோவில் மிரட்டிய பந்துவீச்சாளர்கள்; தட்டுத்தடுமாறி 100 ரன்களை எடுத்த இந்திய அணி

sportzpics

பட மூலாதாரம்,SPORTZPICS

29 ஜனவரி 2023

நூறு ரன்கள் எடுக்க வேண்டிய டி20 போட்டியில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்று இந்திய அணி வெற்றி பெற்றது.

லக்னௌ நகரில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடினார்கள்.

ஒரு வழியாக கடைசிக்கு முந்தைய பந்தில் சூர்யகுமார் யாதவ், பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.

 

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேட் செய்யத் தீர்மானித்தார். அவர்களது அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

நிதானமாக ஆடத் தொடங்கிய அந்த அணியின் கான்வே மற்றும் ஆலன் ஆகியோர் கணிசமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தபோது 4-ஆவது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் ஆலன் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சுந்தரின் பந்துவீச்சில் கான்வே ஆட்டமிழந்தார்.

7-ஆவது ஓவரில் மற்றொரு முன்னணி வீரரான பிலிப்ஸும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதன் பிறகு அந்த அணியின் ரன்குவிக்கும் வேகம் வீழ்ச்சியடைந்தது.

அடுத்தடுத்த இடைவெளிகளில் அந்த அணியின் வீரர்கள் வெளியேறினர். கடந்த போட்டியில் விமர்சனத்துக்கு உள்ளான அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் அவர் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி 99 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றது.

sportzpics

பட மூலாதாரம்,SPORTZPICS

சூர்யகுமார் யாதவும் ஹத்திக் பாண்ட்யாவும் கடைசிவரை களத்தின் நின்றனர். 

இருவரும் பந்துக்கு ஒரு ரன் என்ற அளவுக்குக் கூட ரன்களை எடுக்கவில்லை. கடைசி ஓவரில் ஆறு பந்துக்கு ஆறுரன் எடுக்கவேண்டும் என்ற நிலையில், ஹர்திக், சூர்யகுமார் ஆகியோரின் பவுண்டரி அடிக்கும் முயற்சிகளை கைகூடவில்லை

இறுதியில் இரண்டு பந்து மீதமிருந்தபோது சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். 

ஹர்திக் 20 பந்துகளில் 15 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்திருந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c9e4ez2300go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

By DIGITAL DESK 5

30 JAN, 2023 | 01:43 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக பந்துகள் விளையாடி ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி அமைந்தது.

இதற்கு முன்னர், நியூஸிலாந்து-  பங்களாதேஷ் அணிகளுக்கிடையில்  2021 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 238 பந்துகள் விளையாடி ஒரு சிக்கஸர்கூட  விட்டுக்கொடுக்கப்பாடாதமையே முன்னைய பதிவாக இருந்தது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற (29) போட்டியில்  இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரண்டு அணிகளு மே ஒரு சிக்ஸரைக் கூட அடிக்காதமை கிரிக்கெட் ரசிகர்கள்  பலரையும்  வியப்பில் ஆழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நியூஸிலாந்து 6 பவுண்டரிகளை மாத்திரமே அடித்திருந்தது. 

99 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா இலகுவாக எடுத்து வெற்றியீட்டும் என பலரும் எண்ணியிருந்தபோதிலும்,  ‍வெற்றி இலக்கை 19.5 ஓவர்களிலேயே எட்டியிருந்தது. இதன்படி இந்தியா 4 விக்கெட்டுக்களை இழந்து 101 பெற்று 6 விக்கெட்டுக்களால் இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் சமப்படுத்தியுள்ளது. இந்தியா சார்பில் 8 பவுண்டரிகள் அடிக்கப்பட்டபோதிலும், ஒரு சிக்ஸர்கூட விளாசப்படவில்லை.

இப்போட்டியில் ஆடுகளத்தன்மையானது, பந்துவீச்சுக்கு சாதமாக இருந்தது. குறிப்பாக சுழற் பந்துவீச்சுக்கு அதிக சாதக தன்மை வாய்ந்ததாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்போட்டியில் மொத்தமாக  வீசப்பட்ட 39.5 ஓவர்களில் 30 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தமை கவனிக்கத்தக்க அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/147020

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ ப‌டியால் தான் நியுசிலாந் நேற்று தோல்விய‌ ச‌ந்திச்ச‌து

ஆர‌ம்ப‌த்தில் கொங் கொங் அணிக்காக‌ விளையாடின‌ Mark Chapman இப்போது நியுசிலாந் அணிக்கு விளையாடுகிறார்

இவ‌ரை விட‌ நியுசிலாந் அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு

தொட‌ர்ந்து சுத‌ப்பும் இவ‌ருக்கு வாய்ப்பு கொடுப்ப‌து அணிக்கு தான் பின்ன‌டைவு....................... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேட்ஸ்மேன்களை திணறடித்த லக்னெள ஆடுகளம் டி20 போட்டிகளுக்கு உகந்ததா?

டி20 கிரிக்கெட் - லக்னெள ஆடுகள சர்ச்சை

பட மூலாதாரம்,SPORTZPICS

30 ஜனவரி 2023

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலிரு இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்ற ராஞ்சி மற்றும் லக்னெள ஆடுகளங்கள் டி20 போட்டிக்கு உகந்தவையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, லக்னெள மைதானத்தில் சுழன்று எகிறிய பந்துகளை கணிக்க முடியாமல் இந்திய, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. 

 

இந்த போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. மொத்தம் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசினார்கள்.  இதுவரை இந்த அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வேறு எந்த டி20 போட்டியிலும் பந்து வீசியதில்லை.

இரண்டு அணிகளுமே நூறு ரன்களை அடிப்பதற்குள்ளாக திணறிப் போய்விட்டன. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா போன்ற இந்தியாவின் அதிரடியான பேட்ஸ்மேன்கள்கூட ஒன்றும் இரண்டுமாக ரன்களைச் சேர்க்க வேண்டியிருந்தது. 

 

 

20 ஓவர்கள் வரை ஆடி 99 ரன்களை மட்டுமே நியூஸிலாந்து அணியால் சேர்க்க முடிந்தது. அந்த ரன்களை அடிப்பதற்கு இந்திய அணி கடைசி ஓவரின் 5-ஆவது பந்து வரை ஆட வேண்டியிருந்தது. இத்தனைக்கும் சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் களத்தில் இருந்தார்கள்.

வழக்கமாக அதிரடி காட்டும் சூர்யகுமார், கேப்டன் ஹர்திக் ஆகிய இருவரும் கூட சூழலை புரிந்து கொண்டு அடக்கியே வாசித்தனர். சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 26 ரன்களையும், கேப்டன் ஹர்திக் 20 பந்துகளில் 15 ரன்களும்,  மட்டுமே எடுத்திருந்தனர்.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து சார்பில் யாரும் 20 ரன்களுக்கு மேலாக எடுக்கவில்லை. அதேபோல் இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் எடுத்த 26 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர்.

 

பிட்ச் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இரு அணிகளுமே வியக்கும் வகையில் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்தன. வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கின.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இந்தியா சார்பில் 7 பேர் பந்துவீசினார்கள். அதில் சிலர் ஒரு ஓவர், இரண்டு ஓவர்களை மட்டும் வீசிச் சென்றார்கள்.  நியூஸிலாந்து அணி இன்னும் ஒருபடி மேலே போய் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. விக்கெட் கீப்பராக இருந்து பகுதிநேர பந்துவீச்சாளராக மாறிய பிலிப்ஸ் 4 ஓவர்களை வீசினார்.  பந்து வீச்சாளரான டிக்னர் கடைசி ஓவரில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார். 

இந்திய அணிக்கு கடைசி நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனாலும்கூட 19-ஆவது ஓவர் வரை ஒரேயொரு பவுண்டரியை மட்டுமே இந்திய அணியால் அடிக்க முடிந்தது. அந்த ரன் வராமல் போயிருந்தால் இந்திய அணியின் வெற்றி சிக்கலாகி இருந்திருக்கும்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடினார்கள். ஒரு வழியாக கடைசிக்கு முந்தைய பந்தில் சூர்யகுமார் யாதவ், பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

போட்டிக்கு பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், லக்னெள ஆடுகளம் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விமர்சித்தார்." நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளும் நடந்தேறிய ராஞ்சி, லக்னெள ஆகிய இரு ஆடுகளங்களுமே டி20 போட்டிக்கு உகந்தவை அல்ல" என்றார் அவர். 

"உண்மையைச் சொல்லப் போனால், இது அதிரவைக்கும் விக்கெட்டாக இருந்தது. பந்துகள் அதிகமாகச் சுழன்று வந்ததால் நல்ல வாய்ப்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. கடினமான ஆடுகளங்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

ஆனால், இந்த இரு ஆடுகளங்களும் டி20 போட்டிக்காக உருவாக்கப்பட்டதாக தெரியவில்லைை. ஆடுகளங்கள் தயார் செய்யப்பட்டு விட்டனவா என்று முன்கூட்டியே உறுதி செய்து கொள்வது அவசியம்," என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார். 

இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் கருத்தை கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஆமோதித்துள்ளனர். 

டி20 கிரிக்கெட் - லக்னெள ஆடுகள சர்ச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கவுதம் காம்பீர்

முன்னாள் இந்திய வீரரும், ஐ.பி.எல். தொடரில் லக்னெள சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணி ஆலோசகருமான கவுதம் காம்பீரும் லக்னெள ஆடுகளத்தை குறை கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சில் பேசிய அவர், இது டி20 ஆடுகளமே அல்ல. இதுபோன்ற ஆடுகளத்தைப் பார்த்தால் லக்னெள சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள குயின்டான் டி காக் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் இருந்தே விலகிவிடுவார்," என்று விமர்சித்தார்.  

கவுதம் காம்பீரின் கருத்தையே நியூசிலாந்து  முன்னாள் வீரர் ஜேம்ஸ் நீஷமும் வழிமொழிந்தார். ஆனால், பல வகையான பிட்ச்கள் உலகில் இருப்பது நல்லதுதான் என்று  நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் கூறியிருக்கிறார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் 13 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருக்கின்றன. அடுத்த போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருமா? தொடரை தித்திப்புடன் இந்திய அணி முடிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

https://www.bbc.com/tamil/articles/c4n8grzlw52o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தை 'நடுங்க வைத்த' சுப்மன் கில்; வரலாறு படைத்த இந்தியா

சுப்மன் கில்

பட மூலாதாரம்,SPORTSPICS

1 பிப்ரவரி 2023

முதல் 30 பந்துகளில் 46 ரன்களை பொறுமையாக சேர்த்திருந்தார் சுப்மன் கில். ஆனால் அடுத்த 33 பந்துகளில் 80 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். தொடக்கம் அமைதியாக அமைந்தாலும் முடிவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய ஆட்டப்பாணியை வெளிப்படுத்தியிருக்கிறார் சுப்மன் கில்..

நியூசிலாந்தை சோதித்த இந்திய சூறாவளி

டி20 ஆட்டத்தில் தனது முதல் அரைசத்தை பதிவு செய்ய சுப்மன் கில்லுக்கு 35 பந்துகள் தேவைப்பட்டன. அரைசதத்தோடு கில்லின் ஆட்டம் முடிந்துவிடும் என எண்ணிய நியூசிலாந்தின் கனவு கடைசி வரை கைக்கூடாமலேயே போனது.

அடுத்த 19 பந்துகளில் கில் ஆடிய ஆட்டம், நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக 15வது ஓவர் முடிவில் 67 ரன்கள் எடுத்திருந்த கில் 16வது ஓவரில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். 17வது ஓவரில் ப்ளெய்ர் டிக்னர் வீசிய பந்துகளையும் நாலாபுறமும் சிதறடித்தார்.. அந்த ஓவரிலும் 2 சிக்சர்கள் கில்லின் பேட்டில் இருந்து பறந்தன.

 

90களில் இருக்கிறோம் என்கிற எந்த கவலையுமின்றி துணிச்சலுடன் களத்தில் சுழன்றுகொண்டிருந்தார் சுப்மன் கில். ஃபெர்கியூசன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அற்புதமான முறையில் பதிவு செய்தார் சுப்மன் கில். மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் கில்லின் ஒரு சிறந்த ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தனர்.

 

சுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டம் இந்தியாவுக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்திருக்கிறது. நியூசிலாந்தை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 2 - 1 கணக்கில் கைப்பற்றி அசத்தியிருக்கிறது இந்திய அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

போட்டியில் என்ன நடந்தது?

நியூசிலாந்து உடனான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 1 - 1 என்கிற கணக்கில் சமநிலையில் இருந்த இந்தியா, தொடரை வெல்லும் முனைப்பில் 3வது போட்டியில் களமிறங்கியது.

ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, சூர்ய குமார் இருவரும் குறைந்த பந்துகளில் கணிசமான ரன்களை விளாசி ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் தொடக்கம் முதல் இறுதி வரை நியூசிலாந்தை கடுமையாக சோதித்தார்.

ஹர்திக் பாண்டியா 30 ரன்களில் வெளியேறினாலும் கில் இறுதி வரை அடித்து ஆடினார். மொத்தம் 63 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்சர்கள், 12 பவுன்டரிகளை விளாசி 126 ரன்கள் சேர்த்திருந்தார். இன்னிங்ஸ் முடிவில் அவரது ஸ்டிரைக் ரேட் 200-ஐ எட்டியிருந்தது. தனது 126 ரன்கள் மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் எனும் சாதனை படைத்தார் கில்.

 

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அனைத்து ஃபார்மட்டிலும் சதம் அடித்த இளம் வீரர், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம், சர்வதேச டி20-ல் சதம் அடித்த இளம் இந்தியர், நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 களில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன் என அடுக்கடுக்கான பெருமைகளை தன் பெயரில் அடுக்கி வைத்திருக்கிறார் 23 வயதான சுப்மன் கில்.

அவரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 234 ரன்களை சேர்த்திருந்தது.

ஆமதாபாத்தில் 'தடுக்கி விழுந்த' நியூசிலாந்து

சுப்மன் கில்

பட மூலாதாரம்,SPORTZPICS

235 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த அந்த அணி 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா அபார வெற்றி பெற்றி தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த போட்டியே இந்தியாவுக்கு டி20-ல் அதிக ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியாகும்

இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரன் மழை பொழிந்த கில் ஆட்டநாயகனாக தேர்வானார். தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச் சென்றார்.

https://www.bbc.com/tamil/articles/cx09xex85kzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை முடிந்தவரை முன்கூட்டியே முடிக்க நினைத்ததுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையை விட‌ குப்பை அணியா நியுசிலாந் வ‌ந்திட்டுது

66 11 வீர‌ர்க‌ள் சேர்ந்து அடிச்ச ர‌ன்ஸ் லொல் 😂😁🤣 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.